திங்கள், ஜனவரி 05, 2009

சுகம்

மழைக் காலத்து ஜன்னல்
மல்லிகை
அழ்கியின் வெட்கம்
அருவிப் பனித் தூவல்
பறவைகளின் விடியல்
அந்தி நதி
தூரத்துக் கோவில் மனியோஅசை
இளம் வியர்வையின் மணம்
பச்சை வயல்களின் மத்தியில் போகும் புகைவண்டி
குழ்ந்தையின் கன்னக் குழி
மடி
மார்பு
ஆளிலாத மலைப் பாதை
நண்பனின் சிரிப்பு
மிரட்டக் கிடைத்த பலவீனன்
சாகசக் கதை
சரித்திரச் சின்னம்
மர்மம்
கட்டுப் பணங்கள்
மரத்திலேயே பழுத்திருக்கும் மாங்கனி
நாக்கில் ருசி மீட்டும் உணவு
நறுமணம்
வெற்றுடல்
விளையாட்டு
மற்றவர் வேதனை
அந்தரங்கமான கவிதை
கடித்துக் குதறும் கோஅபம்
குளித்து முடித்து வரும் அமைதி
சாவு

1 கருத்து:

  1. ஆகா!சுகம்!சுகம்!
    அழகானப் புகைப்படங்கள் இங்கே எழுத்தில் மிதக்குது.

    பதிலளிநீக்கு