சனி, மார்ச் 21, 2009

கன்னிகா(மூன்றாம் பாகம்)மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்

4.

விமான ஓடுதளம்,விமானத்தைத் தரையிலேயே வேறு ஊருக்கு ஓட்டிச் செல்லும் நெடு வழிச் சாலை அல்ல.அது,வானத்தில் பறப்பதற்கு.அது போலத்தான் காமமும்.

Sex is a run way to fly into higher dimensions,and not a high way to travel in the same direction forever.

சிறகுகளை வைத்துக் கொண்டு வானில் பறக்காமல், சேற்றிலேயே தத்திக் கொண்டிருக்கும் பறவைகளைப் போல இன்பங்களில் இருந்து மேல் எழும்பாமல் அதிலேயே உழன்று கொண்டிருக்கிறாய்.

மேலே மேலே பறக்க,உனக்குக் கற்றுக் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன். .

Each occasion is for a take off.

-கன்னிகா.
கன்னிகா மலையாள முறைப்படி வெள்ளை நிறத்தில் புடவையும், மேலே சோளியும்,மேல் துண்டும் அணிந்திருந்தாள்.கேசவன் 'ஞான் காலையிலே வரட்டே' என்று என்னிடம் விடை பெற்றுச் சென்று விட்டான்.நான் கன்னிகாவைப் பார்த்தேன்.அறையின் ஒரு மூலையைப் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தாள் அவள்.


குளித்து முடித்த ஈரக் கூந்தலுடன் அவள் அறை வாசலில் நின்றிருந்த பிரசன்னம் ஒரு நல்ல பாட்டின் முன்னால் வரும் தம்பூர் நாதத்தைப் போல அறை எங்கும் பரவி இருந்தது.எல்லாவற்றையும் விட அவளிடம் இருந்து வந்த மெல்லிய சந்தன வாசனை சுகமோ சுகமாகக் குளிர்ந்தது..இதற்கும் நெற்றியில் கேரளப் பெண்கள் வைப்பதைப் போல ஒரே ஒரு சந்தனக் கீற்றுத்தான் இட்டிருந்தாள்.வாத்சாயனர் சொல்வதைப் போல உயர் ஜாதிப் பெண்களின் உடம்புக்கே ஒரு வாசம் உண்டு என்பது உண்மையா?மெல்ல அவள் கையைப் பற்றினேன்.விலை உயர்ந்த ஷேம்பேன் நுரையைப் போல மூச்சுக் காற்றுப் பட்டாலே கரைந்து விடுவாளோ என்பதைப் போல மெல்லிய சதை அவளுக்கு.


நான் தொட்டதும்தான் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.அருகருகே இரண்டு ராமேஸ்வரம் கடல்களைக் கண்டாற் போல் இருந்தது அவளது கண்கள்.உணர்வுகளின் சலசலப்புக் கொஞ்சம் கூட இல்லாத விழிகள்.'கண்கள் ஆத்மாவின் ஜன்னல்கள்' என்று எங்கோ படித்தது உண்மையானால் இவ்வளவு பரிசுத்தமான ஆத்மாவை நான் இது வரை எங்குமே பார்த்ததில்லை.அந்தத் தூய ஆத்மா என்னிடம் விலைக்கு வந்திருக்கிறது என்பதை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை.



சந்தனமும் மஞ்சளும் கலந்த நிறத்தில், நிறுத்தி வைக்கப் பட்ட வீணையைப் போல நின்றிருந்த அவளை நான் மெல்ல அறையில் இருந்த தேக்குக் கட்டிலுக்கு அழைத்துச் சென்றேன்.என்னருகில் அமர்த்திக் கொண்டு இன்னும் நெருக்கத்தில் அவளைப் பார்த்தேன்.
உலகத்தில் இருக்கும் ஒப்புயர்வற்ற அத்தனை ஒப்பனைக்காரர்களும் அவளது எந்த மேக்கப்பும் இல்லாத கன்னங்களின் பளபளப்பைப் பார்த்து மாய்ந்து போவார்கள்.பிறந்த குழந்தையின் உள்ளங்கையைப் போல அவ்வளவு மென்மையான கன்னங்கள்.



இன்னும் பிறக்காத ஆண்கள் கூட அவளது உதட்டுச் சிவப்பின் முத்தத்துக்கு ஆசைப் படுவார்கள்.அவளுடைய வெண்கழுத்தில் தொங்கிய ஒரே ஒரு கறுப்பு மணிமாலை,பார்வையைக் கீழே இழுக்க,மார்புகள்.




போதை மருந்துத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட வேண்டிய அவளது மார்புகள்.எந்த சன்யாசியையும் தள்ளாடச் செய்து விடும். மீண்டும் ஒரு வாய் பீர் குடித்தவுடன்தான் நான் இந்த உலகத்து போதைக்கு வந்து நார்மலானேன்.


'உன்னோட பேரு?'என்றேன்.

அவள் என்னை நிமிர்ந்து பார்த்து 'இது ரொம்ப முக்கியமா?'என்பதைப்போல வெறுமனே முறுவலித்தாள்.

அவளது புன்னகை எதனினும் மேலாய் என்னைக் கிளர்ச்சி அடையச் செய்ய,அவளை மோக வெறியுடன் அணைத்துக் கொண்டேன்.அப்போதுதான் அந்த விசித்திரமான உணர்வை நான் முதன் முதலாக அனுபவித்தேன்.


ஒரு கணம் ஆண்மையின் உச்சக் கட்டக் கொந்தளிப்பும்,மறுகணம் உடலுறவின் நிறைவில் வரும் திருப்தியும் என்னை மாறி மாறி ஆட்கொண்டன.அவளை அணைத்தவுடனேயே எனது அடங்காத காமம் தணிந்து,தாயின் மடியில் ஆதரவு தேடித் தலைசாய்க்கும் குழந்தை போல ஆனேன்.மதர்த்த பெண்ணிடம் வரும் தீராத ஆசையும்,பெற்ற தாயிடம் வரும் கனிந்த பாசமும் என்னுள் ஒன்று மாற்றி ஒன்றாய்ப் பிரவிகித்தன.

நானே நெருப்பும் நானே பனியுமாய் உணர்ந்த விந்தை என்னுள் நிகழ்ந்தது.
பல முயற்சிகளுக்குப் பின், அவளைத் தொடத்தான் முடியுமே தவிர துய்க்க முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட நான் அவளது முகத்தை நிமிர்ந்து பார்த்தேன்.கன்னிகா வெறுமனே புன்னகை செய்தாள்.



இந்த விந்தையான உணர்வைப் பற்றி பின்வந்த நாட்களில் அவள் ஒருநாள் சொன்னதே இது:


'விமான ஓடுதளம்,விமானத்தைத் தரையிலேயே வேறு ஊருக்கு ஓட்டிச் செல்லும் நெடு வழிச் சாலை அல்ல.அது வானத்தில் பறப்பதற்கு.அது போலத்தான் காமமும்.

Sex is a run way to fly into higher dimensions,and not a high way to travel in the same direction forever.

சிறகுகளை வைத்துக் கொண்டு வானில் பறக்காமல், சேற்றிலேயே தத்திக் கொண்டிருக்கும் பறவைகளைப் போல இன்பங்களில் இருந்து மேல் எழும்பாமல் அதிலேயே உழன்று கொண்டிருக்கிறாய்.மேலே மேலே பறக்க,உனக்குக் கற்றுக் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன். Each occasion is for a take off.


எப்போது உறங்கினேன் என்றே எனக்குத் தெரியாது.நான் விழித்த போது விடிந்து கொண்டிருந்தது. வானம் முழுதும் பிங்க் சூரியனின் குதூகலம்.கன்னிகா ஜன்னலோரமாய் நின்று கீழே பாள்ளத்தாக்கில் தெரிந்த கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.பறவைகள் ஆலய உச்சியைச் சுற்றி அவற்றின் மொழியில் அம்மனிடம் ஏதேதோ முறையிட்டுக் கொண்டிருந்தன.


நான் எழுந்து அவள் அருகில் சென்று கன்னிகாவைப் பார்த்த போது அவள் இரவு இருந்த அதே புத்துணர்ச்சியுடனேயே இருந்தாள்.அவள்முகத்தில் இரவின் களைப்பு சிறிதும் தெரியவில்லை.எந்த நேரமும் மலர்ந்து கொண்டே இருக்கும் மலரைப் போல இருந்தது அவளது முகம்.அவளது கரத்தை நான் தொட்டபோது எந்தச் சலனமுமின்றி என்னைப் பார்த்தாள் கன்னிகா.


அதற்குள் கேசவன் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தான்.


'கன்னிகா,வரூ' என்று அவன் கூப்பிட்ட போதுதான் அவளுடைய பெயரே எனக்குத் தெரிந்தது.மவுனமாக அவனைப் பின் தொடர்ந்தாள் கன்னிகா.
கேசவனிடம் பணம் என்று ஜாடையில் நான் கேட்டேன்.வெறுமனே சிரித்து விட்டு அப்புறம் என்று அவனும் ஜாடையிலேயே சொல்லி விட்டுப் போனான்.


ஆலயத்துக்கு அருகிலேயே ஒரு ஓடை ஓடியது.பொன்மீன் தீர்த்தம் என்று அதைச் சொன்னார்கள். படிக்கட்டில் நின்று பாதங்களைத் தண்ணீரில் வைத்தால் போதும்,சில்லென்ற காலில் பட்ட மலைத் தண்ணீர் உச்சந்தலை வரை குளிரும்.அது மட்டுமல்ல,எங்கிருந்தோ வரும் சிறுசிறு பொன்வண்ண மீன்கள் குறுகுறுவென்று உங்கள் கால்களை மேய்ந்து அழுக்குகள் அனைத்தையும் தின்று விடும்.பாதங்களைநீங்கள் வெளியே எடுத்துப் பார்த்தால் பளிங்கு போல் ஆகிவிடும்.அதற்குப் பிறகுதான் நீங்கள் ஆலயத்துக்குள் செல்ல வேண்டும்.ஆலயத்தின் தூய்மையை இதற்கு மேல் பராமரிக்க முடியாது என்று நான் நினைத்துக் கொண்டேன்.


கோவில் நம்பூதிரி என்னிடம் இரவு நிகழ்ச்சியைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.நானும் சொல்லவில்லை.முன்மாலைப் பொழுது வரையில் எனக்குக் கோவில் வேலைகளே சரியாக இருந்ததால் கன்னிகாவின் நினைவே வரவில்லை.வேலைகளை முடித்துக் கொண்டு அந்திக் கால பூஜையைப் பார்த்த போதுதான் கன்னிகாவின் ஞாபகம் விண்ணென்று தெறித்தது.அதுவும் அம்மன் முகத்தைப் பார்த்தபோதுதான்.


