வியாழன், மே 14, 2009

உடல்,உள்ளம்,உலகம்.

உடல்
----------

கேள்வி : ஏன் பகவான் கிருஷ்ணரின் நிறம் எப்போதும் கறுப்பாகவும்,கருநீல நிறமாகவும் சித்தரிக்கப் படுகிறது?
அவர் உண்மையில் கறுப்பானவரா?

(எப்போதும் எனது வியப்புக்கும், மெய்சிலிர்ப்புக்கும் உரிய ஞானி ஓஷோ இதற்குச் சொன்ன பதிலை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளாவிட்டால் எனது பிறவி பயனற்றதாகும்.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் இதனை ஆன்மீகத்தின் செம்மையாக உணரலாம்.
இறை நம்பிக்கையைப் போக்கிக் கொண்டவர்கள் இதனையே அழகியல் உணர்வின் நுட்பமாக உணரலாம்.)
ஓஷோ.
------------

உண்மைதான்.எங்கள் நாட்டில் கிருஷ்ணாவின் நிறம் எப்போதும் இருண்டதாகவே உருவகிக்கப் படுகிறது.இதற்குக் காரணங்கள் உண்டு.

கறுப்பு நிறம் ஸ்ரீ கிருஷ்ணாவின் நிலைத்த தன்மையின் அடையாளம்.
இந்தத் தேசத்திற்கு எப்போதுமே கரிய நிறத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு இருக்கிறது.

உண்மையைச் சொல்லப் போனால்,கறுப்பை விட வெண்மை ஒருபோதும் அழகானதல்ல.பொதுவாக வெள்ளைத்தோல் அழகாகக் கருதப் படுவது ஏன் என்றால்,அதனுடைய பளபளப்பும்,கவர்ச்சியும் உடலின் அசிங்கமான அம்சங்களை மூடி மறைத்து விடும்; ஆனால் கரிய நிறம் அப்படி எதனையும் மறைக்காது.உடலின் அம்சங்களை உள்ளது உள்ளபடியே அது காட்டி விடும்.அதனால்தான் கறுப்பு நிறம் படைத்தவர்களில் அழகானவர்களைப் பார்ப்பது அரிதாகவும்,வெள்ளை நிறத்தவர்களில் அழகானவர்களாக அதிகம் பேர் தென்படுவதற்கும் காரணம்.

ஆனால் கறுப்பு நிறத்திலேயே அழகாக இருப்பவர்கள் எந்த வெள்ளைத் தோல் இருப்பவர்களையும் பின்னுக்குத் தள்ளி விடுவார்கள்.
கறுப்பில் அழகு என்பது சிறப்பிலும் சிறப்பு.அது ஒரு அபூர்வம்.அதனால்தான் எங்கள் நாட்டில் ஸ்ரீ ராமரையும்,ஸ்ரீ கிருஷ்ணரையும் ஸ்ரீ பராசக்தியையும் இன்ன பிற தெய்வங்களையும் நாங்கள் கரிய நிறம் படைத்தவர்களாகவே சித்தரிக்கிறோம்.

வெள்ளை நிறத்தில் அழகாக இருப்பது சாதாரணம்.கரிய நிறத்தில் அழகாக இருப்பது அபூர்வம்.

கரிய நிறத்தை நாங்கள் விரும்புவதற்கு இன்னுமே காரணங்கள் உண்டு.வெள்ளை நிறத்துக்கு ஆழமில்லை.பெரும்பாலும் அந்த நிறம் சப்பையானது.ஆனால் கரிய நிறம் ஆழமானது,தீவிரத் தன்மை கொண்டது.

ஓடும் நதி எங்கே ஆழமாக இருக்கிறதோ அங்கே அதன் நீர்ப் பரப்பு கருமையாக இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அது போல்தான் இதுவும்.

கறுப்பு நிறத்தில் அழகாக இருப்பவர்களின் அழகு வெறும் தோலுடன் நின்று விடுவதல்ல.அந்த அழகுக்குப் பல அடுக்குகள் உண்டு. அதனால்தான் வெள்ளைத் தோல் இருப்பவர்களுடன் பழகும் போது விரைவிலேயே அலுப்புத் தட்டி விடுகிறது.ஆனால் கரிய நிறம் நீடித்த தன்மை கொண்டது.அது உங்களைச் சலிப்படையச் செய்வதில்லை.

மேற்கே அனைத்துக் கவர்ச்சிப் பெண்களும் கடற்கரையில் படுத்துக் கதிர் ஒளியில் தங்கள் வெள்ளை தோலைக் கரிய நிறமாக்கிக் கொள்வது பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

எப்பொதெல்லாம் ஒரு சமூகம் உச்சத்தைத் தொடுகிறதோ அப்போதெல்லாம் வெறும் பரவலான பண்புகளில் ஆர்வம் இழந்து,எதிலும் ஒரு ஆழத்தையும்,தீவிரத்தையும் அது தேடத் தொடங்கும்.
நாம் மேற்கத்திய வெள்ளைக்காரர்களை அழகென்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள் அழகின் வெறும் மேற்புறத் தோற்றத்தை தாண்டி, அதில் இருக்கும் ஆழத்தைக் காணத் தொடங்கி விட்டார்கள்.

அதனால்தான் வெள்ளைக்கார அழகிகள் எல்லாம் தங்கள் தோலைக் கருமையாக்குவதில் மும்முரமாகி விட்டார்கள்.

மேலும் ஒன்று .

ஸ்ரீகிருஷ்ணா கறுப்பு நிறமானவர் என்ற விவரத்தை விட அந்த நிறத்தை அவருக்குக் கற்பித்ததில் இருக்கும் கவிதை நயத்தைப் புரிந்து கொள்ளுவதே சிறப்பானதாகும்.
உள்ளம்
-------------

இன்றைக்கு நாம் எல்லோரும் பெரும் நகரங்களில் பல லட்சக் கணக்கான மக்கள் தொகையாக வாழ்கிறோம்.ஆனால் அது நமது பரிணாம விதிகளுக்கு முரணானது என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது.

டெஸ்மான்ட் மாரிஸ் தனது 'மனித மிருகக் காட்சிசாலை' என்ற நூலில் சொல்வது இதுதான்.

குரங்குகளாகவும் அதற்கு முந்தைய நம் மூதாதையரான விலங்குகளாகவும் நாம் வாழ்ந்ததெல்லாம் சிறு சிறு கூட்டங்களாகவும் மந்தைகளாகவும்தான்.

500அல்லது 600பேரைத் ஐத் தாண்டாமல் வாழ்ந்த நாம் இன்று பல லட்சக் கணக்கில் ஒரே இடத்தில் கூடி இருக்கும் சூழ்நிலையில் வாழ்வதே நகர வாழ்க்கையில் நமது மன இறுக்கத்திற்கான உயிரியல் காரணமாகும் என்கிறார் மாரிஸ்.

சரி நம் ஆதி மனப் பண்பிற்கு ஒவ்வாத இந்தச் சூழ்நிலையை நாம் எப்படி அனுசரித்துக் கொள்கிறோம்?

உலகில் எந்த நகரமானாலும், எந்த இனமானாலும் எவ்வளவு படித்தவர்களானாலும்,நாகரிக மனிதர்களானலும் நாம் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கொள்கிறோம்.
சாதிகளாக,சங்கங்களாக,மாவட்டக்காரர்களாக,மாணவர்களாக,ஆசிரியர்களாக திரைத்தொழில்புரிபவர்களாக,பத்திரிகையாளர்களாக,பதிவர்களாக,ஆண்களாக,பெண்களாக, குட்டையானவர்களாக,நெட்டையானவர்களாக,இப்படித்,தொழில் ரீதியாக,உடல் ரீதியாக, பண்பு ரீதியாகக் கொள்கை ரீதியாக ஏதாவது ஒரு பெயரில் சிறு சிறு குழுக்களாக,கூட்டங்களாக,பழைய விலங்குகளின் மொழியில் 'ட்ரைப்ஸ்' களாக வட்டம் போட்டுக் கொள்வது அந்த ஆதிக் குரங்குகளின் அடிமனப் பண்பு என்கிறார்.
லட்சக் கணக்கில் ஒன்று கூடி வாழ்வது நமது அடிப்படை இயல்புக்கு மாறானது.நூற்றுக் கணக்கில் வாழ்வதுதான் நமது இயல்பு என்னும் மாரிஸின் கோட்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?

உலகம்
_____

தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள 16ம் தேதி தேர்தல் முடிவுகள் உதவும் என்று காத்திருக்கிறேன்.

ஈழத்தைப் பற்றிய தமிழர்களின் உணர்வு,தென் சென்னையில் நிற்கும் சரத்பாபு என்ற கட்சி சார்பற்ற இளைஞருக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை இந்த இரண்டு விஷயங்களை வைத்து தமிழர்களின் உணர்வுகளைக் கணிக்கலாம் என்பது எனது எண்ணம்.

சரிதானே நண்பர்களே?

32 கருத்துகள்:

  1. தேர்தல் காய்ச்சல் முடியட்டும்.அப்புறம் உங்க பதிவில் விட்டதிலிருந்து மூழ்கி விடுகிறேன்.

    நீங்க சொன்ன மாதிரி ஈழம்,சரத்பாபு இரண்டு விசயங்களில் தமிழ்நாட்டின் நாடியைப் படம் பிடித்து விடலாம்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு.

    Sir .. Me the First..??

    பதிலளிநீக்கு
  3. //ஓடும் நதி எங்கே ஆழமாக இருக்கிறதோ அங்கே அதன் நீர்ப் பரப்பு கருமையாக இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அது போல்தான் இதுவும்.//

    உடல்..கருப்பு என்பது இயல்பு, ஏழு வர்ணத்தை உள்ளடக்கிய சூரியனின் ஒளி வெண்மையாக இருந்தாலும்,அது இல்லாத இடம் அனைத்தும், பிரபஞ்சம் முழுமையும் இருப்ப்து கருப்பு. இதனுள் சர்வமும் அடக்கம்.இதை உணர்த்தவே கிருஷ்ணனின் நிறம் கருப்பு.

    உள்ளம்...மாரிஸின் கோட்பாடு சரியே. பதிவர் உலகத்தில் கூர்ந்து கவனித்தால் பல குழுக்கள் தெரியும்:))

    //ஈழத்தைப் பற்றிய தமிழர்களின் உணர்வு,தென் சென்னையில் நிற்கும் சரத்பாபு என்ற கட்சி சார்பற்ற இளைஞருக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை இந்த இரண்டு விஷயங்களை வைத்து தமிழர்களின் உணர்வுகளைக் கணிக்கலாம் என்பது எனது எண்ணம்.//

    தமிழனின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்..!!!
    :))

    பதிலளிநீக்கு
  4. //.. நூற்றுக் கணக்கில் வாழ்வதுதான் நமது இயல்பு என்னும் மாரிஸின் கோட்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?..//

    சரிதானோ என்று தோன்றுகிறது..
    ஆனால் முழுமையாக சிந்திக்க முடியவில்லை அல்லது தெரியவில்லை..

    எனக்கு என்னவோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழ சகோதரர்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க செய்ய மாட்டார்கள் என்றே தோன்றுகிறது..

    அனைத்து கட்சிகளும் கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு நாற்காலிக்கு (பதவிக்கு) பிச்சை எடுக்க தான் நினைக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  5. சார்..

    அந்த கருப்பு நிறத்தை பற்றி ஓஷோவின் கருத்து நன்றாக உள்ளது..
    ஆனால் நிஜத்தில் கருப்பு என்றால் ஒரு வித மட்டமான மனப்பான்மை தான் நம் மீடியா உருவாக்கி வைத்து இருக்கிறது..
    எத்தனை விளம்பரங்கள் பெண்கள் கருப்பாக இருந்தால் ஒதுக்கப்படுவதை போல் காட்டுகின்றன..
    அதுவும் போக போக விளம்பரங்கள் இன்னும் மட்டமாக்கி வருகின்றன..
    பெண்கள் போய் ஆண்களும் அந்த விளம்பரத்தின் பிடியில் வந்து விட்டனர்..
    சினிமாவிலும் அப்படி தான் காட்டுகிறார்கள்..

    மாரிசின் வாதம் ஏற்று கொள்ளக்கூடியாதே..


    //இந்த இரண்டு விஷயங்களை வைத்து தமிழர்களின் உணர்வுகளைக் கணிக்கலாம் என்பது எனது எண்ணம்.//

    பார்ப்போம் சார் என்ன ஆகுதுன்னு..
    ஆனால் இதை வைத்து நம் மக்களின் மனதை கணிக்க முடியுமா..??

    பதிலளிநீக்கு
  6. ராஜ நடராஜன் சொன்னது…

    தேர்தல் காய்ச்சல் முடியட்டும்.அப்புறம் உங்க பதிவில் விட்டதிலிருந்து மூழ்கி விடுகிறேன்.

    நீங்க சொன்ன மாதிரி ஈழம்,சரத்பாபு இரண்டு விசயங்களில் தமிழ்நாட்டின் நாடியைப் படம் பிடித்து விடலாம்.//

    பரவாயில்லை.ஸ்ரீ கிருஷ்ணா நித்தியமானவர்.காத்திருப்பார்.நன்றி,ராஜ நடராஜன்

    பதிலளிநீக்கு
  7. வண்ணத்துபூச்சியார் சொன்னது…

    அருமையான பதிவு.

    Sir .. Me the First..??//
    நன்றி சூர்யா.When you are first in so many things why you should care for this 'First'!

    பதிலளிநீக்கு
  8. அறிவே தெய்வம் சொன்னது…

    உடல்..கருப்பு என்பது இயல்பு, ஏழு வர்ணத்தை உள்ளடக்கிய சூரியனின் ஒளி வெண்மையாக இருந்தாலும்,அது இல்லாத இடம் அனைத்தும், பிரபஞ்சம் முழுமையும் இருப்ப்து கருப்பு. இதனுள் சர்வமும் அடக்கம்.இதை உணர்த்தவே கிருஷ்ணனின் நிறம் கருப்பு.//

    இதைத்தானே ஓஷோ முதல் வரியிலேயே ‘கறுப்பு நிறம் ஸ்ரீ கிருஷ்ணாவின் நிலைத்த தன்மையின் அடையாளம்.’ என்று கூறினார்,அன்பரே.இருந்தாலும் உங்கள் கருத்தும் ஒரு கோணத்தில் புதிய பரிமாணத்தைச் சொல்கிறது.

    தமிழனின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்..!!!
    :))//
    கண்டிப்பாக.16ம் தேதி அன்று நீங்களும் நம்புவீர்கள்.
    வருகைக்கும் ஆய்வுக்கும் நன்றி,(உங்கள் பெயரை வெளிப் படுத்த வேண்டாம் என்றுதான்)நண்பரே.

    பதிலளிநீக்கு
  9. அறிவே தெய்வம் சொன்னது…

    வாழ்த்துக்கள்//
    வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி அன்பரே.

    பதிலளிநீக்கு
  10. பட்டிக்காட்டான்.. சொன்னது…

    //.. நூற்றுக் கணக்கில் வாழ்வதுதான் நமது இயல்பு என்னும் மாரிஸின் கோட்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?..//

    சரிதானோ என்று தோன்றுகிறது..
    ஆனால் முழுமையாக சிந்திக்க முடியவில்லை அல்லது தெரியவில்லை..//

    எல்லாச் சிந்தனைகளுமே இப்படித்தான் துவங்கும்,திருஞான சம்பத்.ஆழ்மனதில் படியும் இந்த வினவுதல் என்றாவது ஒரு நாள் உங்களிடம் விரிவான சிந்தனையாகப் புன்னகை புரியும்.

    எனக்கு என்னவோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழ சகோதரர்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க செய்ய மாட்டார்கள் என்றே தோன்றுகிறது..//

    எனக்கு அரசியல்வாதிகளைப் பற்றி அறிய வேண்டியதில்லை.அறிய வேண்டியது பெரும் பாலான மக்களைன் கருத்தைப் பற்றித்தான்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி.

