செவ்வாய், செப்டம்பர் 01, 2009

இரண்டு கதாநாயகர்கள் (உண்மைச் சம்பவம்)

மின்னஞ்சலில் வந்த ஒரு சுவாரஸ்யமான உண்மைக் கதை....
பல வருடங்களுக்கு முன்...
சிகாகோ மாநகரத்தின் நிழல் உலக தாதா ஆல் கெபோன்.
கள்ளச் சாராயம்,விபசாரம்,கொலைகள் போன்ற குற்றங்களின் சாம்ராஜ்யத்திற்குப் பல வருடங்களுக்கு அவன்தான் சக்ரவர்த்தியாக விளங்கினான்.
சட்டத்தின் பிடியிலிருந்து அத்தனை வருடங்களும் அவனைக் காப்பாற்றியது ஈசி எடி (EASY EDDIE) என்ற ஒரு வழக்கறிஞர்தான்.
சிறைக் கம்பிகளை எண்ணும் வாழ்க்கை தனக்கு வராமல் தடுத்த காரணத்திற்காக, எண்ண முடியாத அளவுக்கு ஈசி எடிக்குப் பணம் காசுகளை அள்ளி வழங்கினான்,ஆல்.
சிகாகோவிலேயே ஒரு மைதானம் அளவுக்கு ஈசி எடியின் எஸ்டேட் பங்களா இருந்தது.அது மட்டுமல்ல, அன்றைய சிகாகோவின் அனைத்து வசதிகளையும் அனுபவித்து வாழ்ந்தவர் அந்த வழக்கறிஞர்.
ஆல் மற்றவர்களுக்கு இழைக்கும் எவ்வளவு கொடூரமான குற்றங்களைக் கண்டும் சற்றும் மனம் பதறாத எடி,ஒரே விஷயத்தில் மட்டும் பதறிப் போவார்.

அது அவரது ஒரே மகனைப் பற்றித்தான்.
அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவ்வளவுதான்.உயிரே போய் விடும் அந்த வழக்கறிஞருக்கு. அவனுக்கு உயர்ந்த படிப்பறிவை அளித்தார்.அவன் கேட்ட அனைத்தையும் வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் தனது ஒரே செல்ல மகனுக்கு அவரால் கொடுக்க முடியாத ஒரே பொருள், தனது தந்தையின் பெயரைச் சொன்னால் அவனுக்குக் கிடைக்கும் மதிப்பையும்,மரியாதையையும்தான்.

ஒரு சமூகக் குற்றவாளிக்கு மனமறிந்து உடந்தையாக இருக்கும் தனது இழிவான அவப்பெயர், மகனது தூய வாழ்வைக் கறைப் படுத்தி விடக் கூடாது என்று எடி நினைத்தார்.அதற்கு ஒரே வழி, இதுநாள் வரை ஆலின் குற்றங்களை மூடி மறைத்த தவறுகளுக்குப் பரிகாரமாக அவற்றைப் பகிரங்கமாகக் காவல் துறையிடம் ஒப்புக் கொண்டு அரசுத் தரப்பு சாட்சியாகி விட வேண்டியதுதான்
என்று அவர் கருதினார்
ஆலும் அவனது மாஃபியாக் கும்பலும் தனது வாக்கு மூலத்தினால் சிறைக்குச் சென்றால்,இது வரையில் அவர் சம்பாதித்த அவரது அவப் பெயர் நீங்கி விடும்.ஆனால் அதற்குக் கொடுக்க வேண்டிய விலை என்னவென்று அவருக்குத் துல்லியமாகத் தெரியும்.

அவரது உயிர்.

ஆனால் உயிருக்குயிரான மகனுக்காக தனது உயிரையும் பணயம் வைக்கத் தயரானார்,எடி.

மகனுக்குச் சொத்துக்களை சம்பாதித்து விட்டுச் செல்வதை விட அவனுக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என்பதில் அந்தத் தந்தை உறுதியாக இருந்தார். (நமது அரசியல்வாதிகளுக்கும்,ஊழல் பேர்வழிகளுக்கும் அவர் ஒரு கெட்ட உதாரணம்!)

காவல் துறையிடம் சரணடைந்து, ஆல் கெபொனின் நிழலுலகக் கொடுமைகளுக்கு முடிவு கட்டினார் அந்தத் தந்தை.

ஒரே வருடத்திற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் தள்ளி இருந்த சிகாகோ தெரு ஒன்றில் அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.
அவர் இறந்த பின்னர் அவரது பாக்கெட்டிலிருந்து காவல் துறை கண்டெடுத்த பொருள்கள் இவைதான்.
ஒரு ஜெபமாலை,ஒரு சிலுவை,அவரது மதத்தின் புனித டாலர்,அன்றைய வார இதழில் வந்த ஒரு கவிதையின் கிழிந்த பக்கம்.
2.

இரண்டாம் உலகப் போர் உண்மைக் கதாநாயகர்களைப் படைத்துக் கொண்டிருந்த நேரம்.
இந்தச் சம்பவமும் அப்படிப் பட்ட ஒரு போர் வீரனைப் பற்றிய கதைதான்.
அந்த இளைஞன் லெஃடினட் கமாண்டர் பட்ச் ஓ' ஹேர்.
தெற்கு பசிபிக் கடலில் நங்கூரமிட்டு நின்றிருந்த லெக்சிங்டன் என்ற அந்த விமானம் தாங்கிக் கப்பலில் போர் விமானியாகப் பணி புரிந்தான் அந்த இளைஞன்.

ஒரு நாள் போர்ப் பயிற்சிக்காக ஓ'ஹேரின் விமானப் படை வானில் பறந்தது.
.நடுவானில் சற்றுத் தொலைவு போனதும்தான் ஓ'ஹேரின் விமானத்தில் எரிபொருள் அளவு காட்டும் கருவி பழுதடைந்த நிலையில் ,சரியாக வேலை செய்யாத காரணத்தினால், விமானத்தில் போதுமான பெட்ரோல் இல்லை என்பது அவனுக்குத் தெரிந்தது.
அவனை மட்டும் திரும்பிச் செல்லும்படி படைத் தலைவரிடமிருந்து இருந்து உத்தரவு வர, வேறு வழியின்றி அவன் கப்பலுக்குத்திரும்ப வேண்டியதானது.

திரும்பி கொண்டிருக்கும் வழியில் அவன் கண்ட காட்சி அவனது ரத்தத்தையே உறைய வைத்தது.
ஜப்பானிய எதிரி விமானங்களின் பெரிய அணி வகுப்பொன்று ஓ'ஹேரின் பயிற்சி விமானங்களைத் தாக்கி அழிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தன.
பயிற்சிக்காகப் பறந்து கொண்டிருக்கும் தனது படைப் பிரிவைச் சேர்ந்த விமானங்களோ,அல்லது விமானிகளோ, எதிர்பாராத இந்த ஜப்பானியத் தாக்குதலை எதிர் கொள்ளும் நிலையில் இல்லை என்பது ஓ'ஹேருக்கு உறுதியாகத் தெரியும்.
தனது நண்பர்களுக்கோ, அல்லது தொலைவில் நின்று கொண்டிருக்கும் தனது யுத்தக் கப்பலுக்கோ எச்சரிக்கைத் தகவல் தர முடியாத சூழ்நிலை.

விரைவாக முடிவெடுத்தான் அந்த இளைஞன்.
தனது விமானத்தைத் துணிச்சலுடன் ஜப்பானிய விமானங்களின் அணிவகுப்பினுள் ஓட்டினான். விமானத்தில் பொருத்தியிருந்த 50 காலிபர் துப்பாக்கிகளால் அதிக பட்சம் ஜப்பானிய விமானங்களை சுட்டுத் தள்ளியபடிய பறந்த இந்த ஒற்றை விமானியின் தற்கொலைத் தாக்குதலை எதிர் பார்க்காத எதிரி விமானப் படையின் அணிவகுப்புக் குலைந்து போனது.
நிறைய ஜப்பனிய விமானங்கள் தீப்பிடித்து எரியலாயின.
அவர்கள் தப்பித்து வேறு திசையில் சென்று விட்டனர்.
ஓ'ஹேரின் விமானப் படையும்,விமானிகளும் உயிரையும் பணயம் வைத்து அவன் ஆற்றிய துணிகரச் செயலால் காப்பாற்றப் பட்டனர்.பின்னர் போர்க் கப்பலுக்குத் திரும்பிய ஓ'ஹேரின் விமானத்தில் பொருத்தியிருந்த காமிராவின் மூலம் பதிவு செய்யப் பட்டிருந்த படச் சுருள் திரையிடப் பட்டுப் பார்க்கப் பட்டது.

அவன் ஒற்றையாக ஐந்து ஜப்பானியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தி இருந்தான்.!
இது நடந்தது பிப்ரவரி மாதம் 20ம் நாள்,1942.
அமெரிக்கக் கடற்படையின் முதல் காங்கிரஸ் விருதினை வழங்கி அவனது வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டிக் கௌரவித்தது அரசாங்கம்.

அடுத்த வருடமே போரில் ஒரு விமானத் தாக்குதலில் உயிரிழந்தான் பட்ச் ஓ'ஹேர்.
நாட்டுக்காக அந்த இளைஞன் உயிர் நீத்த போது அவனது வயது 29.
ஆனால் அவன் பிறந்து,வளர்ந்த நகரம் அந்த மாவீரனின் நினைவை மறக்கத் தயாராக இல்லை.
சிகாகோ நகரின் ஓ'ஹேர் பன்னாட்டு விமான நிலையம் அவனது பெயரை இன்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு கதாநாயகர்களையும் முடிச்சுப் போட்ட விதத்தில்தான் வாழ்க்கையின் திரைக் கதை நம்மைக் கட்டிப் போடுகிறது.

நாட்டுக்காகத் தனது உயிரையும் ஈந்த பட்ச் ஓ'ஹேர்தான், ஒரு மாபெரும் மாஃபியாக் கும்பலைப் பல வருடங்களாகச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்த ஈசி எடியின் ஒரே செல்ல மகன்!

43 கருத்துகள்:

  1. மிக சிறந்த பதிவு .....
    ஆல் போல் உங்கள் பணி தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  2. \\இந்த இரண்டு கதாநாயகர்களையும் முடிச்சுப் போட்ட விதத்தில்தான் வாழ்க்கையின் திரைக் கதை நம்மைக் கட்டிப் போடுகிறது.

    நாட்டுக்காகத் தனது உயிரையும் ஈந்த பட்ச் ஓ'ஹேர்தான், ஒரு மாபெரும் மாஃபியாக் கும்பலைப் பல வருடங்களாகச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்த ஈசி எடியின் ஒரே செல்ல மகன்!\

    சினிமாவில் கூட இப்படி பொருத்தமாக அமையாது.
    இறை விளையாட்டு, தந்தையின் அந்திமகால மனம், மகனிடம் இளவயதிலேயே,

    அது பாசம், இது நாட்டுப்பற்று

    இரண்டுக்கும் அவர்களின் உழைப்பு ஈடு செய்ய முடியாதது

    பதிலளிநீக்கு
  3. maha சொன்னது…

    மிக சிறந்த பதிவு .....
    ஆல் போல் உங்கள் பணி தொடரட்டும்
    நன்றி,மஹா.
    ஆல் போல என்று தமிழ் ஆலமரத்தைச் சொல்கிறீர்களா இல்லை இந்தக் கதையில் வரும் மாஃபியா சீஃப் ‘ஆல்’ ஐச் சொல்கிறீர்களா,மஹா?!

    பதிலளிநீக்கு
  4. நிகழ்காலத்தில்... சொன்னது…
    அது பாசம், இது நாட்டுப்பற்று

    இரண்டுக்கும் அவர்களின் உழைப்பு ஈடு செய்ய முடியாதது///

    நல்ல அனலிசிஸ்,சிவா.மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. கார்த்திக் சொன்னது…

    நல்ல பகிர்வு.. நன்றிகள் பல..//

    நன்றியும்,மகிழ்ச்சியும் கார்த்திக.

    பதிலளிநீக்கு
  6. டக்ளஸ்... சொன்னது…

    Sometimes Co-incidences also give some Interesting Matters.//

    Co-incidence makes great stories.I think human mind needs always wish some co-incidences to happen.
    Thank you Douglas,for your valuable comment.

    பதிலளிநீக்கு
  7. ஆ.ஞானசேகரன் சொன்னது…

    நல்ல பகிர்வு//

    மகிழ்ச்சி,ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  8. Raamji சொன்னது…

    Very good one..

    Raam//

    உங்கள் முதல் வருகைக்கு நன்றியும்,மகிழ்ச்சியும்,ராம்.

    பதிலளிநீக்கு
  9. அய்யா அற்புதம்
    நல்ல கதைகள்
    ரொம்ப அருமையாக உரைத்தீர்கள்?பகிர்வுக்கு
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  10. ஓ'ஹேர் பன்னாட்டு விமான நிலையம்
    பெயர் காரணம் அருமை
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. அருமையான முடிச்சு இறுதியில்.

    சூப்பர்

    பதிலளிநீக்கு
  12. அருமையான பகிர்வுங்க..

    திரைபடங்களை விஞ்சும் கதை..
    எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்..

    பதிலளிநீக்கு
  13. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) சொன்னது…
    அய்யா அற்புதம்
    நல்ல கதைகள்
    ரொம்ப அருமையாக உரைத்தீர்கள்?பகிர்வுக்கு
    மிக்க நன்றி

    மகிழ்ச்சி,கார்த்திகேயன்.

    பதிலளிநீக்கு
  14. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) சொன்னது…
    ஓ'ஹேர் பன்னாட்டு விமான நிலையம்
    பெயர் காரணம் அருமை
    பகிர்வுக்கு நன்றி..

    மீண்டும் மகிழ்ச்சி,கார்த்திகேயன்.

    பதிலளிநீக்கு
  15. பட்டிக்காட்டான்.. சொன்னது…
    அருமையான பகிர்வுங்க..

    திரைபடங்களை விஞ்சும் கதை..
    எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்..//

    வாழ்க்கையின் கதைகளுக்கு முன்னால் நம் கதைகள் எல்லாம் ’காக்கா நரி வடை கதைதான்’!
    வருகைக்கு மகிழ்ச்சி தம்பி.

    பதிலளிநீக்கு
  16. குடுகுடுப்பை சொன்னது…
    அருமையான முடிச்சு இறுதியில்.

    சூப்பர்//

    நன்றியும்,மகிழ்ச்சியும் சார்.

    பதிலளிநீக்கு
  17. எம்.எம்.அப்துல்லா சொன்னது…
    சார் சினிமாவை மிஞ்சுகிறதுசார்.//

    வாழ்க்கையின் ஒரு அணுதானே சினிமா நண்பரே.உங்கள் வருகைக்கு நன்றியும்,மகிழ்ச்சியும் அப்துல்லா.

    பதிலளிநீக்கு
  18. அப்துல்லா அண்ணன் சொன்னா மாதிரி தான், ...... உங்கள் எழுத்து... சினிமாவை மிஞ்சுகிறது ...அற்புதமான கதை ( ஒரு மகேஷ் பட் சினிமா ஞாபகம் வருகிறது... சஞ்சய் தத் , ராஜ் பாபர், அலோக் நாத் .... அப்பறம் அதே கதை , அர்ஜுன் , ரகுவரன், ..தமிழில் வந்தது ).... அதெற்கெல்லாம் ஆனா மூல கதை இப்ப தான் தெரியுது.

    பதிலளிநீக்கு
  19. //
    நமது அரசியல்வாதிகளுக்கும்,ஊழல் பேர்வழிகளுக்கும் அவர் ஒரு கெட்ட உதாரணம்!)
    //
    சரியாகச் சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  20. இதை வைத்து இன்னமுமா ஹாலிவுட்டில் படம் எடுக்கவில்லை?
    அருமையான கதை ஐயா..

    பதிலளிநீக்கு
  21. //உங்கள் வருகைக்கு நன்றியும்,மகிழ்ச்சியும் அப்துல்லா.

    //

    சார் நான் தொடர்ந்து வந்துகொண்டுதான் சார் இருக்கேன் நேரமின்மையால் பின்னூட்டமிடாது எஸ்கேப் ஆயிருவேன் :)

    பதிலளிநீக்கு
  22. அது ஒரு கனாக் காலம் சொன்னது…
    அப்துல்லா அண்ணன் சொன்னா மாதிரி தான், ...... உங்கள் எழுத்து... சினிமாவை மிஞ்சுகிறது ...அற்புதமான கதை ( ஒரு மகேஷ் பட் சினிமா ஞாபகம் வருகிறது... சஞ்சய் தத் , ராஜ் பாபர், அலோக் நாத் .... அப்பறம் அதே கதை , அர்ஜுன் , ரகுவரன், ..தமிழில் வந்தது ).... அதெற்கெல்லாம் ஆனா மூல கதை இப்ப தான் தெரியுது.//

    நன்றி சுந்தர் ராமன்.ஆனால் இது உண்மைக்கதை ஆதலால் சுடுவதர்கு வாய்ப்பில்லை.நீங்கள் எந்தப் படங்களைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  23. வலசு - வேலணை சொன்னது…
    //
    நமது அரசியல்வாதிகளுக்கும்,ஊழல் பேர்வழிகளுக்கும் அவர் ஒரு கெட்ட உதாரணம்!)
    //
    சரியாகச் சொன்னீர்கள்//
    நன்றி வலசு.

    பதிலளிநீக்கு
  24. கலையரசன் சொன்னது…
    இதை வைத்து இன்னமுமா ஹாலிவுட்டில் படம் எடுக்கவில்லை?
    அருமையான கதை ஐயா..

    நன்றி,கலை.ஒரு முழுப் படத்துக்கான ஸ்கோப் இதில் இருக்கிறதா என்று புலப்படவில்லை.

    பதிலளிநீக்கு
  25. எம்.எம்.அப்துல்லா சொன்னது…
    //உங்கள் வருகைக்கு நன்றியும்,மகிழ்ச்சியும் அப்துல்லா.

    //

    சார் நான் தொடர்ந்து வந்துகொண்டுதான் சார் இருக்கேன் நேரமின்மையால் பின்னூட்டமிடாது எஸ்கேப் ஆயிருவேன் :)
    //

    நேரம் இருக்கும் போது வாருங்கள் அப்துல்லா. அதுவே எனக்குப் பெருமகிழ்ச்சி தரும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. சார் சூப்பர்.. முடிவு எதிர்பாராது

    பதிலளிநீக்கு
  27. உண்மை மனதை தொடுகிறது..
    பகிர்விற்கு நன்றி..

    இதே விசயம் படமா எடுத்தா யாரும் நம்பமாட்டாங்க..

    உண்மை எப்போதும் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

    பதிலளிநீக்கு
  28. கிரி சொன்னது…
    சார் சூப்பர்.. முடிவு எதிர்பாராது//

    நன்றி,கிரி.

    பதிலளிநீக்கு
  29. தீப்பெட்டி சொன்னது…
    உண்மை மனதை தொடுகிறது..
    பகிர்விற்கு நன்றி..

    இதே விசயம் படமா எடுத்தா யாரும் நம்பமாட்டாங்க..

    உண்மை எப்போதும் கற்பனைக்கு அப்பாற்பட்டது.//

    உணமை,கற்பனை எல்லாவற்றையுமே நமது மனம்தானே தீர்மானிக்கிற்து,கணேஷ்.

    நன்றி.மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  30. சில உண்மைகள் கற்பனையவிட உயரத்தில் இருக்கும். அருமையான் பகிர்வு

    பதிலளிநீக்கு
  31. S.A. நவாஸுதீன் சொன்னது…
    சில உண்மைகள் கற்பனையவிட உயரத்தில் இருக்கும். அருமையான் பகிர்வு//

    உங்கள் முதல் பாராட்டுக்கு நன்றியும்,மகிழ்ச்சியும்.,நவாஸுதீன்

    பதிலளிநீக்கு
  32. // தனது ஒரே செல்ல மகனுக்கு அவரால் கொடுக்க முடியாத ஒரே பொருள், தனது தந்தையின் பெயரைச் சொன்னால் அவனுக்குக் கிடைக்கும் மதிப்பையும்,மரியாதையையும்தான்.

    அட, இப்படிக்கூட இருக்கானுங்களா..

    நம்மூரில், நியாயம் அநியாயம் தாண்டி கையில் காசிருந்தால் செல்வாக்கும் தானாகவே இருக்குமாறு நடத்துகிறார்கள்..

    பதிலளிநீக்கு
  33. மிக சிறந்த பதிவு சார்

    நன்றி.

    பதிலளிநீக்கு
  34. காரணம் ஆயிரம்™ சொன்னது… //
    அட, இப்படிக்கூட இருக்கானுங்களா..

    நம்மூரில், நியாயம் அநியாயம் தாண்டி கையில் காசிருந்தால் செல்வாக்கும் தானாகவே இருக்குமாறு நடத்துகிறார்கள்..//

    வருகைக்கும் கருத்துக்கும்,நன்றியும் மகிழ்ச்சியும் நண்பரே.

    பதிலளிநீக்கு
  35. புதுவை சிவா♠ சொன்னது…
    மிக சிறந்த பதிவு சார்

    நன்றி.//

    நன்றியும் ,மகிழ்ச்சியும் சிவா.

    பதிலளிநீக்கு
  36. உங்களை ஃபாலோ பண்ண முடியலேயே பாஸ். கொஞ்சம் பாருங்களேன்

    பதிலளிநீக்கு
  37. S.A. நவாஸுதீன் சொன்னது…
    உங்களை ஃபாலோ பண்ண முடியலேயே பாஸ். கொஞ்சம் பாருங்களேன்//

    நானே கணிணியில் தற்குறி! இருந்தாலும் நண்பர்களைக் கல்ந்தாலோசிக்கிறேன்,நவாஸுதீன்.

    நன்றி,நவாஸுதீன்.

    பதிலளிநீக்கு
  38. உங்க பதிவுகள் அனைத்தும் நல்லாருக்கு. முக்கியமா தொடர்கதைகள் உணர்வுபூர்வமாய்..

    நானும் தொடர் எழுதுவதுண்டு முன்பு..

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு