வியாழன், ஏப்ரல் 09, 2009

கன்னிகா (ஐந்தாம் பாகம் )

6.
பத்து நிமிட இடைவேளைக்குப் பிறகு வகுளாபரணன் வர,நீதிமன்றம் கூடியது.அரவிந்தனின் வாக்குமூலத்தை இப்போது ஒரு புதிய உத்வேகத்துடன் படிக்கத் தொடங்கினான்,மதிவாணன்.முன்பு அவன் உணர்ச்சி வசப்பட்டு அழுத இடத்திலிருந்தே ஆரம்பித்தான்.
''எப்படி இவ்வளவு அழகாகாப் பேசுகிறாய் அரவிந்த்?' என்றாள் திவ்யா சிரித்து.
மீண்டும் பழைய நிலைக்கு வந்து சிரித்தேன்.

'வெரி சிம்பிள்,திவ்யா.உன்னை மாதிரி அழகான பெண்கள் அருகில் இருக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு அருள் வந்து விடும்.அப்புறம் உலகத்துக் கவிஞர்கள் எல்லோரும் எனக்குள் வந்து எனக்குப் பதிலாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள்.கம்பனில் இருந்து தொடங்கித் தாகூர்,பாரதி,வாலி,வைரமுத்து என்று லிஸ்ட் போய்க் கொண்டே இருக்கும் ..அவ்வளவு ஏன், ஆறு மாதத்துக்கு முன்னால் முதல் கவிதைப் புத்தகம் வெளியிட்ட மதிவாணன்--என்ற இளங்கவிஞன் கூடத் தனது அற்புத வரிகளால் எனக்காக உன்னிடம் பேசுவான்.' என்றேன் நான்.

திவ்யா மௌனமாக என்னையே பார்த்தாள்.

இரவில் ஹோட்டல் தோட்டத்தில் எங்கோ பூத்த நைட்குயின் பூக்களின் வாசமும், தூரத்தில் அப்போதுதான் கேட்க ஆரம்பித்த என்யாவின் 'நட்சத்திரங்களால் வானத்தைப் பெயிண்ட் பண்ணு' என்ற அழகிய பாட்டும்,எதிரில் சத்தமில்லாமல் பொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிங்க் நீரூற்றைப் போன்ற திவ்யாவின் அழகும்,பேச்சினை அறவே ரத்து செய்திருந்தன.

இருவரும் ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்.

மௌனம் ஒரு இடையறாத பாஷை என்று ரமண மகரிஷி இதைத்தான் சொன்னாரோ?
'சாப்பிடப் போகலாமா ?' என்றாள் திவ்யா,அநேகமாக இந்த மௌனத்தின் கனம் தாங்காமல்.
'சாப்பாடு என்ற சொல்லே கேவலமாக இருக்கிற நிமிடங்கள் இது ' என்றேன் நான்.உண்மையில் உணர்ந்து.
அவள் சிரித்தாள், ரசித்து
பிறகு அவள் நடக்க ஆரம்பிக்க,நானும் அவளுடன் நடந்தேன்.

'நான் சாப்பிட என்று சொன்னது உனது வழக்கமான பீரை!' என்றாள் திவ்யா சிரித்தபடி.
'இன்று எனக்கு அது தேவைப் படவில்லை.' என்றேன் நான்.
'நான் இன்று மாலை வேளையில் உன்னைச் சந்திக்க வந்ததே அதற்காகத்தான்.உண்மையில் நான் இன்று முழுக்க எனது அறையில்தான் இருந்தேன் ' என்றாள் திவ்யா.

சட்டென நான் அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

'ஏன் பெரும்பாலான பெண்களுக்கு ஆண்கள் குடிப்பது பிடிக்க மாட்டேன் என்கிறது?' என்று எனது பலநாட்களுக்கான அடிப்படைக் கேள்வியைக் கேட்டேன்.
இந்த முறை அவள் என்னை ஆழமாகப் பார்த்தாள்.

