7.
'ஓ மேன்மையாகப் பிறந்தவரே! நீங்கள் உண்மையின் பாதையைத் தேடும் நேரம் வந்து விட்டது. உங்கள் மூச்சு நிற்கப் போகிறது.
உங்கள் குரு உங்களை அந்தத் தூய ஒளியின் முன் நேருக்கு நேர் நிறுத்தி இருக்கிறார்.
எங்கே எல்லாப் பொருட்களும் வெற்றிடம் போல,மேகங்கள் அற்ற வானம் போலத் தோன்றுகிறதோ,எங்கே மையமோ சுற்றளவோ இல்லாத வெற்றிடம் போல மூடப்படாத,களங்கமற்ற அறிவு தோன்றுகிறதோ அந்த பார்டோ நிலையில் இருந்து தூய ஒளியை அதனுடைய உண்மை நிலையில் உணரப் போகிறீர்கள்.
இந்தக் கணத்தில் உங்களை நீங்களே அறிகிறீர்கள்.'
திபெத்தின் 'இறந்தவர்களின் புத்தகம்' நூலிலிருந்து.
7.
பாபா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மையம்.
இந்தக் கட்டிடத்தை வடிவமைத்த திவ்யா அதனை வட்ட வடிவமாக உருவாக்கி இருந்தாள்.
முழுநிலவின் குளிர்ந்த நீலம் பூத்த வெண்மையும், மதலை இளஞ் சிவப்பும் (பேபி பிங்க்) முதன்மை நிறங்களாகக்,கட்டிடம் காலை நேரத்து மேகத்தால் செய்தது போல மெத்தென்று இருந்தது.
'ஏன் வட்ட வடிவத்தைத் தேர்வு செய்தாய்,திவ்யா?' என்றேன் நான்.
'குறைந்த சுற்றளவில் நிறையப் பரப்பளவு வட்டத்துக்குத்தான் உண்டு.அதனால்தான் இயற்கை தனது படைப்பில் பெரும்பாலும் வட்டங்களையும்,அதனுடைய மூன்றாவது பரிமாணம் என்றால் கோளங்களையும் படைத்திருக்கிறது.நானும் இயற்கையைப் பின் தொடர்ந்திருக்கிறேன்'' என்றாள் அவள் ஒரு ஆர்கிடெக்டாக.
'கட்டிடத்தின் நிறங்களாக வெண்மையையும்,இளஞ்சிவப்பையும் தேர்ந்தெடுக்கக் காரணம்?'
'வெண்மை, தூய்மை. ஆதிமூலமான சிவம். இளஞ்சிவப்பு, வைகறைச் சூரியனைப் போல சக்தியின் துவக்கம்.' என்றாள் திவ்யா.
கட்டிடத்தின் முகப்பில் இரண்டு பெரிய வெண்பளிங்கு யானைகள் நின்றிருந்தன.
ஆறு ஏழு அடி உயரத்தில் உண்மையான யானையின் அளவுகளையே ஒத்து இருந்தன அந்தப் பளிங்கு யானைச் சிற்பங்கள்.
யானையின் தந்தங்கள்,தும்பிக்கை,நெற்றியின் செதுக்கல்களில் எல்லாவற்றிலும் சிற்பி தன் உயிரையே நிரப்பி இருந்தார்.
'பிரமாதம்.பிரமாதம். ' என்றேன் நானே அந்த வெள்ளை யானைகளின் கம்பீரத்திலும் அழகிலும் என்னை மறந்து.
'இந்த யானைகளுக்கும் ஏதாவது உள்அர்த்தம் உண்டா?'
'நிச்சயமாக' என்றாள் திவ்யா சிரித்தபடியே.
'என்ன?' என்றேன் நானும் சிரித்துக் கொண்டே.
'யானை ஆற்றலுக்கும் அமைதிக்கும் குறியீடு.அதனுடைய பேராற்றல் அதற்கு அமைதியைத் தந்ததா,அல்லது அதனுடைய அமைதி அதற்குப் பேராற்றலைத் தந்ததா என்பது இயற்கையின் மாயை.அதனால்தான் கிழக்கத்திய சமயங்களில் எல்லாம் யானைக்குத் தனி முக்கியத்துவம் உண்டு.' என்றாள் திவ்யா.
'சரி,இங்கு அவற்றை நீ நிறுவியதற்குக் காரணம்?'
'இனி எந்தச் சிகிச்சையும் பலனளிக்க முடியாது என்று தெரிந்த புற்று நோயாளிகள் தான் இங்கே வருகிறார்கள்.வாழ்க்கையின் இந்த இறுதிக் கட்டத்தில் இருக்கும் அவர்களுக்குத் தேவை மரணத்தைச் சந்திக்கும் பேராற்றலும், அதனால் வரும் பேரமைதியும்தான். நிறைய நோயாளிகள் இங்கே வந்து இந்த யானைகளைத் தடவிக் கொண்டு நீண்ட நேரம் மௌனமாக நின்றிருப்பதை நானே பார்த்திருக்கிறேன்.' என்றாள் திவ்யா அந்த யானைகளைத் தானும் நெகிழ்ச்சியுடன் தடவியபடி.
சில நிமிடங்கள் மவுனத்திற்குப் பிறகு 'சரி,உள்ளே போவோம்' என்று என்னை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அவள்.
வரவேற்பு ஹால்.அதே நீலம் பாரித்த வெண்மை.அதே பேபி பிங்க் ஜன்னல்களும் நிலைப் படிகளும்.வரவேற்பாளராக இருந்த அழகிய இளம் பெண் திவ்யாவைப் பார்த்தவுடனேயே முகம் மலர ஓடி வந்தாள்.
'ஹாய் திவ்யா.' அவள் உற்சாகத்துடன் திவ்யாவை ஆரத் தழுவிக் கொண்டாள்.
இரண்டு அழகான பெண்களை ஒரே நேரத்தில் பார்ப்பது இரண்டு நாசிகளாலும் ஒரே நேரத்தில் மூச்சு விடுவதைப் போல சிரமமாக இருந்ததால் நான் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டேன்.அதைப் பார்த்த திவ்யா என்னை அந்தப் பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
'மஹதி,இது அரவிந்தன்.என்னுடைய ஃப்ரன்ட்' என்றாள் திவ்யா.
''இவள் மஹதி.' என்றாள் என்னிடம்.
மஹதி எனது கைகளைக் குலுக்கினாள்.
அவளது உள்ளங்கையில் இருந்தால் எந்த மலரும் ஒரு வாரத்துக்கு வாடாது.அவ்வளவு குளுமையான,மிருதுவான கைகள்.
'அழகான பெயர்' என்றேன் நான் இயல்பான புன்னகையுடன்.
'அழகான பெண்ணும் கூட என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாயா இல்லையா?' என்றாள் திவ்யா சிரித்தபடி. மஹதியும் சிரித்தாள்.
‘ஆமாம் என்றால் நீ கோபித்துக் கொள்வாயா மாட்டாயா?’ என்றேன் நானும் சிரித்தபடியே.
இருவரும் சிரிக்க,திவ்யா மட்டும் என்னை முதுகில் செல்லமாக அடித்தாள்.அதற்குள் மஹதியின் மேஜையின் மேல் இருந்த தொலைபேசி அடிக்க 'சரி உங்கள் இருவரையும் அப்புறம் சந்திக்கிறேன்'என்று தனது மேஜைக்கு ஓடினாள் மஹதி.
நாங்கள் இருவரும் மருத்துவ மனைக்குள் செல்லும் பெரிய தேக்கு மரக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே போனோம்.
கதவுகள் எங்கள் பின்னால் தானாக மூடிக் கொண்டன.
உள்ளே நான் கண்ட கட்டிடத்தின் தோற்றம் உண்மையில் என்னைப் பிரம்மிக்க வைத்தது.
மாபெரும் வட்ட வடிவமான தளத்தின் நடுவில் ஒரு பெரிய தாமரைக் குளம்!
ஸ்படிகம் போன்ற நீரில் வெள்ளையும், சிவப்புமாய்த் தாமரைகள் பூத்து நிறைந்திருந்திருந்தன.சுற்றிலும் பேபி பிங்க் பளிங்குப் படிக்கற்கள் குளத்துக்குள் இறங்கின.தளத்தின் மேல் கூரை கெட்டிக் கண்ணடியால் வேயப்பட்டிருந்ததால், சூரிய வெளிச்சம் இயற்கையாக உள்ளே வழியும் படியான கட்டிடம்.
'ஓம் ஷாந்தி ஓம் 'என்று மந்திரமும் ஃப்யூஷன் இசையுமாக அந்தச் சூழ்நிலையே அமைதியும்,குளுமையுமாக மென்மையாகப் பூரித்திருந்தது.
இந்த மனதுக்கு இதமான சூழ்நிலயே எந்தப் பிணியையும் ஆற்றி விடும் என்று தோன்றியது.
குளத்தைச் சுற்றிலும் பெரிய காரிடார்கள் வட்டமாக ஓடின.கண்ணாடித் திரைகளால் காரிடார்கள் அடைக்கப் பட்டிருந்ததால்,அங்கே இருந்த எந்த அறைகளுக்குள்ளும் குளத்தில் இருந்து வரும் பூச்சி புழுக்கள் அணுகா வண்ணம் மருத்துவ மனையின் தூய்மை பேணப் பட்டிருந்தது.
'150 அடி உயரம்.மூன்று தளங்கள்.'என்றாள் திவ்யா,புன்னகையுடன்.
'இந்த மருத்துவ மனை யாருக்குச் சொந்தமானது திவ்யா?' என்று கேட்டேன் வியப்பின் உச்சியில் நின்று.
'இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கின்ற ஆறு பெரிய பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து கட்டி இருக்கிறார்கள்.ஏழைகளுக்கு இலவச மருத்துவம்.மற்றவர்களுக்கு வருமானத்துக்குத் தகுந்த கட்டணம் வாங்குகிறார்கள்.இங்கே வேலை பார்க்கும் டாக்டர்கள், மற்ற ஊழியர்கள் யாரும் ஊதியம் வாங்கிக் கொள்ளாமல் சேவையாக இதனைச் செய்கிறார்கள்.மஹதி கூட பெங்களூரில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் ஹெச்.ஆர் ஆகப் பணி புரிகிறாள்.அவ்வப்போது லீவ் போட்டு விட்டு வந்து இங்கே பணி புரிகிறாள்.' என்றவள்,சற்றே கழித்து
'இது பணம் இருக்கிறவர்கள் எப்போதாவது எழுதும் கவிதை!'என்று சொல்லிச் சிரித்தாள் .
'நமது அரசர்கள் கோவில்கள் கட்டியதைப் போல!' என்றேன் நான்.
பிறகு நாங்கள் இருவரும் மருத்துவ மனையின் தலைமை மருத்துவரான டாக்டர் அப்துல் ரூமியைப் பார்க்கப் போனோம்.
விசாலமான அவரது அறையின் முன்பகுதியில் வரவேற்பாளராக இருந்த இளம்பெண் திவ்யாவைப் பார்த்ததும் மனம் குளிரச் சிரித்தாள்.