கன்னிகாவின் முகச் சாயலில்தான் அம்மனுடைய முகமே இருப்பதாக எனக்குத் தோன்றியது.நம்பூதிரி ஆரத்தி காட்டிய மஞ்சள் விளக்கொளியில் தெரிந்த அம்மனது முகம்,அதிகாலைச் சூரியனின் மெத்தென்ற வெளிச்சத்தில் ஜன்னலருகே நின்ற கன்னிகாவின் முகத்தை ஃபோட்டோகிராஃபிக் நினைவாக ஞாபகப் படுத்திய பிறகு பாம்பு விஷத்தைப் போல ஒரு மோஹம் தலைக்கேறிச் சுட்டது.
கன்னிகா,கன்னிகா என்று உறும ஆரம்பித்து விட்டன உடலின் அத்தனை ஹார்மோன்களும்.


கோவிலில் பாரதி பாடிய கேரள நன்னாட்டிளம் பெண்கள் நிறையப் பேர் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.ஆனால் ஒரு ஆச்சர்யம்,இந்த மாதிரி காமத் தீ பற்றி எரியும் போது,பார்க்கும் எல்லாப் பெணகள் மீதும் ஒரு ஈர்ப்பு வருமே அது சுத்தமாக அந்த அழகிய இளம் பெண்களைப் பார்க்கும் போது எனக்கு வரவில்லை அவர்கள் எல்லோருமே ஏதோ மனித இனமே இல்லை என்பதைப் போல் ஓர் அந்நியம் உள்ளமெங்கும் உருவாகி இருந்தது.



கன்னிகாவைத் தவிர என்னுடைய தாபத்தைத் தீர்க்கும் பெண் இந்தப் பூமிக் கிரஹத்திலேயே இல்லை என்ற இனம் புரியாத உணர்வு எனக்குள் வேரூன்றி இருந்தது.வெளியே அந்தி மலர்களின் வாசனை என்னை அந்த மலை முகட்டு வீட்டுக்குப் போ போ என்று துரத்தியது.



கேசவன் கடைசியில் வந்தே வந்து விட்டான்.அவனைப் பார்க்க எனக்கு வானுலகில் இருந்து வந்திறங்கிய கந்தர்வன் போலத் தோன்றினான்.'சாரே' என்று சிரித்தவனைக் காருக்கு இழுத்துக் கொண்டு ஓடினேன். அன்று மாலை நம்பூதிரியிடம் கூட நான் விடை பெறவில்லை.


கார் மலைப் பாதையில் திரும்பியதும்,'கேசவா' என்றேன்.அவன் மட்டும் ஏதாவது காரணம் சொல்லி கன்னிகா இன்று கிடைக்க மாட்டாள் என்று சொல்லி விட்டால்?



மனம் பரபரத்தது.'இன்னிக்கு எப்படியாவது நான் கன்னிகாவைப் பார்க்கனும் கேசவன்.அர்ரேஞ்ச் பண்ண முடியுமா?' என்று அவனிடம் கெஞ்சாத குறையாகக் கேட்டேன்.எனது தவிப்பை அவன் உணராமல் பாதையைப் பார்த்தே பதில் சொன்னான்.


'பார்க்கலாம் சாரே'


'கேசவா! ப்ளீஸ்..இன்னிக்கு ஒரே நாள்..'என்ற நான் அவனது கையைப் பற்றிக் கொண்டேன்.



அவன் பேசாமல் மலைப் பாதையையே பார்த்தபடி வந்தான்.வீடு வந்ததும் கன்னிகாவின் நினைவு இன்னும் தீவிரமாகிக் காய்ச்சல் வந்தது போல் ஆனது எனக்கு.

அவனை அங்கிருந்தே கன்னிகாவைக் கூட்டி வரும்படி அனுப்பி விட்டு நான் மட்டும் வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன்.


உள்ளே கதவைத் திறந்ததும் நேற்று இரவு அவளிடம் இருந்து வீசிய அதே சந்தன மணம்! குப்பென்று வேர்த்தது எனக்கு.நாள் முழுக்க அறைக் கதவுகளைத் திறக்காததால் அவள் வாசனை அப்படியே தேங்கிப் போனதா, இல்லை என் நெஞ்சிலேயே கனன்று கொண்டிருக்கும் அவளது நினைவுகளே சந்தன வாசனையாக வெளியே வருகிறதா என்று எனக்குப் புரியவில்லை.




படுக்கையில் அவள் அமர்ந்திருந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தபோது எனக்குள் நான் தேம்பும் சப்தம் எனக்கு மட்டும் கேட்டது.என்ன இது?ஒரே இரவு பார்த்த பெண்.அதுவும் நான் தொடக் கூட இல்லாத பெண்.இப்போது என் உயிரின் மையத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறாளே?



என் செல்ஃபோன் ரிங்டோன் மெத்தென்ற வயலின்களாய் என்னைத் தழுவ,நான் ஃபோனை எடுத்தேன்.


திவ்யா.


அவள் பெயரை ஃபோனில் பார்த்ததுமே எனக்கு உற்சாகமாக இருந்தது.

'திவ்யா ! '



நானும்,திவ்யாவும் இரண்டு வருடங்களாகப் பழகுகிறோம். அவள் பார்ப்பதற்கு கஜினி அசின் போல இருப்பாள்.மும்பைப் பெண்.ஆர்கிடெக்ட்.மும்பையிலும்,டில்லியிலும் அவள் டிசைன் செய்த கட்டிடங்கள் கட்டிடக்கலை வல்லுநர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றவை.நானே அவளது கட்டிடங்களின் விசிறி.மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் இன்றைய தலைமுறை இளஞி.


முதன் முதலில் அசினை,மன்னிக்கவும் திவ்யாவை நான் சந்தித்ததே பெங்களூரில் ஒரு புத்தக சாலையில். இருவரும் ஐயன் ரேன்ட் எழுதிய 'ஊற்றுக்கண்' (ஃபௌன்டன்ஹெட்,மொழிபெயர்ப்பு சரியா என்று பார்த்துக் கொள்ளுங்கள்)புத்தகத்தை வாங்குவதற்காக அங்கே சென்றிருந்தோம். அந்தப் புத்தகத்தைத் தேடும் போதுதான் அது ஒரே பிரதி மட்டும் இருக்கிறது எனத் தெரிந்தது.
சமயங்களில் வாழ்க்கையை விடப் பெரிய திரைக்கதை ஆசிரியர் யாருமே இருக்க முடியாது என்பதற்கு இந்த மாதிரி இனிமையான சம்பவங்களே உதாரணம்.அதுவும் காதல்களை உருவாக்குவதில் அதனுடைய கற்பனை வளத்துக்கு எல்லையே இல்லை.

ஊற்றுக்கண் புத்தகப் பிரதி முதலில் என் கையில்தான் கிடைத்தது.அப்போதுதான் திவ்யா என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.


'ஹலோ' என்றாள் என்னைப் பார்த்து.



நான் திரும்பி அவளைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் முதலில் தோன்றிய இமேஜ் எனது பூஜாடியில் நான் வைத்திருக்கும் ஒரு ஒற்றை ரோஜா மொட்டுத்தான்.இதழ் பிரிந்தும் பிரியாமலும் இருக்கும் பனித் துளிகளுடன் கூடிய ரோஜா மொட்டு.முழுதாக மலர்த்தி உலகத்துக்கு இதைப் பரிசளிக்கலாமா,வேண்டாமா என்று வைகறை இயற்கை இன்னும் தயக்கத்துடனேயே யோசித்துக் கொண்டிருக்கும் அழகிய ரோஜா மொட்டு.திவ்யாவும் அதே போல் இருந்தாள்.


'ஹலோ' என்றேன் நானும், அழகிய பெண்களைக் கண்டால் மனது ஜீரணம் பண்ணி முடிக்கும் யுகங்களின் இடைவெளிக்குப் பிறகு.


'நானும் இதே புத்தகத்தைதான் வாங்க வந்தேன்'என்றாள் திவ்யா.அவளது குரலுக்கு அமிர்தவர்ஷினி என்ற ராகத்தின் பெயரையே வைக்கலாம் என்று தோன்றியது எனக்கு.


'வாங்குங்களேன்' என்றேன் புரியாமல்.


'அன்ஃபார்ச்சுனேட்லி, ஒரே காபிதான் இருக்குன்னு சொல்றாங்க கடையிலே'


'ஓ' என்றேன் விஷயம் புரிந்து.


'சரி.நீங்களே இதை வாங்கிக் கொள்ளுங்கள்' என்று புத்தகத்தை அவளிடம் நீட்டினேன். புத்தகத்தை வாங்கும் முன் என்னை ஒரு குட்டிப் பாராட்டுடன் பார்த்தாள் திவ்யா.


'அப்போ உங்களுக்கு?'


'நான் வேறெங்காவது கிடைச்சா வாங்கிக்கிறேன்.பரவாயில்லே.வெச்சுக்குங்க 'என்றதும் புத்தகத்தை வாங்கிக் கொண்டு 'தேங்க்ஸ்' என்றாள் திவ்யா.



தொடங்குவதற்குப் பெரிய இமாலய தியாகங்களை எல்லாம் கேட்காத ஒரே உணர்வு காதல்தான்.மூச்சுக் காற்றுப் பட்டாலே பற்றிக் கொள்ளும் அந்த சிகப்பு ஃபாஸ்பரஸ் எங்களுக்குள்ளும் பற்றிக் கொண்டது எங்களுக்கே பின்னாளில்தான் தெரிந்தது.



பில் கௌண்டர் வரை பேசிக் கொண்டே போனதில் இருவரது பெயர், தொழில்களை எல்லாம் பரிமாறிக் கொண்டோம்.திவ்யாவைப் போலவே, ஊற்றுக்கண் நாவலில் வரும் கதாநாயகனும் ஒரு ஆர்க்கிடெக்ட். கட்டிடக் கலை வல்லுனர்களுக்கு அந்த நாவல் ஒரு பைபிளைப் போல.அதனால்தான் திவ்யா அந்த நாவலை அவ்வளவு ஆர்வமாகத் தேடி வந்ததாகக் கூறினாள்.


'ஆல் த பெஸ்ட்' என்று கூறி விடை பெற்றோம்.


அன்று முன்னிரவில் நான் தங்கி இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பார் கம் ரெஸ்டாரெண்டில் நான் பீர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அங்கே திவ்யாவைப் பார்த்தவுடன் எனக்குப் புரை ஏறியது.அவளும் என்னை அங்கே எதிர்பார்க்கவில்லை.
'ஹாய்' என்று உண்மையிலேயே மகிழ்ச்சியுடன் என்னை நோக்கி வந்தாள்.


'வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்!'


'யெஸ்.சம் டைம்ஸ்,கனவுகள் பலிக்கின்றன !' என்றேன் பீர் தந்த கவிதையில்.



சிரித்தபடி திவ்யா என் எதிரிலேயே அமர்ந்தாள்
.பிறகுதான் வாழ்க்கை என்ற அந்தப் பொல்லாத திரைக்கதை ஆசிரியன் எழுதிய அடுத்த திருப்பம் எங்களுக்குத் தெரிந்தது.அவளும் அதே ஹோட்டலில்தான் தங்கி இருந்தாள்.எனது அறை கீழ்த் தளம் என்றால் அவள் அதற்கு நேரே மேல் தளத்தில் இருந்தாள்.இன்னும் அவளது கையில் ஊற்றுக்கண் புத்தகம் இருந்தது.


'இதை விடவே மாட்டீர்கள் போலிருக்கிறது' என்றேன் நான்.


'என்ன அருமையான புத்தகம்.உங்களுக்குத்தான் நன்றி'என்றவள் புத்தகத்தை ஆசையாக அணைத்துக் கொண்டாள்.அது என்னையே அணைத்துக் கொண்டாபோல் இருந்தது.புத்தகத்தை நானும் வாங்கிப் புரட்டினேன்.


'ஃபேஸினேஷன்?' என்று நான் கேட்டதற்கு.


'யெஸ்,யெஸ் ரியல்லி ஐ யாம் ஃபேஸினேட்டெட் வித் திஸ் புக்'என்றாள்.


'நான் கேட்டது,நீங்க யுஸ் பண்ற பெர்ஃப்யூமை!' என்றதும் வாய் விட்டுச் சிரித்தாள் திவ்யா.அவளது பல்வரிசையைப் பார்த்ததும் பாரதி சொன்னதுதான் ஞாபகத்திற்கு வந்தது..

'தின்பதற்கு மட்டுமல்லாமல்,தின்னப் படுவதற்குமான பற்கள்'


இருவரும் உணவு ஆர்டர் செய்தோம்.அவள் சுத்தமான சைவம்.பிறகு அந்த நாவலின் கதையைச் சொன்னாள். மிக மிக உணர்வு மயமாக அவள் அந்தக் கதையைச் சொன்ன நேர்த்தியில் அவளது அழகையும் மீறி அவளது அறிவிலும் மயங்கிப் போனேன்.பதினைந்து நாட்கள் நாங்கள் இருவருமே அவரவர் ப்ராஜெக்ட் விஷயமாக பெங்களூரில் இருந்தோம்.
எங்கள் காதலின் ஊற்றுக்கண் முற்றிலுமாய்த் திறந்து கொண்ட அந்தப் பதினைந்து நாட்கள்தான் எவ்வளவு இனிமையான காலம்.


கோர்ட்டில் மதிய இடைவேளை வர, நீதிமன்றப் பணியாளர் முத்துசாமி அரவிந்தனின் வாக்குமூலத்தைப் படிப்பதை நிறுத்தினார்.இடைவேளைக்குப் பிறகு அடுத்த வாய்தாவை அறிவிப்பதாகக் கூறி நீதிபதி வகுளாபரணன் எழுந்தார்.

சாப்பிட்டு முடித்து ஓய்வில் இருந்த வகுளாபரணனைக் காண நீதிமன்றப் பணியாளர்களும், பார்வையாளர்களும் என ஒரு கூட்டமே அனுமதி வாங்கிக் கொண்டு வந்த போது அவருக்கு ஏன் என்று புரியவில்லை.

அவர்கள் அரவிந்தனின் வாய்தாவைத் தள்ளிப் போடாமல் சீக்கிரமே வைக்கும்படி விண்ணப்பித்த போது அவர் சிரித்தார்.


'கதை அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கா?' என்று அவர் கேட்டார்.

'இல்லே சார். அந்தக் கன்னிகாவை அடுத்த தடவையாவது நேர்லே பார்க்கனும் சார்!' என்றார்கள் ஒரு சேர.

(கன்னிகா வருவாளா ?)

39 கருத்துகள்:

  1. அழகான வர்ணனைகள்.

    சுவாரசியம் கூடி கொண்டே செல்கிறது.

    இப்ப திவ்யா வேற வந்துட்டாங்க இன்னும் சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  2. //'யெஸ்.சம் டைம்ஸ்,கனவுகள் பலிக்கின்றன !' என்றேன் பீர் தந்த கவிதையில். //

    சுஜாதா நினைவிற்கு வந்தார்! :)

    பதிலளிநீக்கு
  3. //'இல்லே சார். அந்தக் கன்னிகாவை அடுத்த தடவையாவது நேர்லே பார்க்கனும் சார்!' என்றார்கள் ஒரு சேர.
    //

    நாங்களும் தான் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  4. சார் கலக்கலாக போகிறது..

    வரி வரியாக ரசிக்க வைத்து விட்டது மூன்றாம் பாகம். எழுத்து பிராவகமா இருக்கிறது.

    சூப்பர்.

    நாங்களும் கன்னிகாவிற்காக காத்திருக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  5. வினோத் கௌதம்,நல்லதந்தி,வலசு-வேலணை,மங்களூர் சிவா,வண்ணத்துப் பூச்சியார் அனைவருக்கும் நன்றி.நன்றி.நன்றி.
    ஒரு உண்மை தெரியுமா நண்பர்களே,இந்தக் கதையை நான் மட்டும் எழுதவில்லை.உங்கள் ரசனையும் சேர்ந்துதான் எழுதுகிறது.YOU ARE MY CO-WRITERS.THANK YOU, FRIENDS.

    பதிலளிநீக்கு
  6. //குளித்து முடித்த ஈரக் கூந்தலுடன் அவள் அறை வாசலில் நின்றிருந்த பிரசன்னம் ஒரு நல்ல பாட்டின் முன்னால் வரும் தம்பூர் நாதத்தைப் போல அறை எங்கும் பரவி இருந்தது.//

    //விலை உயர்ந்த ஷேம்பேன் நுரையைப் போல மூச்சுக் காற்றுப் பட்டாலே கரைந்து விடுவாளோ என்பதைப் போல மெல்லிய சதை அவளுக்கு.//

    //அருகருகே இரண்டு ராமேஸ்வரம் கடல்களைக் கண்டாற் போல் இருந்தது அவளது கண்கள்.//

    //சந்தனமும் மஞ்சளும் கலந்த நிறத்தில், நிறுத்தி வைக்கப் பட்ட வீணையைப் போல நின்றிருந்த அவளை..//

    //பிறந்த குழந்தையின் உள்ளங்கையைப் போல அவ்வளவு மென்மையான கன்னங்கள்.//

    //போதை மருந்துத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட வேண்டிய அவளது மார்புகள்.எந்த சன்யாசியையும் தள்ளாடச் செய்து விடும்.//

    //சிறகுகளை வைத்துக் கொண்டு வானில் பறக்காமல், சேற்றிலேயே தத்திக் கொண்டிருக்கும் பறவைகளைப் போல இன்பங்களில் இருந்து மேல் எழும்பாமல் அதிலேயே உழன்று கொண்டிருக்கிறாய்.மேலே மேலே பறக்க,உனக்குக் கற்றுக் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன்.//

    //அதிகாலைச் சூரியனின் மெத்தென்ற வெளிச்சத்தில் ஜன்னலருகே நின்ற கன்னிகாவின் முகத்தை ஃபோட்டோகிராஃபிக் நினைவாக ஞாபகப் படுத்திய பிறகு பாம்பு விஷத்தைப் போல ஒரு மோஹம் தலைக்கேறிச் சுட்டது.//

    என்ன ஒரு வர்ணனை..! இயக்குநர் ஸார் கொல்றீங்க போங்க..!

    முழுசையும் இப்பவே படிச்சாகணும்போல இருக்கு..!

    சீக்கிரம்.. சீக்கிரமாக அடுத்ததை எழுதுங்க ஸார்..!

    சூப்பர்ப்.. சூப்பர்..

    பதிலளிநீக்கு
  7. //உண்மைத் தமிழன்(15270788164745573644
    சூப்பர்ப்.. சூப்பர்..//

    உங்களை மாதிரி 'யூத்'துகளைக் கவர் பண்ணியே தீர்ரதுங்கற முடிவோடதான் எழுதறேன் சரவணன்.உங்கள் பாராட்டு இதம்.

    பதிலளிநீக்கு
  8. சாரே...
    இப்போதான் உங்க படிதுறைக்கு வருகிறேன்,..
    எப்படி சார் இப்படியெல்லாம் ???
    என்ன வர்ணனை...என்ன தேர்ந்தெடுத்த ரசனை...!!!
    கலக்கல்..
    திரைக்கதை மாதிரியே கொண்டு போறீங்க...

    பதிலளிநீக்கு
  9. // ஈர வெங்காயம் கூறியது...
    சாரே...
    இப்போதான் உங்க படிதுறைக்கு வருகிறேன்,..
    எப்படி சார் இப்படியெல்லாம் ???
    என்ன வர்ணனை...என்ன தேர்ந்தெடுத்த ரசனை...!!!
    கலக்கல்..
    திரைக்கதை மாதிரியே கொண்டு போறீங்க...//

    நன்றி சார்.உங்கள் முதல் வரவு நல்வரவாகுக.

    பதிலளிநீக்கு
  10. சார் கதை நல்லாயிருக்கு ....நல்லா வேகமாப் போவுது

    பதிலளிநீக்கு
  11. உங்கள் வலைப்பதிவுக்கு இன்று தான் வந்தேன். வந்த வேகத்தில் கன்னிகா மூன்று பாகமும் முடித்துவிட்டேன். எழுத்தின் வீச்சு வேறெங்கும் செல்ல விடவில்லை. மற்ற பதிவுகளும் படிக்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. //தேவ் | Dev சொன்னது…
    சார் கதை நல்லாயிருக்கு ....நல்லா வேகமாப் போவுது//
    உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும், நன்றி தேவ்.

    பதிலளிநீக்கு
  13. //ராஜா கூறியது...
    உங்கள் வலைப்பதிவுக்கு இன்று தான் வந்தேன். வந்த வேகத்தில் கன்னிகா மூன்று பாகமும் முடித்துவிட்டேன். எழுத்தின் வீச்சு வேறெங்கும் செல்ல விடவில்லை. மற்ற பதிவுகளும் படிக்கப் போகிறேன்.//

    நன்றி,நன்றி ராஜா.மீண்டும் சந்திப்போம்.வருக.

    பதிலளிநீக்கு
  14. Funtastic story, finished all the three part and waiting for the balance....had just been to Kutralam, Banatheertham, and few other temples in Kerala, I just re live those moments when you describle them in the story...

    Sundar
    Dubai

    பதிலளிநீக்கு
  15. இதுவரை நான் பல ப்ளாக்குகளை வாசித்து இருக்கிறேன்.
    ஆனால் யாருக்கும் பின்னுட்டம் இட்டதில்லை. யாருக்கும் வாகளித்ததில்லை.
    அது எதற்காக என்றும் தெரியாது. உங்களுடைய பதிவை படித்த பின்தான் புரிந்தது.
    இன்று புதிய கணக்கு தமிழிஷில் தொடங்கி விட்டேன்.
    இனி முடிந்த்த அளவு பிடித்த படைப்புகள் அனைத்திற்கும் வாக்களிப்பேன்.
    உங்களுடைய அறிவுறைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. //Sundar சொன்னது…
    Funtastic story, finished all the three part and waiting for the balance....had just been to Kutralam, Banatheertham, and few other temples in Kerala, I just re live those moments when you describle them in the story...

    Sundar
    Dubai//

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சுந்தர்.நானும் நீங்கள் சொன்ன இடங்களுக்கு பட ஷூட்டிங்களுக்காக சென்றிருக்கிறேன்.ஆனால் இந்தக் கதையில் வரும் ஊரும்,கோவிலும் நிஜம் சார்ந்த கற்பனை.உங்கள் வார்த்தைகள் எழுதுவதற்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. முதல் முறையாக நான் பதிவதால் தவறுதலாக வேறு ஒரு பதிப்பில் பதிவு செய்ததையே இதிலும் பதிந்து விட்டேன்
    தவறுக்கு மன்னிக்கவும்.
    உங்களுக்காக நான் டைப் செய்ததே வேறு, இப்போது மறுபடியும் டைப் செய்திருக்கிறேன்.
    சமீப காலத்தில் நான் புத்தகங்களில் படித்ததில் இருந்த கதைகளை விட எனக்கு மிகவும் பிடித்தது இந்த தொடர்தான். இரண்டாம் பாகத்திலேயே பின்னூட்டம் இட வேண்டும் என நினைத்தேன். இன்றுதான் எப்படி பின்னூட்டம் இடுவது என தெரிந்தது.
    மிகச் சிறப்பாக இருக்கிறது. மொத்த கதையையும் இப்போதே படிக்க வேண்டும் போல இருக்கிறது.
    தாமதம் இல்லாமல் தொடர்ந்து பதிக்கவும்.

    பதிலளிநீக்கு
  18. // ramesh கூறியது... இன்று புதிய கணக்கு தமிழிஷில் தொடங்கி விட்டேன்.
    இனி முடிந்த்த அளவு பிடித்த படைப்புகள் அனைத்திற்கும் வாக்களிப்பேன்.
    உங்களுடைய அறிவுறைக்கு நன்றி.//

    நன்றி ரமேஷ்.ஆனால் நான் என்ன அறிவுரை சொன்னேன் என்று தெரியவில்லையே ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  19. //ramesh சொன்னது…
    முதல் முறையாக நான் பதிவதால் தவறுதலாக வேறு ஒரு பதிப்பில் பதிவு செய்ததையே இதிலும் பதிந்து விட்டேன்
    தவறுக்கு மன்னிக்கவும்.//
    //சமீப காலத்தில் நான் புத்தகங்களில் படித்ததில் இருந்த கதைகளை விட எனக்கு மிகவும் பிடித்தது இந்த தொடர்தான். இரண்டாம் பாகத்திலேயே பின்னூட்டம் இட வேண்டும் என நினைத்தேன். இன்றுதான் எப்படி பின்னூட்டம் இடுவது என தெரிந்தது.
    மிகச் சிறப்பாக இருக்கிறது. மொத்த கதையையும் இப்போதே படிக்க வேண்டும் போல இருக்கிறது.
    தாமதம் இல்லாமல் தொடர்ந்து பதிக்கவும்.//

    குழப்பம் தெளிந்தது ரமேஷ்.உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயல்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்

    ரொம்ப நன்றாக எழுதி இருக்கிறீர்கள், நான் சென்ற வாரம் தான் குற்றாலம் , பான தீர்த்தம், சிவ சைலம் கோவில் மற்றும் கேரளாவில் குருவாயூர் பூரண த்தரை ஈசா கோவில், சோட்டாநிக்ரை பகவதி போன்ற ஸ்தலம்களுக்கு போய் வந்தோம் ... திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மிக நன்றாக இருக்கிறது ...கூடவே திருச்சந்தூர்உம் பார்த்தோம் , நீங்கள் பெரிய கதை எழுதினாலும் அதை படிக்கும் பொழுது ஒரே மூச்சில் படிக்க வைக்க்றீர்கள்... though I have already registered my comments in enlgish, this is my கன்னி முயற்சி in தமிழ் ..long ago when I was a fan of Sujatha , Chantilyan, and was not introduced to english much except some Arthur Hailey ...then I happened to read
    Ayan rand, it left such an impact ( fountain head, atlas shrugged ) both of them so powerful...I stopped reading any fictions after that ....rencetly enjoyed Dan Brown's novels , however due to placement of the stars or aging, or whatever you call it,moved away from Ayn Rand kind of thoughts now I like good music ( carnatic in particular ) , visiting places, ( kovilgal etc)... வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கலாம் ...அதுவரை குறைந்த பட்சம் நீங்கள் எழுதியதை படிக்கலாம்

    Sundar
    Dubai

    பதிலளிநீக்கு
  21. //sundar கூறியது...
    வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கலாம் ...அதுவரை குறைந்த பட்சம் நீங்கள் எழுதியதை படிக்கலாம்//

    நிச்சயமாக சுந்தர் சார்.நீங்கள் சென்னை வரும்போது உறுதியாகச் சந்திப்போம்.உங்கள் பாராட்டுரை எனக்கு உண்மையில் உற்சாகமாக் இருக்கிறது.நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  22. மீண்டும் அட்ரிலினை எகிற வைக்கும் நடை.. என்ன சொல்ல்ல்ல்ல்ல்லி பாராட்டுறது தான். ஆடுத்த பதிவுக்காக காத்திருக்கும்..
    கேபி்ள் சஙக்ர்.

    பதிலளிநீக்கு
  23. //Cable Sankar கூறியது...
    மீண்டும் அட்ரிலினை எகிற வைக்கும் நடை.. என்ன சொல்ல்ல்ல்ல்ல்லி பாராட்டுறது தான். ஆடுத்த பதிவுக்காக காத்திருக்கும்..
    கேபி்ள் சஙக்ர்.//
    'அட்ரிலினை எகிற வைக்கும் 'இந்த ஷங்கர் ஸ்டைல் பாராட்டு சுகம்.

    பதிலளிநீக்கு
  24. //தமிழன்-கறுப்பி... சொன்னது…
    படித்துக்கொண்டிருக்கிறேன்...//

    நன்றி சார்.படித்துவிட்டுக் கருத்துக்களைப் பரிமாறினால் பயனடைவேன்.

    பதிலளிநீக்கு
  25. (கன்னிகா வருவாளா ?)

    வரனும்

    இப்போ நான் போயிட்டு யாராவது அழகி தென்படுகிறார்களான்ன்னு பாத்திட்டு வரேன்

    பதிலளிநீக்கு
  26. //குடுகுடுப்பை சொன்னது…
    (கன்னிகா வருவாளா ?)

    வரனும்

    இப்போ நான் போயிட்டு யாராவது அழகி தென்படுகிறார்களான்ன்னு பாத்திட்டு வரேன்//
    ஒழுங்காக நல்ல குடும்பஸ்தராக மீன் பிடித்துக் கொண்டிருப்பவரைப் பெண் பிடிக்கச் செல்பவராக மாற்றும் பாவத்துக்கு என்னை ஆளாக்கி விடாதீர்கள் குடுகுடுப்பை சார்.அழகிகளைப் பதிவுகளிலேயே பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  27. அழகிகளைப் பதிவுகளிலேயே பாருங்கள்.
    //
    அந்த துணிச்சல் கூட அடியேனுக்கு கிடையாது சார்.

    பதிலளிநீக்கு
  28. அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  29. இவ்வளவு தூய்மையான நண்பரைச் சந்தித்ததில் மனமார்ந்த மகிழ்ச்சி குடுகுடுப்பையாரே.

    பதிலளிநீக்கு
  30. //வலசு - வேலணை சொன்னது…
    அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்//

    நன்றி வேலணை.விரைவில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  31. மிகவும் ரசிக்க வைத்து விட்டது மூன்றாம் பாகம். அடுத்த பாகம் விரைவில் எதிர்பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  32. கன்னிகா .. இது வரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் நினைவில் நிறைந்துவிட்டாள்... எனக்கும் கன்னிகாவை பாக்கணும் சார்.
    //இன்னும் பிறக்காத ஆண்கள் கூட அவளது உதட்டுச் சிவப்பின் முத்தத்துக்கு ஆசைப் படுவார்கள்.// excellent sir..

    பதிலளிநீக்கு
  33. துரியோதனன் சொன்னது…
    மிகவும் ரசிக்க வைத்து விட்டது மூன்றாம் பாகம். அடுத்த பாகம் விரைவில் எதிர்பார்க்கிறோம்.//

    நன்றி துரியோதனன் சார்.உங்கள் பாராட்டு உற்சாகமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  34. KISHORE சொன்னது…
    கன்னிகா .. இது வரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் நினைவில் நிறைந்துவிட்டாள்... எனக்கும் கன்னிகாவை பாக்கணும் சார்.
    //இன்னும் பிறக்காத ஆண்கள் கூட அவளது உதட்டுச் சிவப்பின் முத்தத்துக்கு ஆசைப் படுவார்கள்.// excellent sir..//

    நன்றி கிஷோர்.

    பதிலளிநீக்கு
  35. படித்துறை உங்கள் கடை..
    வாசகர்கள் எடுக்கிறார்கள் படை..
    அதற்குக்காரணம்,துள்ளலான நடை..
    நீங்க போட்டது சரியான விதை..
    அதனால கலக்கலா போகுது கதை..

    பதிலளிநீக்கு
  36. //உங்கள் நண்பன் சொன்னது…
    படித்துறை உங்கள் கடை..
    வாசகர்கள் எடுக்கிறார்கள் படை..//

    அடே மீண்டும் ஒரு வாலி சாரா?!நன்றி நண்பரே,நன்றி.

    பதிலளிநீக்கு