யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி.
அதற்குப் பிறகு எனக்குள் வினோதமான நிகழ்வுகள் நடந்தன.ஆனால் அவற்றையெல்லாம் முக்தி,வீடுபேறு,விடுதலை என்று சொல்லப் படுவதுடன் எல்லாம் நான் சம்பந்தப் படுத்தவில்லை.ஏனெனில் அப்போது அவற்றைப் பற்றிய அனைத்தும் முற்றிலுமாக எனது சிஸ்டத்திலிருந்தே வெளியேறி இருந்தன.
அனைத்தும் என்னைப் பொறுத்த வரையில் முடிந்து விட்டிருந்தன.அவ்வளவுதான்.
அனைத்துத் தொடர்புகளும் அறுந்து விட்டிருந்தன.
ஒவ்வொரு எண்ணமும் தோன்றியவுடனேயே அது வெடித்துச் சிதறுகிறது.
அணுகுண்டு வெடித்த பின்னர் தோன்றும் பின்விளைவுகளைப் போல இந்த வெடித்தலும் பின் விளைவுகளை விட்டுச் செல்கிறது.
உடலின் ஒவ்வொரு செல்லுமே மாற்றத்துக்கு ஆளாகிது.
அது பழைய நிலைக்குத் திரும்பவே முடியாத மாற்றம்.முழு உடலையுமே அது நொறுக்கி விடுகிறது.அது எளிதான விஷயமல்ல.உடலின் ஒவ்வொரு செல்லும்,ஒவ்வொரு நரம்புமே வெடித்துச் சிதறுவதால் அதுதான் மனிதனின் முடிவு.
அந்தக் கொடுமையான உடலின் சித்திரவதைக்கு நான் ஆளானேன்.அந்த வெடித்தலை நீங்கள் அனுபவிக்க முடியாது.ஆனால் அதனுடைய பின்விளைவுகளை உணர முடியும்.அதற்குப் பின் உங்கள் உடலின் ரசாயனமே மாறிவிடுகிறது.புலன்கள் ஒரு ஒருங்கிணைப்பாளர் இன்றி,ஒரு மையமின்றி இயங்கத் தொடங்கி விடுகின்றன என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.அந்த ரசவாதமோ அல்லது உடலின் ரசாயனமே மாறினாலன்றி இந்த உயிரை எண்ணங்களிலிருந்தும்,எண்ணங்களின் தொடர்ச்சியில் இருந்தும் விடுவிக்க முடியாது.
அதற்குப் பின் எனது கண்கள் இமைப்பதை நிறுத்தி விட்டன.ருசிப்பதிலும்,முகர்வதிலும்,கேட்பதிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
எனது மேல் தோல் பட்டுப் போல் மென்மையாகிப் பொன்னிறமாய் ஒளிர ஆரம்பித்ததை நானே கவனித்தேன்.
தனிமையில் இருக்கும் போது வழக்கம் போலக் கற்பனைகளிலோ,கவலைகளிலோ,கருத்தாக்கங்களிலோ அல்லது இதர எண்ண ஓட்டங்களிலோ நான் நேரத்தைச் செலவழிக்கவில்லை.
அவசியப் படும் போது மட்டும் மனம் செயல் பட்டது.எனது நினைவாற்றல் பின்னணியிலேயே இருந்தது.அவசியம் வரும்போது மட்டும் தானாகவே வந்து இயங்கும்.
அவசியம் இல்லாத போது மனம் இல்லை:எண்ணம் இல்லை:வெறும் உயிர் மட்டுமே.
எனது உடல் போயே போய் விட்டது,திரும்பி வரவே இல்லை.
அதற்குப் பிறகு என்ன நடந்தது என்றால், யாருக்குமே தெரியாது.அனுபவிப்பனே இல்லையாதலால் நடந்ததைச் சொல்ல யாருமில்லை.ஒரு வாரம் வரை என்னை வியப்பில் ஆழ்த்திய இந்த விசித்திர அனுபவங்கள் பின்னர் நிலைத்து விட்டன.
இந்த அனுபவத்தைப் பேரானந்தம்,களிப்பு,அற்புதம், அன்புமயம் என்றெல்லாம் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இது மிகப் பெரும் இடர்ப்பாடு என்றுதான் சொல்லுவேன்.
(இடர்ப்பாடு தொடரும்)
சனி, ஆகஸ்ட் 29, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
\\அவசியப் படும் போது மட்டும் மனம் செயல் பட்டது.எனது நினைவாற்றல் பின்னணியிலேயே இருந்தது.அவசியம் வரும்போது மட்டும் தானாகவே வந்து இயங்கும்.\\
பதிலளிநீக்குஇது வாய்த்து விட்டால் இவர் சொல்வது எல்லாமே சரிதான்
வாழ்த்துக்கள்
நிகழ்காலத்தில்... சொன்னது… //
பதிலளிநீக்குஎனக்குத் தெரிந்து enlightenment-ஐ calamity என்று விவரித்த ஒரே ஞானி யூ.ஜி.தான்,சிவா.
மேலும் வரப் போகும் அவரது அனுபவங்களையும் படித்து விட்டுப் பேசுவோம்.
//அவசியம் இல்லாத போது மனம் இல்லை:எண்ணம் இல்லை:வெறும் உயிர் மட்டுமே.//
பதிலளிநீக்குசுவாரிசியமாக போகுது
//
பதிலளிநீக்குஇந்த அனுபவத்தைப் பேரானந்தம்,களிப்பு,அற்புதம், அன்புமயம் என்றெல்லாம் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இது மிகப் பெரும் இடர்ப்பாடு என்றுதான் சொல்லுவேன்.
//
அப்படியானால் இதுவரை சொல்லப்பட்டுவந்த பேரின்பம் எல்லாம் பொய்தானா?
ஆ.ஞானசேகரன் சொன்னது…
பதிலளிநீக்கு//அவசியம் இல்லாத போது மனம் இல்லை:எண்ணம் இல்லை:வெறும் உயிர் மட்டுமே.//
சுவாரிசியமாக போகுது//
உங்கள் மனதை விட சுவாரஸ்யமான விஷயம் வேறெது,ஞனசெகரன்?
வலசு - வேலணை சொன்னது…
பதிலளிநீக்கு//
இந்த அனுபவத்தைப் பேரானந்தம்,களிப்பு,அற்புதம், அன்புமயம் என்றெல்லாம் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இது மிகப் பெரும் இடர்ப்பாடு என்றுதான் சொல்லுவேன்.
//
அப்படியானால் இதுவரை சொல்லப்பட்டுவந்த பேரின்பம் எல்லாம் பொய்தானா?//
யூ.ஜி.யின் தோற்ற்மே பொய்களைக் கிழித்தெறிவதற்குத்தான்,வலசு.
உலகத்திலேயே பேருண்மைகளை விடப் பெரிய பொய்கள் சொல்லப் பட்டதில்லை.!!