அமிர்தவர்ஷினி
---------------------
7.
'இந்த அஞ்சு பேரு குடுத்த லவ் லெட்டர்ஸுக்கு என்ன பதில்ன்னு நீ சொல்லவே இல்லையே,வர்ஷிணி?' என்று அமிர்தவர்ஷிணியைக் கேட்டேன், எனது சுய இரக்கத்தின் அழுகையிலிருந்து மீண்டவுடன்.
'தேங்க்ஸுன்னு சொல்லி லெட்டர்ஸை எல்லாம் அவங்ககிட்டேயே திருப்பிக் குடுத்திடு,சரவணா' என்றாள் அவள் அமைதியாக.
ஏன் என்பதைப் போல அவளைப் பார்த்தேன்.
'இந்த மாதிரிப் பொண்ணுக வேணும்ன்னு ஆசைப் படறது ஒரு ரகம்.இதே பொண்ணுதான் வேணும்ன்னு ஆசைப் படறது ஒரு ரகம்.இவங்க எல்லாம் முதல் ரகம்.அதனாலேதான் லெட்டர்களைத் திருப்பிக் குடுக்கச் சொல்றேன்'என்றாள் அவள்.
'அவங்களை முதல் ரகம்ன்னு எப்படிச் சொல்றே?'
'பத்துப் பதினைஞ்சு நாள்ளே நீயே தெரிஞ்சுக்குவே!' என்றாள் அவள்.
அவள் சொன்னதைப் போலவே ஐந்து பேரில் மூன்று பேர் பதினைந்தே நாட்களில் தங்கள் கல்யாணப் பத்திரிகைகளைக் கொண்டு வந்து என்னிடம் தந்தார்கள்!
'எப்படி அவங்களைப் பத்தி இவ்வளவு கரக்டாச் சொன்னே,வர்ஷிணி?' என்று அவளிடம் கேட்டேன் நான், அவளிடம் அவர்களுடைய கல்யாணப் பத்திரிகைகளைக் காட்டி.
'சில பேருக்குள்ளே கல்யாண ஆசையைத் தூண்டி விடறதோட என் வேலை முடிஞ்சுதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்,சரவணா' என்றாள் அமிர்தவர்ஷிணி அமைதியாக.
ஒருநாள் அவள் என்னிடம் சொன்ன தகவல்,வாழ்க்கைப் பாடத்தை அவள் எவ்வளவு ஆழமாக,அத்துபடியாகக் கற்று வைத்திருந்தாள் என்பதற்கு இன்னொரு உதாரணம்.
'இப்போ எல்லாம் என்ன சாப்பிட்டாலும்,நான் முந்தி மாதிரி வாந்தி எடுக்கறதில்லே,வர்ஷிணி'என்றேன் அவளிடம் ஒரு நாள் மாலை.
அன்று அவள் மாங்காயையும்,கேரட்டையும் பச்சையாகத் துருவிப் போட்டு பச்சைப் பயறு சுண்டல் கொண்டு வந்திருந்தாள்.நல்ல பசிக்கே வரும் ருசியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த என் தட்டில், இன்னும் சுண்டலை வைத்த படியே அவள் சொன்னாள்.
'ஏப்ரல்லே,நான் மும்பையில் ஒரு வைர வியாபாரி வீட்டுலே அவருக்கு உதவியா இருந்தேன்,சரவணா. நேமிசந்த்ன்னு பேரு.பெரிய கோடீஸ்வரன்.அவருக்கு கல்லீரல்லே புற்று நோய். டாக்டர் நிகொலஸ்ன்னு ,கேன்சர் ட்ரீட்மென்ட்லே ரொம்ப ஃபேமஸான அமெரிக்கன் டாக்டர் ஒருத்தர், அவருதான் நேமிசந்த் அய்யாவுக்கு கன்சல்டன்ட்..மாசத்துக்கு ஒருநாள் நேமிசந்த் அய்யாவை அட்டண்ட் பண்ரதுக்காகவே வாஷிங்டன்லே இருந்து டாக்டர் நிகொலஸ் வருவாரு.அப்போ அந்த டாக்டர் சொன்னது இன்னும் எனக்கு நல்லா ஞாபகத்துலே இருக்கு.என்னாலே மறக்கவே முடியாது.
'என்ன சொன்னார் என்பதைப் போல அவளைப் பார்த்தேன்.
'சாவுங்கறது திடீர்ன்னு ஒருநாள் நமக்கு வர்ரதில்லே.பொறந்ததிலே இருந்தே சாவு ,நம்ம மேலே சாஞ்சுட்டு எப்போ நசுக்கலாம்ன்னு டயம் பார்த்துட்டேதான் இருக்கு.அது நம்ம மேலே முழுக்கச் சாஞ்சு,நசுக்கிடாமே தாங்கிப் பிடிச்சுட்டிருக்கிறது நம்ம நம்பிக்கைகளும்,ஆசைகளும்தான்.தீராத வியாதின்னு தெரிஞ்சவுடனே நோயாளி முதல்லே இழக்கறது அவனுடைய நம்பிக்கையைத்தான்.நம்பிக்கை போனவுடனே ஆசைகளும் அத்துப் போயிடுது.நோயாளிக்கு முன்னாலே சாகறது அவனோட ஆசைகளும்,நம்பிக்கையுந்தான்.அதனாலே அதைச் சாக விடாமே பார்த்துகிட்டாலே எந்த நோய்கிட்டே இருந்தும் தப்பிச்சுக்கலாம்பாரு அந்த டாக்டர்.'
அவள் சொன்னதில் இருந்த உண்மையை எனக்குள்ளேயே உணர்ந்து பார்த்தேன்.சரி என்பதைப் போலத்தான் தோன்றியது.
'இதை நீ குழந்தைககிட்டே இருந்துதான் கத்துக்க முடியும்பாரு அந்த டாக்டர்,சரவணா.குழந்தைகளைப் பாரு.எல்லாத்தையும் நம்பும்.எல்லாத்துக்கும் ஆசைப் படும்.அதனாலே அதுகளுக்கு வர்ர வியாதிகள் கிட்டே இருந்து அதனாலே சீக்கிரம் மீண்டுட முடியுது.நோயிலேயே பெரிய நோய், இதிலிருந்து மீள முடியுமாங்கிற சந்தேகந்தான்!'என்றாள் அவள்.
'புரியுது' என்றேன்.
அவள் எனக்கு முதல் நாள் தலைமாட்டில் வைத்த ஆஜ்மீர் பாபாவின் திருக்குரான் கையெழுத்துப் பிரதியின் சூட்சுமம் புரிந்தது.சரிந்து போயிருந்த எனது நம்பிக்கையை, முதலில் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற அவளது முயற்சியே அது.
கால கட்டத்துக்கும்,சமூகச் சூழலுக்கும் தகுந்த மாதிரி, நம்பிக்கை விதைகளை மனிதர்களுக்கு மத்தியில் தூவி வரும் ஞானிகளின் உளவியல் தந்திரமும் புரிந்தது.
'தாகத்தால் சாகப் போகும் மனிதனுக்கு, கானல் நீர் கூட தாகத்தைத் தணித்து அவனை உயிர் வாழ வைக்கும்' என்று இன்னொரு நாள் அமிர்தவர்ஷிணி சொல்லி இருக்கிறாள்.
' நான் பார்க்கிற பத்தாவது கேன்ஸர் பேஷண்ட்,சரவணா நீ. உன்னை மாதிரியே நம்பிக்கை வளர,வளர அவங்க தேறிட்டே வந்ததை நான் என் கண் கூடப் பார்த்திருக்கேன்'
'நீ எனக்குத் துணையா வந்ததுக்கு அந்தக் கடவுளுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும்'என்றேன் நான்.
'கடவுள்தான், மனுஷன் கண்டு பிடிச்ச முதல் நம்பிக்கைன்னு சொல்லுவாரு,பாபா'என்றாள் அவள் புன்னகையுடன்.
மாத விலக்கான மூன்று நாட்களுக்கு அமிர்தவர்ஷிணி என்னைப் பார்க்க வரவில்லை.அவளைப் பார்க்க முடியவில்லை என்றதும்,வண்ணப் படமாகத் தெரிந்து கொண்டிருந்த உலகம், திடீரெனக் கறுப்பு வெள்ளைப் படம் போலத் தெரிந்தது எனக்கு.
ஒரு பெண்,ஒரு ஆணின் மனதுக்குள் எவ்வளவு ஆழமாக ஊடுருவ முடியும் என்பதை எனக்குள்ளேயே நான் பார்த்த போது,நானே எனக்குப் பேரதிசயமானேன்.
கோளாறான புரஜக்டரைப் போல மனம் அவளது பிம்பங்களையே திருப்பித், திருப்பிச் சலிக்காமல் போட்டுக் கொண்டிருந்தது.
புன்னகையாலேயே செய்ததைப் போன்ற அவளது உதடுகள்,நாம் கண்களை மூடினாலும் நம் மூடிய கண்களுக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருக்கும் அவளது விழிகள்,கிடைக்காதா என்ற ஏக்கத்தையும்,கிடைத்தால் என்ன செய்வதென்று தெரியாத பரவசத்தையும் ஒருசேர வழங்கும் அவளது அழகிய உடல்...
மூன்று நாட்கள் கழிவதற்கு மூன்று ஜென்மங்களாக, நான்காம் நாள் மாலை அமிர்தவர்ஷிணி வந்தாள்.கறுப்பு ஜீன்ஸ்,மேலே வெள்ளை டி.ஷர்ட்.கழுத்தில் ஏதோ ரூபி மணிமாலை.
உலர்ந்த கருங் கூந்தலை அவள் தளர்வாக விட்டிருந்தது, நமது மனதை இறுக்கி முறுக்கவே என்று தோன்றியது.
'எப்படி இருக்கே சரவணா?' என்றாள் அவள்,புன்னகையுடன்.
