8.
'பொய்மையில் இருந்து எஙகளை உண்மைக்கு அழைத்துச் செல்.
இருளில் இருந்து எங்களை ஒளிக்கு அழைத்துச் செல்.
சாவில் இருந்து எங்களைச் சாகாமைக்கு அழைத்துச் செல்.'
-பிருஹத்தாரண்யக உபநிஷதம்.
'லாமாஜி எங்கோ வெளியே பேஷண்ட்டைப் பார்க்கப் போயிருக்கிறார் என்று நினைக்கிறேன் அரவிந்த்.வா, நாம் இரண்டாம் தளத்துக்குச் சென்று விட்டு வருவோம்' என்று என்னை அழைத்துக் கொண்டு,லாமா பத்ம சூர்யாவின் அறையில் இருந்து வெளியே வந்தாள் திவ்யா.
'இரண்டாம் தளத்தில் யார் இருக்கிறார்கள் திவ்யா?'என்று நான் அவளைக் கேட்டேன்.
ஒருகணம் அவள் என்னையே பார்த்துவிட்டுப் பிறகு சொன்னாள்.
'மரணத்துக்கு அருகில் நின்று கொண்டு,அது தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்' என்றாள் திவ்யா.
பிறகு இருவரும் மௌனமாக மேல் தளத்திற்குச் சென்றோம்.
முதல் தளத்தைப் போலவே வட்ட வடிவமான காரிடார்.
ஒவ்வொரு தூணுக்கும் முன்னால், கணபதி சிவபெருமான்,ஆதிபராசக்தி, ஸ்ரீராமர்,ஸ்ரீகிருஷ்ணர்.ஆஞ்சனேயர்,முருகர்,புத்தர்,ஏசுபிரான்,கஃபா எழுத்துக்கள் அடங்கிய இஸ்லாம் கல்வெட்டு,வீர சைவர், குரு நானக், ராமகிருஷ்ணர்,ரமணர் இப்படி எல்லா மதத்தைச் சேர்ந்த புனிதச் சிலைகளும் அழகாகப் பளிங்கில் வைக்கப் பட்டிருந்தன.
நாங்கள் போனது அந்தி நேரமாதலால் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள், என்ற திவ்யா காரிடாரின் கடைக் கோடியில் இருந்த ஹாலுக்குக் கூட்டிச் சென்றாள்.
அது நாற்பதுக்கு, நாற்பது இருக்கும் பெரிய ஹால். ஹாலில் குழந்தைகளின் விளையாட்டுக்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் பொருத்தப் பட்டு, அது ஒரு மினி பார்க்கைப் போல இருந்தது.
பத்துப் பதினைந்து குழந்தைகள் இரைச்சலிட்டபடி ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
கிட்டத் தட்ட எல்லாக் குழந்தைகளுமே கீமோதெராபி சிகிச்சையினால் முடிகள் கொட்டி மொட்டைத் தலைகளாகவே இருந்தார்கள்.
'இங்கே தூணுக்குத் தூண் இருக்கும் கடவுளை, நான் மனதார வெறுக்கும் ஒரே இடம் இந்த ஹால்தான், அரவிந்த்' என்றாள் திவ்யா கனத்த குரலில்.
அவள் முகம் உணர்ச்சிகளின் வெப்பத்தால் சிவந்து போயிருந்தது.அதற்குள் சில குழந்தைகள் அவளைப் பார்த்து 'திவ்யா ஆன்டி ' என்று கூச்சலிடத், திரும்பி பார்த்த எல்லாக் குழந்தைகளுமே 'ஹோய்' என்று கத்திக் கொண்டு அவளிடம் ஓடி வந்தன.
அவர்கள் எல்லோருமே எட்டு முதல் பத்து வயது வரை இருக்கும் சிறுவர், சிறுமிகள்.எல்லோரும் திவ்யாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்து முத்தங்களைச் சொரிந்ததில் இருந்தே,அவள் எவ்வளவு தூரம் அந்தக் குழந்தைகளின் மனதில் இடம் பிடித்திருந்தாள் என்பதை அவள் சொல்லாமலே தெரிந்து கொண்டேன்.
ஒவ்வொன்றும் ஒரு புகார் செய்தன,அவரவர் மொழியில்.
வடக்கத்தியக் குழந்தைகள் பெரும்பாலும் பேசிய இந்தி மொழியைப் புரிந்து கொண்டு திவ்யா பதில் அளித்தது எனக்கும் புரிந்தது.ஆனால் தெற்கத்தியக் குழந்தைகள் பேசிய பேச்சினை நான் மட்டுமே புரிந்து கொண்டேன்.
எத்தனை மொழிகள்,ஆனால் வேதனை ஒன்றுதான்,என்ற பிரம்மாண்டமானதொரு சோகத்தின் முன் நான் நின்றேன்.
மொழிகள் புரியாமலே இருந்திருந்தால்,ஏன்,மனிதர்களாகப் பிறக்காமலே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று மனதார நான் நினைத்தது அந்தக் கணத்திலதான்.
அந்தக் குழந்தைகள் திவ்யாவைச் சுற்றிக் கொண்டு கேட்ட கேள்விகள் இதுதான்.
'எனக்கு ரொம்ப வலிக்கிறது ஆன்ட்டி..ஏன் என்னை எந்த மருந்தும் கொடுத்துக் குணமாக்க மாட்டேன் என்று டாகடர் அங்கிள்கள் பிடிவாதம் பிடிக்கிறார்கள்?'
'எனக்குப் பசியே இல்லை என்றாலும் ஏன் என்னைச் சாப்பிடு,சாப்பிடு என்று என் அம்மா உயிரெடுக்கிறாங்க?'
'சாப்பிட்டவுடன் வாந்தி எடுப்பதையாவது யாராவது நிறுத்த மாட்டார்களா?'
'நான் என் வீட்டில் தம்பி,தங்கைகளுடன் எப்போது மீண்டும் இதுபோலவே விளையாடப் போகிறேன்,ஆன்ட்டி?'
'ஏன் எந்தக் கடவுளுமே நாங்கள் எது சொன்னாலும் காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்,ஆன்ட்டி?'
'எங்களைக் குளிப்பாட்ட வரும் ஆயா அடிக்கடி சொல்லும்,சாவு என்பதற்கு உண்மையான அர்த்தம்தான் என்ன,ஆன்ட்டி?'
திவ்யா பார்வையைக் குழந்தைகளிடம் இருந்து திருப்பி என்னைப் பார்த்தாள்.
அந்தக் குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு எந்தக் கடவுளுமே பதில் சொல்ல முடியாது என்ற பேருண்மையை நான் அந்தக் கணத்தில்தான் உணர்ந்தேன்.
அதுவரை அமைதியாக இருந்த ஒரு பையன் கடைசியாக ஒரு கேள்வி கேட்டான்.
'நேக்கு எப்போ ஆன்ட்டி முடி வளரும்?' என்றான் தமிழில்!
திவ்யா புரியாமல் என்னைப் பார்த்தாள்.
'நேக்கு இவா மாதிரி இங்க்லிஷ் எல்லாம் சொல்லித் தரலே.நான் வேத பாட சாலையில் படிச்சவன்!' என்றான் அந்தச் சிறுவன்.
என்னை யாரோ உள்ளே இருந்து உலுக்கினார்கள்.
'உம் பேரு என்ன தம்பி?' என்றேன் நான்.
என் தமிழைக் கேட்டதும் அவனது முகம் மலர்ந்தது.பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் தராமலே, என் தமிழின் பெருமை புரிந்தது அந்தத் தருணத்தில்தான்.
'நீங்க நம்மவாளா?' என்றான் சிறுவன்,உண்மையில் மகிழ்ந்து.
ஆம் என்று வெறுமனே தலையாட்டினேன்.
'நான் வேத பாட சாலையிலே படிக்கிற பையன்.எல்லா மந்திரமும் அக்ஷரச் சுத்தமா நன்னாச் சொல்லுவேன்.கேக்கறேளா?' என்றவன் நான் தலையசைக்கும் முன்னரே கணீரென்று வேதம் சொன்னான்.
'அசத்தோ ம சத் கமய
தமசோ ம ஜ்யோதிர் கமய
ம்ரித்யோ ம அம்ருதம் கமய
ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி' என்றான் அந்தச் சிறுவன்.
என் கண்களில் நீர் முட்டுவதற்குள் அந்தச் சிறுவனே சொன்னான்.
'இதுக்குத் தமிழில் அர்த்தமும் சொல்லிடறேன்' என்றவன்
''பொய்மையில் இருந்து எஙகளை உண்மைக்கு அழைத்துச் செல்.
இருளில் இருந்து எங்களை ஒளிக்கு அழைத்துச் செல்.
சாவில் இருந்து எங்களைச் சாகாமைக்கு அழைத்துச் செல்.'
என்று அதே கணீர்க் குரலில் தமிழில் சொன்னான்.
'உன் பேரு?' என்றேன் அவனருகில் முழந்தாளிட்டு அமர்ந்து.
'பதஞ்சலி' என்றான் அந்தச் சிறுவன்.
'எனக்குக் குடுமி இல்லேன்னா நான் சொல்ற இந்த மந்திரத்தை யாரும் மதிக்க மாட்டா,நீ பாஸ் ஆக மாட்டேன்னு என்னோட வேதபாடசாலைப் பசங்க எல்லாம் சொல்றா! எனக்கு எப்போ மாமா முடி வளரும்?' என்று பரிதாபமாகக் கேட்டான் அந்தச் சிறுவன்.
இப்போதுதான் நான் அழுதேன்,அந்தச் சிறுவனைக் கட்டிப் பிடித்து.
(மந்திரங்கள் தொடரும்)
நல்ல இருக்கு.. பழைய பாகங்களையும் படிக்கிறேன்
பதிலளிநீக்குநல்ல இருக்கு.. பழைய பாகங்களையும் படிக்கிறேன்
பதிலளிநீக்குஉண்மையில் இதே போல் குழந்தைகளை நாம் காண நேர்ந்தால் அதை போல் கொடுரமான கணங்கள் வேறு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை சார்..
பதிலளிநீக்கு'பதஞ்சலி' ??
பதிலளிநீக்குஎனக்கு புரியவில்லை சார்..
நசரேயன் சொன்னது…
பதிலளிநீக்குநல்ல இருக்கு.. பழைய பாகங்களையும் படிக்கிறேன்//
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி,நச்ரேயன் சார்.படித்து விட்டுச் சொல்லுங்கள்.
vinoth gowtham சொன்னது…
பதிலளிநீக்குஉண்மையில் இதே போல் குழந்தைகளை நாம் காண நேர்ந்தால் அதை போல் கொடுரமான கணங்கள் வேறு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை சார்..//
உண்மைதான்.சில துயரங்களைப் பார்க்க நேராமல் இருப்பதே பெரும் பேறாகும்.
vinoth gowtham சொன்னது…
பதிலளிநீக்கு'பதஞ்சலி' ??
எனக்கு புரியவில்லை சார்..
பதஞ்சலி ’யோக சூத்திரம்’எழுதிய வேத கால ரிஷி.இன்று உலகெங்கும் விற்பனையாகும் யோக சாஸ்திரத்தின் தந்தை எனச் சொல்லலாம் வினோத்.
கண்கள் பனிக்கிறது.... என்னையும் அறியாமல்... :-(
பதிலளிநீக்குவந்ததற்கும்,ரசித்ததற்கும் நன்றி ,கல்கி.
பதிலளிநீக்குவழக்கம் போல் சூப்பர்.. அடுத்த அத்யாயத்துக்காக காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவழக்கம் போல உங்கள் ஊக்கத்துக்கு நன்றி,ஷங்கர்.
பதிலளிநீக்குஇரண்டு பாகமும் இப்போதுதான் படித்தேன். கடவுள் பற்றிய கேள்வியே ஏதுமறியா குழந்தைகள் பாதிக்கப்படும் போது எழுந்த ஒன்றாகத்தான் இருக்கும்.
பதிலளிநீக்குஅடுத்த பாகத்திற்கு காத்திருப்பு.
குடுகுடுப்பை சொன்னது…
பதிலளிநீக்குஅடுத்த பாகத்திற்கு காத்திருப்பு.//
நன்றி,குடுகுடுப்பை சார்.
இந்த பாகத்தை படித்த போது மனம் கனக்கிறது..
பதிலளிநீக்குஇதே நிலைமையில் இருக்கும் நமது சிறிலங்கா சகோதர, சகோதரிகளை நினைத்தால் மேலும் கஷ்டமாக உள்ளது..
அழ வெக்கறீங்க ஷன்முகப்ரியன் சார், ரொம்ப நல்லா இருக்கு. thiruanantha purathail இருந்து
பதிலளிநீக்குபட்டிக்காட்டான்.. சொன்னது…
பதிலளிநீக்குஇந்த பாகத்தை படித்த போது மனம் கனக்கிறது..
இதே நிலைமையில் இருக்கும் நமது சிறிலங்கா சகோதர, சகோதரிகளை நினைத்தால் மேலும் கஷ்டமாக உள்ளது..//
அதே கனக்கும் மனத்துடன், நன்றி திருஞான சம்பத்.
அது ஒரு கனாக் காலம் சொன்னது…
பதிலளிநீக்குஅழ வெக்கறீங்க ஷன்முகப்ரியன் சார், ரொம்ப நல்லா இருக்கு. thiruanantha purathail இருந்து//
பராட்டுக்கு நன்றி,சுந்தர்சார்.மும்பையில் இருந்து.
//
பதிலளிநீக்குஎத்தனை மொழிகள்,ஆனால் வேதனை ஒன்றுதான்,என்ற பிரம்மாண்டமானதொரு சோகத்தின் முன் நான் நின்றேன்
//
அரசியல்வாதிகளால் பிறருடைய வேதனைகளைப் புரிந்து கொள்ள முடியாது என்றே எண்ணுகிறேன்
அப்படிப் புரிந்துகொண்டால் இத்தனை யுத்தக் கோரங்களையும் கண்டபின்னரும் எவ்வாறு மௌனிகளாய் இருக்க முடிகிறது?
//
'அசத்தோ ம சத் கமய
தமசோ ம ஜ்யோதிர் கமய
ம்ரித்யோ ம அம்ருதம் கமய
ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி'
//
'அசத்தோ ம சத் கமய
தமசோ ம ஜ்யோதிர் கமய
ம்ரித்யோ ம அம்ருதம் கமய
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி'
-என்றே வரும் என நினைக்கிறேன். தயவு செய்து சரி பாருங்கள்
//என்னை யாரோ உள்ளே இருந்து உலுக்கினார்கள்.//
பதிலளிநீக்குஇயல்புதானே.. இதுபோன்ற சில சமயங்களில் நாம் உதிர்ந்தேபோவோம்.
//என் கண்களில் நீர் முட்டுவதற்குள் அந்தச் சிறுவனே சொன்னான்//
உங்கள் கண்களில் மட்டுமா???
காட்சியமைப்புகளனைத்தும் கண்களின் முன்னால் அப்படியே நிழலாடுகின்றன.
வலசு - வேலணை சொன்னது…
பதிலளிநீக்கு'அசத்தோ ம சத் கமய
தமசோ ம ஜ்யோதிர் கமய
ம்ரித்யோ ம அம்ருதம் கமய
ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி'
//
'அசத்தோ ம சத் கமய
தமசோ ம ஜ்யோதிர் கமய
ம்ரித்யோ ம அம்ருதம் கமய
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி'
-என்றே வரும் என நினைக்கிறேன். தயவு செய்து சரி பாருங்கள்
Sorry,since I am writing this from Bombay,I could not get Tamil fonts Valasu-Velanai.The hymn is recited by the small boy in the story. Due to his or my emotional intensity I have added OM TWICE.Sorry for the mistake.
HOWEVER I AM GRATEFUL FOR THE INTEREST SHOWN ON YOUR PART.THANK,YOU.
உழவன் " " Uzhavan " சொன்னது…
பதிலளிநீக்கு//என்னை யாரோ உள்ளே இருந்து உலுக்கினார்கள்.//
இயல்புதானே.. இதுபோன்ற சில சமயங்களில் நாம் உதிர்ந்தேபோவோம்.
//என் கண்களில் நீர் முட்டுவதற்குள் அந்தச் சிறுவனே சொன்னான்//
உங்கள் கண்களில் மட்டுமா???
காட்சியமைப்புகளனைத்தும் கண்களின் முன்னால் அப்படியே நிழலாடுகின்றன.
Tahnk you very much for your encouraging remarkas,Uzhavan.
நான் உங்கள் எழுத்துக்களுக்கு மெதுவாக வருகிறேன்.அழகிய எழுத்துக்களை மெல்ல அசை போட தமிழக தேர்தல் ஸ்டண்ட்கள் இடம் தருவதில்லை.
பதிலளிநீக்குரொம்ப நல்லா இருக்கு
பதிலளிநீக்குஅடுத்த அத்தியாயத்துக்கு நீண்ட நாட்கள் காக்க வைத்து விடாதீர்கள்!!
பதிலளிநீக்குஅடுத்த அத்தியாயத்திற்கான நீண்ட நாட்கள் காக்க வைக்காதீர்கள்!! தெள்ளிய நடை. வாழ்த்துகள்
பதிலளிநீக்குபதிவு நன்றாக உள்ளது ஷன்முகப்ரியன் சார்.
பதிலளிநீக்குராஜ நடராஜன் சொன்னது…
பதிலளிநீக்குநான் உங்கள் எழுத்துக்களுக்கு மெதுவாக வருகிறேன்.அழகிய எழுத்துக்களை மெல்ல அசை போட தமிழக தேர்தல் ஸ்டண்ட்கள் இடம் தருவதில்லை.//
நேங்கள் தரும் ஊக்கத்துக்கு நன்றி ராஜ நடராஜன் சார்.
இயற்கை சொன்னது…
பதிலளிநீக்குரொம்ப நல்லா இருக்கு//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி,இயற்கை.
பிரேம் சொன்னது…
பதிலளிநீக்குஅடுத்த அத்தியாயத்துக்கு நீண்ட நாட்கள் காக்க வைத்து விடாதீர்கள்!!
பிரேம் சொன்னது…
அடுத்த அத்தியாயத்திற்கான நீண்ட நாட்கள் காக்க வைக்காதீர்கள்!! தெள்ளிய நடை. வாழ்த்துகள்//
உங்களைப் போன்ற இளைஞர்களின் வாழ்த்துகள் உண்மையில் உற்சாகம் அளிக்கிறது,ப்ரேம்.இந்திப் படவேலைகள் தொடர்பாக அடிக்கடி மும்பை சென்று வரும் இடைவெளிகளில்தான் நான் எழுத வேண்டி இருப்பதால்தாமதம்ஏற்படுகிறது.மன்னிக்கவும்,ப்ரேம்.
அமர பாரதி சொன்னது…
பதிலளிநீக்குபதிவு நன்றாக உள்ளது ஷன்முகப்ரியன் சார்.//
வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி, அமரபாரதி.
Its really not able to digest.. romba kashtama iruku sir..
பதிலளிநீக்குnalla iruku unga words...
i became ur fan.. i will be searching ur blogs whenever i enter into this website..
wishes..
Sachanaa சொன்னது…
பதிலளிநீக்குIts really not able to digest.. romba kashtama iruku sir..
nalla iruku unga words...
i became ur fan.. i will be searching ur blogs whenever i enter into this website..
wishes..//
உங்கள் முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி,சச்சனா. நாவலின் மீதிப் பாகங்களையும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டுகிறேன்,சச்சனா.
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
பதிலளிநீக்குசார் இப்போதான் படிக்க முடிந்தது.
பதிலளிநீக்குஅருமை
வண்ணத்துபூச்சியார் சொன்னது…
பதிலளிநீக்குசார் இப்போதான் படிக்க முடிந்தது.
அருமை//
வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி சூர்யா.