திங்கள், ஜூன் 08, 2009

ஆவி நாய் (திரைப் பட ரசனை)

ஆவி நாய்.
(THE GHOST DOG)
LIVE BY THE CODE.DIE BY THE CODE.

எழுத்து,இயக்கம் : ஜிம் ஜார்முஷ்
நடிப்பு :ஃபாரஸ்ட் விட்டேகர்
சாமுராயின் நெறி அவனது மரணத்தில் தெரியும்.
-ஹக குரே (இலைகளின் நிழலில்),சாமுராயின் புத்தகம்.

கொலைகளைப் பிறந்த நாள் கேக் ஊட்டி விடுவதைப் போல உங்களுக்குள் ஒரு திரைப் படம் ஊட்டி விட முடியுமா,பாருங்கள் 'கோஸ்ட் டாக்'.
இவ்வளவு முறையாக வன்முறையைச் சித்தரிக்கும் படத்தை நான் அண்மையில் பார்க்கவில்லை.
இதனைக் கதை என்பதனை விட ஒரு நவீன சாமுராயின் வாழ்க்கையின் ஒரு பகுதி எனலாம்.
இனிப் படம்...
வெளிர் நீல வானில் தன்னந்தனியே பறக்கும் ஒரு சாம்பல் புறா.அதனுடைய பறவைப் பார்வையாக காமிரா அந்த அமெரிக்கச் சிறு நகரத்தைக் காண்பித்துக் கொண்டே வருகிறது.ஆகாயத்தில் இருந்து பார்த்தால் நமது கணக்கில் ஆம்பூர்,வாணியம்பாடி போல ஒரு தொழில் நகரம் அது.
பின்னணியில் ஒரு ஜப்பானிய இசை,மனதை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் கொண்டு செல்கிறது.
கடைசியாக காமிரா ஒரு மொட்டை மாடியில் பலகைகளால் வேய்ந்த ஒரு மர வீட்டில் போய்த் தேங்கி நிற்கிறது.
இரவு.
ஓரிரண்டு மஞ்சள் விளக்குகளின் மெல்லொளியில் அந்த மொட்டை மாடி மர வீடு எளிமையாகத், தனிமையாக நிற்கிறது.அதன் வாசல் முழுக்க வித விதமான புறாக்கள்.ஒரு பக்கம் ஒரு பெரிய புறாக் கூண்டு.
வீட்டின் உள்ளே அமர்ந்து அமைதியாக ஒருவன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான்.அதுதான் 'சாமுராயின் நெறி முறைகள்' என்று பிரபலமாகக் கூறப்படும் 'ஹக குரே' என்ற பதினேழாம் நூற்றண்டைச் சேர்ந்த ஒரு சாமுராயின் நூல்.
அதனுடைய வரிகளை ஒரு கனத்த ஆண்குரல் நமக்குச் சொல்கிறது.
'சாமுராயின் நெறி அவனது மரணத்தில் தெரியும்.'
ஒவ்வொரு வரியுமே ஒரு ஸென் கவிதை போலச் சொல்லப் படுகிறது.
அந்தப் பதினேழாம் நூற்றாண்டுப் புத்தக வரிகளின் விரிவுரையாக, இன்றைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டு செல்கிறது படம்.
மரணத்தின் தியானம்தான் ஒரு சாமுராயின் வாழ்க்கை முறை.
எந்த நேரத்திலும் சாகத் தயராக இருக்க வேண்டும் என்பதே சரியான ஒரு போர் வீரனின் இலக்கணம் என்று சொல்லப் படுகிறது.
படித்துக் கொண்டிருப்பவன் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவன்.ஆறடிக்கு மேல் உயரமாய் உருண்டு திரண்டிருக்கும் அவன்தான் 'ஆவி நாய்'.அவனுக்குப் பெயரே சொல்லப் படுவதில்லை.இந்த அடைமொழியால் மட்டுமே அழைக்கப் படுகிறான்.

மொழியே தெரியாத ஒருவனுடன் அவனது நட்பு,சிறுமி ஒருத்தியிடம் அவன் காட்டும் தூய அன்பு,வினோதமான அவனது வழிபாடு,கள்ளங் கபடமற்ற அவனது குழந்தைச் சிரிப்பு,எல்லோவற்றிற்கும் மேல் அவனது உயிரை ஒரு முறை காப்பாற்றிய ஒரு அயோக்கியனிடம் அவன் கொண்டிருக்கும் விசுவாசம்,விலங்குகள்,பறவைகளை அவன் நேசிக்கும் இயற்கையான மனித நேயம்,அவனது புத்திக் கூர்மை இப்படி முழுக்கச் சொல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் அவனைப் பற்றிச் சொல்லப் படும் தகவல்கள்தான் அவனை முழுக்கத் தெரிந்து கொண்டே தீர வேண்டும் என்ற ஆர்வத்தை நம்முள் படம் முடியும் வரை தூண்டிக் கொண்டே இருக்கிறது.

அவனுக்கும் உள்ளூரில் இருக்கும் சிறிய மாஃபியாக் கும்பலுக்கும் நடக்கும் மோதல்தான் படமே.
குழந்தைகளின் வாட்டர் கலர்களைப் போலப் பயமுறுத்தாத ரத்தம் சிந்தல்.
உணர்ச்சிகளைத் தூண்டாத,அமைதியான கொலைகள்.
பூக்களைக் கொய்வதைப் போல மனித உயிர்களைப் பறிக்கும் அந்த சாமுராயைக் கொஞ்ச நேரத்திலேயே நாமும் நம்மை அறியாமலேயே நேசித்து விடுகிறோம்.

அழகான பெண்கள்,மயிர்க் கூச்செறியும் சண்டைக் காட்சிகள்,ஆடம்பரமான கார்த் துரத்தல்கள்,நெஞ்சைப் பிழியும் உணர்ச்சிகள்,குத்துப் பாட்டுக்கள்,வீர வசனங்கள்,உரத்த காமெடிகள் எதுவுமே இல்லாமல் இந்தப் படம் நம்மைக் கட்டிப் போடுகிறதே எப்படி?
மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவைத் துல்லியமாகச் சித்தரிப்பதை விட வேறு கேளிக்கையே தேவை இல்லை என்பதற்கு இந்தப் படமே உதாரணம்.

இந்த 'மரணத்தின் தியானத்தைப்' பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

33 கருத்துகள்:

  1. சார் பார்த்து விடுகிறேன்..

    படம் பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. ஐயா
    கண்டிப்பாக பார்க்கிறேன்,பாரஸ்ட் விட்டேகர் மிக நல்ல நடிகர், இடி அமீனாக -தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து படத்தில் வந்து ஆஸ்கார் வாங்கியவர்.போன் பூத் போன்ற படங்கள் மூலம் தன நடிப்பை நிரூபணம் செய்தவர்,நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்,நன்றிகள் பல ,டாரண்ட் டவுன்லோடு சுட்டி
    http://www.mininova.org/tor/2217522
    கார்த்திக்கேயன்
    அமீரகம்

    பதிலளிநீக்கு
  3. //இவ்வளவு முறையாக வன்முறையைச் சித்தரிக்கும் படத்தை நான் அண்மையில் பார்க்கவில்லை.//

    ஆகா... முதலிலேயே முடிவையும் சொல்லிவிட்டு பிறகு ஒன்றன் பின் ஒன்றாக சொல்லும் பாங்கு சூப்பர் சார்.. படம் பார்க்கும் எண்ணத்தை உருவாக்கிவிடுகின்றது

    பதிலளிநீக்கு
  4. //மரணத்தின் தியானம்தான் ஒரு சாமுராயின் வாழ்க்கை முறை.
    எந்த நேரத்திலும் சாகத் தயராக இருக்க வேண்டும் என்பதே சரியான ஒரு போர் வீரனின் இலக்கணம் என்று சொல்லப் படுகிறது.//
    நல்ல வர்ணனையாக இருக்கின்றது சார்....

    பதிலளிநீக்கு
  5. டக்ளஸ்....... சொன்னது…

    NIce Review..
    Eager to see.
    You will like it if you like a little bit slow phased movies.

    பதிலளிநீக்கு
  6. கிரி சொன்னது…

    சார் பார்த்து விடுகிறேன்..

    படம் பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன்//

    நண்பர் கார்த்திகேயன் அனுப்பிய சுட்டியைப் பாருங்கள்,கிரி.

    பதிலளிநீக்கு
  7. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

    ஐயா
    கண்டிப்பாக பார்க்கிறேன்,பாரஸ்ட் விட்டேகர் மிக நல்ல நடிகர், இடி அமீனாக -தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து படத்தில் வந்து ஆஸ்கார் வாங்கியவர்.போன் பூத் போன்ற படங்கள் மூலம் தன நடிப்பை நிரூபணம் செய்தவர்,நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள்,நன்றிகள் பல ,டாரண்ட் டவுன்லோடு சுட்டி
    http://www.mininova.org/tor/2217522
    கார்த்திக்கேயன்
    அமீரகம்//

    உங்கள் கூடுதல் தகவல்களுக்கு மிகுந்த நன்றிகள்,கார்த்திகேயன்.

    பதிலளிநீக்கு
  8. ஆ.ஞானசேகரன் சொன்னது…

    //இவ்வளவு முறையாக வன்முறையைச் சித்தரிக்கும் படத்தை நான் அண்மையில் பார்க்கவில்லை.//

    ஆகா... முதலிலேயே முடிவையும் சொல்லிவிட்டு பிறகு ஒன்றன் பின் ஒன்றாக சொல்லும் பாங்கு சூப்பர் சார்.. படம் பார்க்கும் எண்ணத்தை உருவாக்கிவிடுகின்றது//

    நன்றி,ஞானசேகரன்.படத்தைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஆ.ஞானசேகரன் சொன்னது…

    //மரணத்தின் தியானம்தான் ஒரு சாமுராயின் வாழ்க்கை முறை.
    எந்த நேரத்திலும் சாகத் தயராக இருக்க வேண்டும் என்பதே சரியான ஒரு போர் வீரனின் இலக்கணம் என்று சொல்லப் படுகிறது.//
    நல்ல வர்ணனையாக இருக்கின்றது சார்....//

    இந்தப் படத்தை பார்த்த பிறகுதான் நான் அந்த 'HAGA KURE,THE BOOK OF SAMURAI' புத்தகத்தைப் படிக்கப் போகிறேன்,ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  10. சார் எங்கேயிருந்து பிடிக்கிறீர்க்ள் இந்த மாதிரி படஙக்ளை.. இனிமே உங்க வீட்டுல அப்ப அப்ப வந்து உங்கள் பாக்கணுமே. (டிவிடிய லவுட்டிட்டு போயிடலாமில்ல..)

    பதிலளிநீக்கு
  11. Cable Sankar சொன்னது…

    சார் எங்கேயிருந்து பிடிக்கிறீர்க்ள் இந்த மாதிரி படஙக்ளை.. இனிமே உங்க வீட்டுல அப்ப அப்ப வந்து உங்கள் பாக்கணுமே. (டிவிடிய லவுட்டிட்டு போயிடலாமில்ல..)//

    மனைவி அமைவதெல்லாம் மட்டுமல்ல,படங்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான் ஷங்கர்!
    நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று அன்புடன் அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல படத்தை அறிமுகப்படித்தியதற்கு நன்றி, பாஸ்!

    பதிலளிநீக்கு
  13. கலையரசன் சொன்னது…

    நல்ல படத்தை அறிமுகப்படித்தியதற்கு நன்றி, பாஸ்!//

    நன்றி கலையரசன்.படத்தைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான நடை! :)

    ஆனால் ஒரேயொரு குறை. கருப்பர் இனத்தவர்கள் ஒருவருக்கொருவர் (அவர்களுக்குள் மட்டும்) கூப்பிட்டுக்கொள்ளும் வார்த்தை ‘Dog' ஆனால் நிஜமான அர்த்தத்தில் அல்ல.

    நீங்க தமிழ் படுத்தும்பொழுது, ‘நாய்’ என எழுதியது கொஞ்சம் உறுத்துது. நீங்க தெரிஞ்சு எழுதலைன்னாலும், ஆங்கிலப்பட தலைப்புகளை, அப்படியே தமிழ்படுத்துவதையோ.., அல்லது டப்பிங் பட ரேஞ்சிற்கு தலைப்பை கொடுப்பதையோ.. ‘ஹாலிவுட்’டின் ஒரே தமிழக பிரதிநிதி என்ற வகையில்... என் கண்டனத்தை... பதிவு செய்கிறேன். :) :) :) :) :)

    பதிலளிநீக்கு
  15. //அழகான பெண்கள்,மயிர்க் கூச்செறியும் சண்டைக் காட்சிகள்,ஆடம்பரமான கார்த் துரத்தல்கள்,நெஞ்சைப் பிழியும் உணர்ச்சிகள்,குத்துப் பாட்டுக்கள்,வீர வசனங்கள்,உரத்த காமெடிகள் எதுவுமே இல்லாமல் இந்தப் படம் நம்மைக் கட்டிப் போடுகிறதே எப்படி?//

    பார்த்துவிட்டு பதில் சொல்லுகிறோம் ஐயா..

    பதிலளிநீக்கு
  16. ஹாலிவுட் பாலா சொன்னது…
    அருமையான நடை! :)

    ஆனால் ஒரேயொரு குறை. கருப்பர் இனத்தவர்கள் ஒருவருக்கொருவர் (அவர்களுக்குள் மட்டும்) கூப்பிட்டுக்கொள்ளும் வார்த்தை ‘Dog' ஆனால் நிஜமான அர்த்தத்தில் அல்ல.

    நீங்க தமிழ் படுத்தும்பொழுது, ‘நாய்’ என எழுதியது கொஞ்சம் உறுத்துது. நீங்க தெரிஞ்சு எழுதலைன்னாலும், ஆங்கிலப்பட தலைப்புகளை, அப்படியே தமிழ்படுத்துவதையோ.., அல்லது டப்பிங் பட ரேஞ்சிற்கு தலைப்பை கொடுப்பதையோ.. ‘ஹாலிவுட்’டின் ஒரே தமிழக பிரதிநிதி என்ற வகையில்... என் கண்டனத்தை... பதிவு செய்கிறேன். :) :) :) :) :)//

    தங்கள் பாராட்டுக்கும்,எனக்குத் தெரியாத, புதிய தகவல்களுடன் கூடிய கண்டனத்துக்கும் நன்றி பாலா.:) :) :) :) :)!

    சாமுராய்களின் எஜமான விசுவாசத்துக்காகத்தான் ’நாய்’ என்று ஹீரோவுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன்.இந்த அமெரிக்க உள்குத்து விவகாரம் பற்றி நான் ஏதும் அறியேன்.அத்னால்தான்
    படத்துக்கு எனது பெயரை வைக்க விரும்பாமல் உள்ளதை உள்ளபடியே மொழி பெயர்த்தேன்.
    அந்த சூப்பர் இயக்குநருக்கு நம்மால் செய்ய முடிந்த மரியாதை.

    பதிலளிநீக்கு
  17. உழவன் " " Uzhavan " சொன்னது…

    பார்த்துவிட்டு பதில் சொல்லுகிறோம் ஐயா..//

    கண்டிப்பாக,உழவன்.வருகைக்கு ந்ன்றி.

    பதிலளிநீக்கு
  18. படத் தகவலுக்கு நன்றிங்க சார்!

    பதிலளிநீக்கு
  19. ஒரு புது மாதிரியான படத்தை பற்றி மிக நேர்த்தியா சொல்லி இருக்கீங்க. நல்ல எழுத்து.
    தொடர்ந்து படிக்கின்றேன் உங்க எழுத்தை!!!

    பதிலளிநீக்கு
  20. ராஜ நடராஜன் சொன்னது…
    படத் தகவலுக்கு நன்றிங்க சார்!

    படத்தை விடப் படத்தில் குறிப்பிடப் படும் ‘ஹக குரே’ படியுங்கள்,ராஜ நடராஜன்.
    புத்த மதம் எப்படியெல்லாம் பயன் பட்டிருக்கிற்து என்பது புரியும்,கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸத்தைப் போல.

    பதிலளிநீக்கு
  21. ஆ.முத்துராமலிங்கம் சொன்னது…
    ஒரு புது மாதிரியான படத்தை பற்றி மிக நேர்த்தியா சொல்லி இருக்கீங்க. நல்ல எழுத்து.
    தொடர்ந்து படிக்கின்றேன் உங்க எழுத்தை!!!//

    என் எழுத்தை விட அதில் நான் குறிப்பிடும் பெரியவர்களின் எழுத்தை எல்லோரும் படிக்க வேண்டும் என்பதே எனது அவா.அது முற்றிலும் உங்களை மாற்றி அமைக்கும் என்பதே எனது நம்பிக்கை.நன்றி முத்துராம்லிங்கம்.

    பதிலளிநீக்கு
  22. vinoth gowtham சொன்னது…
    படம் பார்க்க வேண்டும்..//

    நன்றி,வினோத்.

    பதிலளிநீக்கு
  23. உங்களுக்கு பின் தொடர்கிறேன் போட வந்தால் படத்துக்கான இடத்தைக் காணோமே!

    பதிலளிநீக்கு
  24. ராஜ நடராஜன் சொன்னது…

    உங்களுக்கு பின் தொடர்கிறேன் போட வந்தால் படத்துக்கான இடத்தைக் காணோமே!//

    புரியவில்லையே ராஜ நடராஜன்!

    பதிலளிநீக்கு
  25. அருமை. கண்டிப்பாக பார்க்க வேண்டும் சார்.

    http://mynandavanam.blogspot.com/search/label/FAQ

    இந்த சுட்டியில் உங்களுக்கு ஒரு வேலை வைத்து இருக்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
  26. வண்ணத்துபூச்சியார் சொன்னது…
    அருமை. கண்டிப்பாக பார்க்க வேண்டும் சார்.

    http://mynandavanam.blogspot.com/search/label/FAQ

    இந்த சுட்டியில் உங்களுக்கு ஒரு வேலை வைத்து இருக்கிறேன் சார்.//

    நீங்களும் பாருங்கள்,நானும் பார்க்கிறேன்,சூர்யா.

    பதிலளிநீக்கு
  27. //பூக்களைக் கொய்வதைப் போல மனித உயிர்களைப் பறிக்கும் அந்த சாமுராயைக் கொஞ்ச நேரத்திலேயே நாமும் நம்மை அறியாமலேயே நேசித்து விடுகிறோம்//

    அதுதான் உண்மையான திரைகதையின் பலமாக இருக்க முடியும்.

    நல்ல விமர்சனம்..

    படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்..

    இனி டிவிடி தேடி அலைய வேண்டும்

    பதிலளிநீக்கு
  28. சார் நீங்கள்தான் ஓருவர் வாழும் ஆலயம் பட இயக்குனரா..? நான் இப்போதுதான் உங்கள் புரோபைல் பார்த்து தெரிந்து கொண்டேன்..

    அந்த படம் என்னால் மறக்க முடியாத படம். நான் சிறுவனாக இருக்கும் போது திருநெல்வேலியை சுற்றி படப்பிடிப்பு செய்யபட்ட படம்.. அதனால் எனக்கு அது குறித்த ஞாபகம் இப்போதும் இருக்கிறது.

    ஒரே பெண்ணால் ஒருவன் உலகத்தில் பெண்களே மோசம் என நினைப்பதும் ஒருவன் அதே பெண்ணால் பெண்கள்தான் தெய்வம் என நினைப்பதாக கூட வருமே....


    நல்ல படம்.

    பதிலளிநீக்கு
  29. Kanna சொன்னது…

    நல்ல விமர்சனம்..

    படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்..

    இனி டிவிடி தேடி அலைய வேண்டும்//

    மேலே நண்பர் கார்த்திகேயன் அனுப்பிய சுட்டியைப் பார்த்து டவுன்லோட் செய்து கொள்ளலாமே,கண்ணா.

    பதிலளிநீக்கு
  30. Kanna சொன்னது…
    சார் நீங்கள்தான் ஓருவர் வாழும் ஆலயம் பட இயக்குனரா..? நான் இப்போதுதான் உங்கள் புரோபைல் பார்த்து தெரிந்து கொண்டேன்..

    அந்த படம் என்னால் மறக்க முடியாத படம். நான் சிறுவனாக இருக்கும் போது திருநெல்வேலியை சுற்றி படப்பிடிப்பு செய்யபட்ட படம்.. அதனால் எனக்கு அது குறித்த ஞாபகம் இப்போதும் இருக்கிறது.

    ஒரே பெண்ணால் ஒருவன் உலகத்தில் பெண்களே மோசம் என நினைப்பதும் ஒருவன் அதே பெண்ணால் பெண்கள்தான் தெய்வம் என நினைப்பதாக கூட வருமே....


    நல்ல படம்.//

    பராட்டுக்கு நன்றி,கண்ணா.
    திருநெல்வேலியும்,குற்றாலமும் எனக்குச் சொந்த ஊரைப் போல.

    பதிலளிநீக்கு
  31. //
    குழந்தைகளின் வாட்டர் கலர்களைப் போலப் பயமுறுத்தாத ரத்தம் சிந்தல்.
    உணர்ச்சிகளைத் தூண்டாத,அமைதியான கொலைகள்.
    பூக்களைக் கொய்வதைப் போல மனித உயிர்களைப் பறிக்கும் அந்த சாமுராயைக் கொஞ்ச நேரத்திலேயே நாமும் நம்மை அறியாமலேயே நேசித்து விடுகிறோம்
    //
    அருமையான வருணனைகள்.

    பதிலளிநீக்கு