ஞாயிறு, அக்டோபர் 18, 2009

காதல மலர்ந்த கணங்கள் 6

அமிர்தவர்ஷிணி.
6.
அமிர்தவர்ஷிணி எங்கள் வீட்டுக்குள் நுழைந்தததிலிருந்து வீடே மாறி விட்டது என்று அப்பா சொன்னார்.
தூசு, தும்பு இல்லாமல் பளிச்சென்று ஆகி வீடு பூப்பெய்தியது.

'அதே அவரைக்கா,வெண்டைக்கா,கத்தரிக்காதான் ஆனா அவ கைபட்டுச் சமைச்சுதுக்கப்புறந்தான் இத்தனை நாள் ஒளிச்சு வெச்சிருந்த அதுகளோட ஒரிஜினல் ருசியை எல்லாக் காய்கறிகளுமே வெளியே காட்டுது,சரவணா'என்றார் அப்பா ஒருநாள் ரசனை பொங்க.

அவள் வந்த ஒரு வாரத்துக்குப் பிறகு அப்பா திரும்ப வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டார்.

குறிப்பாகப் பூஜை அறையை அவள் மாற்றிய விதத்தில்தான் அப்பாவின் மனதில் நிரந்தரமாக மரியாதையைப் பெற்று விட்டாள்,அமிர்தவர்ஷிணி. எங்கள் பூஜை அறையில் அவர் வேலை பார்த்த எல்லாக் கோவில் தெய்வங்களின் உருவப் படங்களை மட்டுமல்லாது எல்லா மதங்களின் புனிதச் சின்னங்களையும் அப்பா வைத்திருப்பார்.கர்த்தர்,கஃபா,புத்தர்,மகாவீரர், குரு நானக்,ஷ்ரீடி சாய்பாபா,மற்றும் இன்றைய,நேற்றைய மஹான்கள் என்று அவருக்குத் தெரிந்த,கிடைத்த அனைத்து ஆன்மீக சிகரங்களின் வெளிப்பாடுகள் அனைத்தையும் எங்கள் பூஜை அறையில் பார்க்கலாம்.

அமிர்தவர்ஷிணி வந்ததும்தான் எல்லாப் படங்களும்,சிலைகளும் தூய்மையாகி, வைகறையில் அவளுக்குப் பிடித்தமான சந்தன ஊதுவத்தி,மல்லிகைப் பூக்களின் வாசனை கமகமக்க வீடே கோவிலானது என்றார் அப்பா.

'இப்போ எல்லாம் காலங் கார்த்தாலே பூஜை ரூமுக்குள்ளே நுழைஞ்சாப் போதும், நாம இத்தனை நாளு வெறுமனே கும்பிட்ட நம்ம வீட்டு சாமிக எல்லாம் என்ன வரம் கேளுன்னு குடுக்கத் தயாரா நின்னுட்டிருக்காங்க சரவணா!' என்றார் அவர், அமிர்தவர்ஷிணியைப் பார்த்துச் சிரித்தபடியே.
அமிர்தவர்ஷிணி அதே வற்றாத புன்னகையுடன் எனக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

அப்ப்பா!அப்பாவின் முகத்தில் நான் இந்தச் சிரிப்பைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன!

'நீங்க என்ன வரம் கேட்டிங்கப்பா?' என்றேன் நானும் சிரித்து.
'எதுவுமே கேக்கத் தோணாத பரிபூர்ண நிம்மதியிலே எதையுமே கேக்கத் தோணலேப்பா' என்றார் அப்பா கண்களில் மெல்லிய ஈரம் கசிய.

ஒரே மகனை சாவுக்குக் காவு கொடுக்கக் காத்திருக்கும் எனது அப்பாவுக்குக் கூட நிம்மதியைத் தர முடியும் என்றால்,அது அமிர்தவர்ஷிணியினால்தான் முடியும் என்று தோன்றியது எனக்கு.

நான் நன்றியுடன் அவளைப் பார்த்தேன்.
அப்பா, தான் கோவிலுக்குப் போவதற்கு முன்னால் மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து அவளை இறக்கி விட்டு விட்டுப் பிறகு, தான் திரும்பி வீட்டுக்குப் போகும் போது அழைத்துச் செல்வது வழக்கமாகிப் போனது.

தினமும் மருத்துவமனைத் தோட்டத்தின் அந்திப் பூக்கள், அவள் வருகிறாள் என்று கிறங்கிப் போய் தங்கள் வாசனைகளால் கட்டியம் கூறும் போது, அவள் எனது அறைக்குள் புன்னகையுடன் நுழைவாள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாநிலத்தின் ஆடைகளை அணிந்து வருவதுதான் அமிர்தவர்ஷிணியின் ஸ்பெஷாலிடி.
தான் சென்ற மாநிலங்களில் எல்லாம் அந்தந்த வீட்டுப் பணி முடிந்து கிளம்பும் போது, அவர்கள் அன்புடன் அவளுக்கு எடுத்துக் கொடுத்த ஆடைகளையே அவள் எப்போதும் உடுத்தினாள். குஜராத்தி ,ராஜஸ்தானி,பஞ்சாபி, நமது பாவாடை தாவணி, மலையாளம்,மும்பையின் ஜீன்ஸ்,டி.ஷர்ட் இப்படி எந்த வித உடுப்பும் அவளுக்கு அழகாகப் பொருந்தி வந்ததுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

'அமிர்தவர்ஷிணி ஒரு ஆபாசம் கலக்காத ஃபேஷன் பேரேட்டாக்கும்!' என்றாள் என்னைக் கவனிக்கும் நர்ஸ் உன்னி மேரி.

பார்ப்பவரது உயிரை எந்த கஷ்டமும் படாமல் எளிமையாகக் கவ்விச் செல்வதே உண்மையான அழகு என்றால்,அமிர்தவர்ஷிணியைப் பேரழகி என்று சொல்லலாம். இப்போதெல்லாம் மருத்துவமனையே அவளது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தது.

அதனை விட அவளது வாழ்க்கை அனுபவங்களை, அவள் சொல்லக் கேட்டால் கொஞ்ச நஞ்சமிருக்கும் நமது மீதி மனமும் பறிபோய்விடும்.

'அஞ்சு வயசிலிருந்தே அப்பா,அம்மா இல்லாமே மூணாவது மனுஷங்க வீட்டுலியே வளர்ந்திருக்கியே, எப்படி வர்ஷிணி உன்னாலே உண்மையாவுமே சந்தோஷமா இருந்திருக்க முடியும்? ஒருநாளாவது நீ இப்படி அனாதையா இருக்கறமேன்னு நினைச்சு மனசு கஷ்டப் பட்டதில்லையா?' என்றேன் நான் ஒரு நாள்.

அவள் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டுச் சொன்னாள்.
'அன்பு கிடைக்காதவங்க அனாதைக இல்லே,சரவணா. அன்பு செலுத்த முடியாதவங்கதான் அனாதைக!' என்றாள் அவள்.

'என்னைக் கூப்பிட்டுட்டுப் போனவங்க எல்லாமே, நம்ம தேசம் இத்தனை வருஷமா சொல்லித் தந்திட்டுருக்கிற அத்தனை நல்ல குணங்களோட ஒட்டு மொத்தமான அம்சம்.ஒரு குடும்பமும் கூட என்னை அந்நியமாப் பார்க்கலே.நடத்தலே. அதனாலே எனக்கும் அன்பைத் தவிர வேறெந்த அனுபவமும் தெரியாது..'

'மூணு மாசத்துக்கு ஒரு வீடு,ஒரு ஊரு,ஒரு பாஷைன்னா எந்தப் பள்ளிக்கூடத்துக்கும் நீ போயிருக்க முடியாதே?'

.'நல்ல வேளை!' என்றாள் அவள் சிரித்து.

'இல்லாட்டி நான் இத்தனை குருமார்கள் கிட்டே இவ்வளவு விஷயங்களைக் கத்திருக்க முடியாது' என்றாள் அவள்.

சமையல்,தையற் கலை,வெவ்வேறு வழிபாட்டு முறைகள்,மொழிகள்,ஒப்பனை,அந்தந்த பிரதேசங்களின் எளிய நாட்டு மருத்துவம்,முதல் உதவிகள் அனைத்திலும் அவள் கை தேர்ந்திருந்தாள்.

அவள் அருகில் இருந்தால்,அனைவரையும்,காரணம் தேடாமல் நேசிக்கும் அபரிமிதமான அன்பின் சாரல் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு மலைப் பிரதேசத்தின் நிலவொளியில் இருப்பதைப் போல இருக்கும்.

அவள் மருத்துவ மனைக்கு வந்து போய்க் கொண்டிருந்த பதினெட்டு நாள் கழித்து,ஒரு நாள் பொறுக்க முடியாமல் ஐந்து காதல் கடிதங்களை அவளிடம் நீட்டினேன்.
'என்ன இது ?' என்றாள் அமிர்தவர்ஷிணி.
'உனக்கு எழுதுன லவ் லெட்டர்ஸ்!' என்றேன் நான்.

என்னை ஒரு கணம் பார்த்து விட்டுச் சொன்னாள்.

'உன் கண்ணுலே ஒரு எழுத்துக் கூடத் தெரியலியே,சரவணா!' என்றாள் அவள் உடனே.

'உன்கிட்டே குடுக்கச் சொல்லி, என் காலிலே விழாத குறையாக் கெஞ்சி அஞ்சு பேரு இதைக் குடுத்திருக்காங்க வர்ஷிணி.' என்றேன் நான் பரிதாபமாக.

அவள் எந்தச் சலனமுமின்றி என்னைப் பார்த்தாள்.

'அஞ்சுலே, மூணு லெட்டர்களை இங்கிருக்கிற டாக்டர்களே குடுத்திருக்காங்க. ரெண்டு ,இங்கே வந்திட்டிருக்கற வி.ஐ.பி.விசிட்டர்களோட பசங்க.முதல் லெட்டர், எனக்கு ட்ரீட்மென்ட் குடுத்திட்டிருக்கிற சீஃப் டாக்டர் சித்தார்த் ரே.லண்டன் ரிடர்ன்.கேன்ஸர் ட்ரீட்மென்ட்லே இந்தியாவுலேயே நம்பர் டூ ன்னு சொல்றாங்க.எக்கச் சக்க வருமானம்.அதி மேதாவி. ரெண்டாவது லெட்டர்..'
அவள் என்னை அமைதியாக இடை மறித்தாள்.
'உன்னைப் பார்த்துட்டிருக்கிற டாக்டருக்கு உன்னை விடப் பத்துப் பதினைஞ்சு வயசு ஜாஸ்தி இருக்குமே ,சரவணா.அவரு எப்படி உங்கிட்டே போய் எனக்கு லவ் லெட்டரைக் குடுக்கச் சொல்லி..'
'அவரு மாத்திரமில்லே வர்ஷிணி.இந்த லெட்டர்களைக் குடுத்தவங்க எல்லாருமே என்னை விடப் பெரியவங்கதான்' என்றேன் நான்.

அவள் என்னை அமைதியாகப் பார்த்தாள்.

சற்றுக் கழித்து நான் சொன்னேன்.

'ஒருவேளை,கிட்டத்தட்ட சாவை நெருங்கிட்டதனாலே அவங்க எல்லாரையுயும் விட நான்தான்னு மூத்தவன்னு அவங்க நினைக்கிறாங்களோ என்னமோ!' என்று நான் சொல்லச் சொல்லவே என்னை அறியாமல் நான் அழுது விட்டேன்.

அமிர்தவர்ஷிணி மெல்ல என் அருகில் வந்து கனிவுடன் என்னைத் தனது மார்புடன் அணைத்துக் கொண்டாள்..
அப்படி ஒரு ஆறுதல் கிடைத்தவுடன், எனது அழுகை இன்னும் பீறிட்டுக் கிளம்பியது.
'அமிர்தம்ன்னா என்ன அர்த்தம் தெரியுமா,சரவணா?' என்றாள் அவள், என் முகத்தை நிமிர்த்தி.
நான் வெறுமனே அவளைப் பார்த்தேன்,தேம்பியபடி.
'அமிர்தம்ன்னா சாகாமை.அமிர்தவர்ஷிணின்னா சாகாமையைத் தருபவள்ன்னு அர்த்தம்.நான் உன் பக்கத்திலே இருக்கும் போது உன்னைச் சாக விடுவேனா?' என்று அவள் கேட்டாளே பார்க்கலாம், உலகத்துத் தெய்வங்களை எல்லாம் அந்தப் பெண்ணின் வடிவத்தில் பார்த்தேன்.

அவளை இறுக அணைத்துக் கொண்டேன்.

தாயின் கருப்பை அனுபவம் எனக்குக் கிடையாது.இப்போது சத்தியமாகச் சொல்கிறேன்,காதலிக்கும் பெண்ணின் அரவணைப்பில்தான் அதனை மீண்டும் உணர முடியும்.

தாயை வேறு பரிமாணத்தில் சந்தித்தால் அதுவே காதலி.

(தொடரும்)

36 கருத்துகள்:

  1. 'ஒருவேளை,கிட்டத்தட்ட சாவை நெருங்கிட்டதனாலே அவங்க எல்லாரையுயும் விட
    தூசு, தும்பு இல்லாமல் பளிச்சென்று ஆகி வீடு பூப்பெய்தியது.//

    படித்ததில் புதிய உவமை



    பார்ப்பவரது உயிரை எந்த கஷ்டமும் படாமல் எளிமையாகக் கவ்விச் செல்வதே உண்மையான அழகு //
    உண்மை தான்



    நான்தான்னு மூத்தவன்னு அவங்க நினைக்கிறாங்களோ என்னமோ!' என்று நான் சொல்லச் சொல்லவே என்னை அறியாமல் நான் அழுது விட்டேன்.//

    வேதனையான ஒன்று




    அப்படி ஒரு ஆறுதல் கிடைத்தவுடன், எனது அழுகை இன்னும் பீறிட்டுக் கிளம்பியது.
    'அமிர்தம்ன்னா என்ன அர்த்தம் தெரியுமா,சரவணா?' என்றாள் அவள், என் முகத்தை நிமிர்த்தி.
    நான் வெறுமனே அவளைப் பார்த்தேன்,தேம்பியபடி.
    'அமிர்தம்ன்னா சாகாமை.அமிர்தவர்ஷிணின்னா சாகாமையைத் தருபவள்ன்னு அர்த்தம்.நான் உன் பக்கத்திலே இருக்கும் போது உன்னைச் சாக விடுவேனா?'//

    எங்களுக்கும் நம்பிக்கை வந்துவிட்டது


    தாயின் கருப்பை அனுபவம் எனக்குக் கிடையாது.இப்போது சத்தியமாகச் சொல்கிறேன்,காதலிக்கும் பெண்ணின் அரவணைப்பில்தான் அதனை மீண்டும் உணர முடியும்.

    தாயை வேறு பரிமாணத்தில் சந்தித்தால் அதுவே காதலி.//

    ஐயா காதலுக்கு உரிய மனைவியும் கூட அப்படித்தான்.


