திங்கள், மார்ச் 23, 2009

'அருந்ததீ'பட அனுபவம்

கண் இமைத்துக் கொண்டிருந்தால்,மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.அதனால்தான் ஒன்றில் மனம் லயித்துப் போய் நின்று விட்டால் அதனைக் கண் கொட்டாமல் பார்க்கிறோம் என்று ஓஷோ ஓரிடத்தில் சொன்னது நேற்று அருந்ததி படம் பார்க்கும்போது நடந்தது.

டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் இருட்டில், உக்கிரமான ஒரு ரோல்லர் கோஸ்டரில் உட்கார வைத்து ,ஒரு அமானுஷ்ய உலகத்துக்குக் கூட்டிச் சென்று விட்டுப் படம் முடிந்தவுடன்தான் இறக்கி விடுகிறார்கள்.

தொழில் நுட்பத்தின் சாத்தியங்களும்,திரைக்கதையின் சாமர்த்தியங்களும் கைகோர்த்துக் கொண்டால்,நச்சரிக்கும் உங்கள்பகுத்தறிவுக் கேள்விகளை எல்லாம், அவை எழ,எழவே அடித்து நொறுக்கி விட்டு அழும் குழந்தையை மிரட்டி வாய் மேல் கை பொத்தி அறை மூலையில் உட்கார வைப்பதைப் போல் மக்களை உட்கார வைக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.

நமது அடிப்படை உணர்ச்சிகளான கோபம்,வன்மம்,காமம்.சபதம் ,வெறி மரணம் என்பதைத் தவிர வேறு எந்த மெல்லுணர்வுகளையும் ஒரு நொடி கூட வராமல் பார்த்துக் கொண்ட திரைக்கதையால் எந்நேரமும் இருந்து கொண்டு இருக்கும் பரபரப்பு,அதனை மேலும் தீவிரமாக்கும் உடுக்கை,டிரம்ஸ்களின் டி..டி.எஸ். உறுமல்கள்,அதீதமான சம்பவங்களால் கட்டவிழ்ந்த குழந்தைத் தனத்தின் விளையாட்டு உற்சாகம் இப்படி ஒரு டிஸ்னிலேண்ட் சுற்றுலாவைப் போல் பயணிக்கிறது படம்.

யாரந்தக் கேமராமேன் செந்திகுமார்?தரதரவென்று நம்மை இழுத்துக் கொண்டு போய் அவரது கேமரா வியூஃபைண்டரில் நம் கண்களைப் பதியச் செய்து விடுகிறார் அவர்.அதற்குப் பிறகு நம் கண் லென்ஸ்களின் செயல் இழந்து அவரது காமிரா லென்ஸ்களின் வழியாகத்தான் அவர் காட்டும் உலகத்தை நம்மால் பார்க்க முடிகிறது.கண்களே மாறிக்,காட்சிகளும் மாறும் போது நம் கருத்துக்களுக்கு அங்கே என்ன வேலை?

நடிகர்களும் இதற்கேற்ப மனித மீறல்களின் முக பாவங்களை செவ்வனே வழங்கி இருக்கிறார்கள்.

தர்க்கஅறிவைத் துப்புரவாகத் துடைத்தபடியே ஓடும் இந்தத் தொழில் நுட்ப அட்டகாசங்களால்,நாம் பேய்களையும்,பிரேதங்களையும்,பிசாசுகளையும் ஏதோ தினமும் நாம் சந்திக்கும் தபால் காரர்களையும்,குரியர்களையும்,கான்ஸ்டபிள்களையும் பார்ப்பதைப் போல் சர்வ சாதரணமாய்ப் பார்க்கத் தொடங்கி விடுகிறோம்.ரத்தத்தைப் பார்ப்பது,பாக்கெட் பாலைப் பார்ப்பதைப் போல் ஆகி விடுகிறது.திரைப்படம், எவ்வளவு பெரிய உளவியல் மாற்றங்களுக்கான் சாத்தியம் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

அருந்ததி-ஹாலிவுட் திரைப்படத் தொழில் நுட்பங்களை எல்லாம் மென்று தின்று ஜீரணித்து விட்டு,விஸ்வரூபமாய் எழுந்து நிற்கும் தெலுங்குவுட் மாயாஜாலம்.

ஒரு இரண்டு மணி நேரப் புது ஜென்மம் எடுக்க விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய படம்.

27 கருத்துகள்:

  1. அருமையான திறனாய்வு ஷண்முகப்ரியன் சார்!

    இந்த படம் இங்கே தெலுங்கில் ரிலீஸ் ஆனாலும் தியேட்டர் மொக்கை. அதனால போகலை. :(

    பதிலளிநீக்கு
  2. //ஹாலிவுட் பாலா கூறியது...
    அருமையான திறனாய்வு ஷண்முகப்ரியன் சார்!

    இந்த படம் இங்கே தெலுங்கில் ரிலீஸ் ஆனாலும் தியேட்டர் மொக்கை. அதனால //

    அங்கே இருக்கும் மொக்கையான தியேட்டர்கள் கூட இங்கே இருக்கும் நல்ல தியேட்டர்களுக்குச் சமமாக் இருக்குமென்று நான்நினைத்துக் கொண்டிருக்கிறேன் பாலா.

    பதிலளிநீக்கு
  3. அருமையான விமர்சனம்..

    இது போன்ற பார்த்தே தீர வேண்டிய திரைப்படங்களுக்கு இது போன்ற விமர்சனங்கள் வெளி வந்தே தீர வேண்டும்..

    கொளுத்துங்க.. கொளுத்துங்க..!

    பதிலளிநீக்கு
  4. //உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
    அருமையான விமர்சனம்..//

    நீங்கள் எழுதியதற்குப் பிறகுதான் நான் படத்துக்கே போனேன் சரவ்ணன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //அங்கே இருக்கும் மொக்கையான தியேட்டர்கள் கூட இங்கே இருக்கும் நல்ல தியேட்டர்களுக்குச் சமமாக் இருக்குமென்று நான்நினைத்துக் கொண்டிருக்கிறேன் பாலா.//

    சார்.. இது அப்படியே ஆப்போசிட்! :-(

    இதைப்பத்தி என்னோட இன்னொரு ப்லாகில் புலம்பியிருக்கேன்.:(

    NRI சோககதையை கேளு.. தாய்/தந்தைகுலமே!

    பதிலளிநீக்கு
  6. //அருந்ததி-ஹாலிவுட் திரைப்படத் தொழில் நுட்பங்களை எல்லாம் மென்று தின்று ஜீரணித்து விட்டு,விஸ்வரூபமாய் எழுந்து நிற்கும் தெலுங்குவுட் மாயாஜாலம்.//

    உண்மையாகவா!

    உங்களை நம்ம்ம்பி இந்த வாரம் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. //கிரி கூறியது...

    உண்மையாகவா!
    உங்களை நம்ம்ம்பி இந்த வாரம் பார்க்கிறேன்.//

    ஸ்பீல்பர்க் சொன்னதைப் போல உங்களுக்குள் இருக்கும் குழந்தையை நம்பிப் போங்கள் கிரி.ஏமாற மாட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. //டக்ளஸ்....... சொன்னது…
    நல்ல விமர்சனம்..//

    நன்றி டக்ளஸ்.படைப்பு நன்றாக இருந்தால் விமர்சனமும் நன்றாகத்தானே இருக்கும்.அனைத்துப் புகழும் கோடி ராமகிருஷ்ணாவுக்கே!

    பதிலளிநீக்கு
  9. //ஹாலிவுட் பாலா சொன்னது…
    NRI சோககதையை கேளு.. தாய்/தந்தைகுலமே!//

    ஓஹோ!நாடு மாறினால் சோகங்களும் மாறும் என்று அதையும் தப்பாகத்தான் நினைத்துக் கொண்டிருகின்றேனா? சாரி பாலா.

    பதிலளிநீக்கு
  10. சார் உங்களை நம்பி பார்கலாம் இருக்கின்றேன்... நல்ல விமர்சனம் சார்..

    பதிலளிநீக்கு
  11. //ஆ.ஞானசேகரன் சொன்னது…
    சார் உங்களை நம்பி பார்கலாம் இருக்கின்றேன்... நல்ல விமர்சனம் சார்..//
    கிரி சாருக்குச் சொன்னதே உங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன் ஞானசேகரன் சார்.
    'ஸ்பீல்பர்க் சொன்னதைப் போல உங்களுக்குள் இருக்கும் குழந்தையை நம்பிப் போங்கள்.ஏமாற மாட்டீர்கள்.'

    பதிலளிநீக்கு
  12. ஹும்ம்...
    இங்கே வரட்டும் ஒரு கை பார்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. //நையாண்டி நைனா சொன்னது…
    ஹும்ம்...
    இங்கே வரட்டும் ஒரு கை பார்கிறேன்.//
    முதன் முதலாகச் சந்திக்கிறோம்.SO,HELLO,HOW ARE YOU NAINAA? இங்கே என்று நீங்கள் மொட்டையாக்ச் சொன்னதால் கிட்டத்தட்ட மும்பைக்குப் பாதிதூரம் சென்று நீங்கள் மும்பையைததான் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரிந்து வந்தேன்.மும்பையில் தெலுங்கு அருந்ததீ ரிலீஸ் ஆகவில்லையா என்ன?

    பதிலளிநீக்கு
  14. /*முதன் முதலாகச் சந்திக்கிறோம்.SO,HELLO,HOW ARE YOU NAINAA? இங்கே என்று நீங்கள் மொட்டையாக்ச் சொன்னதால் கிட்டத்தட்ட மும்பைக்குப் பாதிதூரம் சென்று நீங்கள் மும்பையைததான் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரிந்து வந்தேன்.மும்பையில் தெலுங்கு அருந்ததீ ரிலீஸ் ஆகவில்லையா என்ன?*/

    வணக்கம் அண்ணா.
    நான் நலமாக இருக்கிறேன். தங்கள் அன்பிற்கு மிக நன்றி. தங்களின் கணிப்பு சரியே, நான் இருப்பது மும்பை தான்.

    இங்கே, தெலுங்கு அருந்ததீ வந்து; போய் விட்டது என்று எண்ணுகிறேன்.
    அதனால் தமிழ் வடிவம் மொழிபெயர்ப்பு வந்தால் கண்டிப்பாக போய் பார்க்கவேண்டும் என்று உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  15. //நையாண்டி நைனா கூறியது... இங்கே, தெலுங்கு அருந்ததீ வந்து; போய் விட்டது என்று எண்ணுகிறேன்.
    அதனால் தமிழ் வடிவம் மொழிபெயர்ப்பு வந்தால் கண்டிப்பாக போய் பார்க்கவேண்டும் என்று உள்ளேன்.//
    கண்டிப்பாகப் பாருங்கள் நைனா,அட்லீஸ்ட் என்னைத் திட்டுவதற்காகவாவது!

    பதிலளிநீக்கு
  16. //முரளிகண்ணன் கூறியது...
    அருமையான பகிர்வு.//

    நன்றி முரளிகண்ணன். படம் பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
  17. //உண்மையாகவா!

    உங்களை நம்ம்ம்பி இந்த வாரம் பார்க்கிறேன்.
    //

    அய்யா சொன்னதை நம்பி தைரியமா போங்க கிரி அண்ணே. ஆரமிச்சதும் தெரியல...முடிஞ்சதும் தெரியல.

    பதிலளிநீக்கு
  18. நல்ல பகிர்வு சார்.. நிச்சயமாய் நீங்கள் சொன்னது போல் மனதுள் உள்ள குழந்தையை உசுப்பி எழுப்பி கொண்டு படம் பார்த்தால் நிச்சயமாய் ஆடி போய்விடுவோம்.

    சினிமாவின் வெற்றியே அதில் தானே சார் இருக்கிறது. ஒருவனை அவனது தன் என்ற விஷ்யத்தை நினைவுக்கு வராமல் கதை சொன்னது படத்தின் வெற்றி.

    பதிலளிநீக்கு
  19. //அய்யா சொன்னதை நம்பி தைரியமா போங்க கிரி அண்ணே. ஆரமிச்சதும் தெரியல...முடிஞ்சதும் தெரியல.//

    வயிற்றில் பால வார்த்தீர்கள் அப்துல்லா!இல்லாவிடால் நிறையப் பேரிடம் நான் மாட்டியிருப்பேன்.ஆனால், என்னைப் போக வைத்தது,உண்மைத் தமிழனும்,கேபிள் ஷங்கரும்.உங்கள் மூவருக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. //Cable Sankar கூறியது...
    நல்ல பகிர்வு சார்.. நிச்சயமாய் நீங்கள் சொன்னது போல் மனதுள் உள்ள குழந்தையை உசுப்பி எழுப்பி கொண்டு படம் பார்த்தால் நிச்சயமாய் ஆடி போய்விடுவோம்.//

    பெங்களூரில் இருந்தும் மதித்(
    து)உரை வழங்கியதற்கு நன்றி ஷங்கர்.

    பதிலளிநீக்கு
  21. //நமது அடிப்படை உணர்ச்சிகளான கோபம்,வன்மம்,காமம்.சபதம் ,வெறி மரணம் என்பதைத் தவிர வேறு எந்த மெல்லுணர்வுகளையும் ஒரு நொடி கூட வராமல் பார்த்துக் கொண்ட திரைக்கதையால் எந்நேரமும் இருந்து கொண்டு இருக்கும் பரபரப்பு,//

    சரியான ஆய்வு சார்

    பதிலளிநீக்கு
  22. //புருனோ Bruno சொன்னது…
    //நமது அடிப்படை உணர்ச்சிகளான கோபம்,வன்மம்,காமம்.சபதம் ,வெறி மரணம் என்பதைத் தவிர வேறு எந்த மெல்லுணர்வுகளையும் ஒரு நொடி கூட வராமல் பார்த்துக் கொண்ட திரைக்கதையால் எந்நேரமும் இருந்து கொண்டு இருக்கும் பரபரப்பு,//

    சரியான ஆய்வு சார்//

    உங்கள் முதல் வருகைக்கும் முதல் பாராட்டுக்கும் நன்றி புருனோ சார்.

    பதிலளிநீக்கு
  23. உண்மை தான் சார்... என்ன இது பேய் பிசானு.. scene போடுரங்கனு சொல்றவங்க...
    ஆங்கில மொக்க பேய் படத்த பாத்துட்டு ஆஹா ஓஹோனு சொல்றவங்க.. இவங்க எல்லாம் அவங்களுக்குள்ள இருக்குற குழந்தை மனசடோ போய் பாக்கணும்...

    பதிலளிநீக்கு
  24. KISHORE சொன்னது…
    உண்மை தான் சார்... என்ன இது பேய் பிசானு.. scene போடுரங்கனு சொல்றவங்க...
    ஆங்கில மொக்க பேய் படத்த பாத்துட்டு ஆஹா ஓஹோனு சொல்றவங்க.. இவங்க எல்லாம் அவங்களுக்குள்ள இருக்குற குழந்தை மனசடோ போய் பாக்கணும்...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிஷோர்.

    பதிலளிநீக்கு
  25. try this if you find time... very interesting..

    http://iamverysimple.blogspot.com/2009/04/grandpas-challenge-game.html

    பதிலளிநீக்கு