திங்கள், ஜனவரி 05, 2009

ஒரு ஆவணப் படம் கலைப் படமாக..

சமீபத்தில் பிகேபி வலைத் தளத்தில் ஆயுர்வேதம் பற்றிய ஒரு ஆவணப் படம் பார்த்தேன். பால் நளின் என்ற இயக்குனர அதி அற்புதமாக அதனை எடுத்திருந்தார்.
ஆயுர்வேதத்தின் உண்மையான ,ஆழமான அடிப்படைகளையும் ,சிகிச்சை முறைகளையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அனைவரும் பார்த்தாக வேண்டிய படம்.
பால் நளின் இயக்கிய 'சம்சாரா' என்ற ஆங்கிலப் படம் ஏற்கனவே உலகப் புகழ் பெற்றது.
மருத்துவ முறைகள் பற்றிய கருத்து ரீதியான ஒரு ஆவணப் படம் கூட
ஒரு கலை விறபன்னரால் எவ்வளவு உன்னதமான ,விறுவிறுப்பான படமாகிறது என்பதற்கு இந்தப் படமே சாட்சி.

2 கருத்துகள்:

  1. வலை தள உலகத்தில் பிகேபி இன் எவர் எவரெல்லாம் படிக்கின்றார்களே அவர்கள் அணைவரும் என்னைப் பொறுத்தவரையில் மிகுந்த பாக்யம் செய்தவர்கள். இது அதிக புகழ்ச்சி என்றாலும் அவருடைய உழைப்பு அர்பணிப்பு நேர்மை செய்தி அத்தனை தூரம் வியக்க வைக்கின்றது.

    எண் குறித்து மூன்று பதிவுகள் எழுதி உள்ளீர்கள். அந்த பதிவில் எப்படி பின்னூட்டம் இடுவது எனக்குப் புரியவில்லை. ஆனால் தேனி காக்கை முட்டை அற்புதம். முதலில் சிறப்பாக தொடங்கிய அணைவருக்கு புரிந்து கொண்டு சென்ற பின்னால் உள்ள தொடர்ச்சி சற்று மேம்பட்ட நடையில் போய் விடுகின்றது. தலைகீழாக வருவபவர்களுக்கு சற்று சிரமம். ஆனால் இப்படி ஒரு பார்வை என்பது இந்த கலையை விரும்ப ஆரம்பித்த14 வருடங்களில் இன்று தான் முதல் தடவை. வெகு அற்புதம்.

    பதிலளிநீக்கு