சனி, மே 09, 2009

கண்ணீர்த் துளிகளின் நடனம்...

ஒரு நடனம் கண்களில் நீரை வரவழைக்க முடியுமா?

ஒரு இசையைக் கேட்டு நீங்கள் தேம்பியதுண்டா?

ஈழ்த்துக் கொடுமையை இதற்கு மேல் உங்கள் நெஞ்சில் பதைபதைக்கத் தைக்க முடியுமா ?

நண்பர் உங்கள் நண்பனின் 'வானவில் எண்ணங்கள்'பதிவில் நான் கண்ட விஜய் டி.வி. நிகழ்ச்சியை நான் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
அதற்கான சுட்டிகள் கீழே....

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4

http://msams.blogspot.com/

இந்த நடனக் கலை நிகழ்ச்சியைப் படைத்தளித்த எனதருமை இளைஞர் பிரேம் கோபாலின் கலைக்கு நான் அடிமை.
விஜய் டி.வி.க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

19 கருத்துகள்:

 1. சரியான நேரத்தில் சரியான நடனம்

  பதிலளிநீக்கு
 2. உங்கள் ப்ளாகிலும் ப்ரேம்கோபாலின் படைப்பை போட்டதற்கு நன்றி
  மோகன்.சா

  பதிலளிநீக்கு
 3. vinoth gowtham சொன்னது…

  கண்களில் தண்ணீர் வந்தது..//

  கலைப் படைப்பின் உண்மையான பணியை அந்த நடனம் செய்திருகிறது,வினோத்.

  பதிலளிநீக்கு
 4. கிரி சொன்னது…

  சரியான நேரத்தில் சரியான நடனம்//

  ஈழத்துக் கொடுமைகள் முடிந்து இளைஞர் பிரேம் கோபால் மகிழ்ச்சிகரமான பல நிகழ்ச்சிகள் வழங்க வேண்டும் என வேண்டுவோம்,கிரி.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் நண்பன் சொன்னது…

  உங்கள் ப்ளாகிலும் ப்ரேம்கோபாலின் படைப்பை போட்டதற்கு நன்றி
  மோகன்.சா//
  ப்ரேம்கோபால் நெஞ்சில் ஆடியதை நாம் பதிவில்தானே போட்டோம்,மோஹன்.இதனைப் பார்க்கும் வாய்ப்பளித்த உங்களுக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்,மோஹன்.

  பதிலளிநீக்கு
 6. வெண்காட்டான் சொன்னது…

  mee. too. thanks for the post. part 2 is more emotional.//

  அதனை இன்றே பார்க்க முயல்கிறேன்,வெண்காட்டான்.தகவலுக்கு,நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 7. எனக்கு ஒரு சின்ன அவா, இதை மிகவும் பிரபலமான சன் டிவியிலும் , ஜெயா டிவியிலும், மற்றும் கலைஞர் டிவியில காமிக்கணும்

  பதிலளிநீக்கு
 8. அது ஒரு கனாக் காலம் சொன்னது…

  எனக்கு ஒரு சின்ன அவா, இதை மிகவும் பிரபலமான சன் டிவியிலும் , ஜெயா டிவியிலும், மற்றும் கலைஞர் டிவியில காமிக்கணும்//

  Do our Utopian dreams ever come true,SUNDAR?

  பதிலளிநீக்கு
 9. நான் முன்பே பார்த்தேன் சார்.. மிக அருமையாய் சொல்ல வந்ததை சொல்லி நம்மை எல்லாம் நெகிழ வைத்து கண்ணீர் விட வைத்துவிட்டார்.. நம்முடைய கையாலாகத தனம்.. வலிக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. அய்யா, நடன கலை மூலம் ஈழ இன்னல்களை கண்முன்னே காண்பித்த ப்ரேம் கோபாலுக்கு பாரட்டுக்களும் கோடி நன்றிகளும் உரித்தாகுக, அய்யா மிக சிறந்த ஊக்கம் அளித்து எங்களையும் பார்க்க வைத்தமைக்கு நன்றி,இது எல்லா குடும்ப பெண்மணிகள் மற்றும் கல்லூரி பெண்களையும் கூட மிகவும் பாதித்த மற்றும் சிந்திக்க செய்த ஒன்று,விஜய் டிவிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல. கார்திக்கேயன் அமீரகம்

  பதிலளிநீக்கு
 11. ஒரு நடனம் அதன் நடுவே அந்தப் பெண் அழுகும் போதே கண்ணீர் திவலைகள் முட்டிக்கொண்டது.நடன முடிவில் அவர்களின் வேண்டுதல்கள் மனதை மேலும் பாரமாக்கி விட்டது.பதிவுக்கு நன்றி ஷண்முகப்ரியன் சார்.

  பதிலளிநீக்கு
 12. Cable Sankar சொன்னது…

  நான் முன்பே பார்த்தேன் சார்.. மிக அருமையாய் சொல்ல வந்ததை சொல்லி நம்மை எல்லாம் நெகிழ வைத்து கண்ணீர் விட வைத்துவிட்டார்.. நம்முடைய கையாலாகத தனம்.. வலிக்கிறது.//

  "நம்முடைய கையாலாகத தனம்." சரியான வார்த்தை,ஷங்கர்.

  பதிலளிநீக்கு
 13. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது… //

  பதவியில் உள்ளவர்கள் மன்தில் என்னதான் உள்ளது என்பதை அறிய முடியாத சூழ்நிலை,கார்த்திகேயன்.இதற்கு மேல் என்ன கொடூரங்களைப் பார்த்தால் அவர்கள் செயல் படுவார்கள்?
  அதிகாரத்தில் உள்ளவர்கள்,மனித இனத்திலிருந்தே விலகி விட்டார்களா?

  பதிலளிநீக்கு
 14. ராஜ நடராஜன் சொன்னது…

  ஒரு நடனம் அதன் நடுவே அந்தப் பெண் அழுகும் போதே கண்ணீர் திவலைகள் முட்டிக்கொண்டது.நடன முடிவில் அவர்களின் வேண்டுதல்கள் மனதை மேலும் பாரமாக்கி விட்டது.பதிவுக்கு நன்றி ஷண்முகப்ரியன் சார்.//


  நம்முடைய மனமார்ந்த பரிவுணர்வு... எப்படி அல்லல் படும் அந்த ஜீவன்களுக்கு உதவப் போகிறதோ,நடராஜன்?

  பதிலளிநீக்கு
 15. வலசு - வேலணை சொன்னது…

  பதிவிற்கு மிக்க நன்றி.//

  ஒரு பதிவர் சொன்னதைப் போல வெறும் கதை,கட்டுரை,கவிதைக்கு மட்டும் தான் ஈழத் தமிழர்களின் அவலங்களை பயன்படுத்திக் கொள்ளும் எங்கள் கேவலங்களுக்கு எதற்கு நன்றி,வலசு.

  பதிலளிநீக்கு
 16. இரண்டு தொலைக்காட்சியிலும் ஓளிபரப்ப மாட்டார்கள். முற்றுகைக்குள் இந்தியா, முத்துமாலை திட்டம் போன்ற அத்தனை விசயங்களுக்குள் இவர்களின் முதலீடு என்ற முகவரியும் உள்ளது. உண்மை வரும் என்று சொல்லி உள்ளீர்கள்? ஒவ்வொரு நாளும் வரும் செய்தித்தாளில் அந்த மொத்த செய்திகளுக்கும் மணிமகுடமாக தண்டணையும் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு