ஞாயிறு, ஜூன் 14, 2009

ஒரு உண்மைச் சம்பவம்,ஆனால் எத்தனை திருப்பங்கள்

நண்பர் விஜய் ஷங்கரின் இடுகையில் நான் ஆங்கிலத்தில் படித்த ஒரு உண்மைச் சம்பவத்தைத் தமிழில் தர முயன்றிருக்கிறேன்.
ஒரு திரைப் படத்தில் கூட இவ்வளவு சுவாரசியமான திருப்பங்கள் நிகழ நாம் பார்த்திருக்க முடியாது.
ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்போவோர் பார்க்க வேண்டிய சுட்டி:
http://www.vijayashankar.in/2009/06/interesting-story-from-ab-seniors-blog.html

இனித் தமிழில்:

1994 இல் அமெரிக்கக் குற்றவியல் துறையின் பிரசிடென்ட் ஆன டாக்டர்.டான் ஹார்பர் மில்ஸ் தனது வருடாந்திர விருந்தொன்றில், கூட்டத்தினரை வியப்பில் ஆழ்த்திய இந்த உண்மைச் சம்பவத்தினைக் கூறுகிறார்.

எவ்வளவு சட்டச் சிக்கல்கள் நிறைந்த குழப்பமான மரணம் அது!

1994,மார்ச் மாதம் 23ம நாள்.
ரொனால்ட் ஓபஸ் என்பவன் தனது பத்தாவது மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறான்.
வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட விரக்தியே தனது தற்கொலைக்குக் காரணம் என்று கடிதமும் எழுதி வைத்திருக்கிறான் ஓபஸ்.
ஆனால் அவனது உடலைப் பரிசோதித்த மருத்துவ நிபுணரோ, ஓபஸ் தலையில் குண்டடி பட்ட காயத்தினால்தான் இறந்திருக்கிறான் என்று கூறினார் .

ஓபஸ் பத்தாவது மாடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கும் போது,இடையில் இருக்கும் ஏதோ ஜன்னலில் இருந்து பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டுகள்தான் அவன் தலையில் வெடித்து அவன் இறந்திருக்கிறான் என்று பின்னர் தெரிய வருகிறது.

ஆனால்,ஓபஸ்,துப்பாகியால் சுட்டவன் இருவருக்குமே ஒரு விஷயம் தெரியாது.

கீழே எட்டாவது மாடியில், அங்கு வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளிகளின் பாதுகாப்பிற்காக வலை கட்டி வைத்து இருக்கிறார்கள் என்பதே அது.
அந்தக் கட்டிடத்தில் யாரும் பத்தாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலையே செய்து கொள்ள முடியாது!

எனவே ஓபஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் அது சாத்தியப் பட்டிருக்க முடியாது. ஆதலால் அவனது சாவுக்குக் காரணம்,தலையில் அடிபட்டிருக்கும் குண்டடியே, இது யாரோ ஒருவனின் கொலை முயற்சியே என்று குற்றம் சாட்டுகிறார் குற்றவியல் துறை மருத்துவர்.

விசாரணையில் சுட்டவர் யாரென்று தெரிந்து விடுகிறது.

ஒரு வயதான கிழவர்!

தனது மனைவியுடன் வாய்ச் சண்டை முற்றிக் கிழவியைச் சுட்டு விடுவேன் என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இருக்கிறார் அவர்.கிழவி அதற்கும் அடங்காமல் பேசிய போது துப்பாக்கியின் விசையை ஆத்திரத்தில் அழுத்தி விட்டார் முதியவர்.
துப்பாக்கியில் இருந்து பாய்ந்து வந்த குண்டுகள்,கிழ்வியிடம் இருந்து குறி தப்பித் தற்கொலைக்காக் கீழே குதித்து விழுந்து கொண்டிருந்த ஓபசின் தலையைத் துளைத்து விட்டன!

ஒருவன்'ஏ 'வைக கொள்ளும் முயற்சியில் 'பி' சாவதற்குக் காரணமானாலும் அது 'பி'யைக் கொன்ற கொலைக் குற்றமே என்பதே சட்டம்.எனவே ஓபசைக் கொன்ற கொலைக் குற்றவாளியாகத்தான் கிழவர் கருதப் பட வேண்டும் என்று சட்ட ரீதியாகச் சொல்லப் பட்டது .
ஆனால் கிழவரின் வாதமோ வேறு.

வயதான தனது மனைவியை அடக்குவதற்குத், தான் அடிக்கடி துப்பாக்கியைக் காட்டிச் 'சுட்டு விடுவேன்' என்று மிரட்டுவது தனது வழக்கந்தான் என்றாலும் ஒருபோதும் துப்பாக்கியில் குண்டுகள் இருந்ததில்லை ,அது எப்போதும் காலித் துப்பாக்கியே என்று அவர் சாதித்தார்.
கிழவியும் அதனை உண்மைதான் என்று ஒப்புக் கொண்டாள்.
எனவே தனது மனைவியையே தான் கொல்லும் எண்ணத்தில் இல்லாத போது தான் எப்படி இன்னொருவர் சாவுக்குக் காரணமாக இருக்க முடியும் என்று கிழவர் வாதாடினார்.
துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தற்செயலாக நிரப்பப் பட்டிருக்கலாமே ஒழிய ஒருவரைக் கொல்லும் நோக்கத்தில் அல்ல,எனவே இது திட்டமிடப் பட்ட கொலை அல்ல,ஒரு விபத்தே என்று முதியவரும் ,அவரது மனைவியும் மன்றாடுகிறார்கள்.
இப்போது துப்பாக்கியில் குண்டுகளை யார் நிரப்பி இருப்பார்கள் என்று தீர விசாரிக்கையில் இன்னொரு சாட்சி வருகிறார்.
ஆறு வாரங்களுக்கு முன் அந்த முதிய தம்பதியரின் மகன், துப்பாக்கியில் குண்டுகளைப் போட்டுக் கொண்டிருந்ததைத் தான் நேரடியாகப் பார்த்ததாக அந்த சாட்சியம் சொல்லிற்று!
அவர்களது மகனுக்குக் கொடுத்து வந்த பண உதவியை நிறுத்தச் சொல்லி விட்டாள்,கிழவி.எப்போதும் தனது தாயைக் காலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் அப்பாவைப் பற்றித் தெரிந்து வைத்திருந்த மகன்,பணம் வர முட்டுக் கட்டையாக இருந்த அம்மாவைப் பழி வாங்க இதனைப் பயன் படுத்திக் கொண்டான்.
அப்பாவுக்குத் தெரியாமல் துப்பாக்கியில் தோட்டாக்களைப் போட்டு வைத்து விட்டான்!
எனவே ஓபசின் கொலை வழக்கில் வயதானவர்களின் மகனே கொலையாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டது.

இப்போது வருவதுதான் எல்லாவற்றையும் விட மிகப் பெரிய திருப்பம். திருப்பங்களின் ராஜா!

அந்த மகன் வேறு யாருமல்ல ,ரொனால்ட் ஒபஸ்தான்!!

ஆறு வாரங்கள் ஆகியும் தன் தாயைத் தான் திட்டமிட்டபடி கொல்ல முடியவில்லையே என்ற விரக்தியில் பத்தாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறான் ஓபஸ்.
அப்பாவின் துப்பாக்கியில் அவன் நிரப்பிய தோட்டாக்களே அவன் உயிரைக் குடித்து விட்டன.
எனவே ஓபஸ் செய்து கொண்டது தற்கொலையே என்று சட்டம் தீர்ப்புச் சொல்லியது!

59 கருத்துகள்:

 1. சார்.. இது உண்மை சம்பவம் கிடையாது. இது 1994-ல் சொல்லப்பட்ட கதையும் கிடையாது.

  1987-ல் ஹார்பர் மில்ஸ், தானாகவே உருவாக்கிய இந்த ‘கதை’யை ஒரு மீட்டிங்கில் சொல்ல, அதை 1994-ல் யாரோ இண்டர்னெட்டில் போட்டு இருக்காங்க.

  நம்ம ஊரு ஆளுங்களுக்கு கிடைக்க இவ்ளோ நாள் ஆகியிருக்கு! அவ்ளோதான்! :):)

  இருந்தாலும் கதை நிச்சயம் சுவாரசியம் தான்..!!

  ----------

  ஏன்னா.. அமெரிக்காவில்.. லோட் ஆகாத துப்பாக்கியை காட்டி மிரட்டினால் கூட அதிக பட்சமாக 5 வருடம் வரை சிறை தண்டனை உண்டு.

  பதிலளிநீக்கு
 2. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நல்ல திரில்லான திருப்பங்களாக மற்றும் உங்கள் எழுத்துகளில் சுவாரிசத்துடன் நல்லாவே இருக்கு சார்.....

  பதிலளிநீக்கு
 3. \\அந்த மகன் வேறு யாருமல்ல ,ரொனால்ட் ஒபஸ்தான்!!

  ஆறு வாரங்கள் ஆகியும் தன் தாயைத் தான் திட்டமிட்டபடி கொல்ல முடியவில்லையே என்ற விரக்தியில் பத்தாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறான் ஓபஸ்.
  அப்பாவின் துப்பாக்கியில் அவன் நிரப்பிய தோட்டாக்களே அவன் உயிரைக் குடித்து விட்டன.
  எனவே ஓபஸ் செய்து கொண்டது தற்கொலையே என்று சட்டம் தீர்ப்புச் சொல்லியது!\\

  நினைத்து பார்க்க முடியாத திருப்பம்.,
  ஒரே குடும்பத்திற்குள்!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 4. சார்.. சூப்பர்.. திரைக்கதை சார்.. என் மனதில் ஒரு படம் ஓட ஆரம்பித்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 5. The story is false. No such incident has ever been reported. Most importantly, however, Dr. Don Harper Mills says he did tell the story at the 1994 dinner and that he made it up about 10-years earlier.. It was intended to be something humorous and absurd but started being circulated as true.
  http://www.truthorfiction.com/rumors/r/ronaldopus.htm

  பதிலளிநீக்கு
 6. |அந்த மகன் வேறு யாருமல்ல ,ரொனால்ட் ஒபஸ்தான்!!|

  உண்மையிலே அதிர வைக்குதுங்க!
  எத்தனை திருப்பங்கள். சினிமாவை விட சஸ்பன்ஸ்.. திக்.. திக்..!!

  "Pulp Fiction" ஐ விட படு சுவாரசியமான திருப்பங்கள் கொண்ட உண்மை சம்பவம்தான்.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

  இதில் குறிப்பாக
  1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
  2-புத்தம்புதிய அழகிய templates
  3-கண்ணை கவரும் gadgets
  ஒரு முறை வந்து பாருங்கள்
  முகவரி http://tamil10.com/tools.html

  பதிலளிநீக்கு
 8. Dear Mr Shanmughapriyan

  I enjoyed reading that story ( fiction or not ) in Tamil.

  Regards
  Vijayashankar

  பதிலளிநீக்கு
 9. விறுவிறுப்பான கதையை எங்களுக்காக தமிழ்படுத்தியதற்கு நன்றி..

  வாசிக்கும் போதே ஒரு வித்தியாசமான அனுபவம்

  :)

  பதிலளிநீக்கு
 10. ஸ்ஸப்ப்ப்பா
  தலை சுத்துது. திருப்பம் திருப்பம்னு ரொம்ப திருப்பீட்டாங்க

  :))))

  பதிலளிநீக்கு
 11. இந்த கதையை இன்னுமா ஹாலிவுட்ல படம் எடுக்காம வச்சிருக்காங்க?
  அருமையான 5 நிமிட திரில்லர் பார்த்தது போல பிரமை!!

  பதிலளிநீக்கு
 12. யாத்ரீகன் சொன்னது…

  Whew !!!! :-)//

  இதைப் படித்தவுடன் எனக்கும் இதே உணர்வுதான் ஏற்பட்டது,யாத்ரீகன்.சம உணர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. ஹாலிவுட் பாலா சொன்னது…

  சார்.. இது உண்மை சம்பவம் கிடையாது. இது 1994-ல் சொல்லப்பட்ட கதையும் கிடையாது.

  1987-ல் ஹார்பர் மில்ஸ், தானாகவே உருவாக்கிய இந்த ‘கதை’யை ஒரு மீட்டிங்கில் சொல்ல, அதை 1994-ல் யாரோ இண்டர்னெட்டில் போட்டு இருக்காங்க.

  நம்ம ஊரு ஆளுங்களுக்கு கிடைக்க இவ்ளோ நாள் ஆகியிருக்கு! அவ்ளோதான்! :):)

  இருந்தாலும் கதை நிச்சயம் சுவாரசியம் தான்..!!

  ----------

  ஏன்னா.. அமெரிக்காவில்.. லோட் ஆகாத துப்பாக்கியை காட்டி மிரட்டினால் கூட அதிக பட்சமாக 5 வருடம் வரை சிறை தண்டனை உண்டு.//

  கூடுதலான உண்மைத் தகவல்களுக்கு நன்றி பாலா.
  இது உண்மைச் சம்பவமாக இருப்பின் வாழ்க்கைக்கு ஜே!
  கற்பனையாக இருந்தால் அதனைக் கற்பனை செய்தவருக்கு ஜே!ஜே!!

  பதிலளிநீக்கு
 14. குடுகுடுப்பை சொன்னது…

  எதிர்பார்க்காத திருப்பங்கள்......//

  நன்றி குடுகுடுப்பை சார்.

  பதிலளிநீக்கு
 15. கெக்கே பிக்குணி சொன்னது…

  This is a hoax. Please see my comments in VijayShankar's blog post too.//

  இது கட்டுக் கதையாகவே இருப்பினும்,I am appreciating for its sustaining interest sir.Thank you for your visit and comment.

  பதிலளிநீக்கு
 16. ஆ.ஞானசேகரன் சொன்னது…

  வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நல்ல திரில்லான திருப்பங்களாக மற்றும் உங்கள் எழுத்துகளில் சுவாரிசத்துடன் நல்லாவே இருக்கு சார்.....

  நன்றி ஞானசேகரன்,உங்கள் தொடரும் ரசனைக்கு.

  பதிலளிநீக்கு
 17. Cable Sankar சொன்னது…

  சார்.. சூப்பர்.. திரைக்கதை சார்.. என் மனதில் ஒரு படம் ஓட ஆரம்பித்துவிட்டது.//

  எனக்குத் தெரியும்.எந்த சினிமாக்காரருக்கும் பொறி தட்டும்,ஷங்கர்.

  பதிலளிநீக்கு
 18. ஆ.முத்துராமலிங்கம் சொன்னது…

  |அந்த மகன் வேறு யாருமல்ல ,ரொனால்ட் ஒபஸ்தான்!!|

  உண்மையிலே அதிர வைக்குதுங்க!
  எத்தனை திருப்பங்கள். சினிமாவை விட சஸ்பன்ஸ்.. திக்.. திக்..!!

  "Pulp Fiction" ஐ விட படு சுவாரசியமான திருப்பங்கள் கொண்ட உண்மை சம்பவம்தான்.//

  நன்றி ஆ.மு.ஆனால் இது உண்மைச் சம்பவம் இல்லை என்று பல நண்பர்கள் சொல்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 19. தமிழினி சொன்னது…

  உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

  இதில் குறிப்பாக
  1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
  2-புத்தம்புதிய அழகிய templates
  3-கண்ணை கவரும் gadgets
  ஒரு முறை வந்து பாருங்கள்
  முகவரி http://tamil10.com/tools.html

  பார்க்கிறேன்.பயன் படுத்திக் கொள்கிறேன்,தமிழினி.
  உங்கள் ஆதரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. பெயரில்லா சொன்னது…

  The story is false. No such incident has ever been reported. Most importantly, however, Dr. Don Harper Mills says he did tell the story at the 1994 dinner and that he made it up about 10-years earlier.. It was intended to be something humorous and absurd but started being circulated as true.
  http://www.truthorfiction.com/rumors/r/ronaldopus.htm//
  நண்பர்கள் பல பேரும் இதே கருத்தினைச் சொல்லி இருக்கிறார்கள்.கற்பனையாக இருந்தாலும் அதன் சுவாரசியத்துக்காகப் பாராட்டியே தீரவேண்டும் இல்லையா,நண்பரே?

  பதிலளிநீக்கு
 21. Vijay சொன்னது…

  Dear Mr Shanmughapriyan

  I enjoyed reading that story ( fiction or not ) in Tamil.

  Regards
  Vijayashankar//

  நீங்கள்தான் மூலவர். நான் உற்சவர்தான்,விஜய்.
  உங்கள் ஒப்புதலுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 22. கண்ணா || Kanna சொன்னது…

  விறுவிறுப்பான கதையை எங்களுக்காக தமிழ்படுத்தியதற்கு நன்றி..

  வாசிக்கும் போதே ஒரு வித்தியாசமான அனுபவம்

  :)//

  எனக்கு விஜய் சாரின் பதிவைப் படிக்கும் போது ஏற்பட்ட அதே அனுபவம் உங்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது,கண்ணா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 23. மங்களூர் சிவா சொன்னது…

  ஸ்ஸப்ப்ப்பா
  தலை சுத்துது. திருப்பம் திருப்பம்னு ரொம்ப திருப்பீட்டாங்க

  :))))//

  அதைத்தான் நான் தலைப்பில் சொல்லி இருக்கிறேன்,சிவா.நன்றி.

  பதிலளிநீக்கு
 24. கலையரசன் சொன்னது…

  இந்த கதையை இன்னுமா ஹாலிவுட்ல படம் எடுக்காம வச்சிருக்காங்க?
  அருமையான 5 நிமிட திரில்லர் பார்த்தது போல பிரமை!!//

  முழுப் படமாக்க முடியாது.ஒரு பகுதியாக வேண்டுமானால் யோசிக்கலாம்,கலை.நன்றி.

  பதிலளிநீக்கு
 25. நல்ல திரைக்கதை.. உங்க எழுத்து நடை அருமை

  பதிலளிநீக்கு
 26. ///
  இந்த கதையை இன்னுமா ஹாலிவுட்ல படம் எடுக்காம வச்சிருக்காங்க?
  அருமையான 5 நிமிட திரில்லர் பார்த்தது போல பிரமை!!//

  முழுப் படமாக்க முடியாது.ஒரு பகுதியாக வேண்டுமானால் யோசிக்கலாம்,கலை.நன்றி.
  ////


  இது ஏற்கனவே.. நாடகமா.. நிறைய முறை வந்தாச்சிங்க சார்.

  பதிலளிநீக்கு
 27. கோவி.கண்ணன் சொன்னது…

  தலையைச் சுற்றுது ! நல்ல தகவல்கள் !

  :)//

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி,கோவி.கண்ணன்.

  பதிலளிநீக்கு
 28. வினோத்கெளதம் சொன்னது…

  Sir,

  It is a hoax or Real incident !!..Watever it is..
  Really Thrilling & Interesting..//

  என்னுடைய உணர்வுகளையே பிரதிபலித்ததற்கு மகிழ்ச்சி,வினோத்.

  பதிலளிநீக்கு
 29. நசரேயன் சொன்னது…

  நல்ல திரைக்கதை.. உங்க எழுத்து நடை அருமை//

  நன்றி,நச்ரேயன்.

  பதிலளிநீக்கு
 30. ஹாலிவுட் பாலா சொன்னது…

  ///
  இந்த கதையை இன்னுமா ஹாலிவுட்ல படம் எடுக்காம வச்சிருக்காங்க?
  அருமையான 5 நிமிட திரில்லர் பார்த்தது போல பிரமை!!//

  முழுப் படமாக்க முடியாது.ஒரு பகுதியாக வேண்டுமானால் யோசிக்கலாம்,கலை.நன்றி.
  ////


  இது ஏற்கனவே.. நாடகமா.. நிறைய முறை வந்தாச்சிங்க சார்.//

  நாடகமாவா?எப்படி,பாலா?
  பத்தாவது மாடி,எட்டாவது மாடி வலை,ஜன்னலில் இருந்து ஓபஸ் விழ விழவே துப்பாக்கிச் சூடு எப்படி இதெல்லாம் நாடக மேடையில் சாத்தியமானது?

  பதிலளிநீக்கு
 31. இது உணமையில்லாவிடினும், மிக பிரபல எழுத்தாளர் திரு ஜெபிரி ஆர்ச்சர் , ஒரு முறை, நீங்கள் எழுதும் கதை நம்ப முடியவில்லையே , இது போல் சம்பவங்கள் நடக்க இயல்லுமா என்ற கேள்விக்கு, " நிஜ வாழ்கை, விசித்த்தரங்களும் , விநோதங்களும் நிரம்பியது, நான் எழுதுவுது / எழதியது அதன் ஒரு சதவிகிதத்துக்கு கூட ஈடாகாது .... ஒரே ஒரு உண்மை நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்... ஒரு சிறிய ஊரில் , ஏதோ காரணத்திற்காக பிறப்பிலேயே , இரு சகோதிரிகள் பிரிந்து விடுகின்றனர்... இருவருக்குமே இப்படி ஒரு கூட பிறந்த சகோதிரி உண்டென்று தெரியாது.... வளர்ந்து , பெரியவளாகி, இப்படி ஒரு ஆள் உண்டென்று அறிகிறார்கள், இருவரும் இருப்பதுவோ வெவ்வேறு நாடுகள், ...ஒரு நல்ல (?) நாளில் அதில் ஒரு சகோதிரி விமானம் மூலம் அடுத்தவர் நாட்டுக்கு வருகிறார், ... அவர் வசிப்பதோ ஒரு சின்ன டவுன் , ...எனவே கடைசி நிமிடத்தில் விமான நிலையத்து கிளம்புகிறார்.. நிறைய டிராபிக்கும் இல்லை, ... ஏற்கனேவே விமான நிலையத்தில் வந்த மற்ற சகோதிரி , யாரும் வரவில்லை , என தனியே கார் எடுத்து, தன கூட பிறந்தவளை பார்க்க அவர் வீட்டுக்கு போகிறார்... அந்த டிராபிக் எல்லாத சாலையில்... அந்த இரு கார்கள் மட்டும் மோதி கொள்கின்றன.. இருவரும் உடனே மரணம்....


  தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கவும் ... ( இப்பலாம் மேய்வது சற்று குறைச்சல் !!!!).. மேற்கில் நாடக துறையில் ..என்னென்னோவோ காண்பிப்பார்கள்... நம் ரஹ்மான் இசை அமைத்த பாம்பே ட்ரீம்சில் கூட , மழை, தீ, குடிசை, மாளிகைன்னு ரொம்ப அசத்துவாங்க... அதுலும். முதுகில் ஒரு கம்பியை கட்டிக்கொண்டு, மேல் இருந்து கிழே விழுவது ரொம்ப தத்ரூபமா இருக்கும் ... Lion KIng ல , அந்த காட்டு சீன , நிறைய மாடுகள் வந்து அந்த அப்பா சிங்கத்தை மிதிப்பது போன்ற காட்ச்சிகள் ரொம்ப நல்லா இருக்கும், .... ஒளி அமைப்பு, மியூசிக், செட், அப்பறம் நடிப்பு திறமை, நாடகமே ஒரு நடனம் போல இருக்கும்.

  பதிலளிநீக்கு
 32. விளக்கமான,இண்ட்ரஸ்டிங்கான பகிர்தலுக்கு நன்றி,சுந்தர்.

  பதிலளிநீக்கு
 33. Nice & interesting translation in Tamil.

  I remember to have read this "story" a couple of years back in a mail trail. But, still the suspense & the way of your narration kept me interested to read it fully.

  Thanks again for your translation.

  பதிலளிநீக்கு
 34. M Arunachalam சொன்னது…
  Nice & interesting translation in Tamil.

  I remember to have read this "story" a couple of years back in a mail trail. But, still the suspense & the way of your narration kept me interested to read it fully.

  Thanks again for your translation.

  Thank you for your valuable and encouraging comments.Mr.Arunachalam.

  பதிலளிநீக்கு
 35. ஆகா!
  அருமையான நிகழ்ச்சி/கற்பனை.
  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
  கன்னிகாவிற்காகக் காத்திருக்கிறோம். ஏமாற்றாதீர்கள்

  பதிலளிநீக்கு
 36. Here's how Mills explained his involvement with the story in a 1997
  interview:
  I made up the story in 1987 to present at the meeting, for entertainment
  and to illustrate how if you alter a few small facts you greatly alter the
  legal consequences. In 1994 someone copied it on to the Internet. I was
  told it had already garnered 200,000 enquiries on the Net. In the past two
  years I've had around 400 telephone calls about it - librarians,
  journalists, law students, even law professors wanting to incorporate it
  into text books.
  It was hypothetical; just a story made up to illustrate a point. It's hard
  to imagine anyone at that 1987 meeting took it for anything
  else.

  How did a 1987 illustrative anecdote morph into 1994's believed-to-be-true
  story? We'll likely never know. How did Dr. Mills come to concoct such a
  tale? As he said in a 1997 interview, "Some of it I wrote out, and some of
  it I invented as I went along."

  Ronald Opus never lived. And his death will never die.

  -Dilli Palli

  பதிலளிநீக்கு
 37. வலசு - வேலணை சொன்னது…
  ஆகா!
  அருமையான நிகழ்ச்சி/கற்பனை.
  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
  கன்னிகாவிற்காகக் காத்திருக்கிறோம். ஏமாற்றாதீர்கள்//

  நன்றி வலசு,வழக்கம் போல.

  நிறையத் தடவை சொன்னால் நன்றி என்ற வார்த்தை கூட நீர்த்துப் போகும் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால் இனிமேல் உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன்.ஓ.கே.?

  ‘கன்னிகா’ தொடர் பரிசீலனையில் இருக்கிறாள் என்பதே உண்மை.
  விட்டு,விட்டு எனது வசதிக்கு ஏற்ப வரும் ‘கன்னிகாவை’ ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாரா என்பதில் எனக்கு இருக்கும் தயக்கமே தாமதத்திற்குக் காரணம்..
  மீண்டும் அதே நன்றி!

  பதிலளிநீக்கு
 38. Muniappan Pakkangal சொன்னது…
  Nalla kathai Sir,Hollywood Bala commentum ungal patilum super.//

  வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி,முனியப்பன்.

  பதிலளிநீக்கு
 39. பெயரில்லா சொன்னது…
  How did a 1987 illustrative anecdote morph into 1994's believed-to-be-true
  story? We'll likely never know. How did Dr. Mills come to concoct such a
  tale? As he said in a 1997 interview, "Some of it I wrote out, and some of
  it I invented as I went along."

  Ronald Opus never lived. And his death will never die.

  -Dilli Palli//

  உபநிஷத ரிஷிகளைப் போலப்’பெயர் சொல்லாமல்’ ஆனால் எவ்வளவு உண்மையாக,சிரத்தையுடன் தகவலகளைப் பகிர்ந்திருக்கிறீர்கள்,நண்பரே!
  மற்றவர் படைப்புக்களை எல்லாம் தனது பெயரில் வெளியிட்டுப் பொய்ப் புகழைத் தேடிக் கொண்டிருப்பவரகள் மத்தியில் தனது பெயரே வேண்டாம் என்று எண்ணுவதற்கு அரிய மனம் வேண்டும்.நன்றி.

  மற்றும்,
  நான் உண்மை என்று நம்பினால்தான் எனது தாய்,மனைவி,குழந்தைகள்,கடவுள்,ஓபஸ் எல்லாமே உண்மை.
  எதுவரை தேடுகிறீர்களோ அது வரை உண்மை நீண்டு கொண்டே போகும்.
  உண்மை என்பதே பொய்மை தெரியாத வரையில்தான்.
  THE IMPORTANT THING IS THE TRUTH LYING BEHIND EVERY FACT.FACTS OF THIS STORY MAY BE UNTRUE BUT THE TRUTH OF BEAUTY OF LIFE'S IRONY PORTRAYED THERE IS REAL.

  பதிலளிநீக்கு
 40. //
  ‘கன்னிகா’ தொடர் பரிசீலனையில் இருக்கிறாள் என்பதே உண்மை.
  விட்டு,விட்டு எனது வசதிக்கு ஏற்ப வரும் ‘கன்னிகாவை’ ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாரா என்பதில் எனக்கு இருக்கும் தயக்கமே தாமதத்திற்குக் காரணம்..
  //
  நிச்சயமாக!
  போதுமான காலம் எடுத்து கன்னிகாவை வளர விடுங்கள். மிகமிக அருமையான காவியமாக அது அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக் கிடையாது.

  பதிலளிநீக்கு
 41. இது உண்மைக் கதை எனில் வெளியிட்டவருக்கு ஒரு ஜே..!

  இது கற்பனைக் கதை எனில் கதாசிரியருக்கு ஜே..! ஜே..!

  இதை படித்தவுடன் பதிவில் வெளியிட்டு எங்களுக்கும் அறிவு ஞானத்தைத் தந்திருக்கும் இந்த இளைஞரான பதிவருக்கு ஜே..! ஜே..! ஜே..!

  பதிலளிநீக்கு
 42. வலசு - வேலணை சொன்னது…
  நிச்சயமாக!
  போதுமான காலம் எடுத்து கன்னிகாவை வளர விடுங்கள். மிகமிக அருமையான காவியமாக அது அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக் கிடையாது.//

  உங்கள் இனிய ஊக்கத்துக்கு நன்றி,வலசு-வேலணை.
  உங்களுக்காகக் கன்னிகாவைத் தொடர்வேன்.

  பதிலளிநீக்கு
 43. உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…
  இது உண்மைக் கதை எனில் வெளியிட்டவருக்கு ஒரு ஜே..!

  இது கற்பனைக் கதை எனில் கதாசிரியருக்கு ஜே..! ஜே..!

  இதை படித்தவுடன் பதிவில் வெளியிட்டு எங்களுக்கும் அறிவு ஞானத்தைத் தந்திருக்கும் இந்த இளைஞரான பதிவருக்கு ஜே..! ஜே..! ஜே..!//

  நம் இருவரையும் படித்தால் ’அம்மா’ சந்தோஷப் படுவார்கள் என நம்புகிறேன்,சரவணன்!

  பதிலளிநீக்கு
 44. //
  உங்கள் இனிய ஊக்கத்துக்கு நன்றி,வலசு-வேலணை.
  உங்களுக்காகக் கன்னிகாவைத் தொடர்வேன்.
  //

  காத்திருக்கிறோம். அதே தமிழ்நடையுடனும் ஆழ்ந்த கருத்தக்களுடனும் வரவேண்டும் என்பது என் அவா.

  பதிலளிநீக்கு
 45. வலசு - வேலணை சொன்னது…

  காத்திருக்கிறோம். அதே தமிழ்நடையுடனும் ஆழ்ந்த கருத்தக்களுடனும் வரவேண்டும் என்பது என் அவா.//

  உங்கள் ஊக்கமும்,உற்சாகமுமே என்னை எழுத வைக்கும்,வலசு.

  பதிலளிநீக்கு
 46. சார் சுவாராசியமா இருக்கு.. ஆனால் தலை சுத்துது

  பதிலளிநீக்கு
 47. கிரி சொன்னது…
  சார் சுவாராசியமா இருக்கு.. ஆனால் தலை சுத்துது//

  திருப்பங்கள் நிறைய இருந்தால் தலை சுற்றத்தானே செய்யும்,கிரி.

  பதிலளிநீக்கு
 48. சுவாரஸ்யமா இருக்கு சார். இதை ஒரு சரியான இயக்குனர் படமாக எடுத்தால் நிச்சயமாக படம் முடியும் வரை ரசிகனை இருக்கையில் கட்டிப்போட்டு விடலாம்.

  பதிலளிநீக்கு
 49. கல்கி சொன்னது…
  சுவாரஸ்யமா இருக்கு சார். இதை ஒரு சரியான இயக்குனர் படமாக எடுத்தால் நிச்சயமாக படம் முடியும் வரை ரசிகனை இருக்கையில் கட்டிப்போட்டு விடலாம்.//

  நன்றி,கல்கி.

  பதிலளிநீக்கு
 50. சார், உங்களை 32 கேள்வி-பதில் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். அனுமதி கேட்காததற்க்கு மன்னிக்கவும்.
  http://kalkiyagiyanaan.blogspot.com/2009/06/blog-post_27.html

  பதிலளிநீக்கு
 51. கல்கி சொன்னது…

  சார், உங்களை 32 கேள்வி-பதில் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். அனுமதி கேட்காததற்க்கு மன்னிக்கவும்.
  http://kalkiyagiyanaan.blogspot.com/2009/06/blog-post_27.html//

  நன்றி,கல்கி.இதற்கு உங்கள் பதிவிலேயே எனது பதிலைச் சொல்லி இருக்கிறேன்,கல்கி.
  அழைப்புக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 52. //அந்த மகன் வேறு யாருமல்ல ,ரொனால்ட் ஒபஸ்தான்!!//

  திருப்பத்தின் உச்சம்.

  பதிலளிநீக்கு
 53. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

  பதிலளிநீக்கு