மீண்டும் அதே ஜனவரி 1.
மீண்டும் அதே வாழ்த்துகள்.
சூரியன் உதிக்காமலேயே ஒரு தினத்தை மாற்றும் அதே, ஏதோ ஒரு மேற்கத்திய கணக்குக்கு உலகமே நடத்தும் ஆர்ப்பாட்டம்.
மனங்கள் மாறாமல், காலண்டர்கள் மற்றும் மாறும் செயற்கைக் கொண்டாட்டம்.
இந்த நாளில் நம்மூர்க் கோவில்களில் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று கத்திக் கொண்டு திமுதிமுவென்று வரும் பக்த கோடிகளின் செயல் புரியாமல் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கும் நமது ஆதிசிவனும்,மஹாவிஷ்ணுவும்,பராசக்தியும்.
ஏன்,ஏசுபிரானுக்கும்,நபிகள் நாயகத்துக்கும் கூடப் புரியாத நாள் இது என்று நினைக்கிறேன்.
இரவுகளைத் தவறாகப் பயன் படுத்துவதிலிருந்தே நிறைய நோய்களும்,நிறையக் குற்றங்களும் உருவாகின்றன.காதலர்களும்,கள்வர்களும்,காவல் கார்ர்களும்,யோகிகளும் விழித்திருக்க வேண்டிய இரவில், எல்லோரும் விழித்திருக்கும் வேடிக்கையான சடங்கு.
வைகறைப் புத்துணர்வுடன் துவங்க வேண்டிய நாளை, நடு நிசியில் துவங்கும் இந்தக் குழப்பமான உடலியல் அநியாயம் எப்போதிருந்து,யாரால் ஆரம்பித்தது என்று தெரியவில்லை.
பறவைகளும்,விலங்குகளும்,பிறந்த குழந்தைகளும் வீலென்று அலறிக் கொண்டு எழ, நமது புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் வெடிச் சத்தங்கள் முழங்குகின்றன்.
எல்லாப் பண்டிகைகளுமே நமது செக்கு மாட்டு வாழ்க்கையிலிருந்து, ஒரு சிறிய இளைப்பாறலுக்காகவே உருவாக்கப் பட்டிருக்கின்றன.
ஒரு செயற்கை உற்சாகம்,நமது இயந்திர வாழ்க்கைக்குத் தேவைப் படுகிறது.
பழகிப் போன சலிப்பிலிருந்து,அனுபவித்துக் கொண்டிருக்கும் அலுப்பிலிருந்து ஒரு தற்காலிக விடுதலை.
’அதே’ என்ற சொல்லைச் சிறிது நேரம் தள்ளி வைத்து விட்டு ‘இதோ’ என்ற சொல்லை இடம் பெற வைக்கும் உத்தி.
மலர்களுக்குப் பதிலாக பலூன்களும்,இரவின் அமைதிக்குப் பதிலாகக் கூச்சலும்,வெடிகளின் இரைச்சலும்,கனவுகளுக்குப் பதிலாகப் போக்குவரத்து நெரிசல்களும்,அமைதிக்குப் பதிலாக பரபரப்பும் இந்த விழாக கால சாபங்கள்.
மறு நாளே இந்த செயற்கைப் பண்டிகைகளின் அயர்ச்சியைக் கொண்டாடியவர்களின் அனைவரது முகங்களிலும்,கண்களிலும் பார்க்கலாம்.
மதுக்கடைகளைத் திறக்கும் முன்பே, மனிதர்களைப் போதைக்குத் தயாராக்கும் நாட்களே இந்த திரு விழாக்கள்.
எவ்வளவு அபத்தங்களாக இருந்தாலும், இந்த சமூகவியல் கட்டாயங்கள் தரும் சிறிது நேர மகிழ்ச்சிக்காக,அற்ப உளவியல் மாயைக்காக இவற்றை மன்னித்து விடுவோம்.
’கீதாஞ்சலி’யிலிருந்து ஒரு தாகூரின் கவிதை.
‘தாய், வலது மார்பிலிருந்து தனது பாலருந்தும் குழந்தையை எடுத்தவுடன் அழுது கதறும் குழந்தை,மறுகணமே அவளது இடது மார்பில் தனது ஆறுதலை அடைந்து விடுகிறது.’
வாழ்க்கைத் தாயின் வலது மார்பில் பாலருந்தும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
மற்றவர்களுக்கு இந்தக் கணமே, அவளது இடது மார்பு கிடைக்க எனது பிரார்த்தனைகள்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு\\இரவுகளைத் தவறாகப் பயன் படுத்துவதிலிருந்தே நிறைய நோய்களும்,நிறையக் குற்றங்களும் உருவாகின்றன\\
பதிலளிநீக்குநிம்மதியாக தூங்கி எழுந்தேன் சகோதரரே..
\\பழகிப் போன சலிப்பிலிருந்து,அனுபவித்துக் கொண்டிருக்கும் அலுப்பிலிருந்து ஒரு தற்காலிக விடுதலை.\\
சரியாக சொன்னீர்கள்..
எல்லா நாளும் கொண்டாட்டத்திற்கு உரியதாக மாற வேண்டும் என்பதே என் அவா..
ஆரவாரங்கள் தானாகவே ஓய்ந்து விடும்!
பதிலளிநீக்கு"அதே பழைய" என்பது சரிதானா? கொஞ்சம் கூட மாற்றமில்லையா அல்லது மாறவில்லையா?
நிரந்தரமான தீர்வைத் தேடுவதற்கு இன்னும் அதிக முயற்சியும், உழைப்பும் தேவைப்படும் என்பதால் தான், இங்கே பல விஷயங்கள், வழக்கங்களாகி, பின்னர் பழக்கமாகவும் ஆகிக் கடைசியில், பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்து விடும் சோம்பேறித்தனம் என்பது தவிர வேறென்ன?
http://consenttobenothing.blogspot.com/2009/10/blog-post_07.html
இந்தப்பக்கத்தில் பன்றியாகப் பிறக்கும்படி சபிக்கப் பட்ட ஒரு முனிவனின் கதையை பாரதி தன்னுடைய கவிதைகளை எடுத்தாள்வதைப் படிக்கலாம்!
//எல்லாப் பண்டிகைகளுமே நமது செக்கு மாட்டு வாழ்க்கையிலிருந்து, ஒரு சிறிய இளைப்பாறலுக்காகவே உருவாக்கப் பட்டிருக்கின்றன//
பதிலளிநீக்குஉண்மை ஐயா!!
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா... :)
இப்படிக்கு,
இன்னொரு செக்கு மாடு!!
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்க வார்த்தைகளை இங்கே மேற்கோள் காட்டணும்னா.. மொத்தப் பதிவையும்... காப்பி/பேஸ்ட் பண்ணுங்க சார்! :) :)
பதிலளிநீக்குஎனக்கும்.. உங்களை மாதிரியே இந்த ‘அதே பழைய’ அலுப்பு இருக்கு. இதிலுள்ள வியாபாரத்தை யோசிச்சால்... யாரோ சம்பாதிக்க, நான் ஏன்.. செயற்கையா குதிக்கணும்னு நினைச்சி, நிறுத்தி... ஒரு 10-12 வருஷம் ஆய்டுச்சி.
---
ஒரு சடங்காக........
புத்தாண்டு வாழ்த்துகள்..!!! :) :)
எனக்கும் இதே எண்ணம்தான் தோன்றியது :)) சேம் பிஞ்ச்
பதிலளிநீக்குசின்ன அம்மிணி சொன்னது…
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//
நன்றி மேடம்.எனது மகிழ்ச்சி உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும் நிலைக்கட்டும்.
நிகழ்காலத்தில்... சொன்னது…
பதிலளிநீக்கு\\இரவுகளைத் தவறாகப் பயன் படுத்துவதிலிருந்தே நிறைய நோய்களும்,நிறையக் குற்றங்களும் உருவாகின்றன\\
நிம்மதியாக தூங்கி எழுந்தேன் சகோதரரே..
\\பழகிப் போன சலிப்பிலிருந்து,அனுபவித்துக் கொண்டிருக்கும் அலுப்பிலிருந்து ஒரு தற்காலிக விடுதலை.\\
சரியாக சொன்னீர்கள்..
எல்லா நாளும் கொண்டாட்டத்திற்கு உரியதாக மாற வேண்டும் என்பதே என் அவா..//
உங்கள்து அமைதியும்,தூய்மையும் எல்லோருக்கும் கிடைக்க இறையருளை வேண்டுகிறேன்,சிவா.
வாழ்க வளமுடன்.
கிருஷ்ணமூர்த்தி சொன்னது…//
பதிலளிநீக்குநிரந்தரமான தீர்வைத் தேடுவதற்கு இன்னும் அதிக முயற்சியும், உழைப்பும் தேவைப்படும் என்பதால் தான், இங்கே பல விஷயங்கள், வழக்கங்களாகி, பின்னர் பழக்கமாகவும் ஆகிக் கடைசியில், பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்து விடும் சோம்பேறித்தனம் என்பது தவிர வேறென்ன?//
அருமையான,ஆழமான உணர்வு சார்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
கலையரசன் சொன்னது…//
பதிலளிநீக்குஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா... :)
இப்படிக்கு,
இன்னொரு செக்கு மாடு!!//
இந்தப் புத்தாண்டின் முதல் சிரிப்பை எனக்குள் வழங்கியது நீங்கள்தான் கலை!!
நன்றி,மகிழ்ச்சி.
Vijayashankar சொன்னது…
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//
நன்றி,விஜய்.
உங்களுக்கும் எனது இனிய வாழ்த்துகள்.
ஹாலிவுட் பாலா சொன்னது…//
பதிலளிநீக்குஒரு சடங்காக........
புத்தாண்டு வாழ்த்துகள்..!!! :) :)//
நீங்கள் சொல்லும் போது சடங்கு கூட சந்தோஷத்தைத் தருகிறது,பாலா.
உங்கள் குட்டிக் குடும்பத்துக்கு ‘அவ்தார்’ அளவுக்கு எனது வாழ்த்துக்கள்.
Cable Sankar சொன்னது…
பதிலளிநீக்குஎனக்கும் இதே எண்ணம்தான் தோன்றியது :)) சேம் பிஞ்ச்//
நம் இருவருக்கும் எப்போதும் ஒரே அலைவரிசைதானே,ஷங்கர்.
எனது எஸ்.எம்.எஸ் உங்களுக்குக் கிடைத்ததா?
ஐயா என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇங்கு கோவிலுக்கு சென்று விட்டு,த்ரீ இடியட்ஸ் படத்திற்கு மூன்று இடியட்ஸ்கள் சென்று வந்தோம்,
புத்தாண்டு எல்லோருக்கும் சிறப்பாய் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
பதிவு சிந்தனை தட்டி எழுப்பியது,
சரியா சொன்னீங்க ஐயா
பதிலளிநீக்குகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…
பதிலளிநீக்குஐயா என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இங்கு கோவிலுக்கு சென்று விட்டு,த்ரீ இடியட்ஸ் படத்திற்கு மூன்று இடியட்ஸ்கள் சென்று வந்தோம்,
புத்தாண்டு எல்லோருக்கும் சிறப்பாய் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
பதிவு சிந்தனை தட்டி எழுப்பியது,//
"மூன்று இடியட்ஸ்கள் சென்று வந்தோம்"!!!
யார் இந்த நண்பர்கள்,கார்த்தி?
படம் எப்படி இருந்தது?
நசரேயன் சொன்னது…
பதிலளிநீக்குசரியா சொன்னீங்க ஐயா.//
எனது மனம் கனிந்த வாழ்த்துகள்,நச்ரேயன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா..!
பதிலளிநீக்குஅடுத்த புத்தாண்டை உங்களது வீட்டில் கொண்டாடுவோம்..! தயாரா இருங்க..!
உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா..!
அடுத்த புத்தாண்டை உங்களது வீட்டில் கொண்டாடுவோம்..! தயாரா இருங்க..!//
மகிழ்ச்சியாக சரவணன்.கண்டிப்பாக வாருங்கள்.
’அதே’ என்ற சொல்லைச் சிறிது நேரம் தள்ளி வைத்து விட்டு ‘இதோ’ என்ற சொல்லை இடம் பெற வைக்கும் உத்தி.
பதிலளிநீக்குClassic words....
//எல்லாப் பண்டிகைகளுமே நமது செக்கு மாட்டு வாழ்க்கையிலிருந்து, ஒரு சிறிய இளைப்பாறலுக்காகவே உருவாக்கப் பட்டிருக்கின்றன.//
பதிலளிநீக்குஇது உண்மை தான் சார்
உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்
ஸ்வாமி ஓம்கார் சொன்னது…
பதிலளிநீக்கு’அதே’ என்ற சொல்லைச் சிறிது நேரம் தள்ளி வைத்து விட்டு ‘இதோ’ என்ற சொல்லை இடம் பெற வைக்கும் உத்தி.
Classic words....//
மகிழ்ச்சி ஸ்வாமிஜி.
உங்களுக்கு எல்லா ஆண்டும் ஒன்றுதான் என்பதால் புத்தாண்டு சொல்ல வழியே இல்லை.
சரணங்கள்.
கிரி சொன்னது…
பதிலளிநீக்கு//எல்லாப் பண்டிகைகளுமே நமது செக்கு மாட்டு வாழ்க்கையிலிருந்து, ஒரு சிறிய இளைப்பாறலுக்காகவே உருவாக்கப் பட்டிருக்கின்றன.//
இது உண்மை தான் சார்
உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்//
நன்றியும்,மகிழ்ச்சியும்,கிரி.
என்னை விட இளையவரான உங்களுக்கு எனது மனம் கனிந்த நல்வாழ்த்துகள்.
//
பதிலளிநீக்குஎல்லாப் பண்டிகைகளுமே நமது செக்கு மாட்டு வாழ்க்கையிலிருந்து, ஒரு சிறிய இளைப்பாறலுக்காகவே உருவாக்கப் பட்டிருக்கின்றன
//
உண்மைதான்
வலசு - வேலணை சொன்னது…
பதிலளிநீக்கு//
எல்லாப் பண்டிகைகளுமே நமது செக்கு மாட்டு வாழ்க்கையிலிருந்து, ஒரு சிறிய இளைப்பாறலுக்காகவே உருவாக்கப் பட்டிருக்கின்றன
//
உண்மைதான்//
நன்றி.மகிழ்ச்சி,வலசு,வாழ்த்துகளுடன்.
மிகச்சிறந்த பகிர்தல் சார்!ரொம்ப நல்லாயிருக்கு!
பதிலளிநீக்குக. தங்கமணி பிரபு சொன்னது…
பதிலளிநீக்குமிகச்சிறந்த பகிர்தல் சார்!ரொம்ப நல்லாயிருக்கு!//
மகிழ்ச்சி.நன்றி,தங்கமணி பிரபு.
வாழ்த்துக்கள்.
நீங்கள் சுட்டிய தாகூரின் வரிகளும் அதை ஒட்டி தங்கள் கருத்தும் அருமை. பல முறை தங்கள் வலை பக்கம் வந்தாலும் இன்று தான் முதல் முறை பின்னோட்டம் இடுகிறேன்.
பதிலளிநீக்குமோகன் குமார் சொன்னது…
பதிலளிநீக்குநீங்கள் சுட்டிய தாகூரின் வரிகளும் அதை ஒட்டி தங்கள் கருத்தும் அருமை. பல முறை தங்கள் வலை பக்கம் வந்தாலும் இன்று தான் முதல் முறை பின்னோட்டம் இடுகிறேன்.//
உங்கள் முதல் வருகைக்கு நன்றியும்,மகிழ்ச்சியும்,மோகன் குமார்.
உங்களைப் பற்றிய 'Profile’ல் மிளிர்ந்த நகைச்சுவை உணர்வை வெகுவாக ரசித்தேன்.பாராட்டுக்கள்.
//இரவுகளைத் தவறாகப் பயன் படுத்துவதிலிருந்தே நிறைய நோய்களும்,நிறையக் குற்றங்களும் உருவாகின்றன.காதலர்களும்,கள்வர்களும்,காவல் கார்ர்களும்,யோகிகளும் விழித்திருக்க வேண்டிய இரவில், எல்லோரும் விழித்திருக்கும் வேடிக்கையான சடங்கு.//
பதிலளிநீக்குமிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா .....
//மதுக்கடைகளைத் திறக்கும் முன்பே, மனிதர்களைப் போதைக்குத் தயாராக்கும் நாட்களே இந்த திரு விழாக்கள்.//
பதிலளிநீக்குஉண்மை தான் , அவர்களே பார்த்து திருந்தினால் சரி ....
நமது உழவர் திருநாளை விமர்சையாய் கொண்டாட தயாராக இருபார்களா ?
பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஒரு வயது முடிந்தால் அடுத்த வயது தொடங்கும் ....
பதிலளிநீக்கு12 மாதங்கள் முடிந்தால் மறு வருடம் .இதற்க்கு எதற்க்கு ஆரவாரங்கள் ஆர்பாட்டங்கள் .எவ்வளவோ பணம் செல்லவு செய்து கொண்டாடுகிறார்கள் அதை அனாதை இல்லம் போன்ற நல்ல வழியில் செலவிடலாமே......
இயற்கையாக நடக்கும் ஒரு சம்பவதிற்க்கு ஆரவாரம் ஆற்பாட்டம் தேவையா ?
பதிலளிநீக்கு