செவ்வாய், ஏப்ரல் 28, 2009

பறக்கத் தொடங்கிய பட்டாம்பூச்சி!

இந்தக் கூட்டுப் புழுவினைப் பட்டாம்பூச்சியாக்கிப் பறக்க விட்ட ஆ.ஞானசேகரனுக்கு எனது முதல் நன்றி.

நானும் மூன்று பட்டாம் பூச்சிகளைப் பறக்கவிடவேண்டும் என்று வேறு ஒரு விளையாட்டு!

தேர்தல் என்றாலே அலர்ஜி ஆக நினைக்கும் இந்தச் சூழ்நிலையில் நான் நடத்தும் ஒரு குட்டித் தேர்தல்!

எனது பதிவு நண்பர்கள் பெரும்பாலோர் ஏற்கனவே பட்டாம் பூச்சிகளாகிப் பறந்து முடித்து மலர்களில் செட்டில் ஆகி விட்ட படியால் எனக்கு மிகவும் குறுகிய வட்டமே கிடைத்திருக்கிறது.

அதிசயமாகச் சில பேரே மிஞ்சிக் கிடைத்திருக்கிறார்கள்.

அதில் எனது பதிவுலக முதல் நண்பர் "உண்மைத் தமிழன் " என்ற சரவணன் அவர்களைப் பட்டாம்பூச்சியாக்கிப் பறக்க விடுகிறேன்.

பருந்து போல வானளாவிப் பறக்கும் அவரைப் பட்டாம்பூச்சியாக்கி மலர்கள் நடுவில் பறக்க விடுவதில் பயம்தான். இனி எத்தனை மலர்கள் அவரது விமர்சனத்துக்கு ஆளாகிக் கசங்குமோ தெரியவில்லை.

அடுத்து நான் தேர்ந்தெடுப்பது திரு.கார்த்திகேயன் அவர்களை.(geethappriyan.blogspot.com) துபாய் நாட்டில் கணினி வரைவாளராகப் பணி புரியும் கார்த்திகேயன் சமூகப் பொறுப்போடு எழுதுபவர்.அவரது 'ஏழாம் உலகம்' புத்தகவிமர்சனத்தின் நடையைக் கண்டு நான் மிரண்டு போனேன்.
அந்த இளம் படைப்பாளி மேலும் மேலும் வளர எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

அடுத்து எனது இனிய நண்பர் "குடுகுடுப்பையார்" .இவரது சரளமான நகைச்சுவையும், யதார்த்தமான எழுத்தும் எனது மனம் கவர்ந்த படைப்புக்கள்.

மூன்று நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

1.இந்த பட்டாம்பூச்சியின் நிரலியை உங்கள் பக்கத்தில் ஒட்டி விடவும்.
2.உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்.
3.மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களுக்கு இந்த பட்டாம்பூச்சியை கொடுத்து அவர்களின் இணைப்பையும் உங்கள் தளத்தில் கொடுக்க வேண்டும்.
4.நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்.


இன்னும் என்னைத் தொடர்ந்து ரசிக்கும் இனிய நண்பர்கள்
குப்பைத்தொட்டி"
CableSankar
hi....
Vijay's space of thoughts
அக்கரைச்சீமை (HE IS IN INTERVEL.SO I DID NOT WANT TO DISTURB HIM)
அது ஒரு கனாக் காலம்
அறிவே தெய்வம்
இத‌ய‌ப்பூக்க‌ள்
உரத்த சிந்தனை
என் கனவில் தென்பட்டது
ஒண்ணுமில்லை.....ச்சும்மா
கணேஷின் பக்கங்கள்!
கிரி Blog
கிஷோர்
சும்மா
சொல்வதெல்லாம் உண்மை
ஜோதிடம் பற்றிய திரட்டு
நீரோடை
பட்டிக்காட்டான்..
பார்வையில்
பிச்சைப்பாத்திரம்
லோயர் கருத்துகள்

வடிகால்
வண்ணத்துபூச்சியார்

வானவில் எண்ணங்கள்
வினோத்கெளதம்

இவர்களையும் பட்டாம் பூச்சிகள் ஆக்க வேண்டும் என்று எனக்கு ஆசை.ஆனால் அவர்களை எல்லாம் கலந்தாலோசிக்க அவர்களுக்கும் ,எனக்கும் நேரமில்லை.
அப்புறம் , தோட்டத்தில் மலர்களை விடப் பட்டாம் பூச்சிகள் அதிகமாகி விடுமோ என்ற பயம்!

இங்கே விடுபட்ட முக்கியமான இரண்டு நண்பர்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.
ஹாலிவுட் பாலா. அமரபாரதிசார்.
முதலாமவர் அருமையான திரைப் படவிமர்சனக் கலை வல்லுநர்.நிறையத் திரைப் படங்களை விட இவர் அதற்கு எழுதும் விமர்சனங்கள் ஆழமாகவும் அழ்காகவும்,இருக்கும். இவர் சற்றே சொந்த 'பிசி' யில் இருக்கிறார். விரைவில் பதிவுலகுக்கு வரவேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

அமரபாரதி சார் ,தான் எழுதா விட்டாலும் மற்றவர்களை எழுதும் படி ஊக்குவிப்பதில் வல்லவர்.தேர்ந்த தெளிந்த, ரசனையாளர்.
இவரே படைப்பாளியாகவும் வேண்டுமென்பது எனது அவா.

பதிவுலக மலர்களுக்கு மத்தியில் இந்தப் பட்டாம் பூச்சிகள் பறக்கட்டும்.
நன்றி.34 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் சார்..
  அப்புறம் உங்களிடம் இருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள் விருது பெற்றவர்களுக்கும் கொடுத்த நல்ல உள்ளத்துக்கும்

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள் - விருது பெற்ற உங்களுக்கும், நீங்கள் கொடுத்து விருது பெற்ற உண்மைத்தமிழன், கார்த்திகேயன், குடுகுடுப்பையார் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. இனிய பட்டாம்பூச்சிக்கு இந்த மலரின் வாழ்த்துகள்..

  ஒரு பட்டாம்பூச்சி
  இன்னொரு பட்டாம்பூச்சி விருது கொடுக்கிறதே..
  அடடே..!!

  பதிலளிநீக்கு
 5. vinoth gowtham சொன்னது…

  வாழ்த்துக்கள் சார்..
  அப்புறம் உங்களிடம் இருந்து பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..//
  நன்றி வினோத்.

  பதிலளிநீக்கு
 6. Suresh சொன்னது…

  வாழ்த்துகள் விருது பெற்றவர்களுக்கும் கொடுத்த நல்ல உள்ளத்துக்கும்//

  நன்றி சுரேஷ்.

  பதிலளிநீக்கு
 7. இராகவன் நைஜிரியா சொன்னது…

  வாழ்த்துகள் - விருது பெற்ற உங்களுக்கும், நீங்கள் கொடுத்து விருது பெற்ற உண்மைத்தமிழன், கார்த்திகேயன், குடுகுடுப்பையார் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

  உங்கள் தொலைதூர வாழ்த்துக்கு என் நன்றி,ராகவன்.

  பதிலளிநீக்கு
 8. பட்டிக்காட்டான்.. சொன்னது…

  இனிய பட்டாம்பூச்சிக்கு இந்த மலரின் வாழ்த்துகள்..

  ஒரு பட்டாம்பூச்சி
  இன்னொரு பட்டாம்பூச்சி விருது கொடுக்கிறதே..
  அடடே..!!
  அப்போ இது பட்டாமபூச்சிகள் கட்சியா,நண்பரே?! நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 9. அடுத்து எனது இனிய நண்பர் "குடுகுடுப்பையார்" .இவரது சரளமான நகைச்சுவையும், யதார்த்தமான எழுத்தும் எனது மனம் கவர்ந்த படைப்புக்கள்.//

  மிக்க நன்றி ஷண்முகப்ரியன் சார்.உங்கள் பாராட்டு நிறைய எழுத ஊக்கமளிக்கிறது.
  பட்டாம் பூச்சி ஏற்கணவே சந்தனமுல்லையக்கா கொடுத்து நானும் கொடுத்துவிட்டேன்.

  குடுகுடுப்பை: புதிய வண்ணத்துப்பூச்சி விருதுஎன்னை இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கமைக்கு நான் எழுதும் சாதாரண(இது என அடையாளமாக நான் கருதுவது) எழுத்து காரணமாக இருந்தது மிக்க மகிழ்ச்சி.

  நன்றி

  பதிலளிநீக்கு
 10. உங்கள் மோதிரக் கையால் பட்டாம்பூச்சி விருது பெரும் உண்மைத்தமிழன், கார்த்திகேயன், குடுகுடுப்பையார் வாழ்த்துகள்.... உங்களால் அந்த விருதுக்கும் பெருமை... நன்றி சார்..
  அன்புடன்
  ஆ.ஞானசேகரன்

  பதிலளிநீக்கு
 11. குடுகுடுப்பை சொன்னது…

  THERE IS A ZEN SAYING 'BEING ORDINARY IS THE EXTRAORDINARY ACHIEVEMENT'

  சாதாரண விஷயங்களைக் கையாளத்தான் அசாதாரண்த் திற்மை வேண்டும்.உங்கள் பட்டாம்பூச்சியை வேறு யாராவது இளைஞர்கள் காட்டில் பறக்க விடுங்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 12. உங்க.. வாழ்த்துகளுக்கு.. மிக்க நன்றி.. ஷண்முகப்ரியன் சார்..!!

  நிஜமாவே.. ரொம்ப பிஸியாட்டேன் இப்ப..!! ச்சேட்டில் கூட.. வர நேரமில்லாம இருக்கு. கூடிய சீக்கிரம்.. வந்துடுறேன். :) :)

  =======

  விருது பெற்ற... உண்மைத்தமிழன், கார்த்திகேயன் & குடுகுடுப்பையார்-களுக்கு.. என்னுடைய வாழ்த்துகள்..! :) :)

  பதிலளிநீக்கு
 13. ஆ.ஞானசேகரன் சொன்னது…

  உங்கள் மோதிரக் கையால்..//
  மோதிரம் போட்டு விட்டதே நீங்கள்தானே ஆ.ஞானசேகரன்!

  பதிலளிநீக்கு
 14. //முதலாமவர் அருமையான திரைப் படவிமர்சனக் கலை வல்லுநர்.//

  சார்.. வேணாம்...!! நான் அழுதுடுவேன்..! :) :) :) :) :D :D :D

  பதிலளிநீக்கு
 15. பட்டாம் பூச்சி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுகள்... வண்ணத்து பூச்சியின் , வண்ணங்கள் போல் அவர்கள் வலைப்பூவும், நிறய/ சுவையுடன் , மலரட்டும்., அப்பறம் என்ன , மகரந்த சேர்க்கை தான்.... . கருத்துகளை பரிமாறுவோம்

  பதிலளிநீக்கு
 16. ஹாலிவுட் பாலா சொன்னது…

  //முதலாமவர் அருமையான திரைப் படவிமர்சனக் கலை வல்லுநர்.//

  சார்.. வேணாம்...!! நான் அழுதுடுவேன்..! :) :) :) :) :D :D :D//

  நீங்கள் அழுதாலும் உண்மை மாறாது,பாலா.

  பதிலளிநீக்கு
 17. அது ஒரு கனாக் காலம் சொன்னது…

  பட்டாம் பூச்சி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுகள்... வண்ணத்து பூச்சியின் , வண்ணங்கள் போல் அவர்கள் வலைப்பூவும், நிறய/ சுவையுடன் , மலரட்டும்., அப்பறம் என்ன , மகரந்த சேர்க்கை தான்.... . கருத்துகளை பரிமாறுவோம்//

  நன்றியோ நன்றி சுந்தர்.

  பதிலளிநீக்கு
 18. டக்ளஸ்....... சொன்னது…

  வாழ்த்துக்கள்..!//

  உங்கள் அன்புக்கு,நன்றி டக்ளஸ்.

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துக்கள் சார்.. நீங்க இன்னும் நல்ல பதிவுகளைத் தர இந்த பட்டாம்பூச்சி உங்களுக்கு ஊக்கமாக இருக்கட்டும்.. உங்களிடம் இருந்து விருது பெற்ற மக்களுக்கு வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 20. கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

  வாழ்த்துக்கள் சார்.. நீங்க இன்னும் நல்ல பதிவுகளைத் தர இந்த பட்டாம்பூச்சி உங்களுக்கு ஊக்கமாக இருக்கட்டும்.. உங்களிடம் இருந்து விருது பெற்ற மக்களுக்கு வாழ்த்துக்கள்..//

  உங்கள் வாழ்த்துக்கும் வரவுக்கும் நன்றி,கார்த்திகைப் பாண்டியன்.

  பதிலளிநீக்கு
 21. ஹாலிவுட் பாலா சொன்னது…

  உங்க.. வாழ்த்துகளுக்கு.. மிக்க நன்றி.. ஷண்முகப்ரியன் சார்..!!

  நிஜமாவே.. ரொம்ப பிஸியாட்டேன் இப்ப..!! ச்சேட்டில் கூட.. வர நேரமில்லாம இருக்கு. கூடிய சீக்கிரம்.. வந்துடுறேன். :) :)//

  சீக்கிரமே வாருங்கள் பாலா.வந்து நீங்கள் எழுதாவிட்டால் நானே படங்களைப் பார்க்க வேண்டிய கொடுமைக்கு ஆளாக வேண்டியிருக்கும்!

  பதிலளிநீக்கு
 22. விருது பெற்றதுக்கும் கொடுத்ததற்கும் வாழ்த்துக்கள் சார். என் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதற்கு நன்றி. தாங்கள் என்னை "சார்" என்று அழைப்பது மிகவும் சங்கோஜமாக இருக்கிறது. பெயரைச் சொல்லி அழைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். எனக்கு எழுதத் தெரியாது.

  பதிலளிநீக்கு
 23. அமர பாரதி சொன்னது…

  விருது பெற்றதுக்கும் கொடுத்ததற்கும் வாழ்த்துக்கள் சார். என் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதற்கு நன்றி. தாங்கள் என்னை "சார்" என்று அழைப்பது மிகவும் சங்கோஜமாக இருக்கிறது. பெயரைச் சொல்லி அழைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். எனக்கு எழுதத் தெரியாது.//

  நன்றி அமரபாரதி.உங்கள் விருப்பப்படியே அழைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 24. ஷண்முகப்ரியன்

  //உங்கள் ’இளைய தமிழகம்’ வளர எனது வாழ்த்துகள் சுரேஷ்.I AM UNFIT HERE DUE TO AGE.//

  அச்சோ மனசு அளவுள இளைஞனா இருந்தா போதும் தலைவா.

  நீங்களும் இணைந்து உங்கள் நன்பர்களிடம் சொன்னால் தானே இது வளரும் :-)

  வாருங்கள் இளைஞர்களுக்கு உறுதுணையாய் இருப்போம்

  பதிலளிநீக்கு
 25. உங்களுக்கு ஞானசேகரனிடம் இருந்து கிடைத்த விருதிற்கு வாழ்த்துக்கள்.

  உங்கள் பதிவில் என் வலைப்பதிவை பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றி சார்

  பதிலளிநீக்கு
 26. Suresh சொன்னது…
  அச்சோ மனசு அளவுள இளைஞனா இருந்தா போதும் தலைவா.

  நீங்களும் இணைந்து உங்கள் நன்பர்களிடம் சொன்னால் தானே இது வளரும் :-)

  வாருங்கள் இளைஞர்களுக்கு உறுதுணையாய் இருப்போம்//

  உங்கள் அணியில் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி சுரேஷ்! எனது இளமை நண்பர்களிடம் கண்டிப்பாகச் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 27. கிரி சொன்னது…

  உங்களுக்கு ஞானசேகரனிடம் இருந்து கிடைத்த விருதிற்கு வாழ்த்துக்கள்.

  உங்கள் பதிவில் என் வலைப்பதிவை பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றி சார்

  உங்கள்பெயரை நான் குறிப்பிட்டிருக்க வில்லை என்றால்தான் நீங்கள் வியந்திருக்க வேண்டும் கிரி.நன்றி.

  பதிலளிநீக்கு
 28. என்னையும் உங்கள் தளத்தில் அடையாளம் காட்டியதற்கு நன்றி ஷண்முகன். என்னுடைய வாரணம் ஆயிரம் பட விமர்சனத்தை நீங்கள் படித்து கருத்துசொல்ல வேண்டுமென்று விரும்புகிறேன்... http://vurathasindanai.blogspot.com/2008/11/blog-post.html

  பதிலளிநீக்கு
 29. என்னையும் உங்கள் தளத்தில் அடையாளம் காட்டியதற்கு நன்றி ஷண்முகன். என்னுடைய வாரணம் ஆயிரம் பட விமர்சனத்தை நீங்கள் படித்து கருத்துசொல்ல வேண்டுமென்று விரும்புகிறேன்... http://vurathasindanai.blogspot.com/2008/11/blog-post.html

  தரமான உங்கள் எழுத்துக்களைப் படித்ததினால் வந்த தூண்டுதல்தான் சாணக்கியன்.
  உங்கள் விமரசனத்தைப் படித்துவிட்டுச் சொல்கிறேன் நன்றி,சாணக்கியன்.

  பதிலளிநீக்கு
 30. விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  மன் திறந்து பாராட்டி கவுரவிக்கும் திரு.ஷண்முகப்பிரியன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

  எழுத நேரமில்லை. இருப்பினும், கிடைக்கும் சிறு இடைவேளையில் தங்கள் இடுகைகளை வாசித்து விட எத்தனிக்கிறேன்...

  வலைப்பதிவுகளைப் படிக்க நேரம் கிடைக்காத என் பத்திரிகை, திரையுலக நண்பர்களுக்கு, கன்னிகா தொடர் கதையை பிரிண்ட் எடுத்து கொடுத்துள்ளேன்!!

  அவர்களின் விமர்சனங்களை அப்படியே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 31. பிரேம் சொன்னது…
  வலைப்பதிவுகளைப் படிக்க நேரம் கிடைக்காத என் பத்திரிகை, திரையுலக நண்பர்களுக்கு, கன்னிகா தொடர் கதையை பிரிண்ட் எடுத்து கொடுத்துள்ளேன்!!

  அவர்களின் விமர்சனங்களை அப்படியே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன்.//

  உங்களுடைய உற்சாகமூட்டும் பாராட்டுக்கும்,ஊக்கமளிக்கும் வாழ்த்துக்கும் நன்றி சொல்லும் சொற்களே எனக்குக் கிடைக்கவில்லை,பிரேம்.
  Simply I have to say 'Thank you' which are more than words,Prem.

  பதிலளிநீக்கு
 32. வண்ணத்துபூச்சியார் சொன்னது…

  வாழ்த்துகள் சார்.//

  Thank you,Soorya.How is your vacation?

  பதிலளிநீக்கு