நான் விஜயமங்கலம் சின்னசாமி. ஒரு இளம் திரைப்பட இயக்குனன். எனக்குத்தான் இந்த அனுபவம் நிகழ்ந்தது.
விஜயமங்கலம், ஈரோடு மாவட்டத்தில் கோவை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சிற்றூர்.சாலை ஓரத்தில் எனது அப்பா நாச்சிமுத்து ஒரு டீக்கடை வைத்துள்ளார்.
எனது அம்மா வள்ளியம்மாள் சுட்ட மசால் வடையில் மயங்கிக்,கோவையிலிருந்து வடநாடு செல்லும் நிறைய லாரி டிரைவர்கள் குடும்பத்துக்காக வாங்கிச் செல்லும் வடைப் பொட்டணங்கள் நடு வழியில் கடக்கும் காவேரி ஆற்றுப் பாலங்களிலும்,கோதாவரி ஆற்றுப் பாலங்களிலுமே காலியாகி விடும் சிறப்பு எங்கள் கடைக்கு உண்டு.அம்மா சுடும் ஆம்லெட்டுக்களுக்காகவே கோழிகள் தனியாக முட்டையிடுகின்றனவா என்று கேட்காத டிரைவர்களே அந்த நெடுஞ்சாலையில் கிடையாது.
45 வயது வரை,அப்பா போட்ட டீயும், 40 வயது வரை அம்மா சுட்ட வடைகளும், ஆம்லெட்டுகளுமே என்னைச் சென்னை அண்ணா பலகலைக் கழகத்தில் கட்டிடக் கலைப் பொறியியல் படிப்பு வரைக்குமே இட்டுச் சென்றன.ஆனால் அவ்வளவு கஷ்டப் பட்டுப் படித்த படிப்பை இரண்டாவது ஆண்டிலேயே பாதியில் விட்டு,விட்டுப்,பிரபல திரைப்பட ஒளிப்பதிவு இயக்குனரான அசோக் மேத்தாவிடம் உதவியாளனாகச் சேர்ந்து விட்டேன்.
அடுப்பின் வழியே கொதிக்கும் பாலிலும்,எண்ணையிலும் அவர்கள் பார்த்துச் சுவைத்த வாழ்க்கையை,அசோக் மேத்தாவின் காமிராக்களின் வழியே குளிர்ந்த வைகறைகளிலும்,பனி மூட்டத்தில் வெட்கப் பட்டுச் சிரிக்கும் ரோஜாக்களிலும் நான் ருசித்த விந்தையை, நான் ரசித்த அளவுக்கு என்னைப் பெற்ற கிராமத்துப் பெற்றோர்கள் ரசித்தார்களா எனபது இது வரைக்கும் எனக்குத் தெரியாது.
'ஆனா,வள்ளி! நாமதான் நம்ம பையனுக்குத் தெரியாமே சின்னசாமின்னு பேரு வெச்சுட்டோம்ன்னு நினைக்கிறேன்!உண்மையிலே அவன் ரொம்பப் பெரியசாமி தெரியுமா?' என்பாராம் அப்பா, இரவு மூன்று மணிக்குக் கடையை மூடி விட்டு வந்த அசதியுடன்.
அம்மா, பெருந்துறை சந்தைக்குப் போய் விட்டு வந்த காய்கறி மூட்டை முடிச்சுக்களுக்கு நடுவில் அமர்ந்து சென்னையிலிருந்து எப்போதாவது ஊருக்கு வரும் என்னிடம் சொன்ன வார்த்தைகள் இவை.
பெற்றவர்கள் மகனை நேசிக்கும் அளவுக்கு,மகன்கள் பெற்றவர்களை நேசிக்கிறார்களா என்று எனக்குள்ளேயே நான் கேட்டுக் கொண்டது அப்போதுதான்.
வடபழனியில் ஒரு மொட்டை மாடியில் இருந்தது எனது அறை.ஒரு சின்ன பத்தடிக்குப் பத்தடி அறை.நடுவில் காலி மொட்டை மாடித் தளம்.எதிரே தடுப்புச் சுவரருகே ஒரு குளியலறை.கழிப்பறை.
அறை ஜன்னல் கதவுகளைத் திறந்தால் மட்டும், வாழ்க்கையின் நம்பிக்கையே எதிரே,அருகிலேயே தெரிவதைப் போல வடபழனிக் கோபுரம்.வடபழனி ஆலய மணி ஓசை கூடக் கேட்குமளவுக்கு முருகன் எனது அறைக்கு அருள் புரிந்திருந்திருந்தார்.நான் வடபழனிக்குப் போவதே இல்லை.ஆனால் முருகன் மட்டும் எனது அருகிலேயே இருந்தார் எனபதை மட்டும் நான் அடிக்கடி படப்பிடிப்புக்குச் செல்லும் அதிகாலைகளில் உணர்வேன்.
எனது ஒளிப்பதிவு இயக்குநரிடம் பெரிய படங்கள் வேலை பார்க்கும் போது, அவை எல்லாம் எவ்வளவு அபத்தக் களஞ்சியங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன எனபதை, அவருடனேயே அவர் மது அருந்தும் தனிமைகளில் வாதிடுவேன்.அவர் சிரிப்பார்.
'சினிமாங்கறது வெறும் ஆர்ட் மாத்திரமில்லே.பெரிய பிசினஸும் கூட.சரஸ்வதியும்,லக்ஷ்மியும் நாட் ஆல்வேய்ஸ் குட் ஃப்ரண்ட்ஸ்!' என்பார் அசோக் மேத்தா.
'சினிமாவுலே மாத்திரமில்லே,வாழ்க்கையிலும் கூட இதுதான் உண்மை.சரஸ்வதிக்கும், லக்ஷ்மிக்கும் நடக்கற சண்டையிலே பெரும்பாலும் லக்ஷ்மிதான் ஜெயிப்பா.இல்லே சரஸ்வதி விட்டுக் குடுத்துடுவா!' என்பார் அசோக் மேத்தா.
ஒருநாள் நான் பாண்டி பஜாரில் செருப்பு வாங்க அலைந்து கொண்டிருந்த போது, அசோக் மேத்தாவிடமிருந்து ஃபோன் வந்தது.உடனே வீட்டுக்கு வரும் படி அழைத்தார்.
நான் பஸ் பிடித்து அவரது அண்ணா நகர் வீட்டுக்குப் போனபோதுதான் அவர் எனக்கு டாக்டர் நிர்மல் குமாரை அறிமுகப் படுத்தினார்.டாக்டர்,அமெரிக்காவில் நியூஜெர்சியில், மிகப் பெரிய கண் மருத்துவராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றுகிறார் என்பதெல்லாம் எனக்குப் பின்னால்தான் தெரிந்தது.அசோக் மேத்தாவின் ஒளிப்பதிவுக் கலைக்கு அந்தக் கண் மருத்துவர் ஒரு தீவிர ரசிகர்.அசோக் மேத்தாவின் இயக்கத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்திருக்கிறார்,டாக்டர் நிர்மல் குமார்.
'டாக்டர் நிர்மல்,எனக்கு லென்ஸும்,லைட்டிங்கும்தான் தெரியும்.ஆனாக் கதை தெரிஞ்சவன் இந்தப் பொடியன்தான்.இவனை டைரக்டராப் போட்டுப் படம் பண்ணுங்க,நான் காமிராப் பண்றேன்!'என்றார் ஐம்பது வயதான எனது குருநாதர்.
நான் திகைத்துப் போய் நின்று விட்டேன்.
நிர்மல் குமார் என்னைச் சந்தேகத்துடனேயே பார்த்தார்.
'உம் பேரு?'
'சின்னசாமி!' என்றேன்.
நிர்மல்குமார் அசோக் மேத்தாவை ஒருமுறை பார்த்து விட்டுப் பிறகு என்னிடம் கேட்டார்.
'நீ படம் டைரக்ட் பண்ணுவியா?'
அவர்கள் இருவரையும் ஒரு கணம் பார்த்தேன்.
வடபழனி ஆண்டவனின் கோபுரத்தை மட்டும் நினைத்துக் கொண்டு 'பண்ணுவேன்,சார்!'என்றேன்.
நான் வேலை பார்த்த பெரிய படங்களின் மேல் இருந்த கோபத்தில்தான்,எனக்கு அந்தத் துணிச்சலே வந்ததென்று இப்போது நினைக்கிறேன்.
'கதை வெச்சிருக்கியா?' என்றார் நிர்மல் குமார்.
'இருக்கு சார்!' என்றேன்,கதை என்னவென்று தெரியாமலேயே.
'இப்பவே சொல்ல முடியுமா?'
ஒரு நிமிடமே அமைதி.
'பாத்ரூம் போயிட்டு வந்து சொல்லட்டுமா,சார்?' என்றேன்.
'ஓ,ஷ்யூர்!' என்றார் நிர்மல்குமார் மெல்லிய புன்னகையுடன்.
அசோக் மேத்தா மட்டும் என்னையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பாத்ரூமில் சிறுநீர் கழிக்கும் போது, என் மனமே காலியாக இருந்தது.
வாஷ் பேசினில் முகம் கழுவும் போது மட்டும், அம்மா சொன்ன அப்பாவின் வார்த்தைகள் எனக்குள் எதிரொலித்தன.
'நாமதான் நம்ம பையனுக்குத் தெரியாமே சின்னசாமின்னு பேரு வெச்சுட்டோம்ன்னு நினைக்கிறேன்!உண்மையிலே அவன் ரொம்பப் பெரியசாமி தெரியுமா?'
முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு வந்து அவர்களிடம் எனது கதையைச் சொன்னேன்.
அடுத்த மாதம், அந்தக் கதையின் ஷூட்டிங்குக்குத்தான் நான் நியூயார்க் போகிறேன்!
(படப் பிடிப்புத் தொடரும்)
அழகான ஆரம்பம்.. தொடருங்கள் ஸார்.
பதிலளிநீக்கு-Toto
www.pixmonk.com
சார் அடுத்த தொடர்க்கதையா அசத்தலான ஆரம்பம்..
பதிலளிநீக்கு//பெற்றவர்கள் மகனை நேசிக்கும் அளவுக்கு,மகன்கள் பெற்றவர்களை நேசிக்கிறார்களா என்று எனக்குள்ளேயே நான் கேட்டுக் கொண்டது அப்போதுதான்.//
நான் இதேப்போல் சிலசமயம் நினைப்பதுண்டு சார்..
//பெரியார் மாவட்டத்தில்//
உண்மையில் இருக்கா சார் இந்த மாவட்டம்..பழைய பெயரா..!!
நாளை காலை 10 மணிக்கு ராஜ் டிவியில் உங்கள் ஒருவர் வாழும் ஆலயம் சார்..
பதிலளிநீக்கு//கதையின் ஷூட்டிங்குக்குத்தான் நான் நியூயார்க் போகிறேன்//
பதிலளிநீக்குதகவல் சொல்லுங்க நான் சூட்டிங் பார்க்க வாரேன்
வ்வாவ்!! :) :)
பதிலளிநீக்குமுதன் முறையாக... எழுத்தில் ஜனரஞ்சகப் பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன்!!
கதை உங்க ஏரியா வேற! வெரி இண்ட்ரஸ்டிங்!!!
====
சின்னசாமிக்கும் நம்ம ஊரில் நடப்பது போன்ற கதை தெரியாதா? :) :) :)
வாழ்த்துக்கள்............
பதிலளிநீக்குதொடர் ஆரம்பம் அமக்கலமாக இருக்கு,... தொடரட்டும்... பகிர்வுக்கு நன்றி சார்
பதிலளிநீக்குதொடர் ஆரம்பம் அமக்கலமாக இருக்கு,... தொடரட்டும்... பகிர்வுக்கு நன்றி சார்
பதிலளிநீக்குஇதை மனதுக்குள் திரைப்படமாக ஓட்டிப் பார்த்தால் ரொம்ப நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com
Toto சொன்னது…
பதிலளிநீக்குஅழகான ஆரம்பம்.. தொடருங்கள் ஸார்.
-Toto
www.pixmonk.com//
உங்கள் முதல் வருகைக்கும், முதல் பின்னூட்டத்துக்கும் மகிழ்ச்சி,சார்.
இன்றுதான் உங்கள் பதிவுகளுக்குள் just peeped in.
ரசித்துப் படிப்பதற்கான பதிவுகளை அவசரத்துக்குத் தாரை வார்த்து விட்டு விடக் கூடாது.
நிதானமாகப் படித்து விட்டுச் சொல்கிறேன்,டோடோ.
ஒரு வெற்றியாளரின் கடந்துவந்த பாதையை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்களுடைய முந்திய தொடர் இன்னும் படிக்கவில்லை. இந்தத்தொடர் முதல் பகுதி ஈர்த்துவிட்டது, நானும் தொடர்கிறேன்.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குபெற்றவர்கள் மகனை நேசிக்கும் அளவுக்கு,மகன்கள் பெற்றவர்களை நேசிக்கிறார்களா என்று எனக்குள்ளேயே நான் கேட்டுக் கொண்டது அப்போதுதான்.//
//சினிமாங்கறது வெறும் ஆர்ட் மாத்திரமில்லே.பெரிய பிசினஸும் கூட.சரஸ்வதியும்,லக்ஷ்மியும் நாட் ஆல்வேய்ஸ் குட் ஃப்ரண்ட்ஸ்!' என்பார் அசோக் மேத்தா.//
//
'நாமதான் நம்ம பையனுக்குத் தெரியாமே சின்னசாமின்னு பேரு வெச்சுட்டோம்ன்னு நினைக்கிறேன்!உண்மையிலே அவன் ரொம்பப் பெரியசாமி தெரியுமா?'//
ஐயா ,
மீண்டும் ஒரு தொடரா?சூப்பர், அதுவும் சினி இண்டஸ்ட்ரியை சுற்றியா? அருமையான முதல் பாகம். அடுத்த பாகத்துக்கும் , மீட்டிங்குக்கும் ஆவலாய் வெயிட்டிங்
Start music.. ஆரம்பமே.. கன ஜோராக இருக்கிறது..
பதிலளிநீக்குஅடுத்த கதையா!! படிக்க ஆவலாய் இருக்கோம்.
பதிலளிநீக்குHai Sir
பதிலளிநீக்குI am Vijayakumar
from Coimbatore
My mother Place to vijayamangalam
Nice Place............
are you free to call my Mobile +91-9790245555
All the best your life
சார் இதுவே ஒரு சிறுகதை மாதிரி இருக்குது. "அண்ணா யுனிவர்சிட்டிய விட்டுட்டு சினிமாங்கறது கொஞ்சம் சினிமாத்தனமா இருந்தாலும் சினிமால இருக்கற மக்களோட வாழ்க்கைய வெச்சே ஏகப்பட்ட படம் எடுக்கலாம். தொடருங்கள், நேரமிருக்கும் போதெல்லாம் வாசிக்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஷண்முகம்
பதிலளிநீக்குஅருமையான ஆரம்பம், வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்லா இருக்கே கதை சொல்லப் போற கதை...அடுத்து எழுதுங்க படிக்கலாம்.உங்க முந்தைய தொடர் கதை வாசிச்சதில்லை நான்.இங்கருந்து ஆரம்பிக்கிறேன் வாசிப்பை ...தொடருங்கள்
பதிலளிநீக்குநண்பர்கள் கவனத்திற்கு
பதிலளிநீக்குதமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....
ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள் | இங்கே நீங்கள் இருக்கிறீர்களா?
அருமை அருமை
பதிலளிநீக்குவிறுவிறுப்பான ஆரம்பம்.
வினோத்கெளதம் சொன்னது…
பதிலளிநீக்குசார் அடுத்த தொடர்க்கதையா அசத்தலான ஆரம்பம்..
மகிழ்ச்சி,வினோத்.நீங்கள் கேட்டது சரியே.அது ஈரோடு மாவட்டம்.
திருத்தி விட்டென்,வினோத்.
நசரேயன் சொன்னது…
பதிலளிநீக்கு//கதையின் ஷூட்டிங்குக்குத்தான் நான் நியூயார்க் போகிறேன்//
தகவல் சொல்லுங்க நான் சூட்டிங் பார்க்க வாரேன்//
ஹா!ஹா!
ஹாலிவுட் பாலா சொன்னது…
பதிலளிநீக்குவ்வாவ்!! :) :)
முதன் முறையாக... எழுத்தில் ஜனரஞ்சகப் பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன்!!
கதை உங்க ஏரியா வேற! வெரி இண்ட்ரஸ்டிங்!!!
சின்னசாமிக்கும் நம்ம ஊரில் நடப்பது போன்ற கதை தெரியாதா? :) :) :)//
‘உலகம் எனது ஊர்’ என்பது படத்தின் பெயர்.கதாநாயகி லிண்டா தாம்சன்.தயாரிப்பாளர் நிர்மல் குமார் ஒரு NRI.
அப்புறம், சின்னசாமி எதற்கு நம் ஊர் லொகேஷனில் படம் பண்ண வேண்டும்,பாலா?
படத்தில்தான் ஃபாரின் லொகேஷன்களைப் பார்ப்பீர்களா?பதிவுகளில் பார்க்க மாட்டீர்களா?!
Sangkavi சொன்னது…
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...........
உங்கள் முதல் வருகைக்கு நன்றியும்,மகிழ்ச்சியும் சங்கவி.
ஆ.ஞானசேகரன் சொன்னது…
பதிலளிநீக்குதொடர் ஆரம்பம் அமக்கலமாக இருக்கு,... தொடரட்டும்... பகிர்வுக்கு நன்றி சார்
மகிழ்ச்சி,ஞானம்.
kgjawarlal சொன்னது…
பதிலளிநீக்குஇதை மனதுக்குள் திரைப்படமாக ஓட்டிப் பார்த்தால் ரொம்ப நன்றாக இருக்கிறது.
http://kgjawarlal.wordpress.com//
உங்கள் ரசனை உவகை அளிக்கிறது ஜவஹர்.மகிழ்ச்சி.நன்றி.
நிகழ்காலத்தில்... சொன்னது…
பதிலளிநீக்குஒரு வெற்றியாளரின் கடந்துவந்த பாதையை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இது வெறும் சிறிய, கிளுகிளுப்புக் கதைதான் சிவா.JUST AN ENTERTAINER.THAT'S ALL.
குடுகுடுப்பை சொன்னது…
பதிலளிநீக்குஉங்களுடைய முந்திய தொடர் இன்னும் படிக்கவில்லை. இந்தத்தொடர் முதல் பகுதி ஈர்த்துவிட்டது, நானும் தொடர்கிறேன்.//
மகிழ்ச்சி,சார்.
எழுதுவதற்கும்,படிப்பதற்கும் நேரம் எங்கே தருகிறது வாழ்க்கை?
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…//
பதிலளிநீக்குமீண்டும் ஒரு தொடரா?சூப்பர், அதுவும் சினி இண்டஸ்ட்ரியை சுற்றியா? அருமையான முதல் பாகம். அடுத்த பாகத்துக்கும் , மீட்டிங்குக்கும் ஆவலாய் வெயிட்டிங்//
இது ஒரு வெறும் சிறிய எண்டெர்டைனிங் உணர்வுதான்,கார்த்தி.பெரிய கதை அல்ல.
நானும் உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்,கார்த்தி.
Cable Sankar சொன்னது…
பதிலளிநீக்குStart music.. ஆரம்பமே.. கன ஜோராக இருக்கிறது..//
உங்களைப் போலச் சுருக்கமாக எழுதும் சிறுகதை வித்தையே இன்னும் எனக்கு வர மாட்டேன் என்கிறது,ஷங்கர்.
மதுரை கல்யாணத்தின் போது தோன்றிய சிறிய உணர்வே இந்தச் சிறு(!)கதை.
சின்ன அம்மிணி சொன்னது…
பதிலளிநீக்குஅடுத்த கதையா!! படிக்க ஆவலாய் இருக்கோம்.//
உங்கள் தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி,மேடம்.
நாகா சொன்னது…
பதிலளிநீக்குசார் இதுவே ஒரு சிறுகதை மாதிரி இருக்குது. "அண்ணா யுனிவர்சிட்டிய விட்டுட்டு சினிமாங்கறது கொஞ்சம் சினிமாத்தனமா இருந்தாலும் சினிமால இருக்கற மக்களோட வாழ்க்கைய வெச்சே ஏகப்பட்ட படம் எடுக்கலாம். தொடருங்கள், நேரமிருக்கும் போதெல்லாம் வாசிக்கிறேன்.//
உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி,நாகா சார்.
இனிமேல்தான் நானும் உங்களைப் படிக்க வேண்டும்.
கிடைக்கும் நேரத்தில் எல்லாம் எழுதினாலும்,படித்தாலும் நிறைய நல்ல விஷயங்களைத் தவற விட வேண்டி உள்ளது.
கற்றது மட்டுமல்ல,கற்க முடிவதும் கைமண் அளவே என்று நினைக்கிறேன்.
Global line சொன்னது…
பதிலளிநீக்குHai Sir
I am Vijayakumar
from Coimbatore
My mother Place to vijayamangalam
Nice Place............
are you free to call my Mobile +91-9790245555
All the best your life.
Thank you for your first visit,my friend.
My mother's native place is Uththukkuli.So I knew about Vijayamangkalam.My aunt had been from there.
ALL HAPPENED IN B.C.!! Just nostalgiya.
லதானந்த் சொன்னது…
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஷண்முகம்
நன்றி.மகிழ்ச்சி,சார்.எப்போது சென்னை வருகை?
செ.சரவணக்குமார் சொன்னது…
பதிலளிநீக்குஅருமையான ஆரம்பம், வாழ்த்துக்கள்.
