வெள்ளி, மார்ச் 27, 2009

கன்னிகா(நான்காம் பாகம்)மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்

5.
'தியாகங்கள்- செய்யும் தருணங்களில் மட்டுமே அழகாக இருக்கின்றன,சபதங்களைப் போல.'
- திவ்யா.


அரவிந்தனின் விவாக ரத்து வழக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்கு வந்த போது,முதல் நாளை விடப் பல மடங்குக் கூட்டம் நீதிமன்றத்தில் கூடியிருந்தது.
வாய்மொழியாக படத்தைப் பற்றிய செய்தி பரவியவுடன் திரை அரங்குகளில் கூட்டம் குவிவதைப் போல,அரவிந்தன் கன்னிகா விவாக ரத்து வழக்கு பிரபலமாகத் தொடங்கி இருந்தது.கூட்டத்தில் நிறைய இளைஞர்களும் இளம் பெண்களுமே இருந்தார்கள்

நீதிபதி வகுளாபரணன் வந்து அமர்ந்ததும்,வழக்கமான நீதி மன்றச் சடங்குகளுக்குப் பிறகு வழக்கு ஆரம்பித்தது.

'இன்னிக்கும் உங்க சம்சாரம் கன்னிகா வரலையா?'என்று வகுள் கேட்டதும் கூட்டத்தில் நிறைய இளைஞர்கள் 'வரலே சார்' என்று கத்தினார்கள்.அவர்களை நீதிமன்றப் பணியாளர்கள் எச்சரித்ததும் கூட்டம் அமைதியானது.

'வரலீங்க அய்யா'என்று நீதிபதிக்கு அமைதியாகப் பதில் சொன்னான் அரவிந்தன்.இரண்டு மூன்று நாட்கள் மழிக்கப் படாத முகத்துடன் அவன் 'சக்தே இந்தியா' ஷாரூக்கானைப் போல இருந்தான்.அவனது வாக்குமூல ஃபைல் நீதிபதியிடம் தரப் பட்டது.

அதன் முதல் சில வரிகளைப் படித்த வகுளாபரணின் முகத்தில் மெல்லிய புன்னகை பரவக், கூட்டத்தின் ஆர்வம் இன்னும் பெருகியது. படிப்பதற்குப் போன முறை போல் நடுத்தர வயதினரான முத்துசாமியைக் கூப்பிடாமல்,அவரை விட இளைஞனான மதிவணனைக் கூப்பிட்டார் நீதிபதி.

மதிவாணன் இளைஞன்.ஆனால் 'பேரழகன்' சூர்யாவைப் போல சகல விதங்களிலும் உடலால் பாதிக்கப் பட்டவன்.முதுகில் கூனும்,இளம் பிள்ளை வாததால் பாதிக்கப்பட்ட வலது காலும், இடது கையுமாகக் கறுப்பாகக் குள்ளமாக இருந்தான் மதிவாணன்.ஆனால் அருமையான கவிஞன்.

மிகவும் முயற்சி எடுத்து,ஆறு மாதங்களுக்கு முன்னால் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டு,அதன் கடன் சுமையிலிருந்து இன்னும் மீள முடியாமல் கஷ்டப் படுகிறான் மதிவாணன்.தினமும் நீதிமன்றத்துக்கு ஒரு துணிப் பையில் அவனது விற்காத கவிதைத் தொகுப்பின் ஆறேழு பிரதிகளைக் கொண்டு வந்து கெஞ்சிக் கெஞ்சி விற்கப் பார்ப்பான்.மற்றவர்களின் கிண்டல் கேலிகளையும் தாண்டிக் கவிதைகளை விற்றால்தான் அவனுக்கு மதியம் சாப்பாடு.

ஆனால் இத்தனையும் தாண்டிக் கணீரென்ற கவியரங்கக் குரல் அவனுக்கு.'ஒரு மௌனத்தின் அலறல்' என்ற அவன் கவிதை தொகுப்பிலிருந்து ஆண்மை மிளிரும் அவனது உணர்ச்சிகரமான குரலில் அவன் படித்துக் கேட்க வேண்டும்.அசத்தி விடுவான். ஆனல் கேட்கத்தான் ஆளில்லை.இருந்தாலும் உற்சாகம் குறையாத இளைஞன் மதிவாணன்.

'மதி,வாப்பா.இன்னிக்கு வாக்குமூலத்தை நீ படி'என்று அவர் பணித்ததும் மதிவாணன் புல்லரித்துப் போய் விந்தி விந்தி நடந்து வந்து ஃபைலை வாங்கிக் கொண்டான்.
அரவிந்தனின் அருகில் வந்து நின்றவன் அவனைப் பார்த்துப் புன்னகைத்து 'நான் உங்க ரசிகனாயிட்டேன் சார்'என்றான் கிசுகிசுத்த குரலில். அரவிந்தன் அவனைப் பார்த்து வெறுமனே முறுவலித்தான்.

அரவிந்தனின் வாக்குமூலம் மதிவாணனின் கணீர்க் குரலில் இப்படித் தொடங்கியது.

'அழகுணர்ச்சி உள்ள மனிதர்களுக்கே இருபதிலிருந்து,இருபத்தைந்து வயது வர வேண்டும்.மற்றவர்கள் எல்லாம் இருபது வயதிலிருந்து நேரடியாக நாற்பது வயதுக்குப் போய் விடலாம் என்று பரிணாம விதிகளை யாராவது மாற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.'

இதனைத் தனது கவிஅரங்கக் குரலில் மதிவாணன் படித்ததுமே எச்சரிக்கையையும் மீறி இளைஞர்கள் கைதட்டினார்கள்.இதனைப் படித்ததினால்தான் வகுள் இளைஞனான மதியைப் படிக்கச் சொல்லி இருக்கிறார் என்பது அனைவருக்கும் புரிந்த போது அவர்கள் நீதிபதியை புதிய மரியாதையுடன் பார்த்தார்கள்.அரவிந்தன் மட்டும் நிச்சலனமாக இருந்தான்.நீதிமன்றம் அமைதியானதும் மீதி அரவிந்தனைப் படிக்க ஆரம்பித்தான் மதி.

'இதனை அனுபவபூர்வமாகப் பெங்களூரில் நான் திவ்யாவுடன் கழிக்க நேர்ந்த பதினைந்து நாட்களில் உணர்ந்தேன்.நான் தங்கி இருந்த ஸ்டார் ஹோட்டலின் ரெஸ்டாரென்டில் திவ்யாவைச் சந்தித்த மறுநாள் மாலை.

அந்த மாதிரி ஹோட்டல்களில் குளிப்பதற்கே தங்கலாம்.ஷவரில்தான் எத்தனை விதமான வசதிகள்.கொதிக்கக் கொதிக்கக்,குளிரக் குளிர முழுமையாகக் குளித்து விட்டு வெளியே வரும் போது மனிதன் முதன் முதலாகக் கண்டு பிடித்த யோகக் கலையே குளியல்தான் என்று தோன்றியது.

ஜன்னலுக்கு வெளியே காளிதாசனின் மேக சந்தேசத்தை இன்னும் நினைத்தபடியே பெங்களூரின் அந்தி மேகங்கள் காதலர்களைச் சேர்த்து வைக்க அலைந்து கொண்டிருந்தன. குளியல், உடலிலும் மனதிலும் இளமையை இன்னும் தீவிரமாக்குகிறது. என்று நான் நினைக்க நினைக்கவே எனது செல் ஃபோனில் இளையராஜா 'ஒருநாள் ஒரு கனவு' என்று மென்மையிலும் மென்மையாகக் கூப்பிட்டார்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரிங் டோன் ஆனதால் எனது செல்ஃபோன் ஒரு இடைவிடாத சங்கீதச் சங்கமம்.அனுராதா ஸ்ரீராமின் குரலில் ஏ.சி இன்னும் இரண்டு பாயிண்டுகள் தானாகவே கூடின.ஜேசுதாசின் பஞ்சுக் குரலின் மேலேயே அமர்ந்தாற்போல கட்டிய டவலுடன் படுக்கையில் சாய்ந்த படியே சாவகாசமாகக் கூப்பிடுவது வாடிக்கையாளர்களில் யாரென்று ஃபோனைப் பார்த்தேன்.

பெயரைப் பார்த்ததும்

எனது நெஞ்சக் கூடடைந்திருந்த உலகத்து அந்திப் பறவைகள் எல்லாம் ஜிவ்வென்று ஒரே நேரத்தில் சிறகடித்துப் பறந்தன. '

'சூப்பர் சார்' என்றான் மதி தன்னை மறந்து. வகுள் உட்பட நீதிமன்றத்தில் எல்லோருமே சிரித்து விட்டனர். முதன் முதலாக கோர்ட் பணியாளர் சிரித்தபடியே சைலன்ஸ் சொன்னது அன்றுதான்.

வெட்கப் பட்ட மதி மீண்டும் அரவிந்தனைத் தொடர்ந்தான்.

'திவ்யா'

அவள் பெயரைக் கண்ட பதற்றத்தில் இடுப்புத் துண்டெல்லாம் அவிழ்ந்து போக எழுந்து நின்றேன் நான்.இன்று மாலை அவள்கூப்பிடுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

'ஹலோ' என்று அவள்சொன்னதும் எனக்கு ஏதோ நிலாவில் நடப்பதைப் போல உடம்பு எடை ஆறில் ஒரு பங்காகக் குறைந்தது.
'திவ்யா' என்ற போது என் குரலிலேயே அட்ரினலின் வழிந்தது.
'எங்கே இருக்கிறீர்கள் அரவிந்த்?' என்றாள் திவ்யா ஆங்கிலத்தில்.

இந்த ஆங்கிலத்தில் 'யூ' என்பதை விட ஒரு மொன்னையான வார்த்தை கிடையாது. குழந்தையைக் கொஞ்சுவதற்கும் 'யூ'தான்.கடவுளைக் கும்பிடுவதற்கும் 'யூ'தான்.கொடூரமான குற்றவாளியைத் தண்டிப்பதற்கும் 'யூ'தான்.

நீங்கள்,நீர்,நீ என்ற, உறவுகள் படிப்படியாக நெருங்கிவரும் பரிணாம வளர்ச்சியெல்லாம் வெள்ளைக்காரர்களுக்குக் கிடையாது போல.அதனால் எங்களுக்குள் நடந்த ஆங்கில உரையாடல்களை எல்லாம் எனது வசதிக்கேற்ப தமிழிலேயே சொல்கிறேன்.

'எங்கே இருக்கிறாய் அரவிந்த்?' என்றாள் திவ்யா எனது தமிழில்.

'எப்போதும் உன்னை விட ஒரு லெவல் கீழே!' என்றேன் நான்,எங்கள் அறைகள் இருக்கும் தளங்களைக் குறிப்பிட்டு.
அவள் சிரித்தாள்.

'அறை லெவலில் வேண்டுமானால் நீ கீழே இருக்கலாம்,ஆனால் பிடித்த விஷயங்களை மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கும் மனித லெவலில் நீ எப்போதும் எனக்கும் மேலேதான்.' என்றாள் அவளும் எனக்கு இணையாக.

'உன்னுடன் பேசுவதற்கே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..நீ புகழ்வதைக் கேட்க எனது மூதாதையர்களும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!' என்றேன் நான்.

இளம் பெண்கள்தான் சிரிப்பைக் கண்டு பிடித்தார்கள் என நினைக்கிறேன். அவ்வளவு அழகாகச் சிரித்தாள் திவ்யா.

'உனது அறைக்கு வரலாம் என்று இருக்கிறேன்.நீ எனக்கு என்ன தருவாய்?'
'என்னையே' என்றேன் பழைய தமிழ்ப் பாடல்களின் நினைவில்.
'அவ்வளவு இடவசதி இப்போது என்னிடம் இல்லை.குடிப்பதற்கு என்ன தருவாய்?'
'ஒயின்?ஜின்?ஷேம்பேன்?பீர்?வோட்கா? எனது ரத்தம்?'
'நான் சைவம் சாப்பிடும் ஒரு இந்தியப் பெண். எனக்குக் குடிக்க என்ன தருவாய்?'
'நீயே சொல்லி விடு.'
'ஐஸ்கோல்ட் லெமன் ஜுஸ்' என்றாள் அவள்.
'யெஸ் மை ஹைனஸ்' என்றேன் நான் உற்சாகமாக.
'பதினைந்து நிமிடங்களில் அங்கே இருக்கிறேன்.'என்று சொல்லி விட்டு ஃபோனைக் கட் செய்தாள் திவ்யா.

மெல்லிய என்யாவின் இசை,இனம் புரியாத, ஆனால் எப்படியோ மனதுக்குப் புரிந்த பாடி ஸ்ப்ரே, லேவண்டர் ரூம் ஸ்ப்ரே என்று ஏற்கனவே அழகாக இருந்த அந்த ஹோட்டல் அறையையும், சுமாரான என்னையும் இசையாலும்,நறுமணங்களாலும் மேலும் மெருகேற்றிக் கொண்டு நான் அறை வாசலுக்குச் சென்றபோது அவள் கதவைத் தட்டினாள்.

நான் கதவைத் திறந்து அவளைப் பார்த்ததும், இருவருமே ஒரே சமயத்தில் 'வாவ்' என்று ஆச்சர்யத்தில் கத்தி விட்டோம்.
நான் யோசித்து,யோசித்து அணிந்திருந்த அதே நைகி கறுப்பு ட்ரேக் ஷூட்டையும்,காலர் இல்லாத வெள்ளைக் காட்டன் டி ஷர்ட்டையையுமே அவளும் அணிந்திருந்தாள்

'டேக் கேர்'.என்று இருவரது நெஞ்சிலுமே எழுதி இருந்தது.
'எப்படி ..அரவிந்த் ...எப்படி இந்த மார்வலஸ் கோ இன்ஸிடன்ஸ்?' என்று திகைப்பும் மகிழ்ச்சியுமாகக் கேட்டாள் திவ்யா.
'கோ இன்ஸிடன்ஸ் என்று வெள்ளைக்காரர்கள்தான் சொல்லுவார்கள்.இந்தியாவில் நாம் இதை விதி என்று சொல்லுவோம்.' என்றேன் நான்.

திருப்பித் திருப்பித் தனது ஆடையையும்,எனது ஆடையையும் அவள் ஒப்பிட்டுக் கொண்டிருந்த போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
தோலுக்கடியில் ஏதோ கண்ணுக்குத் தெரியாத நியான் விளக்குகள் எரிவதைப் போல அப்படித் தகதகத்தாள்திவ்யா.
'நீயும் மாலையில் குளித்தாயா?'
'ஆமாம். வழக்கம் போல ஐஸ் கோல்ட் ஷவர் பாத்' என்றாள் அவள்.

'குளிர்ந்த நீர் பட்டதுமே இவ்வளவு சிவந்து போகிறாயே,நீ குழந்தையாக இருக்கும் போது உன்னை எப்படிக் கொஞ்சி இருப்பார்கள்?'
அவள் வெட்கப்பட்ட போது அந்த அழகை வருணிக்க வார்த்தைகள் இல்லையே என்று தமிழன்னையும் கூடச் சேர்ந்து வெட்கப் பட்டாள்.
'வழி விடுகிறாயா,உள்ளே போவோம்'

நான் நகர்ந்தவுடன் அவள் உள்ளே வந்து குஷன் வைத்த சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள்.
'எங்கே என்னுடைய கூல் டிரிங்க்?.' என்று அவள் கேட்டதும் நான் வாங்கி வைத்திருந்த ஐஸ்க்ரீமைக் கொண்டு வந்து தந்தேன்.அவள் கேள்விக் குறியுடன் என்ன இது ?என்று ஜாடை செய்தாள்.
'நீ எனது கஸ்ட் ஆஃப் ஹானர்.உன்னை வெறும் எலுமிச்சைச் சாற்றுடன் வரவேற்க நான் தயாராக இல்லை.' என்றேன் நான்
.'தேங்க்ஸ்' என்றவள் அதைச் சாப்பிடும் முன் என்னைக் கேட்டாள்.
'உனக்கு ,அரவிந்த்?'
'உண்பதை விட எனக்கு ஐஸ்க்ரீமைப், பார்ப்பதுதான் பிடிக்கும்.' என்றேன் நான்.
'மற்றவர்கள் பார்க்கப், பார்க்க உண்ணும் வழக்கம் எனக்கு இல்லை'என்ற திவ்யா சுழல் நாற்காலியைச் சுற்றி விட்டுத் திரும்பிக் கொண்டாள்.
நான் அமைதியாகவே இருக்க 'என்ன சத்தத்தையே காணோம்?' என்றாள்,முன்புறம் திரும்பாமல்.

'பின்னாலில் இருந்து பார்த்தாலும் ஐஸ்க்ரீமுக்கு அதே ருசிதான்' என்று நான் சொன்னதும்தான் அவள் புரிந்து கொண்டு சரேலேன முன்புறமாகத் திரும்பினாள்.
செல்லக் கோபத்துடன் 'யூ டர்டி ராஸ்கல் 'என்றவள் பின்னர் தனக்குள் சிரித்தபடி ஐஸ்க்ரீமைச் சாப்பிடும் பாவனையில் தலை குனிந்து கொண்டாள்.

சீர்,தளை சிறிதும் தட்டாமல்,யாப்பிலக்கணம் சற்றும் வழுவாமல் கட்டிய இரண்டு வெண்பாக்களைப் போல இருந்தன அவளது இளம் மார்புகள்.ஐஸ்க்ரீமைச் சுவைத்த அவளது நாக்கின் பிங்க் நிறத்துக்கு இணையான நிறத்தை இயற்கை இன்னும் எங்கும் படைக்கவில்லை என்பது சத்தியம்.

'நீ எப்போதும் இந்த ஹோட்டலில்தான் தங்குவாயா?' என்று அவள் பேச்சை மாற்றினாள்.உடனே நான் அந்த ஹோட்டலின் கட்டுமானச் சிறப்புக்களைப் பற்றிய எனது சிவில் எஞ்சினியரிங் ரசனைகளை அவளிடம் உணர்ச்சிகரமாக விளக்க ஆரம்பித்து விட்டேன்.

'இது வெறுமனே காசுக்காக யாரோ கட்டிய ஹோட்டல் கட்டிடம் அல்ல,திவ்யா.மனம் ஒன்றிக் கலாபூர்வமாகப் படைத்திருக்கா விட்டால் வறண்ட காங்க்ரீட்டிலும்,சிமென்ட்டிலும் இத்தனை பூக்களும், சில்க்கும் விரிந்திருக்காது.' என்றேன் உண்மையில் சிலிர்த்து.

'அப்படியா?' என்றாள் அவள்,எனது ரசனையை உள்வாங்கிக் கண்கள் விரிய.

'ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு வெள்ளை மலையைச் செதுக்கிச் செதுக்கிப் பிரம்மாண்டமான இந்தச் சிற்பத்தைப் படைத்திருக்கிறார்கள்.சிற்பத்தையாவது நீ வெளியே இருந்துதான் பார்த்து ரசிக்க முடியும்.ஆனால் இந்தச் சிற்பத்தை நீ உட்புறத்திலும் தங்கி,அணுஅணுவாக அதன் அழகுகளை ரசிக்க முடியும்.' என்ற போது உண்மையில் அவள் என் ஈடுபாட்டை 'மிக மிக நன்றாகச் சொன்னாய்,அரவிந்த்'என்று மனதாரப் பாராட்டினாள்.

'நான் இன்று ஒர்க் அவுட் செய்யவில்லை.கீழே தோட்டத்தில் சற்றே நடந்து வரலாமா?' என்று அவள் கேட்டதும் நான் உடனே ஒத்துக் கொண்டேன்.

ஹோட்டல் தோட்டம் ஒரு குட்டி மைசூர் பிருந்தாவனம் போலிருந்தது.முன்னிரவின் குளிர்ந்த காற்று.சுற்றிலும் நிறங்களையும், மணங்களையும் வரங்களாக அருளிக் கொண்டிருக்கும் மலர்கள்,அருகில் மனம் ஒன்றிய ரசனைகளுடன் கூடிய ஒரு அழகிய இளம் பெண்.
இந்த மாதிரி பரிபூரண அமைதி வரும் சந்தர்ப்பங்களில் எல்லோருடைய அந்தரங்கத்தின் ஆழத்திலும் தெரியும் அந்த மானசரோவர் ஏரியை நானும் கண்டேன்.

'இன்று ஏன் நீ உனது அபிமானப் புத்தகத்தை எடுத்து வரவில்லை?' என்றேன் நான்,இருவரும் ஒரு பளிங்கு பெஞ்சில் அமர்ந்தவுடன்.

'நம்மைப் பற்றிப் பேசத்தான் ' என்றாள் திவ்யா.

'நம்மைப் பற்றியா?'
'நான் உன்னைப் பார்க்க வந்ததே, நாம் யார் என்று இன்னும் விரிவாக ஆழமாகத் தெரிந்து கொள்ளலாம்,என்று நினைத்துத்தான்' என்றாள் அவள்.

'சந்தித்த இரண்டாம் நாள் சாயந்திரமேவா என்று நீ கூட ஆச்சர்யப் படலாம்.ஆனால் இதற்கெல்லம் லாஜிக் இல்லையென்று நாம் இன்று அணிந்திருக்கும் ஒரே மாதிரி உடைகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.' என்றாள் திவ்யா கனத்த குரலில்.

பிறகு அவள் தன்னைப் பற்றிச் சொன்னாள்.

திவ்யா ஒரு சிந்திப் பெண்.தந்தையைச் சிறு வயதிலேயே இழந்து விட்டவள்.ஒரே அக்கா இருக்கிறாள்.அவள் பெயர் தன்யா.விமானப் பணிபெண்ணாக இருந்து போன வருடம்தான் ஒரு தொழிலதிபரைக் காதலித்து மணந்து கொண்டிருக்கிறாள் அக்கா.அவளுக்கு ஒரே குழந்தை வருண்.திவ்யா இப்போது தனது விதவைத் தாயுடன் மும்பையில் சொந்த ஃப்ளாட்டில் வசிக்கிறாள்.

'சிந்திக்கள் என்றால்..இந்துக்கள்தானா?' என்று நான் எனது சந்தேகத்தைக் கேட்டவுடன் அவள் தங்கள் வரலாற்றையே சுருக்கமாகச் சொன்னாள்.

'பஞ்சாப,சிந்து மராட்டா என்று தேசிய கீதத்தில் தாகூர் எழுதியதே எங்கள் சிந்து நதிக் கரை மாகாணத்தைப் பற்றித்தான்.ஆனால் பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவுக்குத் துரத்தப் பட்டு, அனைத்தையும் இழந்து அகதிகளாக வந்த இந்துக்களே நாங்கள்..எதனை இழந்தாலும் தன்மானத்தை மட்டும் இழக்கக் கூடாது என்ற எங்கள் முன்னோரின் உறுதியாலும், உழைப்பாலும்,அறிவாலுமே இன்று இந்தியாவின் பணக்கார இனங்களில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம்.ஒரு சிந்திப் பிச்சைக்காரனைக் கூட நீ உலகில் பார்க்க முடியாது.' என்றாள் திவ்யா தீர்க்கமான குரலில்.

'சரி உன்னைப் பற்றிச் சொல்' என்றாள் பிறகு.

'நீ சிந்து நதிக்கரை.நான் காவேரிநதிக் கரை.நீங்கள் சிந்து நதியை முழுக்க இழந்து விட்டீர்கள்.நாங்கள் காவேரியைப் படிபடியாக இழந்து கொண்டிருக்கிறோம்.ஈரோடு அருகே காவேரி நதிக்கரையில் இருக்கும் ஓடக்கரை என்னும் குக்கிராமத்திலிருந்து வந்தவன் நான். அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை.படித்தது கோவை ஜி.சி.டியில்.கோல்ட் மெடல்லிஸ்ட் இன் சிவில் எஞ்சினியரிங்.' என்றேன் நான் சுருக்கமாக.

'இவ்வளவு திறமையும் ரசனையும் இருப்பவன் ஏன் கிரானைட் விற்கும் விற்பனைப் பரதிநிதியாக இருக்கிறாய்?' என்ரு கேட்டாள் அவள்.

'நான் ஒரு கட்டிடப் பிரியன்.நாடு முழுதும் சுற்றி இந்த ஹோட்டலைப் போல ரசனையுடன் கட்டப் படும் பிரம்மாணடமான பல காங்க்ரீட் கவிதைகளைப் பார்ப்பதற்கு எனது இந்தத் தொழில் எனக்கு உதவியாக இருக்கிறது.' என்றேன் நான்.

'ஹல்ல்லோ திவ்யா ' என்ற வேறோரு உற்சாகக் குரல் கேட்டதும் இருவருமே திரும்பிப் பார்தோம்.
எனக்குப் பரிச்சயமில்லாத ஆனால் திவ்யாவை நன்கு அறிந்த அந்த ஹோட்டலின் எம்.டி கம் சேரமேன்.அந்த அறுபது வயதிருக்கும் பாஸ்கர் ரெட்டியை திவ்யா எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

'ஹலோ அரவிந்த்,நைஸ் டு மீட் யூ,'என்ற பாஸ்கர் ரெட்டி 'உனக்குத் திவ்யா யாரென்று தெரியுமா?'என்று கேட்டார் திடுமென.

'தெரியும் .ஒரு ஆர்கிடெக்ட். என்றேன் புரியாமல்.

'ஓ,நோ மை பாய்.இந்த பிரம்மாண்டமான ஹோட்டல் கட்டிடத்தை முழுக்க முழுக்க டிசைன் செய்த ஆர்கிடெக்டே இந்தக் குட்டித் தேவதைதான்' என்று அவர் சொல்லி முடித்தபின், அவர் பேசிய எந்த வார்த்தைகளுமே எனது காதில் விழவில்லை.

அவர் சென்ற பிறகு திவ்யாவையே அமைதியாகப் பார்த்தேன்.

'இன்று சாயந்திரம் முழுக்க,இந்தக் கட்டிடதின் அழகுகளைப் பற்றி மாய்ந்து மாய்ந்து நான் புகழ்ந்த போதெல்லாம் இதை டிசைன் செய்தது நீதான் என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை திவ்யா?'

அவள் நிமிர்ந்து என்னை ஆழமாகப் பார்த்தாள்.

'நான்தான் அது என்று சொல்வதைக் காட்டிலும், இவர்தான் அது என்று சொல்வதைக் கேட்கும் போதுதான் அழுத்தம் அதிகம் இருக்கும் என்று எங்கள் சிந்தி பிஸினஸ்மேக்னட்கள் சொல்வார்கள்.அதனால்தான் உன்னிடம் என்னைப் பற்றிச் சொல்லவில்லை.'

நான் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தேன்.
'
கோபமா அரவிந்த்?'

அவளும், அவளுக்குப் பின்னால் இரவில் பிரம்மாண்டமான ஒரு வெள்ளைக் கனவைப் போல நின்றிருக்கும் அந்த ஹோட்டல் கட்டிடமும்.

'இப்போது உன் கையையாவது குலுக்கலாமா?'என்றேன் நான்.
'ஓ,ஷ்யூர்' என்று சிரித்தபடியே கையை நீட்டிநாள் திவ்யா.

அப்போதுதான் முதன் முறையாக அவளது கையைத் தொட்டேன்.

'தொட முடியாத எவ்வளவு உயரத்தில் நீ இருக்கிறாய் என்று உன்னைத் தொடும் போதுதான்,புரிந்து கொண்டேன், திவ்யா' என்றேன் குரல் உடைய.

'எப்படி இவ்வளவு அழகாகாப் பேசுகிறாய் அரவிந்த்?' என்றாள் அவள் சிரித்து.

மீண்டும் பழைய நிலைக்கு வந்து சிரித்தேன்.

'வெரி சிம்பிள்,திவ்யா.உன்னை மாதிரி அழகான பெண்கள் அருகில் இருக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு அருள் வந்து விடும்.அப்புறம் உலகத்துக் கவிஞர்கள் எல்லோரும் எனக்குள் வந்து எனக்குப் பதிலாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள்.கம்பனில் இருந்து தொடங்கி தாகூர்,பாரதி,வாலி,வைரமுத்து என்று அந்த லிஸ்ட் போய்க் கொண்டே இருக்கும் ..அவ்வளவு .ஏன் ஆறு மாதத்துக்கு முன்னால் முதல் கவிதைப் புத்தகம் வெளியிட்ட மதிவாணன்--என்ற இளங்கவிஞன்'

மதிவாணன் மட்டுமல்ல ,அவன் பெயர் அரவிந்தனின் வாக்குமூலத்தில் வருமென்று யாருமே எதிர்பார்க்காததினால் கோர்ட்டே ஸ்தம்பித்தது.

மதிவாணன் திணறிப் போய் ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்துப் பார்க்க அவன் பெயரைத்தான் அரவிந்தன் எழுதி இருந்தான்.

'சார்..அய்யா..சார் என்னோட பேரைத்தான் எழுதியிருக்கார்.'என்று மதிவாணன் திக்கித் திணறி நீதிபதியிடம் சொல்ல,வகுள்'அவரது வாக்கு மூலத்தைத்தானே படிக்கிறாய்.படி'என்றதும் மதி தொடர்ந்தான்.

'ஆறுமாதத்துக்கு முன்னால்தான் முதல் கவிதைப் புத்தகத்தை வெளியிட்ட மதிவாணன் என்ற இளங்கவிஞன் கூடத் தனது அற்புத வரிகளால் எனக்காக உன்னிடம் பேசுவான்.'

இதை மதிவாணன் தன் மெய்சிலிர்க்கப் படித்த போது கோர்ட்டே ஆரவாரத்தாலும் கரகோஷத்தாலும் சிலை வாங்கியது.

மதிவாணன் தனது ஊனமுற்ற உடல் முற்றிலும் குலுங்கக்,குலுங்க விந்தி,விந்தி ஓடி வந்து கதறியபடியே போய் அரவிந்தனின் கைகளைப் பற்றிக் கொண்டான்.அவன் உரக்க அழுதபோது கோர்ட்டில் நிறையப்பேர் அவனது கவிதைகளைப் புரியாவிட்டாலும் அவனது உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவனுடன் அழுதார்கள்.

'நீ மட்டுமல்ல மதிவாணன்,நானுந்தான் உனது ரசிகன்.என்ன,இன்றுதான் உன்னைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.' என்றான் அரவிந்தன் அவனது மாறாத அமைதியுடன்.

அழுகை என்பதைத் தவிர அந்த 'மௌனத்தின் அலறலுக்கு 'யாருக்கும் வேறு பொருள் சொல்லத் தெரியவில்லை.

அந்த இளம் கவிஞனின் அழுகையும்,பரவசமும் முடிவதற்காக வகுள் பத்து நிமிடம் கோர்ட்டுக்கு இடைவேளை விட்டார்.

(இடைவேளை)

49 கருத்துகள்:

  1. குடுகுடுப்பை சொன்னது…
    super judge sir.

    உங்கள் முதல் வரவு நல்வரவாகுக குடுகுடுப்பை சார்..நன்றி.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது, இதனைப்போல எழுத மனம் இழுக்கிறது.ஆனால் மாட்டேன்

    பதிலளிநீக்கு
  3. //குடுகுடுப்பை சொன்னது…
    நாடோடி இலக்கியன் கவிதைகள்...!: அறுவடை நாளும்,ஒருவர் வாழும் ஆலயமும் கூட சின்னத்தாயும்...!

    என் தம்பி எழுதிய விமர்சனம்//

    எனக்குப் புரியவில்லையே சார்.

    பதிலளிநீக்கு
  4. //முத்து குமரன் கூறியது...
    good narration//

    THANK YOU ,MUTHUKUMARAN.

    பதிலளிநீக்கு
  5. ஷண்முகப்ரியன் சொன்னது…

    //குடுகுடுப்பை சொன்னது…
    நாடோடி இலக்கியன் கவிதைகள்...!: அறுவடை நாளும்,ஒருவர் வாழும் ஆலயமும் கூட சின்னத்தாயும்...!

    என் தம்பி எழுதிய விமர்சனம்//

    எனக்குப் புரியவில்லையே சார்.
    //

    ஒருவர் வாழும் ஆலயம் படம் பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறான் என் சகோ. அது உங்கள் படம்தானே.?

    பதிலளிநீக்கு
  6. இந்த பதிவுல கவிதை நடை அதிகம் சார்.

    பதிலளிநீக்கு
  7. //குடுகுடுப்பை கூறியது... ஒருவர் வாழும் ஆலயம் படம் பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறான் என் சகோ. அது உங்கள் படம்தானே.?//
    'நாடோடி இலக்கிய்ன் கவிதைகள்' என்று உங்கள் தம்பி எழுதியிருந்ததை வேறொரு கவிஞர் பெயர் என்று நினைத்து விட்டேன சார்.சாரி.

    பதிலளிநீக்கு
  8. //vinoth gowtham கூறியது...
    இந்த பதிவுல கவிதை நடை அதிகம் சார்.//

    அப்படியா வினோத்.உங்களுக்குக் கவிதை நடை பிடிக்காதா?எனிவே,உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி வினோத்.

    பதிலளிநீக்கு
  9. //குடுகுடுப்பை கூறியது...
    உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது, இதனைப்போல எழுத மனம் இழுக்கிறது.ஆனால் மாட்டேன்//
    ஏன் சார்?எனக்குத்தான் சினிமா தொழில்.காம்ரமைஸ் பண்ணியே பிழைக்க வேண்டும்.நீங்கள் சுதந்திரமாக ஆசைப் பட்டபடியெல்லாம் எழுதலாமே சார்.

    பதிலளிநீக்கு
  10. //சீர்,தளை சிறிதும் தட்டாமல்,யாப்பிலக்கணம் சற்றும் வழுவாமல் கட்டிய இரண்டு வெண்பாக்களைப் போல இருந்தன அவளது இளம் மார்புகள்.//

    என்னா ஒரு கற்பனைசார்.. பின்னிட்டீங்க..

    பதிலளிநீக்கு
  11. //Cable Sankar சொன்னது…
    //சீர்,தளை சிறிதும் தட்டாமல்,யாப்பிலக்கணம் சற்றும் வழுவாமல் கட்டிய இரண்டு வெண்பாக்களைப் போல இருந்தன அவளது இளம் மார்புகள்.//

    என்னா ஒரு கற்பனைசார்.. பின்னிட்டீங்க..//

    பெங்களூர் சென்று வந்த ஷங்கருக்கு இதை ஒரு சிறிய காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. மனித வர்ணனைகள் அருமை! ஒரு சினிமா போல உணர்கிறேன். இலக்கியம் என்று எடுத்துக்கொள்கிறேன். :-)

    இந்த இலக்கியத்தரம், தமிழ் சினிமாவில் எடுபடுமா?

    பதிலளிநீக்கு
  13. //'தொட முடியாத எவ்வளவு உயரத்தில் நீ இருக்கிறாய் என்று உன்னைத் தொடும் போதுதான்,புரிந்து கொண்டேன், //

    //'குளிர்ந்த நீர் பட்டதுமே இவ்வளவு சிவந்து போகிறாயே,நீ குழந்தையாக இருக்கும் போது உன்னை எப்படிக் கொஞ்சி இருப்பார்கள்?'//

    அருமையான கவிதை வரிகள் ஐயா

    பதிலளிநீக்கு
  14. //Vinitha சொன்னது…
    மனித வர்ணனைகள் அருமை! ஒரு சினிமா போல உணர்கிறேன். இலக்கியம் என்று எடுத்துக்கொள்கிறேன். :-)

    இந்த இலக்கியத்தரம், தமிழ் சினிமாவில் எடுபடுமா?//

    இரண்டும் வெவ்வேறு மீடியம் வினிதா.பணம் பெரிதாக முதலீடு இடப்படும் சினிமாவும்,மனம் பெரிதாக முதலீடு இடப்படும் இலக்கியமும் எப்படி இணையமுடியும்?Everything depends on your targets and aims.HERE,MY TARGET AUDIENCE IS THOSE WHO ARE HAVING MINIMUM A COMPUTER.HOWEVER THANK YOU FOR YOUR VISIT AND COMMENT.

    பதிலளிநீக்கு
  15. //அத்திரி சொன்னது…
    //'தொட முடியாத எவ்வளவு உயரத்தில் நீ இருக்கிறாய் என்று உன்னைத் தொடும் போதுதான்,புரிந்து கொண்டேன், //

    //'குளிர்ந்த நீர் பட்டதுமே இவ்வளவு சிவந்து போகிறாயே,நீ குழந்தையாக இருக்கும் போது உன்னை எப்படிக் கொஞ்சி இருப்பார்கள்?'//

    அருமையான கவிதை வரிகள் ஐயா//

    எழுதுபவன் ஒருவனே.ஆனால் ரசிப்பவர்கள் பலர்.என் முகத்தில் பல பேருடைய முகங்களைப் பார்க்கும் விளையாட்டு நன்றாகத்தான் இருக்கிறது அத்திரி.ஆட்டத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி.ஆமாம் இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்?

    பதிலளிநீக்கு
  16. வரிக்கு வரி அருமை.

    வாவ்..

    அதிகம் சினிமா பார்த்து கெட்டு போனதால் என்னவோ எனது மானிடரில் எழுத்துகளை படிக்க படிக்க மனதில் காட்சிகளாக ஒடுகிறது.

    அருமை. அருமை..


    மிக மிக மகிழ்ச்சியாய் அனுபவித்தேன்.

    இருங்க.. பாப்கார்ன் வாங்கிட்டு வரேன். படத்தை போட்டுவிடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. //வண்ணத்துபூச்சியார் கூறியது
    மிக மிக மகிழ்ச்சியாய் அனுபவித்தேன்.

    இருங்க.. பாப்கார்ன் வாங்கிட்டு வரேன். படத்தை போட்டுவிடாதீர்கள்.//

    உங்கள் மகிழ்ச்சி உங்கள் வரிகளிலேயே துள்ளுகிறது,வண்ணத்துபூச்சியாரே.உற்சாக நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. //'உன்னுடன் பேசுவதற்கே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..நீ புகழ்வதைக் கேட்க எனது மூதாதையர்களும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!//


    பின்னிட்டிங்க சார் :)

    பதிலளிநீக்கு
  19. துரியோதனன் கூறியது...
    //'உன்னுடன் பேசுவதற்கே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..நீ புகழ்வதைக் கேட்க எனது மூதாதையர்களும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!பின்னிட்டிங்க சார் :)//

    நன்றி துரியோதனன்.நான் உங்கள் ரமணர் பதிவுக்குக் கருத்துரை எழுதியிருந்தேன்.அதை நீங்கள் இன்னும் போடவில்லையே நண்பரே?

    பதிலளிநீக்கு
  20. அருமை, ...மதிவாணனின் introduction மிகவும் நன்றாக இருக்கிறது... சரியான இடத்தில, அவரயும் , என்னையும் ( இல்லை , இல்லை ) எங்களையும், உணர்ச்சி வச
    பட வைத்து விட்டீர்கள்... the craft of story writting comes very natural to you.

    Sundar

    பதிலளிநீக்கு
  21. Sundar சொன்னது…
    அருமை, ...மதிவாணனின் introduction மிகவும் நன்றாக இருக்கிறது... சரியான இடத்தில, அவரயும் , என்னையும் ( இல்லை , இல்லை ) எங்களையும், உணர்ச்சி வச
    பட வைத்து விட்டீர்கள்... the craft of story writting comes very natural to you.//

    Felt Happy and Thank You Sundar.

    பதிலளிநீக்கு
  22. //sikkandar கூறியது...
    excellent..... excellent story...//

    Thank you very much Sikkandar for your visit and appreciation.But I could not open your blog.

    பதிலளிநீக்கு
  23. ஒரு நீள் பதிவாக உள்ளது.. முழுவதும் படித்துவிட்டு வருகின்றேன்..

    பதிலளிநீக்கு
  24. திரைப்படம் பார்ப்பது போல இருக்கு சார்... நல்ல நடை... கற்கவேண்டிய ஒன்று

    பதிலளிநீக்கு
  25. ஆ.ஞானசேகரன் சொன்னது…
    ஒரு நீள் பதிவாக உள்ளது.. முழுவதும் படித்துவிட்டு வருகின்றேன்..

    March 28, 2009 7:45 PM
    ஆ.ஞானசேகரன் சொன்னது…
    திரைப்படம் பார்ப்பது போல இருக்கு சார்... நல்ல நடை... கற்கவேண்டிய ஒன்று//

    நல்ல ரசிகர்கள் கிடைப்பதுதான் படைத்தவனுக்குக் கிடைக்கும் பேரதிர்ஷ்டம்.உங்கள் மூலம் அது எனக்கு வாய்த்திருக்கிறது.நன்றி ஆ.ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  26. //இந்த ஆங்கிலத்தில் 'யூ' என்பதை விட ஒரு மொன்னையான வார்த்தை கிடையாது. குழந்தையைக் கொஞ்சுவதற்கும் 'யூ'தான்.கடவுளைக் கும்பிடுவதற்கும் 'யூ'தான்.கொடூரமான குற்றவாளியைத் தண்டிப்பதற்கும் 'யூ'தான்.//

    ஆஹா.. நச் என்ற நச்சு..

    ஐயா எழுத எழுத சுவாரஸ்யம் கூடுகிறதே..!

    பதிலளிநீக்கு
  27. ///Cable Sankar கூறியது...

    //சீர், தளை சிறிதும் தட்டாமல், யாப்பிலக்கணம் சற்றும் வழுவாமல் கட்டிய இரண்டு வெண்பாக்களைப் போல இருந்தன அவளது இளம் மார்புகள்.//

    என்னா ஒரு கற்பனை சார்.. பின்னிட்டீங்க..///

    இருக்கும்ல இருக்கும்..

    மப்பு தலைக்கேறியிருக்குன்னு நினைக்கிறேன்..!

    பதிலளிநீக்கு
  28. //உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…
    //இந்த ஆங்கிலத்தில் 'யூ' என்பதை விட ஒரு மொன்னையான வார்த்தை கிடையாது. குழந்தையைக் கொஞ்சுவதற்கும் 'யூ'தான்.கடவுளைக் கும்பிடுவதற்கும் 'யூ'தான்.கொடூரமான குற்றவாளியைத் தண்டிப்பதற்கும் 'யூ'தான்.//

    ஆஹா.. நச் என்ற நச்சு..

    ஐயா எழுத எழுத சுவாரஸ்யம் கூடுகிறதே..!//

    நன்றி சரவணன்.லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டடா வந்திருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  29. உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
    ///Cable Sankar கூறியது...

    //சீர், தளை சிறிதும் தட்டாமல், யாப்பிலக்கணம் சற்றும் வழுவாமல் கட்டிய இரண்டு வெண்பாக்களைப் போல இருந்தன அவளது இளம் மார்புகள்.//

    என்னா ஒரு கற்பனை சார்.. பின்னிட்டீங்க..///

    இருக்கும்ல இருக்கும்..

    மப்பு தலைக்கேறியிருக்குன்னு நினைக்கிறேன்..!//

    ஷங்கர், சந்யாசி போல வாழும் உங்கள் இமேஜை இப்படிக் கெடூக்கிறாரே,நம் உண்மைத்தமிழன்.அவருக்கு உங்கள் ஞானவுரையை வழங்கித் திருத்துங்கள் ப்ளீஸ்..

    பதிலளிநீக்கு
  30. படிக்கும் போதே காட்சிகள் கண்முன் விரிகின்றன...அடுத்த அத்தியாயத்துக்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் விரைவில் வெளியிடுங்கள்!
    ஆர்வமுடன்...

    பதிலளிநீக்கு
  31. பிரேம் கூறியது...
    படிக்கும் போதே காட்சிகள் கண்முன் விரிகின்றன...அடுத்த அத்தியாயத்துக்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் விரைவில் வெளியிடுங்கள்!
    ஆர்வமுடன்...//

    நன்றி பிரேம்.விரைவில் வெளியிட முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  32. நான்கு பாகங்களையும் ஒரே மூச்சில் படித்தேன்.

    திவ்யாவையும் கன்னிகாவையும் நீங்கள் வர்ணித்த அழகு என்னை மிகவும் கவர்ந்தது. எல்லா பாகங்களும் முடிந்த பின்னர் எனக்கு பிடித்த வரிகளை எல்லாம் மேற்கோள் காட்டி ஒரு பின்னூட்டம் இடுகிறேன்.

    அடுத்த பகுதி எப்ப சார்?

    பதிலளிநீக்கு
  33. உள்ளத்தில் இருந்து.. சொன்னது…
    நான்கு பாகங்களையும் ஒரே மூச்சில் படித்தேன்.

    திவ்யாவையும் கன்னிகாவையும் நீங்கள் வர்ணித்த அழகு என்னை மிகவும் கவர்ந்தது. எல்லா பாகங்களும் முடிந்த பின்னர் எனக்கு பிடித்த வரிகளை எல்லாம் மேற்கோள் காட்டி ஒரு பின்னூட்டம் இடுகிறேன்.

    அடுத்த பகுதி எப்ப சார்?

    என்னை எதிர்பார்ப்பதைப் போல உங்களையும் எதிர்பார்க்கிறேன்,நண்பரே.உங்கள் ஆர்வத்துக்கும்,ரசனைக்கும் எனது மனமுவந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  34. இந்த கதையை படிக்க ஆரம்பித்த பின்பு தினமும் அடுத்த பாகம் வெளிவந்து விட்டதா என்று பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு அனிச்சை செயல் ஆகிவிட்டது.
    காதலித்தவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலிக்கப் போகிறவர்கள் என அனைவரும் இது போன்ற ஒரு இடத்தில் தன்னை தானே நிச்சயம் வைத்துப் பார்ப்பார்கள் என்னைப் போலவே.

    'பெயரைப் பார்த்ததும்

    எனது நெஞ்சக் கூடடைந்திருந்த உலகத்து அந்திப் பறவைகள் எல்லாம் ஜிவ்வென்று ஒரே நேரத்தில் சிறகடித்துப் பறந்தன. '

    'தொட முடியாத எவ்வளவு உயரத்தில் நீ இருக்கிறாய் என்று உன்னைத் தொடும் போதுதான்,புரிந்து கொண்டேன், திவ்யா' என்றேன் குரல் உடைய.'

    இது போன்ற கவித்துவமான வரிகளைப் படித்ததும் எனக்குள் தோன்றியது ஒன்றே ஒன்று மட்டும்தான். கதையை படிப்பதே இவ்வளவு சுகமாக இருக்கும் போது இதை திரைப்படமாக பார்த்தால் எப்படி இருக்கும்?

    நாங்கள் இணையத்தில் படித்து விடுகிறோம்.
    தயவு செய்து இதை திரைப்படமாக்கி இணையத்தை அறியாத பலரும் பார்த்து மகிழ செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  35. ramesh கூறியது...இது போன்ற கவித்துவமான வரிகளைப் படித்ததும் எனக்குள் தோன்றியது ஒன்றே ஒன்று மட்டும்தான். கதையை படிப்பதே இவ்வளவு சுகமாக இருக்கும் போது இதை திரைப்படமாக பார்த்தால் எப்படி இருக்கும்?

    நாங்கள் இணையத்தில் படித்து விடுகிறோம்.
    தயவு செய்து இதை திரைப்படமாக்கி இணையத்தை அறியாத பலரும் பார்த்து மகிழ செய்யுங்கள்.//

    நன்றி ரமேஷ்.இணைய எழுத்தும்,திரைப் பட எழுத்தும் இரண்டுமே தனித் தனி ஊடகக் கோட்பாடுகளுக்கு உட்பட்டவை.வணிக சாத்தியக் கூறுகள் உள்ள கதைகள் மட்டுமே படமாக்கப் பட முடியும்.பெரும் பண முதலீடு கருதிப் பெரும்பான்மை மக்களின் ரசனையை ஒட்டியே திரைப் படங்களை உருவாக்க வேண்டியிருப்பதால் உங்கள் ஆர்வம் செயல் வடிவமாக நிறையத் தடைகள் உண்டு.நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  36. 'நன்றி ரமேஷ்.இணைய எழுத்தும்,திரைப் பட எழுத்தும் இரண்டுமே தனித் தனி ஊடகக் கோட்பாடுகளுக்கு உட்பட்டவை.வணிக சாத்தியக் கூறுகள் உள்ள கதைகள் மட்டுமே படமாக்கப் பட முடியும்.பெரும் பண முதலீடு கருதிப் பெரும்பான்மை மக்களின் ரசனையை ஒட்டியே திரைப் படங்களை உருவாக்க வேண்டியிருப்பதால் உங்கள் ஆர்வம் செயல் வடிவமாக நிறையத் தடைகள் உண்டு.நன்றி ரமேஷ்.'

    என்னால் இன்னும் கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று அனுமானிக்க முடியவில்லை.இருந்தபோதிலும், இது போல சுவையான நினைவலைகள் உள்ள படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன (அதனுடன் பொழுது போக்கு அம்சங்களும் சிறப்பாக அமைந்ததால்)

    உதாரணம் பருத்திவீரன், கஜினி,ஆட்டோகிராப் மற்றும் பல.
    சரி சரி நாளை வருவதை நாளை பார்க்கலாம்.
    தற்போது அடுத்த பாகத்தை விரைவில் பதிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  37. rதற்போது அடுத்த பாகத்தை விரைவில் பதிக்க வேண்டுகிறேன்.amesh சொன்னது…//

    ok Ramesh. I will try my best.

    பதிலளிநீக்கு
  38. //
    'தியாகங்கள்- செய்யும் தருணங்களில் மட்டுமே அழகாக இருக்கின்றன,சபதங்களைப் போல.'

    //
    உண்மை தான்.

    //
    சீர்,தளை சிறிதும் தட்டாமல்,யாப்பிலக்கணம் சற்றும் வழுவாமல் கட்டிய இரண்டு வெண்பாக்களைப் போல இருந்தன அவளது இளம் மார்புகள்.
    //

    //
    'நான்தான் அது என்று சொல்வதைக் காட்டிலும், இவர்தான் அது என்று சொல்வதைக் கேட்கும் போதுதான் அழுத்தம் அதிகம் இருக்கும்.'
    //

    அருமை. அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  39. வலசு - வேலணை கூறியது...
    //
    'தியாகங்கள்- செய்யும் தருணங்களில் மட்டுமே அழகாக இருக்கின்றன,சபதங்களைப் போல.'
    அருமை. அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்//

    மகிழ்ச்சி வலசு - வேலணை .விரைவிலேயே உங்களை எனது எழுத்தில் சந்திக்கிறேன். நன்றிகள் அன்பரே..

    பதிலளிநீக்கு
  40. Dear shanmugapriyan,
    i oftenly visit and enjoy reading you writings,but this is first time iam commenting,but please educate your self,designing a star hotel is a team work,and usually foreign firms only appointed for star hotel designing,even tho a local architects firm,dealt with the design,it should be a team work,and no individual architect can get identity from his or her firm,a principal architect only can get name from his works,any way your narration was damn good,this is great work,good show,please make copy right,or some flicker will use it in their film,it is happening everywhere in kollywood,tolliwood and bollywood,good show,cannot wait for next instalment...
    karthikeyan

    பதிலளிநீக்கு
  41. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
    //it should be a team work,and no individual architect can get identity from his or her firm,a principal architect only can get name from his works//
    Thank you Karthikeyan,for your valuable professional advice on this part of the story.
    Sometimes you can excuse us for the poetic licence we, authors assume,highlighting the character bypassing the technical details of the subject mainly to maintain the story interest.

    //this is great work,good show,please make copy right,or some flicker will use it in their film,it is happening everywhere in kollywood,tolliwood and bollywood,good show,cannot wait for next instalment...
    karthikeyan//

    Since I am in films,I know if somebody copy this kind of story material he sould have been having a genuine sense of aesthetic taste.If so his genuineness itself will save me from his flicking of the story material.
    I am also a senior Life member in the Film writers'Association.
    However I appreciate your concern and thank you once again for your visit and esteemed comment on the subject.

    பதிலளிநீக்கு
  42. சத்தியமா இப்படி ஒரு கதை(கவிதை, இலக்கியம்) எதிர்பார்க்கவே இல்லங்க..
    அப்படியே ஒரே மூச்சுல நான்கு பாகத்தையும் படிச்சுட்டேன்..
    கொஞ்சம் தாமதமா வந்திருந்தா மொத்தமாக படித்து இருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  43. சத்தியமா இப்படி ஒரு கதை(கவிதை, இலக்கியம்) எதிர்பார்க்கவே இல்லங்க..
    அப்படியே ஒரே மூச்சுல நான்கு பாகத்தையும் படிச்சுட்டேன்..
    கொஞ்சம் தாமதமா வந்திருந்தா மொத்தமாக படித்து இருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  44. கன்னிகா என்ன ஆனால்?

    பதிலளிநீக்கு
  45. கன்னிகா என்ன ஆனால்?

    பதிலளிநீக்கு