'பெண் தனது பிடித்தமான ஆணுடன் இருக்கும் போது, தான் மட்டுமே போதையாக இருக்க விரும்புகிறாள்.அதனால்தான். ஒரே நேரத்தில் இரண்டு போதைகளை அவள் அனுமதிப்பதில்லை.' என்றாள் திவ்யா.
'பெண்களைப் பற்றிச் சரியாகச் சொன்னாய்.ஆனால் மதுவைப் பற்றி சொன்னது தப்பு' என்றேன் நான்.
'எப்படி?' என்று கேட்டாள் அவள்.
'மதுவைக் கண்டு பிடித்தது குடிகாரர்கள் இல்லை என்பது உனக்குத் தெரியுமா?'என்றேன் நான்.
அப்போதுதான் அவள் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
'பிறகு?. என்றாள்.

'வலி நிவாரணிகளைக் கண்டு பிடித்தவர்கள் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது கண்டு பிடிக்க வில்லை.அது முடியவும் முடியாது. வலியிலிருந்து விலகி நின்று பார்த்தால்தான் வலியைக் குணப் படுத்தும் வழி தெரியும்.இது போல மன நிவாரணியான மதுவைக் கண்டு பிடித்தவர்களும் மனதிலிருந்து விலகி நின்று பார்த்த ரிஷிகளே.வேதங்களில் மிகப் பரவலாகச் சொல்லப் படும் சோமபானத்தைப் பற்றி நீ கேள்விப் பட்டதில்லையா?' என்றேன் நான்.

'இது முழுக்க முழுக்க நான் கேள்விப் படாத கோணம்.சரி மதுவைப் பற்றி மேலும் சொல் அரவிந்த் ' என்றாள் திவ்யா சிரத்தையுடன்.
'அது பெரிய விவாதமாகப் போய் விடும். சுருக்கமாகச் சொன்னால்,மது அருந்துவது என்பது மனதிற்குள்ளே மேலும் விழுவதற்கல்ல,மனதிலிருந்து வெளியேறுவதற்கே. தப்பாக உபயோகித்தால், தாய்ப் பாலும் விஷமே' என்றேன் நான்.
அவள் முகம் மாறியது.
'பரவாயில்லை திவ்யா, ஒரே மனநிலையைத் தியானம் என்றும் சொல்லாம்,தியானத்தையே தூக்கம் என்றும் சொல்லலாம்,தூக்கத்தையே போதை என்றும் சொல்லலாம்,போதையை மயக்கம் என்றும் சொல்லலாம்.இது நுகர்வோர் சந்தைதானே!' என்றேன் நான் சீரியஸாக.

'சாரி அரவிந்த்! கோபமா?' என்றாள் திவ்யா,சற்று நேரம் கழித்து.
நான் சிரித்தேன்.
'பார்த்தாயா?குடிக்காமல் இருக்கும் போதே குடிகாரர்களுக்கே கற்பிக்கப் படும் கோபத்தை என் மேலும் சுமத்தி விட்டாய்!' என்றேன் நான்.

இருவருமே சிரித்தபடியே ரெஸ்டாரண்ட்டுக்குள் நுழைந்தோம்.அன்று நானும் அவளைப் போலவே வெறும் பச்சைக் காய்கறிகளையே சாப்பிட்டேன்.அவளது அறை வரைக்கும் சென்று அவளை வழி அனுப்பிவிட்டு வந்த போதும் தனது அறைக்குள் என்னை அழைக்கவில்லை திவ்யா.
வந்து எனது அறைக் கட்டிலில் விழுந்த போதுதான் காதலின் வேதனையை உணர்ந்தேன்.எனது உடம்புக்குள் இருக்கும் அனைத்தையும் துப்புரவாக அகற்றி விட்டு திவ்யாவின் நினைவுகளை மட்டும் யாரோ உள்ளே நிரப்பி இருந்தார்கள்.
காதல் என்பது 90% வலி. பிறகு அந்த வலி தரும் சுகம் மீதி 10% என்று கணக்குப் போட்டது மனம்.

அடுத்த நாளில் இருந்து இருவரும் பெங்களூரை அப்படிச் சுற்றினோம்.

விதான் சௌதாவின் வனப்பு,லால்பாக்,கப்பன்பாக்கின் குளுமை,எம்.ஜி.ரோட்டின் நுகர்வோர் கவர்ச்சி,பிரிகேட் ரோட்டில் இருந்த சிற்றுண்டிச் சாலைகளின் பலதரப் பட்ட சுவை.மஹாராஜாவின் கோடை அரண்மனையின் கம்பீரம்.

'500 வருடங்களுக்கு முன்னே இந்தப் பெங்களூருவை நிர்மாணித்த கெம்ப கௌடா ஒரு மிகப் பெரிய தீர்க்க தரிசியாக இருந்திருக்க வேண்டும் திவ்யா.'

'எப்படிச் சொல்கிறாய் அரவிந்த்?'
'நாம் இரண்டு பேரும் இங்கே வரப் போகிறோம் என்று அப்போதே அவருக்குத் தெரிந்திருக்கிறது.நாம் வருவோம் என்பதற்காக எவ்வளவு அழகாக இந்தக் கார்டன் சிட்டியை உருவாக்கி வைத்து விட்டுப் போயிருக்கிறார் பார்த்தாயா !' என்றேன் நான்.
அவள் எனது இடுப்பைச் செல்லமாகத் தட்டி விட்டுச் சிரித்தாள்.இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு கொண்டாட்டமாகப் போயிற்று.

ஒருநாள் மாலை எனது அறைக்கு வந்த திவ்யா 'இன்று நாம் எங்கும் வெளியே செல்லப் போவதில்லை ' என்றாள்.
'ஏன்?'
'எனது ஐ.டி.ரிடர்னை சமர்ப்பிக்க வேண்டும்' என்றாள் அவள்.
'அது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா என்ன ?'
'உலகத்திலேயே போரடிக்கும் வேலை இந்தக் கவர்ன்மெண்ட் ஃபார்ம்ளைப் பூர்த்தி செய்வதுதான்' என்றாள் திவ்யா எனது படுக்கையில் அமர்ந்தபடியே.
'எனக்காக ஒரு உதவி செய்வாயா,அரவிந்த்?'
'சொல்'
'எனது ஐ.டி.பேப்பர்களை நீ ஃபில் அப் செய்து தருகிறாயா?' என்று கேட்டாள் அவள்.
'நிச்சயமாக திவ்யா' என்றவன் அவளது ஃபைலை வாங்கிப் பார்த்தேன்.
பிறகு பொறுமையாக அந்த விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்த போதுதான் அவளது ஆறு இலக்க வருமானம் எனக்குப் புரிந்தது.தனது வருமான வரிக் கணக்குகளை ஏன் என்னிடம் காட்டினாள் என்ற காரணமும் எனக்குப் புரிந்தது.

அவள் எனது படுக்கையில் கண்களை மூடி ஏதோ யோசனையில் படுத்திருந்தாள். மெல்ல அவளது அருகில் சென்று நின்றேன்.

'திவ்யா'
கண் திறந்து பார்த்தாள்.
'உண்மையைச் சொல்,உனது வருமானத்தைப் பற்றிய முழுவிபரங்களையும் எதற்கு என்னிடம் பகிர்ந்து கொண்டாய்? எனது வருமானம் என்ன என்பதை நானும் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தானே?' என்றேன் நான் சீரியஸாக.
அவள் சிரித்தாள்.
'கண்டு பிடித்துவிட்டாயா?'
'உன்னை விட நான் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் குறைவாக வருமான வரி கட்டுகிறேன்!' என்றேன் நான்.
'சோ,உனது ஆண்டு வருமானம் இதுதானே' என்று நானே அசந்து போகுமளவுக்குத் துல்லியமாக எனது வருவாயைக் கணக்கிட்டுச் சொன்னாள் திவ்யா.
நான் வியந்து போய் அவளைப் பார்த்தேன்.
'நாங்கள் சிந்திகள்,பணத்தை வழிபடுபவர்கள்.ஏன் என்றால் அது ஒன்றுதான் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாங்கள் வைத்திருக்கும் ஒரே ஆயுதம்.' என்றாள்,திவ்யா சிரத்தையுடன்.
'நீ போய் உன் வேலயைப் பார். நான் இப்போது வந்து விடுகிறேன்' என்று சொல்லி விட்டு வெளியே போனாள் திவ்யா.
அவள் மீண்டும் வருவதற்குள் நான் அவளது படிவங்களை நிறைவு செய்திருந்தேன்.ஃபைலை அவளிடம் திருப்பிக் கொடுத்தபோது நான் கேட்டேன்.
'என் வருமானம் குறைவென்றதால் நாம் பழகுவதில் ஒன்றும் தடை இல்லையே திவ்யா?'என்று அவளை உண்மையான ஆதங்கத்துடன் கேட்டேன்.
அவள் என்னை மெல்லிய புன்முறுவலுடன் பார்த்தாள்.
'இல்லை என்று சொல்லி விட்டாள் எனது அம்மா!'என்றாள் அவள்.

'அம்மாவிடம் ஃபோன் பேசி விட்டுத்தான் வருகிறேன்.'

'அம்மாவிடமா?' என்றேன் வியந்து.

'ஆம். என் அம்மாவிடம் நான் எதையுமே மறைப்பதில்லை.,நாம் இருவரும் பழகுவது உட்பட.
நான் அவளையே கவலையுடன் பார்த்தேன்.
'கவலைப் படாதே.உன் வருமானத்துக்கு ஓ.கே சொல்லி விட்டாள்.!' என்றாள் அவள்.
ஒருகணம் யோசித்து விட்டுக் கேட்டேன்.
'எனது வருமானம் குறைவென்று உன் தாயார்,ஒருவேளை நாம் பழக வேண்டாம் என்று சொல்லி இருந்தால்?'
'உனது வருமானத்தைப் பெருக்கும் வழி எனக்குத் தெரியும்! ஏனென்றால் நீ படுபுத்திசாலி!' என்றாள் திவ்யா தீர்க்கமாக.
அடுத்தநாள் சாப்பிடும் போது நான் அவளைக் கேட்டேன்.

'நீ டிசைன் செய்த கட்டிடங்களிலேயே உனக்கு மிகவும் பிடித்த கட்டிடம் எது திவ்யா?'
அவள் என்னை ஒருகணம் மௌனமாகப் பார்த்து விட்டுச் சொன்னள்.'அந்த பில்டிங் பெங்களூரில்தான் இருக்கிறது, அரவிந்த்.நாளை உன்னை நான் அங்கு கூட்டிச் செல்கிறேன்'
அடுத்த நாள் மாலையே நாங்கள் அங்கு சென்றோம்.
நகரத்தை விட்டு வெகு தூரம் தள்ளி வந்தபின் பிரதான சாலையிலிருந்து இடது புறம் திரும்பச் சொன்னாள் அவள்.சிறிய தார் ரோட்டில் கொஞ்ச தூரம் சென்றதும் அந்தக் கட்டிடம் வந்தது.அதன் பெயரைப் பார்த்ததும் நான் திகைத்துப் போனேன்.
'பாபா புற்று நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மையம்' என்று ஆங்கிலத்தில் பித்தளை எழுத்துக்கள் மின்னின.
'கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்டா?'
'ஆம். வாழும் நாட்களே குறைவாக இருக்கிறவர்களுக்குத்தானே,வாழ்க்கையின் முழு அழகுகளையும் நாம் வழங்க வேண்டும்! நான் டிசைன் செய்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த கட்டிடம் இதுதான்' என்ற திவ்யா 'நீ பார்த்து விட்டுச் சொல்' என்றாள்.
அந்தக் கட்டிடம் அவளைப் போலவே அமைதியாக என்னைப் பார்த்திருந்தது.
(வாழ்க்கை தொடர்கிறது)

40 கருத்துகள்:

 1. //'பெண் தனது பிடித்தமான ஆணுடன் இருக்கும் போது, தான் மட்டுமே போதையாக இருக்க விரும்புகிறாள்.அதனால்தான். ஒரே நேரத்தில் இரண்டு போதைகளை அவள் அனுமதிப்பதில்லை.' //

  அருமை சார்..

  பதிலளிநீக்கு
 2. கதை சீரியசாக போகிறது போல, காதல் ஒரு சுகமான சுமை தான்....

  பதிலளிநீக்கு
 3. கதை சீரியசாக போகிறது போல, காதல் ஒரு சுகமான சுமை தான்....

  பதிலளிநீக்கு
 4. Cable Sankar கூறியது...
  //'பெண் தனது பிடித்தமான ஆணுடன் இருக்கும் போது, தான் மட்டுமே போதையாக இருக்க விரும்புகிறாள்.அதனால்தான். ஒரே நேரத்தில் இரண்டு போதைகளை அவள் அனுமதிப்பதில்லை.' //

  அருமை சார்..//

  நன்றி ஷங்கர்.

  பதிலளிநீக்கு
 5. அது ஒரு கனாக் காலம் கூறியது...
  கதை சீரியசாக போகிறது போல, காதல் ஒரு சுகமான சுமை தான்....//

  வருகைக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 6. //'பெண் தனது பிடித்தமான ஆணுடன் இருக்கும் போது, தான் மட்டுமே போதையாக இருக்க விரும்புகிறாள்.அதனால்தான். ஒரே நேரத்தில் இரண்டு போதைகளை அவள் அனுமதிப்பதில்லை.' //

  enpathai vida

  //'பெண் தனது பிடித்தமான ஆணுடன் இருக்கும் போது, தன் மேல் ulla போதை மட்டுமே இருக்க விரும்புகிறாள்.அதனால்தான். ஒரே நேரத்தில் இரண்டு போதைகளை அவள் அனுமதிப்பதில்லை.' //

  nanraaka irukkum enru thonrukirathu

  பதிலளிநீக்கு
 7. போதையில் இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் இந்த டாஸ்மாக் கடை மீதான போதை கூடிக் கொண்டே போகிறதென்பதால், இந்தக் கடையின் சரக்குகளின் கிக்கை குறைக்கும்வண்ணம் நமீதா போன்ற சைட் டிஷ்களை தயவு செய்து இனாமாகத் தரவும்.

  பதிலளிநீக்கு
 8. தொழிலதிபர்களாக உள்ளனராம்,ஆனால் நிறைய பேர் திருமணம் செய்துகொள்ளாமலே இருந்து விடுவாராம்,மற்ற இன மக்கள் போல சம்பாதித்த பணத்தை தன் ஊருக்கு அனுப்பாமல் தான் உள்ள ஊரிலேயே செலவிடுவராம்,இவர்கள் இனமும் அழிந்து வரும் பட்டியலில் சேர்ந்து விட்டது என்றான், இங்கு துபாயில் சிந்தி கம்யூனிட்டி ஹால் ஒன்று உள்ளது,ஒவ்வொரு வெள்ளி கிழமையும் இஸ்கான்,தேவி அமிர்தானந்தமயீ மற்றும் பல இயக்கங்கள்,தங்கள்,பக்தி சொற்பொழிவுகளையும்,பூஜை,பஜன்களை,நடத்த மிக குறைந்த வாடகையில் ஹாலை,கொடுக்கிறார்கள், http://indus.usask.ca/~jamali/sindh/sindh-l/archive/her/msg01016.html

  பதிலளிநீக்கு
 9. //மது அருந்துவது என்பது மனதிற்குள்ளே மேலும் விழுவதற்கல்ல,மனதிலிருந்து வெளியேறுவதற்கே.//

  யோசிச்சு பார்த்த கரெக்ட் தான் சார்..

  பதிலளிநீக்கு
 10. //தியானத்தையே தூக்கம் என்றும் சொல்லலாம்,தூக்கத்தையே போதை என்றும் சொல்லலாம்,//

  தியானம், போதை..
  பல பேருக்கு ஒரு தற்காலிக வலி நிவாரணி..

  பதிலளிநீக்கு
 11. //'பெண் தனது பிடித்தமான ஆணுடன் இருக்கும் போது, தன் மேல் ulla போதை மட்டுமே இருக்க விரும்புகிறாள்.அதனால்தான். ஒரே நேரத்தில் இரண்டு போதைகளை அவள் அனுமதிப்பதில்லை.' //

  nanraaka irukkum enru thonrukirathu//
  நீங்கள் சொல்வதில் நானும் உடன்படுகிறேன்.நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 12. உண்மைத் தமிழன்(15270788164745573644
  இந்தக் கடையின் சரக்குகளின் கிக்கை குறைக்கும்வண்ணம் நமீதா போன்ற சைட் டிஷ்களை தயவு செய்து இனாமாகத் தரவும்.//

  இன்னொரு தடவை படித்துப் பாருங்கள்,சரவணன்.வீணாகச் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

  பதிலளிநீக்கு
 13. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது
  தொழிலதிபர்களாக உள்ளனராம்,ஆனால் நிறைய பேர் திருமணம் செய்துகொள்ளாமலே இருந்து விடுவாராம்,//

  நானும் நெட்டில் போய் அவர்களது விபரங்களைப் பார்த்துதான் எழுதினேன்.நாவல்களில் கதாபாத்திரங்களின் குண்சித்திரங்களுக்கு வலிவூட்டவே பின்புலங்களே ஒழியப் பின்புலங்களைப் பற்றி ஆராய்ச்சியில் இறங்கிக் கொண்டிருந்தால் கதை சுவையாக இருப்பது கடினம்.
  எனக்குத் திவ்யாவின் கனவுகளும் உணர்வுகளுமே முக்கியம்.நன்றி கார்த்திகேயன்.

  பதிலளிநீக்கு
 14. vinoth gowtham கூறியது...
  //மது அருந்துவது என்பது மனதிற்குள்ளே மேலும் விழுவதற்கல்ல,மனதிலிருந்து வெளியேறுவதற்கே.//

  யோசிச்சு பார்த்த கரெக்ட் தான் சார்..//

  தயவு செய்து இதை உண்மைத் தமிழனிடம் சொல்லுங்கள் வினோத்!

  பதிலளிநீக்கு
 15. vinoth gowtham கூறியது... தியானம், போதை..
  பல பேருக்கு ஒரு தற்காலிக வலி நிவாரணி..//

  எந்த ஒரு தற்காலிகத்துக்கும் தான் நிவாரணமே தரமுடியும்.நிரந்தரங்களுக்கு நிவாரணமே கிடையாது வினோத்.
  போதை நாம் ஏற்படுத்திக் கொள்வது.தியானம் தன்னில் தானாகவே நிகழ்வது.

  பதிலளிநீக்கு
 16. //
  ஒரே மனநிலையைத் தியானம் என்றும் சொல்லாம்,தியானத்தையே தூக்கம் என்றும் சொல்லலாம்,தூக்கத்தையே போதை என்றும் சொல்லலாம்,போதையை மயக்கம் என்றும் சொல்லலாம்.இது நுகர்வோர் சந்தைதானே!'
  //

  சொல்லலாம், ஆனால் அவை தரும் விளைவுகள் வேறானவை என்பது எனது கருத்து.

  //
  வாழும் நாட்களே குறைவாக இருக்கிறவர்களுக்குத்தானே,வாழ்க்கையின் முழு அழகுகளையும் நாம் வழங்க வேண்டும்!
  //
  உண்மை தான்

  பதிலளிநீக்கு
 17. வலசு - வேலணை சொன்னது…
  //
  ஒரே மனநிலையைத் தியானம் என்றும் சொல்லாம்,தியானத்தையே தூக்கம் என்றும் சொல்லலாம்,தூக்கத்தையே போதை என்றும் சொல்லலாம்,போதையை மயக்கம் என்றும் சொல்லலாம்.இது நுகர்வோர் சந்தைதானே!'
  //

  சொல்லலாம், ஆனால் அவை தரும் விளைவுகள் வேறானவை என்பது எனது கருத்து.//

  மிகச் சரியே.அதைத்தான் 'இது நுகர்வோர் ச்ந்தை' என்கிறான் அரவிந்தன்.
  நுகர்வோருக்குத் தகுந்தபடியே பொருட்களின்,கருத்துக்களின் நிலைமாறுகிறது.

  பதிலளிநீக்கு
 18. வலசு - வேலணை கூறியது... வாழும் நாட்களே குறைவாக இருக்கிறவர்களுக்குத்தானே,வாழ்க்கையின் முழு அழகுகளையும் நாம் வழங்க வேண்டும்!
  //
  உண்மை தான்//

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வலசு - வேலணை.

  பதிலளிநீக்கு
 19. அன்புள்ள ஐயா,கன்னிகா 5ஆம் பாகம் படித்தேன்,நல்ல விறு விறு,காதல் கதையை இளமை துள்ளளுடனும்,பல அருமையான,கதா பாத்திரங்களுடனும் படைத்தமைக்கு பாராட்டுக்கள் பல,ஆறாம் பாகத்திற்க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்,இந்த கதை முடிந்தவுடன் நல்ல பதிப்பகத்தாரை அணுகி நூல் வடிவில் வெளியிடுங்கள்,காலையில் நான் இட்ட கருத்துக்கள் ஏதோ கோளாறு காரணமாக முழுமையாக பதிய வில்லை,இந்த கதை ஸ்டெல்லா ப்ரூசின் அது ஒரு கனாக்காலம் நாவல் போன்று எப்போதும் நினைவு கூர்ந்து பேசப்படும்,நல்ல எழுத்து நடை,பின் நவீனத்துவ பாணி,அற்புதமான ஒரு படைப்பு,பாத்திரங்கள் அவ்வளவு அழகு,பாந்தம்,அரவிந்தன்,திவ்யாஅந்த இளம் கவினர் மதிவானனுக்கு என்னஒரு பெருமையை அளித்து விட்டீர்கள்?,நீதிபதி வகுளாபரணன் நல்ல பெயர் தேர்வு,நீங்கள் இனி எழுதப்போகும் வார்த்தை ஜாலத்திற்க்கும்,அழகிய உவமைகளுக்கும்,காத்திருத்தல் ஒரு பொருட்டல்ல,நன்றாக அனுபவித்து எழுதுகிறீர்கள்,எழுதுங்கள்.ரமணர் சொன்ன "மௌனம் ஒரு இடையராத பாஷை''சூப்பர்..போதை குறித்த பெண்களின் நிலைபாடும் ஜோர்.நீங்கள் நிறைய ஆராய்சி செய்து எழுதுவதும்,நல்ல தேடுதலில் இருப்பதும் புலப்படுகிறது.முடிவோ,அடுத்த காட்சியோ எங்களால் யூகிக்கவே முடியவில்லை,அங்கு தான் நீங்கள் நிற்க்கிறீர்கள்.தொடரட்டும் இனிதே... என்றும் அன்புடன் கார்த்திக்கேயன்

  பதிலளிநீக்கு
 20. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…
  அன்புள்ள ஐயா,கன்னிகா 5ஆம் பாகம் படித்தேன்,நல்ல விறு விறு,காதல் கதையை இளமை துள்ளளுடனும்,பல அருமையான,கதா பாத்திரங்களுடனும் படைத்தமைக்கு பாராட்டுக்கள் பல,ஆறாம் பாகத்திற்க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்,

  உங்களை மாதிரியான தேர்ந்த ரசனையாளர்களே படைப்பவனின் மறுபக்கம்.ஒரு பாடலை ம்னம் உருகிக் கேட்டு லயிக்கும் போது பாட்ல்,பாடியவன், கேட்பவன் மூவருமே ஒன்றாதல் போல.
  நல்ல ரசனை ஒரு குட்டி இறைநிலை.
  உங்கள் ஊக்கத்திற்கு நன்றி கார்த்திகேயன்.

  பதிலளிநீக்கு
 21. Sir, I am at Bangalore now.. நகர முடியவில்லை.

  ""மௌனம் ஒரு இடையறாத பாஷை ""

  அருமை சார்.

  பதிலளிநீக்கு
 22. வண்ணத்துபூச்சியார் சொன்னது…
  Sir, I am at Bangalore now.. நகர முடியவில்லை.

  ""மௌனம் ஒரு இடையறாத பாஷை ""

  அருமை சார்.//

  நன்றி சூர்யா.கதையில் வரும் அரவிந்தனைப் போலவே நீங்களும் பெங்களூரைக் கொண்டாடி விட்டு வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 23. Shanmugapriyan sir, you works are simply marvellous. Even though I'm reading your blog for quite sometime, I believe this is my first comment.

  பதிலளிநீக்கு
 24. Thiyagarajan சொன்னது…
  Shanmugapriyan sir, you works are simply marvellous. Even though I'm reading your blog for quite sometime, I believe this is my first comment.//

  Thank you,Thiyagarajan.
  Nice to have appreciations from youngsters like you.

  பதிலளிநீக்கு
 25. ஆ.ஞானசேகரன் சொன்னது…
  கதை நன்றாக போகின்றது//

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆ.ஞானசேகரன்.

  பதிலளிநீக்கு
 26. கன்னிகா நினைப்பிலேயே இருந்தேன்,திடீர்னு திவ்யா ரொம்ப ரவுசு பண்றாங்க.

  சிந்திக்கு மட்டும் இல்லை சார் எல்லோருக்கும் பணம் ரொம்ப முக்கியம் சார் இழந்து பாத்தாதான் அதோட அருமை தெரியுது.

  பதிலளிநீக்கு
 27. குடுகுடுப்பை சொன்னது…
  கன்னிகா நினைப்பிலேயே இருந்தேன்,திடீர்னு திவ்யா ரொம்ப ரவுசு பண்றாங்க.

  சிந்திக்கு மட்டும் இல்லை சார் எல்லோருக்கும் பணம் ரொம்ப முக்கியம் சார் இழந்து பாத்தாதான் அதோட அருமை தெரியுது.

  உங்கள் ரசனைக்கு எனது நன்றிகளும்,வாழ்த்துகளும் குடுகுடுப்பை சார்.

  பதிலளிநீக்கு
 28. சுட்டி குரங்கு கூறியது...
  Wow , Super Sir !!
  when will be the next part ! can;t wait !!//

  Thank you for your visit and appreciation,sir.

  பதிலளிநீக்கு
 29. சற்றே புத்திசாலித்தனத்துடன் கூடிய படங்களுக்குரிய திரைக்கதை மற்றும் பாத்திர அமைப்பு, அதில் இலக்கிய அழகுணர்ச்சிகளுடன் கூடிய வருணனை, உரையாடல் மற்றும் இவற்றை சாதாரண ரசிகர்களும் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் ஏணிப்படிகளைப் போன்ற காட்சி நிகழ்வுகள் என எல்லாவற்றையும் கலந்து ஒரு அமைதியான ஆற்றைப் போல சென்று கொண்டிருக்கிறது உங்கள் தொடர்கதை!

  வாழ்த்துகள் மற்றும் நன்றி!

  பதிலளிநீக்கு
 30. சாணக்கியன் சொன்னது…
  ஒரு அமைதியான ஆற்றைப் போல சென்று கொண்டிருக்கிறது உங்கள் தொடர்கதை!//
  உங்கள் ஊக்கம் தரும் பாரட்டுக்களுக்கும்,தேர்ந்த ரசனைக்கும் நன்றிகள்,சாணக்கியன்.
  எனது மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 31. முதல் நான்கு பாகங்களில் இருந்த வேகம் கொஞ்சம் குறைந்தது போல் தோன்றுகிறது..

  இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான்..

  பதிலளிநீக்கு
 32. பட்டிக்காட்டான்.. சொன்னது…
  முதல் நான்கு பாகங்களில் இருந்த வேகம் கொஞ்சம் குறைந்தது போல் தோன்றுகிறது..

  இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான்..//

  Sorry, my tamil fonts are not working.
  You have every right to express your own opinion,friend.It is only enriching my insights on my creativity. Thank you very much for your visit and respected comment..

  பதிலளிநீக்கு
 33. கருத்துரிமையை கொடுத்ததற்கு நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 34. பட்டிக்காட்டான்.. சொன்னது…
  கருத்துரிமையை கொடுத்ததற்கு நன்றி நண்பரே//

  HOW CAN I GIVE YOU SOMETHING,WHICH YOU ALREADY HAVE,MY FRIEND!

  பதிலளிநீக்கு
 35. அருமையாக செல்கிறது கதை

  //'பெண் தனது பிடித்தமான ஆணுடன் இருக்கும் போது, தான் மட்டுமே போதையாக இருக்க விரும்புகிறாள்.அதனால்தான். ஒரே நேரத்தில் இரண்டு போதைகளை அவள் அனுமதிப்பதில்லை.' //

  :)))

  பதிலளிநீக்கு
 36. Thank you Mangalore Siva for your encouraging remarkas.I could not copy and paste your comment as usual.Something wrong with my system.
  HOWEVER SO NICE OF YOU TO VISIT MY BLOG.

  பதிலளிநீக்கு
 37. மிக மிக ரசனையான வர்ணனைகள்... கதாநாயகனின் ரசனைகள்... மிக அழகான ரசனையான கதை ஆர்க்கிடெக்ட் சார் நீங்கள்... வரிவரியாய் ரசித்துப்படித்துக்கொண்டே இருக்கிறேன்.. :)))

  பதிலளிநீக்கு
 38. நவீன் ப்ரகாஷ் சொன்னது…

  மிக மிக ரசனையான வர்ணனைகள்... கதாநாயகனின் ரசனைகள்... மிக அழகான ரசனையான கதை ஆர்க்கிடெக்ட் சார் நீங்கள்... வரிவரியாய் ரசித்துப்படித்துக்கொண்டே இருக்கிறேன்.. :)))

  நன்றி,நவீன் ப்ரகாஷ்.இன்றுதான் உங்கள் பதிவுகளைத் தொட்டிருக்கிறேன்.படித்து விட்டுச் சொல்கிறேன்.தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு