வியாழன், ஜூன் 11, 2009

சாணக்கியனின் சிறுகதை.(ரசனை உரை)

சாணக்கியனின் 'உரத்த சிந்தனை ' வலைப் பூவில் நேற்று ஒரு சிறுகதை படித்தேன்.

'சாக்லேட் சாப்பிடாத சிறுவன்'

அதற்கு இப்படிப் பின்னூட்டம் இடாமல் என்னால் இருக்க முடியவில்லை.

''மனம் விட்டுச் சொல்கிறேன்,அருமை.அருமையினும் அருமை.
எல்லா விதத்திலும் சிறப்பான சிறுகதை.
உங்கள் பாத்திரப் படைப்பின் திறம் கண்டு நானே கூசிப் போனேன்.
வாழ்க.வளர்க.''

ஒரே பக்கத்தில் இவ்வளவு செறிவான பாத்திரப் படைப்பினைப் படித்து எவ்வளவு நாட்கள் ஆயிற்று.

படித்து விட்டுச் சொல்லுங்கள்,சாணக்கியனுக்கு வாழ்த்துக்களை.

அவரது இடுகை முகவரி:http://vurathasindanai.blogspot.com/2009/06/blog-post_10.html

24 கருத்துகள்:

  1. நான் விளையாட்டாக எழுதப்போன ஒரு கதைக்கு இத்தகைய அங்கீகாரமா... ! மிக்க நன்றி. தொடர்ந்து உங்களிடம் இப்படி பாராட்டுப் பெற முயல்வேன்!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்தே ஒரு தனிப்பதிவுன்னா...
    அப்ப இந்த கதை நிச்சயம் படிக்க வேண்டும்!!
    படிக்கின்றேன் சார்.
    படித்ததோடு விடாமல் அதன் தரம் உணர்ந்து எல்லோரிடமும் கொண்டு செல்ல முயற்சிப்பது எத்தனை நல்ல விசயம் ரொம்ப நன்றி சார்

    பதிலளிநீக்கு
  3. அய்யா
    கதைக்குள் கதை வைத்து டூட்டி பிரூடியையே கொடுத்திருக்கிறார் சாணக்யன். வித்தியாசங்களை என்னமாய் முயன்றிருக்கிறார்.?.எல்லோரும் ரசிக்கும் வகையில்.நல்ல முயற்சி.நிறைய எழுதட்டும் .அடிக்கடி சென்று ஊக்குவிப்போம்.அய்யா குடத்துக்குள் இருக்கும் விளக்கை குன்றின் மேல் வைப்பது போல நீங்கள் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று ஊக்குவிப்பது மிகவும் உயர்ந்த பாங்கு.யாருக்கு வரும் ?சீக்கிரம் சந்திக்கிறோம்.
    கார்த்திகேயன்
    அமீரகம்.

    பதிலளிநீக்கு
  4. சாணக்கியன் சொன்னது…

    நான் விளையாட்டாக எழுதப்போன ஒரு கதைக்கு இத்தகைய அங்கீகாரமா... ! மிக்க நன்றி. தொடர்ந்து உங்களிடம் இப்படி பாராட்டுப் பெற முயல்வேன்!//

    கலையின் வெளிப்பாடே அதனுடைய முயலாமையில் இருக்கிறது.
    முயலாமை வேறு.முயற்சி இன்மை வேறு.தியானம் மாதிரி.
    உங்களுக்கு இந்த முறை கலைமகள் தானாக வந்தருளி இருக்கிறாள்.
    மீண்டும் காத்திருங்கள்,முயன்றபடி.
    வாழ்த்துகள் சாணக்கியன்.

    பதிலளிநீக்கு
  5. ஆ.முத்துராமலிங்கம் சொன்னது…

    வாழ்த்தே ஒரு தனிப்பதிவுன்னா...
    அப்ப இந்த கதை நிச்சயம் படிக்க வேண்டும்!!
    படிக்கின்றேன் சார்.

    நன்றி ஆ.மு.,சாணக்கியன் சார்பிலும்.

    பதிலளிநீக்கு
  6. Raju சொன்னது…

    Thanks for the intro. :-)//

    Please read the story and tell me your views,Raju.

    பதிலளிநீக்கு
  7. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

    அய்யா
    கதைக்குள் கதை வைத்து டூட்டி பிரூடியையே கொடுத்திருக்கிறார் சாணக்யன். வித்தியாசங்களை என்னமாய் முயன்றிருக்கிறார்.?.எல்லோரும் ரசிக்கும் வகையில்.நல்ல முயற்சி.நிறைய எழுதட்டும் .அடிக்கடி சென்று ஊக்குவிப்போம்.

    உங்களுக்குள்ளும் மிக வீரியமான ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறான்,கார்த்திகேயன்.அவனை நீங்கள் இன்னும் படைப்புத் துறைக்குள் அனுமதிக்காமல் வைத்திருக்கிறீர்கள்!
    கூடிய விரைவிலேயே அவனைச் சந்திப்பேன்.

    பதிலளிநீக்கு
  8. பாராட்டுவதற்க்கு மனசு இல்லணே, பெரிய மனசு வேனும்!
    அவரை பாராட்டி, நீங்கள் என் மனதில் உயர்ந்துவிட்டீர்கள்!!

    பதிலளிநீக்கு
  9. படித்து விட்டேன்..
    அருமையான கதை..
    என் பின்னூட்டம் சரியா என்று பாருங்கள்..

    பதிலளிநீக்கு
  10. கலையரசன் சொன்னது…
    பாராட்டுவதற்க்கு மனசு இல்லணே, பெரிய மனசு வேனும்!
    அவரை பாராட்டி, நீங்கள் என் மனதில் உயர்ந்துவிட்டீர்கள்!!//

    மனம் உருகி இறைவனைப் பலதும் பாராட்டித் துதிக்கும் போது என்ன நடக்கிறது,கலை?நீங்கள் கரைந்து இன்னொரு பேராற்றலுக்கு உங்களுக்குள் வழிவிடுகிறீர்கள்.
    அதே போல மனம் நிறைய, உண்மையான நெகிழ்ச்சியுடன் இன்னொருவரைப் பாராட்டும் போதும் உங்களை இழந்து அவரது நல்லியல்புகளோடு இணைகிறீர்கள்.

    ஒருவரை இகழும் போது நீங்கள் மட்டுமே எப்போதும் போல உங்களுடன் இருக்கிறீர்கள்!

    ஆணும்,பெண்ணும் புணர்வதற்கு ஒப்ப,இருவருக்குமே இன்பம் தரும் செயல் சகமனிதன் ஒருவனைப் பாராட்டுவதுதான்.

    அதற்கு எனக்கு வாய்ப்பளிக்கும் நண்பர்கள் அனைவரையும் நான் போற்றி மகிழ்வேன்.

    நன்றி,கலை.

    பதிலளிநீக்கு
  11. ஐயா நல்ல அறிமுகம், படித்தேன், ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  12. //வாழ்த்தே ஒரு தனிப்பதிவுன்னா...
    அப்ப இந்த கதை நிச்சயம் படிக்க வேண்டும்!!
    படிக்கின்றேன் சார்.
    படித்ததோடு விடாமல் அதன் தரம் உணர்ந்து எல்லோரிடமும் கொண்டு செல்ல முயற்சிப்பது எத்தனை நல்ல விசயம் ரொம்ப நன்றி சார்//
    ரிப்பீட்டேய்.

    பதிலளிநீக்கு
  13. அமர பாரதி சொன்னது…
    //வாழ்த்தே ஒரு தனிப்பதிவுன்னா...
    அப்ப இந்த கதை நிச்சயம் படிக்க வேண்டும்!!
    படிக்கின்றேன் சார்.
    படித்ததோடு விடாமல் அதன் தரம் உணர்ந்து எல்லோரிடமும் கொண்டு செல்ல முயற்சிப்பது எத்தனை நல்ல விசயம் ரொம்ப நன்றி சார்//
    ரிப்பீட்டேய்.//

    ஒருவரை இகழும் போது நீங்கள் மட்டுமே எப்போதும் போல உங்களுடன் இருக்கிறீர்கள்!

    ஆணும்,பெண்ணும் புணர்வதற்கு ஒப்ப,இருவருக்குமே இன்பம் தரும் செயல் சகமனிதன் ஒருவனைப் பாராட்டுவதுதான்.
    அதற்கு எனக்கு வாய்ப்பளிக்கும் நண்பர்கள் அனைவரையும் நான் போற்றி மகிழ்வேன்.//

    நன்றி அமரபாரதி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சார் நீங்கள் அலைபேசியில் ரசித்து சொல்லியதிலிருந்தே, கதை உங்களை எந்த அளவிற்கு தாக்கம் கொடுத்துள்ளது என்று புரிந்துகொண்டேன். படித்துவிட்டு வருகின்றேன்

    பதிலளிநீக்கு
  15. //குமாருக்கு இப்பொழுது 30 வயதாகிறது. பெண் சுகம் இன்னதென்று அவன் இன்னும் அறிந்திலன்!//

    பகுதி 2 க்கு செல்லும் பொழுது !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    நியாமாண உண்மைத் தெரிகின்றது

    பதிலளிநீக்கு
  16. ஆ.ஞானசேகரன் சொன்னது…
    //குமாருக்கு இப்பொழுது 30 வயதாகிறது. பெண் சுகம் இன்னதென்று அவன் இன்னும் அறிந்திலன்!//

    பகுதி 2 க்கு செல்லும் பொழுது !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    நியாமாண உண்மைத் தெரிகின்றது//

    ரசனைக்கு வாழ்த்துகள்,ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  17. மனம் திறந்து பாராட்ட பெரிய மனது வேண்டும் !

    உங்களிடம் இருக்கு, பாராட்டுகள் ஐயா !

    பதிலளிநீக்கு
  18. கோவி.கண்ணன் சொன்னது…
    மனம் திறந்து பாராட்ட பெரிய மனது வேண்டும் !

    உங்களிடம் இருக்கு, பாராட்டுகள் ஐயா !//

    உங்களிடமும் நான் அதனை இப்போது கண்கிறேனே,கோவி.கண்ணன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. நல்ல திறமைகளை கண்டு இடனுக்குடன் தட்டிக் கொடுக்கின்றீர்கள். இன்றைய நாட்களில் அருகிவரும் இந்த ஆரோக்கியமான ப்ழக்கம் சொல்கிறது நீங்கள் படைப்புகளை மதிக்கும் விதத்தை. ஒரு சின்ன வேண்டுதல். உன்காளின் ஒருவர் வாழும் ஆலயம் கதையை கதை வடிவில் தரலாமே????

    பதிலளிநீக்கு
  20. அருண்மொழிவர்மன் சொன்னது

    …உன்காளின் ஒருவர் வாழும் ஆலயம் கதையை கதை வடிவில் தரலாமே????//

    கதையைப் படமாக்கலாம்.படத்தைக் கதையாக்கினால் சுவாரசியமாக இருக்குமா அருண்மொழிவர்மன்?

    ஹாலிவுட்டில் கூட படம் வெளியாவதற்கு முன்னர்தான் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிடுவார்கள்.அது படத்தின் மார்க்கட்டிங்கிற்காக.

    எப்படி இருப்பினும் தங்கள் ஆர்வத்திற்கும்,அக்கறைக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி அருண்மொழிவர்மன்.

    பதிலளிநீக்கு
  21. உண்மைதான். ஆனால் அது ஒரு நல்ல திரைப்படம். புதிய தலைமுறையில் பலருக்கு அந்த திரைப்படம் பற்றி தெரியாது . அதன் டிவிடி, விசிடி யும் இங்கே கிடைப்பதில்லை. அதனால் தான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  22. அருண்மொழிவர்மன் சொன்னது…
    உண்மைதான். ஆனால் அது ஒரு நல்ல திரைப்படம். புதிய தலைமுறையில் பலருக்கு அந்த திரைப்படம் பற்றி தெரியாது . அதன் டிவிடி, விசிடி யும் இங்கே கிடைப்பதில்லை. அதனால் தான் கேட்டேன்.//

    மீண்டும் நன்றி,அருண்மொழி.முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு