சனி, ஆகஸ்ட் 29, 2009

வசதியான தொலைவில் இருந்து நமது ஒப்பாரிகள்..

வசதியான தொலைவில் கொண்டு இருந்து நாம் வைக்கும் ஒப்பாரிகளைக் கேட்டால்
வீழ்ந்து கிடக்கும் அந்த ஈழத் தமிழ்ர்களின் சடலங்களுக்கும் கோபம் வரும்...
ஹிட்லர் ஒரு முறைதான் ஜெர்மனியில் செத்தான் ஆனால் இன்றும் இலங்கையிலும்,இந்தியாவிலும் அவன் பல,பல ஜென்மங்களாய்ச் சிரித்தபடி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்...
அவனது கொடூரங்களைக் காண .....இங்கே செல்லுங்கள்...
http://arivhedeivam.blogspot.com/2009/08/blog-post_29.ஹ்த்ம்ல்
http://chinthani.blogspot.com/2009/08/blog-post_29.ஹ்த்ம்ல்
http://maaruthal.blogspot.com/2009/08/blog-post_29.ஹ்த்ம்ல்
http://www.narsim.in/2009/08/blog-post_29.html

19 கருத்துகள்:

  1. //வசதியான தொலைவில் கொண்டு இருந்து நாம் வைக்கும் ஒப்பாரிகளைக் கேட்டால்
    வீழ்ந்து கிடக்கும் அந்த ஈழத் தமிழ்ர்களின் சடலங்களுக்கும் கோபம் வரும்....//

    அறையும் உண்மை.

    பதிலளிநீக்கு
  2. //வசதியான தொலைவில் கொண்டு இருந்து நாம் வைக்கும் ஒப்பாரிகளைக் கேட்டால்
    வீழ்ந்து கிடக்கும் அந்த ஈழத் தமிழ்ர்களின் சடலங்களுக்கும் கோபம் வரும்...//

    ஒன்றும் செய்ய இயலாத நிலையில் நாம் உள்ளோம் என்பதே உண்மை ஒப்பாரி வைப்பதை தவிர..

    பதிலளிநீக்கு
  3. அய்யா
    நானும் பார்த்தேன்.
    மனிதம் மரித்தே விட்டது என்னும் முடிவுக்கே வந்து விட்டேன்.
    எத்தனை முத்துக்குமரன் கொளுத்திக்கொண்டு இறந்தாலும் மனம் உருகா செவிட்டு ,குருட்டு ஆளும் கட்சி பிடியில் நாடு இருக்கிறது,இனி தேர்தலும் வெகு தொலைவில் உள்ளது
    நம்மால் அழத்தான் முடியும்

    மனதார ப்ரார்தனை செய்வோம்

    பதிலளிநீக்கு
  4. அய்யா
    நானும் கண்டேன்
    அந்த கொடுமைகளை

    இனி தேர்தலும் வெகு தொலைவில் உள்ளது
    எத்தனை முத்துக்குமரன் கொளுத்திக் கொண்டு இறந்தாலும் மனம் இரங்காத ஜடங்கள்

    உடுக்க உணவு உடை உரைவிடம் இல்லா எம்மக்கள்

    அழத்தான் முடிந்தது மேற்கண்ட கானொளி கானும் போது.

    கையாலாகாத இன்னொருவன்

    பதிலளிநீக்கு
  5. கதிர் - ஈரோடு சொன்னது…
    //வசதியான தொலைவில் கொண்டு இருந்து நாம் வைக்கும் ஒப்பாரிகளைக் கேட்டால்
    வீழ்ந்து கிடக்கும் அந்த ஈழத் தமிழ்ர்களின் சடலங்களுக்கும் கோபம் வரும்....//

    அறையும் உண்மை.//

    ஒரே ஊர்க் காரரான நாம் சந்திக்க இவ்வளவு நாளா,கதிர்?

    பதிலளிநீக்கு
  6. வினோத்கெளதம் சொன்னது…
    //வசதியான தொலைவில் கொண்டு இருந்து நாம் வைக்கும் ஒப்பாரிகளைக் கேட்டால்
    வீழ்ந்து கிடக்கும் அந்த ஈழத் தமிழ்ர்களின் சடலங்களுக்கும் கோபம் வரும்...//

    ஒன்றும் செய்ய இயலாத நிலையில் நாம் உள்ளோம் என்பதே உண்மை ஒப்பாரி வைப்பதை தவிர..

    வினோத்,உங்களைப் படித்தே வெகு நாட்கள் ஆகிறதே?

    பதிலளிநீக்கு
  7. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) சொன்னது… //

    நம்மால் அழத்தான் முடியும்

    மனதார ப்ரார்தனை செய்வோம்//

    கொடுமையான்,வக்கிரமான ஆங்கிலப் படங்களில் கூட இது போன்ற காட்சிகளை நான் பார்த்ததில்லை,கார்த்திகேயன்.

    பதிலளிநீக்கு
  8. கண்ணீர் , கண்டனம்,பொதுக்கூட்டம் தற்க்கொலைகள்,ஐ.நா.,இந்தியா, அரசியல் ஆதரவு பேச்சுக்கள் எல்லாம் வசதியான தொலைவில் இருந்து வரும் வாஞ்சையான ஒப்பாரிகள்தான்.

    கனமான வார்ததைகள்.உண்மை சுடுகின்றது.

    பதிலளிநீக்கு
  9. //வசதியான தொலைவில் கொண்டு இருந்து நாம் வைக்கும் ஒப்பாரிகளைக் கேட்டால்
    வீழ்ந்து கிடக்கும் அந்த ஈழத் தமிழ்ர்களின் சடலங்களுக்கும் கோபம் வரும்...//

    என்னத்த சொல்ல ஷண்முகப்ரியன் சார். ஒன்னும் செய்ய இயலாத நிலையில் எழுதிகொண்டு இருக்கின்றோம் யாராவது எதாவது நல்லது செய்வார்களா என்ற ஏக்கம் மட்டும் நெஞ்சில்

    பதிலளிநீக்கு
  10. அழுகைதான் சார்! ஆனா மதுரையை எரிக்கப்போகும் வழிநெடுக கோவலனை நினைத்து கண்ணகி அழுத அழுகையெனக்கொள்வோம்! வசதி மட்டுமல்ல வலிமிகுநத தூரத்திலும்தான் உள்ளது இலங்கை! அழுதுட்டேயிருப்போம்னுதான் நினைக்கிறாங்க! தெளிவா சொல்லமுடியாது எப்போ கிளம்புவோம்னு!

    வலியும் ஆற்றாமையும் மிகுந்த இந்த சூழலில் சிலநூறு ஆண்டுகள் நிகழ்ந்த நம் இந்திய சுதந்திர போரையும், நம் பள்ளிக்கூட வரலாற்று பாடங்களில் இடம் பெறாத பெயரறியாத எண்ணற்ற நம் இந்திய விடுதலை வீரர்களையும், அவற்றால் நாம் இன்று பெற்றுள்ள பயனையும் நினைவு படுத்திக் கொள்கிறேன்! இலங்கையில் நாம் கண்ட, காணாத பல கொடும் மரணங்கள் மிகவிரைவில் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழீழ கொடியினை ஏற்றப்போகும் அஸ்திவார செங்கற்களாகவே கொள்வோம் எனும் என் நம்பிக்கைதனை பகிர்ந்துகொள்கிறேன்! தமிழ் இலக்கியத்தில் புறநானூறுடன் இரண்டாயிரத்தின் ஈழப்போரும் தமிழர் வீரத்துக்கு சாண்றாக பதிவுபெறும் என திட்பமாக நம்புகிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. jeevaflora சொன்னது…
    கண்ணீர் , கண்டனம்,பொதுக்கூட்டம் தற்க்கொலைகள்,ஐ.நா.,இந்தியா, அரசியல் ஆதரவு பேச்சுக்கள் எல்லாம் வசதியான தொலைவில் இருந்து வரும் வாஞ்சையான ஒப்பாரிகள்தான்.

    கனமான வார்ததைகள்.உண்மை சுடுகின்றது.//

    ஏ.சி.இயந்திரங்களின் சத்தமே தூக்கத்துக்கு இடைஞ்சல் என்று நினைக்கும் நம் தலைவர்களுக்கு இந்த இழவு சத்தம் எங்கே கேட்கப் போகிறது,ஜீவா?

    பதிலளிநீக்கு
  12. ஆ.ஞானசேகரன் சொன்னது…
    //வசதியான தொலைவில் கொண்டு இருந்து நாம் வைக்கும் ஒப்பாரிகளைக் கேட்டால்
    வீழ்ந்து கிடக்கும் அந்த ஈழத் தமிழ்ர்களின் சடலங்களுக்கும் கோபம் வரும்...//

    என்னத்த சொல்ல ஷண்முகப்ரியன் சார். ஒன்னும் செய்ய இயலாத நிலையில் எழுதிகொண்டு இருக்கின்றோம் யாராவது எதாவது நல்லது செய்வார்களா என்ற ஏக்கம் மட்டும் நெஞ்சில்//

    அப்படியில்லை ஞானசேகரன்.இந்தப் படுகொலைகளைப் புகைப் படம் எடுத்த வீரர் கொலைகளைத் தவிர்க்க முடியாவிட்டாலும் உலக்த்துக்குச் சொன்னதாலதானே நாம் பார்க்கிறோம்.குறைந்தபட்சம் ஒரு collective consciousness ஆவது உருவாகிறதே பெரிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  13. க. தங்கமணி பிரபு சொன்னது… //

    உங்கள் இடுகை மூலம்தான் நான் இதைக் கண்ணுற்றேன்.வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள ஆள் கிடைப்பதே அரிது என்ற துர்பாக்கியமான சூழ்நிலையில் வாழ்கிறோம்,தங்கமணி.

    பதிலளிநீக்கு
  14. வலசு - வேலணை சொன்னது…
    சொல்ல வார்த்தையில்லை.//

    அவரவர் பிரச்சினைகளுக்கே அழுவதற்கு நேரமில்லாத வாழ்க்கையில் அடுத்தவர் மரணங்களுக்கு அழுவதற்கு என்ன வார்த்தைகள் மிச்சமிருக்கும்,வலசு?

    பதிலளிநீக்கு
  15. //ஒரே ஊர்க் காரரான நாம் சந்திக்க இவ்வளவு நாளா,கதிர்?//

    மகிழ்ச்சி உங்கள் தொடர்பு எண் கொடுங்கள். என் அலைபேசி எண், என் பக்கத்தில் உள்ளது

    பதிலளிநீக்கு
  16. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    பதிலளிநீக்கு
  17. ரொம்ப வருத்தமாக உள்ளது..

    யாருமே கண்டு கொள்ள வில்லை என்பது இன்னும் .......என்னமோ போங்க சார்

    பதிலளிநீக்கு
  18. புத்தியில் உரைக்கச் செய்யும் வார்த்தைகள் ஒன்று நம்மை இரண்டு மூன்று நாட்கள் உறங்க வைக்க விடாது. அல்லது நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக்கொண்டு தேவையில்லாத அலங்காரங்களில் கவனம் செலுத்தும் போது நம்முடைய முகம் நமக்கே விகாரமாக தெரியும். உங்கள் வார்த்தைகளும், விமர்சனம் தந்தவர்களின் உள்வாங்கலும் என்னை நீயும் ஒரு அழுக்கு தான் என்று உணர வைத்தது. ஆனால் எண்ணங்களின் வலிமை மகத்தானது. உலகில் எவரும் தப்பித்ததே இல்லை. தாமதம் ஆகும். தகுதியான உறுதியான விளைவுகள் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. பண்டாரா நாயகா வார்த்தைகளும் முன்னேற்பாடுகளும் அவரின் இறப்பும் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுருந்த போதிலும் உணர்ந்தும் உள்வாங்காமல் பயணித்துக்கொண்டுருப்பவர்களின் உள் மனதில் தினந்தோறும் அச்சம் மட்டுமே ஆட்சி செலுத்திக்கொண்டு இருக்கும்.

    உள்ளே வராமல் இருந்த என் அவசரத்தை நிணைத்து வெட்கப்படுகின்றேன்.

    பதிலளிநீக்கு