புதன், ஜூன் 17, 2009
97 வயது மகிழ்ச்சி!
நமது அருமை நண்பர் 'அது ஒரு கனாக்காலம் ' சுந்தர ராமன் அவர்கள் எனக்கு மிகவும் உத்வேகம் தரும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.
ஆங்கிலத்தில் இருந்த அந்த வாழ்க்கைச் செய்தியை உடனடியாக எல்லோருடனும் பகிர்ந்து கொண்டால் அனைவருக்குமே பயனளிக்கும் என்ற எண்ணத்தில் அதனுடைய தமிழ் வடிவத்தை இங்கே தருகிறேன்.
97 வயது நான்கு மாதங்கள் ஆகிறது மேலே நீங்கள் படத்தில் பார்க்கும்
ஜப்பானிய டாக்டருக்கு.
உலகிலேயே நீண்ட வருடங்கள் மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்களில் அவரும் ஒருவர்.மருத்துவக் கல்வி பயில்விக்கும் கல்வியாளராகவும் இருப்பவர்.
அவரது பெயர் Dr.Shigeagi Hinohara. தமிழில் அதை நான் அச்சிட்டால் இப்படி வருகிறது .டாக்டர்.ஷிகியேகி ஹிநொஹர.(அந்த அரும் பெரும் முதியவர் என்னை மன்னிப்பாராக)
டோக்கியோவில் இருக்கும் St.Luke அகில உலக மருத்துவமனையில் 1941 ம வருடத்தில் இருந்து அவரது மாயக் கரங்கள் பட்டுக் குணமானோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இரண்டாம் உலகப் போரில் சிதிலமடைந்த டோக்கியோ நகரில் உலகத் தரம் வாய்ந்த ஒரு மருத்துவ மனையையும் ,மருத்துவக் கல்லூரியையும் நிறுவ வேண்டும் என்ற தனது கனவை கடின உழைப்பினால் அவரே நிறைவேற்றினார்.
இன்று அந்த இரண்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் டாகடர் 150 புத்தகங்களுக்கும் மேலே எழுதி மற்றவர்களுக்கு ஒளிகாட்டி இருக்கிறார்.
பல லட்சம் பிரதிகள் விற்றிருக்கும் ''Living Long,Living Good'' என்ற டாக்டரின் புத்தகத்தில் இருந்து நாம் பயன் பெறச் சில வழிகாட்டல்கள்...
'நன்றாக இருக்கிறோம்' என்ற உணர்வுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறதே அன்றி வெறுமனே நல்ல உணவுகளைச் சாப்பிடுவதாலோ இல்லை நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாலோ அல்ல.இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேறெங்கும் போக வேண்டாம்,நமது குழந்தைப் பருவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.
குதித்துக் களித்து விளையாடிய போது எத்தனை முறை உண்ணாமலேயே இருந்திருப்போம்.தூக்கத்தையே மறந்து ஆடித் திளைத்திருப்போம்.ஆனால் அப்போது குழந்தைகளாக இருந்த பொழுது பொங்கிய சக்தி இப்போது வேளா வேளைக்கு உண்டு,உறங்கும் நம்மிடம் இருக்கிறதா?நிச்சயம் இல்லை.
எனவே பெரியவர்களான பின்னும் ஆற்றலைப் பெருக்கும் அந்தக் குழந்தை மனோபாவத்தை இழந்து விடாதீர்கள்.
நேரத்துக்கு மதிய உணவு,நேரத்துக்குத் தூக்கம் என்ற வெற்றுக் கட்டுப் பாடுகளால்தான் உடல் களைப்படைகிறது.உடல் நலம் என்பது வெறும் விதிகளால் பேணப் படுவதல்ல.
மதம்,மொழி,நாடு,இனம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உண்மை என்னவென்றால் அதிக நாள் உயிர் வாழ்பவர்கள் எல்லாம் அதிக உடல் எடை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே.
எனது காலை உணவு காஃபி,ஒரு டம்ளர் பால், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து ஆரஞ்சுச் சாறு
ஆலிவ் ஆயில் ரத்தக் குழாய்களின் நலத்துக்காகவும்,தோலின் பொலிவுக்காகவும்.
மதியம் பாலும்,கொஞ்சம் பிஸ்கட்டுகள் மட்டுமே.அதுவும் வேலை மிகுதியாக இருந்தால் மதியச் சாப்பாடே நான் உண்ணுவதில்லை.வேலையில் முழுக் கவனமும் செலுத்தும் போது எனக்குப் பசியே எடுப்பதில்லை.
இரவு காய்கறிகள்,ஒரு துண்டு மீன், சாதம்.
வாரத்துக்கு இரண்டு முறை கொழுப்பற்ற நூறு கிராம் இறைச்சி.
அடுத்து,எதையுமே முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
2014 வரை எனது பணிகள் என்னவென்று என்னால் திட்டமிடப் பட்டு விட்டன.அதில் எனது கேளிக்கையும் அடங்கும்,2016ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ்தான் அது!
பணி ஓய்வு என்பதற்கு அவசியமே இல்லை.அப்படிக் கண்டிப்பாகத் தேவை என்றால் 65வயது தாண்டிய பிறகு யோசிக்கலாம்.
உங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.நான் வருடத்துக்கு 150 விரிவுரைகள் ஆற்றுகிறேன்.60 முதல் 90 நிமிடங்கள் வரை உரையாற்றுகிறேன்,உடல் பலத்தைப் பெருக்குவதற்காக நின்று கொண்டு!
உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு பரிசோதனையையோ,அறுவைச் சிகிச்சையையோ பரிந்துரைத்தால் அவரிடம் நீங்கள் முதலில் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்.
'உங்கள் கணவருக்கோ,மனைவிக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ இதே சிகிச்சையைப் பரிந்துரைப்பீர்களா?' என்பதே அது.
பொதுவாக மக்கள் நம்பிக் கொண்டிருப்பதைப் போல எல்லோரையுமே டாக்டர்கள் குணப் படுத்தி விட முடியாது.
தேவை இல்லாமல் அறுவைச் சிகிச்சைகளுக்கும்,அவற்றின் வலிகளின் கொடுமைகளுக்கும் ஏன் ஆளாகிறீர்கள்? எனக்குத் தெரிந்து இசைக்கு நிறைய நோய்களைக் குணப் படுத்தும் ஆற்றல் இருக்கிறது,அதுவும் மற்ற மருத்துவர்கள் கற்பனையே செய்யாத அளவுக்கு.
உடல் நலத்துடன் இருக்க படிக்கட்டுக்களில் ஏறிச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.அத்துடன் உங்கள் பொருட்களையும் நீங்களே சுமந்து செல்லுங்கள்.நான் என் தசைகள் வலுப் பெற எப்பொழுதும் இரண்டிரண்டு படிகளாகத்தான் ஏறிச் செல்கிறேன்.
எனக்கு உத்வேகம் அளிப்பது ராபர்ட் ப்ரௌனிங்கின் 'அப்ட் வொக்லர்' என்ற கவிதைதான்.எனது சிறுமைப் பிராயத்தில் எனது தந்தை எனக்கு வாசித்துக் காட்டியது.
சிறிய கிறுக்கல்களை விடப் பெரிய ஓவியங்களையே வரைய முயல வேண்டும் என்று அந்தக் கவிதை தூண்டுகிறது.
நாம் உயிரோடு இருக்கும் வரையிலும் போட்டு கொண்டே இருந்தாலும் முடிக்க முடியாத ஒரு மாபெரும் வட்டத்தை வரைய வேண்டும் என்கிறது அந்தக் கவிதை.நாம் பார்க்கப் போவதெல்லாம் அந்த வட்டத்தினுடைய ஒரு சிறிய வளைவையே.மீதி எல்லாம் நம் பார்வைக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் தூரத்தில் அந்த வட்டம் பூர்த்தியாகத்தான் இருக்கிறது.
வலி என்பது ஒரு புரியாத புதிர்.வலியை மறப்பதற்கு ஒரே வழி நம் மனதை வேறு கேளிக்கைகளில் ஈடுபடச் செய்வதுதான்.பல்வலியால் வேதனைப் படும் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.அது வலியை மறந்து விட்டு உங்களுடன் விளையாட ஆரம்பித்து விடும்.எல்லா மருத்துவ மனைகளிலும் கேளிக்கை சாதனங்கள் இடம் பெற வேண்டும்.எங்கள் செயின்ட்.லியூக் மருத்துவ மனையில் இசை நிகழ்ச்சிகள்,விலங்குகள் மூலம் சிகிச்சை,ஓவிய வகுப்புக்கள் அனைத்தும் உண்டு.
பொருட்களைக் குவித்துக் கொண்டே போக வேண்டும் என்ற வெறியில் பைத்தியம் பிடித்து அலையாதீர்கள்.உங்கள் கணக்கு முடிந்து நீங்கள் போகப் போகும் அந்த இடத்திற்கு நீங்கள் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது.
மருத்துவ மனைகளின் அனைத்துப் பகுதிகளிலும் சிகிச்சை கொடுக்கும் வசதிகள் இருக்கும் படி அவை கட்டப் பட வேண்டும்.எங்கள் மருத்துவ மனையில் காரிடார்கள்,பேஸ்மென்ட்கள், சர்ச் ஹால் இப்படி எங்கு வேண்டுமானாலும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியும்.அதனால்தான் தீவிர வாதிகளின் விஷ வாயுத் தாக்குதலில் பாதிக்கப் பட்டு ஒரே நேரத்தில் இங்கே அனுமதிக்கப் பட்ட 740 பேரில் 739 பேரை எங்களால் காப்பாற்ற முடிந்தது.
விஞ்ஞானத்தால் மக்கள் அனைவரையும் குணப்படுத்தவோ,மக்கள் அனைவருக்கும் உதவி புரியவோ முடியாது.அது மக்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகத்தான் பார்க்கும்,ஆனால் வியாதிகளோ தனித் தன்மைகள் கொண்டவை.ஒவ்வொரு மனிதனும் பிரத்தியேகமானவன்.அவனது நோய்கள் அவனது இதயத்தோடு தொடர்பு கொண்டவை.அதனால் ஒரு மனிதனின் நோய்களை அறிந்து கொள்ளவும்,அவற்றைக் குணப் படுத்தவும் வெறும் மருத்துவக் கலை மட்டும் போதாது.ஓவியம்,இசை போன்ற மற்ற கலைகளின் பங்களிப்பும் வேண்டும்.
வாழ்க்கை சம்பவங்களால் நிறைந்தது.நான் ஒரு முறை விமானத்தில் சென்ற போது அது தீவிர வாதிகளால் கடத்தப் பட்டு நான்கு நாட்கள் 40 டிகிரி வெப்பத்தில் கைகளில் விலங்குகள் மாட்டப் பட்டுப் பிணைக் கைதியாக இருக்க நேர்ந்தது.அந்தச் சூழ்நிலையிலும் ஒரு டாக்டராக எனது உடலில் நடைபெற்ற மாற்றங்களையே ஒரு பரிசோதனை போலக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எப்படி உடல் தனது இயக்கங்களையே மெதுவாக மாற்றிக் கொள்கிறது என்பதை உணர்ந்து வியந்து போனேன்.
நமக்கென்று ஒரு ரோல் மாடலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவர்களை விடச் சிறப்பாக நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே நமது குறிக் கோளாக இருக்க வேண்டும்.பிரச்சினைகளைச் சந்திக்கும் போது அவற்றையே நமது ரோல் மாடல்கள் எப்படி அணுகுவார்கள் என்பதைச் சிந்தித்துச் செயலாற்றினால் எந்தப் பிரச்சினையுமே கையாள்வதற்கு எளிதாக இருக்கும்.
60 வயது வரை உங்கள் குடும்பத்துக்காக உழையுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் வாழும் சமூகத்திற்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.இதுவே நீங்கள் சேவைகள் புரியத் தொடங்கும் தருணம்.
நீண்ட நாட்கள் வாழ்வது ஒரு இனிமையான அனுபவம்.
இன்றும் ஒருநாளைக்கு 18 மணி நேரம் நான் உழைக்கிறேன்,அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் நேசித்தபடியே.
- Dr.Shigeagi Hinohara
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஆங்கில மருத்துவத்தைப் பற்றிய இவரின் கருத்து
பதிலளிநீக்குமிகச் சரியானதே
வாழ்த்துக்கள்
அருமையான பகிர்வு, வலி என்னை பன்மடங்கு வலிமையானவனாக ஆக்கி இருக்கிறது. ஆனாலும் அது தரும் வேதனை சொல்லித்தெரியாது.
பதிலளிநீக்கு//'நன்றாக இருக்கிறோம்' என்ற உணர்வுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறதே அன்றி வெறுமனே நல்ல உணவுகளைச் சாப்பிடுவதாலோ இல்லை நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாலோ அல்ல.இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேறெங்கும் போக வேண்டாம்,நமது குழந்தைப் பருவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.//
பதிலளிநீக்குமுற்றிலும் சரியான உண்மை சார்
//மதம்,மொழி,நாடு,இனம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உண்மை என்னவென்றால் அதிக நாள் உயிர் வாழ்பவர்கள் எல்லாம் அதிக உடல் எடை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே.//
பதிலளிநீக்குஅப்பாட எனக்கு 57kg தான்..
//பொதுவாக மக்கள் நம்பிக் கொண்டிருப்பதைப் போல எல்லோரையுமே டாக்டர்கள் குணப் படுத்தி விட முடியாது.
பதிலளிநீக்குதேவை இல்லாமல் அறுவைச் சிகிச்சைகளுக்கும்,அவற்றின் வலிகளின் கொடுமைகளுக்கும் ஏன் ஆளாகிறீர்கள்?//
நானும் இதைதான் நினைத்துக்கொண்டுள்ளேன்.... இரண்டு வருட முதுகுவலியையும் அறுவை சிகிச்சையை முடிந்தவரை தவிற்துவருகின்றேன்.. பயிற்சி மற்றும் ஆயுர்வேதா முறையிலும் வலியை நிவாரணம் செய்ய பயன்படுத்துகின்றேன்..
///60 வயது வரை உங்கள் குடும்பத்துக்காக உழையுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் வாழும் சமூகத்திற்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.இதுவே நீங்கள் சேவைகள் புரியத் தொடங்கும் தருணம்.///
பதிலளிநீக்குஆக மிக நல்ல யோசனை
test
பதிலளிநீக்குஅய்யா ரொம்ப அருமையான படைப்பு தங்களிடமிருந்து
பதிலளிநீக்குஎந்த விதமான போதனையும் இல்லாமல் சொல்லவந்ததை அருமையாக சொல்லிச்சென்றது.
என்னமாய் மொழி பெயர்த்துள்ளீர்கள்?
இந்த கீழ் கண்ட வரிகளை மிகவும் லயித்து படித்தேன்.
60 வயது வரை உங்கள் குடும்பத்துக்காக உழையுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் வாழும் சமூகத்திற்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.இதுவே நீங்கள் சேவைகள் புரியத் தொடங்கும் தருணம்.
வலி என்பது ஒரு புரியாத புதிர்.
உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு பரிசோதனையையோ,அறுவைச் சிகிச்சையையோ பரிந்துரைத்தால் அவரிடம் நீங்கள் முதலில் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்.
'உங்கள் கணவருக்கோ,மனைவிக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ இதே சிகிச்சையைப் பரிந்துரைப்பீர்களா?' என்பதே அது.
அய்யா அந்த டாக்டர் நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டுவோம்.
நம்பிக்கை தானே வாழ்க்கை?
வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம். ;-)
பதிலளிநீக்குநன்றியுடன் கூடிய வணக்கம் ஜயா,
பதிலளிநீக்குஎனக்கும் அனுப்பியிருந்தார், படித்தேன். ஆனால், நீங்கள் மொழிபெயர்த்த பின்பு ஏற்படுத்திய தாக்கத்தை, ஆங்கிலத்தில் படிக்கும் போது ஏற்படவில்லை!. மீண்டும் நன்றி, தமிழாக்கத்திற்க்கு!
//நமக்கென்று ஒரு ரோல் மாடலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவர்களை விடச் சிறப்பாக நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே நமது குறிக் கோளாக இருக்க வேண்டும்//
நான் ரசித்த வரிகள் மேலே..
மிக அருமையான மொழிபெயர்ப்பு... சாப்பாடு விசயம்தான் கொஞ்சம் இடிக்குது :)
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு
பதிலளிநீக்குநன்றி
//
பதிலளிநீக்கு'நன்றாக இருக்கிறோம்' என்ற உணர்வுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறதே அன்றி வெறுமனே நல்ல உணவுகளைச் சாப்பிடுவதாலோ இல்லை நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாலோ அல்ல.
//
உண்மைதான். பகிர்தலுக்கு மிக்க நன்றி
நல்ல பதிவு தான்..
பதிலளிநீக்குவெறுமனே படித்துவிட்டு செல்லாமல் செயல்படுத்தினால்தான், அந்த மருத்துவரின் நோக்கமும், அவரின் கூற்றுக்களை தமிழ்ப்படுத்தி பதிவிட்ட உங்கள் நோக்கமும் வெற்றியடையும்.
//..சிறிய கிறுக்கல்களை விடப் பெரிய ஓவியங்களையே வரைய முயல வேண்டும்..//
ஆனால் எந்த ஒரு பெரிய ஓவியமும் சிறு கிறுக்கலில் தானே ஆரம்பமாகிறது..??!!
//..'நன்றாக இருக்கிறோம்' என்ற உணர்வுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறதே அன்றி வெறுமனே நல்ல உணவுகளைச் சாப்பிடுவதாலோ இல்லை...//
உண்மைதான்..நிறைய மக்களுக்கு தனக்கு நோய் உள்ளதோ என்கிற மனப்பிராந்தியே, பெரிய நோயை வரவழைக்கிறது..!
அருமையான மொழிபெயர்ச்சி ...ரொம்பவும் மகிழ்வாக உள்ளது , நிறைய பேரை சென்றடையும் இந்த ஜப்பானியரின் எடுத்துகாட்டான வாழ்கை முறை .
பதிலளிநீக்கு'நன்றாக இருக்கிறோம்' என்ற உணர்வுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறதே அன்றி "... மிகவும் உண்மையான வரிகள்.
நன்றி ஜயா
நிகழ்காலத்தில்... சொன்னது…
பதிலளிநீக்குஆங்கில மருத்துவத்தைப் பற்றிய இவரின் கருத்து
மிகச் சரியானதே
வாழ்த்துக்கள்//
நன்றி,சிவா.
குடுகுடுப்பை சொன்னது…
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு, வலி என்னை பன்மடங்கு வலிமையானவனாக ஆக்கி இருக்கிறது. ஆனாலும் அது தரும் வேதனை சொல்லித்தெரியாது.//
உங்கள் வலி உங்கள் நகைச்சுவை உணர்வை எவ்வளவு தூரம் உசுப்பி விட்டிருக்கிறது என்பதை இப்போது புரிந்து கொண்டேன்,குடுகுடுப்பை சார்.
ஆ.ஞானசேகரன் சொன்னது…
பதிலளிநீக்கு//'நன்றாக இருக்கிறோம்' என்ற உணர்வுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறதே அன்றி வெறுமனே நல்ல உணவுகளைச் சாப்பிடுவதாலோ இல்லை நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாலோ அல்ல.இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேறெங்கும் போக வேண்டாம்,நமது குழந்தைப் பருவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.//
முற்றிலும் சரியான உண்மை சார்//
பகிர்தலுக்கு நன்றி ஞானசேகரன்.
ஆ.ஞானசேகரன் சொன்னது…
பதிலளிநீக்கு//மதம்,மொழி,நாடு,இனம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உண்மை என்னவென்றால் அதிக நாள் உயிர் வாழ்பவர்கள் எல்லாம் அதிக உடல் எடை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே.//
அப்பாட எனக்கு 57kg தான்..
கொடுத்து வைத்தவர் நீங்கள்.வாழ்க.
ஆ.ஞானசேகரன் சொன்னது…
பதிலளிநீக்குநானும் இதைதான் நினைத்துக்கொண்டுள்ளேன்.... இரண்டு வருட முதுகுவலியையும் அறுவை சிகிச்சையை முடிந்தவரை தவிற்துவருகின்றேன்.. பயிற்சி மற்றும் ஆயுர்வேதா முறையிலும் வலியை நிவாரணம் செய்ய பயன்படுத்துகின்றேன்..//
முறையான மருத்துவம்.முறையான உங்கள் ஒத்துழைப்பு உங்கள் வலிகளைக் குணமாக்கியே தீரும்.
ஆ.ஞானசேகரன் சொன்னது…
பதிலளிநீக்கு///60 வயது வரை உங்கள் குடும்பத்துக்காக உழையுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் வாழும் சமூகத்திற்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.இதுவே நீங்கள் சேவைகள் புரியத் தொடங்கும் தருணம்.///
ஆக மிக நல்ல யோசனை//
இதில் கூறப் படும் டாக்டர் வெறுமனே முதியவர் மட்டுமல்ல,முதிர்ந்தவரும் கூட.
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…
பதிலளிநீக்குஅய்யா அந்த டாக்டர் நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டுவோம்.
நம்பிக்கை தானே வாழ்க்கை?//
கண்டிப்பாக,கார்த்திகேயன்
தமிழினி சொன்னது…
பதிலளிநீக்குஉங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்
ந்ன்றி தமிழினி.
Ramesh சொன்னது…
பதிலளிநீக்குவாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம். ;-)
உங்கள் பதிவிலும் இதனைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி,ரமேஷ்.
கலையரசன் சொன்னது…
பதிலளிநீக்குநன்றியுடன் கூடிய வணக்கம் ஜயா,
எனக்கும் அனுப்பியிருந்தார், படித்தேன். ஆனால், நீங்கள் மொழிபெயர்த்த பின்பு ஏற்படுத்திய தாக்கத்தை, ஆங்கிலத்தில் படிக்கும் போது ஏற்படவில்லை!. மீண்டும் நன்றி, தமிழாக்கத்திற்க்கு! //
அந்த முதியவர் அனுபவம் உங்களுக்குப் பயன்பட்டால் இரட்டை மகிழ்ச்சி,கலை.
என் பக்கம் சொன்னது…
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு
நன்றி//
நன்றி,நண்பரே.
என் பக்கம் சொன்னது…
பதிலளிநீக்குபதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1 //
படித்து விட்டு வருகிறேன்.
வலசு - வேலணை சொன்னது…
பதிலளிநீக்கு//
'நன்றாக இருக்கிறோம்' என்ற உணர்வுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறதே அன்றி வெறுமனே நல்ல உணவுகளைச் சாப்பிடுவதாலோ இல்லை நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாலோ அல்ல.
//
உண்மைதான். பகிர்தலுக்கு மிக்க நன்றி//
நன்றி வலசு.
பட்டிக்காட்டான்.. சொன்னது
பதிலளிநீக்கு//..சிறிய கிறுக்கல்களை விடப் பெரிய ஓவியங்களையே வரைய முயல வேண்டும்..//
ஆனால் எந்த ஒரு பெரிய ஓவியமும் சிறு கிறுக்கலில் தானே ஆரம்பமாகிறது..??!!//
கிறுக்கல்களில் தொடக்கம் முதல் முடிவு வரை நோக்கமோ,உணர்வோ இல்லை.
ஓவியம் உங்களுக்குள் எற்பட்ட தாக்கத்தை நீங்கள் வெளிப் படுத்த நினைக்கும் அக்கறை.கலை.
கிறுக்கல்கள் உங்களுக்காக நீங்கள் கிறுக்கிக் கொள்வது.ஓவியம் மற்றவர்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது.
அது ஒரு கனாக் காலம் சொன்னது…
பதிலளிநீக்குநன்றி ஜயா//
என்னைப் பெண்ணாகவும் ஆக்கியதற்கு நன்றி அய்யா!
பகிர்விற்கு நன்றி..
பதிலளிநீக்கு97-ஐ பற்றி 27 பேசுகிறது..
பதிலளிநீக்குகேட்டோம்..
படித்தோம்..
இருக்க முயல்கிறோம்..
பகிர்வுக்காக காலில் விழுந்து வணங்குகிறோம்..
நல்ல பகிர்வு
பதிலளிநீக்கு:-) aiyya vs jaya
பதிலளிநீக்குநல்லதொரு இடுகை. பகிர்தலுக்கு நன்றி.
பதிலளிநீக்குபாசகி சொன்னது…
பதிலளிநீக்குமிக அருமையான மொழிபெயர்ப்பு... சாப்பாடு விசயம்தான் கொஞ்சம் இடிக்குது :)//
கடுமையான விதிகள்தான் வேண்டாமென்று பெரியவர் சொல்லி இருக்கிறாரே,பாசகி.
24 வயதில் உங்களுக்கு எதற்கு சாப்பாட்டுக் கட்டுப்பாடுகள் எல்லாம்.
டாகடர் சொன்னது அவரது 97 வயதுக்கான உணவை.
தீப்பெட்டி சொன்னது…
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றி.
மகிழ்ச்சி,கணேஷ்குமார்.
உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…
பதிலளிநீக்கு97-ஐ பற்றி 27 பேசுகிறது..
கேட்டோம்..
படித்தோம்..
இருக்க முயல்கிறோம்..
பகிர்வுக்காக காலில் விழுந்து வணங்குகிறோம்..//
இந்த 27 தான் உதைக்கிறது!’உண்மை’த்தமிழனை ஆசிர்வதிக்கிறோம்.!!
நசரேயன் சொன்னது…
பதிலளிநீக்குநல்ல பகிர்வு//
மகிழ்ச்சி நச்ரேயன்.
அது ஒரு கனாக் காலம் சொன்னது…
பதிலளிநீக்கு:-) aiyya vs jaya//
:-)
மணிநரேன் சொன்னது…
பதிலளிநீக்குநல்லதொரு இடுகை. பகிர்தலுக்கு நன்றி.
மகிழ்ச்சி,மணிநரேன்.
பொருட்களைக் குவித்துக் கொண்டே போக வேண்டும் என்ற வெறியில் பைத்தியம் பிடித்து அலையாதீர்கள்.உங்கள் கணக்கு முடிந்து நீங்கள் போகப் போகும் அந்த இடத்திற்கு நீங்கள் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது////
பதிலளிநீக்குயதார்த்தமான உண்மை. பலருக்கு இது புரிவதில்லை. அதனால் தான் இந்த பரபரப்பு வாழ்க்கையே..
இதைதான் ஆடி அடங்கும் வாழ்க்கையடா.... ஆறடி நிலமே சொந்தமடா.... என்று கவிஞர் அன்றே சொன்னார்.
அருமையான பதிவு.
நன்றி சார்.
அனைத்துமே அருமையான கருத்துக்கள் நண்பரே.
பதிலளிநீக்குஇது போன்ற நல்ல சிந்தனைகள்தாம் அவரை உயிர்ப்போடு, துடிப்போடு இன்னும் வாழவைத்துக்கொண்டு இருக்கிறது போலும்.
வண்ணத்துபூச்சியார் சொன்னது…
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
நன்றி சார்.//
நீங்கள் எழுதிய படத்தைப் போல,இல்லையா,சூர்யா.
பட்டாம்பூச்சி சொன்னது…
பதிலளிநீக்குஅனைத்துமே அருமையான கருத்துக்கள் நண்பரே.
இது போன்ற நல்ல சிந்தனைகள்தாம் அவரை உயிர்ப்போடு, துடிப்போடு இன்னும் வாழவைத்துக்கொண்டு இருக்கிறது போலும்.//
அதே நல்ல சிந்தனைகள் நம் எல்லோரையும் உயிர்ப்போடு,துடிப்போடு வாழ வைக்கட்டும்,பட்டாம்பூச்சி.
Nalla post with tips for life by a wellwisher aged chumma 97.Really itz great to hear abt him.see how he tells abt saving 739 people out of 740 in a hospital & his suggestion for a big hospital to meet anysort of emergency.
பதிலளிநீக்குMuniappan Pakkangal சொன்னது…
பதிலளிநீக்குNalla post with tips for life by a wellwisher aged chumma 97.Really itz great to hear abt him.see how he tells abt saving 739 people out of 740 in a hospital & his suggestion for a big hospital to meet anysort of emergency.//
We will have here also some Doctors like him.But who cares for them in our country when we have so many important affairs of the Filmstars to report and publish?
Thank you Muniyappan for your concern.
//உடல் நலத்துடன் இருக்க படிக்கட்டுக்களில் ஏறிச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்//
பதிலளிநீக்குபடிக்கட்டில் அடிக்கரி ஏறி இறங்கினால் முட்டி தேய்ந்து விடும் என்று யாரோ கூற கேட்டு இருக்கிறேன்.. நடை வேறு படிக்கட்டு நடை வேறு
நல்ல பதிவு சார்..
கிரி சொன்னது…
பதிலளிநீக்கு//உடல் நலத்துடன் இருக்க படிக்கட்டுக்களில் ஏறிச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்//
படிக்கட்டில் அடிக்கரி ஏறி இறங்கினால் முட்டி தேய்ந்து விடும் என்று யாரோ கூற கேட்டு இருக்கிறேன்.. நடை வேறு படிக்கட்டு நடை வேறு
நல்ல பதிவு சார்..//
யாரோ சொல்வதைக் கேட்காதீர்கள் கிரி.97 வயது டாக்டர் சொல்வதைக் கேளுங்கள்.
ஒரு உயர்ந்த மனிதரின் வாழ்வியல் அனுபவம்
பதிலளிநீக்குமிக அற்புதமான குறிப்பீடுகள்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
ஆ.முத்துராமலிங்கம் சொன்னது…
பதிலளிநீக்குஒரு உயர்ந்த மனிதரின் வாழ்வியல் அனுபவம்
மிக அற்புதமான குறிப்பீடுகள்.
பகிர்ந்தமைக்கு நன்றி.//
மிகுந்த நன்றி.ஆ.மு..
நல்ல பகிர்வு சார். இது மாதிரி உபயோகமான மொழிப்பெயர்ப்புகளை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
பதிலளிநீக்குகல்கி சொன்னது…
பதிலளிநீக்குநல்ல பகிர்வு சார். இது மாதிரி உபயோகமான மொழிப்பெயர்ப்புகளை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.//
நன்றி,கல்கி.
டாக்டரைப் போல உபயோகமான மனிதர்கள் உலக்த்துக்கு நிறைய வேண்டும்.
///60 வயது வரை உங்கள் குடும்பத்துக்காக உழையுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் வாழும் சமூகத்திற்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.இதுவே நீங்கள் சேவைகள் புரியத் தொடங்கும் தருணம்//
பதிலளிநீக்குஇந்த கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன்
பிரியமுடன்.........வசந்த் சொன்னது…
பதிலளிநீக்கு///60 வயது வரை உங்கள் குடும்பத்துக்காக உழையுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் வாழும் சமூகத்திற்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.இதுவே நீங்கள் சேவைகள் புரியத் தொடங்கும் தருணம்//
இந்த கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன்//
நன்றி ,வசந்த்.
//தேவை இல்லாமல் அறுவைச் சிகிச்சைகளுக்கும்,அவற்றின் வலிகளின் கொடுமைகளுக்கும் ஏன் ஆளாகிறீர்கள்? எனக்குத் தெரிந்து இசைக்கு நிறைய நோய்களைக் குணப் படுத்தும் ஆற்றல் இருக்கிறது,அதுவும் மற்ற மருத்துவர்கள் கற்பனையே செய்யாத அளவுக்கு.//
பதிலளிநீக்குஇதற்கு மேல் தொடர முடியவில்லை.காரணம் நேற்றைக்கு முந்தைய தினம் மைக்கேல் ஜாக்சனின் மரண தினம்.இதில் எது முரண் என்பதில் குழப்பம்.மருத்துவர் கருத்துப்படி அறுவை சிகிச்சைகள் மைக்கேல் ஜாக்சனின் இசையை முறியடித்து விட்டதா?50 வயதில் போக வேண்டிய உடல்வாகா அது:( அதுவும் இதய அழுத்தத்தால்.
//வாழ்க்கை சம்பவங்களால் நிறைந்தது//
பதிலளிநீக்குஇதன் தொடர்வரிகள் மிகவும் ஆழமானதும் மனரீதியானதும் கூட என நினைக்கிறேன்.உடற்பயிற்சி செய்வதற்கும் கூட மனம் சம்பவங்களால் அழுத்தப் படாமல் இருக்கவேண்டும்.இல்லையென்றால் மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்றுடன் ஒருங்கிணையாது.
நான் ஆங்கில மூலத்திற்கு எட்டிப்பார்க்கவேயில்லை.எட்டிப்பார்க்க தேவையில்லாத வகையில் எழுத்தின் கருத்துக்கள்.நன்றி சார்!
பதிலளிநீக்குஅருமையான பதிவு.தொடருங்கள்.
பதிலளிநீக்குGreat!!!Greetings from Norway!
பதிலளிநீக்குhttp://worldtamilrefugeesforum.blogspot
sarvadesatamilercenter.blogspot.com
ராஜ நடராஜன்,குடந்தை அன்புமணி,Shan Nalliah / GANDHIYIST மூவருக்கும் எனது மனம் கனிந்த நன்றிகள்.
பதிலளிநீக்குஇது போன்ற பதிவுகள் தமிழ்மணத்தில் அவஸ்யம் இருக்க வேண்டும். அனுப்பு என்பதை சொடுக்கினேன். இணைந்து விட்டது. ஏற்கனவே இந்த தலைப்பு இணையாமல் இருந்து இருக்கும் போல?
பதிலளிநீக்கு