செவ்வாய், ஜனவரி 13, 2009

காலமும்,தருணங்களும்..

காலம் வேறு.தருணம் வேறு.Time and Moment.
ரோஜா அழ்கானது என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்உண்மை .ஆனால் எல்லாத் தருணங்களுக்கும் பொருந்துமா ?
தீராத கண் வலியோடு துடிக்கும் ஒருவனுக்கு அந்தத் தருணத்தில் ரோஜா அழ்காகத் தோன்றுமா ?
ஆனால் உண்மைகளைப் பற்றிய நமது பொதுவான மதிப்பீடுகள் எல்லாமே காலத்தின் அடிப்படையில் செய்யப் படுவதில்தான் தவறுகளே நேர்கின்றன.அவை தருணங்கலோடு முரண்படுகின்றன.
வரலாறுகளில் காலம் தெரியும் ,ஆனால் தருணங்கள் தெரியாது.ஏனெனில் காலம் இயந்திரத் தனமானது.ஒன்றுக்குப் பிறகு இரண்டுதான்.திங்களுக்குப் பிறகு செவ்வாய்தான்.அது தர்க்க ரீதியான,கணித ரீதியான கணிப்புகளுக்கு உட்பட்டது.ஆனால் தருணங்கள் நிகழ காலத்தின் உயிப்போடு செயல் படுபவை.அவை கணத்துக்குக் கணம் மாறுபவை. தர்கத்துக்கும் கணிதத்துக்கும் கட்டுப் படாதவை.நமது அறிவு காலத்தை வேண்டுமானால் அறிய முடியும். ஆனால் தருணங்களை ஆராய , அறிவைத் தாண்டிய ஒரு அணுகுமுறை வேண்டும்.அதைத்தான் ஆன்மிகம் பல வழிகளில் முயன்று கொண்டிருக்கிறது.பல சாதனங்களையும் நமக்கு அறிமுகப் படுத்துகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டு,அன்று வாழ்ந்த எல்லாரையும் கார்ல் மார்க்ஸ் ஆக்கி விடவில்லை .அந்த ஒரு மனிதருக்குள் மட்டும் மார்க்சிய சிந்தனைகள் முகிழ்த்தது எப்படி?
ஒரே காலத்தில் ஒரே சூழ்நிலையில் ஒரே குடும்பத்தில் வாழும் ஒருவன் அடிமையாகவே வாழ்கிறான் .இன்னொருவன் புரட்சிக்காரனாகி அவன் வாழும் சமூகத்தையே மாற்றி அமைத்து சீர் செய்கிறான். எப்படி? இதற்குஅவர்கள் வாழும் காலத்தையும் இடத்தையும் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் போதாது.அவர்களை முற்றிலும் புரிந்து கொள்ள அவர்கள் வாழும் காலத்தையும் இடத்தையும் மட்டும் ஆராய்ந்து முடிவுக்கு வர முடியாது.
வேறு வேறு காலங்களில் உருவான எண்ணங்களை அவற்றின் காலத்துக்கு மட்டுமே மதிப்புக் கொடுத்து ஏற்றுக் கொள்ளப் படுவதினால்தான் மதங்களின்,தத்துவங்களின் பயன்கள் நமக்குக் கிட்டாமல் போகின்றன.
சிந்தனைகளை, அவை உறுவான தருணங்கலோடு உள்வாங்கும் போதுதான் அவற்றின் உண்மையான புரிதல்கள் நேரும் .இதனால்தான் நிறைய ஆன்மீகத் தளங்களில் குருவிடம் சிஷ்யன் நேரடியாகப் பாடம் பெற வேண்டுமென வலியுறுத்தப் படுகிறது.
அனைத்துச் சமுதாயங்களிலும் கிடைத்த அபூர்வமான எண்ணங்கள் வலிவிழந்து போனதின் முக்கிய காரணமே அவை உறுவான தருணங்களின் உயிர்ப்பு செத்துப் போஅய் அவை வெறும் சாச்திரங்களாக காகிதங்களில் மட்டும் காலத்தின் சாட்சிகளாக இருப்பதே ஆகும்.
நாம் பிறந்த காலமும் இடமும் மட்டுமே நாம் யார் என்பதைத் தீர்மானிப்பதில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் நாம் பிறந்த தருணத்தை ஆராய்கின்றன ஜாதக சாஸ்த்ரங்கள்.இதே போல் இன்றைக்கு
நவீன இயற்பியலில் நுண் அணு துறைகளில் காலத்தை விட தருணங்களே அதிகம் ஆராயப் படுகின்றன.
மேலும் யோசிப்போம்....

2 கருத்துகள்:

  1. திடுமென்று உங்கள் பெயர் .... ! மகிழ்ச்சியில் அதிர்ச்சி. ஒரு கவி ஆன்மிகம் பேசும் அவலம். எனக்கு பிடிக்கவில்லை. காலமோ தருணங்களோ எதுவாயினும் உஙகளுக்கு அடிபணிய வேண்டும். உங்கள் கவி மனம் மீண்டும் கலை உலகை ஆள வேண்டும்.
    இராதாகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
  2. மிகுந்த சந்தோசம். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். நேற்று மதிய வேளையில் வேறு ஒரு நபருக்காக காத்துருக்கும் போது இதே சிற்தனையை வேறு விதமாக யோசித்துப் பார்த்தேன். கோட்ஸே,காந்தி,பிரபாகரன்,ராஜிவ், தற்கால அரசியல்வாதிகள். சிந்தனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு