திங்கள், ஆகஸ்ட் 31, 2009

பெண்களுக்கு ஒரு முக்கிய செய்தி.

எனது டாக்டர் நண்பர் எனக்கு அனுப்பி இருந்த மின்னஞ்சல் ..

போன சனிக்கிழைமை இரவு மும்பை கேஸ் இரவு விடுதிக்கருகில் ஒரு இளம் பெண்ணை, அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கி இருக்கின்றனர்.பின்னர் அவளை வேறொரு இடத்தில் போட்டு விட்டுப் போய் விட்டார்கள்.

காவல் துறையினால் மீட்கப் பட்டு அவர்கள் விசாரித்த போது
எந்தக் கொடுமைகளையும் அந்தப் பெண்ணினால் நினைவு கூர முடியவில்லை.மருத்துவ பரிசோதனைகளில்தான் அவள் பலமுறை அடுத்தடுத்துக் கற்பழிக்கப் பட்டிருக்கிறாள் என்பது தெரிய வந்தது.
அதுமட்டுமல்ல அவளது ரத்தத்தில் ROHYPNOL என்ற மருந்து கலந்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

'பகல் நேரக் கற்பழிப்பு மருந்து ' என்று கொடுமைக்காரர்களால் செல்லமாக அழைக்கப் படும் அந்த மருந்து இப்போது பரவலாகப் பார்ட்டிகளில் உபயோகிக்கப் படுகிறது.குடிபானங்களில் சுலபமாகக் கரைந்து விடும் அந்த மருந்து குடித்தவர்களின் நினைவுகளை மட்டும் அழிப்பதில்லை,அந்தப் பெண்கள் கருத்தரிப்பதையும் தடை செய்து விடுகிறது.
கற்பழிப்பின் முக்கிய தடயமான ,பலியான பெண்ணின் கர்ப்பத்திலிருந்து தப்பிக்க அந்தக் கயவர்கள் பயன்படுத்தும் மருந்து இது.

கொடுமை என்னவென்றால் அந்தப் பெண் தற்காலிகமாக அல்ல, இனி நிரந்தரமாகவே கருத்தரிக்க முடியாமல் செய்து விடுகிறது அந்த மருந்து.
அந்த மருந்தைப் பற்றிய முழு விபரங்களை அறிய விரும்புவோர் பார்க்க..

http://en.wikipedia.org/wiki/Rohypnol.
பெண்கள் பார்ட்டிகளில் குளிர் பானங்களைக் குடிக்கும் முன்னர் எச்சரிக்கைகளைக் கடைப் பிடிக்க வேண்டுமெனக் காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
கொடுமை சூழ இந்த உலகத்தில்தான் நாம் பெண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி ....
அன்னை பராசக்திதான் அருள் புரிய வேண்டும்.

19 கருத்துகள்:

 1. //பெண்கள் பார்ட்டிகளில் குளிர் பானங்களைக் குடிக்கும் முன்னர் எச்சரிக்கைகளைக் கடைப் பிடிக்க வேண்டுமெனக் காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
  கொடுமை சூழ இந்த உலகத்தில்தான் நாம் பெண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி ....
  அன்னை பராசக்திதான் அருள் புரிய வேண்டும். //

  என்ன கொடுமைசார்... கேட்கவே இரத்தம் கொதிப்படைகின்றது.. இதற்கெல்லாம் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்..

  பதிலளிநீக்கு
 2. //கொடுமை சூழ இந்த உலகத்தில்தான் நாம் பெண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி ....
  அன்னை பராசக்திதான் அருள் புரிய வேண்டும்//

  நிச்சயம் அன்னை அருள்புரிவாள்.தவறு செய்தவர்கள் சட்டத்திலிருந்து தப்பினாலும் தெய்வம் தரும் பலவித சங்கடங்களில் இருந்து தப்பமுடியாது.

  பதிலளிநீக்கு
 3. இப்படிபோய் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்ச நாட்களில் வீதியிலே திரிகின்ற நாய்களை கூட புணர்ந்துவிடும் வாய்ப்புநிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

  ஐயா.. பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களும், அரசாங்கங்களின் உறுதிமொழிகளுக்கும் அப்பால் பெண்கள் நாளும் ஏதாவது முறையில் ஒடுக்கப்பட்டும் வன்முறைக்குள்ளக்கப்பட்டுக் கொண்டும்தானிருக்கிறார்கள்.

  பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவும், அழுத்தமும் கொடுப்பதோடு, நமது பங்களிப்பையும் அளிக்க வேண்டும் ஐயா....

  பதிலளிநீக்கு
 4. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

  பதிலளிநீக்கு
 5. கேக்கவே கொடுரமா இருக்கு சார்..
  இவர்களுக்கு எல்லாம் தூக்கு தண்டனை தான் தர வேண்டும்..

  (விடுமுறையில் ஊருக்கு வந்து உள்ளேன் சார்..அதனால் முன்போல் வலையுலகம் பக்கம் அடிக்கடி வர இயலவில்லை)

  பதிலளிநீக்கு
 6. இவங்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்ங்க. மனுஷ பிறப்பே கிடையாது இந்த ஜன்மங்கள்.

  பதிலளிநீக்கு
 7. சார் நீங்க சொல்லறது உண்மைதான்... இந்த காலத்துல பாராசக்தியே ஜாக்கிரதையா இருக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 8. \\இந்த உலகத்தில்தான் நாம் பெண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி ....
  அன்னை பராசக்திதான் அருள் புரிய வேண்டும்.\\

  God is Great

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. அதிர்ச்சியான பதிவு சார்.. தேவையானதும் கூட.. லிங்குங்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 10. அய்யா
  மிகவும் வேதனையடைந்தேன்
  மனைவியமைவதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம் என்பார்கள் அந்த கூற்று உண்மையே..
  இன்றைய இளைஙர்கள் பராசக்தியிடம் குடிப்பழக்கமில்லா மனைவி வேண்டும் என ப்ரார்த்தனை செய்யவேண்டும் போல,
  அய்யா உங்கள் பதிவுகளை தினமும் படிக்க ஆவலாய்
  உள்ளொம் எழுதும் உத்வேகத்தை பராசக்தி உங்களுக்கு தரட்டும்

  பதிலளிநீக்கு
 11. ரொம்ப நாட்களுக்கு முன் , சின்ன சின்ன ஊர்களில் கூட, கூல் ட்ரிங்க்ஸ்ல மயக்க மருந்து கலந்து, .... என்னவெல்லாமோ நடந்தது... இப்ப இத படிச்சவுடன் மனம் பதைக்கிறது....

  பதிலளிநீக்கு
 12. இந்த வேதனைச் சம்பவத்தின் ஆழ்ந்த உண்மையையும்,கொடுமையினையும் என்னுடன் சுமந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி.

  பதிலளிநீக்கு
 13. திகிலூட்டும் தகவல்கள். இது பற்றிய விழிப்புணர்வு எல்லோரிடத்திலும் ஏற்படுத்தப்படல் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 14. அந்தக்கயவர்களுக்கு தூக்கு தண்டனைதான் தரவேண்டும். என்ன கொடுமை.

  //இன்றைய இளைஙர்கள் பராசக்தியிடம் குடிப்பழக்கமில்லா மனைவி வேண்டும் என ப்ரார்த்தனை செய்யவேண்டும் போல,//

  அறிவுதேடும் கார்த்திகேயனிடமிருந்தா இப்படி ஒரு பின்னூட்டம். குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஆணாயிருந்தால் என்ன பெண்ணாயிருந்தால் என்ன. மறுபாதிகளுக்குத்தான் பாதிப்பே.

  பதிலளிநீக்கு
 15. சின்ன அம்மிணி சொன்னது…
  அறிவுதேடும் கார்த்திகேயனிடமிருந்தா இப்படி ஒரு பின்னூட்டம். குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஆணாயிருந்தால் என்ன பெண்ணாயிருந்தால் என்ன. மறுபாதிகளுக்குத்தான் பாதிப்பே.//

  நியாயமான கருத்து,சின்ன அம்மணி.கார்த்திகேயன் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 16. கொடூரமான இவ்வக்கிரங்கள் அழித்தொழிப்பது எப்போது ?!


  http://themes.dubuku.com

  பதிலளிநீக்கு
 17. சார் வருகிற ஆத்திரத்திற்கு அவனுகளை .....

  பதிலளிநீக்கு