திங்கள், ஏப்ரல் 13, 2009

புத்தாண்டு வாழ்த்துகளும்,சில கேள்விகளும்

நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நமது பெரும்பாலான இந்துப் பண்டிகைகள் அனைத்தும் வானத்தில் நடக்கும் நிகழ்வுகளை பூமியில் கொண்டாடும் நாட்களாகவே இருக்கின்றன. சூரியனும், சந்திரனும் நமது அனைத்துத் திருநாட்களிலும் பங்கு வகிக்கின்றன. அமாவாசை முதல் பௌர்ணமி வரை நிலவின் அத்தனை வளர்ச்சிகளையும் நாம் ஏதாவது ஒரு வகையில் ஆராதிக்கிறோம்.

தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, நாகபஞ்ச்சமி, சஷ்டி, கோகுலாஷ்டமி, ராமநவமி, விஜயதசமி, வைகுண்ட ஏகாதசி, பிரதோஷம் இப்படி எல்லாமே நிலவோடு தொடர்புடையவை. இன்னும் நட்சத்திரங்களோடு தொடர்புடைய திருநாட்கள் ஏராளம். வானத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மனதில் எதற்குக் கொண்டாட்டம்?

வானத்தையும் மனதையும் இணைப்பதற்குத்தான் இத்தனை திருநாட்களா? எனில், அப்படி இணைத்தலுக்கான உளவியல் காரணங்கள் என்ன?

இதோ, இப்போது சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதைப் புத்தாண்டு எனச் சொல்கிறோம்.

சூரியன் பயணிக்கும் ஒரு நீள்வட்டத்தில் இன்றைய புள்ளியை மட்டும் ஏன் தொடக்கமாக நினைக்க வேண்டும்?

ரகசியம் என்று சொல்லப் பட்ட போதே அது யாருக்கோ ஏற்கனவே தெரிந்து, நாமும் கண்டறியத் தக்கது என்பதைச் சொலவதுதான் என்பார் ஊஸ்பென்ஸ்கி.

உங்களில் யாருக்காவது இந்த ரகசியம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே.

30 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்

    உங்களில் யாருக்காவது இந்த ரகசியம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே.//

    கடைசில இப்படி சொல்லிட்டீங்களே.

    குடுகுடுப்பை

    பதிலளிநீக்கு
  2. பண்டிகைகளை அனுபவிக்கணும் ஆராயக்கூடாது. :-):-)

    சும்மா லுலுலாயிக்கு.

    காரணம் கண்டிப்பாக இருக்கும். அது ஏற்புடையதா இல்லையான்றதைப் பொறுத்து அது மூடப்பழக்கமா இல்ல மூடப்பட்ட அதாவது காரணம் மூடப்பட்ட பழக்கமான்னு முடிவு பண்ணிக்கலாம்.

    காரணம் எதுவாயிருந்தாலும்
    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


    http://vediceye.blogspot.com/2009/04/blog-post_09.html

    பதிலளிநீக்கு
  3. ஷண்முக பிரியன் சார் அவர்களுக்கு, எனது இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. இந்த அளவிற்கு எல்லாம் நான் யோசிப்பதில்லை சார் :-)

    உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. வருங்கால முதல்வர் சொன்னது…
    வாழ்த்துக்கள்
    நன்றிகள் வருங்கால முதல்வரே.

    பதிலளிநீக்கு
  6. கபீஷ் கூறியது...
    காரணம் எதுவாயிருந்தாலும்
    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!//

    நன்றி கபீஷ்.உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. ramesh கூறியது...
    ஷண்முக பிரியன் சார் அவர்களுக்கு, எனது இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.//

    நன்றி ரமேஷ்.உங்களுக்கும் எனது வாழ்த்துகள் உரித்தாகுக.

    பதிலளிநீக்கு
  8. கிரி கூறியது...
    இந்த அளவிற்கு எல்லாம் நான் யோசிப்பதில்லை சார் :-)

    உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//
    புத்தாண்டு வாழ்த்துகள்,கிரி.உங்கள் அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இவ்வளவு யோசிக்கிறதுக்கு நமக்கெல்லாம் அவ்வளவா கிட்னி இல்லாததுனால.. ஹாப்பி டமில் நீயூ இயர் சார்..

    பதிலளிநீக்கு
  10. Cable Sankar சொன்னது…
    இவ்வளவு யோசிக்கிறதுக்கு நமக்கெல்லாம் அவ்வளவா கிட்னி இல்லாததுனால.. ஹாப்பி டமில் நீயூ இயர் சார்..//

    Ha!Ha!Same top you Shankar.

    பதிலளிநீக்கு
  11. இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள்

    சித்திரைத்திருநாளை பற்றி என்னுடைய பதிவில் எழுதியிருக்கேன்
    உங்களோட கருத்தை சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  12. //வானத்தையும் மனதையும் இணைப்பதற்குத்தான் இத்தனை திருநாட்களா?
    எனில் ,அப்படி இணைத்தலுக்கான உளவியல் காரணங்கள் என்ன?//

    கோளங்கள் ஏதாவது ஒரு விதத்தில் நம்மை உளவியலாக பாதிக்கிறது எனலாம்.உதாரணமாக காலை சூரிய உதய நேரத்துக்கும்,மதிய நேரத்து வெயிலுக்கும் மாலை நேரத்து சூரிய அஸ்தமனத்துக்குமுள்ள நமது மனநிலைகள் எப்படி இருக்கிறது?அதே போல் சந்திர ஒளிக்கும்.

    அப்புறம் நாம் சூரிய,சந்திரன் ஒளி மட்டுமின்றி மண்,நீர்,காற்று,ஒலி என இயற்கையின் எல்லா கூறுகளையும் வணங்குகிறோம்.இப்படி இயற்கையை தொழுது பரிணாம வளர்ச்சியாக கண்,காது,மூக்கு,உடல் உயிர் கொடுத்து பல கடவுள் வழிபாடுகள் தோன்றி இப்பொழுது கல்லைக் கண்டால் கடவுளைக் காணோம் கடவுளைக் கண்டால் கல்லைக் காணோம் பரிணாம முதிர்ச்சியில் நிற்கிறோம்:)

    பதிலளிநீக்கு
  13. இயக்குனர் அய்யா அறியாதது இல்லை.கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்,அதை அடிப்படையாக கொண்டே நாம் திதிகள் நட்சத்திரங்களை கணக்கில் கொண்டு பண்டிகைகள்,தர்பணங்கள்,போன்றவை செய்கிறோம்,
    இதை மூடநம்பிக்கை என்று சொல்பவர்கள் தான் என்ன நட்சத்திரம்,ராசி என கண்டறிந்து மாதம் தோறும் அவர்கள் ராசிக்கு இரண்டேகால் நாள் நீடிக்கும் சந்திராஷ்டம தினத்தில்,என்ன பாடு படுகிறார்கள் என்று சோதித்து பார்க்கவும்,அஷ்டமி நவமியில் காரியம் ஆரம்பித்து அதை முடிப்பதற்குள் என்ன பாடு படுகிறார்கள் என்றும் பார்க்கலாம்.இது என் தாழ்மையான கருத்தே .

    பதிலளிநீக்கு
  14. புன்னகை சொன்னது…
    இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள்//

    நன்றிகளும் வாழ்த்துகளும்,புன்னகை.

    பதிலளிநீக்கு
  15. புன்னகை சொன்னது…
    இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள்//

    நன்றிகளும் வாழ்த்துகளும்,புன்னகை.

    பதிலளிநீக்கு
  16. ராஜ நடராஜன் கூறியது...

    இப்பொழுது கல்லைக் கண்டால் கடவுளைக் காணோம் கடவுளைக் கண்டால் கல்லைக் காணோம் பரிணாம முதிர்ச்சியில் நிற்கிறோம்:)//

    உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிசார்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. எல்லாரும் ஜகா வாங்கற மாதிரி தெரியுது, இது எப்படி, ஏன்னு கேள்வி கேட்டுகிட்டு முன்னால போலாம் , பின்னாடியும் போலாம் ... கொஞ்சம் பின்னாடி போய், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ரொம்ப பின்னாடி போய், எதுக்கு நம்ம இந்த மொழி தான் பேசணும், ( அப்பறம் தமிழை மறந்துட வேண்டியது தான்) எதுக்கு இந்த டிரஸ் தான் போட்டுக்கணும் , எதுக்கு இதை தான் சாபிடனும், எதுக்கு குளிக்கணும் ,..அப்படியே போனா , ஆதி மனுஷன் காலத்துக்கு தான் போனும்... பழக்கமும் வழ்க்கமும் , முன்னாடி போக ஹெல்ப் பண்ணுது.

    முன்னாடி போறதுன்னா, குடும்பம், குட்டி ( குழ்ந்தை ) , நம்ப என்னா பண்றோமோ அதை குழுந்தைகளுக்கு சொல்லிகொடுத்து .. வாழையடி வாழையாய் வாழ்றது

    முன்னாடியும் போகம, பின்னாடியும் போகாம பேசாம நின்ன எடத்தில நிக்கலாம், ஆனா பேசாம இருக்கணும், சும்மா, முன்னாடி போறவங்களை வம்புக்கு இழுத்து , இது என்ன பழ்க்கம், நீ பின்னாடி தான் போனும் அப்படின்னு தகராறு பன்னக்
    கூடாது

    பதிலளிநீக்கு
  18. மன்னிக்கவும் கதாசிரியர் சார், புத்தாண்டு வாழ்த்துக்கள், ... சொல்ல மறந்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  19. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. கூறியது

    நட்சத்திரம்,ராசி என கண்டறிந்து மாதம் தோறும் அவர்கள் ராசிக்கு இரண்டேகால் நாள் நீடிக்கும் சந்திராஷ்டம தினத்தில்,என்ன பாடு படுகிறார்கள் என்று சோதித்து பார்க்கவும்,அஷ்டமி நவமியில் காரியம் ஆரம்பித்து அதை முடிப்பதற்குள் என்ன பாடு படுகிறார்கள் என்றும் பார்க்கலாம்.இது என் தாழ்மையான கருத்தே .//

    நன்றி கார்த்திகேயன்.ஒரு நிலைத்த ஸ்வரக் கோட்பாடுகளுக்குள் பாடகன் தன்னுடைய தனித்துவத்தையும் காட்ட முடியும் என்பதனால்தானே ஒரே கிருதி ஒரே ராகம் வெவ்வேறு வடிவம் எடுக்கிறது.
    பரிணாமத்தில் உயர்வு வர வரத் தனித்துவத்தை இயற்கை இப்படித்தான் அனுமதிக்கிறது என நினைக்கிறேன்.
    ஞானிகளுக்கு வரும் கஷ்டங்களையும் அவர்கள் பண்டிகைகளாக்கிக் கொண்டாடும்படி செய்கிறார்கள்.விதியை மதியால் வெல்லலாம் என்பது இதுதானே.
    எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. அது ஒரு கனாக் காலம் கூறியது...
    மன்னிக்கவும் கதாசிரியர் சார், புத்தாண்டு வாழ்த்துக்கள், ... சொல்ல மறந்து விட்டேன்//
    நீங்கள் சொல்லாவிட்டாலும் உங்கள் வாழ்த்து எனக்கு எப்போதும் உண்டு சுந்தர ராமன்,நான் இப்போது உங்களை வாழ்த்துவதைப் போல.

    பதிலளிநீக்கு
  21. திரு ஷண்முகப்ரியன்,

    எனது உள்ளம் கனிந்த திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. அது ஒரு கனாக் காலம் இது என்ன பழ்க்கம், நீ பின்னாடி தான் போனும் அப்படின்னு தகராறு பன்னக்
    கூடாது//
    கேள்வி கேட்பதை அனுமதிக்காவிட்டால் கேள்வி-பதில் வடிவத்திலேயே இருக்கும் பகவத் கீதையே இருந்திருக்க முடியாது.அது மட்டும் அல்ல
    நிறைய உபநிஷதங்களும் கூட.
    பொருள் தெரியாமல் செய்யும் எந்தச் செயலும் அதை எதற்காகச் செய்யச் சொன்னார்களோ அதற்கு எதிரான சடங்காகி ஒரு கட்டத்தில் இறந்துபடும்.

    பதிலளிநீக்கு
  23. இனிய மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  24. //
    ஷண்முகப்ரியன் கூறியது...

    பொருள் தெரியாமல் செய்யும் எந்தச் செயலும் அதை எதற்காகச் செய்யச் சொன்னார்களோ அதற்கு எதிரான சடங்காகி ஒரு கட்டத்தில் இறந்துபடும்.
    //
    உண்மை தான் நண்பரே. எனக்கும் தெரியவில்லை எதற்காக சித்திரையில் வருடப்பிறப்பினை கொண்டாடுகிறார்கள் என்று. ஆனால் வேறுபல ஆசிய நாடுகளிலும் இதே தினத்திலேயே அவர்களது வருடப்பிறப்பினைக் கொண்டாடுகின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  25. எனக்கு அந்த அளவிற்கு புரிதல் இல்லை சார்... உங்களுக்கு நன்னாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ஸ்வாமிஜி.
    தங்களிடம் இருந்து வாழ்த்துப் பெறுவதை எனது பேறாகக் கருதுகிறேன்.நன்றி சொல்லி அதனைச் சடங்காக்கிட விரும்பவில்லை.
    தங்கள் கோவைப் புத்தாண்டு விழா இனிதே நடைபெற்றிருக்கும் எனக் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. அமர பாரதி கூறியது...
    இனிய மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.//

    நன்றி அமரபாரதி சார்.உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் எங்களது மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. ஆ.ஞானசேகரன் கூறியது...
    எனக்கு அந்த அளவிற்கு புரிதல் இல்லை சார்... உங்களுக்கு நன்னாள் வாழ்த்துக்கள்//
    உங்களுக்கும் எனது சித்திரைத் திரு நாள் வாழ்த்துக்கள்,ஆ.ஞானசேகரன்.

    நானும் உங்கள் படகில் பயணம் செய்பவன்தான்.புரிதல் நம் இரண்டு பேருக்குமே நிகழட்டும் :-):-).

    பதிலளிநீக்கு
  29. வலசு - வேலணை கூறியது... உண்மை தான் நண்பரே. எனக்கும் தெரியவில்லை எதற்காக சித்திரையில் வருடப்பிறப்பினை கொண்டாடுகிறார்கள் என்று. ஆனால் வேறுபல ஆசிய நாடுகளிலும் இதே தினத்திலேயே அவர்களது வருடப்பிறப்பினைக் கொண்டாடுகின்றார்கள்.//
    இது எனக்குப் புதிய தகவல்.பகிர்வுக்கு நன்றி வலசு - வேலணை சார்.

    பதிலளிநீக்கு
  30. ஸ்வாமி ஓம்கார் கூறியது...
    திரு ஷண்முகப்ரியன்,

    எனது உள்ளம் கனிந்த திருநாள் வாழ்த்துக்கள்.//

    வணக்கம் ஸ்வாமிஜி.
    தங்களிடம் இருந்து வாழ்த்துப் பெறுவதை எனது பேறாகக் கருதுகிறேன்.நன்றி சொல்லி அதனைச் சடங்காக்கிட விரும்பவில்லை.
    தங்கள் கோவைப் புத்தாண்டு விழா இனிதே நடைபெற்றிருக்கும் எனக் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு