THE SHACK
---------------------
BY
Wm. PAUL YOUNG
----------------------------
’கடவுள்’ என்ற ‘கோட்பாட்’ டிடம் இன்றைய ,மனிதன் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் விடை தரும் முயற்சிதான் இந்த அற்புதமான புத்தகம்.
மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்த்திருக்கும் இந்தப் புத்தகம், புத்தக உலகில் ஒரு ‘அவதார்’
ஏன், கடவுள் என்னை மட்டும் இப்படிச் சோதிக்கிறார்?
பச்சிளம் குழந்தைகளைக் கூடக் குண்டு வீச்சுக்குப் பலி கொடுக்கும் இந்த அவலமான உலகில், ஆண்டவன் என்னதான் பண்ணிக் கொண்டிருக்கிறார்?
எந்தப் பாவமும் செய்தறியாத எனக்கு மட்டும் ஏன் இந்தத் தீராத நோய்?
அனுதினமும் கடவுளைத் தவறாமல் தொழுகின்ற எனக்கு மட்டும் ஏன் நியாயமான வேலை கிடைக்கவில்லை?
எனக்கு மட்டும் ஏன் இந்த அநியாய வறுமையைக் கொடுத்து வாட்டுகிறான் இறைவன்?
அயோக்கியர்கள்,கொடூரக் குற்றவாளிகள்,நயவஞ்சகர்கள்,ஏமாற்றுக்காரர்கள் எல்லாம் எதிலும் வென்றும்,சிரித்தும்,மகிழ்ந்து கொண்டிருக்கையில் வாழ்க்கையில் ஒரு தவறும் புரியாத நான் மட்டும் ஏன் வெற்றியின் காலடியைக் கூட இன்னும் பார்க்காமல் கதறிக் கொண்டிருக்கிறேன்?
உலகில் நடக்கின்ற அத்தனை கொடுமைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்குக் கடவுள் எதற்கு?
படைத்தவனிடம் அனைத்துப் பக்தர்களும்,வாழ்க்கையிடம் அனைத்து நாத்திகர்களும் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த ஓயாத கேள்விகளுக்கு,நேரடியாகக் கடவுளே வந்து பதில் சொன்னால் எப்படி இருக்கும்?
கிறித்துவ மதத்தின் கடவுள் வந்து புதிய விளக்கம் தந்தாலும்,மாற்று மதக்காரர்களின் மனதையும் ஊடுருவிச் செல்கிறது,இந்தப் புத்தகம்.
எந்தப் பெயரால் அழைத்தாலும், கடவுள் ஒருவர்தானே?
உண்மையை விட, நம்மை அதிகம் பாதிக்கும் கற்பனைப் படைப்பே இந்த நாவல்.
வீட்டிலேயே கணிணி மூலம்,தனது கம்பெனி வாடிக்கையாளர்களின் அழைப்புக்களுக்குப் பதில் சொல்லும் விற்பனைப் பிரிவில் மெகன்சி ஆலன் ஃபிலிப் வேலை பார்க்கிறான்.அவனுக்கு ஒரு அன்பு மனைவி.ஐந்து குழந்தைகள்.
ஞாயிறு தோறும் சர்ச்சுக்குச் செல்லும் உண்மையான கிறித்துவன் மேக்.,என்று அழைக்கப் படும் மெகன்சி.
ஒரு விடுமுறையில், குழந்தைகளுடன் மலைக் காட்டுக்கு நடுவில் அமைந்திருக்கும் சுற்றுலாத் தலத்திற்குச் செல்கிறான் மேக்.அங்கே அவனது கடைக் குட்டியான செல்லக் குழந்தை மிஸ்ஸி, கொடூரமான,ஒரு மன நோயாளியான கொலைகாரனால் கடத்தப் படுகிறாள்.
தவித்துத்,துவண்டு போகும் மேக்கும், எஃப்.பி.ஐ உட்பட அனைத்து உயர்மட்டப் போலீஸ் படையும்,நண்பர்களும் அந்த மலைக் காட்டையே சலிக்க,சலிக்கத் தேடிய போதும், ஆறு வயதே ஆன மிஸ்ஸி என்ற அந்தக் குழந்தை கிடைக்கவே இல்லை.
மனநிலை பாதிக்கப் பட்ட அந்தக் கொலைகாரன் இதுவரை, இதே போல சிறிய வயதுக் குழந்தைகள் நான்கு பேரைக் கடத்திக் கொண்டு போய்ச் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறான்.எந்தத் தடயமோ,குழந்தைகளின் உடல்களோ கிடைக்காத நிலையில், என்ன முயன்றும்,காவல் துறை அவனைப் பிடிக்கவே முடியவில்லை.
இந்த உண்மை மேக்குக்குத் தெரிய வரும் போது அந்த அன்புத் தகப்பன் தனது குழந்தை மிஸ்ஸியை நினைத்து,நினைத்துத் துடிதுடித்துப் போகிறான்.
கடைசியில் மலைக்காட்டுக்கு நடுவில் இருக்கும் ஒரு சிறிய மரக் குடிலில் மிஸ்ஸி அணிந்திருந்த சிவப்பு ஆடை மட்டும்,ரத்தக் கறைகளுடன் கிடைக்கிறது.குழந்தையின் உடல் கிடைப்பதே இல்லை.
குழந்தையின் உடல் கிடைக்காத நிலயில்,அவளைக் கொலைகாரன் கொன்றிக்கக் கூடும் என்ற அனுமானத்தோடு, காவல்துறை கையை விரித்துவிடுகிற்து.
காலிச் சவப் பெட்டியைக் குழந்தை மெகன்சியின் ஞாபகத்துடன் புதைக்க வேண்டிய கொடுமையான துயரம்,மெகன்சிக்கு.
அவனால் வாழ்க்கை முழுதும் இனி என்றுமே மறக்க முடியாத, அவனது குழந்தைக்குக் கொடுமையான துயரம் நிகழ்ந்த, அந்த சிதிலமடைந்த மரக் குடில்தான் 'THE SHACK' என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படுகிறது.
இந்த நிகழ்ச்சியை அவனும் அவனது மனைவியும் அவரகளது வாழ்வின் ‘மஹாத் துக்கம்’ என்றே எண்ணுகிறார்கள்.
நினைவை விட்டு அகலாத, இந்த ’மஹாத் துக்கம்’ நடந்து மூன்றரை வருடங்கள் கழித்துப், பனி பெய்ய்யும் ஒரு இரவில் மேக்கின் தபால பெட்டியில் ஒரு கடிதம் கிடக்கிறது.
’மெகன்ஸி,
உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது.
உன்னை நான் நிறைய ‘மிஸ்’ பண்ணுகிறேன்.
நீ சந்திக்க நினைத்தால், வார இறுதியில் நான் மரக்குடிலில் இருப்பேன்.’
அப்பா’
மெகன்ஸி அந்தக் கடிதத்தைப் படித்ததும் திகைத்துப் போய் விடுகிறான்.
அவனது மனைவி எப்போதும் கடவுளை’அப்பா’ என்றே அழைப்பாள்!
அப்படியானால்,கடவுளிடமிருந்தா இந்தக் கடிதம் வந்திருக்கிறது?
அல்லது,யாராவது விஷமிகள் த்னது துக்கத்துடன் விளையாடுகிறார்களா?
எந்த மரக்குடிலை அவனால் ஒரு கணம் கூட மறக்க முடியாதோ,அங்கேயே அழைக்கிறானே ஒருவன், ஒருவேளை மனம் பிறழ்ந்த அந்தக் கொலைகாரனாய் இருக்குமோ?
அவனாகத்தான் இருக்க முடியும் என்று உறுதியாக நம்பிக் கொண்டு,கொலை வெறியோடு ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ‘THE SHACK' க்குச் செல்கிறான் மெகன்ஸி.
ஆனால் அங்கே அவன் சந்திப்பது, உண்மையிலேயே கடவுளைத்தான் !
பரம்ண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே (’அப்பா’ என்று பாந்தமாக அவனது மனைவி அழைப்பது இந்த ஆண்டவரைத்தான்) மரக்குடிலின் கதவைத் திறந்து,மெகன்ஸியை வரவேற்கிறார்.
ஆனால் பரம பிதா என்று சொல்லிக் கொண்டு நிற்பதோ,ஆப்ரிக்கக் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒரு பேரிளம் பெண்!
பரமண்டலத்திலிருக்கிறவர் வெள்ளைக் காரராகவோ,ஆணாகவோ தாடி நரைத்த முதியவராகவோகத்தான் இருப்பார் என்பது மனிதனின் கற்பனையே அன்றி, உண்மையில் அவர் நமது கோட்பாடுகளுக்கு அடங்காதவர் என்பதைக் காட்டவே பரம பிதா பெண்வடிவம் தாங்கி வந்து நிற்கிறார்.
கிறித்துவத்தின் முக்கிய மூன்று இறைத்தன்மைகளான பரமபிதா,ஏசுபிரான்,தூய ஆவி மூன்று பேரையும் ஒருவர் பின் ஒருவராக அந்த மரக்குடிலில் சந்திக்கிறான்,மெகன்ஸி.
அவர்கள் அவனது அனைத்துக் கேள்விகளுக்கும் விடை சொல்லி அவனது ‘மஹாத் துக்கத்தைப்’ போக்கி,மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக்த் திருப்பி அனுப்பும் போது, நாமும் நமது சந்தேகங்களின் எடை குறைந்து லேசாகிறோம் என்பதே இந்த நாவலின் வெற்றி.
படித்தே தீர வேண்டிய,படித்தவர்கள் பிறருக்குச் சொல்லியே ஆக வேண்டிய புத்தகம் ‘THE SHACK'
நவீன ஆன்மீக வேட்கை கொண்ட அன்பர்கள், அருந்தியே ஆக வேண்டிய குளிர் நீர்க் குவளை ‘THE SHACK'
வெள்ளி, பிப்ரவரி 19, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஐயா,
பதிலளிநீக்குநலம் தானே?
ரொம்ப அழகாய் சொன்னீர்கள்.இந்த நாவல் கண்டிப்பா படமாக வரும்.அப்போது பார்ப்பேன். மிக்க மகிழ்ச்சி நேரம் கிடைக்கும் போது எழுதவும்
ஐயா,
பதிலளிநீக்குநலம் தானே?
ரொம்ப அழகாய் சொன்னீர்கள்.இந்த நாவல் கண்டிப்பா படமாக வரும்.அப்போது பார்ப்பேன். மிக்க மகிழ்ச்சி நேரம் கிடைக்கும் போது எழுதவும்
நல்லதொரு புஸ்தக அறிமுகத்திற்கு நன்றி சார்..
பதிலளிநீக்குநிச்சயம் படிக்க முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குI will try to read the book Sir...
பதிலளிநீக்குமிக நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குVery nice intro Sir.
பதிலளிநீக்குNothing much in 4 weeks? Busy?
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தமிழா ஆங்கில புத்தகமா???????
பதிலளிநீக்குஎன்னைப் போன்றோர்களுக்கு உங்கள் எழுத்துக்கள் வாசிக்காத குறையில் பாலைவனத்தில் நடுவில் நின்று கொண்டு நீர் தேடுவது போல் உள்ளது. தாங்கள் விமர்சனம் கொடுக்கும் பத்து வரிகள் போல் அவ்வப்போது எழுத முடிந்தால் நலம்.
பதிலளிநீக்குநலமே விழைவு.
வணக்கம்
பதிலளிநீக்குநண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
உங்கள் எழுத்து பரிமாற்றங்களை தொடர்ந்து ரசிக்கும் தருணங்கள் இல்லாமல் போனதால் பெப்ரவரி இறுதிக்கு வந்துள்ளேன்.
பதிலளிநீக்குநலமா?நலமே!
ஐயா,
பதிலளிநீக்குநலம் தானே.
போனவருடம் பிப்ரவரிக்கு எழுதினீர்கள்,அதன் பின்னர் எதுவுமே எழுதவில்லை,நேரம் கிடைக்கையில் அவசியம் எழுதுங்கள்