வெள்ளி, ஜனவரி 30, 2009

ஒரு நாயும் ,ஒரு சன்யாசியும்..

பிரம்மத்தைப் பற்றிப் பேசிவிட்டு வெளியே வந்த அந்த சந்யாசியைப் பின் தொடர்ந்து ஒரே கூட்டம்..
அவர் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்,என்று கேட்டவர்கள் எல்லோரும் புகழ்ந்து சிலிர்த்துக் கொண்டார்கள்..
அப்போது யாரும் எதிர் பார்க்காத நேரத்தில்,எங்கிருந்தோ ஒரு நாய் அவரைப் பார்த்துக் குரைத்தபடியே ஓடி வந்தது...
சன்யாசியின் முகத்தில் அப்படி ஒரு பீதி...
எல்லோரைக் காட்டிலும்,நாயைக் கண்டு பயந்தோடியது அவர்தான்..
ஆத்ம ஸ்வரூபம் என்றெல்லாம் அவரது பின்னால் ஓடியவர்களுக்கே புரியாத விஷயங்களைப் பேசியவர் .
பயம் என்றால் என்ன என்று அவர்களுக்கு எல்லாம் விளக்கியவர்.
இப்போது ,மற்றவர்கள் யாரும் தன்னைப் பின் தொடர முடியாத வேகத்தில் ,
ஒரு நாயைக் கண்டு பயந்து இந்த வேகத்தில் ஓடினார் என்றால்
அந்தச் செயல் மூலம் தங்களுக்கு ஏதோ சொல்ல முயல்கிறார் என நினைத்த ஒருவன்தான் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ள அவர் பின்னால் விடாமல் ஓடினான்.
கடைசியாக,நாயிடம் இருந்து தப்பித்தவுடன் அந்த சன்யாசியின் முகத்தில் மீண்டும் அந்தப் பழைய தேஜசைக் கண்டு உள்ளூர நெகிழ்ந்தான்,துரத்தி வந்து அவரைப் பிடித்தே விட்ட அந்த பக்தன்...
இருவரும் மூச்சு வாங்க நின்றார்கள்.
அப்போது அவன் கேட்டான் .
'சாமி, பயமே கூடாது என்று எங்களுக்கெல்லாம் உணர வைத்த நீங்கள்,கேவலம் ஒரு நாயைக் கண்டு பயந்து ஓடியதன் உள்ளர்த்தம் என்ன என்று எனக்கு மட்டும் சொல்லுங்கள் '
'ஒன்றுமில்லை,இந்த நாயைக் கண்டால் மட்டும் எனக்குப் பயம் !!ஏனென்றால் இது,நான் கைவிட்டு விட்டு வந்த என் சம்சாரம் வளர்க்கும் நாய்.இது ஒன்றுக்கு மட்டுந்தான் என்னைப் பார்த்தால்,நான் யார் என்ற அடையாளம் தெரியும் '
என்றார் அந்த சந்நியாசி..
துரத்தி வந்தவன் ஒரு கணம் கழித்து 'ENLIGHTENED' ஆனான்..

8 கருத்துகள்:

 1. ஸார்..

  செம காமெடி..

  சோகத்தை சுமந்து வீட்டுக்கு வந்தவனுக்கு கொஞ்சம் இதம்.. நிறைய யோசிப்பும் கிடைத்தது..

  பதிலளிநீக்கு
 2. //ஒன்றுமில்லை,இந்த நாயைக் கண்டால் மட்டும் எனக்குப் பயம் !!ஏனென்றால் இது,நான் கைவிட்டு விட்டு வந்த என் சம்சாரம் வளர்க்கும் நாய்.இது ஒன்றுக்கு மட்டுந்தான் என்னைப் பார்த்தால் ,நான் யார் என்ற அடையாளம் தெரியும் '//

  haa..haa..:):):)

  பதிலளிநீக்கு
 3. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  வலைபூக்கள் குழுவிநர்

  பதிலளிநீக்கு
 4. “இது ஒன்றுக்கு மட்டுந்தான் என்னைப் பார்த்தால் ,நான் யார் என்ற அடையாளம் தெரியும்”

  தெரிந்தவற்றிடம் தான் மனிதர்களுக்கு அதிக பயம் உருவாகிறது. ஏனெனில் தன்னைப்பற்றி தான் மற்றவர்களிடையே உருவாக்கி வைத்திருக்கும் தன்னுடைய பிம்பம் சிதறி உடைந்து விடுமோ என்கின்ற பயம்.

  பதிலளிநீக்கு