(அருந்ததீ பார்த்த எஃபக்ட்டில் ஒரு சிறுகதை)
எங்கள் பாப்பம்மாவுக்குத் திடீரெனப் பேய் பிடித்துக் கொண்டது.
அதுவும் எங்கள் ஊருக்குத் தேர்தல் வந்த நேரத்தில்.
பாப்பம்மாவை நீங்கள் பார்த்ததில்லை என்றால் விளக்குவது மிகவும் சுலபம்.ஷில்பா ஷெட்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
அந்த ஃபிகருக்கு அப்படியே நேர் எதிர்மறையாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள் அதுதான் எங்கள் பாப்பம்மா.ஷில்பா கிட்டத் தட்ட என்ன உயரமோ அதில் பாதி உயரந்தான் பாப்பு.ஷி வெள்ளை என்றால் பா நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்ததைப் போல இருக்கும்.ஷி யின் ஐ.க்யூ என்ன என்று எனக்குத் தெரியாது.ஆனால் பாப்புவின் ஐ.க்யூ. பத்துக்கும் கீழேதான் இருக்கும். பிறந்த குழந்தை கூடப் பாப்புவை லூசு என்றுதான் கூப்பிடும்.அதற்கு வயது என்னவென்று அதற்கே தெரியாத போது வேறு யாருக்குத் தெரியப் போகிறது.
பாப்பு பக்கத்து ஊரில் இருந்த அனாதை.இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன் எனது அப்பாவை (அப்பா பார்க்கப் பிரகாஷ்ராஜைப் போல இருப்பார்) யாரோ ஒரு வேண்டாத கல்யாண புரோக்கர் தனது வஞ்சத்தைத் தீர்க்க பாப்புவைப் பெண்பார்க்க அப்பாவிடம் ஏதோ பொய்களைச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய் விட்டான்.ஏதோ ஒரு குடிசையில் சாணி தட்டிக் கொண்டிருந்த பாப்பம்மாவுக்கு அப்போது பதினைந்தோ,பதினாறோ வயதிருக்கும் என்று நினைக்கிறேன்.பாப்புவிடமும் அவளைக் கட்டிக் கொள்ள மாமா வரப் போகிறார் என்று அந்த புரோக்கர் புளுகி வைத்து விட்டான் போல இருக்கிறது.அப்பாவைப் பார்த்ததும் அது இளித்த இளிப்பு இருக்கிறது பாருங்கள், அதை ஞாபகப் படுத்தினால் இன்னும் அப்பாவுக்கு ப்ரஷர் எகிறிவிடும்.
பாப்புவின் சிரிப்பு 3டி ,டி.டி.எஸ். எல்லாம் கண்டுபிடிக்காத காலத்திலேயே அந்த எஃபக்டில் எதிரொலிக்கும்.
பாப்புவின் சிரிப்பைப் பார்த்த பயத்தில் அப்பா, தான் சென்ற பைக்கையெல்லாம் ஸ்டார்ட் பண்ணக் கூட நேரமில்லாமல் ஓடியே எங்கள் ஊருக்கு வந்து விட்டார்.அந்த பைக்கை யே ஒரு வாரம் கழித்துப் பாதி விலைக்குத் தள்ளி விட்டார்.
ஆனால் பாப்பு,அப்பா மேல் தான் கொண்ட காதலை இதுவரை மறக்கவில்லை.என்னதான் இருந்தாலும் தன்னைக் கட்டிக் கொள்ள வந்த முதல் மாமனாயிற்றே. யாரோ பில்லி சூனியம் வைத்து அப்பாவின் மனதை மாற்றி விட்டார்கள் என்று இன்றைக்கும் பாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது.
அப்பா,அம்மாவைத் திருமணம் செய்த போது பாப்பு நேரடியாகக் கல்யாண மண்டபத்துக்கே வந்து விட்டது.ஏதாவது கலாட்டா செய்யுமோ என்று எல்லோரும் அதிர்ச்சியுடன் பார்த்திருக்க அது நேராகப் பந்தியில் போய் உட்கார்ந்து மூச்சு முட்டச் சாப்பிட ஆரம்பித்து விட்டது.
'ஏய்,இங்கே எதுக்கு வந்திருக்கே?' என்று என் சித்தப்பா போய் மிரட்டியதற்கு அது சாப்பிட்டபடியே கோபமாகச் சித்தப்பாவைப் பார்த்தது.
