VICKY CRISTINA BARCELONA
A Film Written and Directed by
WOODY ALLEN.
Cast: Javier Bardem,Scarlett Johansson,Panelope Crust,Kevin Dunn.
ஆன்மாவை, உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் தேடிச் செல்லும் மேற்கத்திய அலசல்தான் இந்தப் படம்.
துவக்கம்,இடைவேளை,முடிவு என்று வழக்கமாகச் சொல்லப் படும் கதை இல்லை இது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல்,திருமணம் போன்ற உறவுகளை ஆய்வதின் மூலம் வாழ்க்கையையே ஆய்வு செய்கிறார் இயக்குனர்.
பொருளால் நிறைவு பெற்ற பின்பும் மனித மனம் ஓய்வதில்லை.
படத்திலேயே சொல்லப் படுவதைப் போல மேற்கத்தியர் இப்போது அவதிப படுவது 'CHRONIC DISSATISFACTION' என்ற மன உளைச்சளினால்தான்.
விக்கி வரையறுக்கப் பட்ட வாழ்க்கை வாழ விரும்புபவள்.வெற்றிகரமான்,நிலையான் வருமானம் உள்ள ஒருவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் நிச்சயித்துக் கொண்டவள்.
கிறிஸ்டினா உண்மையான் ஆழமான காதல் என்றாலே வலிகளும் வேதனைகளும் இருக்கும் என்று எதிர்பார்த்தே ஒரு உறவினைத் தேடிக் கொண்டிருப்பவள்.
அமெரிக்கர்களான இருவரும் கல்லூரித் தோழிகள்.
ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் வரும் கோட்டை விடுமுறையைக் கழிக்க பார்சிலோனா செல்கிறார்கள்.
ஸ்பெயினில் இருக்கும் அந்த நகரம் நியூயார்க நகரத்தின் இயந்திரத்தனமான பண்பாடுகளிலிருந்து ஒரு மாறுதலாக இருக்கும் என்று பர்சிலோனவின் ஸ்பானிஷ் பாரம்பரியத்தைத் தேடிச் செல்லும் அந்த இளம் பெண்கள் அங்கே ஒரு ஸ்பானிஷ் ஓவியனைச் சந்திக்கிறார்கள்.
ஓவியன் உணர்வு பூர்வமானவன். ஏற்கனவே தனது இளம் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றிருக்கிறான்.அவனைக் கண்டதுமே கிறிஸ்டினாவுக்குப் பிடித்து விடுகிறது.
இந்த மூவருக்குள்ளும் உடலாலும்,உள்ளத்தாலும் நடக்கும் போராட்டங்கள்தான் படமே.
எல்லாவித மனப் பிரச்சினைகளுக்கும் காமத்தைத் துணைக்கு இழுத்துத் தோற்றுப் போகும் மேற்கத்தியப் பண்பாட்டைக் கவர்ச்சியாகவும் நிதானமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஓவியனாக வரும் நாயகன் நமது ஊர் முகவெட்டில் அழகாக இருக்கிறார்.
கிரிச்டினவாக வரும் ஸ்கார்லெட் ஜான்சன் பனிக்கட்டிகளுக்கிடையில் பூத்த ரோஜாப் பூவைப் போலக் குளுகுளுவென்று இருக்கும் அழ்கியோ அழகி.
அதற்கேற்ற உடைகள் வேறு ,பருத்திப் பூக்கள் அந்த அழகிக்காகவே செடியில் வெடித்திருக்கின்றன!
ஆணுடன் பெண்,பெண்ணுடன் பெண்,ஆண்-பெண்-பெண்ணுடன் என்று வித விதமாக உடலுறவு கொண்டாலும் மனம் கேட்கும் கேள்விகளுக்கு விடை இல்லை என்பதனை முதிர்ச்சியான ரசனையுடன் சொல்லி இருக்கிறார் வுடி ஆலன்.
வறுமை,வன்முறை,ஊழல், யுத்தம் என்று வாழும் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் நமக்குத் தெரியும்.ஆனால்,மெல்லிய இசை,வண்ண ஓவியம்,அழகு ,கவிதை,மதர்த்த மார்புகள்,மதுக் கோப்பைகள்,பட்டுப் போல வழுக்கி ஓடும் பெண்களின் நிர்வாணங்கள் என்று வாழும் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
இந்தப் படத்தைப் பாருங்கள்.
இயக்குனருக்கு வயது எழுப்பத்து நான்கு!
அவரது நகைச்சுவையான மேற்கோள்களில் ஒன்று.
'நான் கடத்தப் பட்ட போது உடனடியாக எனது பெற்றோர்கள் நடவடிக்கை எடுத்தார்கள்,எனது அறையை வாடகைக்கு விட்டு விட்டார்கள்!-வுடி ஆலன்.
திங்கள், மே 25, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சார்.. கலக்கல். கடைசி பன்ச் சூப்பர்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
வண்ணத்துபூச்சியார் சொன்னது…
பதிலளிநீக்குசார்.. கலக்கல். கடைசி பன்ச் சூப்பர்.
வாழ்த்துகள்.//
நீங்கள் நான் பதிந்த இரண்டு படங்களையுமே பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்,சூர்யா.
மனம் கேட்கும் கேள்விகளுக்கு விடை இல்லை. சரிதான்
பதிலளிநீக்கு:))))))
நல்ல அறிமுகம் ... இந்தியாவில் தியேட்டரில் தான் வராது!
பதிலளிநீக்கு--
விஜயஷங்கர்
பெங்களூரு
விமர்சனம் சூப்பர் தலைவா!
பதிலளிநீக்குபடத்தின் லிங்ஸ் கீழே..
RAPIDSHARE LINKS
http://rapidshare.com/files/178697605/Vicky.Cristina.Barcelona.DVDRip.XviD-BeStDivX-RW.part1.rar
http://rapidshare.com/files/178764265/Vicky.Cristina.Barcelona.DVDRip.XviD-BeStDivX-RW.part2.rar
http://rapidshare.com/files/178762402/Vicky.Cristina.Barcelona.DVDRip.XviD-BeStDivX-RW.part3.rar
http://rapidshare.com/files/178697772/Vicky.Cristina.Barcelona.DVDRip.XviD-BeStDivX-RW.part4.rar
MEGAUPLOAD LINKS
http://www.megaupload.com/?d=HOG4BDTK
http://www.megaupload.com/?d=2RTLXKI5
http://www.megaupload.com/?d=RKGKL6ZU
http://www.megaupload.com/?d=HOG4BDTK
TORRENTS Link:
http://www.mininova.org/tor/2139541
மங்களூர் சிவா சொன்னது…
பதிலளிநீக்குமனம் கேட்கும் கேள்விகளுக்கு விடை இல்லை. சரிதான்
:))))))//
நன்றி சிவா.
Vijay சொன்னது…
பதிலளிநீக்குநல்ல அறிமுகம் ... இந்தியாவில் தியேட்டரில் தான் வராது!
--
விஜயஷங்கர்
பெங்களூரு//
நண்பர் கலையரசன் கொடுத்திருக்கும் லிங்க்ஸ் மூலம் பாருங்களேன்,விஜய் சார்.
கலையரசன் சொன்னது…
பதிலளிநீக்குவிமர்சனம் சூப்பர் தலைவா!//
பாராட்டுக்கும்,லிங்க்ஸ்க்கும் நன்றி கலையரசன்.
சார் இந்த டிவிடியும் எனக்கு வேண்டும்.. எப்ப வந்து வாங்கிக்கட்டும்.?
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம்
பதிலளிநீக்கு\\கிரிச்டினவாக வரும் ஸ்கார்லெட் ஜான்சன் பனிக்கட்டிகளுக்கிடையில் பூத்த ரோஜாப் பூவைப் போலக் குளுகுளுவென்று இருக்கும் அழ்கியோ அழகி.
அதற்கேற்ற உடைகள் வேறு ,பருத்திப் பூக்கள் அந்த அழகிக்காகவே செடியில் வெடித்திருக்கின்றன\\
அருமை
பார்க்க வேண்டும் படத்தை..
பதிலளிநீக்குஅறிமுகத்திற்கு நன்றி சார்..
//Panelope Cruz//
பதிலளிநீக்குஇவர்க்கு அவசரம் கட்டாயம் பார்த்து விடுவேன்..:))
Cable Sankar சொன்னது…
பதிலளிநீக்குசார் இந்த டிவிடியும் எனக்கு வேண்டும்.. எப்ப வந்து வாங்கிக்கட்டும்.?//
எப்போது வேண்டுமானாலும் வாருங்கள்,ஷங்கர்.ஒரு ஃபோன் பண்ணி விடுங்கள்.
முரளிகண்ணன் சொன்னது…
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம்
\\கிரிச்டினவாக வரும் ஸ்கார்லெட் ஜான்சன் பனிக்கட்டிகளுக்கிடையில் பூத்த ரோஜாப் பூவைப் போலக் குளுகுளுவென்று இருக்கும் அழ்கியோ அழகி.
அதற்கேற்ற உடைகள் வேறு ,பருத்திப் பூக்கள் அந்த அழகிக்காகவே செடியில் வெடித்திருக்கின்றன\\
அருமை//
நன்றி முரளி கண்ணன்.நீங்கள் ’க்’போடுவதில்லையா உங்கள் பெயரில்?
vinoth gowtham சொன்னது…
பதிலளிநீக்குபார்க்க வேண்டும் படத்தை..
அறிமுகத்திற்கு நன்றி சார்..//
கண்டிப்பாகப் பாருங்கள், வினோத்.ரசிப்பீர்கள்.
vinoth gowtham சொன்னது…
பதிலளிநீக்கு//Panelope Cruz//
இவர்க்கு அவசரம் கட்டாயம் பார்த்து விடுவேன்..:))//
ஓவியர் வேடத்துக்கு ஏற்ற உணர்வு பூர்வமான முகம்.நமது ஊர்ச் சாயல்.அழகன்.
நான் அவரது படத்தை இப்ப்போதுதான் பார்க்கிறேன்,வினோத்.
dear sir please check the comment box,there is some bug,i could nt paste my comments,
பதிலளிநீக்குjavier bardem is my favourite actor,i will watch this film,cruz,and scarlet are damn good for any cheracters,
please give critics and reviews for films that you admired,
if time permits give review for forth coming film nadodigal,once it released,samuththirakani also deserved for your encouragement.
karthikeyan
uae
அய்யா நல்ல விமர்சனம்,நாயகர் ஜேவியர் பார்டெம் நல்ல அற்புதமான நடிகர்,(no country for old man)க்ரூசும் தான்,படத்திற்கு நல்ல விமர்சனம் தந்தீர்கள்,நான் டவுன்லோடு போட்டிருக்கிறேன்,பார்த்துவிட்டு சொல்கிறேன்,இதுபோன்ற உங்கள் மனம் கவர்ந்த படங்களை பற்றி எழுதினால் நாங்கள் பார்த்து படித்து மகிழ்வோம்,வரப்போகும் நாடோடிகள் படம் பார்த்து ஒரு விமர்சனம் செய்தீர்கள் என்றால்,சமுத்திரக்கனிக்கும் எம் .சசிக்குமாருக்கும் மிகவும் ஊக்கமாக இருக்கும்,மனிதர் திறம்பட செய்வார் என்று நினைக்கிறேன்,
பதிலளிநீக்குகார்த்திகேயன்
அமீரகம்
//ஆணுடன் பெண்,பெண்ணுடன் பெண்,ஆண்-பெண்-பெண்ணுடன் என்று வித விதமாக உடலுறவு கொண்டாலும் மனம் கேட்கும் கேள்விகளுக்கு விடை இல்லை என்பதனை முதிர்ச்சியான ரசனையுடன் சொல்லி இருக்கிறார் வுடி ஆலன்.//
பதிலளிநீக்குநல்ல நடையில் விளக்கமான விமர்சனம்,... உண்மையில் விடை இல்லைதான் சார்...
''ஓவியர் வேடத்துக்கு ஏற்ற உணர்வு பூர்வமான முகம்.நமது ஊர்ச் சாயல்.அழகன்.
பதிலளிநீக்குநான் அவரது படத்தை இப்ப்போதுதான் பார்க்கிறேன்,வினோத்.''
அய்யா பார்க்காததைக்கூட பார்த்ததாகச் சொல்லும் விளம்பர உலகில் நீங்கள் வேறுபடுகிறீர்கள் .....
நன்றி
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…
பதிலளிநீக்குdear sir please check the comment box,there is some bug,i could nt paste my comments,
javier bardem is my favourite actor,i will watch this film,cruz,and scarlet are damn good for any cheracters,
please give critics and reviews for films that you admired,
if time permits give review for forth coming film nadodigal,once it released,samuththirakani also deserved for your encouragement.
karthikeyan
uae//
I WILL CHECK THE COMMENT BOX,kARTHIKEYAN.
Definitely I am encouraging new creators and talented ones even if I do not know them personally.I feel it is my duty as a person interested in Arts.Thank you,Karthikeyan.
ஆ.ஞானசேகரன் சொன்னது…
பதிலளிநீக்கு//ஆணுடன் பெண்,பெண்ணுடன் பெண்,ஆண்-பெண்-பெண்ணுடன் என்று வித விதமாக உடலுறவு கொண்டாலும் மனம் கேட்கும் கேள்விகளுக்கு விடை இல்லை என்பதனை முதிர்ச்சியான ரசனையுடன் சொல்லி இருக்கிறார் வுடி ஆலன்.//
நல்ல நடையில் விளக்கமான விமர்சனம்,... உண்மையில் விடை இல்லைதான் சார்...//
படத்தைப் பார்க்க முயலுங்கள்,ஞானசேகரன்.அர்த்தமுள்ள பொழுது போக்காக இருக்கும்.
படத்தை பார்க்க முயல்வோம்..
பதிலளிநீக்குபடத்தை பார்க்க முயல்வோம்..
பதிலளிநீக்குPlot here.. http://www.imdb.com/title/tt0497465/synopsis
பதிலளிநீக்குஉழவன் " " Uzhavan " சொன்னது…
பதிலளிநீக்குபடத்தை பார்க்க முயல்வோம்..
உங்களின் அதிர்ஷ்டம் இப்படத்தைக் காணச் செய்ய்ட்டும்,உழவன்.
பெயரில்லா சொன்னது…
பதிலளிநீக்குPlot here.. http://www.imdb.com/title/tt0497465/synopsis
நன்றி சார் அல்லது மேடம்.
அய்யா நேற்று இந்த படம் பார்த்தேன்,வில்லனாக மட்டும் பார்த்திருந்த ஜேவியர் பார்டம் கதாநாயகனாகவும் ஒரு கலக்கு கலக்க,அவருக்கு போட்டியாக அனைவருமே நன்கு நடித்துள்ளனர்.க்ரூஸ் 20 நிமிடமே வந்தாலும் நச்சென்ற பாத்திரம்,என்னமாய் ஸ்பானிஷ் பேசுகிறார்,ஆஸ்கார் இந்த படத்திற்கு ,(இவருக்கு )கிடைத்ததில் ஆச்சர்யம் இல்லை.
பதிலளிநீக்குநாயகன் அப்பாவும் நல்ல தேர்வு.
வரைமுறையில்லாத உடலுறவுகள்,சச்சரவுகள்.எதிலும் திருப்தியின்மை என நகர்கிறது.
வித்தியாசமான முறையில் டாகுமெண்டரி போன்ற விவரிப்பும் நன்றாக இருந்தது.இவர்கள் எல்லாம் ரொம்ப புண்ணியம் செய்துள்ளதால் தான் ஐரோப்பாவில் பிறந்து இப்படிஎல்லாம் அனுபவிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
அய்யா தொடர்ந்து பார்த்த படங்களை பற்றி எழுதுங்கள்.NOT ONE LESS இன்று பார்கிறேன்
கார்த்திகேயன்
அமீரகம்
சுட்டி கொடுத்து உதவிய நண்பர் கலையரசனுக்கு கோடானு கோடி நன்றிகள்
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…
பதிலளிநீக்குஅய்யா நேற்று இந்த படம் பார்த்தேன்,வில்லனாக மட்டும் பார்த்திருந்த ஜேவியர் பார்டம் கதாநாயகனாகவும் ஒரு கலக்கு கலக்க,அவருக்கு போட்டியாக அனைவருமே நன்கு நடித்துள்ளனர்.க்ரூஸ் 20 நிமிடமே வந்தாலும் நச்சென்ற பாத்திரம்,என்னமாய் ஸ்பானிஷ் பேசுகிறார்,ஆஸ்கார் இந்த படத்திற்கு ,(இவருக்கு )கிடைத்ததில் ஆச்சர்யம் இல்லை.//
இதில் நடித்தவர்களில் ஆண் யார்,பெண் யார் என்ற விபரம் கூட எனக்குத் தெரியாது.கதாபாத்திரங்களும்,இயக்குநரும் பெயா மட்டுமே எனக்கு அறிமுகமானதிலேயே நான் இவ்வள்வு ரசித்தேன் என்றால் உங்களுக்கு எவ்வளவு அள்ளித் தந்திருக்கும் படம்.தகவல்களுக்கு நன்றி,கார்த்திகேயன்.//
NOT ONE LESS இன்று பார்கிறேன்
கார்த்திகேயன்//
முதல் படம் அபரிமித்ததின் பிரச்சினை.இந்தப் படம் பற்றாமையின் கவிதை.பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.
சார் உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து உள்ளேன் நேரம் கிடைக்கும் பட்சத்தில் கலந்து கொள்ளவும்..
பதிலளிநீக்குvinoth gowtham சொன்னது…
பதிலளிநீக்குசார் உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து உள்ளேன் நேரம் கிடைக்கும் பட்சத்தில் கலந்து கொள்ளவும்..//
அழைப்புக்கு நன்றி,வினோத்.நேரம் முதிரும் போது கண்டிப்பாக உங்கள் தொடர் பதிவினை எழுதுகிறேன்.
You Are Posting Really Great Articles... Keep It Up...
பதிலளிநீக்குWe recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள் அதை நீங்கள் எப்படி இணைப்பது என்று www.tamilers4bloggers.blogspot.com சொல்லி இருக்கின்றோம், உங்கள் அன்பிற்க்கு நன்றி
http://www.imdb.com/title/tt0320219/
பதிலளிநீக்குthis is your film oruvar valzhum aalayam on internet movie database,some guys already added,please fill the details sir
thanks
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…
பதிலளிநீக்குhttp://www.imdb.com/title/tt0320219/
this is your film oruvar valzhum aalayam on internet movie database,some guys already added,please fill the details sir
thanks//
Thank you my dear friend.I will look into it and do as you wish.
அய்யா உங்கள் ஈமெயில் ஐடி கொடுத்தால் நலம்,
பதிலளிநீக்குmine is karthoo2k@gmail.com
இசைஞானி பற்றி நன்றாக சொன்னீர்கள்,நீங்கள் எழுதிய இயக்கிய படங்கள் எல்லாமே தனித்துவம் வாய்ந்த காலத்தால் அழியா பாடல்களைக் கொண்டுள்ளது,
உயிரே உயிரே உருகாதே
மலையோரம் மயிலே
பல்லவியே சரணம்
தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு?
யார் பாடும் பாடல என்றாலும்...
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
ராஜா சார் உங்களுக்கு பிரியமானவர் என்பதில் ஐயமே இல்லை.(பிரம்மா,சின்னத்தம்பி,ஒருவர் வாழும் ஆலயம்,பாட்டுக்கு நான் அடிமை கூட )எல்லாம் இசையுடன் எதோ ஒரு வழியில் சம்பந்தப்பட்டுள்ளது.
அய்யா உங்கள் ஒருவர் வாழும் ஆலயம் படத்திற்கு இனிமையான பாடல்களை எழுதிய புண்ணிய கோடியான் எங்கே இருக்கிறார்?
எனக்கு மேற்சொன்ன எல்லா படங்களும் சிறு வயது நினைவலைகளை தூண்டக்கூடியவை.சொல்லப்போனால் நான் you tubil தேடி அடிக்கடி பார்ப்பவை.
அய்யா அடுத்த இரண்டு படங்களையும் சொன்னால் நினைவு படுத்திக்கொள்ள வசதியாய் இருக்கும்...
படப்பெயர் அறிமுகத்துக்கு நன்றி.டி.வி.டி கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
பதிலளிநீக்குராஜ நடராஜன் சொன்னது…
பதிலளிநீக்குபடப்பெயர் அறிமுகத்துக்கு நன்றி.டி.வி.டி கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.//
நான் டி.வி.டி யில்தான் பார்த்தேன்,நடராஜன்.