திங்கள், ஜனவரி 05, 2009

பூஜ்யத்தின் அர்த்தங்கள்

சுத்தம்
நிசப்தம்
முழுச் சுதந்திரம்
காரணமில்லாத சுகம்
தான் என்று உணராத தனிமை
கடலின் நடு அமைதி
வெந்து தணிந்த சிதை
பாலைவனத்துப் பௌர்ணமி
எல்லோரும் ஊருக்குப் போய்விட்ட வீடு
அந்தரங்கமான சாவு
உடல்கள் கலந்ததின் முடிவு
முற்றிலும் நிறைந்த செல்வம்
அது முழுதும் கரைந்தபின் வரும்
இனியதொரு இல்லாமை .

1 கருத்து:

  1. கண்களுக்குத் தெரியாமல் எங்கோ ஒளிந்து கிடந்த பூஜ்ய அர்த்தங்கள்.தலைப்புக்கு ஏற்ற மாதிரி நான் வரும் வரை பின்னூட்ட பூஜ்யமே.பூஜ்யத்தை அர்த்தமாக்கி விட்டுப் போகிறேன்.

    பதிலளிநீக்கு