    பதிலளிநீக்கு
  11. vinoth gowtham சொன்னது…
    எத்தனை விளம்பரங்கள் பெண்கள் கருப்பாக இருந்தால் ஒதுக்கப்படுவதை போல் காட்டுகின்றன..//

    இந்தப் பதிவையே நான் அதற்காகத்தான் போட்டேன்,வினோத்.ஓஷோதான் எந்த மதவாதியும் தராத புதிய விளக்கங்களைத் தருபவர்.

    பார்ப்போம் சார் என்ன ஆகுதுன்னு..
    ஆனால் இதை வைத்து நம் மக்களின் மனதை கணிக்க முடியுமா..??//

    பெரும்பாலோருக்கு நாட்டு நடப்புப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்றாவது தெரியுமே,வினோத்.

    பதிலளிநீக்கு
  12. //
    லட்சக் கணக்கில் ஒன்று கூடி வாழ்வது நமது அடிப்படை இயல்புக்கு மாறானது.நூற்றுக் கணக்கில் வாழ்வதுதான் நமது இயல்பு என்னும் மாரிஸின் கோட்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?
    //

    சாதாரண மனிதர்களால் இலட்சக்கணக்கானவர்களுடனான தொடர்பினைத் தொடர்ந்து பேணுதல் சிரமம், ஞாபகப் படுத்துதலில் பிரச்சனை, போதிய நேரமின்மை என்பவையும் காரணமாயிருக்கலாம் என்பது எனது கருத்து.

    விஞ்ஞான ரீதியில் கருமை நிறம் சக்தியை உறிஞ்சும்/வெளியிடும் தன்மை கொண்டது. இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  13. வலசு - வேலணை சொன்னது…

    சாதாரண மனிதர்களால் இலட்சக்கணக்கானவர்களுடனான தொடர்பினைத் தொடர்ந்து பேணுதல் சிரமம், ஞாபகப் படுத்துதலில் பிரச்சனை, போதிய நேரமின்மை என்பவையும் காரணமாயிருக்கலாம் என்பது எனது கருத்து.//

    நீங்கள் சொல்வது 'physical problem'.மாரிஸ் சொல்வது உளவியல் ரீதியான இணக்கத்தைப் பற்றி என எண்ணுகிறேன்.

    விஞ்ஞான ரீதியில் கருமை நிறம் சக்தியை உறிஞ்சும்/வெளியிடும் தன்மை கொண்டது. இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்//

    தெய்வங்களின் உருவாக்கமே சக்தியைத் தருவதற்குத்ததானே அன்றி உறிஞ்சுவதற்காக இல்லை,வலசு-வேலணை.

    பதிலளிநீக்கு
  14. \\வருகைக்கும் ஆய்வுக்கும் நன்றி,(உங்கள் பெயரை வெளிப் படுத்த வேண்டாம் என்றுதான்)நண்பரே.\\

    சிவா என்று அன்போடு வெளிப்படுத்துங்கள். தவறேதுமில்லை. அறிவே தெய்வம் என்ற பொருள் பொதிந்த வார்த்தையை நண்பர்களிடம் மனதில் பதியவைத்து சிந்திக்க தூண்டும் நோக்கத்தில்தான்
    அறிவே தெய்வம். இல்லாவிட்டால் சிவா தான்

    பதிலளிநீக்கு
  15. \\விஞ்ஞான ரீதியில் கருமை நிறம் சக்தியை உறிஞ்சும்/வெளியிடும் தன்மை கொண்டது. இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்\\

    \\தெய்வங்களின் உருவாக்கமே சக்தியைத் தருவதற்குத்ததானே அன்றி உறிஞ்சுவதற்காக இல்லை,வலசு-வேலணை.\\

    கருப்பிற்குள் ஒளி அடக்கம் என்பதே விஞ்ஞானமும், மெய்ஞானமும் சொல்வது.

    பதிலளிநீக்கு
  16. ஒட்டு போட்டாச்சு தல, ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க!
    www.kalakalkalai.blogspot.com

    பதிலளிநீக்கு
  17. நல்ல தகவல் நிறைந்த பதிவு.. ரெம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  18. அறிவே தெய்வம் சொன்னது…

    சிவா என்று அன்போடு வெளிப்படுத்துங்கள். தவறேதுமில்லை. அறிவே தெய்வம் என்ற பொருள் பொதிந்த வார்த்தையை நண்பர்களிடம் மனதில் பதியவைத்து சிந்திக்க தூண்டும் நோக்கத்தில்தான்

    அறிவே தெய்வம்.அன்பே சிவம்.அன்புக்கு நன்றி,சிவா.இனி இப்படியே அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. அறிவே தெய்வம் சொன்னது…

    கருப்பிற்குள் ஒளி அடக்கம் என்பதே விஞ்ஞானமும், மெய்ஞானமும் சொல்வது.//

    ஐம்புலன்களில் கண்கள் மூலமாகவே நாம் 80% வெளிஉலகை உள் வாங்குவதால் ஒளிக்கு நாம் அதிகம் முக்கியத்துவம் தருகிறோம் என நினைக்கிறேன்,சிவா.
    அதனால்தான் வெளிப்புறம் இருந்து உள்நோக்கித் திரும்பும் தியானத்தில் எல்லாம் கண்களையே மூடி அமரச் சொல்கிறார்கள்.
    புவி ஈர்ப்பு,மின்சாரம்,வெப்பம்,காந்தம் இது போல எத்தனையோ சக்தி வடிவங்களில் ஒளியும் பல மின்காந்த வடிவங்களில் ஒன்றே.
    மனிதனுக்குத்தான் ஒளி முக்கியம்.ஒளியே புக முடியாத ஆழ்கடலில் வாழும் எத்தனையோ உயிரினங்களுக்கு ஒளி என்றால் என்னவென்றே தெரியாது.

    பதிலளிநீக்கு
  20. கலையரசன் சொன்னது…

    ஒட்டு போட்டாச்சு தல, ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க!
    www.kalakalkalai.blogspot.com//

    படித்தேன்,ரசித்தேன் கலையரசன்.பின்தொடரவும் செய்கிறேன்.வருகைக்கு நன்றி கலை..

    பதிலளிநீக்கு
  21. நசரேயன் சொன்னது…

    நல்ல தகவல் நிறைந்த பதிவு.. ரெம்ப நல்லா இருக்கு//

    வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி,நச்ரேயன்.கூடவே உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் செறிவாகவும்,பயன் தருவதாகவும் இருக்கும் எனக் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. வருகைக்கும்,வாழ்த்துக்கும் மகிழ்ச்சி அண்ணே!
    பின்தொடரவும் செய்கின்றீர்கள்.
    நன்றி சொல்ல வார்தை இல்லணே!

    பதிலளிநீக்கு
  23. அருமையான பதிவு.. கருப்பு நிறம் பற்றிய தெளிவான கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சார்..

    பதிலளிநீக்கு
  24. //சரிதானே நண்பர்களே? // சரிதான் சார்.

    கறுப்பு வெள்ளைக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் எனக்கு புரியவில்லை. கறுப்பு நிறத்தவர்களிடமும் கெட்டவர்கள் உண்டு, வெள்ளை நிறத்தவர்களிடமும் நல்லவர்கள் உண்டு அல்லவா? கறுப்பு நிறம் எல்லா நிறத்தையும் உள்வாங்கும். வெள்ளை நிறம் எதிரொலிக்கும். அண்டம் என்பதன் முடிவு ஒரு கறுந்துளையே. ஒரு கறுந்துளைக்கும் அனைத்தும் உள்ளிழுக்கப்பட்டு முடிவிம் ஒரு புள்ளியாகி மறையும்.

    ஆனால் பொதுவாக சினிமாக்களில் தேவர்களை வெள்ளைத் தோலுடையவர்களாகவும் அசுரர்களை கறுப்பானவர்களாகவும் தானே காட்டுகிறார்கள்?

    பதிலளிநீக்கு
  25. கருப்பிற்கு ஓசோ அளித்த விளக்கம் நன்றாக இருந்தது.
    நாளைய உலகை கருப்பு நிறம் ஆளுமை செய்யக்கூடும்.

    //தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள 16ம் தேதி தேர்தல் முடிவுகள் உதவும்//

    நிச்சயமா... நமது மதிப்பீடுகளும் தான்...

    பதிலளிநீக்கு
  26. //அதனுடைய பளபளப்பும்,கவர்ச்சியும் உடலின் அசிங்கமான அம்சங்களை மூடி மறைத்து விடும்; ஆனால் கரிய நிறம் அப்படி எதனையும் மறைக்காது.உடலின் அம்சங்களை உள்ளது உள்ளபடியே அது காட்டி விடும்.அதனால்தான் கறுப்பு நிறம் படைத்தவர்களில் அழகானவர்களைப் பார்ப்பது அரிதாகவும்,வெள்ளை நிறத்தவர்களில் அழகானவர்களாக அதிகம் பேர் தென்படுவதற்கும் காரணம்//

    ஆஹா! அருமையான விளக்கம்.. ஹி ஹி ஹி சார் நான் கருப்பு

    //கறுப்பு நிறத்திலேயே அழகாக இருப்பவர்கள் எந்த வெள்ளைத் தோல் இருப்பவர்களையும் பின்னுக்குத் தள்ளி விடுவார்கள்//

    இது உண்மை தான் சார்

    ஊரு பக்கம் எல்லாம் கருப்பா இருந்தாலும் களையா இருக்கா(ன்) என்பார்கள்..அதிலும் ஒரு சில பெண்கள் கருப்பு என்றாலும் கொள்ளை அழகு, முகம் உடலும் அவ்வளவு லட்சணமாக இருக்கும். ஆனால் அப்படி குறைவான நபர்களையே பார்த்துள்ளேன்

    //தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள 16ம் தேதி தேர்தல் முடிவுகள் உதவும் என்று காத்திருக்கிறேன்//

    :-))

    தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சார்.
    உங்களுடன் அலைபேசியில் பேசியது என்னை மகிழசெய்கின்றது, நன்றி சார்

    //அதனால்தான் கறுப்பு நிறம் படைத்தவர்களில் அழகானவர்களைப் பார்ப்பது அரிதாகவும்,வெள்ளை நிறத்தவர்களில் அழகானவர்களாக அதிகம் பேர் தென்படுவதற்கும் காரணம்.//
    ஹிஹிஹி.. நானும் கருப்புதான்

    பல உண்மைகளை சொல்லியுள்ளீர்கள் நன்றாக உள்ளது...

    பதிலளிநீக்கு
  28. கறுப்பின் மகத்துவம் அறிந்தேன். நன்றி :-)

    சரத்பாபு எவ்வளவு ஓட்டு வாங்கினாரென தெரியலயே சார்.. தமிழர்களின் உணர்வுகளைக் கணித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. ஓஷோவின் கருப்பை பற்றிய கருத்துக்கள் வியப்பை அளிக்கிறது..

    நான் தாமதமாகத்தான் இந்த பதிவை பார்க்கிறேன்..

    அருமையான பதிவு..

    தொடர்ந்து உங்கள் பதிவை படிக்கும் ஆர்வத்தையும் இது தூண்டுகிறது..

    நன்றி

    பதிலளிநீக்கு
  30. Kanna சொன்னது…
    ஓஷோவின் கருப்பை பற்றிய கருத்துக்கள் வியப்பை அளிக்கிறது..

    நான் தாமதமாகத்தான் இந்த பதிவை பார்க்கிறேன்..

    அருமையான பதிவு..

    தொடர்ந்து உங்கள் பதிவை படிக்கும் ஆர்வத்தையும் இது தூண்டுகிறது..

    நன்றி//

    என்னையும் படியுங்கள்.அதை விட ஓஷோவையும் படியுங்கள்.நிறையப் பலன் பெறுவீர்கள்,மனம் வளல் பெறும் ஆதலால்.
    நன்றி கண்ணா.

    பதிலளிநீக்கு