'ஹாய் திவ்யா'
'ஹல்லோ,ஜெனிஃபர்' என்றால் திவ்யா அவளது கைகளைக் குலுக்கிய படியே.
'ரூமி ஃப்ரீயா ஜெனிஃபர்?' என்று திவ்யா கேட்டதும் 'அதிர்ஷ்டவசமாக இன்னும் அரை மணி நேரம் ரூமி ஃப்ரீ' என்றாள் ஜெனிஃபர்.அவள் ஆங்கில நடிகை ப்ரிட்டனி மர்ஃபி போல இருந்தாள்.நிறம் மட்டும் தான் நமது இந்திய வெள்ளை.
அந்த மருத்துவ மனையில் மேற்கத்திய நிறுவனங்களில் புழங்குவதைப் போல பதவிகளைக் குறிப்பிட்டுப் பேசாமல் எல்லோரும் பெயர்களைச் சொல்லியே பழகுவார்கள் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.
இன்டர்காமில் அனுமதி பெற்றபின் ஜெனிஃபர் டாக்டரின் அறைக்குள் எங்களை அனுப்பினாள்.
டாக்டர் அப்துல் ரூமி உற்சாகமாகத் திவ்யாவை வரவேற்றார்.என்னை அறிமுகப் படுத்தியதும் 'ஹல்லோ அரவிந்த்' என்று கூறி அழுத்தமாகக் கைகளை பற்றிக் குலுக்கினார்.அவருக்கு 50 வயது இருக்கும்.பார்ப்பதற்குப் பாடகர் ஜேசுதாஸைப் போல இருந்தார்.உ.பி.க்காரர் என்று பின்னர் திவ்யா சொன்னாள்.
இருவரும் அவர்களுக்குத் தெரிந்த பல நோயாளிகளைப் பற்றிப் பேசினார்கள்.இறுதிக் கட்டப் புற்று நோயாளிகள் ஆதலால் அவர்களில் பெரும்பாலோர் காலமாகி இருந்தார்கள்.
'இப்படித் தினமும் மரணத்தைப் பார்க்கிறீர்களே,அது உங்கள் மனதைப் பாதிக்கவில்லையா?' என்று ரூமியிடம் கேட்டேன் நான்.
'நிச்சயமாக அரவிந்த்.மரணம் என்னை,இன்னும் வாழ்க்கையை ஆழமாக நேசிக்க வைத்திருக்கிறது' என்றார் டாக்டர் சற்றும் யோசிக்காமல்.
'சிறுகுழந்தைகள் உடையாமல் பார்த்துக் கொண்டு விளையாடும் சோப்புக் குமிழியைப் போல வாழ்க்கையை நான் பார்க்கிறேன்.இது நிலையானதில்லை என்று உறுதியாகத் தெரிந்த பின்னரே எனது மனைவியை நான் எப்பொழுதையும் விட இப்போது அதிகம் நேசிக்கிறேன்.இங்கிருந்து வீட்டுக்குப் போன பின்னர் எனது குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது தெரியுமா?நான் சாப்பிடும் சப்பாத்திகள்தான் உலகத்திலேயே இனிமையான உணவு என்று உண்ணும் போதெல்லாம் மனதார உணர்கிறேன்.எல்லாவற்றையும் விட இப்போதுதான் இதய பூர்வமாக ஐந்து வேளையும் தொழுகிறேன்' என்றார் ரூமி சிரித்தபடியே.
பிறகு என்னையே ஆழமாகப் பார்த்தபடியே,ஆனால் அவரது பார்வை என் மேல் மையம் கொள்ளவில்லை, இதைச் சொன்னார்..
'மரணம் என்ற கோப்பையில் இருந்துதான் நாம் வாழ்க்கையின் இனிய திராட்சை ரசத்தையே பருகிக் கொண்டிருக்கிறோம்,அரவிந்த்' என்றார் ரூமி.
'அருமையாகச் சொன்னீர்கள் டாக்டர்' என்றாள் திவ்யா உண்மையில் ரசித்து.
'பார்த்தாயா,வெறும் மருந்துச் சீட்டு எழுதிக் கொண்டிருந்தவனை மரணம் கவிதை எழுத வைத்து விட்டது'என்று சிரித்தார் ரூமி.
'இதைக் கேட்கும் போது எனக்கும் சாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது டாக்டர்!' என்றேன் நான். டாக்டரும் திவ்யாவும் மனம் விட்டுச் சிரித்தார்கள்.
'ஆனால் புற்று நோய் மட்டும் வரக் கூடாது என்று வேண்டிக் கொள்.அப்புறம் திவ்யா உன்னை என்னிடம் அழைத்து வந்து விடுவாள்.'என்று ரூமி மேலும் சிரித்தார்.
'பயத்தை மட்டும் அகற்றி விட்டால்,மரணம்தான் வாழ்க்கையின் உச்ச கட்ட இன்பமாக இருக்க முடியும் அரவிந்த்' என்றார் ரூமி.
அப்போது இன்டர்காம் அவரை அழைக்கக்,கேட்டு விட்டு 'வரச் சொல்' என்றார் சுருக்கமாக.நாங்கள் எழ முற்பட, வேண்டாம் என்று சைகையாலேயே எங்களை அமரச் செய்தார் அவர்.
உள்ளே வந்த பெண்ணுக்கு நாற்பது வயதிருக்கும்.ஏதோ வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்.இந்தியில் பேசினாள்.ஏற்கனவே நன்கு அழுது விட்டு வந்திருப்பாள் போலிருக்கிறது.கண்கள் சிவந்து வீங்கி இருந்தன.அவளது கணவன் தான் நோயாளி.ரத்தப் புற்று நோய்.இப்போதெல்லாம் அவளது கணவன் அவளிடம் பேசவே மாட்டேன் என்கிறானாம்.அது பரவாயில்லை,எதைச் சாப்பிடக் கொடுத்தாலும் சாப்பிட மறுக்கிறான் என்பதே அவளது முதன்மையான புகார்.
டாக்டர் ரூமி அவள் சொன்னதையெல்லாம் பரிவுடன் கேட்டார்.பிறகு சொன்னார்.
'கல்பனா,நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது.உங்கள் கணவருக்கு நீங்கள் இப்போது செய்யும் பெரிய உதவி அவரைக் கூடுமான வரை தனிமையில் விடுவதுதான்.அதுதான் அவருக்கு அமைதி அளிக்கிறது என்றால் தயவு செய்து அந்த அமைதியை அவருக்குத் தாருங்கள்.இந்த மாதிரி சமயங்களில் உண்பதே நோயாளிகளுக்குப் பிடிக்காது.பசியே எடுக்காது.நீங்கள் அதற்காக மனது வேதனைப் படாதீர்கள்.அவரது உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் நாங்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளிலேயே கிடைக்கும்.நீங்கள் முதலில் அமைதியாக இருந்து உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.உங்களுக்குத்தான் இப்போது அபரிமிதமான சக்தி தேவை. மற்றதற்கு நாங்கள் இருக்கிறோம்,கவலைப் படாதீர்கள்.' என்று ஆறுதல் கூறி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தார் ரூமி.
பிறகு எங்களிடம் பேசினார்.
'வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர், பெரும்பாலான மனிதர்கள் தனிமையையே விரும்புகிறார்கள். மரணத்தை அவர்கள் தங்களுடைய மிகவும் அந்தரங்கமான விஷயமாகவே நினைக்கிறார்கள்.தங்கள் அனுபவத்தை அவர்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளத் தாயாராக இல்லை என்பதே நான் கண்ட உண்மை.'
'அது எதனால் டாக்டர்?' என்று கேட்டேன் நான்.
'தங்கள் கவனம் முழுதும் சாவின் மேலேயே மையம் கொண்டிருக்கும் தருணம் அது. அதை யார் மூலமும் சிதறடிக்க விரும்புவதில்லை நோயாளிகள்.'என்றார் ரூமி.
'உங்களுக்கு மரணத்துக்குப் பிறகு மனிதர்கள் என்ன ஆகிறார்கள் என்பதில் ஏதாவது கருத்துக்கள் உண்டா?'என்று கேட்டேன்.
சிரித்தார் டாக்டர் ரூமி.
'இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல எங்களிடம் ஒருவர் வந்திருக்கிறார்.அவரிடம் கேளுங்கள். இதற்கெல்லாம் அவர்தான் நன்கு விளக்கம் அளிப்பார்.'என்றவர் திவ்யாவைப் பார்த்து 'லாமா பத்ம சூர்யாவைத்தான் சொன்னேன்' என்றார்.
பத்ம சூர்யா என்றதும் திவ்யா நாற்காலியிருந்து துள்ளியே குதித்து விட்டாள்.
'லாமாஜி வந்திருக்கிறாரா டாக்டர்?' என்றாள் திவ்யா.
'அவர் வந்து பத்து நாட்கள் ஆகின்றன திவ்யா' என்ரார் ரூமி.
அடுத்த அழைப்பு இன்டர்காமில் சிவப்பு அழைப்பாக இருக்க,'மன்னிக்கவும்.ஒரு எமர்ஜென்சி' என்று ரூமி எழுந்து கொண்டார்.
டாக்டரிடம் விடை பெற்றுக் கொண்டு நாங்கள் வெளியே வந்தோம்.
'இவ்வளவு உணர்ச்சி வசப் படுகிறாயே,யார் அந்த பத்ம சூர்யா?' என்று கேட்டேன் திவ்யாவிடம்.
'அவர் ஒரு திபெத்தியன் லாமா."இறந்தவர்களின் புத்தகம்" பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா அரவிந்த்?' என்று கேட்டாள் திவ்யா.
'நிறைய. இறக்கப் போகும் மனிதர்களுக்கு மரணத்துப் பிறகு வழிகாட்டும் பழைய நூல் எட்டாம் நூற்றாண்டிலோ என்னவோ பத்ம சம்பவா என்ற மாபெரும் ஞானி எழுதியதாகச் சொல்வார்கள்' என்றேன்.
'சரியாகச் சொன்னாய் அரவிந்த்.அந்தப் புத்தகத்தில் சொல்லப் படும் விஷயங்களில் பத்ம சூர்யா மாபெரும் அறிஞர்.மிக மிக அற்புதமான மனிதர்.அவரைப் பார்த்துப் பேசினால் அதை நீயே சொல்வாய்.' என்றவள் என்னை அவரது அறைக்கு அழைத்துச் சென்றாள்.பேசிய படியே நடந்தோம்.
திபெத்தைச் சேர்ந்த லாமா இந்த மருத்துவமனைக்கு எதற்கு வருகிறார் என்று கேட்டதற்கு அவள் பதிலளித்தாள்.
'இந்த மருத்துவமனை எல்லா மதங்களின் சங்கமம்,மரணத்தைப் போலவே! சாகும் மனிதர்களுக்கு எந்த வழியில் அமைதி கிடைத்தாலும் சாதி,மத பேதமின்றி இங்கே அனுமதிப்பர்கள்.லாமாஜி அப்படி வந்தவர்தான் இங்கே.அவருடைய வழிகாட்டலில் அமைதியோடு இறந்தவர்கள் இங்கே ஏராளம்.அதனால் அவருக்கு இங்கே தனி மரியாதை. அவருக்கென்று ஒரு தனி அறையையே ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.' என்றவள் லாமாவின் அறைக்கு முன்னால் நின்றாள்.
கதவைத் தட்டிப் பார்த்தோம்.பதில் இல்லை.கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றோம்.
அறை எளிமையாக ஆனால் படு தூய்மையாக இருந்தது.சுவர் ஓரமாகக் கிழக்குப் பார்த்தாற் போல் ஒரு தேக்கு மர மேஜை. அதன் மேல் ஒரு சிறிய பளிங்குப் புத்தர் சிலை.சிலைக்குப் பின்புறத்தில் பத்ம சம்பவாவின் செதுக்கு ஓவியம்.ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் அன்றலர்ந்த வெள்ளைத் தாமரை மலர் ஒன்று நீரில் மிதந்து கொண்டிருந்தது.ஒரு நெய் விளக்கில் தீபம்,சிற்பம் போல் ஆடாமல்,அசையாமல் எரிந்து கொண்டிருந்தது.
ஏதோ திபெத்திய ஊதுவத்தி போலிருக்கிறது,ஒரு அழகிய மர ஸ்டேண்டில் புகைந்து கொண்டிருந்தது.அதன் நறுமணத்தைப் போல நான் இதுவரை எங்கும் முகர்ந்ததில்லை.
சடாரென உங்களைப் பூமியில் இருந்து வானவெளியில் தூக்கி எறிந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு வாசனை.
'அவர் அறையைப் பூட்டாமலே சென்றிருக்கிறாரே,திவ்யா?' என்று கேட்டேன் நான்.
'லாமாஜி எங்கே இருந்தாலும் எப்போதும் தனது அறையைப் பூட்டுவதில்லை!' என்றாள் திவ்யா.
'ஏன்?' கேட்டேன் வியந்து.
'அவர் இறந்த பிறகு என்ன பார்ப்போமோ,அதைத்தான் நாம் இப்போது இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பார் லாமாஜி' என்றாள் திவ்யா அமைதியாக.
யாருமற்ற அந்த அறையின் அர்த்தம் எனக்குச் சுளீரெனப் புரிந்தது.
வெளியே 'ஓம் சாந்தி ஓம்' என்று சிதார்களின் பின்ணணியில் மந்திரம் ஒலித்துக் கொண்டிருந்தது.
(மந்திரம் இன்னும் ஒலிக்கும்)
துவக்க பாகங்களை தவற விட்டு விட்டேன்.திரும்ப வருகிறேன்.
பதிலளிநீக்குரொம்ப நல்லா இருக்கு சார்..
பதிலளிநீக்குநாவல் என்பதை நம்ப முடியவில்லை.
பதிலளிநீக்குபயண அனுபவ கட்டுரைபோல் விஷயங்களுடன் நேர்த்தியாக வருகிறது.
தொடருங்கள்..
வாழ்த்துக்கள்..
ஒவ்வொரு அத்யாயத்திற்கும் உங்களுடய உழைப்பு தெரிகிறது சார்..
பதிலளிநீக்குராஜ நடராஜன் சொன்னது…
பதிலளிநீக்குதுவக்க பாகங்களை தவற விட்டு விட்டேன்.திரும்ப வருகிறேன்.//
கண்டிப்பாக ராஜ நடராஜன்.அப்போதுதான் இந்தக் கதையின் முழுமை தெரியும்.உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.
vinoth gowtham சொன்னது…
பதிலளிநீக்குரொம்ப நல்லா இருக்கு சார்..//
உங்கள் தொடர்ந்த ஆதரவுதான் என்னை எழுதவே தூண்டுகிறது,வினோத்.நன்றி.
அறிவே தெய்வம் சொன்னது…
பதிலளிநீக்குநாவல் என்பதை நம்ப முடியவில்லை.
பயண அனுபவ கட்டுரைபோல் விஷயங்களுடன் நேர்த்தியாக வருகிறது.
தொடருங்கள்..
வாழ்த்துக்கள்..//
வாழ்க்கையை விட வேறென்ன நீண்ட பயணம் இருக்க முடியும்,நண்பரே? வாகனங்கள் எதுவுமற்ற பயணம்!உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.
Cable Sankar சொன்னது…
பதிலளிநீக்குஒவ்வொரு அத்யாயத்திற்கும் உங்களுடய உழைப்பு தெரிகிறது சார்..//
உழைப்பின் வலி தெரியாத ஒரே துறை படைப்புட்த் துறைதானே ,ஷங்கர்.உங்களுக்கும் தெரிந்த உண்மை இது.நன்றி,ஷங்கர்.
//உழைப்பின் வலி தெரியாத ஒரே துறை படைப்புட்த் துறைதானே ,ஷங்கர்.//
பதிலளிநீக்குஅது ‘அங்கீகரிப்படும்’போதுதானே சார்..! அந்த படைப்பு மறுக்கப்படும்போது எந்த துறையா இருந்தாலும்.. ‘வலி’ என்பது அதேதானே..!
படிக்க படிக்க ஊரும் ஊற்றாக இருக்கு சார்..
பதிலளிநீக்குஹாலிவுட் பாலா சொன்னது…
பதிலளிநீக்கு//உழைப்பின் வலி தெரியாத ஒரே துறை படைப்புட்த் துறைதானே ,ஷங்கர்.//
அது ‘அங்கீகரிப்படும்’போதுதானே சார்..! அந்த படைப்பு மறுக்கப்படும்போது எந்த துறையா இருந்தாலும்.. ‘வலி’ என்பது அதேதானே..!//
அருமையான கேள்வி பாலா.
தன்னை மறந்து பாடும்போது பாடுபவனுக்குக் கிடைக்கும் இன்பத்திற்குப் பிறகுதான் உலகம் ஒன்று இருப்பதே அவனுக்கு ஞாபகத்துக்கு வரும்.அதற்குப் பிறகு உலகம் அவன் பாட்டுக்கு என்ன மரியாதை செய்தது என்பதை எண்ணும் போது அவன் படைப்பாளியிலிருந்து விலகி சாதாரண கொடுக்கல் வாங்கல் transactionக்கு வந்து விடுகிறான்.
படைத்தலில் இருக்கும் முதல்,இறுதி வெகுமதியே படைத்துக் கொண்டிருக்கும் போது கிடைக்கும் ஆனந்தம்தான்.
பின்னால் கிடைக்கும் அங்கீகாரம்,பாராட்டு,பணம்,விருது எல்லாம் வெறும் போனஸ்தான்.அவை உள்ளே இருக்கும் படைப்பாளிக்குத் தரப்படுவதில்லை.என்னாயிற்று என்று ,அவனுக்குள் இருந்து வெளியே எட்டிப் பார்க்கும் சாதாரணனுக்கு அளிக்கப் படுவது.அத்ற்குப் பிறகுதான் அனைத்துப் புலம்பல்களும் ஆரம்பிக்கும்.!!
ஆ.ஞானசேகரன் சொன்னது…
பதிலளிநீக்குபடிக்க படிக்க ஊரும் ஊற்றாக இருக்கு சார்..//
அதற்கு ஊற்றுக்கண் உங்களைப் போன்ற ரசிக உள்ளங்கள்தான் ஞானசேகரன்.உங்கள் மெயில் பார்த்தேன்.பட்டாம்பூச்சி பறக்கிறதா என்று பார்ப்போம்.நன்றி ஆ.ஞானசேகரன்.
கதை, கவிதை , காட்ச்சி அமைப்பு... எல்லாமே அற்புதம். ... உங்களுக்கு விநாயாகர் அருள் நிறைய இருக்கு. ( முதலில் எலிபென்ட் கடவுளை பற்றி , காட்மண்டுவின் பாரில் , இப்பொழுது அந்த யானையின் ஆற்றல் , அமைதி )... திருச்சி, உச்சிபிள்ளயார் கோவிலின் அடிவாரத்தில், ஒரு லக்ஷ்மி குட்டி உண்டு, எப்பொழுதும் ஆடி கொண்டே இருக்கும் , சங்கலியில் கட்டிஇருந்தாலும்
பதிலளிநீக்குஅது ஒரு கனாக் காலம் சொன்னது…
பதிலளிநீக்குகதை, கவிதை , காட்ச்சி அமைப்பு... எல்லாமே அற்புதம். ... உங்களுக்கு விநாயாகர் அருள் நிறைய இருக்கு. ( முதலில் எலிபென்ட் கடவுளை பற்றி , காட்மண்டுவின் பாரில் , இப்பொழுது அந்த யானையின் ஆற்றல் , அமைதி )... திருச்சி, உச்சிபிள்ளயார் கோவிலின் அடிவாரத்தில், ஒரு லக்ஷ்மி குட்டி உண்டு, எப்பொழுதும் ஆடி கொண்டே இருக்கும் , சங்கலியில் கட்டிஇருந்தாலும்//
நன்றி,சுந்தர்.எனக்கு அருள் புரியும் விநாயகப் பெருமான் உங்களுக்கும் அருள் புரிவாராக.சர்வ விக்னோப சாந்தயே.
கதை துவங்கியபோது வேறு வடிவில் இருந்தது..
பதிலளிநீக்குதற்போது வேறு வடிவுக்கு சென்று விட்டது..
எந்த வடிவில் முடியும்..??
காதல் நாவல் படிக்கும் எண்ணம் மறைத்து, மனதிற்கு அமைதி தரும் கட்டுரையாக மாறிவிட்டது..
கிட்டதட்ட அந்த கட்டிடத்தை மனக்கண்ணில் காண்கிறேன்..
நல்ல வர்ணனை..
பட்டிக்காட்டான்.. சொன்னது…
பதிலளிநீக்குகாதல் நாவல் படிக்கும் எண்ணம் மறைத்து, மனதிற்கு அமைதி தரும் கட்டுரையாக மாறிவிட்டது..
கிட்டதட்ட அந்த கட்டிடத்தை மனக்கண்ணில் காண்கிறேன்..
நல்ல வர்ணனை..//
உணர்ச்சிகளைத் தூண்டினால் கதை.அறிவினைத் தூண்டினால் கட்டுரை.இரண்டையுமே செய்ய முயல்வதுதான் எனது பணி என்று நினைக்கிறேன்.உங்கள் கருத்துக்கு நன்றி,அன்பரே.
//.. உணர்ச்சிகளைத் தூண்டினால் கதை.அறிவினைத் தூண்டினால் கட்டுரை...//
பதிலளிநீக்குரசித்தேன்..
பட்டிக்காட்டான்.. சொன்னது…
பதிலளிநீக்கு//.. உணர்ச்சிகளைத் தூண்டினால் கதை.அறிவினைத் தூண்டினால் கட்டுரை...//
ரசித்தேன்..//
இல்லை,தம்பி.நவீன ஆங்கில நாவல்களில் எல்லாம் நம் ஊர் எழுத்தாளர்களைப் போலக் குப்பை கொட்ட முடியாது.ஒரு த்ரில்லர் ஆக இருந்தால் கூட எடுத்துக் கொண்ட விஷயத்தில் ஆராய்ச்சி இல்லாமல் வெறுமனே உணர்ச்சிகளை வைத்துக் கொண்டு ஒப்பேத்த முடியாது.மைக்கேல் க்ரைட்டன்,ஆர்தர் ஹெயிலி,ஜான் க்ரிஷாம்,ராபின் குக் இப்படி யாரைப் படித்தாலும் அந்த நாவல் எடுத்துக் கொள்ளும் பின்புலத்தைப் பற்றிப் படிப்பவர்களுக்கு மிகப் பெரிய அறிவும்,அரிய தகவல்களும் கிடைத்து விடும்.
உணர்ச்சி ததும்பும் கதையோட்டம், வெறுமனே உங்கள் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளத்தானே தவிர மற்றபடி ஒன்றைப் படிப்பதனால் நீங்கள் அடையும் அறிவுப் பயன்தானே முக்கியம்.அதனை மனதில் கொண்டுதான் என்னால் முடிந்த ஆராய்ச்சி அறிவோடு இந்தக் கதையினை நான் எழுதுகிறேன்.ந்ன்றி,உங்கள் பெயரைச் சொல்லி விளிக்க முடியாத புனைப் பெயரை வைத்துள்ளீர்கள்!
//
பதிலளிநீக்கு'அவர் அறையைப் பூட்டாமலே சென்றிருக்கிறாரே,திவ்யா?' என்று கேட்டேன் நான்.
'லாமாஜி எங்கே இருந்தாலும் எப்போதும் தனது அறையைப் பூட்டுவதில்லை!' என்றாள் திவ்யா.
'ஏன்?' கேட்டேன் வியந்து.
'அவர் இறந்த பிறகு என்ன பார்ப்போமோ,அதைத்தான் நாம் இப்போது இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பார் லாமாஜி' என்றாள் திவ்யா அமைதியாக
//
சிந்திக்க வைக்கிறது.
பூட்டிப் பதுக்கி வைக்கும் பொருட்களை இறந்த பின்னர் மற்றவர்கள் பார்க்கக் கூடும். யாருக்கும் சொல்லாமல் மனதுக்குள் மண்டிக்கிடக்கும் இரகசியங்களை இறந்த பின்பும் யாரறிவர்?
வலசு - வேலணை சொன்னது…
பதிலளிநீக்குபூட்டிப் பதுக்கி வைக்கும் பொருட்களை இறந்த பின்னர் மற்றவர்கள் பார்க்கக் கூடும். யாருக்கும் சொல்லாமல் மனதுக்குள் மண்டிக்கிடக்கும் இரகசியங்களை இறந்த பின்பும் யாரறிவர்?//
அருமையான சிந்தனை,வலசு-வேலணை.நன்றி.நன்றி.
பாபா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மையத்திற்குள் இவர்களோடு நானும் பயணித்த அனுபவம் ஏற்படுகிறது.
பதிலளிநீக்கு" உழவன் " " Uzhavan " சொன்னது…
பதிலளிநீக்குபாபா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மையத்திற்குள் இவர்களோடு நானும் பயணித்த அனுபவம் ஏற்படுகிறது.//
பாராட்டும் பண்புக்கு நன்றி,உழவன்.
நான் அந்த அளவிற்கு ஆங்கில நாவல்களை படித்தது கிடையாது..
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைத்தால் படித்து பார்க்கிறேன்..
நன்றாக என் இயற்பெயரிலேயே அழையுங்கள்..
மா.திருஞானசம்பத் - இது என் தாத்தா எனக்கு வைத்த பெயர்.
பட்டிக்காட்டான் - இது என் நண்பர்கள் வைத்தது.
பட்டிக்காட்டான்.. சொன்னது…
பதிலளிநீக்குநான் அந்த அளவிற்கு ஆங்கில நாவல்களை படித்தது கிடையாது..
வாய்ப்பு கிடைத்தால் படித்து பார்க்கிறேன்..//
//படிக்கத் தொடங்கி விட்டால் பிறகு விடவே மாட்டீர்கள். //
//நன்றாக என் இயற்பெயரிலேயே அழையுங்கள்..
மா.திருஞானசம்பத் - இது என் தாத்தா எனக்கு வைத்த பெயர்.
பட்டிக்காட்டான் - இது என் நண்பர்கள் வைத்தது.//
நன்றாக என் இயற்பெயரிலேயே அழையுங்கள்..
மா.திருஞானசம்பத் - இது என் தாத்தா எனக்கு வைத்த பெயர்.
பட்டிக்காட்டான் - இது என் நண்பர்கள் வைத்தது.//
நன்றி திருஞானசம்பத்.இப்படியே உங்களை அழைக்கிறேன்.
அப்படியே அழையுங்கள்..
பதிலளிநீக்குஷண்முகப்ரியன்,வழக்கமான பாரட்டுகள் நிறைய இந்த அத்தியாயத்திற்கும் தரலாம்.
பதிலளிநீக்கு/*
'குறைந்த சுற்றளவில் நிறையப் பரப்பளவு வட்டத்துக்குத்தான் உண்டு
*/
இருக்கலாம். ஆனால் வட்டவடிவமாக கட்டடம் எழுப்புவதால் இடம் வீணாகும். உதாரணமாக ஒரு சதுரத்துள் ஒரு வட்டத்தை வரையலாம். வட்டத்திற்கு வெளியே உள்ள அந்த சதுரப்பகுதிகள் வீண். இரண்டாவதாக, ஒரு வட்ட வடிவ கட்டிடத்தைச்சுற்றி அணைத்து பக்கங்களிலும் வட்டவடிவ கட்டிடங்கள் இருப்பதாகக் கொள்வோம். அப்போதும் வட்டங்களுக்கு இடையே பரப்பளவு வீணாகும்.:-)
/* மஹதி எனது கைகளைக் குலுக்கினாள் */
மஹதியுடன் கைகுலுக்கினேன் என்றோ மஹதி கைகுலுக்கினாள் என்றோ சொல்லாமல் மஹதி எனது கைகளை குலுக்கினால் என்று சொல்லும்போது அப்போது அவன் கைகுலுக்குவதில் பிரக்ஜை இன்றி வெறுமே கைகளை நீட்டிக்கொண்டிருந்தான்,அவள்தான் குலுக்கினாள் என்பதுதானே குறிப்பு? இந்த நுட்பம்தான் இலக்கியத்தின் மீது நம்மை மோகம் கொள்ளவைக்கிறது...
/*150 அடி உயரம்.மூன்று தளங்கள். */
மறுபடியும் ஒரு யதார்த்தம். ஒரு தளத்திற்கு 15-20 அடிக்கு மேல் எங்கே சார் இருக்கிறது?
ஷண்முகப்ரியன்,வழக்கமான பாரட்டுகள் நிறைய இந்த அத்தியாயத்திற்கும் தரலாம்.
பதிலளிநீக்கு/*
'குறைந்த சுற்றளவில் நிறையப் பரப்பளவு வட்டத்துக்குத்தான் உண்டு
*/
இருக்கலாம். ஆனால் வட்டவடிவமாக கட்டடம் எழுப்புவதால் இடம் வீணாகும். உதாரணமாக ஒரு சதுரத்துள் ஒரு வட்டத்தை வரையலாம். வட்டத்திற்கு வெளியே உள்ள அந்த சதுரப்பகுதிகள் வீண். இரண்டாவதாக, ஒரு வட்ட வடிவ கட்டிடத்தைச்சுற்றி அணைத்து பக்கங்களிலும் வட்டவடிவ கட்டிடங்கள் இருப்பதாகக் கொள்வோம். அப்போதும் வட்டங்களுக்கு இடையே பரப்பளவு வீணாகும்.:-)
/* மஹதி எனது கைகளைக் குலுக்கினாள் */
மஹதியுடன் கைகுலுக்கினேன் என்றோ மஹதி கைகுலுக்கினாள் என்றோ சொல்லாமல் மஹதி எனது கைகளை குலுக்கினால் என்று சொல்லும்போது அப்போது அவன் கைகுலுக்குவதில் பிரக்ஜை இன்றி வெறுமே கைகளை நீட்டிக்கொண்டிருந்தான்,அவள்தான் குலுக்கினாள் என்பதுதானே குறிப்பு? இந்த நுட்பம்தான் இலக்கியத்தின் மீது நம்மை மோகம் கொள்ளவைக்கிறது...
/*150 அடி உயரம்.மூன்று தளங்கள். */
மறுபடியும் ஒரு யதார்த்தம். ஒரு தளத்திற்கு 15-20 அடிக்கு மேல் எங்கே சார் இருக்கிறது?
சாணக்கியன் சொன்னது…
பதிலளிநீக்குஇருக்கலாம். ஆனால் வட்டவடிவமாக கட்டடம் எழுப்புவதால் இடம் வீணாகும். உதாரணமாக ஒரு சதுரத்துள் ஒரு வட்டத்தை வரையலாம். வட்டத்திற்கு வெளியே உள்ள அந்த சதுரப்பகுதிகள் வீண். இரண்டாவதாக, ஒரு வட்ட வடிவ கட்டிடத்தைச்சுற்றி அணைத்து பக்கங்களிலும் வட்டவடிவ கட்டிடங்கள் இருப்பதாகக் கொள்வோம். அப்போதும் வட்டங்களுக்கு இடையே பரப்பளவு வீணாகும்.:-)//
முழுமையான வடிவம் என்ற கோணத்திலேயே நான் பார்த்ததால்,இந்தக் கோணத்தில் நான் பார்க்கவில்லை.புதிய விபரத்துக்கு நன்றி,சணக்கியன்.
மஹதி எனது கைகளைக் குலுக்கினாள் */
அவன் கைகுலுக்குவதில் பிரக்ஜை இன்றி வெறுமே கைகளை நீட்டிக்கொண்டிருந்தான்,அவள்தான் குலுக்கினாள் என்பதுதானே குறிப்பு? இந்த நுட்பம்தான் இலக்கியத்தின் மீது நம்மை மோகம் கொள்ளவைக்கிறது...//
நம்மை மறந்து எழுதிச் செல்லும் போது,கதை சொல்லி மறைந்து கதையே தன்னை எழுதிக் கொள்ளும்.அந்த அனுபவம் எனக்கு நிறைய நேரும்.நீங்கள் சொன்ன நுட்பம் எனது பிரக்ஞை இன்றி நிகழ்ந்ததது!
தன்னை மறந்து ஊன்றிப் படிக்கும் போது இது வாசகனுக்கும் நேரும்.உங்கள் ரசனை வாழ்க,வளர்க,சாணக்கியன்.
*150 அடி உயரம்.மூன்று தளங்கள். */
மறுபடியும் ஒரு யதார்த்தம். ஒரு தளத்திற்கு 15-20 அடிக்கு மேல் எங்கே சார் இருக்கிறது?//
கட்டிடத்தின் மொத்த உயரத்தையே 150 அடி என்று சொல்லி இருக்கிறேன்,சாணக்கியன்!