'ம்..என் மாமன் வீட்டுக் கல்யாணத்துக்கு நான் வராமே யாரு வருவாங்களாம்!.நீ போய் இன்னும் ரெண்டு வடை எடுத்துட்டு வா போ' என்று அவரை ஏவி விட்டு மீண்டும் இலையில் பாய்ந்தது.
கல்யாணம் முடிந்து மண்டபத்தைக் காலி செய்து விட்டு எல்லோரும் கிளம்பிய போது, புதுப் பெண்ணும் மாப்பிள்ளையுமாக அப்பாவும், அம்மாவும் உட்கார்ந்திருந்திருந்த காருக்குப் பின்னாலேயே ஓடி வந்த பாப்பம்மா எங்கள் வீடு வரைக்குமே மூச்சு வாங்க வந்து நின்றது.
யாராரோ அதைத் துரத்தியடிக்கப் பார்த்தார்கள்.ஊஹூம். ரத்தம் வர அடித்ததுதான் மிச்சம்.'அது மாமனை விட்டு நான் போக மாட்டேன்' என்று சொல்லிப் பிடிவாதமாக நடுராத்திரி ஆகியும் போகவே இல்லை.
இரவெல்லாம் 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' என்று சத்தம் போட்டுப் பாட்டு வேறு பாடிக் கொண்டு,வீட்டுக்கு வெளியேவே நின்றிருந்தது..
அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அம்மாதான் பரிதாபப் பட்டுப் பாவம்,பாப்பம்மா அதுவாகப் போகும் வரை நம் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லி விட்டாள்.
அன்று வந்ததுதான்,அதற்குப் பிறகு, இந்த இருபத்திரண்டு வருடங்களாகப் பாப்பம்மா எங்கள் வீட்டுக்குப் பின்புறத்தில் இருக்கும் தோட்டத்துக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறது.அப்பா இத்தனை வருடங்களில் ஒருநாள் கூடப் பாப்புவிடம் பேசியதில்லை.அதுவும் அப்பாவைப் பார்த்தால் இன்னும் வெட்கப் பட்டுக் கொண்டு வேறுபுறம் ஓடிவிடும்.
நானும்,தங்கைகள் இருவரும் பிறந்து, வளர்ந்த பிறகு, கால ஓட்டத்தில் இப்போது பாப்பு எங்கள் வீட்டில் ஒருவராகவே ஆகி விட்டது.
மாங்கு,மாங்கு என்று அம்மாவுக்கு உதவியாக அது நாள் பூராவும் வீட்டு வேலைகள் செய்யும்.அதற்கு ஈடு கட்டிப்,பழையது,புதியது,புளித்தது,புளிக்காதது என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் நன்றாகச் சாப்பிடும்.
வாரத்துக்கு ஒரு நாள் ஊர்க் கொட்டகையில் படம் மாற்றியதும் தவறாமல் படம் பார்த்து விட்டு வந்து விடும் அது .படம் பார்த்து விட்டு வந்த இரவில் அந்தப் படத்தின் பாட்டை ராத்திரி வெகு நேரம் வரை அதனுடைய குடிசையில் படுத்துக் கொண்டு சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருக்கும் பாப்பு .ஆனால் எல்லாமே லவ் டூயட்ஸ்தான்.!
இந்த வாரம் முழுக்க ஓடிக் கொண்டிருந்த 'பாப்புவின் நைட் ஹிட்ஸ்'
'கன்கல் ரென்டால்.. .கன்கல் ரென்டால்..என்னைக் கட்டி இலுத்தாய்ய்ய்..ஆ ஆ '
இந்த நேரத்தில்தான் எங்கள் ஊருக்கு இடைத்தேர்தல் வந்தது. எஙகள் ஊர் எம்.எல்.ஏ.பரமசிவத்துக்கு மாரடைப்பு வந்து, பிழைத்து வந்ததே பெரும் பாடாய்ப் போக அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதனால்தான் எங்கள் ஊருக்கு இந்த இடைத்தேர்தல் வந்ததே. .
பதவி விலகிய எம்.எல்.ஏ பரமசிவம் தற்போதைய அரசியல் சம்பிரதாயப்படி, தனது பழைய ஊழல்களை மறைக்கவும் ,புதிய ஊழல்களைத் தொடரவும் தனது வாரிசான ஒரே மகன் இளவரசனை இப்போது இடைத்தேர்தலில் கட்சியில் சீட் வாங்கி நிறுத்தி இருக்கிறார்.இளவரசனுக்கு எதிராக நிறைய அரசியல் பெரும் புள்ளிகள் அவரவர் கட்சிகளில் வேட்பு மனுக்கள் தாக்கள் செய்ய ஊரில் தேர்தல் சூடு பிடித்து விட்டது.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் போதுதான் பாப்பம்மாவுக்குப் பேய் பிடித்தது.
அன்று இரவில் வழக்கம் போல 'கன்கல் ரென்டால்..கன்கல் ரென்டால்..' என்று பாடிக் கொண்டிருந்த பாப்பம்மாவின் குரல் திடீரென மாறிப் 'பேய் ஹோ' என்று கத்தியது.
முதன் முதலாக லவ் டூயட்டிலிருந்து விலகிப் பாப்பு சமூகப் பார்வையோடு பாடிய முதல் பாடல் இந்தப் 'பேய் ஹோதான்'
'பேய் ஹோ ', 'பேய் ஹோ' என்று பாப்பம்மா போட்ட சத்தத்தில் அப்பாவே மிரண்டு போய் எழுந்து விட்டார்.
வழக்கமாகத் தன் குடிசையை விட்டு வெளியே வராத பாப்பு இன்று வீட்டுப் பின் கதவை டமடமவெனத் தட்டியது.அப்பாவுடன் நாங்கள் எல்லோரும் பயந்தபடியே கதவருகில் சென்று நின்றோம்.
பாப்புவின் கத்தல்கள் மேலும் மேலும் உயர்ந்தன.
'பேய் ஹோ ''பேய் ஹோ'
அப்பாதான் கதவைத் திறந்தார்.
தலைவிரி கோலமாக நின்றிருந்த பாப்பு அப்பாவைப் பார்த்து இளித்தது.இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்னால் அப்பாவை முதன் முதலாகப் பார்த்த போது பாப்பு இளித்த அதே இளிப்பு.
அம்மா,நான்,தங்கைகள் எல்லோரும் பயந்து நடுங்கியபடியே அப்பாவின் பின்னால் நின்றோம்.
'ஏய், பாப்பம்மா,என்ன ரகளை நடுராத்திரியிலே போ உன் குடிசைக்கு!'
அப்பா இத்தனை வருடங்களில் இன்றுதான் பாப்புவிடம் பேசினார்..
ஆனால் அப்பாவின் அதட்டலைக் கேட்டு பாப்பு துளியும் சட்டை செய்யவில்லை.வழக்கமாக அப்பாவைக் கண்டாலே வெட்கப் பட்டு ஓடி ஒளியும் பாப்பு அவரை நேருக்கு நேராக எந்தப் பயமுமின்றிப் பார்த்தது.
பிறகு 'டேய் மாமா' என்றது பாப்பு அப்பாவைப் பார்த்து.
அம்மா,நாங்கள் எல்லோரும் ஆடிப் போய் விட்டோம்.
'டேய் மாமா,உங்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்! உள்ளே வாடா' என்ற பாப்பம்மா மளமளவென்று அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனது.
நாங்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அதனைத் தொடர்ந்து போனோம்.
உள்ளே ஹாலுக்குச் சென்ற அது ,நடு ஹாலில் அப்பா வழக்கமாக் உட்காரும் சேரை இழுத்துப் போட்டுக் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டது.
'டேய்,திருவாசகம்,நாளைக்கு நான் இடைத்தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் பண்ணனும்!' என்றது பாப்பு.
'நீயா?' என்றார் அப்பாவே,பயத்தையும் மீறி ஆச்சர்யப் பட்டு.
'ஆமாண்டா நானேதான்.பாப்பரா இருந்தாலும் இந்தப் பாப்பம்மா சூப்பரா ஜெயிப்பாடா.பயப்படாமே டெபாசிட் கட்டறதுக்குப் பணம் எல்லாம் ரெடி பண்ணிக்க.ம்..'என்றது அது மிரட்டலாக.
அதற்குப் பிறகு, அம்மாவைப் பார்த்து அது பேசிய போதுதான் நாங்கள் எல்லோரும் பீதியின் உச்சத்துக்கே போனோம்.
'அம்மணி,சிவகாமி,உன் கையாலே காய்ச்சின மோரு குடுப்பியே,அது ஒரு டம்ளர் குடும்மா' என்றது பாப்பு,எங்களுக்கு எல்லாம் நன்கு பரிச்சயம்மான குரலில்.
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் அம்மாவின் ஒன்று விட்ட சித்தப்பா
எங்கள் ஊரின் முன்னால் எம்.எல்.ஏ.தியாகராஜ சித்தப்பா.
இப்போது ராஜினாமா செய்திருக்கும் ஊழல் பரமசிவத்தின் தில்லுமுல்லு அரசியலுக்கு முன்னால் தாக்குப் பிடிக்கமுடியாமல் தோற்றுப் போன தூய்மையான,உண்மையான தேச பக்தர்.
டெபாசிட் கூட வாங்க முடியாமல் ஒரு அயோக்கியனிடம் தோற்றுபோன அவமானத்தில் ஓட்டுச் சாவடிக்கு அந்த இரவே போய்,ஓட்டுப் போடும் அடையாள மையையே வயிறு முட்டக் குடித்து உயிரை விட்டவர் தியாகராஜ சித்தப்பா !
அவரது ஆவியா இப்போது பாப்பம்மாவைப் பிடித்திருக்கிறது?
'டேய் மடையா! பதிவை நிறுத்திட்டு வாடா.எலக்ஷன் வேலை நிறைய இருக்கு !' என்று பாப்பு என்னைப் பார்த்துத் திடீரென உறும...
(நடுங்கிய படியே தொடரும்)
//ஷி வெள்ளை என்றால் பா நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்ததைப் போல இருக்கும்.//
பதிலளிநீக்குஇது மாதிரி கருப்பு செவப்பு, உயரம் குட்டை, அழகு அசிங்கம்... அப்படின்னு பேசி மக்களைக் கேலி செய்வதை முதலில் நிறுத்துங்கள். அப்படி எழுதுவது நிறவெறி, இனவெறிக்குச் சமம். உங்களைப் போன்ற சினிமாக் காரர்கள் இப்படியான நிற பேதக் கட்டமைப்பை மீள மீள உறுதி செய்துகொண்டே இருக்கிறீர்கள். அது அசிங்கம். நன்றி!
// 'டேய் மடையா! பதிவை நிறுத்திட்டு வாடா.எலக்ஷன் வேலை நிறைய இருக்கு !' என்று பாப்பு என்னைப் பார்த்துத் திடீரென உறும...//
பதிலளிநீக்குஹா..ஹா.. ஹா... இது கலக்கல். சார், இது த்ரில்லரா, காமெடி-யா? முதல் பகுதி காமெடியா கொண்டு போயிருக்கீங்க. இரண்டாம் பகுதியில் எதை எதிர்பார்க்க..? :)
காமெடி கதை என்று நினைத்தேன்.. இப்போது தான் ஆரம்பிக்கிறதோ..?
பதிலளிநீக்குபாப்பு கதை நன்றாக உள்ளது சார்.
பதிலளிநீக்குஇதுவும் கன்னிகா மாதிரி தொடர் கதையா..
சார் ஒரு சின்ன Request..
நீங்கள் சினிமாவில் பணியாற்றிய அனுபவசாலி என்பதால்..
சினிமாவில் நீங்கள் சந்தித்த வித்தியாசமான நபர்கள்..அனுபவங்கள்..
உங்களடுய வித்தியாசமான முயற்சிகள் இதை பற்றி ஒரு தொடர் வெளியிடலாமே..
அல்லது அதை பற்றி எழுதமால் விரும்பியே விலகி இருக்கிறிர்களா..ஒரு மாறுதலுகாக..!!
சுந்தரவடிவேல் சொன்னது…
பதிலளிநீக்கு//ஷி வெள்ளை என்றால் பா நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்ததைப் போல இருக்கும்.//
இது மாதிரி கருப்பு செவப்பு, உயரம் குட்டை, அழகு அசிங்கம்... அப்படின்னு பேசி மக்களைக் கேலி செய்வதை முதலில் நிறுத்துங்கள். அப்படி எழுதுவது நிறவெறி, இனவெறிக்குச் சமம். உங்களைப் போன்ற சினிமாக் காரர்கள் இப்படியான நிற பேதக் கட்டமைப்பை மீள மீள உறுதி செய்துகொண்டே இருக்கிறீர்கள். அது அசிங்கம். நன்றி!//
100% நீஙக்ள் சொலவது சரியே,சுந்தரவடிவேலன்.நானே கறுப்பு, குள்ளம் என்பதால் என்னையே பரிகசித்துக் கொள்ளும் உள்ளுணர்வே இங்கே நகைச் சுவையாக வெளிப்பட்டு இருக்கிறது என நினைக்கிறேன்.அது உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.யார் மனதையும் புண்படுத்தாமல் சீரியஸ் எழுதுவது சுலபம். காமடி எழுதுவது மஹாக் கஷ்டம்.
மற்றபடி நான் செய்யும் தவறு ஒட்டுமொத்த சினிமாக்காரர்களுக்கும் பொருந்தாது.தவறை எடுத்துக் காட்டியதற்கு நன்றி சார்.
//ஹாலிவுட் பாலா கூறியது...
பதிலளிநீக்கு// 'டேய் மடையா! பதிவை நிறுத்திட்டு வாடா.எலக்ஷன் வேலை நிறைய இருக்கு !' என்று பாப்பு என்னைப் பார்த்துத் திடீரென உறும...//
ஹா..ஹா.. ஹா... இது கலக்கல். சார், இது த்ரில்லரா, காமெடி-யா? முதல் பகுதி காமெடியா கொண்டு போயிருக்கீங்க. இரண்டாம் பகுதியில் எதை எதிர்பார்க்க..? :)//
நிச்சயமாகக் காமெடிதான் பாலா.நன்றி.
//Cable Sankar கூறியது...
பதிலளிநீக்குகாமெடி கதை என்று நினைத்தேன்.. இப்போது தான் ஆரம்பிக்கிறதோ..?//
காமெடிதான்,ஷங்கர்.இரண்டாவது பாகத்துடன் முடிந்து விடும்.
vinoth gowtham கூறியது...
பதிலளிநீக்குபாப்பு கதை நன்றாக உள்ளது சார்.
இதுவும் கன்னிகா மாதிரி தொடர் கதையா..//
இல்லை வினோத்.காமெடி.சிறுகதையே.உண்மையில் 'கன்னிகா' பற்றிய உங்கள் கருத்துரையில் 'கவிதை நடை அதிகமாக் உள்ளது'என்று சொல்லியிருந்தீர்கள்.அதை மனதில் கொண்டுதான் இந்தச் சிறுகதையை எழுதத் தோடங்கினேன்.சொல்லப் போனால் இந்தக் கதை தோன்றக் காரண்மே நீங்கள்தான் வினோத்.
//நீங்கள் சினிமாவில் பணியாற்றிய அனுபவசாலி என்பதால்..
சினிமாவில் நீங்கள் சந்தித்த வித்தியாசமான நபர்கள்..அனுபவங்கள்..
உங்களடுய வித்தியாசமான முயற்சிகள் இதை பற்றி ஒரு தொடர் வெளியிடலாமே..
அல்லது அதை பற்றி எழுதமால் விரும்பியே விலகி இருக்கிறிர்களா..ஒரு மாறுதலுகாக..!!//
சினிமாவிலும் என் தொழில் எழுத்துத்தான்.இங்கேயும் அதனையே செய்கிறேன்.அங்கே எழுதினால் பணம்.இங்கே எழுதினால் காம்ப்ரமைஸ் பண்ணாத சுதந்திரத்தில் கிடைக்கும் ஆத்ம திருப்தி.அதனால்தான் இங்கே நீங்கள் சொல்லும் கவிதை நடை அவ்வப்போது அதிகம் வெளிப்பட்டு விடுகிறது.நன்றி வினோத்.
சார் நான் நாளைக்கு தான் அருந்ததீ படம் பார்க்க போகிறேன்..பார்த்துட்டு இதை படிக்கிறேன் :-)
பதிலளிநீக்கு//உண்மையில் 'கன்னிகா' பற்றிய உங்கள் கருத்துரையில் 'கவிதை நடை அதிகமாக் உள்ளது'என்று சொல்லியிருந்தீர்கள்.அதை மனதில் கொண்டுதான் இந்தச் சிறுகதையை எழுதத் தோடங்கினேன்.சொல்லப் போனால் இந்தக் கதை தோன்றக் காரண்மே நீங்கள்தான் வினோத்.//
பதிலளிநீக்குரொம்ப நன்றி சார்.
நல்ல narration சார். அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு//கிரி சொன்னது…
பதிலளிநீக்குசார் நான் நாளைக்கு தான் அருந்ததீ படம் பார்க்க போகிறேன்..பார்த்துட்டு இதை படிக்கிறேன் :-)//
சரியாகச் சொன்னீர்கள் கிரி.ஆனால் அந்தக் கதை வேறு. இது முற்றிலும் வேறு.இது முழுக்க,முழுக்க நன்கைச்சுவையை அடித்தளாகக் கொண்டு எழுதப் பட்டது.படித்து விட்டுச் சொல்லுங்கள் கிரி.
//உள்ளத்தில் இருந்து.. சொன்னது…
பதிலளிநீக்குநல்ல narration சார். அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.//
வருகைக்கும், வழங்கிய ஊக்கத்துக்கும் நன்றி மனுநீதி.மீண்டும் வருக.
கலக்கல்...அந்த காலத்ல, எங்க பாட்டி ..என்னடி பெரிய, ....அரைசதுக்கு சாப்டனும் . சாப்டதுக்கு அரைக்கணும் ...அப்படின்னு சொன்னதா கேள்வி ..உங்களுக்கு காமெடி (ம்) நன்றாக வருகிறது.
பதிலளிநீக்குசுந்தர்
குருவே சரணம்.. சரணம்.. சரணம்..!
பதிலளிநீக்கு//'டேய் மடையா! பதிவை நிறுத்திட்டு வாடா.எலக்ஷன் வேலை நிறைய இருக்கு !' என்று பாப்பு என்னைப் பார்த்துத் திடீரென உறும...//
பதிலளிநீக்குஎன்ன சார் படு சூப்பரா இருக்கு....
Sundar சொன்னது…
பதிலளிநீக்குகலக்கல்...அந்த காலத்ல, எங்க பாட்டி ..என்னடி பெரிய, ....அரைசதுக்கு சாப்டனும் . சாப்டதுக்கு அரைக்கணும் ...அப்படின்னு சொன்னதா கேள்வி ..உங்களுக்கு காமெடி (ம்) நன்றாக வருகிறது.//
//என்னடி பெரிய, ....அரைசதுக்கு சாப்டனும் . சாப்டதுக்கு அரைக்கணும் ...//
எவ்வளவு எளிமையான, ஆனால் யோசித்துப் பார்த்தால் எவ்வளவு ஆழமான அனுபவ வார்த்தைகள் சுந்தர்.வாழ்க்கையில், கடைசியாக எல்லோரும் புரிந்து கொள்ளும் அர்த்தமின்மையின் சுழற்சியை இதற்கு மேல் யாராலும் சொல்ல முடியாது.நன்றி சுந்தர்.
//உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
பதிலளிநீக்குகுருவே சரணம்.. சரணம்.. சரணம்..!//
ஆஹா!குருவுக்கும் மிஞ்சிய சிஷ்யனை,சிஷ்யனாகப் பெற்ற எனது அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் சரவணன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
பதிலளிநீக்கு//'டேய் மடையா! பதிவை நிறுத்திட்டு வாடா.எலக்ஷன் வேலை நிறைய இருக்கு !' என்று பாப்பு என்னைப் பார்த்துத் திடீரென உறும...//
என்ன சார் படு சூப்பரா இருக்கு....//
உங்கள் பாராட்டைத் தொடர வைக்க உங்கள் பாராட்டுக்களே உதவுகின்றன,ஞானசேகரன்.நன்றி.நன்றி.
:-)))
பதிலளிநீக்குnalla irukku:-))
//இயற்கை சொன்னது…
பதிலளிநீக்கு:-)))
nalla irukku:-))
உங்கள் பதிவுக்குச் சென்று உங்கள் அருமையான கவிதையைப் படித்தேன்.அதனால் சொல்கிறேன்.என்னிடம் உங்களுக்குத் தகுந்த பதிவு 'கன்னிகா'தான்.அதைப் படித்து விட்டுச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
//ஷண்முகப்ரியன் கூறியது...
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் கிரி.ஆனால் அந்தக் கதை வேறு. இது முற்றிலும் வேறு.இது முழுக்க,முழுக்க நன்கைச்சுவையை அடித்தளாகக் கொண்டு எழுதப் பட்டது.படித்து விட்டுச் சொல்லுங்கள் கிரி.//
சார் அந்த கொடுமைய ஏன் கேட்குறீங்க..சரி கேட்கலைனு சொல்லிடாதீங்க ;-)
சிங்கையில் சும்மாவே அப்படி இப்படின்னா கட் செய்து விடுவாங்க..அதுவும் இந்த படத்துல ஏகப்பட்ட காட்சிய கட் செய்துட்டாங்க அரை மணி நேரம் குறைந்து விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எனக்கு படம் பார்க்கும் ஆசையே போய் விட்டது, இடைவேளையோடு எழுந்து வந்து விடலாம் என்று இருந்தேன்..அப்புறம் மொக்கை படமாக இருந்தாலும் பாதியில் வரமாட்டேன் என்ற என் கொள்கையை மாற்ற முடியாமல் கடைசி வரை பார்த்து வந்தேன்.
நிறைய சண்டை கொலை ரத்த காட்சிகளை கட் செய்து விட்டார்கள்...அவை தான் சிறப்பாக எடுத்து இருந்ததாக உங்கள் விமர்சனத்தில் கூறி இருந்தீர்கள் :-((
சார் அதுல ஜெக்கம்மா என்று அனுஷ்காவை சொல்லும் போது எனக்கு கவுண்டமணி காமெடி தான் நினைவிற்கு வருது :-))) கவுண்டமணி ஒரு படத்துல லாட்டரி ஜெயித்து விடுவாரே! அதுல மனோரமாவை ..ஏய்! ஜெக்கம்மா! ன்னு கூப்பிட்டதும் ..என்னது ஜெக்கமாவா..னு மனோரமா கடுப்பானதும் .. பின்ன என்ன பொக்கமாவா! னு கிண்டலடிப்பாரே அது தான் நினைவிற்கு வருகிறது ஹா ஹா ஹா
படம் வேறு எங்காவது மறுபடியும் பார்க்க வேண்டும்
---
உங்க கதை ரொம்ப நல்லா இருக்கு..முழுவதும் சலிப்படையாமல் படித்தேன், காமெடியாக இருந்தாலும் விறுவிறுப்பான கதையாக இருந்தது..
சார்! நீங்க சுந்தரவடிவேல் கூறியதை அப்படியே கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்குங்க..அவர் கொஞ்சம் ஹார்ஷா சொல்லிட்டாரு.
அன்புடன்
கிரி
கிரி கூறியது...
பதிலளிநீக்குபடம் வேறு எங்காவது மறுபடியும் பார்க்க வேண்டும் //
எனக்குப் பிடித்தது எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்ற வன்முறை எனக்கு எப்போதும் கிடையாது கிரி.எனது படைப்புக்கே அதுதான் நான் விதிக்கும் விதி.You are at your own disposal of your ideas.
//உங்க கதை ரொம்ப நல்லா இருக்கு..முழுவதும் சலிப்படையாமல் படித்தேன், காமெடியாக இருந்தாலும் விறுவிறுப்பான கதையாக இருந்தது..
மிக்க மகிழ்ச்சி,கிரி.
சார்! நீங்க சுந்தரவடிவேல் கூறியதை அப்படியே கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்குங்க..அவர் கொஞ்சம் ஹார்ஷா சொல்லிட்டாரு.//
நண்பர் திரு.சுந்தரவடிவேலுக்கு நான் தெளிவாகப் பதில் சொல்லி விட்டேனே கிரி.எனது எழுத்தால் யார் மன்ம் புண்பட்டாலும் அதற்காக முதலில் வருந்தி அழுவது
நானே.எழுதுவது பண்படுவதற்கே அன்றிப் புண்படுவதற்கு அல்ல என்பதில் எனக்கு நூறு சதவீதம் உடன்பாடே.
உங்கள் அக்கறைக்கும்,ரசனைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் கிரி.
அருந்ததீ இன்னும் பார்க்வில்லை. ஆனால் உங்கள் கதை அதைப் பார்க்கத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குவழக்கம் போலவே இதுவும் அருமை. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங். சார், தங்களிடம் ஒருவரைப் பற்றிக் கூறி அறிமுகப்படுத்திக்கொள்ள விழைகிறேன். தாங்கள் அவரில்லையென்றால் தயவு செய்து பொறுத்துக்கொள்ளவும். நசியனூர் ஆறுமுகம் அவர்களின் சொந்தம் நான்.
பதிலளிநீக்குவலசு - வேலணை சொன்னது…
பதிலளிநீக்குஅருந்ததீ இன்னும் பார்க்வில்லை. ஆனால் உங்கள் கதை அதைப் பார்க்கத் தூண்டுகிறது.//
தேர்தல் நேரத்தில் நான் எழுத நினைத்த நகைச்சுவைக் கதை இது.அருந்ததீ சீரியஸ் டெக்னிகல் மிரட்டல்.வருகைக்கு நன்றி வலசு - வேலணை.
அமர பாரதி கூறியது...
பதிலளிநீக்குவழக்கம் போலவே இதுவும் அருமை. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங். சார், தங்களிடம் ஒருவரைப் பற்றிக் கூறி அறிமுகப்படுத்திக்கொள்ள விழைகிறேன். தாங்கள் அவரில்லையென்றால் தயவு செய்து பொறுத்துக்கொள்ளவும். நசியனூர் ஆறுமுகம் அவர்களின் சொந்தம் நான்.//
அப்படியா.நீங்கள் கீழ்க்கண்ட என்னுடைய மின்அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
shanmughapriyan.sai@gmail.com
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அமரபாரதி சார்.
சூப்பர்ப். இதுவும் அடுத்த பாகம் உண்டா!
பதிலளிநீக்குகலக்குங்க!
மங்களூர் சிவா சொன்னது…
பதிலளிநீக்குசூப்பர்ப். இதுவும் அடுத்த பாகம் உண்டா!
கலக்குங்க!//
பயப்படாதீங்க,இது இரண்டு பாகந்தான் சிவா.வந்ததுக்கும்,பாராட்டுனதுக்கும் நன்றிங்க.
/
பதிலளிநீக்குஷண்முகப்ரியன் கூறியது...
மங்களூர் சிவா சொன்னது…
சூப்பர்ப். இதுவும் அடுத்த பாகம் உண்டா!
கலக்குங்க!//
பயப்படாதீங்க,இது இரண்டு பாகந்தான் சிவா.வந்ததுக்கும்,பாராட்டுனதுக்கும் நன்றிங்க.
/
இது பயத்துல சொன்னது இல்லை. ஆவல்-ல சொன்னது.
மங்களூர் சிவா சொன்னது…
பதிலளிநீக்கு//பயப்படாதீங்க,இது இரண்டு பாகந்தான் சிவா.வந்ததுக்கும்,பாராட்டுனதுக்கும் நன்றிங்க.//
//இது பயத்துல சொன்னது இல்லை. ஆவல்-ல சொன்னது.//
நன்றி சிவா.இப்போது உங்கள் ஆவலை நினைத்து எனக்குப் பயமாக இருக்கிறது,அதை எப்படி நிறைவு செய்யப் போகின்றேனோ என்று.
முன்பே படித்துவிட்டு வேலை காரணமாக பின்னூட்டம் இடாதே சென்று விட்டேன். நான் சொல்ல நினைத்ததை பலரும் சொல்லி விட்டதால் அப்பீட்டாகுறேன்
பதிலளிநீக்கு:))
எம்.எம்.அப்துல்லா சொன்னது…
பதிலளிநீக்குமுன்பே படித்துவிட்டு வேலை காரணமாக பின்னூட்டம் இடாதே சென்று விட்டேன். நான் சொல்ல நினைத்ததை பலரும் சொல்லி விட்டதால் அப்பீட்டாகுறேன்//
நம் வேலைகளுக்கு நடுவில் நாம் எழுதுவதே பெரிதென்பதை நான் உணர்வேன் அப்துல்லா.எனவே நன்றி உரித்தாகுக.
பாப்பம்மா தேர்தல்ல வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸார்...
பதிலளிநீக்குடக்ளஸ்....... சொன்னது…
பதிலளிநீக்குபாப்பம்மா தேர்தல்ல வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸார்...//
டேன்க்ஸ் டக்லஸு சார்!-பாப்பு.