ஞாயிறு, மே 24, 2009

ஒருவர் குறையாமல் (திரைப்பட ரசனை)

இன்று 'NOT ONE LESS' என்ற ஒரு சீனத் திரைப் படம் பார்த்தேன்.
ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம் மிக மிக நிறைவான ஒரு படம் பார்த்த அதிர்வு.
ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் இது போலத் திரைப் படங்களைத் தமிழில் படைக்கும் வாய்ப்புக்கான அறிகுறிகள் ஏதும் அண்மைக்காலத்தில் இல்லை என்பது.
சரி ,மகிழ்ச்சியான விஷயத்துக்கு வருவோம் .
வறண்ட மலைகள் சூழ்ந்த,காமிராவில் பார்ப்பதற்கு மட்டுமே அழ்கான ஒரு குக்கிராமம்.அங்கே ஒரு துவக்கப் பள்ளி.ஒன்று முதல் நான்கோ ,ஐந்தோ வகுப்புப் படிக்கும் வறிய குழந்தைகள்.(வறிய குழந்தைகளைப் பற்றி நான் விளக்கம் சொல்லும் அளவுக்கு இது பணக்கார நாடில்லை).

எல்லோருக்கும் ஒரே அறை.
அதனால் ஒரே பாடம்.
பக்கத்திலேயே ஆசிரியர் தங்கிக் கொள்ளும் அறை.இதுதான் ஒட்டு மொத்த பள்ளிக் கட்டிடம்.
இங்கே பல வருடங்களாக வேலை பார்க்கும் ஆசிரியர் தனது தாய் உடல நலம் சரியில்லாத காரணத்தினால் ஒரு மாதம் விடுமுறையில் போக வேண்டியதாகிறது.
எந்த வசதிகளும் அற்ற அந்தக் குக்கிராமத்துப் பள்ளிக்கு வேறு ஆசிரியர் யாரும் வர மாட்டேன் என்று சொல்லி விட்டதால், அந்த ஊர்த தலைவர் இன்னொரு தொலை தூரத்துக் கிராமத்துப் பண்ணையில் வேலை பார்க்கும் ஒரு பதின்ம வயதுச் சிறுமியை மாற்று ஆசிரியராக நியமித்துக் கூட்டி வருகிறார்.

பண்ணையில் கிடைப்பதை விடக் கூடுதல் சம்பளம்-ஐம்பது ரூபாய்!

அதனால் அந்தச் சிறுமி ஆசிரியர் வேலைக்கு வருகிறாள். அவள்தான் கதை நாயகி.
அவளும் அதிகம் படிக்க வில்லை என்றாலும் இந்தக் கிராமத்துக் குழந்தைகளை மேய்க்கும் அளவு படித்தவள்.
ஏற்கனவே வறுமையின் காரணமாக பள்ளியை விட்டு நிறையக் குழந்தைகள் படிப்பை விட வேலை முக்கியம் என்று சொல்லிச சென்று விடுவதால் இந்த ஒரு மாதத்தில் ,இருக்கும் நாற்பது குழந்தைகளையும் ஒன்று கூடக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் அந்தச் சிறுமி ஆசிரியையின் தலையாயப் பணி!!
அப்போதுதான் அவளுக்குப் பேசிய சம்பளமான ஐம்பது ரூபாய் கிடைக்கும் !
அதுதான் படத்தின் தலைப்பே -'ஒருவர் குறையாமல்' !

அதில் ஒரு மாணவன் குடும்பத்தின் கடன் சுமைக்காக கிட்டத்தட்ட தொலைவில் இருக்கும் நகரத்துக்கு வேலை பார்க்க ஓடிவிடுகிறான்.
அவனைத் தேடி கண்டு பிடித்து வந்தால்தான் இந்தப் பதின்மூன்று வயது ஏழை டீச்சருக்குச் சம்பளம்!!
படத்தின் கருவைச் சொல்லி விட்டேன்
மீதி அற்புதங்களை நீங்களே படத்தைப் பார்த்து விட்டு எனக்கு நெகிழ்ந்த படி சொல்லுவீர்கள்.

17 கருத்துகள்:

  1. download link இருந்தா கொடுக்கவும் :-)

    பார்க்க ஆவலாக உள்ளது ..

    பதிலளிநீக்கு
  2. //ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் இது போலத் திரைப் படங்களைத் தமிழில் படைக்கும் வாய்ப்புக்கான அறிகுறிகள் ஏதும் அண்மைக்காலத்தில் இல்லை என்பது.//

    எங்கள் வருத்தத்தையும் நீங்களே சொல்லிவிட்டீர்காள் சார்... முடிந்தால் படம் பார்க்கின்றேன்..

    இப்படிப்பட்ட நல்லப் படங்கள் தமிழில் வராமைக்கு ஒரு சில காரணம் சொல்லுங்கள் சார்... எல்லோரையும் போல ரசிகனை குறைச் சொல்லாதீர்கள் சார்..

    பதிலளிநீக்கு
  3. கடைக்குட்டி சொன்னது…

    download link இருந்தா கொடுக்கவும் :-)

    பார்க்க ஆவலாக உள்ளது ..//

    நான் டி.வி.டி யில்தான் பார்த்தேன்.பாருங்கள்.அற்புதமான படம்.

    பதிலளிநீக்கு
  4. ஆ.ஞானசேகரன் சொன்னது…


    இப்படிப்பட்ட நல்லப் படங்கள் தமிழில் வராமைக்கு ஒரு சில காரணம் சொல்லுங்கள் சார்... எல்லோரையும் போல ரசிகனை குறைச் சொல்லாதீர்கள் சார்..//

    படம் பார்ப்பவர்கள்,படம் எடுப்பவர்கள் இரண்டு தரப்பிலுமே மாற்றங்கள் வந்தால் ஒழிய இது நேராது,
    ஞானசேகரன்.
    புதுப் படங்களைப் பற்றி எழுதினால் கிடைக்கும் வரவேற்பு,புத்தரைப் பற்றி எழுதினால் நம் நண்பர்களிடமே கிடைப்பதில்லையே!

    பதிலளிநீக்கு
  5. Cable Sankar சொன்னது…
    sir dvd available???//

    I saw it only in dvd,Shankar.If you dont get it I will give.

    பதிலளிநீக்கு
  6. டிவிடியை இன்னொரு காப்பி போட்டு வைங்க ஸார்.. வர்றேன்..

    பதிலளிநீக்கு
  7. //காமிராவில் பார்ப்பதற்கு மட்டுமே அழ்கான ஒரு குக்கிராமம்.//

    சார் அருமையான விளக்கம்.. நீங்கள் கூறுவது போல ஒரு சில இடங்கள் படங்களில் பார்க்க மட்டுமே அழகாக இருக்கும்..நேரில் மிக கொடுமையான அனுபவமாகவே இருக்கும். நான் இதை பல முறை நினைத்ததுண்டு.

    படங்கள் பல இதை போல பார்க்க நினைத்ததுண்டு ஆனால் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை

    பதிலளிநீக்கு
  8. ஏதோ நம்மலால முடிஞ்சது..
    படத்தோட லிங்குகள் கீழே,

    MEGAUPLOAD LINKS
    http://www.megaupload.com/?d=H4AGY0FD
    http://www.megaupload.com/?d=HC35YUUT
    http://www.megaupload.com/?d=KU45HZZO
    http://www.megaupload.com/?d=6X7Y6LHS
    http://www.megaupload.com/?d=9CPTEI3J

    RAPIDSHARE LINKS
    http://rapidshare.com/files/70890341/Not_One_Less.part1.rar
    http://rapidshare.com/files/70950490/Not_One_Less.part2.rar
    http://rapidshare.com/files/70964219/Not_One_Less.part3.rar
    http://rapidshare.com/files/70971911/Not_One_Less.part4.rar
    http://rapidshare.com/files/70981174/Not_One_Less.part5.rar
    http://rapidshare.com/files/70992414/Not_One_Less.part6.rar
    http://rapidshare.com/files/71001859/Not_One_Less.part7.rar
    Pass: www.sharebus.com

    TORRENTS Link:
    http://www.mininova.org/tor/2187569

    பதிலளிநீக்கு
  9. உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

    டிவிடியை இன்னொரு காப்பி போட்டு வைங்க ஸார்.. வர்றேன்..//

    கண்டிப்பாக,சரவணன்.உங்களுக்கில்லாத படமா?
    You are welcome.

    பதிலளிநீக்கு
  10. கிரி சொன்னது…

    //காமிராவில் பார்ப்பதற்கு மட்டுமே அழ்கான ஒரு குக்கிராமம்.//

    சார் அருமையான விளக்கம்.. நீங்கள் கூறுவது போல ஒரு சில இடங்கள் படங்களில் பார்க்க மட்டுமே அழகாக இருக்கும்..நேரில் மிக கொடுமையான அனுபவமாகவே இருக்கும். நான் இதை பல முறை நினைத்ததுண்டு.

    படங்கள் பல இதை போல பார்க்க நினைத்ததுண்டு ஆனால் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை//

    தட்டுங்கள்,திறக்கப் படும்.கேளுங்கள் கொடுக்கப் படும்,கிரி.

    பதிலளிநீக்கு
  11. கலையரசன் சொன்னது…

    ஏதோ நம்மலால முடிஞ்சது..
    படத்தோட லிங்குகள் கீழே,//

    நன்றி கலையரசன்.நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. படத்தை பார்க்க தூண்டும் வகையில் சொல்லியிருக்கீங்க

    பதிலளிநீக்கு
  13. அத்திரி சொன்னது…
    படத்தை பார்க்க தூண்டும் வகையில் சொல்லியிருக்கீங்க//

    படத்தைப் பாருங்கள்,அத்திரி.நன்கு ரசிப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  14. //ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் இது போலத் திரைப் படங்களைத் தமிழில் படைக்கும் வாய்ப்புக்கான அறிகுறிகள் ஏதும் அண்மைக்காலத்தில் இல்லை என்பது.//

    நீங்கள் திரைப்படத்துறை சம்பந்தப்பட்டவர் என்பதால் ஒரு கேள்வி.திரைப்படத் துறையினர் எதனை அளிக்கிறார்களோ அதனையே சமூகம் உள் வாங்கிக் கொள்கிறது.ஆனால் வணிக ரீதியான படங்களே வெற்றி பெறுவதற்கும் பரிட்சார்த்தமாய் முயலும் படங்கள் தோல்வியடைவதற்கும் காரணம் என்ன?உதாரணத்திற்கு அன்பே சிவம்.

    பதிலளிநீக்கு
  15. நீங்கள் திரைப்படத்துறை சம்பந்தப்பட்டவர் என்பதால் ஒரு கேள்வி.திரைப்படத் துறையினர் எதனை அளிக்கிறார்களோ அதனையே சமூகம் உள் வாங்கிக் கொள்கிறது.ஆனால் வணிக ரீதியான படங்களே வெற்றி பெறுவதற்கும் பரிட்சார்த்தமாய் முயலும் படங்கள் தோல்வியடைவதற்கும் காரணம் என்ன?உதாரணத்திற்கு அன்பே சிவம்.//

    நீங்கள் சொல்ல வரும் படம் மக்களிடம் போய்ச் சேரவில்லை என்று பொருள்.
    ”வணிகப் படம்’’ என்று முத்திரை குத்தப் படும் படங்கள் மட்டும் எல்லாமே ஓடி விடுகின்றனவா என்ன?
    ரசிகர்களின் மேற்புறங்கள்தான் பல கோடி.ஆனால் உட்புறம் ஒன்றேதான்.அதனை வருடிக் கொடுக்கும் எந்தப் படமும் வெல்லும்.
    எத்தனை மொழியே தெரியாத படங்கள் பார்த்து நாம் நெகிழ்வதில்லையா?
    Example:'NOT ONE LESS' REFERRED ABOVE

    பதிலளிநீக்கு