சனி, ஜூலை 18, 2009

ஒரு மேதையின் விடைபெறல்

தொடர்ந்த வேலைப் பளுவினால் பதிவுகளின் மூலம் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பினை அடிக்கடி இழக்க வேண்டியதாக ஆகிறது.

எனினும்,இன்று மின்னஞ்சலில் பார்த்த, உலகப் புகழ் பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான
கபீரியல் கார்ஷியா மார்க்கசின் ஒரு கடிதத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்று தோன்றியது.

பல புகழ் பெற்ற நாவல்களை எழுதிய அந்தப் படைப்பாளி இப்போது கணையப் புற்று நோயால் பாதிக்கப் பட்டு உடல் நலம் மிகவும் குன்றியிருப்பதனால் இனி எழுத முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.
அவர் நண்பர்களிடம் இருந்தும்,பொது வாழ்க்கையில் இருந்தும் விடைபெற்று, இணையத்தில் எழுதிய இறுதிக் கடிதத்தின் மொழியாக்கமே இது.

'நான் கடவுளின் கையில் ஆடும் ஒரு வெறும் கைப்பாவை என்பதனை மட்டும் அவர் ஒரு கணம் மறந்து விட்டு எனது வாழ்க்கையில் மீண்டும் ஒரு துளியினை மட்டும் எனக்கு அவர் தந்தாரே ஆனால்,அதனை அதிகபட்சம் இப்படிப் பயன் படுத்திக் கொள்வேன்.

நான் எண்ணியதை எல்லாம் சொல்ல முடியாமல் போனாலும் சொல்வதை எல்லாம் எண்ணிப் பார்த்த பின்னரே சொல்லுவேன்.

பொருட்களை அவற்றினுடைய தகுதிக்காக மதிக்காமல் அவை எதனைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறதோ அதற்காக மதிப்பேன்.

உறங்குவதைக் குறைத்துக் கொண்டுக் கனவுகளை அதிகம் காண்பேன்.ஏனென்றால் ஒவ்வொரு நிமிடம் கண்களை மூடும் போதும் அறுபது வினாடி ஒளியினை இழக்கிறீர்கள்.

மற்றவர்கள் நிறுத்திக் கொண்ட இடத்தில் இருந்து நான் தொடங்குவேன்.மற்றவர்கள் தூங்கும் போது நான் விழித்தெழுவேன்.

கடவுள் இன்னும் ஒரு துளி வாழ்க்கையைத் தந்தாரே எனில் குறைந்த,எளிமையான ஆடைகளையே உடுத்திக் கொண்டு கதிரவனின் ஒளியில் திளைப்பேன்,உடல் மட்டுமல்ல ஆன்மாவும் மூடப் படாமல்.

வயதானதால்தான் காதல் வயப்படுவதை நிறுத்தி விடுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களே மனிதர்கள் அதனைத் தவறென்று கூறிக் காதல் வயப் படுவதை நிறுத்தி விட்டதனால்தான் நீங்கள் வயதானவர்களாக்வே ஆகிறீர்கள் என்று நிரூபிப்பேன்.

குழந்தைகளுக்குச் சிறகுகளைக் கொடுப்பேன்.ஆனால் அவர்கள் தாங்களாகவே பறக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் ஆதலால் அவர்களைத் தனியே விட்டு விடுவேன்.

மரணம் வருவது வயதினால் அல்ல,மறப்பதினால் என்று முதியவர்களுக்கு எடுத்துக் காட்டுவேன்.

உங்களிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.அவற்றில் இதுவும் ஒன்று.நீங்கள் எல்லோரும் மலையின் உச்சியிலேயே வாழ வேண்டுமென நினைக்கிறீர்கள்,அதை விட அந்த உச்சிக்கு ஏறிச் சென்ற பயணமே முக்கியம் என்பதை மறந்து விட்டு.

பிறந்த குழந்தை பெற்றவனின் கைவிரல்களைப் பற்றும் போது அது என்றென்றும் தொடரும் பிடிப்பு என்றும் நான் கற்றிருக்கிறேன்.

ஒருவனைக் கைதூக்கி விடும் போது மட்டுமே அவனை உங்களை விடக் கீழ் நிலையில் வைத்துப் பார்க்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது என்றும் நான் கற்றிருக்கிறேன்.
இப்படி உங்களிடம் நான் கற்றது நிறைய.

எப்போதும்,என்ன உணர்கிறீர்களோ அதனைச் சொல்லி விடுங்கள்.
என்ன நினைக்கிறீர்களோ அதனைச் செய்து விடுங்கள்.

இன்றைக்குத்தான் உங்களைப் பார்க்கும் சமயம் எனக்குக் கிடைக்கிறது என்றால் உங்களை இறுகஅணைத்துக் கொள்வேன், உங்கள் ஆன்மாவின் பாதுகாவலனாக.
உங்களைப் பார்க்கும் கடைசி நிமிடங்கள இதுதான் என்றால் எனது அன்பு உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நானாகக் கற்பனை செய்து கொள்ளாமல் 'நான் உங்களை நேசிக்கிறேன் 'என்று பளிச்சென்று சொல்லி விடுவேன்.

வாழ்க்கையை சரி படுத்திக் கொள்ள எப்போதுமே அடுத்த நாள் காலை காத்திருக்கிறது.
உங்களுக்கு நெருங்கியவர்களிடம் அவர்களது அவசியத்தையும்,அன்பையும் தெளிவாகப் புலப்படுத்தி எப்போதும் அவர்களைப் பேணி பாதுகாவல் புரியுங்கள்.

'வருந்துகிறேன்','மன்னித்து விடுங்கள்,' 'நன்றி' 'உங்களை நேசிக்கிறேன்' போன்ற இனிய ,நல்ல வார்த்தைகளை அடிக்கடிப் பயன்படுத்துங்கள்.
உங்கள் எண்ணங்களை ரகசியமாகவே வைத்திருந்தால் அவை யாருக்குமே புரியாது.
எப்போதும் நீங்கள் நினைப்பதை வலிய வெளிப்படுத்தி விடுங்கள்.

நீங்கள் மனதார நேசிப்பவர்களிடமும், நெருங்கியவர்களிடமும் இந்த வார்த்தைகளைச் சொல்லுங்கள்.
இன்றே அதனைச் செய்யா விட்டால் நாளையும் இன்று போலவே இருக்கும். வாழ்த்துகள்.

இப்படிக்கு,

கபீரியல் கார்ஷியா மார்க்கஸ்

40 கருத்துகள்:

  1. ஆஹா..!

    முருகன் எனக்கு இன்னும் ஒரு வாழ்க்கை கொடுத்தால் அதில் ஷண்முகப்பிரியனைப் போன்றவர்களைத் தேடிப் பிடித்து நண்பர்களாக்கிக் கொள்வேன்..

    சிறந்த கடிதத்தை முன் மொழிந்திருக்கிறீர்கள் ஸார்..!

    மிக்க நன்றி..!

    ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணங்கள் வரத்தான் செய்யும். ஆனால் சாகின்ற தருவாயில் மட்டுமே இது போன்று தோன்றுவதுதான் பிரச்சினை..!

    பதிலளிநீக்கு
  2. Nice post sir. I have enjoyed your works in Vetri vizaa with K Rajeshwar.

    I think you were involved in Kalaignan film also.

    பதிலளிநீக்கு
  3. Nice one sir! "வாழ்க்கையை சரி படுத்திக் கொள்ள எப்போதுமே அடுத்த நாள் காலை காத்திருக்கிறது." very very true. Expecting kanika next part.

    yours
    Arun

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா,நலம் தானே?
    உங்கள் இமெயில் முகவரியோ தொலைபேசி எண்ணோ இல்லாததால் தொடர்பு கொள்ளமுடியவில்லை,மன்னிக்கவும் .,
    மூன்று வாரங்களுக்கு மேல் காணவில்லையே என பேசிக்கொண்டிருந்தோம்.
    மீண்டும் நல்ல கட்டுரையை எங்களிடம் பகிர்ந்து கொண்டீர்கள்.
    நேரம் கிடைக்கும் போது நல்ல விஷயங்களை பகிருங்கள் அய்யா.
    வேலை தான் முதலில் ..நாங்கள் புரிந்து கொள்வோம்.
    நன்றி
    கார்த்திகேயன்
    அமீரகம்

    பதிலளிநீக்கு
  5. மிக அற்புதமான கடிதம்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பகிர்விற்கு நன்றி சார்

    சார் நேரம் இருக்கும் போது அவ்வப்போது பதிவிடுங்கள்

    பதிலளிநீக்கு
  7. நல்ல கடிதம். பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ///'வருந்துகிறேன்','மன்னித்து விடுங்கள்,' 'நன்றி' 'உங்களை நேசிக்கிறேன்' போன்ற இணய ,நல்ல வார்த்தைகளை அடிக்கடிப் பயன்படுத்துங்கள்.
    உங்கள் எண்ணங்களை ரகசியமாகவே வைத்திருந்தால் அவை யாருக்குமே புரியாது.
    எப்போதும் நீங்கள் நினைப்பதை வலிய வெளிப்படுத்தி விடுங்கள்.///

    சொல்ல தெரியாத மெளணம்...
    நல்ல பகிர்வு.. மிக்க நன்றி சார்

    பதிலளிநீக்கு
  9. கடிதம் நல்லா இருக்கு! பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது இந்த மாதிரி தோன்றலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் புத்துணர்ச்சியுடன் மீண்டு வர அவரின் நம்பிக்கை உதவட்டும்!

    பதிலளிநீக்கு
  10. அருமையான பகிர்வு.
    ஓவ்வொரு மனிதனும் மரணத்தின் கணங்களை எண்ணும் போதுதான் வாழ்க்கையின் நிலையாமையையும், இதுவரையில் வாழ்க்கையைத் தொலைத்து விட்டதையும எண்ணிக் கவலைப்படகிறான்

    பதிலளிநீக்கு
  11. /வயதானதால்தான் காதல் வயப்படுவதை நிறுத்தி விடுகிறோம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களே மனிதர்கள் அதனைத் தவறென்று கூறிக் காதல் வயப் படுவதை நிறுத்தி விட்டதனால்தான் நீங்கள் வயதானவர்களாக்வே ஆகிறீர்கள் என்று நிரூபிப்பேன்.//

    நிஜம்.. சார்..

    பதிலளிநீக்கு
  12. நன்றி சார்..ஒரு மகத்தான மனிதரை அடையாளம் காட்டியதற்கு..

    பதிலளிநீக்கு
  13. நன்றி. ஷன்முகப்ரியன் சார், .. காதல் , வயது, சிறகு, குழந்தை , எண்ணங்கள், நினைப்பு, அருமையான கடிதம்... நன்றி பகிர்ந்தமைக்கு

    பதிலளிநீக்கு
  14. வாக்களித்தும்,பின்னூட்டமிட்டும் ஊக்கமும்,உற்சாகமும் வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றிகள்.
    வாழ்வோம்.வளர்வோம்.

    பதிலளிநீக்கு
  15. Nice to have you as a friend sir.


    Will call you sometime, and hope to meet you at Chennai.

    - Vijayashankar, Bangalore

    பதிலளிநீக்கு
  16. Vijay சொன்னது…
    Nice to have you as a friend sir.


    Will call you sometime, and hope to meet you at Chennai.

    - Vijayashankar, Bangalore

    நல்லுறவுக்கு நன்றி விஜய்.வாய்ப்பு வரும் போது சென்னையில் சந்திப்போம். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  17. வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-1
    சென்ற வாரத்தில் வலைச்சரத்தில் நான் உங்களை அறிமுகம் செய்தேன் மேலே உள்ள சுட்டியில் பாருங்கள்

    பதிலளிநீக்கு
  18. உயர்திரு ஐயா நலம் தானே?
    இந்த சிறியேன் உங்களுக்கு
    பெஸ்ட் ப்ளாக் அவார்டு தர ஆசைபடுகிறேன்.
    நீங்கள் தற்சமயம் பணிசுமையுடன் இருப்பதை அறிவேன்,இதை பெற்றுக்கொண்டால் மட்டும் போதும்.
    உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருக்கிறதா?
    என்பதை தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
  19. ஆ.ஞானசேகரன் சொன்னது…

    வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-1
    சென்ற வாரத்தில் வலைச்சரத்தில் நான் உங்களை அறிமுகம் செய்தேன் மேலே உள்ள சுட்டியில் பாருங்கள்

    /பார்த்தேன்,ஞானசேகரன்.உங்கள் அன்புக்கு எனது நெகிழ்ச்சி ஒன்றே கைம்மாறு.நன்றி,நண்பரே.

    பதிலளிநீக்கு
  20. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

    உயர்திரு ஐயா நலம் தானே?
    இந்த சிறியேன் உங்களுக்கு
    பெஸ்ட் ப்ளாக் அவார்டு தர ஆசைபடுகிறேன்.
    நீங்கள் தற்சமயம் பணிசுமையுடன் இருப்பதை அறிவேன்,இதை பெற்றுக்கொண்டால் மட்டும் போதும்.
    உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருக்கிறதா?
    என்பதை தெரிவிக்கவும்.//

    உங்கள் அன்புக்கு நான் மேலும்,மேலும் என்னைத் தகுதியாக்கிக் கொண்டே இருப்பதைத் தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி இல்லை,கார்த்திகேயன்.
    பணிச்சுமை காரணமாக பதிவுகளின் பக்கமே வர இயலவில்லை.வருந்துகிறேன்.எனது இயலாமையை மன்னிக்கவும்.நன்றி கார்த்திகேயன்.

    பதிலளிநீக்கு
  21. பட்டிக்காட்டான்.. சொன்னது…

    நல்ல பகிர்வுங்க..//

    உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இது பல விதங்களில் பயன் படும் தம்பி.வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. //.. உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இது பல விதங்களில் பயன் படும் தம்பி. ..//

    பயன்படும் தான்..
    ஆனா.., இத முழுசா புரிஞ்சுக்குற அளவுக்கு இன்னும் பக்குவம் வரலைங்க..

    பதிலளிநீக்கு
  23. /-- நீங்கள் எல்லோரும் மலையின் உச்சியிலேயே வாழ வேண்டுமென நினைக்கிறீர்கள்,அதை விட அந்த உச்சிக்கு ஏறிச் சென்ற பயணமே முக்கியம் என்பதை மறந்து விட்டு. --/

    எவ்வளவு உண்மையான வார்த்தைகள்...ரொம்ப அருமையான பதிவு சண்முகப் பிரியன்... தொடருங்கள்...வேலை பாதிக்காமல் நேரம் கிடைக்கும் போது...நன்றி...

    பதிலளிநீக்கு
  24. Krishna Prabhu சொன்னது…
    /-- நீங்கள் எல்லோரும் மலையின் உச்சியிலேயே வாழ வேண்டுமென நினைக்கிறீர்கள்,அதை விட அந்த உச்சிக்கு ஏறிச் சென்ற பயணமே முக்கியம் என்பதை மறந்து விட்டு. --/

    எவ்வளவு உண்மையான வார்த்தைகள்...ரொம்ப அருமையான பதிவு சண்முகப் பிரியன்... தொடருங்கள்...வேலை பாதிக்காமல் நேரம் கிடைக்கும் போது...நன்றி...//

    நன்றி கிருஷ்ண பிரபு,உங்கள் வருகைக்கும் ஆர்வத்திற்கும்.

    பதிலளிநீக்கு
  25. Shan Nalliah / GANDHIYIST சொன்னது…
    Great...!Greetings from Norway!!!!//

    THANK YOU,Shan Nalliah.

    பதிலளிநீக்கு
  26. ஷண்முகப்ரியன் சார்... என்ன ஆச்சு பதிவின் பக்கம் வரவில்லை.. வேலை பழுவா?

    பதிலளிநீக்கு
  27. ஆ.ஞானசேகரன் சொன்னது…

    ஷண்முகப்ரியன் சார்... என்ன ஆச்சு பதிவின் பக்கம் வரவில்லை.. வேலை பழுவா?//

    இரண்டு நாட்களாக உங்கள் பதிவைத் திறக்கவே முடியவில்லை ஞனசேகரன்! ஓபன் செய்தால் திரும்பத் திரும்ப முதல் வரியே ஓடிக் கொண்டிருக்கிறது.புரியவில்லை.
    காரணம் அதுவன்றி வேறில்லை.அற்உந்த தொடர்புக்கு மன்னிக்கவும்.
    நீண்ட நாள் கழித்து இன்றுதான் எழுத வாய்ப்புக் கிடைத்தது.படிக்கவும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாழ்க்கையை சரி படுத்திக் கொள்ள எப்போதுமே அடுத்த நாள் காலை காத்திருக்கிறது./////

    வாவ்.. அருமையான பகிர்வு சார்.

    நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  29. அற்புதமான கடிதம் ஷண்முகப்ரியன் சார்

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. புதுவை சிவா♠ சொன்னது…
    அற்புதமான கடிதம் ஷண்முகப்ரியன் சார்

    பகிர்வுக்கு நன்றி.//

    தாமதமானலும் பாராட்டுக்கு நன்றியும்,மகிழ்ச்சியும் சிவா.

    பதிலளிநீக்கு
  31. ,///'வருந்துகிறேன்','மன்னித்து விடுங்கள்,' 'நன்றி' 'உங்களை நேசிக்கிறேன்' போன்ற இனிய ,நல்ல வார்த்தைகளை அடிக்கடிப் பயன்படுத்துங்கள்.//
    சூப்பர், அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  32. சில பதிவுகளில் பட்டை அதன் பணியை செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.

    இந்த பதிவுக்கு உண்மைத்தமிழன் சொன்ன இறக்கும் தருவாயில் அந்த வார்த்தைகளை விட வேறு எந்த வார்த்தைகளும் பொருத்தமாய் இருக்காது.

    கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.

    அதனால் என்ன இது போன்ற பங்களிப்புகள் இருட்டில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கு. பாதை புலப்பட்டவர்கள், தைரியம் உள்ளவர்கள் அத்தனை பேரும் சென்று அடைந்து விடுவர். நிதர்சன கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. அருமையான கடிதம் தான். ஆனால் இதை மார்க்வேஸ் எழுதவில்லை. 2000ம் வருடம் முதல் உலகைச் சுற்றி வரும் போலி மின் அஞ்சல் அது.

    http://en.wikipedia.org/wiki/Gabriel_Garc%C3%ADa_M%C3%A1rquez#Chain_mail_hoax

    பதிலளிநீக்கு