வியாழன், மே 21, 2009
கன்னிகா (எட்டாம் பாகம்)
9.
'ஆயிரம் வெறுமையான வார்த்தைகளைக் காட்டிலும்
அமைதி தரும் ஒரு சொல் நன்று.
ஆயிரம் வெற்றுப் பாடல்களை விட
அமைதி தரும் ஒரு பாட்டு நன்று.
ஆயிரம் போர்களில் வெல்வதை விட
உன்னையே நீ வெல்வது நன்று.
ஏன் எனில் அந்த வெற்றி யாராலும் எதனாலும் பறிபோகாது.
கௌதம புத்தரின் 'தம்ம பதம்'
(இலகுவான,எளிமையான எழுத்துக்களை விரும்பிப் படிப்பவர்களாக இருந்தால் இதனைப் படிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.)
சிறுவர்கள் அனைவரையும் அவரவர் அறைகளுக்குக் கூட்டிச் சென்ற பின்னும் அவர்கள் முகங்களை என் மனதில் யாரோ செதுக்கி இருந்தார்கள்.
மகிழ்ச்சியை விடத் துயரத்திற்கே அழுத்தம் அதிகம் போலிருக்கிறது.எவ்வளவு பெரிய மகிழ்ச்சியையும் விரைவில் மறந்து விடுகிறோம்.ஆனால் சின்னஞ் சிறிய துயரங்கள் கூட மனதில் இருந்து அழிய வெகு நாட்கள் ஆகின்றன.
திவ்யாவின் கைபேசிக்கு அழைப்பு வந்தது.
லாமா பத்மசூர்யா அறைக்கு வந்து விட்டாராம்.நாங்கள் அவரைப் பார்க்கச் சென்றோம்.
அவரது அறைக் கதவு திறந்தே இருந்ததால் நேராக அறைக்குள் எந்த அறிவிப்பும் இன்றி உள்ளே சென்று விட்டோம்.
திவ்யாவைப் பார்த்ததும் எல்லோரையும் போல லாமாஜியும் 'நமஸ்தே திவ்யாஜி' என்று உற்சாகமாக வரவேற்றார்.
திவ்யா என்னை அறிமுகப் படுத்த, திபெத்திய முறைப்படி பத்மசூர்யா பணிவுடன் குனிந்து இரு கரம் கூப்பி என்னை வணங்கினார்.
நானும் அவரை இருகரம் கூப்பி வணங்கினேன்.
பத்மசூர்யா நான் எதிர்பார்த்ததைப் போல வயதானவராக இருக்கவில்லை..இளைஞர்தான் மிஞ்சி,மிஞ்சி 25,26 வயதுதான் இருக்கும் அவருக்கு.
செம்பொன் நிறத்தில் பௌத்தர்களின் துறவு அங்கியை அணிந்திருந்தார் அவர்.பிரிட்டன் உச்சரிப்புடன் அழகாக ஆங்கிலம் பேசினார்.அறிமுக விபரங்களுக்குப் பிறகு நான் நேரடியாக பத்மசூர்யாவிடம் கேட்டது இந்தக் கேள்வியைத்தான்.
'நீங்கள் முக்தி அடைந்து விட்டீர்களா,லாமாஜி?'
லாமாஜி கிட்டத்தட்ட விழுந்து விழுந்து சிரித்தார்.பிறகு நிதானமான குரலில் சொன்னார்.
'சாவைப் பற்றிய முழுமையான அனுபவத்தையும்,உண்மையையும் தெரிந்து கொள்ள விரும்பினீர்கள் என்றால் நீங்கள் செத்தவரிடம்தான் கேட்க வேண்டும்,இல்லையா,அரவிந்தன்?நீங்கள் செத்து விட்டீர்களா என்று கேட்டால் அவர் அதற்கு ஆம் என்பாரா?இல்லை என்பாரா?' என்று என்னைக் கேட்டார் பத்மசூர்யா.
நான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தேன்.
'ஆம் என்று சொன்னால் செத்து விட்டேன் என்று அவர் சொல்வது பொய்.
இல்லை என்று சொன்னால் அவரது அனுபவத்தினால் உங்களுக்குப் பயனில்லை.அதே போல்தான் இதுவும். உங்கள் கேள்விக்கு நான் ஆம் என்றும் சொல்ல முடியாது.இல்லை என்றும் சொல்ல முடியாது' என்றார் லாமாஜி.
'சரி.மரணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்,லாமாஜி?'என்று கேட்டாள் திவ்யா.
'அது ஒரு பட்டமளிப்பு தினம்.வாழ்க்கையின் படிப்பு முடிந்து விட்டது என்று மரணத்தன்று சொல்லப் படுகிறது.படிப்பு முடிந்து பட்டம் வாங்கும் தினத்தன்றும் கல்லூரியிலேயே இன்னும் தங்கிப் படிக்க விரும்புகிறார்கள் மனிதர்கள்.அதற்கு எந்தக் கல்லூரியிலும் அனுமதி கிடையாது.' என்றார் லாமாஜி.
'எதைப் படித்தோம் என்றே தெரியாத போது எப்படிப் பட்டம் கொடுப்பார்கள்,லாமாஜி?'
சிரித்தார் பத்மசூர்யா.
'படிக்கவில்லை என்று நீங்கள் நடிக்கிறீர்கள்,அரவிந்தன்.எடுத்துக் காட்டாக,மனித உயிர் நிரந்தரமில்லை என்று உங்களுக்கு இனிமேல்தான் வாழ்க்கை கற்றுத் தர வேண்டுமா,என்ன?உங்களுக்குத் தெரியும். ஆனால் தெரியாதது போல் நடிக்கிறீர்கள்.மரணத்தைப் பற்றித் தெரியாவிட்டால் அதனைக் கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறீர்கள்?உங்களுக்குத் தெரியும்.ஏன் என்றால் நீங்கள் நிறையத் தடவை இறந்திருக்கிறீர்கள்,நிறையத் தடவை பிறந்ததைப் போலவே.' என்றார் பத்மசூர்யா புன்னகை மாறாமல்.
'உங்களுக்குப் பிறவிகளில் நம்பிக்கை இருக்கிறதா?' என்று கேட்டாள் திவ்யா.
'உண்மை என்று தெரிந்ததை எதற்காக நம்ப வேண்டும்,திவ்யாஜி?' என்று கேட்டார் லாமாஜி.
'ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை!' என்றேன் நான்.
அவர் ஆழமாக என்னை ஒரு முறை பார்த்தார்.
'நீங்கள் பத்து வயதுச் சிறுவனாக இருந்தது உண்மைதானே?' என்று கேட்டார் பத்மசூர்யா.
'ஆம்' என்று தலையாட்டினேன்.
'அந்தச் சிறுவன் இப்போது எங்கே?'
நான் மௌனமாக பதிலை யோசித்தபடி இருந்த போது அவரே பேசினார்.
'அவனது சிறிய உடல் எங்கே? அவனது விளையாட்டுத் தனமான பேச்சும், பார்வையும் எங்கே?பாலுணர்வு இன்னும் விழிக்காத அந்த அரவிந்தன் பார்த்ததைப் போலத்தான் இன்னும் பெண்களை எல்லாம் தோழமையுடன் மட்டும் பார்க்கிறீர்களா?அவனது உடைகள்,விருப்பங்கள், விளையாட்டுக்கள்,ஆசைகள் ஏதாவது இப்போது உங்களுக்குப் பொருந்துமா?சொல்லுங்கள் அரவிந்தன், அவன் உயிருடன் இருக்கிறானா,இல்லை செத்து விட்டானா?'
'சாகவில்லை,நான்தான் அது என்று எனக்குத் தெரியும்'
'எப்படி?'
'எனக்கு ஞாபகம் இருக்கிறது' என்றேன் நான்.
'நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் குழந்தையாக இருந்தது ஞாபகத்தில் இருக்கிறதா?'
'இல்லை' என்று தலையாட்டினேன்.
'கருப்பையில் ஸ்கேன் எடுத்த பல குழந்தைகளின் புகைப் படங்களை உங்களிடம் காட்டினால் உங்கள் படத்தை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?'
'முடியாது' என்றேன்.
திவ்யா என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
'ஏன் என்றால் அது உங்களுக்கு ஞாபகமில்லை.உங்களுக்கு ஞாபகம் இல்லாததினால் மட்டும், நீங்கள் கருப்பையில் குழந்தையாக இருந்திருக்கவில்லை என்று கூற முடியுமா?'
நான் மௌனமானேன்.
'அது போலவே உங்களுக்கு ஞாபகமில்லை என்ற ஒரே காரணத்தினால் மட்டும் நீங்கள் முன்னர் வாழ்ந்திருக்கவில்லை என்று கூற முடியாது அரவிந்தன்.'
அவரது தர்க்கம் என்னுள் உறைத்தது.
'உண்மையைச் சொல்லப் போனால் குழந்தைகளுக்கும் கருப்பை ஞாபகங்கள் இருக்கிறது என நவீன மருத்துவம் இப்போது கண்டறிந்திருக்கிறது.நமது நினைவாற்றலின் திறனை வைத்தே நமது இறந்த காலத்தை நாம் கணிக்கிறோம்,அரவிந்தன்.புத்த பகவானுக்கு ஞானம் வந்த போது அவருக்குத் தனது முந்திய பிறவிகள் 500க்கும் மேல் ஞாபகத்துக்கு வந்ததென்று எங்கள் ஜாதகக் கதைகள் கூறுகின்றன.'
அவரது எண்ண ஓட்டத்தை தடை செய்யாமல் நாங்கள் அவர் சொல்வதைக் கூர்ந்து கேட்டபடி இருந்தோம்.
'ஆடு,மாடு,ஒட்டகங்களின் மேல் பூச்சிகள் ஊர்ந்தால் அவை என்ன செய்யும் என்று கவனித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் பத்மசூர்யா திடீரென்று.
நாங்கள் இந்தத் திடீர்க் கேள்வியை எதிர்பார்க்காததினால் பதிலேதும் சொல்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
'அவற்றிற்குப் பூச்சிகளை உதறக் கைகள் இல்லாததினால் அலை அலையாகத் தங்கள் தோலையே உதறிப் பூச்சிகளை அகற்றும்.பார்த்திருக்கிறீர்களா?'
'ஆம்'என்றோம் ஒருசேர.
' நாமும் அது போல ஒரு காலத்தில் ஆடு,மாடுகளாக,மற்ற விலங்குகளாக வாழ்ந்ததின் அடையாளம்,நாம் விரும்பும் போது நம் தோலைச் சுருக்கும் சக்தி நம் உடலில் இன்னும் ஒரு இடத்தில் மட்டும் மிச்சமிருக்கிறது என்கிறார் டார்வின்.அது எங்கே என்று தெரியுமா?'
தெரியவில்லை என்று வெறுமனே தலையாட்டினோம்.
'நம் நெற்றித் தோலை மட்டும் நாம் விரும்பும் போது நம்மால் சுருக்க முடியும் ' என்று தனது நெற்றியைச் சுருக்கியபடியே சொல்லிச் சிரித்தார் லாமாஜி.
நாங்களும் சிரித்தோம்.
'இப்படிப் பூர்வ ஜென்மத்தில் குரங்குகளாக இருந்தாம் என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் சொன்னால் நம்புகிறீர்கள்.ஆனால் முந்திய பிறவியில் மனிதர்களாக இருந்தோம் என்று நம் ஊர் ஞானிகள் சொன்னால் நம்ப மாட்டேன் என்று சொல்கிறீர்களே,என்ன நியாயம் அரவிந்தன்?' என்று அவர் கேட்ட போது மூன்று பேருமே ரசித்துச் சிரித்தோம்.
பிறகு சற்று யோசித்து விட்டுத் திவ்யா கேட்டாள்.
'போரும்,வறுமையும்,நோய்களும் இது போன்ற ஏராளமான அவலங்களும் மனிதர்களை வாட்டி,வதைதுக் கொண்டிருக்கும் போது நீங்கள் பேசும் மரணம்,பிறவி,தியானம் போன்ற ஞானங்களினால் என்ன பயன் லாமாஜி?'
'இந்த ஞானம் இல்லாததினால்தான் நீங்கள் சொல்லும் அத்தனை துயரங்களாலுமே மனிதர்கள் இன்னல் படுகிறார்கள் என்கிறோம் நாங்கள் ' என்றார் லாமாஜி.
'உங்கள் அஞ்ஞானத்துக்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.உலகம் முழுதும் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை மக்களுக்குக் கொடுத்து விட்டு அதனை ஜனநாயகம் என்கிறீர்கள்.
தன்னையே தனது ஆசைகளில் இருந்தும்,சுயநலங்களில் இருந்தும் ஆள முடியாத மனிதன் தன்னை ஆள்வதற்கு எப்படி இன்னொரு சக மனிதனைச் சரியாகத் தேர்ந்தெடுக்க முடியும்?
பார்வையற்றவர்கள் நிறையப் பேர் சேர்ந்து சொல்லி விட்டால் பௌர்ணமியை அடையாளம் காடி விட முடியுமா? எனக்குப் புரியவில்லை.
ஜனநாயகத்தில் தலைவர்கள் உங்களை வழி நடத்துவதில்லை.உஙகள் எண்ணிக்கைதான் அவர்களை வழி நடத்துகிறது. வெறும் எண்ணிக்கை எப்படி அறிவாகும்?தீர்வாகும்?
உங்கள் ஜனநாயக முறைப்படி புத்தரையும்,ஏசுவையும்,பதஞ்சலியையும் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்கள் யாரும் வார்டு கௌன்சிலர்கள் கூட ஆகி இருக்க மாட்டார்கள்!' என்றார் பத்மசூர்யா.
இந்த முறை நாங்கள் மனம் விட்டு, வாய் விட்டுச் சிரித்தோம்.
'உலகத்திலேயே கிடைத்தற்கரிய ஞானம் தங்கள் குருவைத்,தங்கள் வழிகாட்டியைத்,தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஞானம்தான். அந்த ஒப்பற்ற ஞானம் மக்கள் எல்லோருக்கும் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டதனால் வந்த துயரங்கள்தான் அனைத்துமே' என்றார் பத்மசூர்யா,சிரத்தையுடன்.
சற்று நேரம் கழித்து நான் கேட்டேன்.
'உங்களிடம் பெர்சனலாக ஒன்று கேட்கலாமா, லாமாஜி?'
'என்னுடைய செக்ஸ் லைஃப் பற்றித்தானே?' என்று கேட்டார் பதமசூர்யா,பட்டென்று.
நான் உண்மையில் அசந்து போனேன்.
'சரியாகச் சொன்னீர்கள்,லாமாஜி.இந்த இளம் வயதில் பெண் இன்பத்தைத் துறந்து வாழ்வது வேதனை இல்லையா?உடலுக்கும் மனதுக்கும் தரும் செயற்கையான தண்டனை இல்லையா?உங்கள் துறவுக்கும் உங்கள் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்?' என்றேன் நான்.
'நீங்கள் நினைப்பதைப் போல நான் பெண் இன்பத்தைத் துறந்து விடவில்லை.கடந்து வந்திருக்கிறேன்.
பிறந்த குழந்தை உயிர் வாழ்வதற்கு முக்கியம் என்றாலும்,தாய்ப் பாலைப் பெரியவன் ஆன பின்னும் யாராவது குடித்துக் கொண்டிருக்கிறார்களா?
விமானம் பறக்கும் வரையில்தான் அதற்குச் சக்கரங்கள் தேவை.பறக்கத் தொடங்கியவுடன் அது சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வதைப் போல மேலே செல்லச் செல்ல மனித மனமும் தனது தேவைகளை மாற்றிக் கொண்டே போகிறது.
அது மட்டுமல்ல அரவிந்தன்,நீங்கள் நம்பாவிட்டலும் உங்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான்.
பல பிறவிகளில் நான் பெண்ணாயும் பிறந்திருப்பதை நான் அறிவேன்.அதனால் எனக்குப் பெண்ணுடல் புதியதல்ல.நானே உள்ளிருந்து பழகிய ஒன்று.
சிறு குழந்தையாக இருந்த போது சாக்லெட்களின் மேல் இருக்கும் ஆசை வயது முதிரும் போது இயல்பாகவே மறைவதைப் போல எனக்கு செக்ஸின் மேல் இருக்கும் ஆசை போன பிறவிகளிலேயே மறைந்து விட்டது.இது செயற்கையாக இருந்தால்தான் வேதனை,வலி,சஜ்சலம் எல்லாம்.இதுதான் எனது இயல்பு.எனது இயற்கை.
அவ்வளவு ஏன், உங்களுக்கும் கூட இது சாத்தியமாகக் கூடும்' என்றார் லாமாஜி.
'பயப்படாதீர்கள், அது இன்னும் பல பிறவிகள் தாண்டித்தான்!' என்று சொல்லிச் சிரித்தார் பத்மசூர்யா.
'தேங்க்ஸ் லாமாஜி' என்றேன் நான்.
திவ்யா வெட்கத்துடன் சிரித்தாள்.
அப்போது ஒரு நர்ஸ் ஓடி வந்தாள்.
இறக்கும் தறுவாயில் இருக்கும் ஒரு நோயாளி லாமாஜியை அழைப்பதாகச் சொன்னாள் அவள்.
லாமாஜி விரைய நாங்களும் உடன் சென்றோம்.
வாழ்க்கையிலேயே நான் சந்தித்திராத முற்றிலும் புதிய அனுபவம் அது.
(வாழ்க்கை தொடரும்)
அருமையான தொகுப்பு. இப்பொழுது தான் படிக்கிறேன்.
பதிலளிநீக்குஆன்மீக விஷயங்களை சொல்ல நீங்கள் தேர்ந்தெடுத்த களம் சிறப்பானது.
எனது இரண்டு பைசாவை கூற விரும்புகிறேன்...
//அவருக்குத் தனது முந்திய பிறவிகள் 500க்கும் மேல் ஞாபகத்துக்கு வந்ததென்று எங்கள் ஜாதகக் கதைகள் கூறுகின்றன.'//
பெளத்த சரிதத்தில் 30,000 எனும் எண்ணிக்கை உண்டு. அனைத்தையும் ஒரு சேர அனுபவித்தாராம் கெளதமர். நினைத்தாலே உடல் நடுங்குகிறது.
//உங்கள் ஜனநாயக முறைப்படி புத்தரையும்,ஏசுவையும்,பதஞ்சலியையும் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்கள் யாரும் வார்டு கௌன்சிலர்கள் கூட ஆகி இருக்க மாட்டார்கள்!' //
100% தலையாட்டுகிறேன்.
லோக்சபாவில் வட இந்தியாவில் சிலர் நின்று தோற்றார்கள்.
இதனால் தான் நான் தேர்தலில் நிற்கவில்லை :))
மேலும் உங்களிடம் இருந்து இது போன்ற படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.
ஆகா அருமையான கலவை
பதிலளிநீக்கு//'ஆம் என்று சொன்னால் செத்து விட்டேன் என்று அவர் சொல்வது பொய்.
பதிலளிநீக்குஇல்லை என்று சொன்னால் அவரது அனுபவத்தினால் உங்களுக்குப் பயனில்லை.அதே போல்தான் இதுவும்.//
சரியான பதிலாக இருக்கு சார்.. எனக்கு கடவுள்மீது நம்பிக்கை அவ்வளவாக இல்லை, இருந்தாலும் ஆம் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது உங்களின்... எழுத்து.
//'அது போலவே உங்களுக்கு ஞாபகமில்லை என்ற ஒரே காரணத்தினால் மட்டும் நீங்கள் முன்னர் வாழ்ந்திருக்கவில்லை என்று கூற முடியாது அரவிந்தன்.//
நல்ல உதாரணம் அதற்கா ஏற்கொள்ளவும் என் மனம் முடியவில்லை...
//'இப்படிப் பூர்வ ஜென்மத்தில் குரங்குகளாக இருந்தாம் என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் சொன்னால் நம்புகிறீர்கள்.ஆனால் முந்திய பிறவியில் மனிதர்களாக இருந்தோம் என்று நம் ஊர் ஞானிகள் சொன்னால் நம்ப மாட்டேன் என்று சொல்கிறீர்களே,என்ன நியாயம் அரவிந்தன்?' என்று அவர் கேட்ட போது மூன்று பேருமே ரசித்துச் சிரித்தோம்.//
நானும் ரசித்துச் சிரித்தேன்
//'நீங்கள் நினைப்பதைப் போல நான் பெண் இன்பத்தைத் துறந்து விடவில்லை.கடந்து வந்திருக்கிறேன்.//
நல்ல போக்காக எழுதி ஆம் என்றே சொல்ல வைகின்றீர்கள் சார்...
Dear sir,
பதிலளிநீக்குSorry for writing in english.
This is the first time i'm commenting on your blog.Read all parts of 'Kannika', your thoughts/way of writing (Soriyanukae torcha :) ) are very good. Especially, this part has lot of good thoughts. Just out of curiosity, Is this thoughts are from some buddha related books or ur own thoughts ?. Whatever it may be all are good. Continue your good work.
Thanks,
Arun
//விமானம் பறக்கும் வரையில்தான் அதற்குச் சக்கரங்கள் தேவை.பறக்கத் தொடங்கியவுடன் அது சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வதைப் போல மேலே செல்லச் செல்ல மனித மனமும் தனது தேவைகளை மாற்றிக் கொண்டே போகிறது.//
பதிலளிநீக்கு//'இப்படிப் பூர்வ ஜென்மத்தில் குரங்குகளாக இருந்தாம் என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் சொன்னால் நம்புகிறீர்கள்.ஆனால் முந்திய பிறவியில் மனிதர்களாக இருந்தோம் என்று நம் ஊர் ஞானிகள் சொன்னால் நம்ப மாட்டேன் என்று சொல்கிறீர்களே,என்ன நியாயம் அரவிந்தன்?' //
அருமை அருமை அருமை சார்..
Sir,
பதிலளிநீக்குI lost my old blog..
Tis is my New1
http://julykaatril.blogspot.com
ஸ்வாமி ஓம்கார் சொன்னது…
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு. இப்பொழுது தான் படிக்கிறேன்.
ஆன்மீக விஷயங்களை சொல்ல நீங்கள் தேர்ந்தெடுத்த களம் சிறப்பானது.//
நன்றி ஸ்வாமிஜி.வசிஷ்டர் வாயால் வாழ்த்துப் பெறும் பேறு பெற்றேன்.
//பெளத்த சரிதத்தில் 30,000 எனும் எண்ணிக்கை உண்டு. அனைத்தையும் ஒரு சேர அனுபவித்தாராம் கெளதமர். நினைத்தாலே உடல் நடுங்குகிறது.//
இது எனக்குப் புதிய தகவல்.
//உங்கள் ஜனநாயக முறைப்படி புத்தரையும்,ஏசுவையும்,பதஞ்சலியையும் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்கள் யாரும் வார்டு கௌன்சிலர்கள் கூட ஆகி இருக்க மாட்டார்கள்!' //
100% தலையாட்டுகிறேன்.
லோக்சபாவில் வட இந்தியாவில் சிலர் நின்று தோற்றார்கள்.
இதனால் தான் நான் தேர்தலில் நிற்கவில்லை :))//
நமது நாடு இன்னும் பிழைத்துக் கொண்டிருப்பதே, உங்களைப் போன்ற ஆன்மீகவாதிகள் தங்கள் தூய்மையை இன்னும் நமது மக்களின் அங்கீகாரச் சந்தைக்குக் கொண்டு வராமல் இருப்பதால்தான் ஸ்வாமிஜி.
//மேலும் உங்களிடம் இருந்து இது போன்ற படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.//
உங்கள் வாழ்த்துகள் என்னை இன்னும் எழுதச் செய்யும் ஸ்வாமிஜி.நன்றிகள் கோடி.
ஆ.ஞானசேகரன் சொன்னது…
பதிலளிநீக்குஆகா அருமையான கலவை//
நன்றி,ஞானசேகரன்.திரும்பி ஊருக்குப் போய் விட்டீர்களா?
ஆ.ஞானசேகரன் சொன்னது…
பதிலளிநீக்கு//'ஆம் என்று சொன்னால் செத்து விட்டேன் என்று அவர் சொல்வது பொய்.
இல்லை என்று சொன்னால் அவரது அனுபவத்தினால் உங்களுக்குப் பயனில்லை.அதே போல்தான் இதுவும்.//
சரியான பதிலாக இருக்கு சார்.. எனக்கு கடவுள்மீது நம்பிக்கை அவ்வளவாக இல்லை, இருந்தாலும் ஆம் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது உங்களின்... எழுத்து.
//'அது போலவே உங்களுக்கு ஞாபகமில்லை என்ற ஒரே காரணத்தினால் மட்டும் நீங்கள் முன்னர் வாழ்ந்திருக்கவில்லை என்று கூற முடியாது அரவிந்தன்.//
நல்ல உதாரணம் அதற்கா ஏற்கொள்ளவும் என் மனம் முடியவில்லை...
எனது பணி உங்கள் மனதில் விதைகளைத் தூவுவதோடு முடிந்து விடுகிறது,ஞானசேகரன்.அங்கே அது முளைத்துத்,தழைப்பதையும்,வளர்ந்து செழிப்பதையும் உங்கள் மனமே பார்த்துக் கொள்ளும்.
உங்கள் ரசனையே எனது எழுத்துக்கு உரமானது.நன்றி.
Arun சொன்னது…
பதிலளிநீக்குDear sir,
Sorry for writing in english.
This is the first time i'm commenting on your blog.Read all parts of 'Kannika', your thoughts/way of writing (Soriyanukae torcha :) ) are very good.
Thanks,
Arun
Thank you Arun,for your first visit and favorable comments on my blog.
//Especially, this part has lot of good thoughts. Just out of curiosity, Is this thoughts are from some buddha related books or ur own thoughts ?. Whatever it may be all are good. Continue your good work.//
அதில் மேற்கோள் காட்டும் பெரியவர்களின் கருத்துக்களைத் தவிர மற்றபடி அவர்களின் எண்ணங்களை இன்றைய நமது சூழலுக்கேற்பக் கையாள்வது நான்தான்.
இதில் பிழைகளளை மட்டுமே நான் செய்திருப்பேன்,மற்றபடி அந்த மஹான்களின் கருத்துக்கள் பிழையானதல்ல.
Thank you for your encouraging words,Arun.
vinoth gowtham சொன்னது…
பதிலளிநீக்கு//விமானம் பறக்கும் வரையில்தான் அதற்குச் சக்கரங்கள் தேவை.பறக்கத் தொடங்கியவுடன் அது சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வதைப் போல மேலே செல்லச் செல்ல மனித மனமும் தனது தேவைகளை மாற்றிக் கொண்டே போகிறது.//
//'இப்படிப் பூர்வ ஜென்மத்தில் குரங்குகளாக இருந்தாம் என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் சொன்னால் நம்புகிறீர்கள்.ஆனால் முந்திய பிறவியில் மனிதர்களாக இருந்தோம் என்று நம் ஊர் ஞானிகள் சொன்னால் நம்ப மாட்டேன் என்று சொல்கிறீர்களே,என்ன நியாயம் அரவிந்தன்?' //
அருமை அருமை அருமை சார்..//
உங்கள் தொடர்ந்த ரசனைக்கும்,ஆதரவிற்கும் நன்றி வினோத்.
vinoth gowtham சொன்னது…
பதிலளிநீக்குSir,
I lost my old blog..
Tis is my New1
http://julykaatril.blogspot.com//
Oh,today only I visited your hilarious post.I enjoyed the fun,Vinoth.Lovely.
இன்னும் எப்படி பாராட்டணும்னு தெரியல.... அவ்வளவு நல்லா இருக்கு... மெதுவாக வந்தாலும், மிருதுவாக மனதை வருடுகிறது
பதிலளிநீக்குஅது ஒரு கனாக் காலம் சொன்னது…
பதிலளிநீக்குஇன்னும் எப்படி பாராட்டணும்னு தெரியல.... அவ்வளவு நல்லா இருக்கு... மெதுவாக வந்தாலும், மிருதுவாக மனதை வருடுகிறது//
நீங்கள் படிப்பதே ஒரு பாராட்டுத்தானே,சுந்தர்.இதற்கு மேலே தனியாக எதற்குப் பாராட்டு?
//ஷண்முகப்ரியன் சொன்னது…
பதிலளிநீக்குநன்றி,ஞானசேகரன்.திரும்பி ஊருக்குப் போய் விட்டீர்களா?//
ஆம் சார்..
நேரம் இருப்பின் அலைபேசியில் தொடர்பு கொள்கின்றேன் சார்..
I would like to play Devil's advocate..
பதிலளிநீக்குI see your urge to show your intellect in the story telling and that is more dominating than the story. It is like telling the reader all the time that the author is smarter than the reader..
The story appears really far fetched from the reality.
Then again, i have been living abroad for a while and so may be i am frozen in time.
pardon me if this hurts your feelings. this is my sincere opinion.
--anvarsha
பெயரில்லா சொன்னது…
பதிலளிநீக்குI would like to play Devil's advocate..
I see your urge to show your intellect in the story telling and that is more dominating than the story. It is like telling the reader all the time that the author is smarter than the reader..
The story appears really far fetched from the reality.
Then again, i have been living abroad for a while and so may be i am frozen in time.
pardon me if this hurts your feelings. this is my sincere opinion.
--anvarsha
First of all thank you ,Anvarsha for your visit and frank comments.
Definition of a story differs from person to person and time to time.Some are more informative,some are more emotional,some are more religious.It is the author's freedom and choice.To my knowledge and judgment I am writing always keeping the characters' feelings in my mind so that the story interest sustained throughout the narration.
You can find all the reviews of the other readers above who did not find any smartness in me rather than their own.
AND I HAVE TO HUMBLY SAY THAT NOBODY CAN BE APPEALING TO EVERYBODY.
Reality has so many dimensions.
What you said is absolutely correct in one sense that it is always far fetched to grasp by any one except the Totally Realized.
Sincerity never hurts me than pseudo admirations.
Thank you Anvarsha once again.
(இலகுவான,எளிமையான எழுத்துக்களை விரும்பிப் படிப்பவர்களாக இருந்தால் இதனைப் படிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.)
பதிலளிநீக்கு//
எனக்காகவே எழுதப்பட்ட இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது.மறு பிறவி கருத்துக்கள் ரசிக்கும்படி இருந்தது, ஆனால் நான் நம்பிக்கை இன்னும் வரவில்லை.
புத்தர் பெயரை கேட்டால் இலங்கைதான் ஞாபகம் வருகிறது.
//
பதிலளிநீக்குஉங்கள் ஜனநாயக முறைப்படி புத்தரையும்,ஏசுவையும்,பதஞ்சலியையும் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்கள் யாரும் வார்டு கௌன்சிலர்கள் கூட ஆகி இருக்க மாட்டார்கள்!' என்றார் பத்மசூர்யா.
//
ம்ம்ம்...
புத்தர் இலங்கைக்கு வந்தால் புத்த பிக்குகளே அடித்து விரட்டுவார்கள்.
ச்சே!
இன்றுதான் உங்கள் பதிவினைப் பார்க்க முடிந்தது. வரவர உங்கள் எழுத்தின் வேகமும் வீச்சும் ஆச்சரியப்பட வைக்கிறது. மிகச்சிறந்த ஒரு காவியத்தினூடு பயணிக்கும் அனுபவத்தினைத் தருவதற்கு நன்றிகள் பல.
வலசு - வேலணை சொன்னது… //
பதிலளிநீக்கும்ம்ம்...
புத்தர் இலங்கைக்கு வந்தால் புத்த பிக்குகளே அடித்து விரட்டுவார்கள்.
ச்சே!//
தொண்டர்கள்தான் தலைவரைக் கொல்வார்கள்.மகன்கள்தான் அப்பன்களைச் சாகடிப்பபார்கள்.சிஷ்யர்கள்தான் குருக்களை அவமதிப்பார்கள்.இதுதான் வரலாற்றில் நாம் திருப்பித் திருப்பிப் படிக்கிறோமே,வலசு.
இன்றுதான் உங்கள் பதிவினைப் பார்க்க முடிந்தது. வரவர உங்கள் எழுத்தின் வேகமும் வீச்சும் ஆச்சரியப்பட வைக்கிறது. மிகச்சிறந்த ஒரு காவியத்தினூடு பயணிக்கும் அனுபவத்தினைத் தருவதற்கு நன்றிகள் பல.//
எழுதுபவன் மட்டுமல்ல,படிப்பவனும் சேர்ந்துதான் காவியங்களைப் படைக்கிறார்கள் எனப்து எனது எண்ணம்.
நன்றி வலசு-வேலணை.
It is a interesting story.Please don't make us waiting indefinitely - Jegan
பதிலளிநீக்குகுடுகுடுப்பை சொன்னது…
பதிலளிநீக்கு//மறு பிறவி கருத்துக்கள் ரசிக்கும்படி இருந்தது, ஆனால் நான் நம்பிக்கை இன்னும் வரவில்லை.//
ஆன்மீக உண்மைகள் கவிதை மாதிரி,சார்.பாதி உண்மையாகத் தோன்றும்.பாதி பொய் போலத் தோன்றும்.//
புத்தர் பெயரை கேட்டால் இலங்கைதான் ஞாபகம் வருகிறது.//
எனக்குத் தலைகீழ்.இலங்கை பெயரைக் கேட்டால் புத்தர் ஞாபகம் வந்தது.அந்த அடிமனத் தாக்கந்தான் லாமா பத்ம சூர்யா போலிருக்கிறது.
பெயரில்லா சொன்னது…
பதிலளிநீக்குIt is a interesting story.Please don't make us waiting indefinitely - Jegan//
Thank you Jegan for your encouraging comment.I am writing this story whenever time permits me from my regular work.Nice to hear from you.
I can say only one word about the series Kannikaa. The word is "Excellent". No more word need to say about it. Where is next part of Kannikaa Mr.Shanmugapriyan. I am looking forward. Please bring it as soos as possible.
பதிலளிநீக்குThanks
Nathan
பெயரில்லா சொன்னது…
பதிலளிநீக்குI can say only one word about the series Kannikaa. The word is "Excellent". No more word need to say about it. Where is next part of Kannikaa Mr.Shanmugapriyan. I am looking forward. Please bring it as soos as possible.
Thanks
Nathan//
Thank you so much for your encouragements,Nathan.I am writing whenever my time permits.
Dear Sir..
பதிலளிநீக்குi am amazed the way you took my critisism.
I agree with you that nobody can be appealing to every one. My words were true reflections of what i felt.
I will be reading your posts with a renewed respect..
regards..
--anvarsha..
பெயரில்லா சொன்னது…
பதிலளிநீக்குDear Sir..
i am amazed the way you took my critisism.
I agree with you that nobody can be appealing to every one. My words were true reflections of what i felt.
I will be reading your posts with a renewed respect..
regards..
--anvarsha..
Thank you Anvarsha,for your renewed relationship!
You have always the right to express your opinions.
May be with someone else it may be a restricted one,but with me you have complete freedom.
Expecting you in all my posts.Have a nice day.