திங்கள், பிப்ரவரி 23, 2009

இன்று மகா சிவராத்திரி


தியான லிங்கம்

இன்று மகா சிவராத்திரி.
மெகா தொலைக் காட்சியில் ஈஷா யோக மையத்தில் சத்குரு ஜாக்கி வாசுதேவ் முன்னிலையில் மகா சிவராத்திரி திருவிழா இன்று மாலை ஆறு மணியிலிருந்து நாளைக் காலை ஆறு மணி வரையிலும் கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கிறது.


ஈடுபாடு உள்ள அன்பர்கள் இதனைக் கண்டு உணர்ந்து,உய்யலாம்.
போன வருடம் இதே சிவராத்திரி இரவில் பன்னிரண்டு மணி அளவில்,சிவமணி அங்கு வாசித்த டிரம்ஸ் இன்னும் என்னுள் அதிர்ந்து கொண்டிருக்கிறது.அதன் முடிவில் சத்குரு திடீரென எழுந்து ஆடிய நடனம் ...அந்த அனுபவத்துக்கு இணையே இல்லை.

இன்று-
சத்குரு தொடக்க உரையில் இந்தப பண்டிகையைப் பற்றிச் சொல்லும் போது இன்றைய கிரகச் சூழ்நிலைகள் மனித உடலில் சக்தியைக் குவிக்கும் வகையில் அமைந்திருப்பதால்,யார் வேண்டுமானாலும் முதுகெலும்பினை நேர்கோட்டில் அமையும் படி நிமிர்ந்து உட்கார்ந்து ,அந்த வானம் தரும் ஆற்றலை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதற்காவே இந்த நாள் ஆதி யோகியான சிவன் பெயரால் கொண்டாடப் படுகிறது என்றார்.


இதே கருத்தினை ஸ்வாமி ஓம்கார் தனது பதிவில் விளக்கமாகக் காலையில் தனது பதிவில் அளித்துள்ளார்.

WE ARE NOT ONLY AWAKE IN THIS NIGHT, BY DOING SO IT WILL LEAD TO OUR AWAKENING ALSO என்றார் சத்குரு.


மேளங்களும் ,தாளங்களும் ,உடுக்கைகளும் ,உரத்த சங்குகளின் ஒலிகளும்
மனித ஹூங்காரங்களும் மேலும்,மேலும் நமது விழிப்பு நிலையைத் தூண்டுவதற்காகவே இது போன்ற தருணங்களில் பயன் படுத்தப் படுகின்றன போலிருக்கிறது.

எனவே முதுகெலும்பை நேர்கோட்டில் இருக்கும் படி வைத்து அமருங்கள்.உங்களைப் பற்றியே தியானியுங்கள்.
வாழ்க்கைப் போராட்டத்துக்கு நமக்கு நிறைய ஆற்றல் தேவைப் படுகிறது.
அது வானத்திலிருந்து கிடைத்தாலும்
மண்ணுக்கும் நனமைதானே .
ஓம் நமசிவாய.

10 கருத்துகள்:

  1. மிக,மிகச் சரியாகச் சொன்னீர்கள் அப்துல்லா.நன்றி,நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்லது நடந்தால் சரி. ஒரு நாத்திக பின்னனியில் இருந்து வந்த நான், ஆன்மீகத்திற்கும், நாத்திகத்தையும் போட்டு நிறையவே குழப்பிக்கொள்கிறேன்.:)

    பதிலளிநீக்கு
  3. குடுகுடுப்பை சார்,நாத்திகமும்,ஆன்மீகந்தான். லோ ஷுகரும்,ஹை ஷுகரும் இரண்டுமே டயாபடீஸ் என்பதைப் போல.ஷுகர் லெவல்தான் வேறு வேறு.

    பதிலளிநீக்கு
  4. Bloggers like Parisalkaaran have written about the money mindedness of Jaggi Vasudev and Isha foundation.

    *

    Also you should (if not) write about how to find a good producer, if you have the right subject.

    பதிலளிநீக்கு
  5. //Also you should (if not) write about how to find a good producer, if you have the right subject.//

    Mr.Vijay,Finding a right subject itself is difficult and it is more difficult to find a good producer for it.In my experience searching for the right people is not always fruitful.He will find you when the oppurtunity ripens.YOU HAVE TO WAIT TAKING ALLTHE EFFORTS.

    பதிலளிநீக்கு
  6. ஓம்.. நமச்சிவாய..
    ஓம்.. நமச்சிவாய..
    ஓம்.. நமச்சிவாய..

    இந்த மகாசிவராத்திரி அன்று சிவனின் ருத்ரதாண்டவத்தைத் தவிர வேறு எந்த நடனத்தையும் நான் பார்க்கவில்லை என்பதை என் அப்பன் முருகப்பெருமான் மீது ஆணையாக உறுதியிட்டுச் சொல்கிறேன்..

    பதிலளிநீக்கு