புதன், டிசம்பர் 31, 2008

குழலின் ராகங்கள்

எல்லா ராகங்களுக்கும் பின்னால்

குழலின் உட்புறத்து எச்சில் இருக்கிறது.

மொழிகள்

எல்லா மொழிகளிலும் கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன.

ஆனால் எல்லா மொழிகளுமே கெட்ட வார்த்தைகளால் மட்டுமே ஆனது.

ஏனெனில் எந்த மொழியுமே உண்மையைச் சொல்லாது.

அவை உண்மையைச் சுட்டிக் காட்ட மட்டுமே செய்யும்.

'படித்துறை'கரையிலிருக்கும் கடவுளைப் பற்றிக் கவலைப்படாமல்
அந்தக் கோவிலின் புனிதநதி எந்நேரமும் ஓடிக் கொண்டே இருக்கிறது....
நம் வாழ்க்கையைப் போலவே.....

செவ்வாய், டிசம்பர் 30, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.