//
உங்கள் முதல் வருகைக்கு நன்றியும் மகிழ்ச்சியும் செ.சரவணக்குமார்.
மீண்டும்,மீண்டும் சந்திப்போம்,mutually.
மிஸஸ்.தேவ் சொன்னது…
பதிலளிநீக்குநல்லா இருக்கே கதை சொல்லப் போற கதை...அடுத்து எழுதுங்க படிக்கலாம்.உங்க முந்தைய தொடர் கதை வாசிச்சதில்லை நான்.இங்கருந்து ஆரம்பிக்கிறேன் வாசிப்பை ...தொடருங்கள்//
நன்றி,மகிழ்ச்சி. மிஸஸ் தேவ்.படித்து விட்டுச் சொல்லுங்கள்.
மங்களூர் சிவா சொன்னது…
பதிலளிநீக்குஅருமை அருமை
விறுவிறுப்பான ஆரம்பம்.
உங்கள் தொடர்ந்த ஊக்கத்தை விட எனது எழுத்துக்கு வேறு ஊட்டச் சத்து இல்லை,சிவா.
நன்றி.மகிழ்ச்சி.
உங்கள் எழுத்தாளுமை நன்றாக வெளிப்பட்டு இருக்கிறது.
பதிலளிநீக்குகோவி.கண்ணன் சொன்னது…
பதிலளிநீக்குஉங்கள் எழுத்தாளுமை நன்றாக வெளிப்பட்டு இருக்கிறது.//
சமூக சிந்தனைகளைத் தெள்ளத் தெளிவாக வழங்கிக் கொண்டிருக்கும் உங்கள் எழுத்தாற்றலில் வரும் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது,கண்ணன்.
மகிழ்ச்சி.நன்றி.
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)
பதிலளிநீக்குகாத்திருக்கிறோம்...
//படத்தில்தான் ஃபாரின் லொகேஷன்களைப் பார்ப்பீர்களா?பதிவுகளில் பார்க்க மாட்டீர்களா?!//
பதிலளிநீக்குvery nice sir..
//வடபழனியில் ஒரு மொட்டை மாடியில் இருந்தது எனது அறை.ஒரு சின்ன பத்தடிக்குப் பத்தடி அறை.நடுவில் காலி மொட்டை மாடித் தளம்.எதிரே தடுப்புச் சுவரருகே ஒரு குளியலறை.கழிப்பறை//
பதிலளிநீக்குநடைமுறையை அப்படி கூறி உள்ளீர்கள் சார்
கதை ரொம்ப இயல்பா ம்ம்ம்ம் அதாவது நடைமுறை வாழ்க்கை கதையா இருப்பதால் படிக்க நல்லா இருக்கு சார்! இது போல கதைகளை ரொம்ப விருப்பமா படிப்பேன்.. அடுத்த பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
கஷ்டப்பட்டு வந்ததாலோ என்னவோ காதல் கதைகளை விட இதை போல கதைகள் ரொம்ப விருப்பமாக உள்ளது.
//பாலா?
படத்தில்தான் ஃபாரின் லொகேஷன்களைப் பார்ப்பீர்களா?பதிவுகளில் பார்க்க மாட்டீர்களா?!//
:-)))))
சார் உங்களை ஊருக்கு வந்த போது தொடர்பு கொள்ள நினைத்து குறுகிய நாட்களே இருந்ததால் தொடர்பு கொள்ள மறந்து விட்டேன்....இதில் எனக்கு சற்று ஏமாற்றம் தான்.
உழவன் " " Uzhavan " சொன்னது…
பதிலளிநீக்குபடம் வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)
காத்திருக்கிறோம்...//
படத்தின் வெற்றி விழாவே உங்கள் தலைமையில்தானே நடக்கப் போகிற்து,உழவன்.!
மகா சொன்னது…
பதிலளிநீக்கு//படத்தில்தான் ஃபாரின் லொகேஷன்களைப் பார்ப்பீர்களா?பதிவுகளில் பார்க்க மாட்டீர்களா?!//
very nice sir..//
Thank you,Maha.
கிரி சொன்னது…
பதிலளிநீக்குசார் உங்களை ஊருக்கு வந்த போது தொடர்பு கொள்ள நினைத்து குறுகிய நாட்களே இருந்ததால் தொடர்பு கொள்ள மறந்து விட்டேன்....இதில் எனக்கு சற்று ஏமாற்றம் தான்.//
நிச்சயமாக மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வரும்,கிரி.அப்போது சந்திப்போம்.