வியாழன், மே 28, 2009

இறந்து விடு,யோகியே இறந்து விடு.(நூல் அறிமுகம்)

ஓஷோ வின் 'DIE O YOGI DIE ' என்ற புத்தகம்.
(TALKS ON GREAT TANTRA MASTER, GORAKH)


ஸ்ரீ கோரக்கநாதர் என்றும் கோரக்க சித்தர் என்றும் அழைக்கப் படும் அந்த மாபெரும் ஞானியின் நூல் ஒன்றினைப் பற்றிப் பேச வரும் ஓஷோ எவ்வளவு விறுவிறுப்பாகத் தனது உரையைத் தொடங்கி இருக்கிறார் பாருங்கள்.


'வானத்தைப் போல விரிந்து கிடக்கும் இந்து மதத்தின் பரப்பில், அதிக பட்சம் ஒளி வீசும் நட்சத்திரங்களில் பன்னிரண்டு பேரைக் குறிப்பிடச் சொன்னால் நீங்கள் யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்?' என்று சுமித்ரனந்தன் பண்ட என்ற இந்திக் கவிஞர் ஓஷோவைக் கேட்கிறார்.
'இந்து மத வானம் ஏகப் பட்ட நட்சத்திரங்களால் ஜொலிப்பது.இதில் யாரை விடுவது,யாரைச் சேர்ப்பது?இந்தப் பட்டியலைக் கொடுப்பது மிகவும் சிரமமான வேலை ' என்று கூறி விட்டு நீண்ட நேரம் சிந்தித்த பின்னர் ஓஷோ இவர்களைச் சொன்னாராம்.
'கிருஷ்ணா,பதஞ்சலி, புத்தர்,மகாவீரர்,நாகர்ஜுனர்,ஆதிசங்கரர், கோரக்கநாதர்,கபீர்,குருநானக், மீரா,ராமகிருஷ்ணர்,ஜே .கிருஷ்ணமூர்த்தி.'
சுமித்ரனந்தன் பண்ட விடவில்லை.

'ஏன் ஸ்ரீ ராமரை விட்டு விட்டீரகள்?' என்று கேட்கிறார்.

'பன்னிரண்டு பேரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் நான் நிறையப் பேரை விட வேண்டியதாக இருந்தது.அதனால் அசலான,சுயமான பங்களிப்புச் செய்தவர்களையே பட்டியலிட்டேன்.ஸ்ரீராமர் ,கிருஷ்ணரைக் காட்டிலும் சுயமான பங்களிப்பு இந்து மதத்திற்குச் செய்யவில்லை.அதனாலேயே இந்துக்கள் கிருஷ்ணரையே பூரண அவதாரம் என்று கருதுகிறார்கள், ராமரை அல்ல' என்கிறார் ஓஷோ.
'சரி ஏழே பேரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் இதில் யார் யாரைச் சொல்வீர்கள்?'என்று கேட்கிறார் அந்த இந்திக் கவிஞர்.
ஓஷோ இந்த இரண்டாவது பட்டியலைக் கொடுக்கிறார்.
'கிருஷ்ணா,பதஞ்சலி,புத்தர்,மகாவீரர்,சங்கரர்,கோரக்கநாதர்,கபீர்'
கவிஞர் இதற்குச் சும்மா தலையாட்டி விடவில்லை .
'பன்னிரண்டு பேரில் ஐந்து பேரை விட்டிருக்கிறீர்களே ,அதற்கு ஏன் என்று காரணங்கள் சொல்ல முடியுமா?'
அதற்கு ஓஷோ சொன்ன பதிலில்தான் ஓஷோவின் ஆழமான சிந்தனையின் அற்புதங்கள் நமக்குப் புரிகிறது.
'நாகார்ஜுனர் புத்தருக்குள் அடங்கி விடுகிறார்.புத்தர் விதை என்றால் நாகார்ஜுனர் அது முளைத்து வந்த மரம்.புத்தர் கங்கை நதியின் மூலம் என்றால் நாகர்ஜுனர் அதனுடைய பல புண்ணிய படித்துறைகளில் ஒன்றே.
எதனை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கும் நிலையில் மரத்தை விட விதையை வைத்துக் கொள்வதே சிறப்பு.விதையிலிருந்து இன்னுமே பல மரங்கள் முளைத்துத் தழைத்து வளரும்.
கிருஷ்ணமூர்த்தியும் புத்தருக்குள் அடக்கம்.கிருஷ்ணமூர்த்தி புத்தரின் இன்றைய பதிப்பு.'உனக்கு நீயே ஒளியாக இரு ' என்ற புத்தரின் பழைய சூத்திரத்திற்கு இன்றைய மொழியில் இருக்கும் விரிவுரை.
ராமகிருஷ்ணரை எளிதாக கிருஷ்ணரில் அடக்கி விடலாம்.
மீராவையும்,குருநானக்கையும் கபீரில் கரைத்து விடலாம்.அவர்கள் இருவரும் கபீரின் இரண்டு கிளைகளே ஆவர்.கபீரின் ஆண் அம்சம் குருநானக்கின் வெளிப்பட்டத்தைப் போல அவரது பெண் அம்சம் மீராவாய் ஆனது.
இப்பிடித்தான் நான் ஏழு பேர்ப் பட்டியலைச் சொன்னேன்' என்கிறார் ஓஷோ.
'சரி,இந்த ஏழு பேரை ஐந்து பேராகச் சுருக்குங்கள்!' என்கிறார் பண்ட.
ஓஷோ அதற்கும் விடை அளிக்கிறார்.
'கோரக்கநாதர் மூலவேர்.அதனால் கபீரை அவருள் அடக்கலாம்.அதே போல் சங்கரரைக் கண்ணனுக்குள் கண்டு விடலாம் .'
'இன்னும் நான்கு பேராக ஆக்கினால்?'
'மகாவீரரையும் புத்தருக்குள் தரிசித்து விடலாம்.எனவே இறுதியாக எஞ்சியது நான்கு பேர்.'என்கிறார் ஓஷோ.
'சரி மூன்று பேராக.....'
'அது இனி நடக்கவே நடக்காது ,கவிஞரே !' என்கிறார் ஓஷோ.
'இவர்கள் நான்கு பேரும் நான்கு திசைகளைப் போல.
கால,வெளியின் நான்கு பரிமாணங்களைப் போல.
தெய்வம் ஒன்றாக இருந்தாலும் அதற்குக் கரங்கள் நான்கு.இந்த நான்கு பேரில் யாரை விட்டு விட்டாலும் அது தெய்வத்தின் நான்கு கரங்களில் ஒன்றை வெட்டுவதாகும் அதனை நான் செய்யத் தயாராக இல்லை.
இதுவரை உடைகளைக் களையச் சொன்னீர்கள்.செய்ய முடிந்தது.இப்போது அங்கங்களையே வெட்டச் சொல்கிறீர்கள்.அந்த வன்முறைக்கு நான் ஒப்ப மாட்டேன் !' என்று கூறி விடுகிறார் ஓஷோ.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா,புத்த பகவான், பதஞ்சலி முனிவர்,கோரக்கநாதர் என்று, எல்லையற்ற இந்திய ஞானிகளின் சாராம்சத்தை எல்லாம் இந்த நான்கு மகா ஞானிகளிடம் தரிசிக்க முடியும் என்று கூறும் ஓஷோ கோரக்க சித்தரைப் பற்றித் தனது கடைசி நாட்களில் உரை நிகழ்த்தியத்தின் வடிவமே இந்தப் புத்தகம்.

இனிப் புத்தகத்தில் இருந்து...
'ஆத்மாவில் மையம் கொண்டிருங்கள்.அதைப் பற்றிய விவாதங்களை வலியுறுத்தாதீர்கள்.'-இது கோரக்க சித்தரின் சூத்திரம்.
இதற்கு ஓஷோவின் விரிவுரை:
-ஆன்மா (இருப்பு,BEING) என்பதே உண்மை.அது வெறுமனே கண்ணாடி.அதன் மேல் 'நான்' என்ற அகந்தை எதனைப் பதிகிறதோ அதனை அது பிரதிபலிக்கிறது.நான் இஞ்சினியர் என்று நீ எண்ணினால் அது உன்னை இஞ்சினியராகக் காட்டும்.நான் டாக்டர் என்று நினைத்தால் அது உன்னை டாக்டராகக் காட்டும்.நீ எதனை மனதில் பதிகிறாயோ அதுவாகவே நீ ஆகி விடுகிறாய்.சமயங்களில் நீ எதிர்பாராமலேயே ஒரு விபத்தைப் போலவும் உனது பிம்பம் உருவாகி விடும்.

கூச்ச சுபாவம் உள்ளவன் அவன்.முதல் தடவையாகக் கல்வி கற்க ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்துக்குள் வருகிறான்.அங்கிருந்த எழுத்தர் அவனிடம் 'நீ என்ன பாடம் படிக்க விரும்புகிறாய்?'என்று கேட்க அவன் 'THEOLOGY' என்று கூற, எழுத்தர் அவன் சொன்னதை '
GEOLOGY ' என்று புரிந்து கொண்டு படிவத்தில் நிரப்புவதைப் பார்த்தும் இவன் ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுகிறான்.நம் ஆள்தான் கூச்ச சுபாவம் உள்ளவனாயிற்றே!
அது மட்டுமல்ல ஆறு வருடங்கள் கழித்துத் தேர்வுகளில் தங்கப் பதக்கம் வாங்கும் அளவுக்கு மதிப்பெண்கள் பெற்று உலகப் புகழ் பெற்ற மண்ணியல் துறை விஞ்ஞானியாக ஆகிறான்!
கடவுளைப் பற்றிப் படிக்கப் போனவன் வாழ்க்கை முழுதும் மண்ணைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் என்று பின்னாளில் அவன் சொல்கிறான்.

எனவே நீ யார் என்று,யார் அல்லது எது தீர்மானிக்கிறது?

ஆழ்ந்த உறக்கத்தில் நீ இஞ்சினியரோ, டாக்டரோ வணிகரோ இல்லை.
பிறப்புக்கு முன்,இருந்தது யாரோ அதுதான் நீ.
கருவாக உன் தாய் வயிற்றில் இருந்ததுதான் நீ .
இறப்புக்குப் பின் நீ யாராக இருக்கப் போகிறாயோ அதுதான் நீ.
மீதி அனைத்து 'நீ'' களும் விபத்துக்களே.
அந்த உண்மையான ஆன்மாவில் மையம் கொண்டிரு என்கிறார் கோரக்கர்.

சூத்திரத்தின் இரண்டாம் வரி: 'அதைப் பற்றிய விவாதங்களை வலியுறுத்தாதீர்கள்'

ஓஷோ:

--விடிந்து கொண்டிருந்தது. பசுமையாக விரிந்து பரந்திருந்த அந்தப் பாதாம் மரத்தில் காலைப் புத்துணர்ச்சியுடன் ஓடி விளையாடத் தயாரானது ஒரு அணில்.அப்போது அதனருகில் வந்து அமர்ந்தது ஆந்தை ஒன்று.
அணிலிடம் ஆந்தை கேட்டது.
'ஓ அணிலே! இரவு வரப் போகிறது.நான் ஓய்வெடுக்க வேண்டும்.இந்த மரம் வசதிப் படுமா?'
அணிலுக்குப் புரியவில்லை.பளபளவென்று விடிந்து கொண்டிருக்கும் காலைப் பொழுதை இரவு என்று தப்பாகச் சொல்கிறதே ஆந்தை என்று அதனிடம் உண்மையைச் சொல்வோம் என்று எண்ணியது.
'மன்னிக்கவும்,ஆந்தையாரே.இது இரவு அல்ல. பகல் பொழுது!'
'வாயை மூடு.உளறாதே,எனக்குத் தெரியும்.இது இரவுதான்.வெளியே இருண்டு கொண்டு வருகிறதே ,உன் கண்ணுக்குத் தெரியவில்லை?' என்று கோபமாகக் கத்தியது ஆந்தை.
ஆந்தையின் சிலிர்த்துக் கொண்ட சிறகுகளைப் பார்த்துப் பயந்து போன அணில் இதனிடம் நமக்கேன் வம்பு என்று எண்ணிக் கொண்டு 'ஆம்,ஆந்தையே நீங்கள் சொல்வதுதான் சரி.இது இரவுதான் 'என்று சொல்லி விட்டு நகர்ந்தது.

பகலில் கண் தெரியாததினால்,கண்களை மூடிக் கொண்ட ஆந்தைக்கு அது இரவுதான்.கண்களைத் திறந்து பார்க்கும் அணிலுக்குத்தான் கதிரொளி தெரியும்.

காலைச் சூரியனைப் பற்றி ஆந்தையிடம் விவாதம் நடத்தி என்ன பயன்?

உட்புறமாகக் கண்களைத் திறந்து பார்ப்பவர்களுக்குத்தான் ஆத்ம உணர்வு விளங்கும்.அகக் கண்களை மூடி வைத்திருப்பவர்களிடம் விவாதத்தில் ஈடுபடுவது வீண் வேலை.அந்த நேரத்தில் தியானத்தில் அமருங்கள் என்கிறார் கோரக்கர்.
***************************************************

முல்லா நஸ்ருதீன் ஒரு கடை முதலாளியிடம் வேலைக்குச் சேரச் சென்றார்.அந்த முதலாளி ஒரே ஒரு நிபந்தனை விதித்தார்.
'முல்லா,எழுதப் படிக்கத் தெரிந்தவர்களைத்தான் நான் வேலைக்கு வைத்துக் கொள்வேன்'
'அப்படியா.எனக்கு எழுதத் தெரியும்.ஆனால் படிக்கத்தான் தெரியாது!' என்றார் முல்லா.
'அடே!இதுவரை நான் கேள்விப் படாத விஷயமாக இருக்கிறதே!எங்கே எழுதுங்கள் பார்ப்போம்' என்று முல்லாவிடம் கடை முதலாளி இரண்டு தாள்களையும், பேனாவையும் நீட்ட முல்லா ஏதேதோ யோசித்து,யோசித்து எழுதித் தள்ளினார்.பிறகு தான் எழுதியதை முதலாளியிடம் பவ்யமாக நீட்டினார்.
ஆவலுடன் வாங்கிப் பார்த்த முதலாளிக்கு முல்லா கிறுக்கித் தள்ளி இருந்தது என்னவென்றே புரியவில்லை.
'என்ன எழுதி இருக்கிறீர்கள்,முல்லா.நீங்கள் எழுதியதை நீங்களே படித்துச் சொல்லுங்கள் பார்ப்போம்' என்று தாள்களை முல்லாவிடமே நீட்டினார்.
'நான்தான் முதலிலேயே சொன்னேனே முதலாளி.எனக்கு எழுதத்தான் தெரியும் படிக்கத் தெரியாது!'
ஓம் கோரக்கநாதாய நமஹ!

45 கருத்துகள்:

  1. நீங்க எங்கோயோ போய்ட்டீங்க ... எத்தனை முறை , எத்தனை பேர்கள் சொன்னாலும், அதை எத்தனை முறை படித்தாலும் , ... இந்த முறையும், மனதுக்குள் சென்று ஆசுவாசம் கொடுக்கின்றது , வழி காமிக்கிறது ... நாமும் ( நானும் என்பது தான் சரி ) வழியை தவற விடுகிறோம் ... பின் இது போன்ற விளக்கின் ஒளியினால், வழியை தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
  2. சார்,

    ஓஷோவின் விளக்கம் அருமை...

    கோரக்கநாதர், ஜே .கிருஷ்ணமூர்த்தி இவர்களை பற்றி நான் அறிந்ததே இல்லை..
    யார் இவர்கள்..?

    பதிலளிநீக்கு
  3. அது ஒரு கனாக் காலம் சொன்னது…

    //பின் இது போன்ற விளக்கின் ஒளியினால், வழியை தொடர்கிறோம்//

    நம் அனைவருக்குள்ளும் ஒளிந்து விளையாடும் ஞானிகளே அவ்வப்போது தலை காட்டி இந்த ஞான விளையாட்டை விளையாடிச் செல்கிறார்கள்,சுந்தர்.விளையாட்டில் க்லந்து கொண்டதற்கு நன்றி.மீண்டும் விளையாடுவோம்.

    பதிலளிநீக்கு
  4. Arun சொன்னது…

    nice introduction sir.

    Thanks,
    Arun
    Thank you Arun for your constant support and encouragement.

    பதிலளிநீக்கு
  5. vinoth gowtham சொன்னது…

    சார்,

    ஓஷோவின் விளக்கம் அருமை...

    கோரக்கநாதர், ஜே .கிருஷ்ணமூர்த்தி இவர்களை பற்றி நான் அறிந்ததே இல்லை..
    யார் இவர்கள்..?

    கோரக்கநாதர் வடக்கே மிகவும் அறியப் பட்ட நாத பரம்பரையைச் சேர்ந்த நாத யோகி.சிவனின் அம்சமாகவே கருதப்படும் இவர் மத்ஸ்யேந்திரநாதரின் சீடராகப் போற்றப் படுகிறார்.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று வரலாறாகச் சொன்னாலும் காலத்தால் கணிக்கப் பட முடியாதவர்.கோரக்க சம்ஹிதை போன்று பல பல அரிய நூல்களை எழுதி அருளிய மஹான்.கோரக்பூர் போன்று பல ஊர்கள் இவர் பெயரால்தான் வழங்கப் படுகின்றன.ஹத யோகத்தின் மிக அரிய நுணுக்கங்களை உலகுக்கு அளித்தவர்.

    ஜே.கிருஷ்ணமூர்த்தி ஓஷோவே சொன்னதைப் போல புத்த் பிரானின் இன்றைய வடிவம்.
    ’இந்தியன்’ படத்தில் கமல்ஹாசன் தோன்றும் அப்பா வேடம் இவரது உருவத்தைப் பின்பற்றியே.
    உங்களைப் போல இளைஞர்களுக்கு அற்புதமான வழிகாட்டி,வினோத்.

    பதிலளிநீக்கு
  6. Cable Sankar சொன்னது…

    முல்லா கதை சூப்பர் சார்...//

    நம் படத்தில் செந்தில் இருந்தால் அவருக்குக் காமெடியாக வைக்கலாம்,இல்லையா ஷங்கர்?

    பதிலளிநீக்கு
  7. ஓஷோ பிரபலம்.கோரக்கநாதர் பற்றி இனிமேல்தான் தேடவேண்டும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  8. \\பகலில் கண் தெரியாததினால்,கண்களை மூடிக் கொண்ட ஆந்தைக்கு அது இரவுதான்.கண்களைத் திறந்து பார்க்கும் அணிலுக்குத்தான் கதிரொளி தெரியும்.

    காலைச் சூரியனைப் பற்றி ஆந்தையிடம் விவாதம் நடத்தி என்ன பயன்?

    உட்புறமாகக் கண்களைத் திறந்து பார்ப்பவர்களுக்குத்தான் ஆத்ம உணர்வு விளங்கும்.அகக் கண்களை மூடி வைத்திருப்பவர்களிடம் விவாதத்தில் ஈடுபடுவது வீண் வேலை.அந்த நேரத்தில் தியானத்தில் அமருங்கள் என்கிறார் கோரக்கர்.\\

    நாம் ஆந்தை என்பதை உணர்ந்தாலே விவாதம் குறைந்து விடும். சரிதானே!

    ஓம் கோரக்கநாதாய நமஹ!
    ஓம் கோரக்கநாதாய நமஹ!
    ஓம் கோரக்கநாதாய நமஹ!

    பதிலளிநீக்கு
  9. அருமையான கட்டுரை சார். இவ்வளவு விஷயங்களையும் படித்து அதை ஞாபகம் வைத்து எழுதுவது என்பது பெரிய வேலை. அனேகமாக நீங்கள் இங்கு எசென்ஸ் மட்டுமேஏ கொடுத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் ஆன்மீகம் எழுதுகிறீர்களே?

    பதிலளிநீக்கு
  10. //உட்புறமாகக் கண்களைத் திறந்து பார்ப்பவர்களுக்குத்தான் ஆத்ம உணர்வு விளங்கும்.அகக் கண்களை மூடி வைத்திருப்பவர்களிடம் விவாதத்தில் ஈடுபடுவது வீண் வேலை.//

    நீங்கள் குறிபிட்டுள்ளது சரிதான், சில பேருடன் சில விவாதங்களை தவிர்பது நன்று!

    பதிலளிநீக்கு
  11. நன்றி சார் அருமையான விளக்கத்துக்கு..

    பதிலளிநீக்கு
  12. அய்யா 18 சித்தர்களில் ஒருவராக மட்டும் தெரிந்திருந்த கோரக்கர் பற்றி இவ்வளவு விஷயங்களா?அதுவும் ஓஷோவும்,ஜிட்டுவும் சிலாகித்தவர்களா?நல்ல விஷயங்கள்,எளிய கதைகள் மூலம் சொன்னீர்கள்.
    ஓஷோவின் இந்த புத்தகத்தை படிக்க முயற்ச்சிக்கிறேன்.(முதலில் எனக்கு தொடக்க நிலை புத்தகங்களை சிபாரிசு செய்தீர்கள் என்றால் நலம்)
    நன்றிகள் பல..
    கார்த்திகேயன்
    அமீரகம்

    பதிலளிநீக்கு
  13. அது என்னமோ இந்த மாதிரி புத்தகங்களை நான் படிக்க நினைப்பதேயில்லை.கொஞ்சம் வயசு ஆகனும் போலருக்கு:))

    பதிலளிநீக்கு
  14. ஓஷோ வின் குறிப்புகள் மற்றும் முல்லா கதையும் அருமை சார்.

    நீ யார் என்ற விளக்கம் என்னை தொட்ட விடயம்..

    பதிலளிநீக்கு
  15. //அப்படியா.எனக்கு எழுதத் தெரியும்.ஆனால் படிக்கத்தான் தெரியாது!' என்றார் முல்லா//

    ஹா ஹா ஹா

    //நான்தான் முதலிலேயே சொன்னேனே முதலாளி.எனக்கு எழுதத்தான் தெரியும் படிக்கத் தெரியாது!//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சார் கலக்கல்

    சார் கொஞ்சம் பத்தி பிரித்து எழுதுங்க (ஓஷோ பகுதியில்) படிக்க சிரமமாக உள்ளது

    பதிலளிநீக்கு
  16. குடுகுடுப்பை வயசாகி படிச்சு என்ன பண்ண போறீங்க??

    இப்பவே படிச்சு, அதோட நிற்காம செயல்படுத்திப் பாருங்க. வாழ்வின் அர்த்தமே இதில்தான் இருக்கு..

    பதிலளிநீக்கு
  17. தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  18. ஐயா, உங்களை ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் அதன் விவரங்களை பார்க்க சுட்டியை சுட்டுங்கள்
    இங்கு

    பதிலளிநீக்கு
  19. நண்பரே உங்களை ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் அதன் விவரங்களை பார்க்க சுட்டியை சுட்டுங்கள்
    இங்கு

    பதிலளிநீக்கு
  20. //
    உட்புறமாகக் கண்களைத் திறந்து பார்ப்பவர்களுக்குத்தான் ஆத்ம உணர்வு விளங்கும்.அகக் கண்களை மூடி வைத்திருப்பவர்களிடம் விவாதத்தில் ஈடுபடுவது வீண் வேலை.அந்த நேரத்தில் தியானத்தில் அமருங்கள் என்கிறார் கோரக்கர்.
    //

    ஓஷோவின் பல நூல்களை வியந்து வாசித்திருக்கிறேன். நீங்கள் கூறியதை இன்னமும் வாசிக்கக் கிடைக்கவில்லை.

    முடிந்தால் கோரக்கநாதர் மற்றும் ஜே .கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றிய மேலதிக தகவல்களையும் அறியத் தாருங்கள்.

    கன்னிகா என்ன ஆனாள்?

    பதிலளிநீக்கு
  21. ராஜ நடராஜன் சொன்னது…

    ஓஷோ பிரபலம்.கோரக்கநாதர் பற்றி இனிமேல்தான் தேடவேண்டும்.நன்றி.//

    தேடுங்கள் சார்.கோரக்கரின் அருள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  22. நிகழ்காலத்தில்... சொன்னது…

    நாம் ஆந்தை என்பதை உணர்ந்தாலே விவாதம் குறைந்து விடும். சரிதானே!

    ஓம் கோரக்கநாதாய நமஹ!
    ஓம் கோரக்கநாதாய நமஹ!
    ஓம் கோரக்கநாதாய நமஹ!//

    சரியாகச் சொன்னீர்கள்,சிவா.நன்றி.

    பதிலளிநீக்கு
  23. நசரேயன் சொன்னது…

    நல்ல அறிமுகம் ஐயா//

    அறிமுகம் மட்டுமல்ல, எனது நோக்கம்,நச்ரேயன்.இந்தப் பெரியவர்களைப் படிக்கும் எல்லோரும் பயன் பெறவேண்டும் என்பதே.

    பதிலளிநீக்கு
  24. குடுகுடுப்பை சொன்னது…

    அது என்னமோ இந்த மாதிரி புத்தகங்களை நான் படிக்க நினைப்பதேயில்லை.கொஞ்சம் வயசு ஆகனும் போலருக்கு:))//

    புத்தருக்கும் ஏசுபிரானுக்கும் நம் எல்லோரையும் விட சின்ன வயதிலேயே நடந்த நிகழ்வுகள் நமக்கு நடக்காதா என்ன?
    விதைகள் பிறந்தவுடனேயே நம்முள் விழுந்து விட்டன.அவை முளைப்பதற்கு நாம்தான் அனுமதிப்பதில்லை. வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  25. ஆ.ஞானசேகரன் சொன்னது…

    ஓஷோ வின் குறிப்புகள் மற்றும் முல்லா கதையும் அருமை சார்.

    நீ யார் என்ற விளக்கம் என்னை தொட்ட விடயம்..//

    கண்டிப்பாக நீங்கள் மேலும் மேலும் இதனுள் ஆழ்வீர்கள்,ஞானசேகரன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  26. அமர பாரதி சொன்னது…

    அருமையான கட்டுரை சார். இவ்வளவு விஷயங்களையும் படித்து அதை ஞாபகம் வைத்து எழுதுவது என்பது பெரிய வேலை. அனேகமாக நீங்கள் இங்கு எசென்ஸ் மட்டுமேஏ கொடுத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் ஆன்மீகம் எழுதுகிறீர்களே?//

    எனக்கு இலக்கியம்,அறிவியல்,இசை,ஆன்மீகம் அனைத்திலும் சமமான ஈடுபாடு உண்டு,அமரபாரதி.
    மனம் ஒன்றிச் செய்யும் போது எந்தச் செயலுமே எளிதுதானே.
    அதனால் எழுத்து எனக்கு சுகமே.
    உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்,நன்றி.

    பதிலளிநீக்கு
  27. கலையரசன் சொன்னது…

    நீங்கள் குறிபிட்டுள்ளது சரிதான், சில பேருடன் சில விவாதங்களை தவிர்பது நன்று!//

    ஒவ்வாதது எதனையும் மறுங்கள்,கலையரசன்-ஆனால்,புன்னகையுடன்!

    பதிலளிநீக்கு
  28. கிரி சொன்னது…
    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சார் கலக்கல்

    சார் கொஞ்சம் பத்தி பிரித்து எழுதுங்க (ஓஷோ பகுதியில்) படிக்க சிரமமாக உள்ளது//

    நன்றி,கிரி.உங்கள் கருத்தைக் கவனத்தில் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. நிகழ்காலத்தில்... சொன்னது…

    தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

    வாழ்த்துக்களுடன்//

    படித்து விட்டுப் பதில் சொல்கிறேன்,சிவா. அழைப்புக்கு முதலில் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வலசு - வேலணை சொன்னது…
    ஓஷோவின் பல நூல்களை வியந்து வாசித்திருக்கிறேன். நீங்கள் கூறியதை இன்னமும் வாசிக்கக் கிடைக்கவில்லை.

    முடிந்தால் கோரக்கநாதர் மற்றும் ஜே .கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பற்றிய மேலதிக தகவல்களையும் அறியத் தாருங்கள்.

    கன்னிகா என்ன ஆனாள்?//

    இது அரிய புத்தகம்.படியுங்கள்,பலன் பெறுவீர்கள்,வலசு-வேலணை.
    கடல்களைப் பதிவுகளில் அடக்க முடியுமா என எனக்குத் தெரியவில்லை.
    கன்னிகா வருவாள்.நேரமின்மைதான் ஒரே காரணம்.

    பதிலளிநீக்கு
  31. ஆ.ஞானசேகரன் சொன்னது…

    ஐயா, உங்களை ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் அதன் விவரங்களை பார்க்க சுட்டியை சுட்டுங்கள்//

    ஏற்கனவே வினோத் கவுதம் அழைத்திருக்கிறார்.நேரம் கிடைப்பின் அவசியம் எழுதுகிறேன்,ஞானசேகரன்.அழைப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. vinoth gowtham சொன்னது…

    நன்றி சார் அருமையான விளக்கத்துக்கு..//

    அரிமுகப் படுதிய புத்தகங்களைப் படியுங்கள்,வினோத்.நீங்கள் மேலும் மேலும் பயனடைவீர்கள்.

    பதிலளிநீக்கு
  33. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

    அய்யா 18 சித்தர்களில் ஒருவராக மட்டும் தெரிந்திருந்த கோரக்கர் பற்றி இவ்வளவு விஷயங்களா?அதுவும் ஓஷோவும்,ஜிட்டுவும் சிலாகித்தவர்களா?நல்ல விஷயங்கள்,எளிய கதைகள் மூலம் சொன்னீர்கள்.
    ஓஷோவின் இந்த புத்தகத்தை படிக்க முயற்ச்சிக்கிறேன்.(முதலில் எனக்கு தொடக்க நிலை புத்தகங்களை சிபாரிசு செய்தீர்கள் என்றால் நலம்)
    நன்றிகள் பல..
    கார்த்திகேயன்
    அமீரகம்//

    நிச்சயம் அறிமுகம் செய்கிறேன்,கார்த்திகேயன்.நீங்கள் ஏற்கனவே தேடலில் உள்ளவர் ஆதலால்,இந்தப் புத்தகங்கள் உங்களை மேலும் செழுமைப் படுத்தும்.

    பதிலளிநீக்கு
  34. க்டநத பல வருடங்களாக பல புத்தக்ங்களையும் தேடி தேடி வாங்கி எத்தனை முறை படித்தாலும் சலிக்காத பொக்கிஷம் ஒஷோ..

    அவரை படிக்க ஆரம்பித்த்வுடன் தான் உலகமே வேறு மாதிரி தெரிய ஆரம்பித்தது..

    அதுவும் Empty Boat, A cup of Tea, 50 முறையேனும் வாசித்திருப்பேன்.


    From Medication To Meditation
    (தமிழாக்கம் :மருத்துவதிலிருந்து மனமற்ற நிலை) வாசித்து கொண்டிருக்கிறேன்.

    ஜே.கே Freedom from the Known my fav book.

    அற்புதமான பதிவை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

    ஒஷோவை பற்றி எழுத வேண்டும் என்ற் நீண்ட நாட்களாக எண்ணம்.

    முடியவில்லை. நீங்களாவது தொடருங்கள்.

    இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிற்பியை அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.

    பதிலளிநீக்கு
  35. வண்ணத்துபூச்சியார் சொன்னது…

    க்டநத பல வருடங்களாக பல புத்தக்ங்களையும் தேடி தேடி வாங்கி எத்தனை முறை படித்தாலும் சலிக்காத பொக்கிஷம் ஒஷோ.. //

    சில புத்தகங்கள்,கட்டிய மனைவி போல.கூடவே வாழ வேண்டும்.
    சில புத்தகங்கள் எப்போதாவது பார்க்க நேரிடும் சிறு வயதுக் காதலியைப் போல,வலிக்கும் ஆனால் இனிக்கும்.
    சில புத்தகங்கள் மோஹ வெறியைக் கிளப்பும் திரைப் பட,டி.வி.டி.அழகிகளைப் போல,உடலையும்,மனதையும் கனவாய் வாட்டும்.

    நீங்கள் சொன்ன நூல்களை நானும் படித்திருக்கிறேன்,சூர்யா.உங்களுக்குக் கிடைத்த அதே அனுபவங்கள்தான் எனக்கும்.
    It is very pleasant to meet a co-traveler in the EMPTY BOAT!

    பதிலளிநீக்கு
  36. It is very pleasant to meet a co-traveler in the EMPTY BOAT!

    ha..haa..

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  37. இதற்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று தெரியவில்லை..

    ஒரு வாரமாக யோசித்தும் ஒன்றும் தோன்றவில்லை..

    பதிலளிநீக்கு
  38. பட்டிக்காட்டான்.. சொன்னது…
    இதற்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று தெரியவில்லை..

    ஒரு வாரமாக யோசித்தும் ஒன்றும் தோன்றவில்லை..//

    நல்ல யோசனையின் முதல் கட்டமே எந்தக் கருத்துமே தோன்றாமல் இருப்பதுதான்,தம்பி.

    பதிலளிநீக்கு
  39. அப்போ நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டு இருக்கிறேன் என்று சொல்கிறீர்களா..??

    பதிலளிநீக்கு
  40. பட்டிக்காட்டான்.. சொன்னது…
    அப்போ நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டு இருக்கிறேன் என்று சொல்கிறீர்களா..??//

    உச்சகட்ட இன்பம்,உச்சகட்ட துயரம்,உச்சகட்ட வலி,உச்சகட்டக் குழப்பம் இப்படி உச்சங்களில் எல்லாம் மனம் செயலற்றுப் போய் நின்று விடும்.அது மீண்டும் தனது ஆற்றலை எல்லாம் சேகரித்துக் கொண்டு கிளம்பும் போதுதான் உங்கள் வாழ்க்கையின் அரிய முடிவுகளை எல்லாம் நீங்கள் எடுக்கிறீர்கள்.

    அந்த ஆற்றலை நீங்கள் எப்படிப் பயன் படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் உங்கள் பாதை தீர்மானிக்கப் படுகிறது,அதுவும் உங்களால் மட்டும்தான்,தம்பி.

    பதிலளிநீக்கு
  41. கொஞ்சம் கொஞ்சமாக புரியற மாதிரி இருக்கு..!

    பதிலளிநீக்கு