புதன், அக்டோபர் 07, 2009

காதல் மலர்ந்த கணங்கள் 3

3.
அமிர்தவர்ஷிணி.
அமிர்தத்தைப் பொழிபவள் என்ற அர்த்ததைத் தரும் அமிர்தவர்ஷிணி என்ற அவளது பெயரை சத்தியமாக அவளது விழிகளைப் பார்த்த பின்னரே அவளுக்கு யாரோ வைத்திருக்கிறார்கள்.
இப்போது உணர்ந்ததினால் சொல்கிறேன்.
பெண் அங்கங்களின் ராணி,மார்புகள் அல்ல,அவளது விழிகளே!

'பொண்ணு யாரு,சேஷாத்திரி?உங்க சொந்தக் காரப் பொண்ணா?' என்று அமிர்தவர்ஷிணியைப் பார்த்த புன்முறுவலுடனேயே அப்பா கேட்டார்.

'இல்லை.ஆனா சொந்தக்காரப் பொண்ணுகளை விட நெருங்குன சொந்தம் இவோ!' என்றார் சேஷாத்திரி,தானும் பரிவுடன் அமிர்தவர்ஷிணியைப் பார்த்தபடியே.
'இவளை உங்க கிட்டே அறிமுகப் படுத்தறதுக்காகத்தான் கோவிலுக்கு அழைச்சுண்டு வந்தேன்' என்றார் சேஷாத்திரி.
'இந்தப் பொண்ணோட சர்க்கரைப் பொங்கலை விட இவங்களுக்கு இனி வேறென்ன அறிமுகம் வேணும்?'என்றார் அப்பா தனது வழக்கமான மென்மையான சிரிப்புடன்.
'உட்காரும்மா' என்றார் அப்பா
அமிர்தவர்ஷிணியைப் பார்த்து.
அவள் மெல்லெனக் கோவில் தளத்தில் சம்மணமிட்டு அமர்ந்தது, பளிங்கு நீரில் மலர்ந்து விகசித்த தாமரைகளுக்குப் பாடம் எடுத்ததைப் போல இருந்தது.
முகத்தில் தம்பூர் நாதத்தைப் போல ரிம்மென்று எப்போதும் ஒரு புன்னகை அவளுக்கு.
அவளைப் பற்றி சேஷாத்திரி சொன்ன விஷயங்கள் அந்தி வேளையில்,நான் கேட்ட கோவில் பின்னணியிலேயே நீங்களும் கேட்டிருந்திருக்க வேண்டும்.அப்போதுதான் அமிர்தவர்ஷிணியின் அழகை நீங்கள் 3டி விஷனாக உணர முடியும்.

அப்பா,அம்மாவை ஐந்து வயதிலேயே ரிஷிகேஷில் கங்கை ஆற்றின் நீரோட்டத்தில் பறிகொடுத்தவள்,அமிர்தவர்ஷிணி. புனித நீராடச் சென்ற அவளது தாய்,தந்தையைக் கங்கை நதி அவளுக்குத் திருப்பித் தரவே இல்லை.அனாதையான அமிர்தவர்ஷிணியை அவளது அப்பாவின் நண்பர்களே பொறுப்பேற்றுக் கொண்டு இதுவரை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள்.நன்கு,விசாரித்துத் தெரிந்தபின்னர் ஒவ்வொரு குடும்பமாக அனுப்பப் பட்டு,அடைக்கலம் தரப்பட்டு வளர்ந்தவள் அமிர்தவர்ஷிணி.இந்தியா முழுதும் வெவ்வேறு பாரம்பரியக் குடும்பங்களில் வளர்ந்தவள்,அவள்.அவள் வளர்வதற்காகவே ஒரு செம்மையான நெட்வொர்க் உருவாகி இருந்தது, இப்போதும் யார்,யார் வீட்டுக்கு அவள் பணி தேவையோ அதை முன்கூட்டியே சொல்லி அவளை வரச் சொல்லி முன்பதிவு செய்து விடுகிறார்கள்அந்தந்த வீட்டுக்காரர்கள்.மதமோ,கலாசாரமோ தடையில்லை,அவளுக்கு.செம்மையான,உண்மையான மனம் இருந்தால் போதும் அந்த வீடுகளுக்குப் பணி புரியச் சென்று விடுவாள்,அமிர்தவர்ஷிணி.

முதியவர்கள்,மன நலம் குன்றிய இளம் பெண்கள்,குழந்தைகள்,மரணத் தறுவாயில் இருக்கும் நோயாளிகள் அனைவருக்கும், இறக்கைகள் இல்லாத இன்றைய நிஜ தேவதை அவள்.

உங்களைப் பூவாக மாற்றும் அவளது புன்முறுவல்,ஆத்மா வரைக்கும் ஊடுருவும் அவளது சமையல்,உடலைத் தாண்டி உள்ளே தொடும் உண்மையான பெண்மையின் ஸ்பரிசங்கள், சொல்லப் போனால் கமர்ஷியல் ஃப்ளைட்டுகளுக்காகக் காட்டப் படும் இன்டர்நேஷனல் விளம்பரங்களில் வரும் விமானப் பணிப் பெண்களின் வேத காலத்துப் பெண் வடிவம்தான் அமிர்தவர்ஷிணி.
அம்பாளுக்கு அவள் அப்பா, தனது வாழ்நாள் முழுதும் மனப் பூர்வமாகச் செய்த அபிஷேகங்களின் பலன்தான் இப்படி ஒரு மகள் என்று இப்போது நினைக்கிறேன்.

அந்த மாலை வேளையில் கோவில் தரையில் வைக்கப் பட்டிருக்கும் ஒரு வெள்ளித் தீர்த்தக் குடம் போல விளங்கினாள்,அவள்.
நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒரு சூஃபி முஸ்லீம் பெரியவருக்குப் பணிவிடைகள் புரிவதற்காக நாளை ஆஜ்மீர் செல்கிறாள் அமிர்தவர்ஷிணி,என்று சொல்லி முடித்தார் சேஷாத்திரி.

அப்பா அவளையே ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தார்.ஒரு இளம் பெண்ணை அவ்வளவு மரியாதையோடும்,கனிவோடும் அப்பா பார்த்து நான் பார்த்ததே இல்லை.
என் இருபத்து நான்கு வயதுக்கு, என் மனதைத் தாண்டிப் பூரணமாக இருக்கும் பெண்ணான அவளை ஒரு இளம் வலியாக மட்டுமே எனக்குள் உணர முடிந்தது.
விடை பெறும் போது அப்பாவை வணங்கி விட்டு என்னைப் பார்த்து வெறும் புன்னகை மட்டும் புரிந்து சென்றாள் அவள்.
பூர்வ ஜெனமங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மாதிரி அழகான பெண்களின் புன்னகைகளைப் பார்க்காதவர்களாய் இருக்க வேண்டும்.அவள் என்னைப் பார்த்து முறுவலித்த போது, நான் எப்போதோ பார்த்த ஒரு தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இருக்கும் அரண்மனையே என் மனக் கண்ணில் விரிந்தது.அங்கே நானே இளவரசனாய் இருந்ததைப் போன்ற உணர்வு.
சாமான்யனான என்னை சமஸ்தான இளவரசனாக்கியதற்கு நன்றி,பெண்ணே என்று உள்ளுக்குள்ளேயே உருகினேன்.
அடுத்த நாள் கல்லூரிக்குக் கட் அடித்து விட்டு ஒரு சூடான ஆங்கிலப் படம் பார்த்து விட்டு மாலை வீடு திரும்பினேன்.அந்தப் படத்தின் வெள்ளைக்காரக் கதாநாயகி என் இதயத்தைத் தனது பியானோவாக ஆக்கி இன்னும் சௌண்ட் ஆஃப் மியூசிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள்.

அப்பாவின் நண்பர் டாக்டர் அன்பரசன் எனக்கு எடுத்திருந்த ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்திருந்தன.
அப்பா ரிசல்ட் பேப்பர்களின் மேல் முகம் புதைத்துப் படுத்திருந்தார்.

'அப்பா' என்று அருகில் சென்று அவர் தோளில் கை வைத்தபோது அவரது கண்களில் நீரோடியிருந்த தாரை புரிந்தது.
'உடம்புக்குச் சரியில்லையாப்பா?' என்றேன் உண்மையான கவலையுடன்.

சடாரென அவர் உரக்கக் கேவிக் கேவி அழுதார்.அவரை ஆதரவுடன் தோளில் அணைத்துக் கொண்டேன்.அவர் அவ்வளவு அழுது நான் இதுவரை பார்த்ததே இல்லை.
'ஏம்பா..ஏம்பா..என்னாச்சுப்பா உங்களுக்கு?' என்று திருப்பித் திருப்பிக் கேட்டேனே தவிர அவர் அழுவதே எனக்காகத்தான் என்பது அந்தக் கணம் வரைக்கும் எனக்கே தெரியவில்லை.

எனக்குத்தான் லுகேமியா என்ற தீவிர ரத்தப் புற்று நோய்.ஆறே மாதங்களில் நான் சாகப் போகிறேன் என்று மருத்துவர்கள் அறுதியாகச் சொல்லி விட்டார்கள்.

எனக்கு மரணம் என்றதும் பயம் வரவில்லை.மாறாக அமிர்தவர்ஷிணியின் முகம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

இனி மேல்தான் எனது காதல் மலர்ந்த கணங்களே!

(காதல் தொடரும்)

33 கருத்துகள்:

  1. \\அவள் மெல்லெனக் கோவில் தளத்தில் சம்மணமிட்டு அமர்ந்தது, பளிங்கு நீரில் மலர்ந்து விகசித்த தாமரைகளுக்குப் பாடம் எடுத்ததைப் போல இருந்தது.\\

    படிக்க படிக்கவே மனதில் படமாக விரியும் வகையில் வர்ணனைகள்.,

    இதுபோன்று எழுத பொருத்தமான அமைதியான மனநிலை தொடர்ந்து வாய்க்கட்டும் சகோதரரே

    வாழ்த்துகிறேன்..

    குஜாலான மனநிலையில் :)))

    பதிலளிநீக்கு
  2. அமிர்தவர்ஷிணி இன்னும் கோவில் தளத்தில் சரியாக உட்காரக் கூடவில்லை.அதற்குள் உங்கள் பின்னூட்டமா,சிவா?!!
    எனது மகிழ்ச்சி உங்களுக்குள்ளும் பரவட்டும்.

    பதிலளிநீக்கு
  3. அய்யா,
    நீங்கள் பதிவு போட்டீர்களா?என தினம் ஐந்து முறையேனும் சோதித்தேன்.
    இப்போது மூன்றாம் பாகம் படித்தேன்.
    எதிர்பார்த்த மாதிரியே இருந்தது,
    அமிர்தவர்ஷிணி பற்றிய வர்ணனைகள் சொக்க வைக்கின்றன. நல்ல திருப்பம் .
    சரவணன் ஆஜ்மீர் செல்வானா?அல்லது அமிர்தவர்ஷினி இங்கேயே இருப்பாளா?ஒரே சஸ்பென்ஸ் ஆக உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. மகா சொன்னது…
    super//

    மகிழ்ச்சி மகா.
    இந்தக் காதல் தொடரை இனித் தொடரப் போவது உங்கள் மாதிரி இளைஞர்களே.

    பதிலளிநீக்கு
  5. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…
    அய்யா,
    நீங்கள் பதிவு போட்டீர்களா?என தினம் ஐந்து முறையேனும் சோதித்தேன்.
    இப்போது மூன்றாம் பாகம் படித்தேன்.
    எதிர்பார்த்த மாதிரியே இருந்தது,
    அமிர்தவர்ஷிணி பற்றிய வர்ணனைகள் சொக்க வைக்கின்றன. நல்ல திருப்பம் .//

    மகிழ்ச்சி,கார்த்திகேயன்.உங்களுக்கு ஜி.டாக்கில் அழைப்பு விடுத்துக் காத்திருக்கிறேன்.நாம் உரையாடலாம்.

    பதிலளிநீக்கு
  6. சார் ஒவ்வொரு முறையும் சஸ்பென்ஸ் என்னை மிகவும் அலைக்கழிக்கின்றது. மொத்தமாக முடித்து விடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  7. சூப்பர் சார், அந்த விமான பனி பெண் , வேத காலம் .... எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ... ரொம்ப அருமையா இருக்கு

    பதிலளிநீக்கு
  8. எம்.எம்.அப்துல்லா சொன்னது…
    சார் ஒவ்வொரு முறையும் சஸ்பென்ஸ் என்னை மிகவும் அலைக்கழிக்கின்றது. மொத்தமாக முடித்து விடுங்களேன்.//

    நிச்சயமாக அப்துல்லா.உங்களுக்காகவே நாளை எழுதி முடித்து விடுகிறேன்.ஓ.கே?
    உங்கள் வ்ருகைக்கு நன்றியும்,மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  9. அது ஒரு கனாக் காலம் சொன்னது…
    சூப்பர் சார், அந்த விமான பனி பெண் , வேத காலம் .... எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ... ரொம்ப அருமையா இருக்கு//

    கார்த்திகேயனுடன் இன்று உரையாடிய போது உங்களைப் பற்றி அவ்வளவு உயர்வாகச் சொன்னார்,சுந்தர்.மகிழ்ச்சியாக இருந்தது.நீங்கள் ஆஃபிசில் இருந்ததால் உங்களுடன் voice chat பண்ண முடியவில்லை.
    Anyway I am fortunate to have such a reputed person's appreciation.
    I need not tell a friend,anyway thank you.

    பதிலளிநீக்கு
  10. சார் அருமையான வர்ணனைகள்..கதை நல்லா போயிட்டு இருக்கு..

    //உங்களைப் பற்றி அவ்வளவு உயர்வாகச் சொன்னார்,சுந்தர்.//

    சுந்தர் சாரை பற்றிய கார்த்தியின் வார்த்தைகள் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும் யாவரும் எளிதில் புரிந்து கொள்வார்கள் சார்..

    பதிலளிநீக்கு
  11. சார், காதல் கதைகளுக்கு வர்ணனை ரொம்ப அவசியம்ன்னாலும்... கதையை ரொம்ப ஸ்லோவாக்கற மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங். :(

    தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  12. படம் பார்ப்பதுபோல் உள்ளது விவரிப்பு. லுகேமியா என்ற வில்லன் ஜெயிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. //எனக்கு மரணம் என்றதும் பயம் வரவில்லை.மாறாக அமிர்தவர்ஷிணியின் முகம்தான் ஞாபகத்துக்கு வந்தது. //

    கதை அழகாக சென்றுகொண்டு உள்ளது.... நானும் அமிர்தவர்ஷிணியை பார்த்தவனாகவே உள்ளேன்...

    பதிலளிநீக்கு
  14. ஹாலிவுட் பாலா சொன்னது…
    சார், காதல் கதைகளுக்கு வர்ணனை ரொம்ப அவசியம்ன்னாலும்... கதையை ரொம்ப ஸ்லோவாக்கற மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங். :(

    தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். :)//

    எழுதுபவனின் மறுபக்கம்தான் படிப்பவன்,பாலா.இதில் யார் கோபித்தாலும் காதலன்,காதலி சண்டைதான்.
    சரி உங்கள் கருத்துக்கு வருகிறேன்.இனிமேல் ஜனங்களுக்குத் தெரியாத கதையை யாரும் சொல்லி விட முடியாது.அதனால் கதையம்சம் என்பது சின்மாவிலேயே பழைய ஃபார்முலா ஆகி விட்டது.
    இப்போது கதை என்ப்தே நீங்கள் பார்த்த அதே பழைய சம்பவங்களுக்கு என்னுடைய புதிய interpretation தான்.
    திரைப்பட இயக்குநருக்கு காமிரா.எழுதுபவனுக்கு விவரிப்பு.
    நீங்களே சொன்னதைப் போல காதலில் கதை என்ன இருக்கிறது feelingsஐத் தவிர.
    இத்ற்கு மேல் என்னுடைய அறுவையை உங்கள் மேல் சுமத்துவது நம் நட்புக்கு அழகல்ல.!
    நன்றி,பாலா.

    பதிலளிநீக்கு
  15. சின்ன அம்மிணி சொன்னது…
    படம் பார்ப்பதுபோல் உள்ளது விவரிப்பு. லுகேமியா என்ற வில்லன் ஜெயிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.//

    நீங்கள் அழகாக எழுதிய நிஜக் கதை அல்ல மேடம் இது.
    வாழ்க்கையின் சோகங்களைக் கதைகளில் கூட ஜெயிக்கா விட்டால் எப்படி?
    வரவுக்கும்,கருத்துக்கும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  16. வினோத்கெளதம் சொன்னது…
    சார் அருமையான வர்ணனைகள்..கதை நல்லா போயிட்டு இருக்கு..

    //உங்களைப் பற்றி அவ்வளவு உயர்வாகச் சொன்னார்,சுந்தர்.//

    சுந்தர் சாரை பற்றிய கார்த்தியின் வார்த்தைகள் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும் யாவரும் எளிதில் புரிந்து கொள்வார்கள் சார்..//

    நேற்றுத்தான் கார்த்திகேயனுடன் பேசும் போது உங்களைப் பற்றி விசாரித்தேன்,வினோத்.சுந்தர் சாரின் நட்பைப் பெற்றதில் எனக்கும் பெருமையே.
    அடுத்த முறை சந்திக்கும் வரை அன்புடன்.....

    பதிலளிநீக்கு
  17. ஆ.ஞானசேகரன் சொன்னது…
    //எனக்கு மரணம் என்றதும் பயம் வரவில்லை.மாறாக அமிர்தவர்ஷிணியின் முகம்தான் ஞாபகத்துக்கு வந்தது. //

    கதை அழகாக சென்றுகொண்டு உள்ளது.... நானும் அமிர்தவர்ஷிணியை பார்த்தவனாகவே உள்ளேன்...//

    திருச்சியைத் தாண்டிச் சென்னை பக்கம் அடுத்த முறையாவது வர முயலுங்கள்,ஞானசேகரன்!
    ரசனைக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  18. சரியான ரசனைக்காரர் நீங்கள்..:)

    பாலாவுக்கான பதிலும் அருமை..

    பதிலளிநீக்கு
  19. Cable Sankar சொன்னது…
    சரியான ரசனைக்காரர் நீங்கள்..:)

    உங்களை விடவா,ஷங்கர்?

    பாலாவுக்கான பதிலும் அருமை..//

    கதை விவாதங்களில் பாதி நேரம் இந்தச் சண்டைதான்!

    பதிலளிநீக்கு
  20. //பூர்வ ஜெனமங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மாதிரி அழகான பெண்களின் புன்னகைகளைப் பார்க்காதவர்களாய் இருக்க வேண்டும்//

    தலைவா.... இந்த மாதிரி எழுத இனையத்துல உங்கள விட்டா ஆளில்லை.
    கொஞ்ச நாளா ஆளையே காணுமே? ஊருக்கு போயிட்டீங்களோ?

    காதல் சொன்ன கணம்.. கடவுளை கண்ட கணம்!!

    பதிலளிநீக்கு
  21. கலையரசன் சொன்னது…
    //பூர்வ ஜெனமங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மாதிரி அழகான பெண்களின் புன்னகைகளைப் பார்க்காதவர்களாய் இருக்க வேண்டும்//

    தலைவா.... இந்த மாதிரி எழுத இனையத்துல உங்கள விட்டா ஆளில்லை.
    கொஞ்ச நாளா ஆளையே காணுமே? ஊருக்கு போயிட்டீங்களோ?

    காதல் சொன்ன கணம்.. கடவுளை கண்ட கணம்!!//

    நேற்றுக் கர்த்திகேயனிடம் பேசிய போது உங்கள் நகைச்சுவை உணர்வைப் பற்றிச் சொன்னேன்,கலை.சொன்னேன்,கலை.

    ஆமாம்,சற்றே வேலைப்பளு அதிகம்.தீபாவளி வரைக்கும் இனி ஃப்ரீதான்.
    எனது அறுவை இனிக் கொஞ்சம் அதிகம் இருக்கும்!

    மகிழ்ச்சி,கலை.

    பதிலளிநீக்கு
  22. வாவ் சுகமாய் இருக்கிறது படிக்க

    பதிலளிநீக்கு
  23. முரளிகண்ணன் சொன்னது…
    வாவ் சுகமாய் இருக்கிறது படிக்க//

    நீங்களே பாராட்டியது இதமாய் இருக்கிறது,முரளி.நன்றியும்,மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  24. வாவ்! :) பொட்டில் அடிச்ச மாதிரி.. பதில்! :)

    அக்‌ஷப்டட்! :) :)

    பதிலளிநீக்கு
  25. ஹாலிவுட் பாலா சொன்னது…
    வாவ்! :) பொட்டில் அடிச்ச மாதிரி.. பதில்! :)

    அக்‌ஷப்டட்! :) :)//

    எங்கே பாலா உங்களை ஜி டாக்கிலேயே காண முடிவதில்லை? பயங்கர தீபாவளி பிசியா?

    பதிலளிநீக்கு
  26. //
    எனக்கு மரணம் என்றதும் பயம் வரவில்லை.மாறாக அமிர்தவர்ஷிணியின் முகம்தான் ஞாபகத்துக்கு வந்தது
    //
    அடுத்த திருப்பம் இங்கே ஆரம்பிக்கிறதா?
    அருமையான வர்ணனைகள்.

    பதிலளிநீக்கு
  27. GTalk இன்ஸ்டால் பண்ணலிங்க சார். பதிவே ஆஃபீஷில் இருந்துதானே எழுதறேன். :) :) பிஸியாவது ஒன்னாவது! :)

    ஆனா.. ஆஃபீஸில்.. பிஸியா இருக்கற மாதிரி காட்டிகிறனால.. அங்கயே நிறைய நேரம் இருக்கறேன். அதான்! :) :)

    அடுத்த மாதம் எவாலுவேஷன் & இன்க்ரிமெண்ட்! அதுக்காகத்தான் இத்தனையும்! :) சீக்கிரன் நார்மலுக்கு வந்துடுவேன்.

    பதிலளிநீக்கு
  28. வலசு - வேலணை சொன்னது…
    //
    எனக்கு மரணம் என்றதும் பயம் வரவில்லை.மாறாக அமிர்தவர்ஷிணியின் முகம்தான் ஞாபகத்துக்கு வந்தது
    //
    அடுத்த திருப்பம் இங்கே ஆரம்பிக்கிறதா?
    அருமையான வர்ணனைகள்.//

    மகிழ்ச்சி,வலசு.

    பதிலளிநீக்கு
  29. ஹாலிவுட் பாலா சொன்னது…
    GTalk இன்ஸ்டால் பண்ணலிங்க சார். பதிவே ஆஃபீஷில் இருந்துதானே எழுதறேன். :) :) பிஸியாவது ஒன்னாவது! :)

    ஆனா.. ஆஃபீஸில்.. பிஸியா இருக்கற மாதிரி காட்டிகிறனால.. அங்கயே நிறைய நேரம் இருக்கறேன். அதான்! :) :)

    அடுத்த மாதம் எவாலுவேஷன் & இன்க்ரிமெண்ட்! அதுக்காகத்தான் இத்தனையும்! :) சீக்கிரன் நார்மலுக்கு வந்துடுவேன்.//

    ஓஹோ.
    உங்கள் ’40 வயது கன்னி கழியாதவன்’ பதிவைப் படித்ததிலிருந்து இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்,பாலா.

    பதிலளிநீக்கு
  30. //.. வாழ்க்கையின் சோகங்களைக் கதைகளில் கூட ஜெயிக்கா விட்டால் எப்படி? ..//

    இப்போதான் திருப்தியா இருக்குங்க..

    பதிலளிநீக்கு
  31. பட்டிக்காட்டான்.. சொன்னது…

    //.. வாழ்க்கையின் சோகங்களைக் கதைகளில் கூட ஜெயிக்கா விட்டால் எப்படி? ..//

    இப்போதான் திருப்தியா இருக்குங்க..//

    :) :).

    பதிலளிநீக்கு