    ஐயா,
    சிம்ப்ளி சூப்பர்ப்,
    ஒவ்வொரு வரிகளும் அருமை.அடுத்த பாகமும் உங்கள் எண்ணம் போல நன்றாக வரட்டும்

    பதிலளிநீக்கு
  2. //தாயை வேறு பரிமாணத்தில் சந்தித்தால் அதுவே காதலி.//
    இந்த அத்தியாத்தில் கிடைக்கும் உண்மை மிக அருமை சார்... அடுத்துவரும் நிகழ்வுகளை எதிர்பார்க்கின்றேன். நான் ஒரு அவசர கொடுக்கன் அதனால் தொடர்கதைகளை அவ்வளவாக விரும்புவதில்லை. இன்னும் சொல்ல போனால் தொலைக்காட்சி தொடர்களை வெறுப்பவன். இந்த தொடரை எதிர்ப்பார்க்கு அளவிற்கு கொண்டு செல்வது அருமை.. வாழ்த்துகள் சார்...

    பதிலளிநீக்கு
  3. //'அன்பு கிடைக்காதவங்க அனாதைக இல்லே,சரவணா. அன்பு செலுத்த முடியாதவங்கதான் அனாதைக!'//

    Classic

    பதிலளிநீக்கு
  4. Sriraman சொன்னது…
    Nice story. Thanks.//

    Thank you for your first visit and encouraging comment,Sriraman.

    பதிலளிநீக்கு
  5. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது//

    ஐயா,
    சிம்ப்ளி சூப்பர்ப்,
    ஒவ்வொரு வரிகளும் அருமை.அடுத்த பாகமும் உங்கள் எண்ணம் போல நன்றாக வரட்டும்//

    எழுதிய வேகத்திலேயே கிடைக்கும் உங்கள் ஊக்கமே எனது அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.
    மகிழ்ச்சி,கார்த்தி.

    பதிலளிநீக்கு
  6. சின்ன அம்மிணி சொன்னது…
    //'அன்பு கிடைக்காதவங்க அனாதைக இல்லே,சரவணா. அன்பு செலுத்த முடியாதவங்கதான் அனாதைக!'//

    Classic//

    Thank you Madam,for your constant support.

    பதிலளிநீக்கு
  7. ஆ.ஞானசேகரன் சொன்னது…
    //தாயை வேறு பரிமாணத்தில் சந்தித்தால் அதுவே காதலி.//
    இந்த அத்தியாத்தில் கிடைக்கும் உண்மை மிக அருமை சார்... அடுத்துவரும் நிகழ்வுகளை எதிர்பார்க்கின்றேன். நான் ஒரு அவசர கொடுக்கன் அதனால் தொடர்கதைகளை அவ்வளவாக விரும்புவதில்லை. இன்னும் சொல்ல போனால் தொலைக்காட்சி தொடர்களை வெறுப்பவன். இந்த தொடரை எதிர்ப்பார்க்கு அளவிற்கு கொண்டு செல்வது அருமை.. வாழ்த்துகள் சார்...//

    உங்கள் ரசனை மாற்றத்துக்கு நான் காரணமாயிருந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி,ஞானம்.

    பதிலளிநீக்கு
  8. சாவை நெருங்குபவன் சின்ன வயதானாலும் கூடுதல் மரியாதையோடு பார்ப்பதை உணர்ந்திருக்கிறேன்

    நானும் தொடர்கதையில் பொறுமை இல்லாதவன்... ஆனாலும் தொடர்ந்து வாசிக்க வைத்தது உங்கள் எழுத்து...

    பதிலளிநீக்கு
  9. //நானும் தொடர்கதையில் பொறுமை இல்லாதவன்... ஆனாலும் தொடர்ந்து வாசிக்க வைத்தது உங்கள் எழுத்து...//

    என்னோட கருத்தும் இதே தான் சார்.

    பதிலளிநீக்கு
  10. ஒவ்வொரு வரிகளும் உண்மை ... ரொம்ப நல்லா இருக்கு சார். இந்த மாயா லோகத்தில் இது போன்ற உண்மையான ஆத்மாவின் நட்பு கிடைக்குமா ???? அல்லது இது எல்லாம் இங்கு தான் இருக்கிறதா , நமக்குத் தான் தரம் பார்க்க தெரியவில்லையா ... நாம் ( நான் ) எப்படியோ அப்படிதானே நம் ( என் ) பார்வையும்.

    கொஞ்சம் பார்வையில் தெளிவை தெளித்ததற்காக நன்றி

    பதிலளிநீக்கு
  11. //உன் கண்ணுலே ஒரு எழுத்துக் கூடத் தெரியலியே//

    அருமை சார்..

    பதிலளிநீக்கு
  12. //
    'ஒருவேளை,கிட்டத்தட்ட சாவை நெருங்கிட்டதனாலே அவங்க எல்லாரையுயும் விட நான்தான்னு மூத்தவன்னு அவங்க நினைக்கிறாங்களோ என்னமோ!' என்று நான் சொல்லச் சொல்லவே என்னை அறியாமல் நான் அழுது விட்டேன்.
    //
    என்னவென்று சொல்வது? வார்த்தைகள் இல்லை...

    பதிலளிநீக்கு
  13. திரைப்படமாக வெளியாகி சக்கை போடு போட வேண்டிய கதை.

    //தாயை வேறு பரிமாணத்தில் சந்தித்தால் அதுவே காதலி//
    காதலி வளர்ப்புத் தாய் போன்றவள்...மனைவி மட்டுமே முலைப்பாலளித்த தாயின் மற்றொரு பரிமாணம்!!
    நான் கண்ட நிதர்சனம் இது!

    பதிலளிநீக்கு
  14. ஆயிரம் படித்துறைகள் இருந்தாலும் உங்கள் படித்துறையிலேயே இளைப்பார விரும்பிகிறேன் .....

    பதிலளிநீக்கு
  15. கதிர் - ஈரோடு சொன்னது…
    சாவை நெருங்குபவன் சின்ன வயதானாலும் கூடுதல் மரியாதையோடு பார்ப்பதை உணர்ந்திருக்கிறேன்

    நானும் தொடர்கதையில் பொறுமை இல்லாதவன்... ஆனாலும் தொடர்ந்து வாசிக்க வைத்தது உங்கள் எழுத்து...//

    உங்கள் பாராட்டே எனது பெருமை.
    நன்றி.மகிழ்ச்சி,கதிர்.

    பதிலளிநீக்கு
  16. வினோத்கெளதம் சொன்னது…
    //நானும் தொடர்கதையில் பொறுமை இல்லாதவன்... ஆனாலும் தொடர்ந்து வாசிக்க வைத்தது உங்கள் எழுத்து...//

    என்னோட கருத்தும் இதே தான் சார்.//

    நண்ரியும்,மகிழ்ச்சியும் வினோத்.

    பதிலளிநீக்கு
  17. அது ஒரு கனாக் காலம் சொன்னது…
    ஒவ்வொரு வரிகளும் உண்மை ... ரொம்ப நல்லா இருக்கு சார். இந்த மாயா லோகத்தில் இது போன்ற உண்மையான ஆத்மாவின் நட்பு கிடைக்குமா ???? அல்லது இது எல்லாம் இங்கு தான் இருக்கிறதா , நமக்குத் தான் தரம் பார்க்க தெரியவில்லையா ... நாம் ( நான் ) எப்படியோ அப்படிதானே நம் ( என் ) பார்வையும்.

    கொஞ்சம் பார்வையில் தெளிவை தெளித்ததற்காக நன்றி//

    ’நாம் ( நான் ) எப்படியோ அப்படிதானே நம் ( என் ) பார்வையும்.’

    This is a good qoute Sunthar.Thank you.

    பதிலளிநீக்கு
  18. பிரேம்குமார் அசோகன் சொன்னது…
    திரைப்படமாக வெளியாகி சக்கை போடு போட வேண்டிய கதை.

    //தாயை வேறு பரிமாணத்தில் சந்தித்தால் அதுவே காதலி//
    காதலி வளர்ப்புத் தாய் போன்றவள்...மனைவி மட்டுமே முலைப்பாலளித்த தாயின் மற்றொரு பரிமாணம்!!
    நான் கண்ட நிதர்சனம் இது!//

    பெண்மையை இப்படி முழுமையாக,உண்மையாக சந்திக்கும் பேற்றினை உங்களுக்கு அருளிய மஹா சக்திக்கு எனது போற்றிகள்.
    வாழ்க, மகிழ்க பிரேம்

    பதிலளிநீக்கு
  19. " உழவன் " " Uzhavan " சொன்னது…
    ரொம்ப நல்லாருக்கு :-)//
    நீங்கள் ரசித்தது.

    நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  20. தீப்பெட்டி சொன்னது…
    //உன் கண்ணுலே ஒரு எழுத்துக் கூடத் தெரியலியே//

    அருமை சார்..//

    ஒரே எழுத்து எத்தனை, எத்தனை கோணங்களில் உணரப் படுகிறது,நண்பரே.

    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  21. வலசு - வேலணை சொன்னது…
    //
    'ஒருவேளை,கிட்டத்தட்ட சாவை நெருங்கிட்டதனாலே அவங்க எல்லாரையுயும் விட நான்தான்னு மூத்தவன்னு அவங்க நினைக்கிறாங்களோ என்னமோ!' என்று நான் சொல்லச் சொல்லவே என்னை அறியாமல் நான் அழுது விட்டேன்.
    //
    என்னவென்று சொல்வது? வார்த்தைகள் இல்லை...//

    எழுதும் போது நானே கலங்கிய இடம் இதுதான், வலசு.
    அதே இடத்தை நீங்களும் தொட்டது நமது சக ரசனையை,உணர்வைச் சொல்கிறது.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. மகா சொன்னது…
    ஆயிரம் படித்துறைகள் இருந்தாலும் உங்கள் படித்துறையிலேயே இளைப்பார விரும்பிகிறேன் .....//

    ஆயிரம் படித்துறைகள் இருந்தாலும்,நம் எல்லோருக்குள்ளும் ஓடும் நதி ஒன்றுதானே,மகா.
    நன்றி.மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  23. All wordings are simple, powerful and super sir. Expecting next part.

    Thanks,
    Arun

    பதிலளிநீக்கு
  24. All wordings are simple, powerful and superb sir. Expecting next part.

    Thanks,
    Arun

    பதிலளிநீக்கு
  25. Arunkumar Selvam சொன்னது…
    All wordings are simple, powerful and superb sir. Expecting next part.

    Thanks,
    Arun//

    kINDLY TELL ME HOW TO THANK YOU FOR YOUR CONSTANT ENCOURAGEMENT.
    ANYWAY I AM GRATEFUL,ARUN.

    பதிலளிநீக்கு
  26. இப்போது தான் உங்கள் எழுத்துக்களை முதல் முறையாக வாசிக்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  27. சஹானா beautiful raga சொன்னது…
    இப்போது தான் உங்கள் எழுத்துக்களை முதல் முறையாக வாசிக்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு//

    என் பெயரில் இருக்கும் ராகத்தைப் போலவே சொல்வதற்கே என்ன இனிமையான ராகம்,சஹானா!

    மகா சொன்னதைப் போல ’உங்கள் ரசனை எனது உவகை’

    பதிலளிநீக்கு
  28. அன்பின் அய்யா,

    உங்கள் வலை பக்கத்தை நீண்ட காலமாக வாசித்து வருகின்றேன். உங்கள் எழுது ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாய் இருப்பதை உணர்ந்தேன். ஆனால் என்னவென்ற தேடுதல் இருந்தது.
    இந்த அமிர்த வர்ஷினி கதை நீங்கள் ஆரம்பித்த பொழுது என் வேலை பளுவால் படிக்க முடியவில்லை.
    தற்செயலாய் பாகம் ஒன்று முதல் ஐந்து வரை ஒரே மூச்சில் படித்து முடித்தேன் நான் பொய் சொல்ல வில்லை. நிச்சயமாய் என் கண்களில் நீர் வழிந்தோடியது. அதே நேரத்தில் என்னால் அன்று முழுவதும் வேளையில் மனம் லயிக்க வில்லை. மனம் வெறுமையாய் இருந்தது. ஏதோ ஒரு விதத்தில் உங்கள் எழுத்து மனதை உலுக்கி பல விதமான எண்ண அதிர்வுகளை ஏற்படுத்தியது. உயிரை ஊடுருவி செல்லும் உங்கள் எழுத்துக்கு தலை வணங்குகிறேன்.

    அமிர்த வர்ஷினி இன்னும் என்ன செய்வாள் என்பதை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். உங்களுக்கும் அவள் அமிர்தத்தை தர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

    அன்பு கிடைக்காதவங்க அனாதைக இல்லே,சரவணா. அன்பு செலுத்த முடியாதவங்கதான் அனாதைக - நிதர்சனம்

    என்றும் அன்புடன்,
    குரு

    பதிலளிநீக்கு
  29. Guru சொன்னது…
    அன்பின் அய்யா,//

    தற்செயலாய் பாகம் ஒன்று முதல் ஐந்து வரை ஒரே மூச்சில் படித்து முடித்தேன் நான் பொய் சொல்ல வில்லை. நிச்சயமாய் என் கண்களில் நீர் வழிந்தோடியது. அதே நேரத்தில் என்னால் அன்று முழுவதும் வேளையில் மனம் லயிக்க வில்லை. மனம் வெறுமையாய் இருந்தது. ஏதோ ஒரு விதத்தில் உங்கள் எழுத்து மனதை உலுக்கி பல விதமான எண்ண அதிர்வுகளை ஏற்படுத்தியது. உயிரை ஊடுருவி செல்லும் உங்கள் எழுத்துக்கு தலை வணங்குகிறேன்.//

    எனக்குள் வழிந்த கண்ணீரையும், நிகழ்ந்த பர்வசங்களையும் உங்களுக்குள்ளும் நிகழ்த்திக் காட்டிய உங்கள் ரசனைக்கு நான் தலை வணங்குகிறேன்,குரு.

    அழுபவனும்,அவனது கண்ணீரைத் துடைப்பவனும்/பாடுபவனும்,அதைக கேட்டு உருகுபவனும்/எழுதுபவனும்,அதைப் படித்து நெகிழ்பவனும் ஒன்று படும் கணம்தான் மனித அனுபவங்களிலேயே தலையானது.

    அந்தக் கணத்தை நம் இருவருக்கும் அருளிய தெய்வத்துக்கு நன்றி,குரு.

    பதிலளிநீக்கு
  30. //அழுபவனும்,அவனது கண்ணீரைத் துடைப்பவனும்/பாடுபவனும்,அதைக கேட்டு உருகுபவனும்/எழுதுபவனும்,அதைப் படித்து நெகிழ்பவனும் ஒன்று படும் கணம்தான் மனித அனுபவங்களிலேயே தலையானது.//

    அற்புதம் அண்ணா...

    பதிலளிநீக்கு
  31. கதிர் - ஈரோடு சொன்னது…
    //அழுபவனும்,அவனது கண்ணீரைத் துடைப்பவனும்/பாடுபவனும்,அதைக கேட்டு உருகுபவனும்/எழுதுபவனும்,அதைப் படித்து நெகிழ்பவனும் ஒன்று படும் கணம்தான் மனித அனுபவங்களிலேயே தலையானது.//

    அற்புதம் அண்ணா...//

    எழுதி முடித்தவுடனேயே உணர்வைச் சொன்ன உங்கள் அன்பின் மின்னலுக்கு மகிழ்ச்சி,தம்பி.

    பதிலளிநீக்கு
  32. ரசனை மிக்க ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன்.

    அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  33. இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

    ரசனை மிக்க ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன்.

    அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.//

    நன்றி.நிர்ஷன்.உங்களைப் போன்ற இளைஞர்களின் ரசனை மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிற்து.மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  34. அருமையான தொடர்கதை/

    ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு