திங்கள், மார்ச் 02, 2009

கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்)

முன் எச்சரிக்கை: ஒரு முழுமையான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா?
அது ஒரு அபூர்வமான அனுபவம்.
இதுவரை நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள்,எண்ணங்களில் இருந்து உங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் உங்களை உணர்வுகளின் வேறு தளத்தில் ஊன்றி விடும் வல்லமை வாய்ந்தது அந்த அனுபவம்
அந்த அனுபவத்துக்குத் தயாராகுங்கள்.
இனிக் கதை..
1.
குடும்ப நீதிமன்ற நீதிபதி வகுளாபரணன் எத்தனையோ விவாக ரத்து வழக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்லி இருக்கிறார்.ஆனால் அவர் சந்தித்த வழக்குகளிலேயே மிகவும் வினோதமான,விசித்திரமான வழக்கு அரவிந்தனுடையதுதான்.தனது நீண்ட நீதித் துறை அனுபவத்தில் அவர் அதுவரையில் கேள்விப் பட்டிராத அந்தச் சம்பவங்களும், வழக்கின் முக்கியப் புள்ளியான அந்தப் பெண்ணும் அவரைப் பின்னாளில் பல மாதங்களுக்குத் தூங்க விடவில்லை.
பல பின்னிரவுகளில் அவர் 'கன்னிகாஆஆஆ' என்று கத்திக் கொண்டு விருட் விருட்டென்று எழுந்தபோது அவர் மனைவி ஆண்டாளே பதறிக் கொண்டு எழுந்து விடுவாள்.அவரது பதற்றதைப் பார்த்துப் படபடக்கும் அவளுக்கு.
'என்னாச்சுன்னா ..உங்களுக்கு என்னாச்சு?'

கணவர் வேர்த்துக் கொட்டிய முகத்தோடு மிரள,மிரள விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆண்டாளுக்கு நெஞ்சுக் குலையெல்லாம் நடுங்கி விடும்.குற்றவியல் நீதிபதியாகப் பல ஆண்டுகள் கொடூரமான கொலைக் குற்றவாளிகளுக்கெல்லாம் தண்டணை வழங்கிய போது கூடத் தனது கணவர் இந்த மாதிரிப் பின்னிரவுகளில் அரண்டதில்லை.இப்போது ஒரு சாதாரண விவாக ரத்து வழக்கில் அடிபடும்,யாரோ ஒரு பெண்ணின் பெயர் இந்த அளவுக்குத் தனது கணவனைப் பீதியில் ஆழ்த்துமா?

கொஞ்ச நேரம் அமைதியாக அறையின் மேல் சுவரையே பார்த்திருந்து விட்டுப் பின் எதற்கோ,யாரையோ கையெடுத்து சேவித்துக் கொள்ளும் வகுளாபரணன் மிரட்சியாகத் தன்னயே பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டாளிடம் 'கொஞ்சம் குங்குமம் எடுத்தாந்து இட்டுடறயாடி?'என்னும் போது அவளது பயம் இன்னும் தீவிரமாகி விடும்.

ஒரு மாதத்திலேயே இரண்டு முறை இதே போல அவர் அலறிக் கொண்டு நடு ஜாமத்தில் எழுந்தவுடன் அவளால் அதற்கு மேல் இதை விட்டு விட முடியவில்லை.நீதி மன்ற விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமை கணவரைத் தனது மாமனார் சௌம்ய நாராயண ஐயங்காரிடம் வற்புறுத்தி அழைத்துச் சென்று விட்டாள் ஆண்டாள்.

ஐயங்கார் சாஸ்திர,சம்பிரதாயங்களில் கரை கண்ட வேத வித்து.ஆயிரக் கணக்கில் எத்தனையோ பேருக்கு விவாஹங்களைச் செவ்வனே நடத்தி வைத்துப் பேரும் புகழும் பெற்ற பிராம்மணோத்தமர்.தனது மகன் குடும்ப நீதிமன்ற நீதிபதி ஆனதில், அவருக்குக் கொஞ்சம் கூட மனம் ஒப்பவே இல்லை.

'ஆயிரமாயிரம் பேருக்குத் தான் மந்த்ரங்கள் ஓதி சுப விவாஹங்கள் பண்ணிச் சேர்த்து வைத்த புண்ணியத்தை எல்லாம்,வேதங்களுக்கு எதிராகச் சட்டம் என்ற பெயரில் தம்பதிகளுக்கு விவாகரத்துப் பண்ணி வைத்துத் தனது மகன் பாவங்களை சம்பாதித்துக் கொள்கிறான்' என்பது அவரது வருத்தம்.
நடு ஜாமத்தில் 'கன்னிகா என்று யாரோ ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அலறியடித்துக் கொண்டு,அவரது மகன் பயந்து நடுங்கியபடியே எழுகிறார் என்று மாட்டுபெண் ஆண்டாள் வந்து அழுத படியே சொன்ன போது எதிரில் தலைகுனிந்து நின்ற நீதிபதியை அமைதியாகப் பார்த்தார் அந்தத் தொன்னூறு வயதுக் கிழவர்.

'வேதத்துக்கு எதிராப் பண்ற பாவம் படுத்தறதா?' என்று கேட்டார் கிழவர்.

வகுளாபரணன் ஒன்றும் சொல்லாமல் நின்றார்.
'யாருடா வகுள், அந்தக் கன்னிகா?'

நிமிர்ந்து தந்தையைப் பார்த்த வகுளாபரணின் கண்கள் கலங்கின.

'இத்தனை வருஷமா நான் பூஜை ரூம்லே பார்க்காதவளைக்,கோர்ட் ரூம்லே பார்க்கறேம்பா!' என்றார் ஓய்வு பெறுவதற்கு இன்னும் நான்கே மாதங்கள் இருக்கும் அந்தப் பழுத்த நீதிபதி.
ஐயங்காருக்குப் புரை கண்டது. இருமினார்.
2.
ஒரு மாதத்திற்கு முன்னாள்தான் அரவிந்தனின் விவாகரத்து வழக்கு அவரிடம் விசாரணைக்கு வந்தது.
தனது மனைவியைத் தான் விவகரத்துச் செய்ய விரும்புவதாக அரவிந்தன் வழக்குத் தொடுத்திருந்தான்.வழக்கறிஞர் யாரையும் வைத்துக் கொள்ளாமல் தானே தன் வழக்குக்காக வாதாடப் போவதாகக் கூறிய அரவிந்தனை அதற்கு அனுமதித்தார் வகுள்.
'உங்கள் மனைவியின் பெயர்?'
'கன்னிகா' என்றான் அரவிந்தன்.
'உங்கள் மனைவியிடம் இருந்து நீங்கள் விவாக ரத்துக் கோரும் காரணம்?'
'அவள் ஒரு முழுமையான பெண் என்பதால்!'

அரவிந்தனின் இந்த சலனமில்லாத வாக்கு மூலந்தான் நீதி மன்றத்தைச் சற்றே நிமிர்ந்து உட்காரச் செய்தது.வகுள் அப்போதுதான் அரவிந்தனை நன்கு உற்றுப் பார்த்தார்.
அரவிந்தன் நல்ல நிறம் ஆறடி உயரம் இருப்பான். மெல்லிய மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தான்.மென்மையான படிப்பாளியாக இருப்பான் என்று நினைத்தார் அவர்.இது போன்ற சராசரிக்கும் அதிகமான அழகும், படிப்பும் இருந்தாலே,அது ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் அவ்ர்களது திருமண வாழ்க்கை அடிக்கடி விவாக ரத்தில்தான் முடிகிறது என்பதை அவர் அனுபவத்தில் கண்டிருந்தார்.
'உங்கள் மனைவி இப்போது இங்கே வரவில்லையா?' என்று கேட்டார் வகுள்.
'இல்லை'

விசாரணையை இருவரையும் வைத்துக் கொண்டு நடத்துவதுதான் முறை என்ற நீதிமன்ற நடைமுறையைச் சொன்ன வகுள், வழக்கம் போல மனைவிக்கும் தனது வாதங்களைக் கூறும் உரிமையை அளிக்க வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் அவளுக்கு நோட்டீஸ் அனுப்பும் படி உத்தரவிட்டார்
சாதாரணமாக அவர் நினைத்திருந்த அந்த விவாகரத்து வழக்கு நடந்தபோதுதான்,அந்த பழுத்த நீதிபதி அது வரை வாழ்க்கையைப் பற்றி வைத்திருந்த அத்தனை கோட்பாடுகளையும்,சமூக, ஆன்மீகக் கலாச்சாரக் கருத்துக்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் உடைத்து நொறுக்கி எறிந்து விட்டாள் அந்தப் பதினெட்டு வயதுப் பெண்.
கன்னிகா.
(வழக்கு தொடர்கிறது)

35 கருத்துகள்:

  1. கலக்கலான.. ஆரம்பம்.. சார்..!

    அடுத்த பதிவுக்கு இப்பவே நான் ரெடி.!

    பதிலளிநீக்கு
  2. கதை நல்லா போகுது, படமா எடுக்கலாம் போலருக்கு.

    பதிலளிநீக்கு
  3. ஆரம்பிச்சதும் உடனே தொடரும்னு முடிச்சிட்டீங்களே !!!!

    பதிலளிநீக்கு
  4. எழுதி முடித்து நிமிர்வதற்குள்ளேயே ஊக்கமளித்த மின்னல வேகப் பாராட்டுக்களுக்கு எப்படி நன்றிசொலவது என்பதையும் நீங்களே சொல்லி விடுங்கள் பாலா!

    பதிலளிநீக்கு
  5. //குடுகுடுப்பை கூறியது...
    கதை நல்லா போகுது, படமா எடுக்கலாம் போலருக்கு.//
    நன்றி குடுகுடுப்பையாரே!முழுவதையும் எழுதிய பின் உங்கள் கருத்து எனக்குத் தேவைப் படும்.

    பதிலளிநீக்கு
  6. //யாத்ரீகன் கூறியது...
    ஆரம்பிச்சதும் உடனே தொடரும்னு முடிச்சிட்டீங்களே !!!!//

    நீள்பதிவுகளாகப் போட வேண்டாம் என்ற ந்ல்லெண்ணத்தில்தான்!தங்கள் வருகைக்கு நன்றி யாத்ரீகன் சார்.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. அமர்க்களமான ஆரம்பம்... எனக்கென்னமோ கொஞ்சம் அதிகப்படியான 'பில்ட்-அப்'-போனு தோணுது :)..ம்ம்ம்....பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு :)

    குட் லக்!

    ராஜ்.

    பதிலளிநீக்கு
  9. விறுவிறுப்பான ஆரம்பம். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. //'உங்கள் மனைவியிடம் இருந்து நீங்கள் விவாக ரத்துக் கோரும் காரணம்?'
    'அவள் ஒரு முழுமையான பெண் என்பதால்!'
    //

    ஆரம்பமே தூள் கிளப்புதே.. சார்..

    பதிலளிநீக்கு
  11. //லதானந்த் சொன்னது…
    விறுவிறுப்பான ஆரம்பம். வாழ்த்துக்கள்//
    வாழ்த்துக்களுக்கு நன்றி லதானந்த்.

    பதிலளிநீக்கு
  12. //தமிழ் பிரியன் கூறியது...
    நல்ல விறுவிறுப்பு.. :)//

    எல்லாம் திரைப் பட அனுபவம்தான்,ப்ரியன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  13. Very good starting .I feel it is better to use non-brahmin character.Waiting eagerly for next blog

    பதிலளிநீக்கு
  14. //srinivasan TS சொன்னது…
    Very good starting .I feel it is better to use non-brahmin character.Waiting eagerly for next blog//

    Thank you Mr.Srinivasan. But the main prtogonists of the story are only non-brahmins as you shall find in the forthcoming chapters. .

    பதிலளிநீக்கு
  15. சார், அடிச்சி தூள் கெளப்பி போய்கிட்டு இருக்கும்போது "தொடரும்"னு போட்டுட்டீங்களே! வெயிட்டிங்.. வெயிடடிங்.. BTW, "முழுமையான பெண்" என்றால் தமிழில் என்ன அர்த்தம் சார்.. இல்ல அது தான் இந்த கதையோட முடிச்சுன்னா வெயிட்டிங்.. வெயிடடிங்..

    பதிலளிநீக்கு
  16. போங்க சார்.இப்படி விறுவிறுப்பா கதை போயிட்டு இருக்கும்போது தொடரும் போட்டு காக்க வச்சுட்டீங்களே...அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுங்கள் :)).

    பதிலளிநீக்கு
  17. ஆமாம்...எனக்கு ஒரு விளக்கம் தேவை.....வகுளாபரணன் என்பது அழகு தமிழ் பெயர் என்பது தெரிகிறது...அதன் பொருளையும் கூறி விடுங்களேன் :)))
    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. dont forget to remind next cheptor,

    பதிலளிநீக்கு
  19. dont forget to remind next cheptor,

    பதிலளிநீக்கு
  20. அமர்க்களமான ஆரம்பம்... எதிர்பார்ப்புகளை எகிற வைத்து விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  21. //தமிழன்-கறுப்பி... சொன்னது…
    விறுவிறுப்பான ஆரம்பம்...!!//

    நன்றி தமிழன்.முடிவையும் படித்து விட்டுச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  22. //கணேஷ் கூறியது...
    BTW, "முழுமையான பெண்" என்றால் தமிழில் என்ன அர்த்தம் சார்.. இல்ல அது தான் இந்த கதையோட முடிச்சுன்னா வெயிட்டிங்.. வெயிடடிங்..//

    முழுமையான பெண் கிடைத்தால் உங்களை ஆணாகவே இருக்க விட மாட்டாள் கணேஷ்..கதையே அதைப் பற்றியதுதானே!நன்றி,ஆமாம் BTW என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
  23. //asfar கூறியது...
    dont forget to remind next cheptor,//

    Definitely asfar.Thank you for your two visits.

    பதிலளிநீக்கு
  24. //துரியோதனன் கூறியது...
    அமர்க்களமான ஆரம்பம்... எதிர்பார்ப்புகளை எகிற வைத்து விட்டீர்கள்..//

    நன்றி துரியோதனன்!நீங்கள் இந்தப் பெயரை வைத்திருப்பதற்கு ஏதோ ஆழமான காரணம் இருக்க வேண்டுமென எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  25. //பட்டாம்பூச்சி சொன்னது…
    போங்க சார்.இப்படி விறுவிறுப்பா கதை போயிட்டு இருக்கும்போது தொடரும் போட்டு காக்க வச்சுட்டீங்களே...அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுங்கள் :)).//

    ஜாக்கிரதையாகப் பாராட்டுங்கள் பட்டாம் பூச்சி.கன்னிகா வழக்கமான பெண்ணைப் போல் இருக்க மாட்டாள்!

    பதிலளிநீக்கு
  26. //பட்டாம்பூச்சி கூறியது...
    ஆமாம்...எனக்கு ஒரு விளக்கம் தேவை.....வகுளாபரணன் என்பது அழகு தமிழ் பெயர் என்பது தெரிகிறது...அதன் பொருளையும் கூறி விடுங்களேன் :)))
    நன்றி.//

    நான் எப்போதோ சந்தித்த, ஒரு கார்பரேட் சேர்மேன் அளவுக்குப் பெரிய பதவி வகித்தவர் ஒருவரின் பெயர் அது.பிராம்மணர்.அப்போது புத்த மதத் தியானம் எல்லாம் பண்ணியவர் .அது திருமாலின் பெயர் என்று அவர் சொல்லியதாக ஞாபகம்.கேட்டுச் சொல்லுகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. இந்த பதிவும் நேற்றே படித்துவிட்டேன் என்ன பின்னூட்டம் இடுவது என தெரியவில்லை அதனால் பின்னூட்டாமல் சென்றுவிட்டேன்.

    இதன் அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
  28. //மங்களூர் சிவா கூறியது...இதன் அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் வெயிட்டிங்.//

    நிறையப் பேர் இப்படி எழுதியிருப்பதால் அடுத்த பாகம் எழுதுவதற்கே எனக்குப் பயமாக இருக்கிறது,சிவா.இதுதான் உண்மை. ஆனால் நன்றியை மட்டும் தைரியமாகச் சொல்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  29. brahmin or nonbrahmin.. it doesn't matter.. i can feel you characters...
    ('உங்கள் மனைவியிடம் இருந்து நீங்கள் விவாகரத்துக் கோரும் காரணம்?'
    'அவள் ஒரு முழுமையான பெண் என்பதால்!')
    இந்த ரெண்டு வரிகள் போதும் ஒரு நல்ல எழுத்தாளன் வாசகர்களை தன் வசம் கவர .. என்னை நிமிர்ந்து உக்கார செய்த வரிகள் இவை.. அருமையான ஆரம்பம்... ஸார் சீக்ரம் எழுதுங்க... இப்போவே படிக்கணும் போல இருக்கு...

    பதிலளிநீக்கு
  30. //kishore கூறியது... ('உங்கள் மனைவியிடம் இருந்து நீங்கள் விவாகரத்துக் கோரும் காரணம்?'
    'அவள் ஒரு முழுமையான பெண் என்பதால்!')
    இந்த ரெண்டு வரிகள் போதும் ஒரு நல்ல எழுத்தாளன் வாசகர்களை தன் வசம் கவர .. என்னை நிமிர்ந்து உக்கார செய்த வரிகள் இவை.. அருமையான ஆரம்பம்... ஸார் சீக்ரம் எழுதுங்க... இப்போவே படிக்கணும் போல இருக்கு...//

    உங்கள் ரசனைக்கு நன்றி கிஷோர்.ஓரிரு நாட்களில் என் பதிவைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  31. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

    இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    nTamil குழுவிநர்

    பதிலளிநீக்கு
  32. //ஷண்முகப்ரியன் கூறியது...
    ஆமாம் BTW என்றால் என்ன?//

    BTW - By The Way.
    மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  33. கணேஷ் கூறியது...
    //ஷண்முகப்ரியன் கூறியது...
    ஆமாம் BTW என்றால் என்ன?//

    BTW - By The Way.
    மன்னிக்கவும்.//

    BTW,THANK YOU GANESH.

    பதிலளிநீக்கு