புதன், பிப்ரவரி 03, 2010

குறுஞ் சிரிப்பு

ஒரு பி.ஈ. மாணவனும்,ஒரு எம்.பி.ஏ. மாணவனும் ஒரு கேம்புக்குச் சென்றார்கள்.கூடாரம் அடித்து அந்த இரவில் தங்கினார்கள்.
நடு இரவில் தூக்கம் கலைந்த பி.ஈ. மாணவன், எம்.பி.ஏ மாணவனை எழுப்பிக் கேட்டான்.
'வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?'
எம்.பி.ஏ மாணவன் நீண்ட நேரம் சிந்தித்த பிறகு இவ்வாறு சொன்னான்.
'Astronomically, ஏகப் பட்ட பால்வெளிகளும், ஆயிரக் கணக்கான கிரகங்களும் இருக்கின்றன.
Astrologically, சனியானது,கன்னி ராசியில் இருக்கிறது.
கால நேரப் படி இப்போது மணி மூன்று ஆகிறது.
Theologically, கடவுள் எவ்வளவு பெரியவர்,நாம் எவ்வளவு அற்பமான மனிதர்கள் என்று புரிகிறது.

Meteorologically, நாளைக் காலை நேரம் நல்ல படியாக இருக்கும் என்று தெரிகிறது '
என்று கூறி விட்டுப் பெருமையாக நண்பனைப் பார்த்துக் கேட்டான்.
'சரி.இந்த இரவு நேர ஆகாயம் உனக்கு என்னதான் சொல்கிறது?'
அருகில் படுத்திருந்த பி.ஈ. நண்பன் அமைதியாகச் சொன்னான்.
'Practically, யாரோ ஒருவன்,நமது கூடாரத்தைத் திருடிச் சென்றிருக்கிறான்!'

24 கருத்துகள்:

  1. //Practically, யாரோ ஒருவன்,நமது கூடாரத்தைத் திருடிச் சென்றிருக்கிறான்!//

    ஏற்கெனவே படித்தது. இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. :)

    பதிலளிநீக்கு
  2. சாதரண வாழ்க்கை முறைக்கு மெத்தப் படித்த அறிவு உதவாது என்பதை அழகாக உணர்த்தும் கதை..

    பாராட்டுகிறேன் சகோ.

    பதிலளிநீக்கு
  3. Financially திருடியவனுக்கு பிரச்சினை இருந்துருக்கனும் ....

    பதிலளிநீக்கு
  4. ஐயா,நலம் தானே?
    நல்ல ரசனையுடன் புனையப்பட்ட குறுஞ்சிரிப்பு.பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  5. குடுகுடுப்பை சொன்னது…
    அருமையான சிரிப்பு சார்.//

    நன்றி.மகிழ்ச்சி,சார்.

    பதிலளிநீக்கு
  6. வால்பையன் சொன்னது…
    சூப்பர்!//

    நன்றி,மகிழ்ச்சி வால்பையன்.

    பதிலளிநீக்கு
  7. வினோத்கெளதம் சொன்னது…
    சார் என்ன இது :)//

    படித்ததில் சிரித்தது,வினோத்.

    பதிலளிநீக்கு
  8. butterfly Surya சொன்னது…
    hahaha.. super..//

    சூர்யா,எத்தனை நாள் ஆயிற்று உங்களைப் படித்து!

    பதிலளிநீக்கு
  9. Cable Sankar சொன்னது…
    :)
    எனது குறுஞ்சிரிப்புக்குப் பதில் உங்கள் புன்னகையா?மகிழ்ச்சி,ஷங்கர்.

    பதிலளிநீக்கு
  10. செ.சரவணக்குமார் சொன்னது…
    அர்த்தமுள்ள நகைச்சுவை சார்.//

    உங்கள் ரசனையை நான் உணர்வேன்,சரவணன்.

    பதிலளிநீக்கு
  11. சின்ன அம்மிணி சொன்னது…
    //Practically, யாரோ ஒருவன்,நமது கூடாரத்தைத் திருடிச் சென்றிருக்கிறான்!//

    ஏற்கெனவே படித்தது. இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. :)//

    சிரிப்பது எத்தனையாவது முறையாக இருந்தாலும்,மகிழ்ச்சிதானே மேடம்.

    பதிலளிநீக்கு
  12. நிகழ்காலத்தில்... சொன்னது…
    சாதரண வாழ்க்கை முறைக்கு மெத்தப் படித்த அறிவு உதவாது என்பதை அழகாக உணர்த்தும் கதை..

    பாராட்டுகிறேன் சகோ.//

    மகிழ்ச்சி,சிவா.

    பதிலளிநீக்கு
  13. Sangkavi சொன்னது…
    சூப்பர்............//

    நன்றி,மகிழ்ச்சி,சங்கவி.

    பதிலளிநீக்கு
  14. மகா சொன்னது…
    Financially திருடியவனுக்கு பிரச்சினை இருந்துருக்கனும் ....//

    திருட்டு,ஃபினான்ஷியல் பிரச்சினை என்பதை விட,சைகலாஜிகல் பிரச்சினை என்று நான் கருதுகிறேன்,மகா.

    பதிலளிநீக்கு
  15. முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
    அருமை நண்பரே..//

    பராட்டுக்கு நன்றி,முனைவரே.மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  16. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…
    ஐயா,நலம் தானே?
    நல்ல ரசனையுடன் புனையப்பட்ட குறுஞ்சிரிப்பு.பகிர்வுக்கு நன்றிகள்//

    எப்படி இருக்கிறீர்கள்,கார்த்தி? நலம் வாழ எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  17. இதை வேறு யாரோ இரண்டு பேர் பேசிக்கொள்வதாக படித்துள்ளேன்...

    ஒரு வெள்ளைக்கார விஞ்ஞானியும் எழுத்தாளரும் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு