
தியான லிங்கம்
இன்று மகா சிவராத்திரி.
மெகா தொலைக் காட்சியில் ஈஷா யோக மையத்தில் சத்குரு ஜாக்கி வாசுதேவ் முன்னிலையில் மகா சிவராத்திரி திருவிழா இன்று மாலை ஆறு மணியிலிருந்து நாளைக் காலை ஆறு மணி வரையிலும் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஈடுபாடு உள்ள அன்பர்கள் இதனைக் கண்டு உணர்ந்து,உய்யலாம்.
போன வருடம் இதே சிவராத்திரி இரவில் பன்னிரண்டு மணி அளவில்,சிவமணி அங்கு வாசித்த டிரம்ஸ் இன்னும் என்னுள் அதிர்ந்து கொண்டிருக்கிறது.அதன் முடிவில் சத்குரு திடீரென எழுந்து ஆடிய நடனம் ...அந்த அனுபவத்துக்கு இணையே இல்லை.
இன்று-
சத்குரு தொடக்க உரையில் இந்தப பண்டிகையைப் பற்றிச் சொல்லும் போது இன்றைய கிரகச் சூழ்நிலைகள் மனித உடலில் சக்தியைக் குவிக்கும் வகையில் அமைந்திருப்பதால்,யார் வேண்டுமானாலும் முதுகெலும்பினை நேர்கோட்டில் அமையும் படி நிமிர்ந்து உட்கார்ந்து ,அந்த வானம் தரும் ஆற்றலை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதற்காவே இந்த நாள் ஆதி யோகியான சிவன் பெயரால் கொண்டாடப் படுகிறது என்றார்.
இதே கருத்தினை ஸ்வாமி ஓம்கார் தனது பதிவில் விளக்கமாகக் காலையில் தனது பதிவில் அளித்துள்ளார்.
WE ARE NOT ONLY AWAKE IN THIS NIGHT, BY DOING SO IT WILL LEAD TO OUR AWAKENING ALSO என்றார் சத்குரு.
மேளங்களும் ,தாளங்களும் ,உடுக்கைகளும் ,உரத்த சங்குகளின் ஒலிகளும்
மனித ஹூங்காரங்களும் மேலும்,மேலும் நமது விழிப்பு நிலையைத் தூண்டுவதற்காகவே இது போன்ற தருணங்களில் பயன் படுத்தப் படுகின்றன போலிருக்கிறது.
எனவே முதுகெலும்பை நேர்கோட்டில் இருக்கும் படி வைத்து அமருங்கள்.உங்களைப் பற்றியே தியானியுங்கள்.
வாழ்க்கைப் போராட்டத்துக்கு நமக்கு நிறைய ஆற்றல் தேவைப் படுகிறது.
அது வானத்திலிருந்து கிடைத்தாலும்
மண்ணுக்கும் நனமைதானே .
ஓம் நமசிவாய.
