புதன், நவம்பர் 04, 2009

ஸ்வாமி ஓம்கார் கேட்ட கேள்விகள்...

Swami omkar to me show details 09:37 (2 hours ago)
சாதாரண மனிதன் உடலுறவின் மூலமும், கலைஞன் கற்பனையின் மூலமும் தனது அளவற்ற சக்தியையும், எக்ஸ்டஸியையும் வெளிப்படுத்துகிறான்.-ஓஷோ
ஆன்மீகமுள்ள ஷண்முகப்ரியனுக்கு,

உங்களின் ரசிகனில் ஒருவன் எழுதும் வரிகள் இவை.
உங்கள் வலைப்பக்கத்தில் நீங்கள் எழுதிய தொடரான ’காதல் மலரும் கணங்கள்’ மிக அருமையானதாக இருந்தது.அதை தொடர்ந்து உங்களிடம் சில கேள்விகள்.
1) உங்கள் கதையின் நாயகி ஆன்மீக உணர்வு கொண்டவளாக சித்தரிக்கபட்டுள்ளது. ஒரு முப்பது வருடத்திற்கு முன் இக்கதையை நீங்கள் எழுதியிருந்தாலும் அவ்வாறு சித்தரிக்கபட்டு இருக்குமா? அல்லது தற்சமயம் உங்கள் ஆன்மீக தேடல் அதற்கு காரணமா?
2) இத்தொடர்கதையை இதற்கு முன் நீங்கள் வலைதளத்தில் எழுதிய தொடர்கதைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக உணர்கிறேன். அவ்வாறு நீங்களும் உணர்கிறீர்களா? ஆம் என்றால் அதன் காரணம் என்ன என கூறமுடியுமா?
3) தொடரின் முடிவில் நீங்கள் இக்கதை திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறி இருக்கிறீர்கள். கடவுளின் அருளால் இக்கதை திரைப்படமாக்குவதாக கொண்டால், தற்கால திரைசூழலில் இக்கதை திரையில் வந்தால் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தந்து படமாக்கும் சாத்திய கூறுகள் உண்டா? இத்தகைய ஆன்மீக விஷயங்களை திரையுலகம் தாங்குமா?
4) கன்னிகா மற்றும் காதல் மலர்ந்த கணங்கள் இவற்றில் பெண்கள் முக்கியத்துவமும், வர்ணனையும் அதிகம் இடப்பெறகாரணம் என்ன?
5) கன்னிகா தொடரில் கூட சில பகுதிகள் தோய்வுடன் இருந்தது. ஆனால் இத்தொடர் ஒவ்வொரு பகுதியும் உற்சாகத்திடன் காணப்பட்டது. இறுதி பகுதி சினிமாவின் தன்மையில் இருந்தாலும் ஒரு விறுவிறுப்பையும், கருத்தையும் கூறுகிறது. இத்தொடரை நீங்கள் எழுதும் பொழுது அப்படி உணர்ந்தீர்களா? எது உங்களை இவ்வாறு எழுத தூண்டியது?
பல கேள்விகள் இருந்தாலும் பொதுக்கேள்வியாக இவற்றை வைக்கிறேன்.
உங்கள் பதிலை வலைப்பதிவில் எதிர்பார்க்கிறேன்
அன்பும் ஆசியும்ஸ்வாமி ஓம்கார்.

எனது சிந்தனைகளின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியமைத்த ஓஷோவின் மேற்கோளுடன் நீங்கள் உங்களது ரசனையைப் பகிர்ந்து கொள்ள வந்ததை எனது பேறாகக் கருதுகிறேன்,ஸ்வாமிஜி.

//உங்களின் ரசிகனில் ஒருவன் எழுதும் வரிகள் இவை.
உங்கள் வலைப்பக்கத்தில் நீங்கள் எழுதிய தொடரான ’காதல் மலரும் கணங்கள்’ மிக அருமையானதாக இருந்தது.//

உங்களை ரசிகராகப் பெற்றதை விட இனி இந்தக் கதைக்கு வேறெந்தப் பெருமையும் கிடைத்து விட முடியாது.இந்தக் கதை புண்ணியம் செய்திருக்க வேண்டுஎன நினைக்கிறேன்,ஸ்வாமிஜி.

1) உங்கள் கதையின் நாயகி ஆன்மீக உணர்வு கொண்டவளாக சித்தரிக்கபட்டுள்ளது. ஒரு முப்பது வருடத்திற்கு முன் இக்கதையை நீங்கள் எழுதியிருந்தாலும் அவ்வாறு சித்தரிக்கபட்டு இருக்குமா? அல்லது தற்சமயம் உங்கள் ஆன்மீக தேடல் அதற்கு காரணமா?

முப்பது வருடங்களுக்கும் முன்...// எனது 'ஆன்மீகத் தேடல்' பற்றி...

முப்பது வருடங்களுக்கும் முன்னால் கிட்டத் தட்ட என்னுடைய இருபதுகளில் 'குருமூர்த்தி' என்ற ஒரு நாவலை எழுதி உள்ளேன்.அதனுடைய கையெழுத்துப் பிரதி இன்னும் என்னிடத்தில் உள்ளது.
நான் அணுகிய சில பதிப்பகங்கள் அப்போது அதனை வெளியிடத் தயங்கி மறுத்து விட்டனர்.
அதனைப் பதிப்பிற்கும் முயற்சியில் இன்னும் யாரென்று தெரியாத ஒரு சந்யாசி உட்பட ஒரு கூட்டத்தில் அதனைப் படித்து மட்டும் காண்பித்தேன்.அவர் மட்டும் வெகுவாக என்னைப் பாராட்டினார்.
மற்ற எல்லோரும் எனது சின்ன வயதைக் கண்டு அதிசயித்தார்கள் அன்றி அது அச்சுக்கே வரவில்லை.
'கடை விரித்தோம் கொள்வார் இல்லை, கட்டிக் கொண்டோம்' என்று உங்களவர்களில் ஒருவர் சொன்னதைப் போல நானும் அதற்குப் பின் எந்த சிரத்தையும் எடுக்காமல் விட்டு விட்டேன்.

அந்த சந்யாசியை மட்டும் சில வருடங்கள் கழித்து எனது கல்யாணக் கூட்டத்தில் பார்த்தேன்.அழைக்காமலேயே வந்திருந்தார்.அவரிடம் ஆசி வாங்கினேனானா என்பது கூட இப்போது ஞாபகம் இல்லை.
ஒரு சாதாரண மனிதனின் மனம் எப்படி அனைத்தும், களைந்து முக்தி அடைகிறது என்பதை உள்ளிருந்து பார்க்கும் கதைக் களம் அது.
அந்த நாவலுடன் ஒப்பிடும் போது இந்தக் கதை, எங்களது திரைப் படப் பாணியில் சொல்வதென்றால் 'கமர்ஷியல்'!
பார்ப்பவர்களைப்,படிப்பவர்களை ஒரு கணம் கூட நழுவ விடாமல்,இறுக்கிப் பிடித்துக் கொண்டே கொண்டே படைக்கும் பயம்.
ரசிகனது சிறிய கொட்டாவி கூட எங்களது வாழ்க்கையையே அலைக்கழிக்கும் ஒரு பெரும் புயல்.!
'அன் இன்டிரஸ்டிங் மீன்ஸ் டெட்' என்பதுதான் எங்கள் தாரக மந்திரம்.

திரையுலகத்தின் உள்ளே வந்து பார்க்கும் போது,மக்களைக் கட்டிப் போடும் மந்திரக் கயிறுகளை சதா தேடிக் கொண்டிருப்பதையே முழு நேர வாழ்க்கையாக வைத்திருப்பவர்களைப் பார்க்கலாம்.

பெண்களின் மார்புகள்,ஆண்களின் உக்கிரம்,இசை,நகைச் சுவை,கண்ணீர்,கவிதை, உணர்ச்சிப் பெருக்குகள்,கடவுள்கள்,மதம்,மொழி,மஹான்கள்,கொடுங்கோலர்கள்,கற்பு,விபச்சாரம் அனைத்தையுமே,அனைவரையுமே திரை அரங்குகளில் விற்கப் படும் டிக்கெட்டுக்களின் எண்ணிக்கை வழியாக மட்டும் பார்க்கப் பட வேண்டிய கட்டாயக் கலை இது.
அதனால் ஆன்மீகம் 'இன்டெரஸ்டிங்' என்ற ஒரே காரணத்தால் மட்டுமே என்னைக் கவர்கிறது.ஆங்கில நாவல்களைப் போல,விஞ்ஞானத்தைப் போல..சோதிடத்தைப் போல..
படைப்புக்கான 'பொடன்ஷியல்' உள்ளது அனைத்துமே எனக்கு ஆன்மீகம்தான்.
அதனால் ஆன்மீகத் தேடல் என்று இதனக் கூற முடியாது.

2) இத்தொடர்கதையை இதற்கு முன் நீங்கள் வலைதளத்தில் எழுதிய தொடர்கதைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக உணர்கிறேன். அவ்வாறு நீங்களும் உணர்கிறீர்களா? ஆம் என்றால் அதன் காரணம் என்ன என கூறமுடியுமா?//

இல்லை,ஸ்வாமிஜி.எல்லாக் கதைகளையும் போல இதையும் ஒரு வழக்கம் போலக் கதையாக எண்ணித்தான் எழுதினேன்.
ஒரே ஒரு வித்தியாசம்.
இது விற்பனைக்கல்ல என்ற தைரியம்.
அதனால் வரிக்கு வரி எந்த முன்திட்டமிடலும் இல்லாமல் சித்தம் போன போக்கில் எழுதிய கதை.
ஆஜ்மிர் என்று ஊர் தானாக வந்து விழுந்த பின்னர்தான் இணையத்தில் சென்று அந்த ஊரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். பின்னர் வந்ததுதான் அங்கே இருக்கும் தர்க்காவும்,ஆஜ்மீர் பாபாவும்.
பின்னாளில் பல உயிர்களைக் காப்பாற்றும் ஒரு வீரன் ஒரு கட்டத்தில் தனது உயிருக்காக எப்படியெல்லாம் போராடினான் என்ற மையக் கருதான் இந்தக் கதையாக வளர்ந்தது.
ஒரு வீர்யமுள்ள கதைக் கரு தன்னைத் தானே கதையாக வளர்த்துப் பெருகிக் கொள்ளும் என்பது நான் அனுபவத்தில் கண்ட ஒன்று.

