வியாழன், டிசம்பர் 24, 2009

அவதார்- பரவசம்.

அவதார் -பரவசப் பட்ட்டதைத் தவிர என்னால் வேறு எதுவும் சொல்லவோ ,எழுதவோ இயலவில்லை.

படைப்புணர்வின் சொல்ல முடியாத சிகரத்தில் இருக்கும் ஜேம்ஸ் கேமரானின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்குக் கூட,அவர் படைத்த பறவைகளின் துணையன்றி வேறு சாத்தியங்கள் எனக்கில்லை.

இந்த படைப்பின் பரவசத்தை ,அனுபவத்தை மனிதர்கள் அனைவரும் துய்க்க வேண்டுமென மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

30 கருத்துகள்:

  1. ரொம்ப நாளைக்கு அப்புறம் முதலில் துண்டு போட்டுக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்குது.

    பதிலளிநீக்கு
  2. சார்!நேற்று ஹாலிவுட் பாலா வீட்டுல அவர் போட்ட சத்தத்துல படம் எங்க ஓடுதுன்னு பார்த்தா ஐமேக்ஸ் தொழில் நுட்ப கோளாறாம்.வேணுமின்னா எப்பவும் மாதிரி படத்தை வந்து பார்த்துக்க சொன்னதால திட்டம் அம்பேல்.

    பதிலளிநீக்கு
  3. கலைஞனின்(ன் போட்டிருக்கேன்) மனம் கலைஞனுக்கு மட்டுமே தெரியும்.

    பதிலளிநீக்கு
  4. Detailed article about james cameron .
    http://www.newyorker.com/reporting/2009/10/26/091026fa_fact_goodyear

    பதிலளிநீக்கு
  5. ஐயா,
    குறிஞ்சி அழகாய் பூத்தாற்போல போல ஒரு பதிவா?
    என்ன வியப்பும்?தன்னடக்கமும்,இந்த 38 வரிகளே கொண்ட பதிவுக்கு அழகுக்கு அழகு சேர்க்கின்றன.நேரம் கிடைக்கையில் எழுதுங்கள்.வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை பார்த்துவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  6. இதை நான் எதிர்பார்கலை ஜி...
    ஆனால்.. அதனின் தாக்கம் உங்களுக்குள் எந்த அளவிற்க்கு படர்ந்திருக்கிறது என்பதை என்னுள் உணரமுடிகிறது!!

    கலைஞனுக்கு கலைஞன் செய்யும் மரியாதை... ஹட்ஸ் ஆப்!!

    பதிலளிநீக்கு
  7. :-)

    இப்படி ஒரு பதிவை எழுதனும்னு பார்க்கிறேன். முடிய மாட்டேங்குதுங்க சார்! :)

    ஃபேன்டஸி படங்களில் இருக்கும் உங்க ஈடுபாடு (அருந்ததி), கார்ட்டூன் படங்ளில் இல்ல்லாதது ரொம்ப ஆச்சரியமா இருக்கு!!!

    ----

    கார்த்த்திக்கேயன் : 38 வார்த்தைகள்.
    (நான் புல் ஸ்டாப் கூட வச்சிருந்திருக்க மாட்டேன். :-)))) )

    பதிலளிநீக்கு
  8. ராஜ நடராஜன் சொன்னது…
    கலைஞனின்(ன் போட்டிருக்கேன்) மனம் கலைஞனுக்கு மட்டுமே தெரியும்.//

    படத்தைப் பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி.மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. வினோத்கெளதம் சொன்னது…
    பார்க்கவேண்டும் சார்..

    சத்தியமாக,வினோத்!

    பதிலளிநீக்கு
  10. satchitanand சொன்னது…
    Detailed article about james cameron .
    http://www.newyorker.com/reporting/2009/10/26/091026fa_fact_goodyear//

    பெரிய இந்தக் கட்டுரையைப் பாதி வரைதான் படித்திருக்கிறேன்,சச்சிதான்ந்த்.

    ஆனால்,ஜேம்ஸ் கேமரான் என்ற மாபெரும் கலைஞனின் உட்புறத்தில் பயணம் செய்யும் வாய்ப்பை நீங்கள் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டீர்கள்.

    மிகுந்த மகிழ்ச்சி.அதனினும் மிகுதியான நன்றிகள் உங்களுக்கு.

    ஒரு மனிதனின் மனம் இத்தனை நிறங்களையும்,கனவுகளையும்,கற்பனைகளையும் கருக் கொண்டு அதனை உருக் கொள்ளவும் வைக்க முடியுமா என்ற பிரமிப்பைத் தரும் தேவ சாதனையைத் திரையில் நிகழ்த்தியிருக்கும் ஜேம்ஸ் கேமரனைப் பற்றிய விரிவான அறிவு சிலிர்க்க வைக்கிறது.

    அவரது கருநீலப் பிரபஞ்சத்தில் உண்மையாகவே பறந்த உணர்வு,சச்சிதானந்த்.

    YOU MAKE ME, ALSO AN AVTAR!

    பதிலளிநீக்கு
  11. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…
    ஐயா,
    குறிஞ்சி அழகாய் பூத்தாற்போல போல ஒரு பதிவா?
    என்ன வியப்பும்?தன்னடக்கமும்,இந்த 38 வரிகளே கொண்ட பதிவுக்கு அழகுக்கு அழகு சேர்க்கின்றன.நேரம் கிடைக்கையில் எழுதுங்கள்.வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை பார்த்துவிடுவேன்.//

    பார்த்து விட்டு உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,கார்த்தி.உற்சாகமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. கலையரசன் சொன்னது…
    இதை நான் எதிர்பார்கலை ஜி...
    ஆனால்.. அதனின் தாக்கம் உங்களுக்குள் எந்த அளவிற்க்கு படர்ந்திருக்கிறது என்பதை என்னுள் உணரமுடிகிறது!!

    கலைஞனுக்கு கலைஞன் செய்யும் மரியாதை... ஹட்ஸ் ஆப்!!

    அநேகமாக நான் பிற்ந்த அன்று இந்த உலகினை இப்படித்தான் வியக்க,வியக்கப் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்,கலை.
    ஜேம்ஸ் கேமரன் காட்டிய பண்டோரா கிரஹம் எனக்கு அப்ப்டித்தான் இருந்தது.

    பதிலளிநீக்கு
  13. ஹாலிவுட் பாலா சொன்னது…
    :-)

    இப்படி ஒரு பதிவை எழுதனும்னு பார்க்கிறேன். முடிய மாட்டேங்குதுங்க சார்! :)

    ஃபேன்டஸி படங்களில் இருக்கும் உங்க ஈடுபாடு (அருந்ததி), கார்ட்டூன் படங்ளில் இல்ல்லாதது ரொம்ப ஆச்சரியமா இருக்கு!!!//

    மேலே சச்சிதானந்த் குறிப்பிட்டிருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்,பாலா.

    //Cameron behaves as if he were the embattled protagonist of one of his own films—an ordinary Joe beaten on the anvil of extraordinary trials. “The words ‘No’ and ‘That’s impossible’ and phrases like ‘That can’t be done’—that’s the stuff that gives him an erection ” //


    எது நமக்குப் பிடிக்கிறது என்பது மட்டுமே நமக்குத் தெரியும்.
    அது ஏன் என்பது தெரிய,மனதுக்குள் பல கோடி மைல்கள் பயணம் செய்ய வேண்டியதிருக்கும்,பாலா.

    பதிலளிநீக்கு
  14. படம் கொஞ்சம் இழுவையாகத்தான் இருந்தது ஐயா

    பதிலளிநீக்கு
  15. கோவி.கண்ணன் சொன்னது…
    படம் கொஞ்சம் இழுவையாகத்தான் இருந்தது ஐயா//

    எனது பரவசம் எவ்வளவு உண்மையோ,உங்களது ஆயாசமும் அவ்வளவு உண்மை.
    ஒவ்வொரு விமர்சனமும் உண்மை,விமர்சிக்கும் மனிதர்கள் உண்மையாக இருப்பதால்.
    ஒவ்வொரு விமர்சனமும் பொய்,விமர்சிக்கும் மனிதர்கள் பொய்யாக இருப்பதால்.

    உங்கள் உணர்வைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்,கண்ணன்.

    பதிலளிநீக்கு
  16. நண்பர் ஹாலிவுட் பாலாவின் விமர்சனம் படித்ததும் படம் பார்க்கும் ஆவல் எழுந்தது. இப்போது உங்கள் பரவசமும் அந்த ஆவலை அதிகரிக்கிறது. பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  17. இதுதான் சினிமா..!

    மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சினிமா இதுதான்..!

    எனக்கும் உங்களுடைய பிரமிப்புதான்..! இன்றுவரையிலும் அடங்கவில்லை..!

    பதிலளிநீக்கு
  18. செ.சரவணக்குமார் சொன்னது…
    நண்பர் ஹாலிவுட் பாலாவின் விமர்சனம் படித்ததும் படம் பார்க்கும் ஆவல் எழுந்தது. இப்போது உங்கள் பரவசமும் அந்த ஆவலை அதிகரிக்கிறது. பகிர்வுக்கு நன்றி சார்.//

    மகிழ்ச்சி,சரவணக்குமார்.

    பதிலளிநீக்கு
  19. உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…
    இதுதான் சினிமா..!

    மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சினிமா இதுதான்..!

    எனக்கும் உங்களுடைய பிரமிப்புதான்..! இன்றுவரையிலும் அடங்கவில்லை..!//

    நீண்ட நாள் கழித்து உங்கள் குரலைக் கேட்டதில் மகிழ்ச்சி,சரவணன.

    பதிலளிநீக்கு
  20. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தப்படம் IMAX 3D யில் பார்ப்பதற்காக தியேட்டருக்கு செல்லவிருக்கிறேன்.

    நன்றி ஷண்முகப்பிரியன் சார்

    பதிலளிநீக்கு
  21. ப‌கிர்விற்கு ந‌ன்றி ஸார். ஒரு ப‌டை‌ப்பாளியாக‌ உங்க‌ளின் ப‌ர‌வ‌ச‌த்தை கொஞ்ச‌ம் விரிவாக‌ சொல்லியிருந்தால் நாங்க‌ளும் அதையெல்லாம் ப‌ட‌ம் பார்க்கும்போது அனுப‌விக்க‌ உத‌வியிருக்கும்.

    -Toto
    www.pixmonk.com

    பதிலளிநீக்கு
  22. வெறும் எழுத்துக்களால் ஒரு மாபெரும் பரவசத்தைத் தொட்டுக்காட்ட முடியுமா ,ஒரு பிரம்மாண்டத்தை ஸ்பரிசிக்கவைக்கமுடியுமா ,
    முடியும் அந்த அதிர்வை எங்களுள்ளும் பரவவிடமுடியும் என்று காட்டியது உங்கள் பதிவு

    உங்கள் உணர்வுப்பதிவு வலிந்த திகைப்பதிர்வை இன்னவென்று சொல்லமுடியாத ஒரு ஏகாந்தத் தளத்தில் உண்டாக்குகிறது

    உங்ளின் வார்த்தைகளின் வீரியவசீகரத்திற்கு நான் தலைவணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  23. உங்கள் பதிவை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் ..... கண்டிப்பா படம் பாத்திடுவேன் .....

    பதிலளிநீக்கு
  24. குடுகுடுப்பை சொன்னது…
    நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தப்படம் IMAX 3D யில் பார்ப்பதற்காக தியேட்டருக்கு செல்லவிருக்கிறேன்.

    நன்றி ஷண்முகப்பிரியன் சார்//

    மகிழ்ச்சி,குடுகுடுப்பை சார்.

    பதிலளிநீக்கு
  25. KS சொன்னது…
    வெறும் எழுத்துக்களால் ஒரு மாபெரும் பரவசத்தைத் தொட்டுக்காட்ட முடியுமா ,ஒரு பிரம்மாண்டத்தை ஸ்பரிசிக்கவைக்கமுடியுமா ,
    முடியும் அந்த அதிர்வை எங்களுள்ளும் பரவவிடமுடியும் என்று காட்டியது உங்கள் பதிவு

    உங்கள் உணர்வுப்பதிவு வலிந்த திகைப்பதிர்வை இன்னவென்று சொல்லமுடியாத ஒரு ஏகாந்தத் தளத்தில் உண்டாக்குகிறது

    உங்ளின் வார்த்தைகளின் வீரியவசீகரத்திற்கு நான் தலைவணங்குகிறேன்//

    ஏ.ஆர்.ரஹ்மான் சொல்வதைப் போலே எல்லாப் புகழும் ஜேம்ஸ் கேம்ரானுக்கே.

    நன்றி கே.எஸ்.

    பதிலளிநீக்கு
  26. Pixmonk சொன்னது…
    ப‌கிர்விற்கு ந‌ன்றி ஸார். ஒரு ப‌டை‌ப்பாளியாக‌ உங்க‌ளின் ப‌ர‌வ‌ச‌த்தை கொஞ்ச‌ம் விரிவாக‌ சொல்லியிருந்தால் நாங்க‌ளும் அதையெல்லாம் ப‌ட‌ம் பார்க்கும்போது அனுப‌விக்க‌ உத‌வியிருக்கும்.

    -Toto
    www.pixmonk.com//

    நான் கூடிய விரைவில் எழுதுகிறேன்,டோடோ.
    மகிழ்ச்சியும்,நன்றியும்.

    பதிலளிநீக்கு
  27. மகா சொன்னது…
    உங்கள் பதிவை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் ..... கண்டிப்பா படம் பாத்திடுவேன் .....//

    படம் பார்,தம்பி.அது நிச்சயம் உன்னைப் பரவசப் படுத்தும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. ரொம்ப நாளைக்கு அப்புறம் முதலில் துண்டு போட்டுக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்குது

    எனது பரவசம் எவ்வளவு உண்மையோ,உங்களது ஆயாசமும் அவ்வளவு உண்மை.
    ஒவ்வொரு விமர்சனமும் உண்மை,விமர்சிக்கும் மனிதர்கள் உண்மையாக இருப்பதால்.
    ஒவ்வொரு விமர்சனமும் பொய்,விமர்சிக்கும் மனிதர்கள் பொய்யாக இருப்பதால்.


    மிகவும் ரசித்தது,

    பதிலளிநீக்கு
  29. சேம் ப்ளட்...

    http://jeeno.blogspot.com/2009/12/v-t-r.html

    பதிலளிநீக்கு