திங்கள், ஜனவரி 05, 2009

ஒரு குழ்ந்தையின் குற்றப் பத்திரிக்கை

அவன் செய்த குற்றம்
அப்பனானது.
தனது தோல்விகளை எல்லாம் தினமும்
எனது தோள்களுக்கு மாற்றி இலைப்பாரும் சுயநலமி.
அவனது நிறைவேறாத கனவுகளால்
நித்தமும எனது விளையாட்டுப் பொம்மைகளை உடைத்தெறியும் வன்முறையாளன்.
அவனது ஆண்மைக்கு நான் சாட்சி.
அன்பு என்னும் அவனது வேஷத்துக்காக எழுதப் பட்ட காட்சி.
என்னை முதன்முதலாகக் கொன்றவன்.
சோறு போட்டு அதில் என்
சுதந்திரத்துக்கு விஷம் வைத்தவன்.
அவனது முரட்டுக் கரங்களின் கிறுக்கல் நான் .
இவர்கள் கும்பிடும் சாமிகளால் என்னைச் சிறை வைத்திருக்கிறார்கள்.
பள்ளிக்கூடச் சமாதிகளில் புத்தகங்களின் சிதை அடுக்கி
என்னை ஆசிரியர்கள் கொளுத்துகிறார்கள்.
நான் ஒரு குழ்ந்தை அல்ல-இப்படி சாகடிக்கப் பட்ட
ஆயிரமாயிரம் குழ்ந்தைகளின் ஆவி.

1 கருத்து:

  1. சில புத்திக்கு எட்டாத எழுத்துக்கள்.எனவே வந்தேன் மட்டும் சொல்லி விட்டுப் போகிறேன்.

    பதிலளிநீக்கு