3) தொடரின் முடிவில் நீங்கள் இக்கதை திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறி இருக்கிறீர்கள். கடவுளின் அருளால் இக்கதை திரைப்படமாக்குவதாக கொண்டால், தற்கால திரைசூழலில் இக்கதை திரையில் வந்தால் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தந்து படமாக்கும் சாத்திய கூறுகள் உண்டா? இத்தகைய ஆன்மீக விஷயங்களை திரையுலகம் தாங்குமா?

முதலிலேயே சொன்னதைப் போல் இது விற்பனைக்காக எழுதிய கதை அல்ல.அந்தக் கதைகளை நான் பதிவுகளில் எழுதுவதில்லை!

சங்கத்தில் பதிவு பண்ணியது இதில் வரும் குணச் சித்திரங்களைக் களவு போகாமல் காக்க.

இந்தக் கதை திரைப்படமாக வேண்டுமானால் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை எழுதப் படவேண்டும்.
பட்ஜெட் பெரிதானால் பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோவை முதலில் நீங்கள் உள்ளே இழுத்து வரவேண்டும். அதற்கு ஏற்ற முறையில் கதை திருத்தப் படவேண்டும்.
படத்தைப் பெரிதாக விற்பதற்கு இப்போது கதாநாயகிகள் பயன்படுவதில்லை.அதனால் நாயகிகளை மட்டும் நம்பிப் படம் எடுப்பதானால் பட்ஜெட்டைச் சுருக்க வேண்டும்.அதுதான் பாதுகாப்பு. அந்தச் சுருங்கிய பட்ஜெட்டுக்குக் கதை இடம் கொடுக்காதெனில் கதையைத்தான் கைகழுவி விடவேண்டும்.
'அருந்ததி' போன்ற நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பெரும் வெற்றிப் படங்கள் உருவானதுக்குக் காரணம், முழுக்க முழுக்க அந்த இயக்குநர்,தயாரிப்பாளரின் முழுமையான,துணிச்சல்.நம்பிக்கை.வெறி.அளவற்ற ஈடுபாடு.
அந்த மாதிரி நிகழ்வுகள் விதிகள் அல்ல.விதி மீறல்கள்.
தயரிப்பாளர்களே விரும்பினாலும்,பெரும் பணத்தை ,வெறும் கதையை மட்டும் நம்பி முதலீடு செய்வது எனக்கு எப்போதும் உடன்பாடில்லை.
புதிய முகங்கள்.சின்ன பட்ஜெட்.வித்தியாசமான கதை.இதுதான் இன்றைய ஃபார்முலா.
இது திரைப் படத்துக்குப் பின்னாலிருந்து யோசிப்பது.
முன்னால் கொட்டகைகளில் அமரும் ஆடியன்ஸுக்கு படம் நன்றாக இருந்தால் போதும்.பாகுபடின்றி ஓட்டிக் காண்பித்து விடுவார்கள்! தயாரிப்பாளரின் பணத்துக்குத்தான் எல்லைகள் உண்டு.மக்களின் ரசனைக்கு எல்லைகளே இல்லை!

4) கன்னிகா மற்றும் காதல் மலர்ந்த கணங்கள் இவற்றில் பெண்கள் முக்கியத்துவமும், வர்ணனையும் அதிகம் இடப்பெறகாரணம் என்ன?

நான் ஒரு ஆணாக இருப்பதுதான் ஸ்வாமிஜி!

5) கன்னிகா தொடரில் கூட சில பகுதிகள் தோய்வுடன் இருந்தது. ஆனால் இத்தொடர் ஒவ்வொரு பகுதியும் உற்சாகத்திடன் காணப்பட்டது. இறுதி பகுதி சினிமாவின் தன்மையில் இருந்தாலும் ஒரு விறுவிறுப்பையும், கருத்தையும் கூறுகிறது. இத்தொடரை நீங்கள் எழுதும் பொழுது அப்படி உணர்ந்தீர்களா? எது உங்களை இவ்வாறு எழுத தூண்டியது?//

கன்னிகா நீள்தொடராக உருவாக ஆரம்பித்து விட்டது.பதிவுலகின் அவசர ரசனைக்கு அது ஒவ்வாதது என்றதனால்தான் அதனைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டேன்.

//சினிமாவின் தன்மையில் இருந்தாலும் ....//

நான் முதன் முதலில்'உறவாடும் நெஞ்சம்' என்ற படத்துக்குக் கதை-வசனம் எழுதிய போது எனக்கு வயது 20.!

37 வருடங்கள் நான் உண்டு,உறங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் திரைப் படக் கலையின் பாதிப்பு இல்லாமல் நான் எப்படி ஸ்வாமிஜி எழுத முடியும்?

விஷுவல்களும்,உண்ர்ச்சிகளும் இல்லாத ஒவ்வொரு ஃப்ரேமும் வீண் என்பது நான் கற்று வந்த கலை.
எப்போதுமே ஒன்றினுடைய இறுதிப் பகுதி விறுவிறுப்பாகத்தான் இருக்கும்.
இறுதிகளுக்கே உரிய இயல்பு அது.
அதுவும் திரைத் துறையில்,படத்தின் உச்ச கட்டம்தான் நமக்கும் படம் பார்ப்பவர்களுக்கும் இருக்கும் கடைசி நெருக்கம்.
அங்கே அவர்களது கவனத்தைத் தவற விட்டு விட்டால் மீண்டும் அவர்களைப் பிடிக்கவே முடியாது.
காதலியின் ரயில் போன பிறகு, ஓடிவரும் காதலனைப் போல ஆகி விடுவோம்.

விறு விறுப்பு இல்லையென்றால் கிளைமேக்ஸைத்தான் மாற்ற வேண்டுமே தவிர,விறுவிறுப்பை அல்ல!

இன்னொன்று.பதிவுலக நண்பர்கள் நிறையப் பேர் 'சினிமாத் தனம்' என்ற சொல்லைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
மந்தமான நமது இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்று நேரம் தப்பிக்கவே நமக்குச் சினிமாவின் போலி விறுவிறுப்பு தேவைப் படுகிறது.
அந்தத் தேவை சிலருக்கு சீக்கிரமே பூர்த்தியாகி விடுகிறது.பல பேருக்கு அது பூர்த்தி ஆவதே இல்லை.
விறுவிறுப்புப் போதும் என்று ஆனவர்கள் நமது இயல்பு வாழ்க்கையின் மந்தத்துடன், படக் கதையின் ஊட்டப் பட்ட விறு விறுப்பை,வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்லும் வார்த்தையே இந்த 'சினிமாத்தனம்.'

இந்த 'சினிமாத்தனம்தான்' சரியான மாயை.
இந்த உணர்வு மக்களுக்கு எங்கே தோன்றும் என்று யாராலும்,எந்த நியூட்டன்,ஐன்ஸ்டீன் விதியாலும் தீர்மானிக்க முடியாதது.
படங்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது இந்த நூலிழையைப் பற்றிய கணிப்புத்தான்.
ஒரே காட்சியில் காதல் வருவதை ஒரு படத்தில் ஒத்துக் கொள்வார்கள்.அடுத்த படத்தில் காறித் துப்புவார்கள்.
சண்டைக்காட்சியை ஒரு படத்தில் சூப்பர் என்பார்கள்.
அடுத்த படத்திலேயே கிண்டலடிப்பார்கள்.

சினிமாத் தனம் என்று அவ்வப்போது ரசிகர்கள் சொல்வது, கல்யாண மாப்பிள்ளை, காசி யாத்திரை போவது மாதிரி!
அதை உண்மையான சந்யாசம் என்று எடுத்துக் கொண்டால் கல்யாணமே நடக்காது!
என்ன,இங்கே எப்போது ரசிகர் காசி யாத்திரை போவார்,திரும்பத் தாலி கட்ட வருவார் என்று யாருக்குமே தெரியாது!இந்த விந்தையை அறியத்தான் நிறைய சினிமாக் காரர்கள் ஜோதிடத்தை நாடுகிறார்கள்.

//அன்பும் ஆசியும்ஸ்வாமி ஓம்கார்//

என்னுடைய முதல் படமான 'ஒருவர் வாழும் ஆலயம்' தவிர நான் எனது முழு நிறைவுடன் ஒரு படத்தை இன்னும் எழுதவோ,இயக்கவோ இல்லை.உங்கள் அன்பும் ஆசியும் அதற்கு என்னை வழி நடத்திச் சென்றால் நான் நிறைவடைவேன்.

சரணங்கள்,ஸ்வாமிஜி.

37 கருத்துகள்:

  1. கேள்விகேட்ற்ற பதில்கள் அருமை ... தொடரட்டும் உங்கள் பதிவுகள் .... வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஷண்முகப்ரியன்!
    உங்கள் ஈமெயில் முகவரி தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. மகா சொன்னது…
    கேள்விகேட்ற்ற பதில்கள் அருமை ... தொடரட்டும் உங்கள் பதிவுகள் .... வாழ்துக்கள்//

    நான் இந்தப் பதில்களை எழுதவே ஸ்வாமிஜி இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்கிறார் என்பதே உண்மை,மகா.

    பதிலளிநீக்கு
  4. Cable Sankar சொன்னது…
    அருமையான பதில்கள் சார்..//

    மகாவுக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும்,ஷங்கர்.
    என்ன,நீரின் மேற்புறத்தில் நீச்சலடித்து மகிழும் வயதிற்கும்,அதனுடைய ஆழத்திற்குச் சென்று ஆய்வு செய்யும் வயதிற்கும் உள்ள ஆழங்களின் வித்தியாசமே இருவருக்கும்.
    மகிழ்ச்சி,ஷங்கர்

    பதிலளிநீக்கு
  5. லதானந்த் சொன்னது…
    ஷண்முகப்ரியன்!
    உங்கள் ஈமெயில் முகவரி தாருங்கள்.

    shanmughapriyan.sai@gmail.com

    உங்கள் கடிதத்தை எதிர் நோக்கி.

    பதிலளிநீக்கு
  6. அருமையான கேள்விகளும் அற்புதமான பதில்களும். மிக ரசனையான பதிவு

    முப்பத்தேழு வருடங்கள் என் வயதைவிட உங்கள் சினிமாஅனுபவம் மூத்தது ஐயா.

    மிக அருமையாக வினாக்கள் எழுப்பிய ஸ்வாமிஜிக்கு நன்றி.முத்துக்குளிப்பது போன்ற கேள்விகள்.ஒவ்வொரு பதிலுமே முத்து தான்.
    உங்கள் மூன்று தலைமுறைக்கும் மேற்பட்ட அனுபவத்தின் வாயிலாக நாங்களும் கூடவே பயணித்தது போல உணர்ந்தோம்.

    //பெண்களின் மார்புகள்,ஆண்களின் உக்கிரம்,இசை,நகைச் சுவை,கண்ணீர்,கவிதை, உணர்ச்சிப் பெருக்குகள்,கடவுள்கள்,மதம்,மொழி,மஹான்கள்,கொடுங்கோலர்கள்,கற்பு,விபச்சாரம் அனைத்தையுமே,அனைவரையுமே திரை அரங்குகளில் விற்கப் படும் டிக்கெட்டுக்களின் எண்ணிக்கை வழியாக மட்டும் பார்க்கப் பட வேண்டிய கட்டாயக் கலை இது.//

    யதார்த்தமான நிஜம்

    //என்னுடைய முதல் படமான 'ஒருவர் வாழும் ஆலயம்' தவிர நான் எனது முழு நிறைவுடன் ஒரு படத்தை இன்னும் எழுதவோ,இயக்கவோ இல்லை.//
    இன்று வரை எல்லோராலும் விரும்பி பார்க்கக்கூடிய படம் , இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.உங்கள் சினிமா வெற்றிபயணம் இனிதே தொடரட்டும் ஐயா.
    மீண்டுமொரு நல்ல பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. நான் அவ்வளவா செய்யாத ஒரு மேட்டர் ‘யோசிக்கறது’. உங்க பதில்கள்... என்னை.. இன்னைக்கு கொஞ்சம் வேலை வாங்கிடுச்சி! :) :)

    இப்படி தெளிவா யோசிக்கவும், அதை எழுத்தில் கொண்டு வருவதும்.. உங்களுக்கு வாய்ச்ச கிஃப்ட் சார்!!

    I envy you!

    [பதிவர் சந்திப்பில்... உங்களோட.. பேச்சை கேட்க முடியாமல் போவது... மிகப் பெரிய துர்பாக்கியம்.

    I envy on those lucky fellas!!

    ஒரே பொறாமை புகைச்சல்! :) :) :)

    ]

    பதிலளிநீக்கு
  8. உங்களின் உள்ளிருந்த உணர்வுகளை முழுமையாக வெளிக்கொண்டு வந்தன ஸ்வாமி ஓம்கார் அவர்களின் கேள்விகள்..

    மிகச் சரியான கேள்விகள், மிகச்சரியான நேரத்தில் கேட்கப்பட்டுள்ளன.

    இதுவே இறை லீலை ..!!!!

    பதிலளிநீக்கு
  9. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது… //

    மகிழ்ச்சி,கார்த்தி.நவம்பரில் உங்களை நேரில் சந்திப்பதற்காகக் காத்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. செந்தழல் ரவி சொன்னது…
    நல்ல வாசிப்பு அனுபவம்//

    நன்றி,ரவி.அந்த அனுபவத்தினை உங்களுக்கு நல்கியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. ஹாலிவுட் பாலா சொன்னது…//

    நான் அவ்வளவா செய்யாத ஒரு மேட்டர் ‘யோசிக்கறது’. உங்க பதில்கள்... என்னை.. இன்னைக்கு கொஞ்சம் வேலை வாங்கிடுச்சி! :) :)

    இப்படி தெளிவா யோசிக்கவும், அதை எழுத்தில் கொண்டு வருவதும்.. உங்களுக்கு வாய்ச்ச கிஃப்ட் சார்!!

    I envy you! //

    This envy is mutual,Bala!
    கூட்டத்தில் எங்கிருந்தாலும் நம் குழந்தையைக் கண்டு பிடித்து விடுவதைப் போல, இப்போது உங்கள் எழுத்தை எத்தனை பக்கங்களுக்கு மத்தியில் இருந்தாலும் கண்டு பிடித்து விடுவேன்!

    பதிவர் சந்திப்பைப் பற்றித்தான் நிறைய நண்பர்கள் எழுதுவார்களே,நான் உட்பட.

    மகிழ்ச்சி,பாலா.

    பதிலளிநீக்கு
  12. நிகழ்காலத்தில்... சொன்னது…
    உங்களின் உள்ளிருந்த உணர்வுகளை முழுமையாக வெளிக்கொண்டு வந்தன ஸ்வாமி ஓம்கார் அவர்களின் கேள்விகள்..

    மிகச் சரியான கேள்விகள், மிகச்சரியான நேரத்தில் கேட்கப்பட்டுள்ளன.

    இதுவே இறை லீலை ..!!!!

    இதையேதான் ம்காவுக்கு அளித்த பதிலில் நான் சொல்லி இருக்கிறேன்,சிவா.

    இறையருள் உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  13. ஷண்முகப்ரியன் ஐயா,

    விளக்கம் நன்று !

    பதிலளிநீக்கு
  14. ஷண்முகபிரியன்ஜி, பதில்கள் ரொம்ப சுவாரஸ்யம். நீங்க ஒரு கேள்வி பதில் செஷனே ஆரம்பிக்கலாம்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  15. கோவி.கண்ணன் சொன்னது…
    ஷண்முகப்ரியன் ஐயா,

    விளக்கம் நன்று !//

    நன்றி,கண்ணன்.உங்கள் பதிவுகளை எத்தனை முறை 'follow' போட்டாலும் எனது லிஸ்ட்டுக்குள் வரமாட்டேன் என்கிற்து.
    அதனால் உங்கள் எழுத்துக்களைத் தவற விடுகிறேன் என்று நினைக்கிறேன்.
    மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  16. Jawahar சொன்னது…
    ஷண்முகபிரியன்ஜி, பதில்கள் ரொம்ப சுவாரஸ்யம். நீங்க ஒரு கேள்வி பதில் செஷனே ஆரம்பிக்கலாம்.//

    நன்றி,ஜவஹர்.
    கேள்வி பதில் என்றால் எனது கருத்துக்களே மீண்டும் மீண்டும் சுழலும்.அது 'boring and unhealthy for free thinking'

    பதிலளிநீக்கு
  17. /நன்றி,கண்ணன்.உங்கள் பதிவுகளை எத்தனை முறை 'follow' போட்டாலும் எனது லிஸ்ட்டுக்குள் வரமாட்டேன் என்கிற்து.
    அதனால் உங்கள் எழுத்துக்களைத் தவற விடுகிறேன் என்று நினைக்கிறேன்.
    மன்னிக்கவும்.//

    பரவாயில்லை தமிழ்மணம் முகப்பில் தெரியும் போது படிக்கலாம் !
    :)

    உங்களை சென்னை வந்திருந்த போது சந்தித்திருக்கிறேன். முன்பே அறிமுகம் ஆகி இருக்கவில்லை ஆகையால் மிகுதியாக உரையாடும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. :(

    பதிலளிநீக்கு
  18. முறையான கேள்விகளும்... மிக சரியான பதிகளும் நன்றாக உள்ளது. உங்களுக்கும் ஸ்வாமி ஓம்கார்க்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  19. கோவி.கண்ணன் சொன்னது… //

    பரவாயில்லை தமிழ்மணம் முகப்பில் தெரியும் போது படிக்கலாம் !
    :)//

    நான் தமிழ்மணம் பட்டியலைப் பார்த்துப் பதிவுகளைப் படிப்பதில்லை, கண்ணன்.நண்பர்களின் பதிவுகளில் வரும் பின்னூட்டங்களில் இருந்தே தெரிவு செய்கிறேன்.ஸ்வாமியின் பதிவுகளில் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் க்ளிக்கி விடுவேன்.

    சரி,பார்ப்போம்.வாழ்க்கை நம்மை ஒன்று சேர்க்காமலா போய்விடும்.சந்திப்போம்,கண்ணன்.

    பதிலளிநீக்கு
  20. ஆ.ஞானசேகரன் சொன்னது…
    முறையான கேள்விகளும்... மிக சரியான பதிகளும் நன்றாக உள்ளது. உங்களுக்கும் ஸ்வாமி ஓம்கார்க்கும் நன்றி//

    நன்றி,ஞானசேகரன்.உங்கள் வாழ்த்திலிருந்துதானே இன்றைய காலைப் பொழுதே எனக்கு ஆரம்பித்தது! மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  21. Vijayashankar சொன்னது…
    அருமையான பதில்கள்! :-)

    அத்தி பூத்தாற் போல் வரும் உங்கள் பின்னூட்டங்கள் எப்போதும் எனக்குத் தனி மகிழ்ச்சியையும்,நிறைவையும் கொடுக்கும்.

    நன்றி,விஜய்.

    பதிலளிநீக்கு
  22. நல்ல தொடர் பதில்கள் மிக நன்றாக இருந்தது

    பாலாஜி

    பதிலளிநீக்கு
  23. பாலாஜி சொன்னது…
    நல்ல தொடர் பதில்கள் மிக நன்றாக இருந்தது

    பாலாஜி//

    மகிழ்ச்சியும், நன்றியும் பாலாஜி.தங்களுடைய முதல் 'Follower' ஆக நான் ஆனதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  24. இதையெல்லாம் படிச்சதாலே நான் எல்லாம் ஏன் தான் எழுதுறேன்னு ஒரு நினைப்பு வருது

    பதிலளிநீக்கு
  25. நசரேயன் சொன்னது…
    இதையெல்லாம் படிச்சதாலே நான் எல்லாம் ஏன் தான் எழுதுறேன்னு ஒரு நினைப்பு வருது//

    உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது எனக்கும் அந்த எண்ணம் வருவதுண்டு,நச்ரேயன், when I am enjoying your spontaneous humour.

    நன்றி,மகிழ்ச்சி நச்ரேயன்.

    பதிலளிநீக்கு
  26. எம்.எம்.அப்துல்லா சொன்னது…

    எதார்த்தமான பதில்கள் :)//

    நன்றி,அப்துல்லா.

    பதிலளிநீக்கு
  27. உங்களிடம் எனக்கு பெரிய வருத்தம் இருந்தது. வலைதளத்தில் இணைப்பு (நண்பர்கள்) என்று பகுதி ஒன்று உண்டு என்பது ஏன் நீங்கள் இணைக்கவில்லை.

    உருவாக்கும் எண்ணம் இருக்கிறதா?

    இந்த டாஸ்போர்டு சமாச்சாரமே இரண்டு வாரத்துக்கு முன்னால் எதேச்சையாக கற்று கொண்டு இப்போது தான் வலை தள தொடர் வாசிப்பு சாத்யமாகி இருக்கிறது.

    உங்களுடைய பெயரை அடித்தால் இன்று தான் கூகுள் குரோம் கூட படித்துறையில் வந்து கால் நணைக்க அனுமதித்து உள்ளது.

    ஏற்கனவே ஓம்கார் தொடர்பதிவர்கள் பற்றி சில விசயங்கள் சொல்லியிருந்தார். அது போல பகிங்கிர கடிதம் பற்றி நாகா சொன்னபோது தான் அதுவும் புரிந்தது.

    ஆனால் ஒரு கடிதம் மூலம் இத்தனை விசயங்களை வெளியே கொண்டு வர முடியுமா? என்பதே இன்று தான் உரைத்தது. இதன் பிறகு தான் உங்களின் ஆழமும் புரிந்தது.

    சிந்தனை எழுத்து என்ற பின் ஊட்டம் படித்த போது சற்று கோபம் வந்தது. அது என்ன சிந்தனை எழுத்து சிந்திக்காத எழுத்து. அது வெறும் எழுத்து. வாசிப்பவர் பொறுத்து மாறுமே தவிர உள்வாங்கியது அத்தனையும் வாந்தியா? பேதியா? இல்லை மொத்தமாய் வாழ்ந்து தொலைத்த வாழ்க்கையா என்று உணர்த்தும் என்று இன்று முழுவதும் அது குறித்த சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது.

    ஆனால் மீன்ஸ் டெட் என்று சொன்னீர்கள் அல்லவா? அடேயப்பா? மொத்த திரை உலகமும் இந்த இரண்டு வார்த்தைகளில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

    அடமானம் வைத்தது சேட்டுக்கா? இல்லை நாம் தொடக்கத்தில் வாழ்ந்த நாடோடி வாழ்க்கையா என்பதை உணர்த்தி விடும்.

    ஒவ்வொரு முறையும் தூக்கம் வராத அல்லது விரைவாக எழுந்த காலைப்பொழுதில் தான் உங்கள் வலைக்குள் வந்து மாட்டி விடுகின்றேன்.

    போகும் போது மொத்த வலையையும் கொண்டு போய்க்கொண்டுருக்கின்றேன்.

    திண்டாடுங்கள். திகட்டாத எழுத்துக்கு சொந்தகாரரை இன்று தான் சிவாவிடம் கேட்டேன்.

    மீதி வெண்திரையில்.

    பதிலளிநீக்கு
  28. தனி மகிழ்ச்சியையும்,நிறைவையும் கொடுக்கும் பின்னூட்டத்தை என்னிடம் எதிர்பார்க்கவேண்டாம்.

    முதலில் இப்பதிவை படிக்கும் என்போன்ற புதிய்வர்களுக்கு எங்கு தொடங்குகிறது; எங்கு முடிகிறது என்று தெரிய்வைல்லை. ஏதோ இருநாவல்கள் நீங்கள் எழுதி, அவற்றை ஓம்கார் படித்து உங்களிடம் கேள்விகள் கேட்பதாக வருகிறது.

    இரண்டாவது நாவலை திரைப்படமாக கொணர்வதாக் ஒரு திட்டம் இருப்பதாகவும், அப்படி வரின் அது வணிக வெற்றி பெறுமா என்பதையும உங்கள் பாணியில் பதில் சொல்கிறீர்கள்.

    திரைப்படக்காரர்களின் வழக்கமான ‘இங்கொரு கால், அங்கொரு கால்’ எனத்தொடங்கி, இறுதியில் பணக்காலே தீர்மானிக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு (அவர்கள் வாழ்க்கைப்பிரச்னையல்லவா?); அதை வெளிப்படையாகச் சொல்ல மறைத்து, மயக்கும் கவிதை வரிகளை வைத்துப் பூசி விடுகிறார்கள்.

    பலர் தாங்கள் செய்ய்பவற்றை, பிறர் இகழாவணணம் அவர்களை pre-empt பண்ணுவதற்குச் செய்யும் உபாயம் இது. முழுக்கமுழுக்க உங்கள் பதிலகள் அந்த ஜால்ஜாப்பு வேலையத்தான் செய்கின்றன.

    சினிமா சினிமாதான். சினிமாக்காரர்கள் அவர்கள் செய்யும் அனைத்தையும் சரியெனத்தான் வாதிப்பார்கள் விவேக மாதிரி. அவர்கள் உங்களைப்போல spokesmenகளைத் தேடுகிறார்கள். நீங்கள் அவ்வேலைக்குச் சரியான ஆள் என உங்கள் ப்திவு காட்டுகிறது.

    சினிமா சினிமாதான்,அதை நேரடியாக் ஒத்துக்கொள்ள உங்களுக்கு மனதிடம் இல்லை. சராசரி சினிமாக்காரன் என்று சொல்லலாம்.

    கவிதா ரசனையில் நல்ல தேர்ச்சி உங்களுக்கு இருக்கிறது. பலர் I envy you என்று சொன்னார்கள். நானும் சொல்கிறேன். I envy you for your poetic gift.

    பதிலளிநீக்கு
  29. ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ சொன்னது//

    அய்யா,வணக்கம்.

    எனது கட்டுரையில் சினிமாவை மட்டும் நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னதால்,அத்ற்கு மட்டும் பதிலளிப்பதுதான் நான் உங்களுக்குச் செலுத்தும் மரியாதை.

    ஆனால்,உங்கள் பார்வையில் சினிமா, என்பது என்னவென்று நீங்கள் சொல்லாததால், அதனைப் புரிந்து கொள்ளாமல் உங்களுடன் பேசுவது முறையல்ல.
    மற்றும் இதனை விவாதமேடையாக்குவதற்கும் இது,இடவசதி உள்ள தளமல்ல.


    //கவிதா ரசனையில் நல்ல தேர்ச்சி உங்களுக்கு இருக்கிறது. பலர் I envy you என்று சொன்னார்கள். நானும் சொல்கிறேன். I envy you for your poetic gift.//

    இதை விட இனி யாரும் என்னைப் பெரிதாக வாழ்த்தி இருக்க முடியாது.

    மரியாதையுடன் மகிழ்ச்சியும்,நன்றியும்.

    பதிலளிநீக்கு
  30. ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…

    நான் உங்களுடன் நேரில் உரையாடுவதுதான் முறை,ஜோதிஜி.
    அந்தத் தருணத்தை ஏற்படுத்திக் கொள்கிறேன்.

    தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றியும்,மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  31. மரியாதையெல்லாம் வேண்டாம். அதை மற்றவர்களுக்கு கொடுங்கள். என் எழுத்துகளை நீங்களும் உஙகள் எழுத்துகளை நானும் படித்தால் போதும்.

    அதற்கு நன்றி.

    ஜோ.

    பதிலளிநீக்கு
  32. //சினிமா சினிமாதான். சினிமாக்காரர்கள் அவர்கள் செய்யும் அனைத்தையும் சரியெனத்தான் வாதிப்பார்கள் விவேக மாதிரி

    //

    சினிமா என்ன, எந்தத் துறையில் இருப்பவர்களுமே தாங்கள் செய்யும் அனைத்தையும் சரியெனத்தான் வாதிப்பார்கள். ஜார்ஜ்புஷ் ஈராக்கின்மேல் போர் தொடுத்தது தொடங்கி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். இதில் எங்களைப் போன்ற சினிமாக்காரர்களை மட்டும் தனிப்பட்டு நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை ஜோ அண்ணா.

    பதிலளிநீக்கு
  33. உங்களின் திரைப்பட அனுபவங்களை பதிவுகளாக்கலாமே...

    திரைத் துறையில் கால் பதிக்கத் துடிக்கும் நாளைய இயக்குநர்களுக்கும், இளம் படைப்பாளிகளுக்கும் நிச்சயம் உதவும்!!

    பதிலளிநீக்கு