முள் ஏறிய காலைக் கல்லில் தேய்த்தாற் போல ஒரு இதமான வலிதான் காதல் என்றால், அது பெருமழையாய் என்னுள் கொட்டிக் கொண்டிருந்தது.
எனது கனத்த மௌனமே எனக்காக அவளுடன் பேசியது.
பல நிமிடங்கள் இந்த உலகத்தைப் பற்றிப் பேசி விட்டு, மெல்ல எங்கள் உலகத்துக்குப் போனோம்.
அப்போதுதான் நேற்று இரவு அவள் கண்ட கனவை எனக்குச் சொன்னாள் அவள்.
அவளுடைய தாய்,தந்தையைப் பறிகொடுத்த அதே ரிஷிகேஷ் கங்கையின் படித்துறையில் நானும் அவளும் நீராடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
அடிவானம் வரை யாருமற்றுக், கங்கை மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் பூமியில் நானும் அவளும் மட்டுமே.
வெறுமனே ஒரு வெள்ளைக் காட்டன் புடவையைச் சுற்றிக் கொண்டிருந்த அவளது புடவை சற்றே விலகி,அவளது மேனியின் வெண்மையைப் பறை சாற்ற, எனது கவனம் மாறியதைக் கண்ட அவள், கங்கையின் பனி நீரை என் மேல் விளையாட்டாக எறிய,வழுக்கி விழுந்தவன் போல ஏமாற்ற நினைத்தவன் உண்மையில் வழுக்கி விழுந்து கங்கையின் பிரவாகத்தில் கலந்து விட்டேன். அவள் தாய் தந்தையை அடித்துக் கொண்டு போன கங்கை என்னையும் அடித்துக் கொண்டு போவதைப் பார்த்த அமிர்தவர்ஷிணி பதறிப் போனாள்.
'சரவணா' என்று கத்திக் கொண்டு அவளும் நீரில் பாய்ந்து விட்டாள்.சில நிமிடங்களில் எனது பாதங்களைப் பற்றியவள் வெறியுடன் நீந்தி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ள இருவரையுமே கங்கை அடித்துக் கொண்டு போனது.
சற்றுக் கழித்து அவள் மட்டுமே கண் விழித்துப் பார்க்க, கங்கைக் கரையின் ஒரு பச்சைப் புல்தரையில் அவள் மட்டுமே தனியாக ஒதுங்கிக் கிடக்க, என்னைத் தனது உயிரையே தேடுவதைப் போல அவள் தேடுகிறாள். பத்தடி தொலைவில் நான் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து எழுந்து ஓடி வருகிறாள்.என் மேல் அமர்ந்து எனது நெஞ்சைக் குத்துகிறாள்.சில நொடிகளில் அவளது தீவிர முயற்சியினால் நான் குடித்த கங்கை நீரெல்லாம் மூக்கு,வாய் வழியே வெளியேற நான் மெல்லக் கண் விழித்து என் மேல் அமர்ந்திருக்கும் அவளைப் பார்த்துப் புன்னகைக்கிறேன்.
எனக்கு உயிர் வந்ததைப் பார்த்ததும்தான் அவளுக்கு உயிரே வருகிறது.
மெல்ல எனது பார்வை அவளது கழுத்துக்குக் கீழே சென்றதும்தான், கங்கை அவளது மேலாடை முழுதையுமே கலைத்து அவளைத், துணிகளற்ற வெற்று மார்புகளுடனே என் மேல் அமர வைத்திருக்கிறது என்பதை உணர்கிறாள்,அமிர்தவர்ஷிணி.
இதற்கு மேல் மலரவே மாட்டேன் என்று வரம் வாங்கிக் கொண்டு வந்த தாமரை மொட்டுக்களைப் போன்ற அவளது இளம் மார்புகள், கங்கை நீர் சொட்டச் சொட்ட எனது உயிருக்கு உற்சாகமூட்டிக் கொண்டு நின்றன.
எனது பார்வைக்கு வெட்கப் பட்ட அவள், தனது மார்புகளை மூடுவதற்கு எதுவுமின்றி எனது மார்பையே தேர்ந்தெடுத்து முகம் புதைத்தாள்.
பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதை விடப்,பார்க்கப் படாமலிருக்கும் போது அதிகம் வாதித்தன அந்தப் பெண் மார்புகள்.
கனவைச் சொல்லி விட்டுத் தலைகுனிந்து அமர்ந்திருந்த அமிர்தவர்ஷிணியை எனது குரல்தான் நிமிர்த்தியது.
'வர்ஷிணி'
அவள் சிரமப் பட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
'நான் ஒண்ணு சொன்னா நம்புவியா?' '?'
'நேத்து ராத்திரி எனக்கும் இதே கனவு வந்துச்சு!'
நான் இதைச் சொல்லி முடித்ததும்தான் தாமதம், அழுதபடியே ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்,அமிர்தவர்ஷிணி.
(தொடரும்)
'//கடவுள்தான், மனுஷன் கண்டு பிடிச்ச முதல் நம்பிக்கைன்னு சொல்லுவாரு,பாபா'என்றாள் அவள் புன்னகையுடன்.
பதிலளிநீக்கு/// super lines...
அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங். படிக்க இதமாக இருக்கிறது
பதிலளிநீக்குஅழகாக செல்கிறது கதையின் ஓட்டம் கங்கையை போலவே..
பதிலளிநீக்கு'சில பேருக்குள்ளே கல்யாண ஆசையைத் தூண்டி விடறதோட என் வேலை முடிஞ்சுதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்,சரவணா' என்றாள் அமிர்தவர்ஷிணி அமைதியாக.//
பதிலளிநீக்குஅருமையான வரி
'சாவுங்கறது திடீர்ன்னு ஒருநாள் நமக்கு வர்ரதில்லே.பொறந்ததிலே இருந்தே சாவு ,நம்ம மேலே சாஞ்சுட்டு எப்போ நசுக்கலாம்ன்னு டயம் பார்த்துட்டேதான் இருக்கு.அது நம்ம மேலே முழுக்கச் சாஞ்சு,நசுக்கிடாமே தாங்கிப் பிடிச்சுட்டிருக்கிறது நம்ம நம்பிக்கைகளும்,ஆசைகளும்தான்.தீராத வியாதின்னு தெரிஞ்சவுடனே நோயாளி முதல்லே இழக்கறது அவனுடைய நம்பிக்கையைத்தான்.நம்பிக்கை போனவுடனே ஆசைகளும் அத்துப் போயிடுது.நோயாளிக்கு முன்னாலே சாகறது அவனோட ஆசைகளும்,நம்பிக்கையுந்தான்.அதனாலே அதைச் சாக விடாமே பார்த்துகிட்டாலே எந்த நோய்கிட்டே இருந்தும் தப்பிச்சுக்கலாம்பாரு அந்த டாக்டர்.'//
நூறு சதம் உண்மை
'தாகத்தால் சாகப் போகும் மனிதனுக்கு, கானல் நீர் கூட தாகத்தைத் தணித்து அவனை உயிர் வாழ வைக்கும்' //
ரொம்ப அருமை
நம்பிக்கை வளர,வளர அவங்க தேறிட்டே வந்ததை நான் என் கண் கூடப் பார்த்திருக்கேன்'//
எங்களுக்கும் நம்பிக்கை அளித்தீர்கள்
'கடவுள்தான், மனுஷன் கண்டு பிடிச்ச முதல் நம்பிக்கை//
அருமை ஐயா,
ஒரு பெண்,ஒரு ஆணின் மனதுக்குள் எவ்வளவு ஆழமாக ஊடுருவ முடியும் என்பதை எனக்குள்ளேயே நான் பார்த்த போது,நானே எனக்குப் பேரதிசயமானேன்.//
ஒவ்வோரு வரியும் திரும்ப திரும்ப படிக்க வைத்தது.
ஐயா ஒவ்வொரு வரியுமே ஒன்றுக்கு ஒன்று குறைந்ததில்லை,
நான் குறித்து குறித்து தோற்று போனேன்.
நமது மனதை இறுக்கி முறுக்கவே என்று தோன்றியது.//
இளமை துள்ளல் வார்தைகளில்.
இதற்கு மேல் மலரவே மாட்டேன் என்று வரம் வாங்கிக் கொண்டு வந்த தாமரை மொட்டுக்களைப் போன்ற அவளது இளம் மார்புகள், கங்கை நீர் சொட்டச் சொட்ட எனது உயிருக்கு உற்சாகமூட்டிக் கொண்டு நின்றன.
எனது பார்வைக்கு வெட்கப் பட்ட அவள், தனது மார்புகளை மூடுவதற்கு எதுவுமின்றி எனது மார்பையே தேர்ந்தெடுத்து முகம் புதைத்தாள்.//
மிக அருமையான வரிகள்.எத்தனை முறை படித்தாலும் திகட்டவில்லை.
பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதை விடப்,பார்க்கப் படாமலிருக்கும் போது அதிகம் வாதித்தன அந்தப் பெண் மார்புகள்.//
நான் இதைச் சொல்லி முடித்ததும்தான் தாமதம், அழுதபடியே ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்,அமிர்தவர்ஷிணி.//
ஐயா சொன்னால் நம்ப மாட்டீர்கள் காட்சிகள் மனக்கண்ணில் விரிந்தன.
ரொம்ப அருமையாக இந்த பாகத்தை கொண்டு சென்றீர்கள், ஒன்றை ஒன்று மிஞ்சும் வரிகள், அடுத்த பாகம் இதே போலவோ இதைவிட அட்டகாசமாகவோ
எதிர்பார்க்கிறோம்.
swamiomkar: ஷம்போ மஹாதேவா
பதிலளிநீக்குswamiomkar is online.
swamiomkar: வணக்கம்
shanmugha: வண்க்கம்ஸ்வாமிஜி,சற்றே அதிர்ச்சியுடன்,மகிழ்ச்சியுடன்.
swamiomkar: :)
இதில் அதிர்ச்சி என்ன? இரவில் இப்படியும் தொல்லை வருமா என்ற அதிர்ச்சியா :)
உங்களை இரவில் அழைத்த காரணம் ஒன்று உண்டு.
shanmugha: உங்கள் சிரிப்பு எனக்கு இன்னும் மகிழ்ச்சி.உங்கள் பதிவை வைகறையிலே (எனது வைகறை சூரியனுடன் ஒத்து வராதது) படிக்கும் போது அமைதி யுடன் நாளைத் தொடங்க வசதியாக இருக்கிற்து.
சொல்லுங்கள்,ஸ்வாமிஜி.
swamiomkar: அமிர்தவரிஷிணி தொடர் முழுவதும் இன்றுதான் படித்தேன்.
shanmugha: ஓஹோ
swamiomkar: பின்னூட்டத்தில் பாராட்ட மனமில்லை.
இங்கே பாராட்டிவிடலாமே என்று உங்களை அழைத்தேன்
shanmugha: புரிகிறது.
இதனை விட எனக்குப் பாராட்டு வேறுதுவுமில்லைஸ்வாமிஜி.
swamiomkar: ஒருவர் சிறப்பாகவும் ஆழ்ந்தும் கலையை படைக்கிறார் என்றால் ஒரே காரணம் தான் இருக்க முடியும்.
shanmugha: சொல்லுங்கள்
அளவற்ற போதை.
அய்யோ
swamiomkar: ஒன்று வெளிவிவஹாரங்களில் போதை. அல்லது உள் விவஹாரங்களில்.
வெளி விவஹாரம் என்பது கண்ணதாசன் போன்றது
உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியது இல்லை.
shanmugha: சரி
swamiomkar: உள்விவஹாரம் பாரதியை போன்றது.
shanmugha: அதுவும் சரி
swamiomkar: அவன் 9 வயதில் சக்தி தரிசனம் கிடைத்தவுடன் புலமை கொண்டான்
shanmugha: கேட்கிறேன்,ஸ்வாமிஜி
swamiomkar: சிலர் அவரை கஞ்சா குடித்துவந்தார் என்பார்கள்.
உண்மையில் அவர் உள்ளே இருக்கும் போதை வெளியில் இருப்பதை விட அதிகமாக இருந்தது.
நீங்கள் இவ்வகையில் இருக்கிறீர்கள். இல்லை என்றால் நயம்பட எழுத முடியாது.
உங்களுக்கு போதை முழுமையாக தலைக்கு ஏற ப்ரார்த்திக்கிறேன்.
shanmugha: இதனை நான் எப்படி....உங்கள் தாள் பணிந்து தலைக்கேற்றிக் கொள்வதைத் தவிர எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
நான் மேலும் எழுதுவதற்கு அந்தச் சிவனே வந்து ஆசிர்வதித்ததைப் போல உணர்கிறேன்,ஸ்வாமிஜி.
swamiomkar: நன்றி. உங்கள் தொடர் முடிவடைந்ததும் சில கேள்விகளை அனுப்புகிறேன். அதற்கு பதில் அளிக்கவும். இந்த பேட்டியை உங்கள் வலைபக்கத்திலோ, வேதிக் ஐ வலைபக்கதிலோ பதிவேற்றுவோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால்.
shanmugha: இதனை நான் வெளியிட உங்கள் அனுமதி உண்டா,ஸ்வாமிஜி?
swamiomkar: தாராளமாக.
பின்னூட்டமாக இட்டால் இவ்வளவு பேச முடியுமா என தெரியவில்லை.
அதனால் உரையாடியில் வந்தேன்
அருமை, நன்றாக இருக்கிறது என சொல்லும் டெம்ளேட் பின்னூட்டமும் இடும் அளவுக்கு நான் கல்நெஞ்சகாரனும் அல்ல :)
shanmugha: நன்றி என்ற சொல் எனக்கே அசிங்கமாக இருக்கிறது.இருந்தாலும் வேறு சொல் தெரியவில்லை.போற்றி.
swamiomkar: சரி விடைபெறுகிறேன்.
நன்றி.
shanmugha: வணக்கம்,ஸ்வாமிஜி.
swamiomkar: இரவு இனிதாக கழியட்டும், வரும் நாட்கள் இனிப்பாக இருக்கட்டும்.
Sent at 10:15 PM on Sunday
ஸ்வாமிஜியின் பாராட்டுக்களே எல்லாம் சொல்லிவிட்டன. இன்னும் என்னைப்போல மற்றவர்கள் சொல்ல எதுவுமில்லை. :)
பதிலளிநீக்கு//'சாவுங்கறது திடீர்ன்னு ஒருநாள் நமக்கு வர்ரதில்லே.பொறந்ததிலே இருந்தே சாவு ,நம்ம மேலே சாஞ்சுட்டு எப்போ நசுக்கலாம்ன்னு டயம் பார்த்துட்டேதான் இருக்கு//
பதிலளிநீக்குமரணம் பற்றிய உண்மையான புரிதல்..
மனதிற்கு என்னென்னவோ விந்தைகள் செய்யும் வரிகள்
நன்றி
//'தாகத்தால் சாகப் போகும் மனிதனுக்கு, கானல் நீர் கூட தாகத்தைத் தணித்து அவனை உயிர் வாழ வைக்கும்'//
பதிலளிநீக்கு//'கடவுள்தான், மனுஷன் கண்டு பிடிச்ச முதல் நம்பிக்கைன்னு சொல்லுவாரு,பாபா'//
ஆஹா என்ன ஒரு அற்புதமான சிந்தனை .......
வாழும்"சிந்தனை சிற்பி " தாங்கள்
[[சாவுங்கறது திடீர்ன்னு ஒருநாள் நமக்கு வர்ரதில்லே.பொறந்ததிலே இருந்தே சாவு ,நம்ம மேலே சாஞ்சுட்டு எப்போ நசுக்கலாம்ன்னு டயம் பார்த்துட்டேதான் இருக்கு.அது நம்ம மேலே முழுக்கச் சாஞ்சு,நசுக்கிடாமே தாங்கிப் பிடிச்சுட்டிருக்கிறது நம்ம நம்பிக்கைகளும்,ஆசைகளும்தான்.தீராத வியாதின்னு தெரிஞ்சவுடனே நோயாளி முதல்லே இழக்கறது அவனுடைய நம்பிக்கையைத்தான்.நம்பிக்கை போனவுடனே ஆசைகளும் அத்துப் போயிடுது.நோயாளிக்கு முன்னாலே சாகறது அவனோட ஆசைகளும்,நம்பிக்கையுந்தான்.அதனாலே அதைச் சாக விடாமே பார்த்துகிட்டாலே எந்த நோய்கிட்டே இருந்தும் தப்பிச்சுக்கலாம்பாரு அந்த டாக்டர்.]]
பதிலளிநீக்குஆகா எல்லோருக்கு தேவையான ஒன்று .... மிக்க நன்றி சார்
//எனது பார்வைக்கு வெட்கப் பட்ட அவள், தனது மார்புகளை மூடுவதற்கு எதுவுமின்றி எனது மார்பையே தேர்ந்தெடுத்து முகம் புதைத்தாள்.//
பதிலளிநீக்குஅருமை.... அதற்கு மேல் சொல்ல தெரியவில்லை
romba romba romba........ (many times) azhaga (nalla) iruku story.. waiting for next part..
பதிலளிநீக்கு...............! (வார்த்தைகளைத் தேடுகிறேன்.. கிடைத்ததும் புதிய வார்த்தைகளால் பாராட்டி வணங்குகிறேன் சார்!)
பதிலளிநீக்குஅய்யா,
பதிலளிநீக்குஎன்றும் நம்பிக்கை தரும் வார்த்தைகள் ! இதமாய் வருடும் நிகழ்வுகள் ! ஏதோ நாம் வர்ஷினியை நேரில் காண்பது போல் இருக்கும் விவரிப்பு.
உண்மையான் விருப்பத்தின் விளக்கம் ! " இந்த மாதிரிப் பொண்ணுக வேணும்ன்னு ஆசைப் படறது ஒரு ரகம்.இதே பொண்ணுதான் வேணும்ன்னு ஆசைப் படறது ஒரு ரகம்."
" கடவுள்தான், மனுஷன் கண்டு பிடிச்ச முதல் நம்பிக்கை" நம்பிக்கை விதையின் அற்புதம். அன்று முதல் இன்று வரை நம் பாரத தேசத்தின் மெய்ஞானிகள் விதைத்து வரும் நம்பிக்கை விதை இன்றளவும் நம்மை வழிநடத்தி செல்கின்றது.
தங்கள் எழுத்து பணி மென்மேலும் தொடர வேண்டுகிறேன்.
மீண்டும் வர்ஷினியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் !
'\\இந்த மாதிரிப் பொண்ணுக வேணும்ன்னு ஆசைப் படறது ஒரு ரகம்.\\
பதிலளிநீக்குபெரும்பான்மையானவர்கள் இந்த ரகம் என்றே நினைக்கிறேன்
\\இதே பொண்ணுதான் வேணும்ன்னு ஆசைப் படறது ஒரு ரகம்.\\
காதல் வயப்பட்டவர்கள் இந்த ரகம்தான் சரியா :))
//கால கட்டத்துக்கும்,சமூகச் சூழலுக்கும் தகுந்த மாதிரி, நம்பிக்கை விதைகளை மனிதர்களுக்கு மத்தியில் தூவி வரும் ஞானிகளின் உளவியல் தந்திரமும் புரிந்தது//
\\கடவுள்தான், மனுஷன் கண்டு பிடிச்ச முதல் நம்பிக்கை\\
\\ஐயா ஒவ்வொரு வரியுமே ஒன்றுக்கு ஒன்று குறைந்ததில்லை,
நான் குறித்து குறித்து தோற்று போனேன்.\\
\\நீங்கள் இவ்வகையில் இருக்கிறீர்கள். இல்லை என்றால் நயம்பட எழுத முடியாது.
உங்களுக்கு போதை முழுமையாக தலைக்கு ஏற ப்ரார்த்திக்கிறேன்.\\
கற்றாரை கற்றாரே காமுறுவர்.,
நிறைவாக இருந்தது இடுகையும், அதன் தொடர்ச்சியான பின்னூட்டங்களும்..
As usual nice. Expecting next part sir!.
பதிலளிநீக்குThanks,
Arun
nice
பதிலளிநீக்கு& true of death
:)
வார்த்தை விளையாட்டுக்கள் வரைமுறையில்லாமல் விளையாடுகின்ற இந்த மைதானத்தில்..!
பதிலளிநீக்குபந்தை உதைப்பவரும் இவரே.. கோல் கீப்பராக இருப்பவரும் இவரே என்பதால் எப்படி இரண்டு சாகசங்களையும் மனிதர் செய்கிறார் என்று பார்ப்பதற்கே காலரி நிறைந்து காணப்படுகிறது..!
வித்தகர்..!
வரவர உங்கள் எழுத்துக்களின் வீரியம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பதிலளிநீக்குஅடுத்த பாகத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அது ஒரு கனாக் காலம் சொன்னது…
பதிலளிநீக்கு'//கடவுள்தான், மனுஷன் கண்டு பிடிச்ச முதல் நம்பிக்கைன்னு சொல்லுவாரு,பாபா'என்றாள் அவள் புன்னகையுடன்.
/// super lines...//
நன்றியும்,மகிழ்ச்சியும் சுந்தர்.
முரளிகண்ணன் சொன்னது…
பதிலளிநீக்குஅடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங். படிக்க இதமாக இருக்கிறது/
உங்கள் பாராட்டே இதமாகத்தான் இருக்கிறது,முரளி.
வினோத்கெளதம் சொன்னது…
பதிலளிநீக்குஅழகாக செல்கிறது கதையின் ஓட்டம் கங்கையை போலவே..//
நயமான ரசனை,வினோத்.நன்றி.
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது… //
பதிலளிநீக்குஐயா சொன்னால் நம்ப மாட்டீர்கள் காட்சிகள் மனக்கண்ணில் விரிந்தன.
ரொம்ப அருமையாக இந்த பாகத்தை கொண்டு சென்றீர்கள், ஒன்றை ஒன்று மிஞ்சும் வரிகள், அடுத்த பாகம் இதே போலவோ இதைவிட அட்டகாசமாகவோ
எதிர்பார்க்கிறோம்.//
அடுத்த பாகம்தான் இதனுடைய கடைசிப் பாகம்,கார்த்தி.
உங்களுக்கு நன்றி சொவது எனக்கே சொல்லிக் கொளவதைப் போல.
ஷண்முகப்ரியன் சொன்னது… //
பதிலளிநீக்குஸ்வாமி ஓம்கார் பின்னூட்டம் இடாமல் ஜி டாக்கில் வந்து உரையாடி வாழ்த்தி அருளியது எனது வலைப் பதிவு அனுபவத்தின் உச்ச கட்ட மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
இதனை எழுதும் பேறு பெற்றமையை,உங்கள் மூலம் அந்த சிவனின் திருப்பாதங்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.
சின்ன அம்மிணி சொன்னது…
பதிலளிநீக்குஸ்வாமிஜியின் பாராட்டுக்களே எல்லாம் சொல்லிவிட்டன. இன்னும் என்னைப்போல மற்றவர்கள் சொல்ல எதுவுமில்லை. :)//
நன்றியும்,மகிழ்ச்சியும் மேடம்.
அதான் எல்லாத்தையும் சாமியே சொல்லிருச்சே :)
பதிலளிநீக்குகதிர் - ஈரோடு சொன்னது…
பதிலளிநீக்கு//'சாவுங்கறது திடீர்ன்னு ஒருநாள் நமக்கு வர்ரதில்லே.பொறந்ததிலே இருந்தே சாவு ,நம்ம மேலே சாஞ்சுட்டு எப்போ நசுக்கலாம்ன்னு டயம் பார்த்துட்டேதான் இருக்கு//
மரணம் பற்றிய உண்மையான புரிதல்..
மனதிற்கு என்னென்னவோ விந்தைகள் செய்யும் வரிகள்
நன்றி//
உங்கள் கவியுள்ளமே பாராட்டுகிற்து என்றால் எனது எழுத்து வெற்றி பெற்றே விட்டதெனக் கருதுகிறேன்,தம்பி.
மகிழ்ச்சி.
மகா சொன்னது…
பதிலளிநீக்கு//'தாகத்தால் சாகப் போகும் மனிதனுக்கு, கானல் நீர் கூட தாகத்தைத் தணித்து அவனை உயிர் வாழ வைக்கும்'//
//'கடவுள்தான், மனுஷன் கண்டு பிடிச்ச முதல் நம்பிக்கைன்னு சொல்லுவாரு,பாபா'//
ஆஹா என்ன ஒரு அற்புதமான சிந்தனை .......
வாழும்"சிந்தனை சிற்பி " தாங்கள்//
மகா,நீ இதை விட அருமையான படைப்புக்களைப் படைக்கப் போகிறாய் என்பதை .’என் தங்கை’ என்று நீ எழுதிய கவிதையை வைத்தே நான் தெரிந்து கொண்டேன்.
வாழ்க.மகிழ்க.
ஆ.ஞானசேகரன் சொன்னது…
பதிலளிநீக்கு//எனது பார்வைக்கு வெட்கப் பட்ட அவள், தனது மார்புகளை மூடுவதற்கு எதுவுமின்றி எனது மார்பையே தேர்ந்தெடுத்து முகம் புதைத்தாள்.//
அருமை.... அதற்கு மேல் சொல்ல தெரியவில்லை//
நல்ல ரசிகன் எழுதுபவனுக்கும் ஒரு படி மேலே இருக்கிறான்,ஞானம்.எனக்கும் மேலே எனது ரசிகர்கள் உங்களைப் போலிருக்கும் போது எழுதுவதே சுகம்.
நிகழ்காலத்தில்... சொன்னது…//
பதிலளிநீக்குநிறைவாக இருந்தது இடுகையும், அதன் தொடர்ச்சியான பின்னூட்டங்களும்..//
ரசிக்ர்கள் கிடைப்பதே இனிது.உங்களைப் போல நண்பர்கள் ரசிகர்களாக இருப்பது அதனினும் இனிது.
மகிழ்ச்சி,சிவா.
Sachanaa சொன்னது…
பதிலளிநீக்குromba romba romba........ (many times) azhaga (nalla) iruku story.. waiting for next part..
Thank you My Friend.
I am exceedingly happy to have your comforting comment.
Next part will be the concluding one and I will be expecting your encouraging support.
பிரேம்குமார் அசோகன் சொன்னது…
பதிலளிநீக்கு...............! (வார்த்தைகளைத் தேடுகிறேன்.. கிடைத்ததும் புதிய வார்த்தைகளால் பாராட்டி வணங்குகிறேன் சார்!)//
பிரேம்,நீங்கள் மிகவும் விரும்பிய படி ‘கன்னிகா’வைத் தொடர முடியாத அவளது குறும் வடிவம்தான்’அமிர்தவர்ஷிணி’
உங்கள் மகிழ்ச்சியும் பாராட்டும் எனக்குப் பெரும் நிறைவினை அளிக்கிறது.
Arunkumar Selvam சொன்னது…
பதிலளிநீக்குAs usual nice. Expecting next part sir!.
Thanks,
Arun//
I am extremely grateful for your constant support.Without your favorable encouragement I could have never written this.
Thank you,ARUN.
Guru சொன்னது… /
பதிலளிநீக்குதங்கள் எழுத்து பணி மென்மேலும் தொடர வேண்டுகிறேன்.
மீண்டும் வர்ஷினியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் !//
நன்றியும்,மகிழ்ச்சியும் குரு.
’யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்’ என்ற குறுந்தொகைப் பாடல் நம் இருவருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
யாசவி சொன்னது…
பதிலளிநீக்குnice
& true of death
:)//
Thank you Yaasavi for your timely visit empowering me to write more.
உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…
பதிலளிநீக்குவார்த்தை விளையாட்டுக்கள் வரைமுறையில்லாமல் விளையாடுகின்ற இந்த மைதானத்தில்..!
பந்தை உதைப்பவரும் இவரே.. கோல் கீப்பராக இருப்பவரும் இவரே என்பதால் எப்படி இரண்டு சாகசங்களையும் மனிதர் செய்கிறார் என்று பார்ப்பதற்கே காலரி நிறைந்து காணப்படுகிறது..!
வித்தகர்..!//
ஆஹா,எனது இனிய நண்பர் சரவணனுக்குள் இப்படி ஒரு கவிஞனா?
உண்மையில் மகிழ்ச்சியாகவும்,பெருமையாகவும் இருக்கிறது,சரவணன்.
வலசு - வேலணை சொன்னது…
பதிலளிநீக்குவரவர உங்கள் எழுத்துக்களின் வீரியம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அடுத்த பாகத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உங்களைப் போன்ற நல்ல ரசிக உள்ளங்கள் ஊட்டி வளர்க்கும் போது எனது எழுத்துக் குழந்தை தளதளவென்று வளர்ந்து கொண்டேதானே போகும்.
உங்கள் தாய் ரசனைக்கு எனது நன்றி,வலசு.
எம்.எம்.அப்துல்லா சொன்னது…
பதிலளிநீக்குஅதான் எல்லாத்தையும் சாமியே சொல்லிருச்சே :)//
இருந்தாலும் அப்துல்லா சொன்னாத்தான் அந்த சாமியே சந்தோஷப் படும்,அப்துல்லா!
வந்து சொல்லியே விட்டீர்கள்.மகிழ்ச்சி.